FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: joker on February 03, 2018, 04:53:50 PM
-
கஷடங்களை தாங்கும் இதயம்..
காயங்களை தாங்காது,
வலிகளை தாங்கும் இதயம்..
கடுமையான வார்த்தைகளை தாங்காது
ஏமாற்றத்தை தாங்கும் இதயம்..
துரோகத்தை தாங்காது
-
மகிழ்ச்சியான தருணங்கள்
நல்ல நினைவுகளையும்,
சோதனையான தருணங்கள்
நல்ல பாடத்தையும் அளிக்கின்றன...!
-
கோபத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்...
அலட்சியத்தை ஏற்றுக் கொள்வது...
மிகக் கடினம்...!
கோபத்தைக் கொஞ்சம் தணித்தால்,
நன்மைகள் பல விளையும்
நரி நன்றாக பழகினாலும்
அதன் குணம் சூழ்ச்சி செய்வதே
அதுபோல தான் சில உறவுகளும்
அழகாய் உறவாடி
உள்ளத்தை உடைத்து
உதறி செல்லும் உதாசின படுத்தி.....
-
வாழ்வில் தோல்வி அதிகம்,
வெற்றி குறைவு என வருந்தாதே!
செடியில் இலைகள் அதிகம் இருந்தாலும்,
அதில் பூக்கும் ஒரு சில பூக்களுக்கே
மதிப்பு அதிகம்.
-
கொதிக்கும் நீரில்
உங்களின் பிம்பத்தை
எப்படி காண முடியாதோ..
அதுபோலதான்
கோபத்திலும் உண்மையை
கண்டறிய முடியாது..
-
தோற்க போறோம் என்று தெரிந்தும்
பின் வாங்காமல் எல்லைக் கோட்டை
தொட்டபிறகே தோல்வியை
ஒத்துக் கொள்பவன்
பின்னொறு போட்டிகளில்
நிச்சயம் வெற்றி பெறுவான்.....
-
பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
-
வெற்றிகளை சந்த்தித்தவன்
இதயம் பூவை போல்
மென்மையானது
தோல்வி மட்டுமே சந்தித்தவன்
இதயம் இரும்பை விட
வலிமையானது
-
பகிர்ந்த குறுந்தகவல்கள்
சிறப்பு ...
ஊக்கமூட்டும் வகையில்
அமைந்திருக்கிறது ...
சிந்திக்கவும் வைக்கிறது ...
நன்றி சகோ ...
-
எல்லா பயணமும்
நாம் நினைத்த
இடத்தில் முடிவதில்லை..
வழி தவறிப்போகும்
சில பயணங்கள் தான்,
வாழ்கையில் பல பாடங்களை
நமக்கு கற்றுத்தருகின்றது.
-
நீங்கள் நிராகரிக்கப்பட்ட...
அதே இடத்தில் நிராகரிக்கவே முடியாத...
சக்தியாக வந்து நிற்பதுதான்...
வெற்றி
-
நடக்கும் கால்களில் எவ்வளவு வித்தியாசம்.
ஒன்று முன்னால்
என்றால் மற்றொன்று பின்னால்
ஆனால் முன்னால் இருக்கும் கால்
கர்வப்படவும் இல்லை..
பின்னால் இருக்கும் கால்
அவமானப்படவும் இல்லை,,,
அவைகளுக்குத் தெரியும்
நிமிடத்தில் நிலைமை மாறும் என்று.
-
ஒருவர் உன்னை தாழ்த்திப்
பேசும்போது ஊமையாய் இரு …
புகழ்ந்து பேசும்போது
செவிடனாய் இரு…
எளிதில் வெற்று பெறுவாய் ..!
-
வாழ்க்கையில் எல்லாம்
கிடைக்க வேண்டும் என்று
எதிர்பார்க்காதே…
சில விஷயங்கள்
கிடைக்காமல் இருப்பது
நல்லது ...
-
கை தவறினால்
கண்ணாடி பொருள்
உடையும் என்று
பாதுகாப்பாக இருப்பவர்கள்
வார்த்தை தவறினால்
மனம் உடையும் என்று ஏனோ
உணர்வதில்லை
-
மற்றவர்களை போல்
வாழ வேண்டும்என்று
நினைப்பதை விட
நம்மை போல் வாழவேண்டும்
என மற்றவர்கள் நினைக்கும்
அளவிற்க்கு நாம்
வாழ வேண்டும்
-
மனிதர்களைப் புரிந்து கொள்ளும்
கலைதான் உலகிலேயே
மிகக் கடினமானது
எவ்வளவு கற்றாலும்
தோற்றுப்போகும்
புரிந்துணர்வு
-
அதிர்ஷ்டம்
பல நேரங்களில்
நம் விரல் பிடிக்க
மறுக்கலாம் ...
ஆனால்
முயற்சியை மட்டும்
நீ கைவிட்டு
விடாதே
-
வாழ்க்கையில் தடுமாறி
கொண்டிருப்பதை விட,
ஒரு முறை
விழுந்து எழுவது
சிறந்தது .
-
விட்டு கொடுப்பவர்கள்
யாரும் விவாதம் செய்ய
தெரியாதவர்கள் அல்ல
விரும்பியவரின் மனம்
விவாதத்தை விட உயர்ந்தது
என்று உணர்ந்தவர்கள்...
