-
இது ஒரு கவிதை விளையாட்டு..
ஒருவர் ஒரு கவிதை எழுதிவிட்டு
"அடுத்த தலைப்பு" என்று ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...
அடுத்து வருபவர்
அந்த தலைப்புக்கு ஒரு கவிதை எழுத வேண்டும்.. அவர் ஒரு "தலைப்பை" தர
வேண்டும் இல்லை எனில்
உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ... அல்லது வரியையோ தலைப்பாக
கொடுக்கலாம்.......கடைசி வரி தான் போட வேண்டும் என்று இல்லை...
கவிதையில் உள்ள எந்த வரியானாலும்.. கவிதையில் இல்லாத வேற
சொல்..தரலாம்... சொந்தமாக கவிதை எழுத இதை ஒரு வாய்ப்பாக
பயன்படுத்திகொள்வோமே...
முயன்றால் நீங்களும் கவிஞர்/கவிதாயினி தான்.... ;) ;)
இது தான் விளையாட்டு....
நான் தொடங்கி வைக்கிறேன்
உன் உறக்கத்தின் கனவாக வந்து
உன்னை ரசித்துவிட்டு போய்விடுகிறேன்
எனக்காக ஒரு இடம் இதயத்தில் இல்லா விடினும்
உன் கனவினில் வந்து போகும் வரமாவது தந்துவிடு
அடுத்த தலைப்பு
வரம்
தமிழில் உங்கள் கவிதைகளை பதிவிடுங்கள்..முடிந்த வரை :) :) :)
-
வாழ் நாள் கழிகிறது ..
என் வாழ்கையும் தொலைகிறது ..
உன்னோடு வாழ வழிதான் தெரியவில்லை
உன் நினைவுகளை மட்டும் சுமக்க
வாரமாவது வேண்டும் ..அனுமதி தந்துவிடு ..
வாழ்க்கை
-
நிலை இல்லாத மனித வாழ்க்கையில்...
பொருளையும், பேராசையையும், சுயநலத்தையும்
விரும்பும் சுயநலமிக்க மனிதர்கள்....
இந்த மனிதர்களுக்கு பிறரின் வாழ்க்கையை பற்றி கவலை இல்லை...
இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சுய நலம் தான்...
இவர்கள் வாழ்க்கை முடியும் வரை...
இவர்களின் சுயநலமும் பேராசையும் நிரந்தரமா?
இனியவதும் பிறரின் வாழ்கையை பற்றி சிந்திக்கட்டும் இவர்கள்...!
கடமை
-
அருமை....வாழ்த்துக்கள் யுசுப்...மற்றும் ஏஞ்சல் .
;) ;) ;)
-
வீட்டுகாவலாளிக்கோ விடியும் வரை கடமை
தோட்ட தொளிலாலிக்கோ இருளும் வரை கடமை
காவல் தொளிலாலிக்கோ குறிப்பிட்ட நேரம் வரை கடமை
அவரவர் கடமைக்கு நேரம் குறித்த கடவுள்
காலையில் கோலம் போடுவதில் ஆரம்பித்து
இரவு படுத்து தூங்கும்வரை ...உன் குழந்தை
எழுந்து அழும் சத்தம் கேட்டு உறங்காது போன உன் இரவுகளை-----
அம்மா உன் கடமைக்கு பாசத்திற்கு வரையறை குறிக்கவில்லையே .. :-*
கோலம்
-
கருமேக சுழண்டு இருளாக மாற
மின்னல்கள் கோவமாய் சீர
மரங்கள் பேயாய் தலைவிரி
கோலம் போட
வான்மகளே
யார் மீது கோபம்??
கண்ணீரை சிந்தி
எங்களை கண்ணீருக்குள்
தள்ளி விடாதே :'( :'(
அடுத்த தலைப்பு
கோபம் ;)
-
எதையும் தாங்குவேன்
உன் கோபத்தை தவிர
ஏனென்றால் ...
என் உணர்வுகளை உறையச் செய்கிறதே
உன் கோபம் ...
உணர்வு
-
என் உணர்வுகளின்
உயிர் வடிவம்
என் கவிதைகள் :-*
என் கனவு காதலனே
கவிதையில் காதலிக்கிறேன்
அனுதினமும்
உன்னை :-[
உயிர்
-
ஒவொரு தடவையும்
உன்னை பிரிகையில்
வலி கொள்ளுது என் உயிர் நாடி ..
உன்னை பிரியாத வரம் வேண்டும்
வாய்ப்பளித்துவிடு ...
வலி -.....
-
சொல்ல நினைத்து சொல்ல மறந்து
தவித்து துடித்தவை எல்லாம்
வரிகளில் முடிகையில்
உன்னிடத்தில் சொல்லுவதாய் ஒரு ஆனந்தம்...
அருகில் இருந்து சொல்லினாலும்
கிடைக்குமோ அறியவில்லை...
வரிகளில் வாழ்ந்துவிடுகிறேன்
வலிகளை மறந்து...
ஆனந்தம்
-
ஒவொரு தடவையிலும்
நீ சொல்லும் ஹாய் இல் மட்டுமே
உணர்கிறேன் ஆனந்தம் ...
நீ
-
ஒவொரு தடவையிலும்
நீ சொல்லும் ஹாய் இல் மட்டுமே
உணர்கிறேன் ஆனந்தம் ...
நீ
வாவ்......அருமையான வரிகள்
-
நீ எனக்கு தந்த
அழகிய நினைவுகள்..
பேசி போன வார்த்தைகள்
எழுதிய கவிதைகள்
எல்லாமே எனக்காக
எனக்காக மட்டுமே
நினைவுகள்
-
nice kavithai ;)shruthi
உனக்காக நான் எழுதிய கவிதைகளை
நீ மறந்து போகலாம்
என் நினைவுகள் ...உன்னால் மறக்க முடியுமா ...?
மறதி
-
என் மறதி,
அவளை மட்டும்
மறக்க மறந்துவிட்டது!!
நினைவு
-
என் கனவுகள் தினம்
தீனி கேட்கிறது உன் நினைவை ..
இருந்தும் குறையாத அட்ச்சயமாக
உன் நினைவு ..
கனவு
-
கண் விழிக்க ஆசையில்லை
என் உறக்கத்தின் கனவில்
நீ இருக்க உன்னை துரத்தும்
விடியலை வெறுக்கிறேன்
விடியாத இரவும்
முடியாத கனவும் வேண்டும்..
உன்னை கரம் பிடித்து
உலா வரும் கனவு
தொடர வேண்டும்
விடியாத இரவு
-
எல்லோருக்கும் விடியும் இரவு
பாவம்
ஈழத்தமிழனுக்கு மட்டும்
இன்னும் விடியாத இரவாகவே
இருக்கிறது
தமிழ்
-
கருவிலே உருவாகி
காதிலே உள்வாங்கி
கருத்தோடு வளர்ந்து
என்னை கண்ணியமாய் வழிநடத்தும்
தாய்க்கு அடுத்து நான் மதிக்கும்
என் தாய்மொழியாம் தமிழே நீ வாழீ..
கரு
-
தமிழ்த்தாயின் கருவில்
உருவாகிய எனது
கருவில் உருவாகிய
இந்த கவிதைக்கு
கரு கொடுத்த
பூலோக தேவதைக்கு
சமர்ப்பணம் இந்தக் கவிதை
சீதணம்
-
;)thamilan
உனக்கு என்னால் கொடுக்க முடிந்த
ஒரே சீதனம் அன்பு ..
