FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 28, 2011, 11:43:34 PM

Title: ரசித்த கவிதை
Post by: Global Angel on December 28, 2011, 11:43:34 PM
ரசித்த கவிதை



தினமும் காலை
தாமதமாக எழுகையில்
திட்டும் அம்மாவிடம்
“எம்பொண்ணு ராஜகுமாரி
அவள திட்டாதே”
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்…

உயிர் வாங்கும் பரிட்சை

நாட்களில் புத்தகம் நடுவில்
முகம் புதைத்து நான்
தூங்கிப்போனால்
“எழுந்திரிடா செல்லம்
கட்டில்ல படுத்து தூங்குடா”
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்…

கதவிடுக்கில் விரல்
சிக்கி காயத்துடன் நான்
சாப்பிட தவித்த நேரம்
சோற்றைப் பிசைந்து
பாசம் ஊட்டி
“நல்லா சாப்பிடுடா” என்று
இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்…

இவை எதுவுமே சொல்ல
முடியாவிட்டாலும்
நீங்கள் சுறுசுறுப்பாய்
ஓடுகின்ற
இந்த திருமண கூட்டத்தில்
மேடையில் அமர்ந்திருக்கும்
என் விழிகளை தொட்டுச்
செல்லும் உங்கள் பாசப்பார்வை
சொல்கிறதப்பா
“நல்லா இரும்மா” என்று.
Title: Re: ரசித்த கவிதை
Post by: RemO on December 30, 2011, 12:50:52 PM
nice one
naanum rasiththen