-
உரிமை இல்லாத உறவும்
உண்மை இல்லாத அன்பும்
நேர்மை இல்லாத நட்பும்
நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும்
என்றும் நிரந்தரம் இல்லை......
-
தோல்வி உன்னை
துரத்துகின்றது என்றால்,
நீ வெற்றியை
நெருங்குகின்றாய்
என்று அர்த்தம் …
-
நம்முடைய
முட்டாள்தனத்தை
நிரூபிக்காமல் இருக்க
அதிகம் பேசாமல்
இருந்தால் போதும்
-
போகும் வழியில்
அன்பை விதைப்போம்
எவரேனும்
என்றேனும்
அறுவடை
செய்யட்டும்
-
எதிலும் நீ நினைப்பதை
செய்
அதற்காக
நீ நினைப்பது அனைத்தும்
சரி என
எண்ணிவிடாதே
-
நம்மை சுற்றியுள்ளவர்களும்
நம்மை போல் இருப்பார்கள்
என்று நினைப்பது
மகா முட்டாள்தனம்
நாம் நாமாக இருக்கும்
பட்சத்தில் அவர்கள்
அவர்களாக தானே
இருப்பார்கள்
-
யார் மீதும்
அன்பு வைக்காதே
பின் அதுவே உன்னை வீழ்த்திவிடும்
அதற்காக
அன்பில்லா மனிதனாக
வாழ்ந்துவிடாதே
வாழ்க்கை நரகமாகிவிடும்
அன்புகொள் உரிய
இடத்தில்
வாழ்க்கை
செழிக்கும்
-
எல்லாவற்றையும்
இழந்து விட்டோம்
என்று நினைக்கும் போது
ஒன்றை மறக்காதீர்கள்
எதிர்காலம் என்ற ஒன்று
உள்ளதை
-
நீ யாரை சந்திக்க வேண்டும்
என்பதை
காலம் முடிவு செய்கிறது
உன் வாழ்க்கையில் யார்
இருக்க வேண்டும் என்பதை
உன் மனம் முடிவு செய்கிறது
உன்னுடன் யார் இருக்க வேண்டும்
என்பதை உன் நடத்தை
முடிவு செய்கிறது
-
உரிமை உள்ள இடத்தில்
மட்டுமே நமது
எண்ணங்களை
முழுமையாக
வெளிப்படுத்தமுடியும்
-
வாழ்க்கையில்
சின்ன சின்ன
சந்தோஷங்களையும் அனுபவித்துவிடுங்கள்
நாளை ஒரு வேளை
திரும்பி பார்க்கையில்
அவை தவற விட்ட
பேரினம்பமாய் தெரியும்
-
உங்கள் தகவல்கள் எல்லாம் உண்மையான வரிகள் தான்
தத்துவங்கள் இல்ல உண்மைகள்
-
நட்பு கொள்வதில்
நிதானமாக செல்,
நட்பு கொண்டபின்
உறுதியாக நில்
-
நேசிக்க யாரும்
இல்லாத போதுதான்
யோசிக்க வைக்கிறது
வாழ்க்கை
-
மற்றவர்கள் உனக்கு
என்ன செய்ய வேண்டும்
என்று விரும்புகிறாயோ
அதை நீ அவர்களுக்கு செய்
-
நம்மை தொலைத்தவர்களை
தேட கூடாது
நம்மை தேடுபவர்களை
தொலைத்துவிடவும்
கூடாது
-
யாரிடமும் நாம் பேசவில்லை
என்றால்
நமக்கு பிடித்தவர்கள் யாரோ
நம்மிடம் பேசவில்லை
என்று அர்த்தம்
-
இன்பத்திலும் துன்பத்திலும் நமது அருகில் நின்று
தோள் கொடுக்க ஒரு தோழமை போதும்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான
தோழமை இருந்தால் போதும்
-
மற்றவர் உன்னிடம் நல்ல நண்பனாய்
இருக்க வேண்டுமானால்
முதலில் நீ அவர்களுக்கு
நல்ல நண்பனாய் இரு
-
அவசியம் இல்லாதவரிடம்
உண்மைகளை சொல்லாதீர்கள்...
அவசியமானவர்களிடம் பொய்களைச் சொல்லாதீர்கள்...
இரண்டுமே உங்களைக் காயப்படுத்தும்...
-
எல்லோருக்கும்
உன்னை பிடிக்கிறது என்றால்
நீ
ஒவ்வொருவரிடமும்
நடிக்கிறாய்
என்று அர்த்தம்..
-
எந்நேரமும்
உதடுகளில்
ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை
வேறு எங்கேயும் கிடைக்காது.....!!
-
வானிலையைவிட
அதி வேகமாய் மாறுகிறது
மனிதனின்
மனநிலை...
மனித மனங்களிலிருந்து
மனிதநேயம்
மட்டும் தான்
இன்னும்
எட்டாத தொலைவில்
இருக்கின்றது...
மனதை சுத்தப்படுத்த ஒருநொடி
போதும் அந்த ஒருநொடியை
செலவு செய்யத்தான் நமக்கு
மனமில்லை.
-
பூவோடு இருப்பதால்
முள்ளை யாரும் விரும்புவதுமில்லை.....