அன்பு
-
நீ பிடிக்கவில்லை என்று
எழுதிய கடிதத்தை கண்டு
மகிழ்ச்சியடைந்தேன்
அந்த கடிதத்தின் தொடக்கத்தில்
அன்புள்ள என்று
தொடங்கியிருந்தாயே
அந்த அன்பு வார்த்தையுடன்
காலமெல்லாம் வாழ்ந்திருப்பேன்
வாழ்க்கை
-
உன்னோடு வாழும் ஒரு கணம் போதும்
என் வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும் ..
கணம்
-
ஒரு கணம் உன்னை
பார்க்கணும்
மறுகணமே என்
உயிர் இழக்கணும்
அந்த கணம்
என் வாழ்வின் இலக்கணம்
இலக்கணம்
-
எந்தன் இதய கரம் பிடித்து
என் வாழ்வின் இலக்கணம் ஆனவனே
இறுதிவரை மாறாமல் இருந்துவிடு
உன்னோடு இணையும் வாய்ப்பை இழந்தாலும்
உண் நினைவோடு வாழ்ந்திடுவேன் ...
இறுதி
-
வாழ்வின் இறுதிவரை நீ வராவிடினும்
என் வாழ்நாளின் இறுதி நாளில்
மறக்காமல் வந்துவிடு
உன்னை எதிர் பார்த்தே
என் கல்லறையில்
உன் நினைவலைகள்
காத்துகிடக்கும்
கல்லறை
-
என் கல்லறைக்கு செல்வதானால்
கைக்குட்டையோடு செல்லுங்கள்
என் கல்லறை கூட
அவள் நினைவில்
அழுது கொண்டிருக்கும்
கைக்குட்டை
-
என் கைகுட்டையும்
காகிதம் ஆனது
உனக்கு காதல் தூது செல்ல
தூது
-
உன்னிடம் தூது சொல்ல
என்னிடம் தோழி இல்லை
என் கவிதையே தூது...
கடுகதியில் வந்துவிடு ...
தோழி
-
விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
என் நட்பையே....
சில நட்புக்காக...
என்னை சிறை மீட்டிடு...
தோழி
உன்னுடைய...........
உண்மையான...நட்பால்...... :(
சிறை
-
உன்னை என் மனச் சிறையில் வைத்தேன்
ஆயுள் கைதியாய் ...
கைதி
-
நான் ஆயுள் முழுவதும்
ஆயுள் கைதியாக
இருக்கச் சம்மதம்
நீ உன் மனச்சிறையில்
என்னை சிறை வைப்பாய் எனில்
சம்மதம்
-
ஒருவார்த்தை சொல்லிவிடு
சம்மதம் என்று ..
அல்லாடும் என் இதயத்திற்கு
அமைதி கிட்டும் ..
அமைதி
-
சூறாவளியில்
சிறு துரும்புக்கெங்கே அமைதி
அலைகடலில்
அலைபாயும் படகுகெங்கே அமைதி
காற்றாற்று வெள்ளத்தில்
காகித கப்பலுக்கெங்கே அமைதி
பேராசை எண்ணம் கொண்ட
மனதுக்கெங்கே அமைதி
காற்றாறு
-
உன் பாரா முகம் கண்டு
என் கருவிழி கொண்டது காட்டாறு ...
முகம்
-
மிருகத்திற்கு ஒரு
முகம்
மனிதனுக்கு பல
முகங்கள்
மிருகம்
-
என்னுள் தூங்கும் மிருகம்
துடித்து எழுகின்றது -நீ
வேறு ஒருத்தியிடம் பேசும் போது
தூக்கம்
-
என் தூக்கத்தில் நீ
கனவாய் வருவாயானால்
நான்
கண் விழிக்க விரும்பவில்லை
என் நினைவில்
வருவதாக இருந்தால்
நான் தூங்க விரும்பவில்லை
என் நினைவில்
-
என் நினைவில் வாழ்பவனே...
நியமாய் உன்னுடன் வாழும் நாட்களுக்காய்
ஏங்குகின்றேன் ...
ஏக்கம்
-
என்னுள் தூங்கும் மிருகம்
துடித்து எழுகின்றது -நீ
வேறு ஒருத்தியிடம் பேசும் போது
தூக்கம்
அருமை...பெண்ணுக்கே உரிய பொறாமை பளிச்சிடும் வரிகள் ;) ;) ;) ;)
-
உன்னை ஒரு நொடி காணாவிடினும்
ஒரு யுகமாய் என்னுள் ஏக்கம்,
பருவம்
-
திரைகடல் ஓடி திரவியம்
தேடினேன்
என் இளமை பருவத்து
காகித கப்பலை
யாராவது திருப்பித் தருவார்களா?
திரவியம்
-
thanks shuruthi ;)
என் மன கடல் ஓடி
தேடிய திரவியம் நீ
தினமும் போராட்டம்
திருட்டு போகாமல் காக்க....
திருட்டு
-
திருட்டு போனதென் இதயம்
திருடியவள் நீ
திருடிய இதயத்தை
பூட்டி வைத்திருப்பாய்
உன் இதயத்துக்குள் என்
திறந்து பார்த்தேன்
உன் இதயத்தை
அங்கே
எனது இதயதுகுப் பதிலாக
இருந்த்தது வேறு பல
இதயங்கள்
இதயம்
-
எனது இதயதுகுப் பதிலாக
இருந்த்தது வேறு பல
இதயங்கள் ;D ;D ;D ;D ;D ;D ;D
இருக்கும் வரை உனக்காக
துடிக்கும் என் இதயம்
இறந்தும் ஒரு நிமிடம்
துடிக்கும் உனக்கே உனக்காய்
இறப்பு
-
மறுபிறப்பு உண்டெனில
இறப்பை பற்றி கவலை இல்லை
இறந்து பிறக்கவேண்டும்
உனக்கு மட்டுமே பிடித்தவளாய்.....
நிழல்
-
நீ என்னை பிரிந்தாலும்
என் நினைவுகள்
உன்னை தொடரும் நிழலாய் ..
பிரிவு
-
பிரிவுகளின் காயங்களில்...
பக்குவப்பட்டு,
பிரிவோம் எனத்தெரிந்தே
பழகுவதால்...
வலிப்பதில்லை எந்தப் பிரிவும்!
காதல் பிரிவைத் தவிர...
காயங்கல்
-
உன்னால் நான் கொண்ட
காயங்கள் ஆற ...
இதழால் ஒத்தடம் தந்துவிடு ...
இதழ்
-
மலரொன்று
மலராமல்
மணம்வீசி
மயக்குகிறது ...
அவளது 'இதழ்கள்'..!
மணம்
-
நான் போஸ்ட் பண்ண Warning வருது நீங்க மட்டும் விளைடிடு இருக்கீங்க :'( :'( :'(
-
ungalukkum serthu thaan valadrom rose shruthi(F)
-
;) ;) ;)suruthi munthikanum speedd
பூஞ்சோலையில் பூக்கள் நடுவே நீ நின்றாலும்
உனக்கே உரிய மணம் உணர்த்தி விடுகிறது
உன்மேல் நான் கொண்ட காதலை ....
பூக்கள்
-
பூக்களும் கலப்புத்
திருமணம் செய்கின்றனவோ!
பிச்சியும்.... கனகாம்பரமும்
ஒரே நாரில்...
வெள்ளை நிறப் புடவையைத்
தந்த சமுதாயம்
தர மறுப்பதேனோ?
தனக்கு மனம் தரும்
பூக்களுக்கு மரணத்தைக்
கொடுப்பவர்கள்
பெண்கள்!
கலப்புத் திருமணம்
-
யாதி மத பேதம் இன்றி
நம் இதயம் கலந்த போதே
நம் கலப்பு திருமணம்
நடந்தேறி விட்டதே
இனி எதற்கு பொம்மை கல்யாணம் ....?
பொம்மை கல்யாணம் ...
