FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 12, 2016, 07:14:40 PM

Title: கதை கேளு
Post by: இணையத்தமிழன் on July 12, 2016, 07:14:40 PM


X, Y ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்....
ஒரு நாள் X ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு போயிட்டு இருந்தான்.... திடீர்ன்னு நல்ல மழை, வண்டி வேற ஆப் ஆயிடிச்சி, சைடு ஸ்டான்ட போட்டுட்டு கால கீழ வைக்க அங்க ஒரு பெரிய சகதி நெறஞ்ச குழியில கால் மாட்டிகிச்சு.

போன வாரம் வாங்கின புது செருப்பு அதுல மாட்டிக்கிச்சி. முன்னூறு ரூவா செருப்பாச்சேன்னு கைய விட்டு எடுத்தான், ஒரு பக்கம் பிஞ்சிடிச்சி. இத இப்டியே கொண்டுபோக சங்கடப்பட்டுகிட்டு பக்கத்துல இருக்க நண்பன் Y வீட்ல வச்சிட்டு, நாளைக்கு வரும்போது எடுத்துட்டு போகலம்னு முடிவு செஞ்சான். தன் நண்பனிடம் கேட்க அவனும் \"அதனால என்னடா... வச்சிட்டு போ...\"ன்னான். மறுநாள் எடுத்துட்டு போய் அத சரி செஞ்சி போட்டுகிட்டான் X.

ஒரு மாசம் கழிச்சி X ன் மாமா இறந்துவிட்டார். இறுதி ஊர்வலம் போயிட்டு இருந்தபோது மறுபடியும் திடீர்ன்னு மழை, சரி போற வழியில தானே நம்ம நண்பன் Y வீடு அங்க ஒரு அரை மணி நேரம் மாமாவ எறக்கி வச்சிட்டு போவோம்னு நெனைச்சி நண்பன் கிட்ட கேட்டான்.... Y க்கு கோபம், ஆத்திரம் \"ஒழுங்கா ஓடிடு, இல்ல கொண்ணு புடுவேன்\"னு சொல்லி தொரத்திட்டான்.

நீதி : பிஞ்ச செருப்புக்கு இருக்குற மரியாதை கூட செத்ததுக்கப்புறம் மனுஷனுக்கு கெடையாது, அதுனால சும்மா நீ பெரியவனா, நான் பெரியவனான்னு மனதில் காழ்ப்புணரவை வளர்க்காமல்.

பொறாமை இல்லாமல்.
மற்றவரை சபிக்காமல்.

பிறரை குறை கூறாமல்.

வாழப்பழகுவோம்.
மனிதம் காப்போம்.
உயிர்தனை நேசிப்போம்.
Title: Re: கதை கேளு
Post by: ரித்திகா on July 17, 2016, 03:26:58 PM
 :) :) :) :)NICE STORY ANNA....

உண்மையை அழகான கதையாக
 வடிவமைத்துள்ளீர் ....வாழ்த்துக்கள் ....


(http://f1.pepst.com/c/69A164/782758/ssc3/home/012/gardenbeauty/albums/butterfly.bouquet.gif_480_480_0_64000_0_1_0.gif)
Title: Re: கதை கேளு
Post by: இணையத்தமிழன் on July 18, 2016, 02:33:50 PM
நன்றி ரித்திகா
Title: Re: கதை கேளு
Post by: SarithaN on December 19, 2016, 01:19:41 AM
வணக்கம் சகோதரா,

கதை கேளு, கேட்டேன் சகோ கதை,
என்னதொரு அச்சப்படுத்தல் உங்கள்
கதை, ஆனாலும் உண்மை.

அணில் செத்தபின்னும் வீட்டின்
அலங்கார பொருள்
மயில் இறந்த பிறகும் மதிப்பு
மிக்க அலங்கார பொருளாய்
இலட்ச ரூபாய் பெறுமதியாய்.

மனிதன் இறந்தால் புதைக்கவே
பல இலட்சம் தேவைப்படுகிறது,
வெள்ளைக்காரர் தாமிருக்கும்போதே
புதைக்க கூலி, சேமக்காலைக்கு
கட்டி வருகின்றனர்.

மனிதனுக்கு உண்டான மரியாதை
இவளவுதான்,
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

நன்......
Title: Re: கதை கேளு
Post by: PaRushNi on February 22, 2017, 09:43:25 PM
PT..
Nalla kadhai, super moral 8)
manidha vaazhkaiyai edhodu indha story la compare paningalo
adhu siripirkkum  ;D sindhanaikum uriyadhu  ;)
Title: Re: கதை கேளு
Post by: இணையத்தமிழன் on February 23, 2017, 11:56:34 AM
நன்றி சகோ இக்கதை என்னோடது இல்லை சகோ ந படித்ததில் பிடித்த கதைகளுள் ஒன்று சகோ
Title: Re: கதை கேளு
Post by: இணையத்தமிழன் on February 23, 2017, 11:58:29 AM
ப்ருஷானி நன்றி மா ஆமா மா கதை ஆசிரியர் அருமையா தன்னோட கருத்தை வெளியிட்டு இருக்காரு
Title: Re: கதை கேளு
Post by: ChuMMa on February 23, 2017, 04:16:31 PM
மனிதன் இறந்த பின்னும் அவன் கண்கள் விலை மதிப்பில்லாதது
ஆனால் யாரும் கண் தானம் தர விரும்புவதில்லை

வாழும் நாளில் அவன் செய்யும் நற்காரியங்கள் அவன்
இறந்த பின்னும் வாழ்ந்திருக்கும்

தன் விலை அறியாதவன் தான் மனிதன்

தானம் செய்வோம் உயர்வோம்