FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 12, 2017, 12:59:33 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: Forum on March 12, 2017, 12:59:33 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 138
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/138a.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: thamilan on March 12, 2017, 12:56:45 PM
இட்ட முத்தத்தின் ஈரம்
உலறுவதற்குள்
தொட்ட விரலின்  ஸ்பரிஸம்
உணர்வதற்குள்
பேசும் விழிகளின் அர்த்தம்
புரிவதற்குள்   
கலைந்துபோகிறது கனவென
இன்றைய காதல் .....

காலையில் மலர்ந்து
மாலையில் வாடிடும் மலரென
மாலையில் உதித்து
காலையில் மறையும் நிலவென
உடன் தோன்றி உடன் மறைவது
இன்றைய காதல் ......

உடலின் உள்ளே இதயமும்
உடலின் வெளியே அழகும்
இருப்பதால் தானோ என்னவோ
உடலைத் தாண்டி இதயத்தை சென்றடைவதில்லை
இன்றைய காதல்

அறிவை காமம் மிஞ்சும் போது
அன்பை விட்டு அழகை ரசிக்கும் போது
காதல் காயப்படுகிறது
உணர்வுகள் அற்று
வெறும் உணர்ச்சியில்
காதல் வசப்பட்ட இதயம்
உணர்ச்சிகள் வற்றும் போது
இரு கூறாக கிழிக்கப்படுகின்றது

ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் என
அறியாமலா சொன்னார்கள் பெரியோர்கள்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: சக்திராகவா on March 12, 2017, 08:02:17 PM
இதயம் கலந்தவளே
இமைபோல் இருந்தவளே
இடைவெளி இன்றி
துடிப்பதை நிறுத்த
தூக்கியே எறிந்தவளே !

தூரம் போனதாய்
நீயும் எண்ணிவிடாதே!
ஒவ்வொரு நொடியும்
உன்னை தூங்கவிடாதே!

சிரமமில்லாமல் பறப்பதற்கு
சிறகை வெட்டிக்கொண்டாயோ
சிறகில்லாமல் பறப்பேனோ
சிலர் சீண்டுமுன்னே இறப்பேனோ?

வாட்டும் தனிமையில்
வாழ்வது விதியா.?
வலியுடன் பிரிவது
வதைக்கிற முடிவா?

சிலந்தி வலைதான் காதலும்
அதை சீக்கிரம் அழித்திடலாம்
அழிவை தாண்டி அதுவே மீண்டு
மீண்டும் உருபெறுமாம்!

சக்தி ராகவா
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: ChuMMa on March 13, 2017, 12:41:56 PM
முதல் நாள் பாரத்தோம் அன்றே அறிமுகம் ஆனோம்..!

இரண்டாம் நாள் அன்பில் கலந்தோம்..!

மூன்றாம் நாள் முழுதும் புரிந்தோம்..!

நாளுக்கு நாள் கதைகள் பேசி.!

கேலியிலே பொழுதை கழித்தோம்..!

கிண்டல் செய்து சீன்டி பார்ப்போம்..!

அடிக்கடி சண்டை வரும்..!

ஆனால் பேசாமல் ஒரு நாள் கடந்தது இல்லை !

வாரம் முழுவதும் அலுவலக வேலை
ஓர் நாள் உன்னுடன் வீட்டிலிருக்க ஆசை  எனக்கு !

வாரம் முழுவதும் வீட்டு  வேலை
ஓர் நாள் என்னுடன்  இவ்வுலகை ரசிக்க ஆசை உனக்கு !

சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் விளையாட்டாய்
கடந்தது  நம் காதல் முன் !

 நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும்
 ஒன்றுதான் , இரண்டும் தத்தளித்துக் காெண்டே இருக்கும்
கரை சேரும் வரை.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது
வாழ்க்கையல்ல!!

சிறிய சிறிய சந்தோஷங்களையும்ர சித்துக் கொண்டு வாழ்வதே
வாழ்க்கை...!!

நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்
என் விரல்களின் இடைவெளி உன் விரல்கள் கோர்க்க
காத்திருக்கிறது அன்பே வா!

--------------சும்மா -----------





Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: VipurThi on March 13, 2017, 07:38:41 PM
நிலவின் நினைவில் நிஜமாய் தூங்கியவள் நான்
இன்று உன் பிரிவின் நினைவில்
நெருப்பில் துடிக்கின்றேன்

சிறகடித்து பறந்த இதயமோ
இன்று சில்லுசில்லாய் சிதறியதே
கண்ணின் மையும் கரைந்தோடிட
கண்ணீரில் நிறைந்திடுதே கண்கள்
உன் எண்ணங்கள் என்னை விட்டு
தூரம் விலகிடவே மறுக்கிறதே

கை கோர்த்து சென்ற இடமெல்லாம்
நம் காலடித்தடமாய் மாறியாதடா
உன் விழி தாண்டி வரும் நீரீல்
தினம் தினம் கரைகின்றேன் நானடா     

உனை மறந்து நான் வாழ பிரிவை தருகின்றாய்
உனை பிரிந்தாலே நான் மடிவேன்
என நீ மறந்து சென்றாய்

இன்று உயிரில்லா பிணமாக நானிருந்தாலும்
நிச்சயம் உன் கரம் பிடிக்கும் கனவோடு காத்திருப்பேனடா :'(
                                                                               
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: MyNa on March 14, 2017, 02:03:01 PM
ஓவியத்தினுள் ஓர் இதயம்
நெருங்கவும் முடியாமல்
விட்டு விலகவும்  முடியாமல்
தள்ளாடி கொண்டிருக்கின்றது ..