-
நிஜமான நேசம்
பொய்த்து போக
சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட
திருமணங்கள் இன்று
நீதி மன்ற வாசலில்
வரிசையில் நிற்க
பொம்மை கல்யாணமாகி
போய்விடுமோ வரும் காலங்களில் ???
நீதிமன்றம்
-
கருப்பு ஆடையில்
புதைக்க பட்ட
எத்தனை எத்தனையோ
நீதி தேவதைகள்
நீதி கேட்டு
வாதிடுகின்றன
நீதி
-
இருவருக்கு இடையே பிணக்கு என்றால்
நீதி கேட்க நீதி மன்றம் உண்டு
இதயங்களுக்கு இடையே பிணக்கு என்றால்
எங்கு சென்று நீதி கேட்பதுண்டு ...
இதயம்
-
இதயம் இடம் மாறி நினைவுகள்
பரிமாற்றத்தில் மெல்ல மெல்ல
தவிப்போடு இனைந்து மனதில்
உருவாகும் அழகான அனுபவம் காதல்..
பூட்டி வெய்தலும் மூட கதவாய்
அன்பை எதிர்பார்க்கும் ...
பரிமாற்றம்
-
கண்கள் வழியே இதயங்களை
பரிமாறி கொண்டது காதல்
இதழ்களின் வழியே
தடம் மாறி புரண்டது காமம் ..
தடுமாற்றம்
-
அந்த விண்ணில் வரும்
மின்னிலை கண்டு குட
தடுமாறியதில்லை...
இன்று உன் கண்ணில் வரும்
பார்வை கண்டு பேச தடுமாறுகிறேன்...
மின்னல் [/color]
-
மின்னல் என என் வாழ்வில் வந்தவனே
என் இதயத்தில் கன்னலை எற்படுத்தியதேன்
கன்னல்
-
உன் இதயம் பூ என
நினைத்தேன்
அது இரும்பென தெரிந்த பின்
கன்னல் வைக்காமல்
உள்ளே நுழைவதெப்படி
இரும்பு
-
பெண்களின் கண்ணீர் ஆயுதமாம்
ஆண்கள் சொல்லுகின்றார்கள் ..
அழவைக்கும் ஆண்கள் இதயம்
இரும்பா.? இலவம் பஞ்சா ...?
பஞ்சு
-
பஞ்சும் நெருப்பும்
அருகில் இருந்தால்
பற்றிக் கொள்ளூமாம்
ஆண்கள் நெருப்பாம்
பெண்கள் பஞ்சு போல்
மென்மையானவர்களாம்
ஆனால்
பஞ்சின் ஸ்பரிசம் பட்டு
பற்றி எரிவது
நெருப்பல்லவா?
ஸ்பரிசம்
-
தீயின் ஸ்பரிசத்தில்
பற்றிக் கொள்ளவது
பஞ்சல்லவா...
இழப்பு பஞ்சுக்குத்தான்
நெருப்புக்கு அல்ல ...
இழப்பு
-
தீ என்பது
தனித்து ஒரு சொல் அல்ல
அது ஆகுபெயர்
தீ உண்டாக ஒரு தீக்குச்சி
தேவை அல்லது
ஒரு காகிதம் தேவை
அந்த தீக்குச்சி எரியாமல்
பஞ்சு எப்படி எரியும்
தீக்குச்சிக்கு தானே முதலில்
இழப்பு
ஆகுபெயர்
-
தீ குச்சியின் இழப்பை
யாரும் பேசுவதில்லை
பற்றிக் கொள்ளும் பஞ்சினைதான்
ஊர் பேசும் பேசும் ..
ஊர் இங்கு ஆகு பெயர் ..
ஊர்
-
ஊருக்கு ஊர்
தேசத்துக்கு தேசம்
மதங்களும் மாறலாம்
மனிதர்களும் மாறலாம்
காதல் என்றும் மாறுவதே இல்லை
இல்லை
-
நீ எது கேட்டாலும் கொடுப்பேன்
இல்லைஎன்றாது ...
உன் நினைவுகளை மட்டும் கேட்டு விடாதே
இல்லை என்றே ஆகிவிடுவேன் ...
நினைவுகள்
-
நான் உணவால்
உயிர் வாழ்வதை விட
உன் நினைவாலேயே
உயிர் வாழ்கிறேன்
உணவு
-
என் கனவுகளுக்கு
உன் நினைவுகளே உணவு
சளைக்காமல் சாமரம் வீசுகின்றதே
சாமரம்
-
மேகத்தை பஞ்சனையாக்கி
சாமரம் வீசி
தாலாட்டு படி
என் மடியினில் நீ தூங்கும் தருணத்தில்
நானும் அன்னைதான்
நீ என் பிள்ளையாய் மாறும்பொழுது
அன்னை
-
பத்து திங்கள் சுமந்து
என்னை பெற்று எடுத்த என் அன்னையே
இன்று என் துயரம் நீ தெரிந்திருந்தால்
அன்றே கருவில் கலைதிருப்பாய்
உன் கண்மணியின் கண்ணீர் தாங்காது ..
கருகலைப்பு
-
தெரிந்து நீ செய்யாத பிழைக்கு
பிழை அறியாத எனக்கு தண்டனையா???
கருவறை சிறை முடிந்து வர இருந்த என்னை
கல்லறைக்கு அனுப்பிவிட்டாயே
சுகமான பாரம்
இன்று சுமையாய் ஆனேனோ
தண்டித்து விட்டாயே என்னை
சுமை
-
உன்னை காணும் வரை என்
இதயம் சுமை கொள்ளவில்லை
உன்னை கண்டபின்போ
சுமை தவிர வேறு அறியவில்லை
நீ என்னை வெறுத்தாலும்
நீ என்றும் எனக்கு சுகமான சுமைதான்
கண்டபின்
-
உன்னை கண்ட பின்
என்னுள் மாற்றம்
உயிரை தொலைத்தேன்
உன்னில்...
உன் சுவாசத்தை அனுப்பி
எனக்கு உயிர் மூச்சை தந்து விடு
உயிர் மூச்சு
-
உன்னை சுவாசிக்க தெரிந்தபின்
அறிந்து கொண்டேன்
என் உயிர் மூச்சு நீதான் என்று ...
போவதும் வாழ்வதும் உன் கையில் ..
கையில்
-
கையில் கிடைத்தும்
நான் தொல்லைத்த
என் வாழக்கை நீ
வாழக்கை
-
உன்னை சந்திக்காது இருந்திருந்தால்
என் வாழ்க்கைக்கு
அர்த்தம் இல்லாமல் போய் இருக்கும்
உன்னை சந்தித்த்ததால்
என் வாழ்க்கையே
இல்லாமல் போய்விடுமா ..?
பேய்
-
பேய் கூட இரக்கம் கொள்ளும்
ஒரு வேளை உன்னை நேசித்ததை போல
அதையும் நேசித்து இருந்தால்
மறுவாழ்வு
:P :P shabba :D:D
-
மரம்விட்டு உதிர்ந்த
வெள்ளை பூ ஒன்று
ஏங்குது மறு வாழ்வுக்காய் - விதவை
விதவை
-
ஆயிரம் ஆசைகளோடு
கரம் பிடித்து
ஆறே மாதத்தில்
பறிபோயிற்று எனக்கு இருந்த
சுமங்கலி பட்டம்
இன்று நானோர்
ஆசைகளை மண்ணில் புதைத்த
விதவை
பட்டம்
-
உன்னை காதலித்ததால்
காசு கொடுக்காமல்
கிடைத்த பட்டம்
கைவிடப் பட்டவள் ..
