FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on December 24, 2023, 10:25:05 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: Forum on December 24, 2023, 10:25:05 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 333

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/333.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: Mr.BeaN on December 25, 2023, 07:46:14 AM
காலம்
கணிக்க முடிந்த கணக்கல்ல
கடக்க முடியா வழக்கு

ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும்
 புது வருடம் வந்தால்
கொண்டாடி தீர்த்து கூத்தாடி மகிழ்ந்து
இத்தனை கேளிக்கையில்
என்றேனும் சிந்தித்தோமா
 எத்தனை நொடிகளை கொன்று
பிறக்குது புத்தாண்டு என்று


ஒன்றின் வீழ்ச்சியில் இன்னொன்று பிறக்குமாம்
மனித்த்தை கொன்றா பிறக்குது புத்தாண்டு?
எத்தனை இன்னல் சுற்றியும் நடக்க
எளிதென கடந்து நகர்கிறோம் நாமும்

சென்னையும் நெல்லையும்
வெள்ளத்தில் மிதக்க
என் இடம் மேடென
மனமுமே நினைக்க
இப்படி எண்ணமும் தோன்றிடும்
நம்மிடம்
இருந்ததாய் சொல்லிடும் மனிதமும் எங்கே?

எந்திரம் போல ஆன நம் வாழ்வில்
மனிதம் என்னும் மந்திர சொல்லை
மனத்திலே இருத்துவோம் மனிதம் வாழ
பிறக்கட்டும் புத்தாண்டு நாமுமே ஆள..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: Vijis on December 25, 2023, 11:03:51 PM
ரோபோ

அறிவியல் அறிவின் படைப்பு என்பார்கள் ஆனால் தனி ஒருவரின் அறிவின் படைப்பு

தன்னை உத்தியோகப்படுத்தி கொண்டு இன்று ரோபோட்டிக் என்ற பெயரில் உள்ளது நாளை என்ன பெயரோ

ஒரு வரிக் கேள்வினை கொடுத்தால் இரண்டு வரி பதில் கொடுக்கும் மனிதனுக்கு இடையில் இரண்டு பக்கம் பதில் கொடுக்கும் எந்திரமே

 இன்று பேட்டரியை போட்டு ஒட விடும் இந்த ரோபோ நாளை நமக்கு இரண்டு பேட்டரி கட்டையை உணவாக அளிக்கலாகுமோ

 ஆனால் இன்று நாம் வேடிக்கையாக பார்க்கும் ரோபோ நாளை நம்மை வேடிக்கை பொருளாக ஆக்கலாமோ

கணிமையான இவ்வுலகில் கண் கட்டி வித்தையாக நாமும் சுழல்கிறோம் நீயும் சுழல்வாயோ

 எந்த கேள்வி கேட்டாலும் சற்றென்று பதில் கிடைக்கும் என்று மனிதனின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிக்கும் விடுதலை பெற உருவாக்கப்பட்ட ஆயுதம்

 மனித உணர்வுகள் நாளை நம் பிள்ளைகளின் பாட நூல்களில் வரலாம் உண்மையான ரோபோ நாம் தான் நம்மை உருவாக்கிய பெற்றோரே அறிவியல் விஞ்ஞானிகள்

 இனி வரும் இந்த புத்தாண்டில் தனி மனிதனின் ஒருவரின் படைப்பு அவரின் வசதிக்காகவே என புரிந்து

இயற்கை மாறாக உருவாக்கப்பட்ட இந்த எந்திரத்தை பயன்படுத்தாமல் மனிதனின் அறிவினால் அன்பும் பண்பும் நிறைந்த இவ்வுலகில் இன்னும் பல சாதனைகளை புரிந்து வெற்றி பெறுவோம் இனிமையான வாழ்வை வாழ்வோம்        நன்றி

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: Sun FloweR on December 26, 2023, 03:12:57 AM
இயந்திரத்தின் விரலிலே
மனித இனத்தின் இயக்கம்...
பழையன கழித்து
புதியன புகுத்தும்
புதுமை பிரம்மாக்கள்...

7ம் அறிவு,
 8ம் அறிவு என நீட்சி பெற்றுக் கொண்டே செல்லும் உலோக மனிதர்கள்...
அன்னையின் கருவுமில்லை
தந்தையின் உயிர் துளியும் இல்லை...
விஞ்ஞான பேரறிவு பெற்றெடுத்த வித்திலே
முளைத்து விட்ட
விந்தை மனிதர்கள்...
இதயமற்ற மானுடர்கள் ..