முள்ளோடு உள்ளதென்று
பூவை வெறுப்பதுமில்லை.....
-
கோபம் மனதில் இருக்க கூடாது
வார்த்தையில் தான் இருக்க வேண்டும்
அன்பு வார்த்தையில் மட்டும் இருக்க கூடாது
மனதிலும் இருக்க வேண்டும்
-
முறையோடு கிடைக்கும்
எதுவும்
அளவோடுதான் இருக்கும்
ஆனால்
மனநிறைவோடு இருக்கும் :)
-
சிரிப்பவர்களைப்பார்த்து
அவர்கள் இன்பமானாவர்கள்
என எண்ணிவிடாதே
அழுபவர்களைவிட
அவர்களுக்குக்குத்தான்
துன்பம் அதிகம்
-
மறக்க நினைப்போம்
ஒரு சிலரை
அவர்கள் சொன்ன வார்த்தையை
"நினைத்து நினைத்து"
-
வியர்வைத்துளிகளும்
கண்ணீர்துளிகளும்
உப்பாக இருக்கலாம்
ஆனால்
அவைதான்
வாழ்வை
இனிமையாக மாற்றும்
-
தவறு செய்யாத
மனிதனும் இல்லை
தவறு செய்யாதவன்
மனிதனும் இல்லை
ஆனால்
தவறு என்று
தெரிந்தும்
மீண்டும்
அதனைச் செய்பவன்
மனிதனேயில்ல
-
கிடைக்கும் நேரத்தை
மகிழ்ச்சியாக மாற்ற
பழகிவிட்டால்
மகிழ்ச்சிக்கான நேரம்
தானாக
அதிகரித்துவிடும்
-
யாருடனும்
பேச வேண்டாம்
என்ற மனநிலை
உருவாக காரணம்...
அதிகமாக
பேசியதின்
விளைவாகதான்
இருக்கும்...
-
மகிழ்ச்சி
ஒன்றையே
இலக்காக
வையுங்கள்
கிடைக்கும்
இடத்தில்
பெற்றுக்கொண்டு
கிடைக்காத
இடத்தில்
கொடுத்து
செல்வோம்
-
"தவறு" என்பது
வாழ்க்கையின் ஒரு பக்கம்
ஆனால்
"நட்பு" என்பது
ஒரு புத்தகம்.
அதனால்
ஒரு பக்கத்திற்காக
புத்தகத்தை
இழக்காதீர்கள்
-
ஒரு சொட்டு
கண்ணீரை கூட
துடைக்க ஆளே இல்லை
என்ற நிலையில் தான்
வாழ்க்கை
நம்மை அதிகம்
அழவைக்கிறது
-
புன்னகையும்
மௌனமும்
பலம் வாய்ந்த ஆயுதங்கள்
புன்னகை,
பல பிரச்சனைகளை
தீர்க்கும்
மௌனம்
பல பிரச்சனைகள்
வரவிடாமல்
தடுக்கும்
-
எல்லா காரியங்களிலும்
நீங்கள் உங்கள் கொள்கைகளில்
பிடிவாதமாக இருக்காதீர்
வளைந்து நெளிந்து வாழ
கற்றுக்கொள்ளுங்கள்
காடுகளில் நீண்டு நேராக
உள்ள மரங்களே முதலில்
வெட்டப்படுகிறது
-
பளபளப்பான
பள்ளம் என்பதால்
தட்டி விழமாட்டோம்
என எண்ணாதே
தடுக்கிவிடும் குணம்
பள்ளத்திற்கே உரியது
அது போல தான்
இங்கு சில மனிதர்களும்
-
இதனை அன்புக்கு
நான் தகுதியானவனா
என குற்றவுணர்வு
கொள்ளும்படி
நேசிக்க
ஒரு பெண்ணால் தான்
மட்டுமே முடியும்
-
தவறி விழுந்த விதையே
முளைக்கும் போது
தடுமாறி விழுந்த
நம் வாழ்க்கை மட்டும்
சிறக்காதா ?