காசு
-
நீ காசை தேட
நான் உன் காதலை தேட
காசுக்காக காதலை இழக்கிறேன்
உன் காதலை இழக்கிறேன் அனுதினமும்
பின்னாளின் சந்தோசத்துக்காக
இந்நாளில் ஏன் இந்த பிரிவும்
முயற்சி
-
உன்னை நேசிக்கும்
என்னை நீ
நேசிக்க முயற்சிக்க வேண்டாம்
புரிந்து கொள்ள முயற்சி செய்
போதும் ...
நேசம்
-
பாசம் தந்தாய்
நேசம் கொண்டேன்...
காதல் என்றாய்
கலங்கி போனேன்...
ஆறுதல் தந்தாய்
அரவணைத்தாய்..
இன்று பிரிந்தாய்
தேடினேன்...
காண இயலவில்லை...
பரித்தவிக்கிறேன்...
உன் நினைவில்....
நாடோடி
-
உன்னை தேடி
நாடோடியாய் என் நினைவுகள் ...
நேசி
-
உன்னை நேசிக்கும்
என்னை மட்டும் நேசி
என்னை மட்டுமே நேசி
இமைகள்
-
என் கண்களுக்கு இமையாக வ
என் விழியோடு உரசி
விலகாமல் இருந்துவிடு
கண்கள்
-
என் நேசத்தை உணர்த்த
நான் எடுத்த முயற்சிகள்
எல்லாம் தோல்வியில்..
உன் கண்களை கண்டதும்
தோற்று போகிறேன்
உன் நேசம் கண்டு... ;) ;) ;)
பிம்பம்
-
தினமும் கண்ணாடி பார்கிறேன்
என்ன அதிசயம்
என் விம்பமாய் நீ
இதுதான் காதலா
கண்ணாடி
-
உன் வீட்டு கண்ணாடிக்கு
தினமும் உன் அழகை ரசிக்கும்
அதிர்ஷ்டம் தந்த மச்சான்களாய் மின்னுகின்றன
நீ ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் ....
அதிர்ஷ்டம்
-
உன்ன நான் காதலித்தது
உன் அதிர்ஷ்டம்
என்னை நீ காதலிக்காதது
என் துரதிஷ்டம்
துரதிஷ்டம்
-
உன்னை நேசித்தேன்
உள்ளமதில் உன்னை வைத்தேன்
தெரிந்தும் நீ விலகி இருப்பது
என் துரதிஸ்டம்
உள்ளமதில்
-
என் உள்ளமதில்
ஏனோ புரியாத மாற்றம்
ஒவ்வொரு முறையும்
உன்னை கடந்து செல்கையில்
இதய துடிப்பு இரட்டிப்பாகி
சலனத்தை ஏற்படுத்தி
துடிக்க வைத்து ரசிக்கிறாய்
நீ ரசிப்பதால் தானோ
என் இதயம் உனக்காக
துடித்து கொண்டிருக்கிறதோ
சலனம்
-
என்னுள் சலனத்தை ஏற்படுதியவனே
சத்தம் இல்லது என் சகலத்தையும் ரசித்தவனே
சம்மதம் சொல்ல மட்டும் தயங்குவது ஏனடா ..?
என் தாபங்கள் நீக்கிட நீ வாடா ....
தாபம்
-
கண்ணுக்குள் ஏக்கத்தையும்
நெஞ்சுக்குள் தாபத்தையும்
வெளிபடுத்த முடியாமல்
தவித்து போகிறேன்
உன் முத்த மொழிக்காக
நான் பேசும் மௌனமொழி
அறிந்து அறியாமல்
கண் சிமிட்டி குறும்பாய் பார்த்து
சிர்த்து நீ பார்க்கும் போது
செத்து பிழைக்கிறேன் :-* :-* ;) ;) ;)
முத்த மொழி :P :P
-
நான் கேட்காமலே நீ தந்தாய் முத்த மொழி
அந்த மொழி என் நெஞ்சில் மழையென பொழிகையில்
உன் மௌனத்தை கடக்க நான் படும்
வேதனை நீ அறிவாயோ...
அடுத்த தலைப்பு
மௌனம்
-
எதை தாங்கும் சக்தி உண்டு
உன் மௌனத்தை தாங்கும்
சக்தி இல்லை ...
மௌனமாய் நீயும்
உன் மாற்றத்துகாய் நானும் ...
மாற்றம்
-
தென்றலை புயலாக
மாற்றும் வல்லமை படைத்த
மனிதன்
தன் வாழ்வில் தென்றல்
வீசாதா என
ஏங்கிக் கிடக்கிறான் இது
விதியின் மாற்றம்
வல்லமை
-
உன் வீட்டுக் கண்ணாடியாகும்
வல்லமை கேட்பேன் கடவுளிடம் ..
உன் பிம்பமாவது என் மூலம்
பிரதிபலிக்கட்டும் ..
அப்போதாவது என்னை ஆசையாய்
பார்ப்பாயே அதனால் தான்.
பிம்பம்
-
எப்போது என்னுள் வந்தாயோ
அப்போதிலிருந்து
பார்ப்பது எல்லாமே உன் பிம்பம்தான் ..
என்னுள்
-
என்னுள் நான் இல்லை
உன் முகம் பார்த்த பின்
நீ ஒளி விளக்காய் வந்தாய்
என் தேகம் குளிருதடி
வெளிச்சம்
-
இரவுக்கு வெளிச்சம் விடிவிளக்கு ..
என் இதயத்துக்கு வெளிச்சம்
உன் முக விளக்கு ....
விடி விளக்கு
-
என் வாழ்கையின் முழு அர்த்தம் நீ
என் வாழ்கையின் விடி விளக்கு நீ
ஒரு முறை வந்து
என் வாழ்கைக்கு ஒளியேற்ற வா
அர்த்தம்
-
என் சொல்லில் அர்த்தம் சேர்ந்தது
நீ சொன்ன ஒரு சொல்லால்
என் வாழ்க்கைக்கு அர்த்தம் வந்தது
உன்னை நான் கண்டதால்...
பொறுமை
-
பொறுமை இழந்தேன்
பேசாமல் நீ காட்டும்
மௌனம் என்னை மரிக்க செய்கிறது
பேசிவிடு என் ஆயுள் நீண்டுவிடும்
ஆயுள்
-
என்று முடியும்
என் துன்பம்
ஆயுள் முடியும் போதா
இன்றே முடியட்டும் துன்பம் ..
துன்பம்
-
காதல்
இன்பத்திலும் துன்பம்
துன்பத்திலும் இன்பம்
பார்த்தாலும்
கண்ணீர் வரும்
பார்க்கா விட்டாலும்
கண்ணீர் வரும்
கண்ணீர்
-
உன்னை பார்க்கும் வரை
என் கண்ணீரில் அர்த்தமில்லை
உன்னை பார்த்தபின் அர்த்தமில்லாமல்
கண்ணீரும் இல்லை
அர்த்தம்
-
அர்த்தமில்லாமல் பேசுவது
அர்த்தமில்லாமல் சிரிப்பது
அர்த்தமில்லாமல் அந்தரத்தை பார்ப்பது
அர்த்தமில்லாமல் கனவில் மிதப்பது
இது தான்
அர்த்தமுள்ள காதலின்
இலக்கணம்
இலக்கணம்
-
நல்ல நட்புக்கு இலக்கணம் நம்பிக்கை
நல காதலுக்கு இலக்கணம் பிரியாமை
அர்த்தமில்லாமல் நினைவுகள் அலைந்தாலும்
அந்தரத்தில் ஆடினாலும் ...
