FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 27, 2012, 07:48:29 PM

Title: முடிந்தவரை பதில் போட முயல்கிறேன் !
Post by: aasaiajiith on March 27, 2012, 07:48:29 PM
துவக்கத்தில் என் பதிப்புக்களுக்கு
பதிலோ,கருத்தோ ,விமர்சனமோ,
வராததர்க்காய் கவலை கொண்டேன்

கவலையில் கண்ணில் கண்ணீர் திவலை
வடியாதது ஒன்று தான் குறை என  கொண்டேன்

பின்புதான், ஒரு நல்லவளின்  திடீர்  அறிமுகம்
அவளை மொட்டென்பதா ? சிணுங்க செய்யும் சிட்டென்பதா?
காஞ்சி பட்டென்பதா ? கன்னியின் நெற்றி பொட்தென்பதா?
மனம் மயக்கும் மெட்டேன்பதா? மார்வாடி கடை லட்டென்பதா?

என் வரிகளுகெல்லாம் வரி வரியாய் வரியிட்டு
விரிவாக,விரைவாக விமர்சிப்பாள், வர்ணிப்பாள்
என் வரிகளுக்கு அவள் எவ்வளவு பெரிய விசிறி
என்பதற்க்கு ஒரு சிறு உதாரணம் (நகைச்சுவை)

ஒரு கட்டத்தில் நான் வசிக்கும் கட்டிடத்திற்கு
மாநகராட்சியில் வரி கட்டி வந்தால்
அந்த வரிக்கும்  பாராட்டு புரிவாள் என் விசிறி .

சில தினங்களில் ,சில காரணங்களுக்காய்
சம இடைவெளியில் சிறு சிறு இடைவேளைகள்

இடைவேளை முடித்து கொண்டு  மறுபிரவேசம்
என் மறு பிரவேசத்தின் அரும் துவக்கமாய்
நறும் பதிப்புக்கள் சில பதித்தேன்
நான் பதித்த அச்சில பதிப்புகளுக்கு
கரு மேகங்களில் இருந்து மழை இறங்குவதை போல்
கவி மேகங்களில் இருந்து  வரவேற்ப்பு மழை பொழிந்தது

காற்றாற்று வெள்ளத்தை கட்டவிழ்த்து விட்டது போல
நானும் கவிதை வெள்ளத்தை கட்டவிழ்த்து விட இருந்தேன்

என்ன நேர்ந்ததோ ஏது நேர்ந்ததோ
மீண்டும் ஜெயித்தது என் கணிப்பு
மீண்டும் என் பதிப்புகளுக்கு புறக்கணிப்பு

பிறர் பதிப்பிற்கு நன் பதில் போடாததன்
பிரதிபலிப்பே என் பதிப்புகளின் புறக்கணிப்பின்
காரணம் என பிரியமானவர் ஒருவரின்
பிரியமான குற்றச்சாட்டு !

வருத்தமானேன் இருந்தும் வெறுத்துபோகவில்லை,
அவருக்கு விரிவாய் விரைவாய்  பதிலும் வழங்கினேன்
உண்மையில் என் மீது உயர் மதிப்புகொண்ட
உன்னதமான ஒருவரின் உத்தமமான உத்தரவிற்கு
உட்பட்டே ,உடன்பட்டே பதில் தருவதில்லை என்று .

எதிர்ப்பாளர்கள் வரி  பதித்தால் ,உதைப்பதும்,
வதைப்பதும் ,மிதிப்பதும்  சர்வாதிகாரம்

எதிர்-பாலர் வரி பதித்தால் (மட்டும் )
இங்கு மதிக்கப்படுவது சர்வ சாதாரணம் !