அன்பற்றவர்கள் இவர்கள்
அறிவுள்ளவர்கள் இவர்கள்
கட்டளையைச் செய்பவர்கள் இவர்கள் ..
கண்ணீர் வடிக்க தெரியாதவர்கள் இவர்கள் ..

வயோதிகமும் அண்டாதவர்கள்...
வியாதிகளும் நெருங்காதவர்கள்..
லஞ்சமும் வாங்காதவர்கள்...
வஞ்சமும் அறியாதவர்கள் ..

உயிருள்ள மானிடத்தில் பொய், களவு, துரோகம், பேராசை பொதிந்திருக்கும்..
உயிரற்ற இயந்திர மனிதனுள்
கடமை மட்டுமே எஞ்சியிருக்கும்...

கணிப்பொறியின் முன்னே
குவலயமும் ஓடுகின்றதே!
எந்திரத்தின் பின்னே
மனித வாழ்வும் மண்டியிடுகிறதே!

எஃகு மனிதன் விரல் நுனியில் எழுதிவிட்டான் 2024ம் ஆண்டை..
இரும்பு மனிதன் துவங்கிவிட்டான் புதிய நூற்றாண்டை...

ரோபோக்களின் ஆதிக்கத்தில்
செழிப்பாகட்டும் உலகம் ..
எந்திர மனிதர்களின் கட்டுப்பாட்டில்  கனவு வெல்லட்டும் பூலோகம்..


வருக புதிய மனிதனே...
வருக புதிய 2024ம் ஆண்டே ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: TiNu on December 26, 2023, 08:12:43 PM


இயற்கையின் பருவ மாற்றத்தில் கணக்கிட்ட காலத்தை..
இன்று இலக்கங்களில்(Numbers) தேடுகிறது உலகம்...

மனிதமும், இயற்கையின் ஓர் அம்சமென்பதை மறந்து ..
மானுட மதியால், விளைந்த எந்திரங்களின் பின்னே ஓடுகிறான்..

ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு உயிர்கள் அடங்குமாம், அந்த ஐந்தில்..
நம் புலன்களால் மட்டுமே, உணரும் அனைத்தும் அடங்குமாம், அதே ஐந்தில்..

இப்பிரபஞ்சமே! நிலம், நீர், நெருப்பு, காற்று, மேகத்தில் அடங்கி நிற்க..
நீ ஏனடா! எண்களின் கைகளை, பற்றிக்கொண்டு நடைபோடுகிறாய்..

தொழில்நுட்பம் துணைகொண்டு நீ 1000 சுலபவழிகள் கண்டறிந்தாலும்..
அவையாவும், உன்னை அழைத்துச்செல்வது ஏனோ! உன் அழிவுக்குத்தானே..

ஈராயிரத்து இருபத்து நான்கோ இல்லை.. இரு கோடியே இருபத்து நான்கோ..     
காலம்! எதுவாக இருப்பினும், அதன் முடிவை... அதுவே சொல்லும்.   
 
எத்தனை கோடிகளை, இவுலகின்  உருபொருள்கள் கடந்து போனாலும்..
இறுதியில்! அதன் உருவமாற்றம் என்னவோ ஐந்தில் ஒன்று தானே. ..

அதனால்,
என்றுமே!  நாம் நம் வாழும் காலம் மட்டும், இயற்கை எனும் ஆடைகள் அணிந்து,
இந்த பூமி தாயின் மடியில்.. குழந்தைகளாய் மகிழுந்து தவழுவோம்..

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: Vethanisha on December 29, 2023, 05:40:42 PM
இறைவனின் உயரிய படைப்பு
மனிதன்

அந்த மனிதனின் பெரும் கண்டுபிடிப்பு
இயந்திரன்

இதோ இங்கு

இனி வரும் ஆண்டு அவன் தீண்டலில் 
இனி வரும் காலம் அவன் சேவையில்
 எம் மனிதனுக்கு உதவியாய் 
அவன் திறமைகளுக்கு  உபத்திரமாய்

இயந்திரன்
இவன்
சலிப்படைய மாட்டன்
பதவி உயர்வு கோர மாட்டான்
சொன்னதை மட்டும் செய்வான்
சொகுசான வாழ்க்கைக்கு வித்திடுவான்

