FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on January 29, 2017, 08:38:54 PM

Title: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 134
Post by: MysteRy on January 29, 2017, 08:38:54 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 134
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/134.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 134
Post by: ரித்திகா on January 31, 2017, 09:08:20 AM


நீலம் தீட்டிய விரிந்த உலக வானம் ..
மனித மூளையாய் குட்டி குட்டி நூலகங்கள் ..

காதின் வழிய பல புத்தகம் நுழைய ..
யார் யாரே அதை ஓதித்திரிய ..

கண்கள் பேசும் சில புத்தகம் ..
மெளனம் என்னும் மொழி எடுத்து ..

விரல்கள் வருட உணர்ச்சி எனும் சில புத்தகம் ..
கண்ணீரை இழுத்து பேனாவில் மையிட்டு ..

பலநூறு மொழிகள் இங்கு
பேச ஒரு மனித இனம் தான் உண்டு ..
உலகின் உணர்வு , அனுபவ பகிர்வு , வரலாற்றுக்குறிப்பு என ..

மனித இனத்தின் மூளைநூலகத்தை ..
சேகரிக்கும் அலமாரிதான் நூலகங்கள் ..

உலகம் என்னும் பரந்த நூலகத்தில் ..
மனிதன் என்னும் எத்துனை புத்தகங்கள் ..
ஆச்சரியம் தான் ஒவ்வொரு பக்கங்களும் ..



ரித்திகா ..   
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 134
Post by: ChuMMa on January 31, 2017, 05:27:51 PM
மூவுலகையும்  ஆள கல்வி தேவை
என்று  தான் என்னை
மூன்று வயதில் சேர்த்தார்கள்   
பால பாடம்  படிக்க...

விலங்குகளையும் பறவைகளையும்
எனக்கு  அறிமுக படுத்தினாள்
என் ஆசிரியை ...

புது உலகில் சிறகடித்து பறக்க
தொடங்கினேன்  என் வயது
நண்பர்களுடன் ....

மொழி  தெரியா வயதில்
எந்த மொழி  பிடிக்கும்   என்றார்கள்
என் அன்னையை  தவிர  வேறொன்றும்
இல்லை  என்றேன் ...

வருடம்  ஓட ஓட  புது  புது  மொழிகள்
ஆங்கிலம் , அறிவியல் , புவியியல் , சமூக அறிவியல்
கணக்கு, எல்லாம் மன கணக்காய் ஆயின மனதில் ...

என் புறமும் கணக்கா தொடங்கின புத்தகங்கினால் 

வருடங்கள்  உருண்டோனின ..
பள்ளி கல்வி போதாது என
கலோரியில் சேர்க்க பட்டேன்  பெற்றோரின்
விருப்ப பாடத்தில்...

கல்லூரி நட்பு எனக்கு கற்று கொடுக்க
தொடங்கியது வாழ்க்கையின் பல பாடங்களை .

பின், வேலைக்கான நேர்முக தேர்வு
என்னை போல் நூறு நண்பர்கள்  வரிசையில்

பல படிகள் ஏறி இறங்க கிடைத்தது
எனக்கான இருக்கை  ஆம்
கிடைத்தது என்னவளின் மனதில்

மீண்டும் காதல் கற்று கொடுத்தது 
புதியதோர் அத்தியாயம்..

இந்த புத்தகம் கற்று கொடுத்ததும்
வாழ்க்கை  கற்று  கொடுத்ததும் இரு வேறு  ரகம்

புரியவில்லை எது சிறந்தது என்று

இருந்தும் .

இதோ காத்திருக்கிறேன்
என் பிள்ளையை பால பாடம் படிக்க
சேர்ப்பதற்காக விண்ணப்பித்து
வரிசையில் .....

-நன்றி --
சும்மா

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
"காமுறுவர் கற்றறிந் தார்."

"தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு
 கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்."


 :) :) :)



Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 134
Post by: SarithaN on January 31, 2017, 07:12:05 PM
                         கல்வி

கல்வியே அழிவில்லா பொக்கிசம் உலகில்
இருப்பவை அனைத்தும் இழப்பினும்.
கற்றார் கற்றநெறி ஒழுகிடில் கல்வியெனும்
மூன்றெழுத்தில் உலகே உனக்குள்!

விளையாட்டும் சூதாகி வியாபாரமென
கல்வியில் கணிதம் உழைப்பாக
விஞ்ஞானம் நாள்தோறும் புதுசாக
கணணி உலகு எப்போதும் மெருகேற

இணைய வலையில் இணைய
வழியில்லா ஊரில் கணணி
இருந்தென்ன இயங்கா பெருளாய்

ஆங்கில மொழிவளம் சிறந்திட
தாய்மொழி தவமென உணராமல்
ஆய்வில் உண்மை மறைத்தலே
கற்றிட போதிக்கும் வரலாறாய்

அரசியல் கல்லாதோர் ஆண்டிட
கற்றவர் அரசியல் ஏட்டில் மாண்டிட
சமூகவியல் தினமும் கண்ணீராய்

உயிரியல் வியாபாரம் தழைத்தோங்க
மனிதன் மறந்தான் உயிர் நேயம்
தர்மம் மறந்தது கற்ற நெறி

இயல் அனைத்தும் கற்றிடினும்
கற்றவர் அறிவை சமமாய் கொள்ளா
சாதி மதம் பேசும் கல்விமானெனும்
அறிவிலிகள் சமூகத்தில் கேடே நாமக்கு

வீட்டுப் பத்திரம் பிணையாக
நகைகள் அனைத்தும் அடகாக
பெற்றவர் சோதரர் பசித்திட
ஒற்றையாய் கற்றேன் ஒருத்தன்

ஒரு வேளை உணவும் உறுதியில்லை
இருப்பவை அனைத்தும் இழந்தே கற்றேன்!