இலக்கணம் தவறாமல் வாழ்ந்திட்டால்
இனித்திடுமே என்றும் காதல்
அந்தரத்தில்
-
அந்தரத்தில் பறக்கும்
காற்றாடி
எத்தனை தூரம் பறந்தாலும்
அதன் நூலின் நுனி
தரையில் இருப்பவன்
கையில் தான் இருக்கும்
காற்றாடி
-
காற்றாடியாய் பிறந்திருக்கலாம்
உன்னை தேடி சுதந்திரமாய் வந்திருப்பேன்
மனிதனாய் பிறந்து மரபுக்குள் கட்டுண்டு
மரமாகி போகின்றேனே ...
மரம்
-
வீட்டுக்கொரு பிள்ளை
பெறுவதை விட
வீட்டுக்கொரு மரம் வளர்தால்
நாடும் செழிக்கும்
நல்ல கனிகளும் கிடைக்கும்
செழிக்கும்
-
வீட்டுக்கு ஒரு பிள்ளை தன்னும் இல்லையேல்
நாடு எங்கு இருக்கும் ...?
மக்கள் எங்கிருப்பார்கள் ...?
கனிகள்தான் கிடைத்து என்ன ?
நாடுதான் செழித்து என்ன ..?
கனி
-
முயற்சி: வளர்ச்சி:முதிர்ச்சி
முக்கனியாய் உன்
காரியசித்திக்கு மூலதனமாய்
இவை உன் கையில்
இப்போது
கொய்யும் கனியாய்
முக்கனி
-
நீ தீண்டினால் என் தேகம் முக்கனி ஆகிறது
வாய் பேசாமல் ஓடுகிறேன்
உன் கனல் தாங்காமல்...
கனல்
-
கனல் தெறிக்கும்
வார்த்தைகளால் கொன்றுவிடதே
நான் இறந்தால் இறப்பது
நான் மட்டும் அல்ல
என்னுள் இருக்கும் நீயும் தான்
அலை
-
என்னை சூழ்ந்திருக்கும்
உன் எண்ண அலைகளால்
தினமும் மூழ்கி முக்குளிகின்றேன்
முழுவதும் நீயாகி போகின்றேன்
முக்குழித்தல்
-
முக்குளித்து முத்தெடுக்காமல்
கிடைத்த முத்து நீ....... ;) ;)
அலுப்பு
-
என்னிடம் பேசி
என்னவனுக்கு அலுத்துவிடதா.. ?
இபோதெல்லாம் நான்
கண்ணுக்கு தெரிவதிலையே ..
இதுதான் தெரிந்தும் தெரியாமல் என்பதோ ...?
தெரிந்தும் தெரியாமல் ..
-
தெரிந்தும் தெரியாமல்
என்னுள் வந்தாய்
தெரிந்தும் தெரியாமல்
தவிக்க விட்டாய்
தெரிந்தும் தெரியாமல்
காக்க வைத்தாய்
தெரிந்தும் தெரியாமல்
நேசித்து விடு
என்னை மட்டும் ;)
இறைவன்
-
இறைவனிடம் கேட்கிறேன்
உன்னிதயத்தை
ஏன்? உள்ளே படைத்தானென்று
அதனால்தான்,
இதுவரை அறியமுடியவில்லை
உனக்குள் நான்
உட்கிரகித்துள்ளேனா என்பதை
உனக்குள்
-
உனக்குள் வரும்
மூச்சுக் காற்றாய் நான்
சுவாசித்து உன்னுள்ளே
வைத்து விடு
உன் இதய அறையிலே
இருந்துவிடுகிறேன்
வெளியேற்றி தனியே
தள்ளிவிடாதே
மழலை
-
உனிடம் நான்
உறவாடவேண்டும்
மறுஜென்மத்தில்
மழலையாயாவது ..
மறுஜென்மம்
-
உன்னோட வாழ
மறுஜென்மம் போதுமா
அறியவில்லை :(
தொடரட்டும் நம் காதல்
ஜென்மம் ஜென்மமாய்...
சுயம்வரம்
-
என்று உன்னை
நேசிக்கத் தொடங்கினேனோ
அன்றே என் மனதில்
நமக்கான சுயம்வரம்
நடந்துவிட்டதடா ...
நேசிப்பு
-
நேசிப்பு என்னவென்று
அறியவைத்தாய்
உன்னை கண்டபோது
பிரிவை உணரவைக்கவோ
என்னிடம் இருந்து மறைந்து
என்னை மறந்து விளையடுகிராயோ :'(
காயம்
-
காயத்தின் சுவடு தெரியவில்லை
நீ என் காயமாக என் நெஞ்சில் உள்ள வரை...
சொந்தம்
-
காற்றிலிருந்து
உன் மூச்சுக்காற்றை
தனியே பிரித்துக் கொடு
காற்றோடு அது கலப்பதை
தாங்க முடிவதில்லை எனக்கு
எனக்கு மட்டுமே சொந்தம்
உன் மூச்சுக்காற்றும் கூட
மூச்சுக்காற்று
-
தினம் நீ போகும் பாதையில்
நான் இருப்பேன்
உன் மூச்சு கற்றாவது
என் படாதா என்ற எதிர் பார்ப்புடன்
எதிர்பார்ப்பு
-
எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை
தருமாம்
இன்றும் எதிர்பார்கிறேன்
உன் வாய்மொழி வார்த்தைக்காக
ம் என்று சொல்லிவிடு
உன்னை விட அதிகமாக
என்னால் மட்டுமே உன்னை
நேசிக்க முடியும்
சலனம்
-
என் மனதினுள் சலனத்தை ஏற்படுத்திவிட்டு
இன்று சலனமே இல்லாமல் இருப்பதேனோ ..?
மனம்
-
மறக்க மனம் இல்லை
மறக்க நினைத்து
எடுக்கும் முயற்சிகள்
எல்லாமே தோல்வியில்
குறும்பு
-
சினனக் குழந்தைகளின்
செல்லக் குறும்புகளை ரசியுங்கள்
அதட்டாதீர்கள்
பெரியவர் நாம்
தொலைத்து விட்ட
அந்த குறும்புகள் செய்த
பருவத்தை அடிக்கடி நினைத்து
பார்த்து வருந்துகிறோம் தானே[/color]
பெரியவர்
-
அதட்டுவது பெரியவற்குரிய பண்பு
அடம் பிடிப்பது சிறியவர்க்கு உரிய பண்பு
அழுவதும் அணைப்பதும் அன்புக்கு உரிய பண்பு
அனால் பிடிவாதம் பிடிபதுமட்டும் உன் பண்பு
பண்பு
-
கணவன்
பிற பெண்களுடன் பழகும்
காமுகனாக இருந்தாலும்
கொடுமை படுத்துவதில்
அரக்கனாக இருந்தாலும்
அவன் தலையில்
கல்லை தூக்கிப் போடாமல்
கல்லானாலும் கணவன் என்று
பூஜிப்பது தமிழ் பெண்களின்
பண்பு
காமுகன்
-
ஒரு ஆடவன்
நல்ல கணவனாவதும்
கண்ணியவானவதும்
கமுகனவதும்
பெண்களின் கையிலே...
நல்ல பாவை ஆக்குவதும்
பாவம் செய்ய வைப்பதும்
பெண்ணாலே பெண்ணாலே
பெண் நினைத்துவிட்டால்
காமுகன் கூட கண்ணியவான் ஆகலாம்
.
கண்ணியவான்
-
இந்த காலத்திலும்
இப்படி ஒரு பதிலா
கிளி போல
மனைவி இருந்தாலும்
திருப்தி அடையாமல்
குரங்கு போல இன்னொருத்தியை
தேடும்
கண்ணியவான்கள் நிறைந்த
உலகம் இது
குரங்கு
-
என்ன செய்வது
மனிதன் தன்
மூதாதையர் குணம் கொண்டுதான்
குரங்குபோல் மரத்துக்கு மரம் தாவுவதை
மனத்துக்கு மனம் தாவிகின்றார்கள்
இதுதான் குரங்கில் இருந்து
மனிதனின் பரினாமமாம்..
