FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on December 27, 2015, 07:11:22 PM

Title: ~ வெங்காயம் தக்காளி தொக்கு ~
Post by: MysteRy on December 27, 2015, 07:11:22 PM
வெங்காயம் தக்காளி தொக்கு

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfl1/v/t1.0-9/1150202_1522243671406436_5575341588259260073_n.jpg?oh=4fbc60275aa996dbd2c03ee2b1f9aae1&oe=5707ADF3&__gda__=1461247985_c82aa1cc6c1eefbe6ef12092479d1870)

தேவையான பொருள்கள் :

பெரிய வெங்காயம் – 5
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி

செய்முறை :

* வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி சுருள வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும்.
* இறுதியில் கொத்தமல்லித்தழையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
* சுவையான வெங்காயம் தக்காளி தொக்கு ரெடி. சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.