FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Reece on October 01, 2019, 06:16:32 PM

Title: பெண் விளக்கு
Post by: Reece on October 01, 2019, 06:16:32 PM

இங்கு நண்பர்களின் கவிதைகளை படிக்கும்பொழுது எனக்கும் கவிதை எழுதவேண்டும் என்று பல முறை தோன்றும்.(எழுத தெரியாதே !!) முயற்சி திருவினையாக்கும் என்ற நம்பிக்கையுடன் முதல் கவிதையை எழுதுகிறேன்

(https://i.postimg.cc/PLjzbYn2/pen-vilaku.jpg) (https://postimg.cc/PLjzbYn2)

தன்னைத் தானே எரித்து
  அறைக்கு ஒளிரூட்டுமாம் மெழுகுவர்த்தி
ஆனால் நீயோ கதிரவனாய்
  காரிருள் நீக்கி வெள்ளியாய்
முளைக்கிறாய் பெண்ணே..

குடும்பத்திற்காக தன் வாழ்க்கையைத் துறந்து
  கனவுகளைத் துறந்து வாழும் பெண்கள் எத்தனை..
துணைக்கு துணையாக சேய்க்கு தாயாக
பசிக்கு உணவாக பிணிக்கு மருந்தாக
அணுக்களின் எண்ணிக்கையை மிஞ்சும்
 நீ எடுக்கும் அவதாரங்கள்..
 
நாளும் தேய்கிறாய் துரும்பாக
மறுநாளே கிளம்புகிறாய் எறும்பாக
பிறர் துயர் நீயறிவாய் களைவாய்
உன் துயர் உள்ளிருந்தும் வெளிக்காட்டாமல்

தாய்நாடு என்பர் தாய்மொழி என்பர்
 நதிகளுக்கும் உன் பெயரிடுவர்
பெண்ணியம் பேசும் ஆண்கள் சிலர்
பெண்ணிடம் கண்ணியம் பேண மறப்பதேனோ..

கூறுவர் பெண் எளிதில் உடைவாள் என்று
உடைந்தாலும் பிளவுபடு அணுகுண்டென
அந்த ஆற்றலால் எரித்திடு
 உன்மேல் ஏவப்படும் பொய்க்கணைகளை
எத்தனைமுறை வெடித்து எரிந்தாலும் எழுவாய்
 மீண்டும் பீனிக்ஸ் பெண்ணே!!!

                                           - நன்றி 
Title: Re: பெண் விளக்கு
Post by: Guest 2k on October 02, 2019, 08:35:42 PM
Reece தோழா வாரேஹ்ஹ் வாவ்வ் செம்ம செம்ம  :D ;D ரொம்ப இயல்பான வார்த்தைகளால அழகா எழுதியிருக்கீங்க தோழா. தொடர்ந்து பொதுமன்றத்துல உங்களோட கவிதைகளை பதியனும்னு கேட்டுக்கிறேன்
Title: Re: பெண் விளக்கு
Post by: Reece on October 03, 2019, 03:55:24 PM
;)thanks a lot chiku.. i will try my best 8)

Title: Re: பெண் விளக்கு
Post by: Ice Mazhai on October 04, 2019, 02:20:19 AM
Reeece machi kalakku kalakku ;D
Title: Re: பெண் விளக்கு
Post by: Reece on October 04, 2019, 02:01:05 PM
ice machi neenga vantha thane kalaka  >:( enga poitinga kanom :D
Title: Re: பெண் விளக்கு
Post by: சாக்ரடீஸ் on October 04, 2019, 09:10:26 PM
reece machi jopperuuuuu thodarnthu eluthitae irunga machi ..........
Title: Re: பெண் விளக்கு
Post by: Reece on October 05, 2019, 07:18:28 AM
thanks machi.. kandipa :D