நம்பிக்கையோடு
எழுவோம்
-
அதிகம் நல்லவனாக இருக்க இருக்காதே
உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்
அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே
அடிமையாகி விடுவார்கள்
அதிகம் பொறுமையுடன் நடக்காதே
பைத்தியம் ஆகும் வரை விடமாட்டார்கள்
வெளிப்படையாக இருந்துவிடாதே
பலர் உன்னை வெறுக்க நேரிடும்
எல்லோரையும் நம்பிவிடாதே
ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்
கோபப்படாமல் இருந்துவிடாதே
கோமாளியாக்கிவிடுவார்கள்
-
காயங்களோடு சிரிப்பது
அவ்வளவு எளிதல்ல
அப்படி சிரிக்க பழகிக்
கொண்டால்
எந்த காயமும்
அவ்வளவு
பெரிதல்ல
-
ஓரிரு வரிகளில் மிக ஆழ்ந்த கருத்து மச்சி எளிதாக எடுத்து சொல்லிவிட்டிர்கள் மச்சி :-*
-
நீ விரும்புவதை செய்வதில்
உன்சுதந்திரம்
அடங்கியுள்ளது
நீ செய்வதை விரும்புவதில்
உன்மகிழ்ச்சி
அடங்கியுள்ளது
-
தங்கத்தை
உரசி பாத்தாதான்
தெரியும்
அதுபோல
கூட பழகுறவங்கள கொஞ்சம்
விலகி பாத்தா தான் தெரியும்
நம்ம மேல வெச்சிருக்கிற
மரியாதையும்
பாசமும்
-
சிரித்த முகத்தை
அழ வைக்கவும்
அழும் முகத்தில்
சிரிப்பை வரவைக்கவும்
இதயம் கவர்ந்த
ஓர் உறவால் மட்டுமே
முடியும்
-
உள்ளங்கையில்
உலகம் இருப்பதாக (தொலைபேசி)
நினைத்து
உலகத்தை விட்டு
தனியே பிரிந்து
வாழ்கிறோம்
-
எல்லாவற்றையும்
இழந்துவிட்டோம் என்று
நினைக்கும்போது
ஒன்றை மறந்துவிடாதே
எதிர்காலம் என்ற
ஒன்று உள்ளதை
-
தினமும்
ஓய்வில்லாமல்
உழைப்பதால் தான்
எல்லா இடத்திலும்
உயரத்தில் உள்ளது
"கடிகாரம்"
-
சவால்
என்ற வார்தைக்குள்ளே
வாசல்
என்ற வார்த்தை
மறைந்திருக்கிறது
நீ எதிர்கொள்ளும்
சவால்களில் தான்
திறக்கின்றன
உன் எதிர்காலத்திற்கான
வாசல்
-
அர்த்தமில்லாத ஒரு
சில சண்டைகளால்
அர்த்தமுள்ள ஆயிரம்
சந்தோஷங்கள்
வாழ்க்கையில்
தொலைந்து போகின்றன
-
சில நேரங்களில்
எவராலும்
தர முடியாத
ஆறுதல்
"தனிமை"
-
வேஷம் போடும்
உறவுகளுக்கு நடுவில்
உண்மையான பாசம்
தோற்று தான் போய்
விடுகிறது
-
எதுவும் இல்லை
என்ற சொல் அனைத்து ரகசியங்களை அடங்கிய மிக பெரிய பொக்கிஷம் ஆகும் அதை திறந்தாள் தன் புதையல் எனும் தீர்வு கிடைக்கும்
-
வாழ்க்கையில்
சின்ன சின்ன மகிழ்ச்சியை
இழந்தவர்களுக்குத்தான்
தெரியும்
பாசம் எவ்வளவு
பெரிய பொக்கிஷம்
என்று ...
-
மரணம் வந்தால் ஒரு நொடியில்
உயிர் போகும்
ஆனால்
பிரிவு வந்தால் ஒவ்வொரு
நொடியும் உயிர் போகும்..!
எதுவுமே புரியாத போது
வாழ்க்கை ஆரம்பம் ஆகும்
ஆனால்
எல்லாம் புரியும் போது
வாழ்க்கை முடிகின்றது ..!!
-
என் வாழ்வில் ஏக்கம்
ஏமாற்றம் , தோல்வி, துரோகம்
அதிகம்
சந்தோசத்திற்கு எனக்கும்
சம்மந்தமே இல்லை..
ஆனாலும் புன்னகையோடு
கடந்து செல்கிறேன்
இதுவம்
கடந்து போகும் என்ற
நம்பிக்கையோடு...
-
எதையெல்லாம்
வேண்டும் என
பிடிவாதமாக இருந்தோமோ
அவற்றையெல்லாம்
வேண்டாம் என்று
ஒரு நாள்
நம்மையே சொல்ல வைக்கும்
இதுதான்
வாழ்க்கை
-
என்னை தேடி வரும்
துன்பத்திடம்
சிரித்துக்கொண்டே கேட்டேன்
யாருக்கும் என்னை பிடிக்காமல் போக,
உனக்கு மட்டும் என்னை எப்படி
பிடித்தது ,
அடிக்கடி வந்து சந்தித்து
கொண்டே இருக்கிறாய் என்று
கேட்டேன் ...
