FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeSiNa on September 03, 2017, 01:14:46 AM

Title: நெஞ்சு பொறுக்குதில்லையே
Post by: JeSiNa on September 03, 2017, 01:14:46 AM
நெஞ்சு பொறுக்குதில்லையே

(http://friendstamilmp3.com/newfiles/users/Jesi/anitha.jpg)

நீ கண்ட கனவினை நனவாக்க
பனிரெண்டு ஆண்டுகள் உழைத்தாய்
அதற்கு இந்த சமுதாயத்தில் கிடைத்த
வெகுமதி தற்கொலை.

பெண்களை முடக்கி வைக்கும்
காலகட்டத்தில்...
கூலிக்கு வேலை செய்து உன்னை மருத்துவர்
ஆக்க முயற்சி செய்தார் அவருக்கு நீ கொடுத்த
அன்பளிப்பு தற்கொலை.

உன்னை பாதித்த நீட் என்ற நோய்
மற்ற மாணவர்களை பாதிக்க கூடாது என
யோசித்த உன்னால்...
உனக்காக வாழ்ந்த உள்ளங்களை பற்றி
சற்று சிந்திக்க மறந்தது   ஏனோ?

உன்னை பெற்றவர்கள் கதறி
அழுகிறார்கள் ...
கற்பனையில் கூட உனக்கு தற்கொலை
எண்ணம் வந்திருக்க கூடாது.

உன்னை பெற்றவர்களுக்குத்தான் தெரியும் அந்த வலி
வாழ்க்கையில் அவர்களால் மறக்க முடியாத
துயரத்தை அன்பளிப்பை கொடுக்கும் விதமாக
உயிரை மாய்த்து கொண்டாயடி நீ ...

வழக்கை என்றால் அடிகள் விழத்தான் செய்யும்
அதற்க்கு தீர்வு மரணம் அல்ல..
இருப்பினும் உனக்கு நேர்ந்த
கொடுமைகளை எண்ணி நாடே
பொங்குகிறது...
நீ நினைத்த மாற்றம்
விரைவில் வரக்கூடுமோ ?

ஆழ்ந்த இரங்களுடன்...

              உங்கள் தோழி ஜெஸினா.
Title: Re: நெஞ்சு பொறுக்குதில்லையே
Post by: NiYa on September 03, 2017, 08:47:20 PM
தகுதி இருந்தும் கல்வி  மறுக்கப்பட்டால் கொடுமை தான்
கண் கலங்க வைக்கும் பதிவு