பரிணாமம்
-
குரங்கில் இருந்து பிறந்ததாக
சொல்லப்படும் மனிதன்
பரிமாண வளர்ச்சி அடைவதற்கு
முன்னர்
கட்டுப்பாடற்ற காமம் நிறைத்தவன்
கட்டுப்பாடு உள்ள இந்த
நவநாகரீக உலகில்
இன்னும் மனிதன் அதே
கட்டுப்பாடற்ற காமம் நிறைந்திருப்பின்
அந்த பரிணாமத்தின்
பரிதாபத்தை அன்றோ
காட்டுகிறது
பரிதாபம்
-
பரிணாமம் பெற்று விட்டோம் என்று
மார்தட்டி கொள்ளும் மானிடனே
அந்தோ பரிதாபம்
உன் பரிணாம வளர்ச்சியில்
காமம் பரிணாம வளர்ச்சியல்ல
பரிதாப வளர்ச்சிதான் அடைந்துள்ளது
காமம்
-
காதலும் காமமும்
கூடப் பிறந்தவை
காமம் இல்லாத காதலும் இல்லை
காதல் இல்லாமல் காமமும் இல்லை
கூடப்பிறந்தவை
-
காதலுடன் காமம் மடும்மல்ல
சந்தேகமும் கூட பிறந்தது
இலையேல் காதல் பிரிவுகள்
சகஜமாகி இருக்காது ...
சகஜம்
-
இதெல்லாம் சகஜமப்பா
நாட்டுல நடக்கிறது தானே
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு சொல் இருக்கும்
சொல்
-
ஒருமுறை சொல்
என்னை உனக்கு பிடிக்கும் என்று
இறுதி மூச்சுவரை இணைந்திருப்பேன்
உன் நினைவுகளுடன்
முறை
-
ஒவ்வொரு முறையும் நினைப்பேன்
உன்னுடம் இருக்கும் இந்த நிமிடம்
நீடிக்காதா என்று..
நிமிடம்
-
உன்னை காணாத நிமிடம்
என் இதய துடிப்பானது
இருமடங்காகி துடித்து தவிக்க
நிமிடங்கள் நாட்களாகி
நாட்கள் மாதங்களாகி
துடிக்க வைப்பாயோஎன
அச்சத்தில் நான்
நாட்கள்
-
என்னை வாட்டும் நாட்களுக்கு
தெரியவில்லை நீ என் அருகில் என்று
புரிய வைக்க மனம் இல்லை
என் ஆயுள் முடியும் என்று
ஆயுள்
-
ஜோதிடன் தடுமாறினான்
உழைப்பாளியின் கைகளில்,
அழிந்துபோனஆயுள்ரேகை
உழைப்பாளி
-
நல்ல உழைப்பாளி
என்றும் கண்டதில்லை
தோல்வியை ...
தோல்வி
-
தோல்வியை படிக்கட்டாக
மாற்று
வெற்றியின் சிகரத்தை
தொடலாம்
தொடலாம்
-
அடிகடி தோல்வியை
தழுவுததால் தானோ என்னமோ
வெற்றி படியில் கால்கள் பயணித்தாலும்
தோல்வியின் வடுக்கள்
வழித்து கொண்டே இருகின்றது ..
வடுக்கள்
-
இதயத்தில் தான்
எத்தனை வடுக்கள்
காதல் தோல்விகள்
ஒன்றா இரண்டா
இருந்தாலும் கலங்குவதில்லை
இந்த மனது
படை எடுப்போம்
கஜனி முகம்மது போல்
கலக்கம்
-
அடிக்கடி என் மனது
கலக்கம் கொள்கிறது
எங்கே நீ
என்னை விட்டு போய்விடுவாயோ என்று
என் மனதுக்கு சாந்தி கொடு
உன் முத்தத்தால்
முத்தம்
-
அன்னை தரும் முத்தம்
அன்பு குழந்தை தரும் முத்தம்
ஆசை காதலி தரும் முத்தம்
அருமை மனைவி தரும் முத்தம்
முத்தங்கள் பலவகை
சத்தமில்லாமல் தரும்
முத்ததில்
எந்த முத்தம் சிறந்தது?
விடை கிடைக்கவில்லை எனக்கு
சத்தமில்லாமல்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1124.photobucket.com%2Falbums%2Fl566%2Fmarislaxmi%2Fidhayam.jpg&hash=b354626f625b27b5007ac3c8ec8d29b75d68c60b)
-
இதயத்தை தொலைத்துவிட்டேன்
நீ கண்டெடுத்தால்
திருப்பித் தராதே
அதற்குப் பதிலாக
உன் காதலை மட்டும்
தா
தொலைத்துவிட்டேன்
-
தொலைத்துவிட்டேன் இதயத்தை
உன்னிடமே வைத்துக் கொள்
உன்னைவிட பத்திரமாக
யாரால் முடியும் என் இதயத்தை
நேசிக்க....
கண்ணாடி
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1124.photobucket.com%2Falbums%2Fl566%2Fmarislaxmi%2Fidhayam-1.jpg&hash=f19140fb4b0919577d16398ba446d097c775b1fd)
-
manish adutha thalaipu enna ???
-
idhayam shuruti
-
நடக்கையில் சிக்கிக் கொண்ட
உன் உடையுடன் சேர்ந்து
சிக்கிக் கொண்டது
என் இதயமும்
நீயோ
என்னை விட்டு விட்டு
உடையை மட்டும்
இழுத்துக் கொண்டு போகிறாய்
சிக்கிக் கொண்ட
-
நூறு முறை சொல்லிப் பார்த்தேன்
என் நினைவுகள் வரை யோசித்துப் பார்த்தேன்
அப்படியும் சரியாக சொல்ல தெரியவில்லை.
நீ எந்தன் பெயர் கேட்ட அந்த நேரம்
என் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்ட
எந்தன் பெயரை
குழிக்குள்
-
குழிக்குள் இறங்கிய நீர் போல
என் நெஞ்சுக்குள் இறங்கிய
பொன் மயிலே...
நீ காட்டும் வித்தையில்
நொறுங்கி போனேன்...
பொன்மயில்
-
பொன் மயில் என
நீ வர்ணித்ததை கேட்டுத்தானோ
என்னை பொன் ஏதும் வேணாம்
உங்கள் பெண்ணை தாருங்கள் என
மாப்பிள்ளை வீட்டார் படை எடுகின்றனர்
மாப்பிள்ளை
-
மாப்பிள்ளையின் நல்வரவு
எங்கள் குடும்பத்தில் புது உறவு...
சொந்தங்கள் சேரும்
ஒரு இணையத்தளம்...
குடும்பம்
-
ஒருநாள்
ஒரே நேரத்தில்
காணமல் போனது
என் குடும்பம்
சுனாமியால் பாதிக்கப் பட்டவள்
சுனாமி
-
காதல் சுனாமியில்
அடிபட்டு காணாமல் போனவன்
நான்
கரை சேர்க்க
சிரு மரக்கிளையாக வந்தவள்
நீ
மரக்கிளை
-
மர கிளையில் பறவைகள்
தங்குவது போல..
உன் மன கிளையில் நானும்
வாழ தவம் கிடக்கிறேன்
என் மரணத்தின் முன்பு நாள்
வரை....
