FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: PraBa on February 18, 2016, 10:47:39 PM

Title: #‎Freedom_251‬ ஒரு பார்வை
Post by: PraBa on February 18, 2016, 10:47:39 PM


‪#‎Freedom_251‬ ஒரு பார்வை
251 ரூபாய்க்கு ஒரு ஆன்ட்ராய்டு தொலைபேசி என்றவுடன் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விளம்பரம் .. ட்ரெண்டிங்கிலும் வந்துவிட்டது ..
இன்று காலை 6 மணி முதல் புக்கிங் என்று அறிவித்திருக்கிறார்கள்.. அவர்கள் சொன்ன நேரத்தில் அந்த குறிப்பிட்ட இணையத்தை அணுகுவதில் சில தொழில்நுட்ப கோளாருகள்.. இதிலிருந்தே தெரிகிறது எவ்வளவு பேர் அந்த பக்கத்திற்கு சென்றிருப்பார்களென்று.. இலவச மோகங்களைக்காட்டிலும் இது போன்ற மோகங்கள் இன்னும் மக்களை ஆட்டுவித்துக்கொண்டிருப்பது வேதனை..
இன்று மட்டும் தோராயமாக இந்தியாவில் 1 கோடிப்பேர் அந்த தொலைபேசியை புக் செய்வதாக வைத்துக்கொண்டாலும் அந்த நிறுவனத்தின் இன்றைய ஒருநாள் வருமானம் 291 கோடி ரூபாய் ( டெலிவரி சார்ஜ் 40 ரூபாய் உட்பட ) . ஆனால் அந்த குறிப்பிட்ட மாடல் தொலைபேசி இன்னும் தயாரிக்கப்படவில்லை.. உங்களுக்கான டெலிவரி நான்கு மாதங்கள் கழித்துதான் என்கிறது நிறுவனம்.
மூளையை மட்டுமே மூலதனமாக்க்கொண்டு ஒரு நாளில் கோடிகளை அள்ளுகிறது அந்நிறுவனம்.. விளம்பரத்திற்கான செலவு மட்டுமே தற்போதைக்கு அந்நிறுவனம் செய்திருக்கிறது என்றால் அதன் லாபம் எவ்வளவு..? இவ்வளவு கோடிகளுக்கு நான்கு மாத்த்திற்கான வட்டி எவ்வளவு...? சரி 251 ரூபாய்தானே போனால் போகிறது என்று சொல்கிறீர்களா.. உங்களுக்கான பகுதி மேற்கண்டதோடு முடிந்துவிட்டது.. மேற்கொண்டு படிக்க வேண்டாம்.. இல்லாதவர்கள் படியுங்கள் ..
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்திட்ட நீங்கள் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கிறீர்கள்.. நான்கு மாதம் கழித்து தொலைபேசி வரும் என்று..?
அந்நிறுவனத்தின் நிறுவனர் யார்..?
அந்நிறுவனத்தின் தலைமையிடம் தெரியுமா..?
எங்கு தொழிற்சாலையை நிறுவியிருக்கிறார்கள்.. இந்த தகவல் தெரியுமா..?
நாளை பொருள் வரவில்லை.. எங்கு புகார் கொடுப்பீர்கள்..? யார்மீது கொடுப்பீர்கள்..?
அவர்களின் விதிமுறைகள் எங்காவது தென்பட்டதா..? நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும்போது..?
இவைகள் ஏதும் இல்லை.. நான்கு மாதம் கழித்து வரும் என்ற நம்பிக்கையில் பொருளை வாங்கும் ஒரு நடுத்தரவர்க்கத்தின் பேராசையை மட்டும் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் துவக்கப்பட்டதாகவே கருதுகிறேன்..
நாளை 2500 ரூபாய்க்கு லேப்டாப் என்று இன்னொரு நிறுவனம் இறங்கலாம்.. தயாராக இருங்கள் அதையும் ஆர்டர் செய்துவிட..
ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசையை தூண்டனும்ங்கற சதுரங்க வேட்டை படத்தின் வசனம் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை..
Title: Re: #‎Freedom_251‬ ஒரு பார்வை
Post by: Maran on February 25, 2016, 07:03:32 PM



மிக அழகாக நச் என்று சொன்னீர்கள் பிரபா...

மனிதர்களை மாயபிம்பத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த அரசியல் சதுரங்க வேட்டை..! இலவசங்களைக் காட்டி அரசியல் நடத்தியதுபோல் இதுவும் ஒரு புது யுக்திபோலும்..!!

மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான். அது இயலாத நேரங்களில் அடுத்தவனை ஏமாற்றுகிறான். ஒன்னு ஏமாறனும், இல்ல ஏமாத்தனும்.