சில நாட்கள் முன்பு  என் சிலபதிப்புகள் .
மீண்டும் முருங்கைமரமாய் புறக்கணிப்புகள்

தொடர் புறக்கணிப்பில் என் பதிப்பு படும்
தவிப்பை பார்த்தோ என்னவோ?
 பரிதவித்து அவ்வுத்தமமானவர்
கடும் கட்டளை இட்டு என் கைகளை
கட்டிபோட்டவர் ,இன்றோ
கோரிக்கை வைத்து பதில் போடசொல்கிறார்
வெறும் கோரிக்கை மட்டும் முன்வைத்திருந்தால்
உடனே ஒப்புகொண்டிருப்பேன் ,
அவரோ சில விதிமுறைகளும்,வரைமுறைகளும்
இட்டுவைத்தார் .

பதில் பதிப்பதில் எனக்கு ஒன்றும் இடையூரில்லை
பதில்கள்  பல பதித்தும் இருக்கின்றேன்
என்  சிற்றறிவிற்கு எட்டிய வரையில்
மத்திய ,மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளுக்கு
அடுத்தபடியாய் அதிக கண்டனத்திற்கு உட்படுவது
என் பதில்களாய் தான்  இருக்கும் !

பதிப்பின் பொருள் என்ன? பதிப்பின் மதிப்பென்ன ?
என்பதைஎல்லாம் குத்துமதிப்பாய்  கணித்து
பொத்தாம்பொதுவாய் வெறும் ஒப்புக்கு
பதில்போடுவதில் உடன்பாடில்லை எனக்கு

முடிந்தவரை பதில் போட முயல்கிறேன் !


Title: Re: முடிந்தவரை பதில் போட முயல்கிறேன் !
Post by: Dharshini on March 29, 2012, 02:11:33 PM
எதிர்-பாலர் வரி பதித்தால் (மட்டும் )
இங்கு மதிக்கப்படுவது சர்வ சாதாரணம் !(appdi illai kavignare enga paarata yarum manathu illai endru solalam alathu  intha kavithaigalai purinthu kola thiran potha villai endru kuda kooralam athu matum illamal namai vida nandraga ezhuthukiragale endra enamum athanal poda  manam illamalum irukalam


கடும் கட்டளை இட்டு என் கைகளை
கட்டிபோட்டவர் ,இன்றோ
கோரிக்கை வைத்து பதில் போடசொல்கிறார்
வெறும் கோரிக்கை மட்டும் முன்வைத்திருந்தால்
உடனே ஒப்புகொண்டிருப்பேன் ,
அவரோ சில விதிமுறைகளும்,வரைமுறைகளும்
இட்டுவைத்தார் .( kavignare kum kavithaikum varai murai illaye ithil vithi murai potathu yar avarai pazhum siraiyil thali 40000000 kasai adi thara soli utharavidugiren



Title: Re: முடிந்தவரை பதில் போட முயல்கிறேன் !
Post by: aasaiajiith on March 29, 2012, 05:29:52 PM
மகா  ராணியே   !  மலர்  வாணியே  !
உத்தமியே  !
உனதாட்சியில் ( கவிதை ) உருப்படாதவர்கலையே 
உயர்ந்தவராய் , உன்னதமானவராய்
உருவாக்கும்  உன்னதம்  நிகழும்போது
உத்தமமானவர்  என்று  உரைத்த  பின்பும்
அத்தனை  கசையடிக்கும்  , பாழும்  சிறையில்
அடைக்கவும்  உத்தரவிட்டது  உகந்ததா ??
Title: Re: முடிந்தவரை பதில் போட முயல்கிறேன் !
Post by: suthar on March 29, 2012, 06:09:56 PM
Anbu kattalaikku
adipanintha aasai
arulia varigaluku
anbu thangai vazhangia
atthanai kasai adikkalaium
athigapatcha thandanaiyaai
alikkaamal athunaikum
anbu mazhai pozhinthida
adiavan unnaal mudiumey.

paazhum sirai enbathu miga
pazhamaiyaana
pazhakapatta
panpatta un ithaya siraiyaaga kuda irukalaam.