பறவைகள்
-
பறவைகள் தனது
சொந்த சிறகுகளால் பறக்கின்றன
தன் சொந்த அலகாலே
தன் இரையை தானே
தேடிக் கொள்கின்றன
நீ மட்டும் ஏன்
மற்றவர் துணைக்காக காத்திருக்கிறாய்
அலகு
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1124.photobucket.com%2Falbums%2Fl566%2Fmarislaxmi%2Falagu.jpg&hash=e957d017599dd8595596be3e5f110f128b95b03b)
-
இரண்டு கால்கள்
இரண்டு கைகள்
உள்ள மிருகம்
மனிதன்
மிருகம்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1124.photobucket.com%2Falbums%2Fl566%2Fmarislaxmi%2Fmanithan.jpg&hash=5e14987392c0048f647f9aa352b923772c9f7e5e)
-
ஒவ்வொரு மனிதனுக்கும்
தனித்தனி திறமை இருக்கிறது
தனது சொந்த புத்தியால் எதையும்
செய்பவனே சிறந்த மனிதன்
மற்றரை காப்பி அடித்து
பெயர் வாங்குபவர்கள்
மனிதர்கள் அல்ல மாக்கள்
இங்கிருப்பதை அங்கு கொண்டு செல்வது
அங்கிருப்பதை இங்கு கொண்டு வருவது
அது நல்ல மனிதனுக்கு அழகல்ல
காப்பி அடிப்பவர்கள்
-
உழைப்பாளியின் உழைப்பையும்
சிந்தனையாளனின் ஆக்கத்தையும்
பரப்பும் கொள்கை பரப்பு செயலலர்களாய்
காப்பி அடிப்பவர்கள்
உம்மை விட ஒரு படி மேலே உயருகின்றோம்
என்பதை அங்கீகரிக்கும் விதமாய்
உங்களுடைய இணையத்தில் தொடங்கும்
எங்களுடைய ஆக்கங்கள்.
கொள்கை
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1124.photobucket.com%2Falbums%2Fl566%2Fmarislaxmi%2Fmoris-2.jpg&hash=bbfa788c0ffc9470fc994eeedc3a3f8bc312029d)
-
துரோகி பகைவன்
இருவருக்கும் ஒரே கொள்கை தான்
மற்றவரை கெடுப்பது
இரண்டு பேருக்கும் உள்ள
இந்த ஒத்த கருத்தில்
மனித நேயம் எங்கிருக்கிறது
கெடுப்பது
-
தன் பெயரை கெடுக்க நினைப்பவன்
அடுத்தவர் உழைப்பை திருடி கொள்கிறான் ..
அவன் திருடுவதிலேயே தெரிகிறது
திருடப்பட்ட பொருள் அரியது
திருட்டு கொடுத்தவன் கொடையளி ..
திருட்டு ...
-
திருட்டில் பலவகை
பணத்திருட்டு மனத்திருட்டு
பொருள் திருட்டு பொன்திருட்டு
பலவகை திருட்டில்
மற்றவர்கள் ஆக்கங்களை
திருடுவதும் ஒரு திருட்டு தான்
ஆக்கங்கள்
-
சொந்தமாக ஆக்கங்கள்
படைக்க தெரியாதவன்
அடுத்தவன் கற்பனையை
திருடுகிறான் ...இவர்கள்
எதிர் காலத்தை
எப்படி திட்டமிடுவார்கள் .....
திட்டம்
-
திட்டம் தீட்டி வாழ்க்கையை
வாழ்வதை விட
வாழும் வாழ்க்கையை
திட்டமிட்டு வாழ்ந்தால்
அந்த வாழ்க்கை
ஆனந்தமாக இருக்கும்
ஆனந்தம்
-
உன் வார்த்தையில் உள்ளது
என் ஆயுளும் ஆனந்தமும்
ஆயுள்
-
உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை
எனக்கு சலிக்கவும் இல்லை
கசக்கவும் இல்லை
இந்த வாழ்க்கையை வாழ
இன்னுமொரு ஆயுள்
தா இறைவனே
இறைவன்
-
எனக்கு காதலை காட்டிய இறைவனே
காதல் தோல்வியை தாங்கும் சக்தியையும் தந்துவிடு
காதல் தோல்வி
-
காதல் தோல்வி
யாருக்கு?
காதலை சரியாக புரிந்து கொள்ளாமல்
காதலிப்பவர்களுக்குத் தான்
உண்மை காதல் என்றுமே
தோற்பதில்லை
காதலிப்பவர்கள்
-
காதலிபவர்கள் காதலிக்க தவறுவார்கள்
காதலில் தவறியவர்கள் காதலிக்க மட்டும் தெரிந்தவர்கள்
அதனால் தானோ என்னமோ நான் தவறி விட்டேன் காதலில்
தவறு
-
நான் செய்த ஒரே தவறு
இன்றும் உன்னை நேசித்துக்
கொண்டிருப்பது தான்
ஜீவன்
-
என்னை விரும்பும் ஒரே
ஜீவன் அவள் தான்
என்னை வெறுக்கும் ஒரே
ஜீவனும் அவள் தான்
என்னை ஆக்கிரமிப்பவள்
அவள் தான்
என்னை அலைக்கழிப்பதும்
அவள் தான்
ஆக்கிரமிப்பு
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1124.photobucket.com%2Falbums%2Fl566%2Fmarislaxmi%2Fnatpu-1.jpg&hash=bc4c7786a792db9453aa226ba1577ac17251665a)
-
செய்தது தவறு என்று
எவன் உணருகின்றானோ
அப்போதே அவன் தவறுகள்
மன்னிக்கப்படுகின்றன.
நட்பு எந்த தவறையும் மன்னிக்கும்
மன்னிப்பு
மணீஷ் நீங்கள் செய்த பிழையை நீங்கள் உணர்ந்தாலே போதும். நீங்கள் என்றும் இன்று போல வாருங்கள்.
நல்ல நண்பர்களாக FTCஇல் நம் பயணத்தை தொடரலாம்.
-
sorryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
-
enna achu,,,Manish ??? confuse:|
-
செயும் தவறை உணர்பவன்
மன்னிக்கப் படுகிறான்
இறைவன் தீர்பிலே ....
தீர்ப்பு
-
சட்டம் ஒரு இருட்டரை
என்று சொன்னான்
ஒரு பேரறிஞன்
சட்டத்தின் தீர்ப்பு
மனிதனுக்கு மனிதன் மாறும்
காலமிது
சட்டம் ஒரு சிலந்தி வலை
என்று சொன்னான்
இன்னொரு அறிஞன்
பலவீனமான ஈக்கள் மட்டுமே
அதில் மாட்டிக் கொள்கின்றன
பலமிக்க வண்டுகள்
வலையை கிழித்துக் கொண்டு
தப்பித்து விடுகின்றன
சிலந்தி வலை
-
உனிடம் மாட்டிக் கொண்டேன்
சிலந்தி வலை என உன் சில்மிஷம்
விடுபட முடியாமல் சிக்கி கொண்டது என் மனம்
சில்மிஷம்
-
உன் உதட்டின் சில்மிஷம்
என் கன்னங்களில் காயம்
மீண்டும் காயப்படுத்திவிடு
உன் (உதட்டால்) சில்மிஷதால்
சிலிர்ப்பு
-
ஒவொரு கணமும்
உனக்கான எண்ணங்கள்
என்னுள் இன்னும் சிலிர்ப்பை
உண்டு பண்ணுகின்றதே..
உரசி செல் அதே சிலிர்ப்பை
நீயும் கொள் ...
உரசல்
-
எங்கோ ஒரு மூலையில் நான்
எனக்கு எட்டாத உயரத்தில் நீ
உன் இதய உரசலால்
உடைந்து போனது என் மனம்
உடைந்த இதயத்திற்கு
மருந்தாக வருவாயா??