தாய் நோய் போக்கா தந்தை வலி நீக்கா
உடன் பிறந்தவளுக்கு ஆடைதரா கல்வி!
ஏட்டில் கண்ட சுரக்காய் போல்
அரசியலில் பணத்துக்கு விலையான கல்வி!

கற்ற கல்வி நாதியற்று வேலையின்றி
உணவுமின்றி நிக்கும்போது வலிக்கிறது?
கல்வியும் என் தேசத்தில் மேலைத்தேச
சந்தைப் பொருளோவென எழுகிறது சந்தேகம்!

கல்வியே தேசத்தின் உயர்வு
கல்வியும் சுகமும் தேசத்தின் காப்பரண்
தேசமே தரவேண்டும் கற்பதற்கும் செல்வம்!

எதை இழப்பினும் கல்வியை தேடு
நூல்களின் நடுவே தெரிவதுபோல்
கல்லாத கண்களில் இருட்டே நிலைக்கும்
கற்ற கல்விகொண்டு ஒளியே தருக புவியில்


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 134
Post by: RyaN on February 02, 2017, 02:13:06 AM
உலகில் சிறந்த செல்வம்
அதி உயர்ந்த செல்வம்
கல்வி எனும் செல்வம்

வாழ்கைக்கு அவசியம்
உலகுக்கு ஒளியூட்டும்
மனிதனாக வாழவைக்கும்
கல்வியெனும் வற்றாக்கடல்

வாழ்க்கை ஒளியாய் சுடர்விட
தினமும் கற்றிடு  கல்வி
ஓடும் நீரில் மலரும்  தாமரைபோல்
வாழ்வில் மலரும் கல்வி

பெருமைக்காக கல்வி
கற்றுக்கொள்பவன் மூடன்
பெற்றதை கொண்டு
பெருமையடைவான்  அறிவாளி

புத்தகங்களை சேமித்தால்  போதாது
அதில் உள்ளவற்றை புத்தியில்
சேமிப்பவன்தான்  நிறைவான மனிதன்

வாழ்ந்துபார் வாழ்க்கையை
கல்வியின் துணையோடு
ஏற்றத்தை காண்பாய்
இருள் அகன்றோடும்.

 
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 134
Post by: SweeTie on February 02, 2017, 06:21:07 AM
ஏடுகள் ஏந்தி எழுத்தாணி கொண்டு 
அன்று காவியம் படைத்திட்டோம்
காகிதம் தனிலே  வர்ண கோடுகளிட்டு
ஓவியம் வரைந்திட்டோம்
அச்சுகள் கோர்த்து  புத்தகம்  எழுதி
நூலகம் அமைத்திட்டோம்
கையெழுத்துக்கள் மறந்து கணனியில்
இன்று பதிப்புகள் நடத்துகிறோம்

எண்ணும்  எழுத்தும்  கண்ணெனக் கொண்டு
அறிவினை பெருகிட்டோம்
நாலும்  இரண்டும் சொல்லுக்குறுதியெனும் 
வார்த்தையை மதித்திட்டோம்
செல்வத்துள்  செல்வம் கல்விச் செல்வமென 
மாந்தர்க்கு விழிப்பூட்டுவோம்
யாம்  பெற்ற  இன்பம் இவ்வையகம் பெறுகவென 
எல்லோருக்கும் பகிர்ந்திடுவோம் 

காலத்தால் அழியாத  சரித்திர நூல்களை 
கண்மணிபோல் காத்திடுவோம்
சித்தர்கள் ஓதும் சித்தாந்த  வேதாந்த 
நூல்களையும்   பாதுகாப்போம்
மரணித்துப்போன காதல்களை சுமந்த
காதல் காவியங்களும் வாழட்டும்
வாழ்க்கையின் அனுபவத்தை தத்ரூபமாக தரும்
தத்துவ நூல்களையும் போற்றுவோம்

இயற்கை வளங்களை அழியாமல்  காத்திட
விவசாய கல்வி கற்றிடுவோம்
செயற்கை மனிதனை உருவாக்கும் 
அணுசக்தியும்  படித்திடுவோம்
காலம் உருவாக்கிய கணினியும் 
விரும்பியே  படித்திடுவோம்
பல்கலையும் கற்று பண்டிதன்னாகி 
நம் பாரினை என்றும் காத்திடுவோம்

 
Title: Re: ஓவியம் உயிராகிறது -நிழல் படம் எண் - 134
Post by: Karthi on February 09, 2017, 11:25:14 PM
புத்தகங்கள் சுமந்தேன்
பள்ளி சென்று படித்தேன்
பட்டமும் வாங்கினேன்
வாழ்க்கைக்கு உதவவில்லை
ஏட்டு சுரைக்காய்

தமிழன் பெருமை சேர்க்க
பல் கலையும் படித்தேன்
ஆங்கிலமும் கற்றேன்
தமிழோடு  அது கலந்து
இன்று தங்கலிஷ்  ஆயிற்று

இளமையில் கல் என்றார்
முதுமையிலும் கல் என்றார்
கல்லாதவன்  கல் என்றார்
கற்றவன் வைரக்  கல் என்றார்
கல்விக்கு கரை உண்டோ !

வாழ்க்கை புத்தகத்தில்
தினமும் ஒரு படிப்பு
பிறப்புக்கும் இறப்புக்கும்
நடுவில் ஒரு போராட்டம்
வாழ்க்கை வாழ்வதற்கே 
வாழ்ந்துவிடு  மனிதா .....