அன்று அன்பால் அரவணைக்க
ஆசையாய் கட்டப்பட்ட பாச கயிறோ
இன்று கழுத்துக்கு  ஆபத்தாய்
தூக்கு கயிறாய் மாறுகின்றது..

அன்று காதலிக்கையில் பேசிய
ஆயிரம் ஆசை வார்த்தைகளோ
இன்று மௌன விரதத்தில்
தடம் அறியாது மறைந்து மடிகின்றது..

அன்று ஊண் உறக்கம் இன்றி
ஒன்றாய் செலவழித்த மணி துளிகள்
இன்று தனிமையில் துணையின்றி
கண்ணீராய் வழிந்து கரைகின்றது..

பெண் தாய் எனும் கடமையினாலும்
ஆண் தந்தை எனும் பொறுப்பினாலும்
அன்று இணைந்து கட்டிய காதல் கோட்டையை 
இன்று பராமரிக்க தவறி விடுகின்றனர் ..

அன்று இருந்த புரிதல் இன்று இல்லை
அன்று இருந்த பொறுமை இன்று இல்லை
அன்று இருந்த காதலும் இன்று இல்லை
மாறாக நீதிமன்றம் இருக்கின்றது..
ஆயிரக் கணக்கிலான விவாகரத்து வழக்குகளோடு ..


சற்றே சிந்தியுங்கள் ..
இருபதிலும் காதல் காதலே
அறுபதிலும் காதல் காதலே
காதலை காதலாய் காதலித்தால் !!  :)


~ மைனா தமிழ் பிரியை ~
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: BreeZe on March 14, 2017, 10:31:56 PM

சிறுகச் சிறுக சேர்த்து கட்டிய
தேன்கூடு
கல்லடி பட்டு கலைவது போல
அன்பால் இணைத்த இதயங்கள்
அகங்காரம் தற்பெருமை  விட்டுக்கொடுக்காத தன்மை
போன்ற காரணங்களால் இரண்டாக பிரிகிறது

நீங்கள் கூடிக் குலாவிக் கொள்ளும்போது
குதூகலிப்பதும் உங்கள் இதயம்  தான்
நீங்கள் ஒருவரை ஒருவர்
கொத்திக் குதறும் போது
வலியால் துடிப்பதும்
அதே இதயம் தான்

இரத்த நாளங்களில் ஊடுருவி ஓடிய காதல்
தேவையற்ற பிரச்சனைகளால்
கொழுப்புகளாக மாறி
மாரடைப்பாக மாறி விடுகிறது சிலவேளைகளில்

இல்லறத்தால் ஒன்றான பலபேர்
மன ஒற்றுமை இல்லாமையால்
ஆளுக்கு ஒருபுறம்
இழுபட்டு குடும்பத்தை கூரிடுகின்றனர் 


Copyrigth
BreeZe
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: LoLiTa on March 15, 2017, 09:18:36 AM

மரத்தால் ஆனதோ இல்லை
மரத்து போனதோ இதயம் 

இருவரும் இதயத்துக்கு எமனாகி
கயிறு இறுக்கி இழுக்கின்றீர்கள்
உனக்கு பாதி எனக்கு பாதி
இரண்டாய் பிரிந்தால் ஏதுவாழ்வு

கூடி வாழ்ந்த காலமதை
கையில் கொண்டு எதை
கணித்தாய் பெண்ணே
கையில் உள்ளது கடிகாரம்

நீயோ கடியும் காரமுமாய்
தெரிகின்றாய் செய்கையில்

வீடு விட்டு வாழ வந்தவளை
இருளில் தள்ளி ஒளிபறித்து
விளக்குத் தண்டை கொண்டு
எங்கே செல்கிறாய்
உனது செய்கை எப்போதும்
விளங்காதவனைப் போல் விளங்குகிறது

பரந்த பூமிபந்தின் மேல் நிலைகுலைந்து
இருவரும் இருமுனையில் இழுக்கையில்
இதயம் பிரிந்தால் முகம்மோத நிலத்தில்
வீழ்ந்து மாழ்வீர்கள்

வாழ்கையில் கொண்ட காதல் எங்கே
உயிர் உலர்ந்து மரத்துபோன
இதயமதை திரும்பி பாருங்கள்
கருவறையில் வளரும் குழந்தைகள் போல் 

இருகுழந்தைகள் ஒன்றை ஒன்று
கொஞ்சுவதுபோல் அன்பாய் தெரிகிறது
நீங்களும் அன்பை உணர்ந்து வாழுங்கள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 138
Post by: BlazinG BeautY on March 15, 2017, 04:17:12 PM
நிம்மதியற்று
நினைவிழந்து தவிக்கும்
நிறைய ஏக்கத்தையும்
நிரந்தர வலியையும் தரும்
பிடித்தவர்களின் பிரிதல்...!

காதல் காலத்தில்
நொடிப்பிரிவு யுகமென
மருட்டிவருத்திட்ட
நம் தனிமைதான்
பிரிதல் காலத்தில்
உள்ளற்ற வெளியின்
நிறைவென சலனமற்று
வெறித்திருக்கிறது.

அன்புள்ளம் கொண்டவனே!
காயங்கள் தந்தாயே!
ஆறுதல் தருவாயா!
நீ என்னை பிரிந்தாலே!
நான் உயிர் துறப்பது
உனக்காகவே!

எனக்கு மரணமென்பது
உன்னைப் பிரிதல் தான்.!

பிரிதல் அல்ல காதல்
புரிதல் தான் காதல்
நெஞ்சில் சுமக்க வேண்டும்
மனம் காத்திருக்க வேண்டும்
காதல் கைகூடும் வரை,
உணர்வு பொறுத்திருக்க வேண்டும்.