நான் வரும் பொழுதெல்லாம்
சோர்ந்துவிடாமல் என்னை எதிர்த்து
நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க
வந்தேன் என்று
-
எதை ஏற்றுக்கொள்ள
முடியவில்லையோ
அதை மாற்ற முயற்சி செய்
எதை
மாற்றிக்கொள்ள முடியவில்லையோ
அதை ஏற்றுக்கொள்ள
முடிவு செய்து விடு
இதுவே
வாழ்க்கையின்
ரகசியம்
-
இதயம் எந்த அளவுக்கு
பிடித்தவர்களிடம்
சண்டையிடுகிறதோ
அந்த அளவுக்கு
அவர்களிடம்
அன்பை எதிர்பார்க்கும்
-
சிலரிடம்
சில விஷயங்களை
புரியவைக்க கஷ்டப்படுவதை விட
சிரித்திவிட்டு
கடந்து செல்வதே
சிறந்தது
-
எதிர்பார்ப்பு
ஏமாற்றம் தரும்
அது உண்மை
அதற்காக எதிர்பார்ப்பு
இல்லாமல் வாழ முடியாது
ஆனால் யாரிடம்
எதிரிபார்க்க வேண்டும் என்று
தெரிந்து கொள்ளுங்கள்
-
சந்தோஷத்தில்
நான் யாருடன்
பேசுகிறேன் என்பது
முக்கியமில்லை
துக்கத்தில்
என் மனம்
யாரைத் தேடுகிறது
என்பதே
முக்கியம்
-
விலகாத உறவுகள்
வேண்டுமென்று
நினைக்கிறோம்
என்ன செய்ய
சில உறவுகள்
விலகி இருந்தால்தான்
நீடிக்கிறது
-
உண்மையாக கூட
இருக்க வேண்டியதில்லை
ஊமையாக இருந்தாலே
போதுமானது
சில இடங்களில்
ஜெயிப்பதற்கு
பல இடங்களில்
அவமானப்படாமல்
இருப்பதற்கும்
-
பொய்யான
உறவுகளுக்கு முன்னாள்
புன்னகையும்
ஒரு பொய் தான்
உண்மையான
உறவுகளுக்கு முன்னை
கோபம் கூட
புன்னகை தான்
-
நீ யாராலும்
தேடப்படவில்லை
என்றால்
சந்தோசம் கோல்
ஏனெனில்
உன்னை யாரும்
பயன்படுத்திக்
கொள்ளவில்லை
அவர்கள்
சுயநலத்துக்காக
-
நீ . . .நீயாக இரு !
காகம் மயில் போல்
அழகில்லை தான் . . .
ஆனாலும்
படையல் என்னவோ
காக்கைக்குத்தான் !
பட்டு போல்
பருத்தி இல்லைதான் . . .
ஆனாலும்
வெய்யிலுக்கு சுகமென்னவோ
பருத்திதான் !
ஆதலால்
என்றும்
நீ . . .
நீயாக இரு !
-
உங்கள் பார்வை
நல்லதாக இருந்தால்
உலகம் அழகாய் தெரியும்
உங்கள் வார்த்தைகள்
நல்லதாக இருந்தால்
உலகத்திற்கு நீங்கள்
அழகாய்
தெரிவீர்கள்
-
நிகழ் காலத்திற்கு
இலையாக
இறந்த காலத்திற்கு
சருகாக
எதிர்காலத்திற்கு
உரமாக
முக்காலத்திற்கும்
பொருந்திருக்கிறது
"இலை"
-
தவறு
நம்மிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய வழக்கறிஞர்
யாருமில்லை
தவறு
அடுத்தவரிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய நீதிபதி
யாருமில்லை
-
என்னதான்
நமக்கு நீச்சல்
தெரிந்திருந்தாலும்
சாக்கடையில்
விழுந்துவிட்டால்
எழுந்து
வர வேண்டுமே தவிர
அங்கும்
நீச்சல்
அடிக்கக்கூடாது
-
நாம் விரும்பாதது
வந்தாலும்
துன்பம்
நாம் விரும்பியத்தகு
விலகினாலும்
துன்பம்
விரும்பியதை நாம் அடைந்து
அதை இழந்தாலும்
துன்பம்
வாழ்வு
இருக்கும்வரை
இருப்பதை
நேசிக்க
கற்றுகொள்வோம்
-
எல்லோருக்கும்
காயங்கள் உண்டு..
அதை கண்ணீரால்
வெளிப்படுத்துபவருக்கு
முதல் தடவையாகவும்..,,
புன்னகையால்
வெளிப்படுத்துபவருக்கு
பல தடவையாகவும் இருக்கும்
-
பிறருக்காக
இறக்கப்படுவதில்
தவறில்லை
ஆனால்
நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில்
ஓநாய்க்காக
வருந்துவது
முட்டாள்தனமே
-
எல்லாம்
எனதாக வேண்டும்
என்பதை விட
எனதானது
எல்லாம்
நிலையானதாக வேண்டும்
என்று வாழ்வதே
இன்பம்
-
தேடி அலைந்து கொண்டே இரு
வேண்டியது கிடைக்கும் வரை
அது
உன் அருகில் இருந்தால்
அதிர்ஷ்டம்
தூரத்தில் இருந்தால்
நம்பிக்கை
கிடைக்காமல் போனால்
அனுபவம்
-
வாழ்க்கையில்
எதிர்பார்த்து
நடப்பதில்லை
எதிர் பார்ப்பதும்
நடப்பதில்லை
எதிர்பாராமல்
நடப்பதே
சில சுவாரசியமான
நிகழ்வுகள் மற்றும்
நினைவுகளை
கொடுக்கிறது
-
ஏமாற்றி
விட்டதாய் நினைத்து
ஏமாந்து விடுகின்ற
வாழ்க்கையில் தான்
சொல்ல முடியா
சோகங்களும் காயங்களும்
நிரம்பி கிடக்கின்றன
-
உறவு என்பது
ஒரு புத்தகம்
அதில்
தவறு என்பது
ஒரு பக்கம்
ஒரு பக்கத்திற்காக
புத்தகத்தை
இழந்து விடாதீர்கள்
-
சிலருக்காக
சிலரை
பிடிப்பது போல்
நடிப்பதும்
சிலருக்காக
சிலரை
பிடிக்காதது போல
நடிப்பதும் தான்
இன்றைய
உறவுகள்
-
முகங்களை விட
முகமூடிகளை தான்
இவ்வுலகம்
விரும்புகிறது...