நிஜத்திற்கு  உதவியாய்
புது ஆளுமையின் அரசனாய் 😇

அதே இவன்தான்   

மனித கனவுகளை கொல்ல  வந்திட்டான்
அவர்  திறமையை தூக்கிலிடுவான்
வேலையை பறிக்க வல்லான் -மேலும்
 மனிதனை  சோம்பேறியாக்கி  இரசிப்பான்

 கற்பனைகளுக்கு உபத்திரமாய்  -உடன்
உணர்ச்சி அற்ற ஜடமாய் 😈

நல்லதோ கெட்டதோ
உலகோடு ஒட்டி வாழ -இனி
பற்றிக் கொள்ள வேண்டும்
அவன் விரல்களை

இயந்திரா

நொடிகளாய் நிமிடங்களாய்
மணித்துளிகளாய் நாட்களாய்
வாரங்களாய் மாதங்களாய்
 கடக்க போகும் இந்த புத்தாண்டில்
நீயேனும் என்னை காயப்படுத்தாமல்
என்னோடு பயணி 🤗


கடந்தவை யாவும் படிப்பினையாய்
வருவது இனி புது வசந்தமாய்

 VethaNisha.M

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: Minaaz on December 30, 2023, 11:43:22 PM
2023, இலக்கமாக வருடமாக பலரின் கருத்துக்கள் இருப்பினும் கண் முன் தவித்திருந்த தவழ்ந்தாடிய இன்னல்கள் இனிய நினைவுகள் காத்திருப்புகள் பலவற்றை சுமந்த அன்னையாக தோன்றிற்று..

துக்கங்கள் சூழ்ந்துள்ள கருமேகமாய் உருமாறினாலும் அடுத்த நாழிகையால் மழை என்ற ஒன்றை மண்ணிற்கு பரிசாய் அள்ளி வழங்கிடும் மேகமாய் சந்தோசங்களை தூது விட்டு கரை சேர்கிறது இன்னும் சில கணப் பொழுதினில்...

தேற்ற முடியாத ஏக்கங்கள் தேட முடியாத உறவுகள் அத்தனையும் வாழ்க்கைப் புத்தகத்தில் அரங்கேரிற்று...

பசித்தால் பாசமாய் கொஞ்சிட்ட உறவுகள், பாதுகாப்பாய் பக்கமாய் இருந்த உறவுகள், மனதிற்கு ஆறுதலாய் அருகில் இருந்த காதல் அத்தனையும், உன் நிலையே உனக்கு நிரந்தரம் என்று புரிந்துணர்வை ஊற்றி விட்டது என்னுள்...

பேச முடியாத வார்த்தைகள், பேசியும் பலன் இல்லாத வார்த்தைகள், பேசு எத்தனித்த மௌனங்கள் யாவும் பொக்கிஷமாய் சிறு பொன் முருகலினுள் இட்டு சாந்தம் ஆயிற்று ஆழ் மனதினுள்...

விம்மி அழுத போதும் விதி மேல் பலியிட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த வேளையில் நாட்காட்டியை கடைக்கண் நோட்டமிட்டு நாட்களை கிழிக்கும் போது ஏதோ ஓர் நம்பிக்கை, எல்லாம் சரியாகிவிடும் என்ற மந்திரத்தை உச்சரிக்கலாயிற்று...

அன்னையின் கருவறையில் மீண்டும் சேர்ந்து கண்ணை மூடி உறங்கிட இருக்கும் ஆர்வம் போல அடுத்த வருடத்தை எட்ட வேண்டும் என்பதும்,

தீர்க்க முடியாத வினாக்கள் தீர்வு இல்லாத பிரச்சனைகள் அத்தனைக்கும் திகட்டும் அளவிற்கு தீர்வு தேனாய் உருவெடுக்கும் என்பதில் சிந்தனை நிலையாய் பற்றிற்று..

என்னுள் தேங்கிய ஏக்கங்கள் அனைத்தையும் தன்னுடனே மாய்த்துக் கொள்கிறது 2023, அப்படியே எனக்கான புது விடியலை புத்துணர்வுடன் அரங்கேற்ற காத்திருக்கும் புத்தாண்டாய் 2024..

மலரட்டும் புத்தாண்டு புதியதாய்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: விழியாள் on January 01, 2024, 02:45:21 PM


                      ஓவியம் உயிறாகிறது.
      
