FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Mr.BeaN on December 13, 2023, 01:39:27 PM

Title: தற்கொலை
Post by: Mr.BeaN on December 13, 2023, 01:39:27 PM
நெஞ்சமெல்லாம் வலி வந்து
நினைவுமது சுயமிழந்து
அஞ்சிடா மனதுடனே- சிலர்
தற்கொலைக்கு முயலுகிறார்

சிந்தனை செய்திடவே
சிரத்திலே மூளை ஒன்றை
கடவுளும் தந்ததையே
மூடரும் மறந்து விட்டார்

எத்துனை துன்பங்களும்
எண்ணிலடங்கா இடர்களும்
வந்துதான் கலங்க செய்ய
வாழ்வையே முடிப்பதுவோ

புத்தியை கூர் படுத்தி
சக்தியெல்லாம் திரட்டி
துன்பமும் துன்பம் கொள்ள
இன்பமதை தேடிடுவோம்

பித்தனை போல நாமே
பிதற்றி கொண்டிராமல்
அழகிய வாழ்விதையே
அறத்துடன் வாழ்ந்திடுவோம்..