FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: BlazinG BeautY on September 16, 2016, 02:40:16 PM

Title: ... தேளும் தவளையும் ...
Post by: BlazinG BeautY on September 16, 2016, 02:40:16 PM


அது ஒரு அழகிய அடர்த்த காடு, அந்தக் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவிலே ஒரு நீரோடை இருந்தது. அந்தக் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கறைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு , ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி! நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்தக் நீரோடையில் தவளை ஒன்று வசித்து கொண்டிருக்கிறது.

தவளைக்கு கண்ட தேள், " தவளையரே! நான் அக்கறைக்குச் செல்ல வேண்டும், என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?" என்று கேட்டது.

" நானும் அக்கறைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!", என்றது தவளை.

தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது, தவளை நீரில் நீதிநிதி செல்ல ஆரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது. நான் பல பேரைக்  கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால் நான் ஒரு நாளும் , தவளையை கொட்டவில்லை, இந்த தவளையை கொட்டினால் எப்படி துடிக்கும்?

இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது  என்று தவளையை கொட்டி பார்க்க நினைத்தது.
தேள் தவளையின் முதுகில் கொட்டியது. ஆனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.

தேள் தவளையைப் பார்த்து , "தவளையரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா? " என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத தவளை, " எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை" என்று சொன்னது. ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது.

ஓகோ; அப்படியா ? என்று கேட்ட தேள், மெதுவாக  தவளையின்  கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.  தேள் கொட்டவருவதை அறிந்து தவளையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனுக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.


நீதி:

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி  செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கேடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.

Title: Re: ... தேளும் தவளையும் ...
Post by: SarithaN on December 15, 2016, 07:26:26 PM
ஒளி அழகு, வணக்கம்,

தேளும் தவளையும் மனிதனாய் போன கொடுமை!

தவளை போன்ற அப்பாவிகளும், மீன், நண்டு, ஆமை
போல மனது இருந்தும் உதவ பயமுடையோரும்
அதிகரித்து போயினோம், சிலந்திகளை கண்டபின்
உதவி செய்யும் இதயங்களும் ஒழிந்தோடும் அவலம்.

மாறவேண்டும், மாற்றத்துகான அறித்தல் உங்கள் கதை.

வாழ்க வளமுடன், நன்றி.