              
எந்திரனே கைகளை கோர்த்துக்கொள்
ஆதவனைச் சுற்றி நாங்கள் போகும் வருடாந்திர பயணத்தில் இனி நீயும் இணையலாம்
பயணம் எப்படி இருக்கும் என கேட்டால் உன் செயற்கை நுண்ணறிவும் சற்றே நிலை தடுமாறும்
கட்டணமில்லா பயணம்தான்
நாள் எனும் முன்னூற்று அறுபத்து ஆறு நிறுத்தங்களே
மிரட்சி கொள்ளதே நாங்களும் எந்திரம் தான்


அன்றாடம் விழித்து ,அரட்டை செய்து,அலுவலகம் சென்று,அசதியுற்று,உடலை மெத்தையில் சமர்ப்பிப்பது எல்லாம்
அடுத்த நாளின் அன்றாடங்களுக்காகத்தான்

பிரியம் கொள்கிறேன் உன்மேல் ஆணையிட்டதை செய்யும் அறிவான பணியாளன் நீ
             
இருந்தும் கோபம் கொள்கிறேன் உன்மேல்
கற்பனைக்கு எட்டா நுண்ணறிவால்  பலர் பணிகளை ஓரம் கட்டியதால்
உன்னால் கற்பனைதான் செய்யலாகுமோ எங்கள் பசி என்னும் பகைவனை

                            
நல்ல வேலை!
உணர்ச்சிகள் இல்லை உனக்கு இருந்தால் கேட்டிருப்பாய்
நான் என்ன" பிரிவு" என்று
கண்ணீரும் கொண்டிருப்பாய் மனிதர்  துயர் கண்டு
கண்ணீர் துடைக்கும் விரல்களும் பொய் என்று விரக்தியும் கொண்டிருப்பாய்
             கொஞ்சம் கவனமாகவே வா உன்னையும் திருடி விடுவார்கள்
மனிதர்கள் ஜாக்கிரதை எனும் அறிவிப்புப் பலகை கூட இல்லை
     எனினும் இறுக பற்றிக்கொள்
சொல்லிலடங்கா இன்பங்களும் இப்பயணதில் அடங்கும்.
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333
Post by: BreeZe on January 03, 2024, 09:15:06 AM


அன்புள்ள  2024 ..தயவு செய்து என்ன புரிச்சுக்கோ 

தயவுசெஞ்சு என் கிட்ட கொஞ்சம் kindஆ இரு
இந்த முறையாச்சும் என் கிட்ட politeஆ நட

நான் உன்ன தினமும் நெனச்சுக்கிறேன்
நெனச்சுட்டு time பாக்குறேன்.. நீ மாறுற ஆனா என்னால மாற முடில...

உன்ன நெனச்சுட்டு தேதிய கிழிக்கிறேன்
கிழிக்குறது paper தான் ஆனாலும்
இன்னைக்கி நான் என்ன கிழிச்சேன்னு நெனைக்க வைக்கிற நீ...

2024.. Just ஒரு number 2023னு இருந்தது 2024னு மாறிருக்க
இதுக்காக நானும் மாறனுமா?
மாறனும்னு agreement ஏதும் sign போட்ருக்கேனா?

மாசம் ஆச்சுன்னா சம்பளம் எப்போனு எதிர் பாக்கறேன்
மாசம் மாசம்னு வருஷம் பூரா 12 மாசமும்.
இதே பொழப்பா இருக்கே man 2024...

சம்பளம் வாங்கினதும் தெர்ல காலி ஆனதும் தெர்ல
காலி ஆன கையோட "யார் கிட்ட கடன் வாங்கணும்னு" யோசிக்க வைக்கிற
இப்படியே போச்சுன்னா என் பொழப்பு என்ன ஆகுறது
So pleech help me..

என் கூட்டாளி எல்லாம் resolution எடுக்கறாங்க
ஆன அத achieve பண்ணல
Because
அத achieve பண்றதுக்கு முன்னாடி
நீ மாறிடுற new year...
So ஒரு paper எடுத்து எழுத எல்லாம் முடியாது
எதுக்கு wasteah resolution kissolution எல்லாம்....

புதுசு புதுசா new year வருது போகுது
நீ மட்டும் new new ah வர
ஆன நான் எப்போமே same ah இருக்கேன்
என்னால உனக்காக மாற முடியாது

இதுக்கு மேல சொல்றதுக்கு ஏதும் இல்ல man 2024
Simple ah சொல்றேன் கேட்டுக்கோ
be kind, be welcoming me , be polite , be good, be supportive and gimme all the prosperities to me..

உன் அன்பால என்ன நேசி
நானும் உன்ன நேசிக்க try பண்றேன்

Love me more and more... Love you 2024...


எல்லாருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்



CopyrightZ by
BreeZe