FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: MysteRy on June 23, 2016, 11:11:39 PM

Title: ~ குட்டிக்கதை ~
Post by: MysteRy on June 23, 2016, 11:11:39 PM
குட்டிக்கதை

(http://i.imgur.com/r2Pmm63.jpg)

ஒரு பானை செய்பவரை சந்திக்க குரு சென்றார். பானைகளை செய்து கொண்டிருந்தார் குயவர். பக்கத்தில் ஒரு காட்டுஆட்டை கட்டி போட்டிருந்தார். குரு எதற்கு அந்த ஆட்டை கட்டி போட்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு குயவன் இது காட்டு ஆடு, இதை கடவுளுக்கு பலி குடுக்க போகிறேன் என்றான். உடனே குரு அவன் செய்த பானைகளில் இருந்து இரண்டை அவன் முன் போட்டு உடைத்தார். இதை பார்த்த குயவனுக்கு கோவம் வந்துவிட்டது.

எதற்கு பித்துபிடித்ததை போல உடைக்கிறீர் என்று கேட்டான்.அதற்கு குரு உனக்கு பிடிக்குமே என்றுதான் என்று சொன்னார். நான் உருவாகியதை உடைத்தால் எனக்கு எப்படி பிடிக்கும் என்று கேட்டான். அதற்கு குரு ஆண்டவன் கஷ்ட பட்டு படைத்த உயிரை அவன் முன்னால் கொல்கிறாயே அது மட்டும் எப்படி ஆண்டவனுக்கு பிடிக்கும் என்று கேட்டார்.

அவன் ஆட்டை கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டான். ஆண்டவன் படைத்ததை அவனுக்கே குடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்ல எண்ணங்களை கொடுங்கள்.அன்பை கொடுங்கள். இல்லாதவர்க்கு உதவி செய்யுங்கள். ஆண்டவன் மகிழ்ச்சி அடைவான்.
Title: Re: ~ குட்டிக்கதை ~
Post by: SarithaN on December 19, 2016, 01:21:41 AM
Sagothari MysteRy vanakkam,

குட்டிக்கதை kuddi kathai ;

alakana oru puththi mathi ulla kathai ,
ulakathil manithan thanaku theevaiyanatahi
payan paduthi kollalaam,

kadavul peyarai solli seiyum, thanuthu
ariyaamaikalai viddu vilaka veendum,

nanri sagothari unkal kathaikku.

vaalthukkal, vaalka valamudan.