FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: குழலி on July 17, 2011, 10:41:41 AM

Title: 1 மணி நேர சம்பளம் ரூ.82,000 வாங்கும் சிறுவன்
Post by: குழலி on July 17, 2011, 10:41:41 AM
மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ். இவரது மகன் ஆதி புத்ர அப்துல் கனி. வயது 10. செரியானா 2 நிறுவனங்களைத் தொடங்கி ஆதி என்ற பெயரில் விட்டமின் மாத்திரைகளை விற்பனை செய்து வருகிறார்.

அப்துல் கனி, 3ம் வகுப்பு வரை படித்தான். ஆனால், தனது பாடத் திட்டத்துக்கு மீறி, இயற்பியல், வேதியியல், கணிதம், புவியியல், உயிரியல் ஆகிய பிரிவுகளில் அடுக்கடுக்கான அறிவை வெளிப்படுத்தினான். இன்டர்நெட்டில் புகுந்து எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தான்.அறிவுத் தேடலுக்கு இடையே, அன்னையின் பிசினசையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினான்.

இப்போது 2 நிறுவனங்களின் செயல்பாட்டையும் ஏறக்குறைய தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் அப்துல் கனி. அதனால், அந்த கம்பெனிகளின் தலைமைச் செயல் அதிகாரி என அவனை அழைக்கின்றனர்.

பல பாடப் பிரிவுகளில் அவனுக்கு உள்ள அபார ஞானத்தை அறிந்த மலேசிய கல்லூரிகள், அவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன.அம்மாவின் கம்பெனி நிர்வாகத்தைக் கவனிப்பதுடன், கல்லூரிகளில் விரிவுரை ஆற்றுவது, இன்டர்நெட்டில் மூழ்குவது என இருக்கிறான் அப்துல் கனி. ஒரு மணி நேர விரிவுரைக்கு ரூ.82,300 ஊதியம் பெறுகிறான்.

நம்ப வருமானம் வருசத்துக்கு ரூ.80,000 கூட கிடைக்களைனு நீங்க சொல்லறது புரியுது. அட விடுங்க பாஸ்.... இருக்கிறதை வைத்து சிறப்பா வாழ்வோம்!
Title: Re: 1 மணி நேர சம்பளம் ரூ.82,000 வாங்கும் சிறுவன்
Post by: Global Angel on July 17, 2011, 02:04:43 PM
atheethamana aatral kodila oruvaruku kidaikum... athu antha paiyan pola..... ;) ;) ;)
Title: Re: 1 மணி நேர சம்பளம் ரூ.82,000 வாங்கும் சிறுவன்
Post by: Yousuf on July 17, 2011, 07:20:17 PM
Yenakku padichathellam maranthu pochu antha paiyanuku padikamaye yellam theriyuthu yenna kodumai sir ithu...!!!