FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: KaBiLaN on September 10, 2016, 05:52:15 PM

Title: உலகளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை..
Post by: KaBiLaN on September 10, 2016, 05:52:15 PM
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது...இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ் நாடு தான் !!!

உலகம் மிகப்பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒருவருடத்தில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விஷயம்.இந்நிலையில் இந்த வருடம் உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான்.

உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24வது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகளும் தானாம். உலக அரங்கில் இந்திய கலாச்சாரம் பெரிதாக பேசப்படும்போது, அதில் தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியாததுதான்.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரிய நகரமான டொராண்டோ, பெரிய ஹோட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வெரைட்டி காட்டும் துருக்கியின் செஸ்மே, பழமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24-வது இடத்தை பெற்றுள்ளது.

இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாஷிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழகத்தை விட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழகத்தின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது...


பத்திரிக்கையில்  இடம் பெற்ற குறிப்பு கீழே..
Tamil Nadu,India
New gateways to India’s cultural core.
North India, with its famous Moghul era palaces and forts, might be the country’s most popular tourist destination, but Tamil Nadu in the south has an equally rich and undiscovered history. The state is where India’s major temple cultural complexes are, and some are so large that they’re considered minicities. There’s Meenakshi Temple in Madurai, a sprawling complex dedicated to a powerful female deity, Brihadeeswarar Temple in Thanjavur, built by the ancient Cholas, one of India’s greatest dynasties, and several hundred other temples dotting the countryside and brimming with art carvings dating back as far as the 9th century. But temples aren’t the only cultural hit: the region of Chettinad has more than 50 villages filled with 18th century mansions of carved Burma teak. It also boasts cuisine that is among the spiciest and most aromatic in the country and often served on banana leaves. Limited infrastructure in Tamil Nadu made accessibility a challenge for travelers, but the recent burst of boutique hotels is changing that. Over a dozen properties recently opened or on their way to debuting include Chidambara Vilas and the Bangala in Chettinad, Heritage Madurai in Madurai and Ideal River View Resort in Thanjavur.
 (Thanks-  The new york times)
Title: Re: உலகளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை..
Post by: LoLiTa on September 10, 2016, 09:27:39 PM
Proud to be tamilan.. thx for the share nanbare.. nan innum india suthi pakavillai enbadhu varutha pada vendiya vishyasam. asap varnum
Title: Re: உலகளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை..
Post by: KaBiLaN on September 11, 2016, 01:23:43 PM
Nandri lolitha..sekirema india vanthu sutri paarunka..athilum kurippa tamilnadai sutri parunka lolitha  :)
Title: Re: உலகளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை..
Post by: ரித்திகா on September 11, 2016, 02:43:52 PM
(http://i125.photobucket.com/albums/p68/alongway99/Butterfly%20Flower%20Animations/Butterfly%20Animations/1ButterfliesColourfulFlapping.gif)

Really Proud to be a Indian Kabi....
Piranthathu vevveru naadaga irunthaalum....
ovvoru tamilarukkum thaai naadu [highlight-text]TAMIL NAADE...!!![/highlight-text]
Naa once India ku vanthuruken...but
Suthi Paakathaan Vaippukkedaikile...
Next time vantha kandipa Suthipaakuren....!!!
Mikka Nandri Kabi....!!!!
[/size][/font][/glow][/i]

(http://rs870.pbsrc.com/albums/ab265/weltenbummler1949/Flowers/Redrosesandbutterfly.gif~c200)
~ !!... RiThikA ...!! ~
Title: Re: உலகளவில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை..
Post by: KaBiLaN on September 16, 2016, 06:31:42 PM
ஆமா ரித்திகா..
தமிழ்நாட்டுக்கு பெருமை என்றால் தமிழனுக்கும் பெருமைதானே..
கண்டிப்பா அடுத்த முறை வரப்போ தமிழகம் எல்லாம் சுற்றி பார்த்துடுங்க.. :)
மிக்க நன்றி ரித்திகா ..