ஏமாற்றுவதை விட
ஏமாந்துபோவதையே
அறியாமல்
விழுந்துக்கிடக்கிறது....
-
வெற்றி - உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும்.
தோல்வி - போராட உனக்கு போதுமான வெறியை தரும்.
வெற்றி - உன்னை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்.
தோல்வி - நீ யாரென்று உனக்கே காட்டும்...
-
நமது கையிலிருந்து ஒரு பாடம்.
எல்லா விரல்களும்
ஒரே அளவானவை அல்ல.
ஆனால்
வளைந்து கொடுக்கும் போது
சம அளவாக இருக்கும்.
வாழ்க்கை
சுலபமாக இருக்கும்
நாம் வளைந்து கொடுத்து
எல்லா சூழ்நிலைகளையும்
அனுசரித்துப் போகும் போது.
-
வாழ்க்கையில் தேவையான
இடத்தில் முற்றுப்புள்ளி
வைக்காவிட்டால்..
வார்த்தையும்..
வாழ்க்கையும்.. அர்த்தம்
இல்லாமல் போய் விடும்.
-
மௌனம்
மொழியற்ற உணர்வுகளின்
ஊடகம்
மௌனம்
சத்தமின்றி
ரத்தமின்றி
யுத்தம் செய்யும்
போர்க்களம்
மௌனம்
சில வேளைகளில்
நம் மானம் காக்கும்
ஆயுதம்
-
யாராக இருப்பினும்
அடிக்கடி மன்னிக்க
கற்றுக்கொள்ளுங்கள்
ஆனால்
நம்பிக்கை வைப்பதை மட்டும்
ஒரு முறையோடு
நிறுத்தி கொள்வது
சிறந்தது
-
பெருமையும் பணிவும்
அதிகமானால்
கோழை என்பர்..
அன்பும் இரக்கமும்
அதிகமானால்
ஏமாளி என்பர்..
புன்னகையும் வெகுளித் தனமும்
அதிகமானால்
பைத்தியம் என்பர்..
சிந்தனையும் கேள்வியும்
அதிகமானால்
திமிர் என்பர்..
மொத்தத்தில்
மனிதனிடம் இருக்க வேண்டிய
எதுவுமே இல்லாதவனைத் தான்
இங்கு
மனிதன் என்பர்..!
-
மொத்த உலகமும் முடியாதுனு
சொல்லும்போது..
ஓருவேளை முடியலாம் என்று
மெல்லியதாக உங்களுக்கு
கேட்கும் குரலே..
"நம்பிக்கை"
-
கடந்து போறது தான் வாழ்க்கை
கவலைகளையும், கஷ்டங்களையும்
அவமானங்களையும், தோல்விகளையும்
தேவையில்லாத பழிகளையும்,
துரோகங்களையும், ஏமாற்றங்களையும்
கேலிப் பேச்சுக்களையும்
கடந்து போய் தான் வாழனும்
இதையெல்லாம் கடந்து போகாம
ஒரு வாழ்க்கையை
வாழ முடியாது
-
எத்தனை கோபத்திலும்
வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்
அடிகளை விட
அது தரும் வலிகள் அதிகம்
பின் எத்தனை
மன்னிப்புகள் கேட்டாலும்
மாறாது மறையாது
-
ஒவ்வொரு தோல்வியும்
ஓர் அனுபவம்
ஒவ்வொரு இழப்பும்
ஓர் லாபம்
ஒவ்வொரு ஏமாற்றமும்
ஓர் எச்சரிக்கை
ஒவ்வொரு நட்டமும்
ஓர் பட்டறிவு
ஒவ்வொரு காணாமல் போதலும்
ஓர் தேடல்
-
வாழ்க்கையில்
பாதி துன்பம்
தவறானவர்களை
நம்புவதால் வருகிறது
மீதி பாதி துன்பம்
உண்மையானவர்களை
சந்தேகிப்பதால்
வருகிறது
நம்பிக்கையும்
சந்தேகத்தையும்
சரியாக பயன்படுத்தினால்
வாழ்க்கை
மகிழ்ச்சியாக இருக்கும்
-
ஏகப்பட்ட புள்ளிகளை வெச்சா
கோலம் கொஞ்சம்
சிரமமாக தான் இருக்கும்
அதுபோலத்தான்
வாழ்வில்
எதிர்பார்ப்புகளும்
-
சிங்கமும் , புலியும் சாதுக்கள் தான்
ஆனால்
ஆடும், மாடும் தான் கொடூர ஜந்துக்கள்
என்று சொன்னது
புல்
ஒரு விஷயம் யாரால்
சொல்லப்படுகிறது
எனபதைப்பொறுத்தே
அதன் உண்மைத்தன்மை
அமையும்
-
உன்னை சுற்றி
உள்ளவர்களை
மகிழ்ச்சியாக வைத்திருக்க
விரும்பினால்
முதலில் நீ மகிழ்வாக
இருக்க வேண்டும்
ஏனெனில்
உன்னிடம்
இல்லாத ஒன்றை
யாருக்கும் தர இயலாது
-
பேச்சுத்திறமை என்பது
சரியான இடத்தில
சரியான சமயத்தில்
சரியாக பேசுவது மட்டுமல்ல
தவறான வார்த்தைகளை
மனசு பேச
நினைக்கும் போது
அதை
பேசாமல் இருப்பதும் தான்
-
சிலர் உங்களை
மட்டம் தட்டுவார்
நீங்கள் உயர்ந்தபின்
அவர்களே
கையும் தட்டுவார்
நீங்கள்
உங்கள் பாதையில்
போயிக்கொண்டேயிருங்கள்
விமர்சிப்போரை
விட்டுவிடுங்கள்
ஏனெனில்
அவர்களுக்குப்பாதை
என்பதே
கிடையாது
-
பிரச்சனைகளை
தவிர்க்க வேண்டுமெனில்
சிலரிடம்
கேள்வி கேட்கவும் கூடாது
சிலரின் கேள்விகளுக்கு
பதில் சொல்லவும் கூடாது
எவரிடமும் எதையும்
எதிர்பார்க்கவும் கூடாது
எவருக்கும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தவும் கூடாது
-
உலகம் உங்களை
காயப்படுத்த
நீங்கள்தான்
அனுமதிக்கிறீர்கள்
நீங்கள்
அனுமதிக்கும் அளவுதான்
ஒருவர் உங்களை
காயப்படுத்த முடியும்
அனுபவம் உள்ளவர்கள்
காயப்படுத்துவதும் இல்லை
தன்னை காயப்படுத்த
அனுமதிப்பதும் இல்லை
அடுத்தவர்கள்
தன்னிடம் இப்படி தான்
பழக வேண்டும் என்று
எதிர்பார்ப்பவர்கள் மட்டும் தான்
காயப்படுகிறார்கள்
-
எதிர்த்து நிற்பவர்கள் எல்லாம்
எதிரியும் அல்ல
உடன் இருப்பவர்கள் எல்லாம்
உறவுகளும் அல்ல
சில காலங்களும்,
சில சூழ்நிலைகளும் தான்
உணர்த்துகிறது ..
யார்,
யார் மனிதர்கள் என்று
-
எழுத்துக்கள்
அனுபவங்களை
பகிர்ந்துகொள்ள
உதவும்
ஆனால்
அது சிலரது
வாழ்க்கை என
எல்லாரும்
உணர்வதில்லை
-
அனுபவங்கள்
நம் வாழ்வில்
வாழவும்,
சிந்திக்கவும்
கற்பிக்கிறது
யார் எவ்வளவு
நல்ல மனிதர்களாக
நடித்தாலும்
அவர்களின் உண்மையான
சுயரூபம்
ஒருமுறையேனும்
உங்களுக்கு முன்னால்
வெளிப்படுத்தும்
-
கவனிக்கப்பட வேண்டும் என்றால்
குப்பையில் கூட
புரளலாம்
ஆனால்
கௌரவிக்கப்பட வேண்டும் என்றால்
இடம் பார்த்துதான்
அமர வேண்டும்
-
இறந்த பின்
அவ்வுறவுகள் எல்லாம்
நமக்கு பிடித்தமானவராகவே
இருக்கிறார்கள்
என்பது
உண்மையின் சிதறலாக
கூட இருக்கலாம்
-
போதி மரத்தடியில்
ஞானம் அடைந்தவர்களை விட
போலி மனிதர்களால்
ஞானம் அடைந்தவர்கள்தான்
அதிகம்
***********
ஆலோசனை என்பது
அனுபவப் பகிர்வு
அறிவுரை என்பது
நாம் செய்யாததை
அடுத்தவர்க்கு கூறுவது
-
1) முட்டாள்களுக்கு அறிவுரை சொல்பவன் சிக்கலில் இருப்பான்.
2) நீங்கள் சிக்கலில் இருக்கும்போது உறவினர்களை அடையாளம் காணலாம்
3) கையில் உறுதியாக இருப்பதை விட்டுவிட்டு, நிச்சயமற்றதைத் தேடுபவர்கள் இரண்டையும் இழக்க நேரிடும்
4) அழகில் மயங்கி, குணமில்லாத பெண்ணை மணக்காதீர்கள்
5) அதிகாரிகளையும் நதிகளையும் அதிகம் நம்பாதீர்கள்; எப்போது திரும்பும் என்று தெரியவில்லை
6) அன்பான குடும்பமும், இருக்கும் பணத்தில் திருப்தி கொள்ளும் மனமும் இருந்தால், இந்த பூமி சொர்க்கமாக
மாறும்.
7) முகத்தில் முகஸ்துதி செய்து ஏமாற்ற சதி செய்பவனைத் தவிர்க்கவும்; அடியில் விஷமும் மேலே பாலும் நிறைந்த
குடம் அவன்.
8 ) எல்லா ரகசியங்களையும் நண்பரிடம் வெளிப்படுத்தாதீர்கள்; சிக்கினால் சிரமமாக இருக்கும்
9) ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள்
10) சமமானவர்களுடன் நட்பு நல்லது
-
சாதனை புரிய நினைப்பவன்
புத்தகத்தோடு இருப்பான்
சாதனை புரிந்தவன்
புத்தகத்தில் இருப்பான்
-
பிரதிபலன்
எதிர்பார்க்காமல்
ஒருவருக்கு
உதவி செய்ய முடிந்தால்
அங்கேயே
நீங்கள்
மனிதனாக
மாறுவீர்கள்
-
மனிதர்கள்
எத்தனை அழகாக
மாறுவேடம் போட்டாலும்
காலமும், சூழ்நிலையும்
அவர்களின்
இயல்பான முகத்தை
காட்டிக்கொடுத்துவிடுகிறது
-
உயர்வுக்காக
ஆசைப்படுங்கள்
ஆசைக்காக
முயற்ச்சி எடுங்கள்
முயற்சிக்கான
உழைப்பை கொடுங்கள்
வெற்றியானது
உங்கள்
கரங்களில் வரும்
-
ஒருவரிடம்
அதிகாரத்தை
கொடுத்துப் பாருங்கள்
அவருடைய குணம்
எளிதாக
தெரிந்து விடும்
-
சிலரை
நமக்கு பிடிக்காது
ஆனாலும்
விலக முடியாது
சிலரை
நமக்கு ரொம்ப பிடிக்கும்
இருந்தும்
நெருங்க முடியாது
இது தான்
வாழ்க்கையின்
விளையாட்டு
-
வளர்வதற்காகவே
புதைக்க படுகிறது
விதைகள்
வெற்றி
பெறுவதற்காகவே
ஏற்படுவது தான்
சில தோல்விகள்
ஆகவே
தோல்வியை கண்டு
துவளாதீர்கள்
வெற்றி நிச்சயம்
-
உலகின்
மிக மகிழ்ச்சியான
விஷயம்
ஒருவரின்
சிரிப்பு
அதை விட சிறந்த விஷயம்
அவருடைய அந்த சிரிப்பிற்கு
நீங்கள்
காரணமாக இருப்பது
பிரயமானவர்களிடம்
மனம் விட்டு
பேசுங்கள்
தவறு செய்தால்
வெட்கப்படாமல்
மன்னிப்பு கேளுங்கள்
வாழ்க்கை அழகாகும்
-
நம்பிக்கை என்பது
ஒரு நாளில் உதிர்ந்துவிடும்
பூவாக இருந்துவிட கூடாது
மேலும் மேலும் மலரை
உருவாக்கும்
செடியாக
இருக்க வேண்டும்
-
சில நாட்கள்
பேசாவிட்டால்
சில உறவுகள்
அறுந்து போகும்
பல உறவுகள்
நம்மை மறந்து போகும்
அவ்வளவு தான் வாழ்க்கை
வாழ்க்கையில்
எத்தனை
கஷ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க மறக்காதீர்கள்
-
எப்படி
பேச வேண்டும்
என்று கற்றுத்தர
நிறைய பேர்
இருக்கிறார்கள்
ஏன் பேசாமல்
இருக்கவேண்டும்
என்று கற்றுத்தர
வாழ்க்கை
மட்டுமே
இருக்கிறது
நல்லதைக்கூட
சில இடங்களில்
பேசாமல்
இருப்பதே
நல்லது
-
தொடர்புள்ளியாவதும்
முற்றுப்புள்ளியாவதும்
நாம் வாழும் விதத்தில்
இருக்கிறது
நாம்
எவ்வளவு தெளிவாக
இருந்தாலும்
சில இடத்தில்
நிச்சயம் ஏமாறுவோம்
தெளிவு
ஏமாற்றத்தை தடுக்காது
ஆனால்
நாம்
அடையும் ஏமாற்றம்
நிச்சயம்
தெளிவை ஏற்படுத்தும்
-
கொஞ்சம்
இடைவெளி விட்டுத் தொடருங்கள்
வாகனங்களை மட்டுமல்ல
சில உறவுகளையும் தான்
நீடிக்க வேண்டுமெனில்
சிறு இடைவெளி அவசியம்
-
ஒருவரது
கடினமான காலத்தில்
கொடுக்க எதுவும்
இல்லையெனில்
கனிவான வார்த்தைகளை
பேசுங்கள்
அதுவே சிறந்த உதவி தான்
-
குடை
மழையை நிறுத்தாது
ஆனால்
மழையில் நிற்க வைக்கும்
நம்பிக்கை
வெற்றியைத் தாராவிட்டாலும்
வெற்றி பெறத் தேவையான
உத்வேகத்தைத் தரும்
-
இறுதி வரை
வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
இறுதி வரை
வாழ்க்கை
இப்படியே இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு
கவலை இல்லாத
மனிதன் இல்லை
எனவே
எது உனக்கு வேண்டும் என்று
முடிவு செய்யாதே
எது உனக்கு வேண்டாம் என்று
முடிவு செய்
அது தான் நிம்மதியான
வாழ்க்கையை தரும்
-
யாரோ ஒருவரின்
வாழ்க்கை இருளில்
சிறு மின்மினி பூச்சியின்
வெளிச்சமாய் இருப்பது
சிறு சந்தோஷம் தான்
-
பேச வேண்டியவர்களிடம்
பேச வேண்டிய நேரங்களில்
பேசி விடுவதே சிறந்தது..
இங்கே சொல்லப்படும்
வார்த்தைகளை விட
விழுங்கப்படும்
வார்த்தைகளுக்கே
அர்த்தங்கள்
அதிகம்[/size]