களவு ;) ;) ;)
-
யாரும் திறக்க முடியாத
என் இதயத்தை
புன்னகை எனும்
கன்னக்கோல் கொண்டு திறந்தவளே
திருடுவதற்கு பதிலாக
உன் இதயத்தை வைத்து
பூட்டிச் சென்றாயே
இது என்ன புதுமையான திருட்டு
கன்னக்கோல்
-
கன்னக் கோல் கொண்டு
உள்நுழைந்த பின்தான் தெரிந்து கொண்டேன்
உள்ளே இருப்பது நான் என்று
உன் உள்ளத்திற்கு பரிசாய்
என் இதயத்தை தந்தேன் ..
உள்நுழைந்து
-
மூச்சு காற்று மட்டுமே
நுழைந்து நிறைந்த
என் இதயத்துள்
எனக்கே தெரியாமல்
எப்போது உள்நுழைந்தாய்??
விடை தெரியாத புதிரால்
வெட்கிபோகிறேன்
அணைப்பு
-
ஒவொரு கணமும் துடிக்கிறேன்
உன் அணைப்புக்குள் அடங்க ...
அடங்க
-
வருவேன் காத்திரு என்று
போனாய்
பேச்சடைத்துப் போவேன்
காத்திருக்கிறேன் கண்ணே
மூச்சடைத்து போகுமுன்னே
வருவாயா
காத்திருக்கிறேன்
-
காத்திருக்கிறேன்
ஒரு முறையாவது உன்
இதழ்களின் ஸ்பரிசத்துக்காய்
ஸ்பரிசம்
-
என் நினைவுகள் என்னும்
தென்றலாய் உன் ஸ்பரிசம் தீண்ட
வரும்போது என்னை தடுக்கும் (தண்டிக்கும்)
உரிமை உன் வீட்டு ஜன்னலுக்கு
இல்லை எனும்,
என் கட்டளையை
உன் வீட்டு ஜன்னல்களிடம் சொல்லிவிடு
ஜன்னலுக்கு
-
என் வீட்டு ஜன்னலோரம்
ரோஜா செடி வைத்திருந்தேன்
உன் வீட்டு ஜன்னலில்
ரோஜா பூத்திருப்பதாக
வீட்டுக்கு வந்த நண்பன்
சொன்னான்
எட்டிப் பார்த்தேன்
அங்கே ஜன்னலுக்குள்
நீ நின்றிருந்தாய்
நண்பன்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1124.photobucket.com%2Falbums%2Fl566%2Fmarislaxmi%2Fmarris.jpg&hash=3cd83adea756d0562da3f9a5e6bd10fea5c3a3a2)
-
நல்ல நண்பர்கள்
காயப்படுத்த மாட்டார்கள்
அது நல்ல நண்பர்களாய்
நடக்கும் வரை தான் நண்பா
நேரடியாக சொல்வதை விட
மறைமுகமாக சொல்வதும்
நல்லது தான் நண்பா
ஒரு சபையில் நேரடியாக
ஒருவன் செய்த பிழையை சொல்வது
அவனை சபை முழுவதும்
குற்றவாளியாகவே பார்க்கும்
அதை விட
மறைமுகமாக சொல்வது
பிழை செய்த ஓருவனுக்கு மட்டுமே
உணர்த்தும்
மற்றவர் முன்னால்
அவமானப் படுத்தாமல்
பிழை செய்த நண்பனுக்கு மட்டும்
அவன் பிழையை உணர்த்துவதும்
நல்ல நண்பனுக்கு அழகு தானே
குற்றவாளி
-
இதயத்தை திருடியது நீ
குற்றவாளி நான்
ஆயுள் தண்டனையை
உன் இதயசிறையில் பூட்டிவிடு ;) ;)
ஆயுள் தண்டனை
-
உன்னை காதலித்த குற்றத்திற்காகவா
உன் இதயம் எனும் சிறையில்
எனை ஆயுள் தண்டனை கைதியாக்கினாய்
குற்றம்
-
நான் உன்னை பார்த்தது
என் குற்றமா
எதற்காக உன் கண்களால்
என்னை கைது செய்கிறாய்
கைது செய்
-
என்னை கைது செய்தாய்
உன் கண்களால்
உன்னை வழி மறித்தேன்
என் காதலால்..
கண்கள்
-
உன் வில் போன்ற கண்ணில்
அம்பு போன்ற பார்வையில் வரும்
காதல் அம்புகள் என்னை கொல்லுதடி
அம்புகள்
-
நீ விடுத்த அம்புகள்
என்னை கொல்வதில்லை
என்னுள் இருப்பது நீயல்லவா!
அதற்கு தெரியும் உன்
வாசம் என் நெஞ்சில் உள்ளதென்று...
வாசம்
-
வண்டுகள் அனைத்தும்
பூக்களின் வாசத்தை விட்டுவிட்டு
உன் பின்னே அலைகிறதே..
உன் பெயர் தேன் என்பதாலா...
வண்டுகள்
-
ஆடி பாடும் வண்டுகள்
உன் கூச்சல் கேட்டதும்
ஓடுவது ஏன்?
நீ விடும் ரீங்காரத்தில்
மயங்கி விடுவோமோ
என்ற பயம் போலும்...
ரீங்காரம்
-
என்றும் உறங்க ஆசை படுவேன்
கனவில் உன் ரீங்காரம் கேட்டால்
அங்காவது மனம் விட்டு திட்டி (பேசி)
செல்வயானால்...
உறக்கம்
-
உறக்கத்திலும் உன் நினைவுதான்
வலிக்கும் கனவுகளாக ...
வலி
-
இதயத்தில் வலி
கண்களில் கண்ணீர்
துடைக்கும் கரங்களாய்
உனது கரம் வேண்டும்
துடைத்துவிடு
துடிக்கும் இதயத்தை
உன் பார்வையால்
அணைத்துவிடு...
கரம்
-
கரம் கூப்பித் தொழுதேன்
நான் செய்த பாவங்களுக்கு
தண்டனையை இந்த உலகத்திலேயே
தா என
அனுப்பி வைத்தான் உன்னை
ஆயுள் தண்டனையாக
ஆயுள் தண்டனை
-
உனக்கான மனச்சிறையில்
எனக்கான ஆயுள் தண்டனை
எப்போது தருவாய்
மனச்சிறை
-
என் மனச்சிறை
மலர் இதழ்களால் ஆன
பஞ்சு மெத்தை
நீ ஆயுள் முழுவதும்
ஆனந்தமாக இருக்கலாம்
வா
பஞ்சு மெத்தை
-
நான் உனக்கு பூமாலை
என் நெஞ்சம் உனக்கு பஞ்சு மெத்தை
தூக்கத்திலும் வலிகள் தெரியாதிருக்கும்
பூமாலை
-
பூமாலை வேண்டுமா
பாமாலை வேண்டுமா
பூமாலை சூட ஆயிரம் பேர்
வருவர்
நான் கவிஞன்
என்னால் மட்டும் தான்
உனக்கு பாமாலை சூட முடியும்
பாமாலை
-
உன்னால் சூட்டப்படும்
பாமாலை கூட எனக்கு
பூமாலைகள் தான்...
உன்னால்
-
கலைந்த கூந்தலை
வாரிக்கொண்டிருக்கிறாய்
உன்னால்
ஒழுங்காக இருந்த என் மனம்
கலைந்து கொண்டிருக்கிறது
கூந்தல்
-
என் கூந்தலில் நீ சூடவோ
பூத்து நிக்கின்ற பூக்கள் எல்லாம்
சூடி விடு மலர்கள் வாடும் முன்
என் மனம் வாடும் முன்
மலர்கள்
-
தன்னிடம் பூத்த
மலர்களை விட
தன் மீது கட்டப்பட்ட
கூட்டை பார்த்து மகிழ்கிறது
மரக்கிளை
மரக்கிளை
-
மரக்கிளையில் வாழும் கிளி அல்ல
உன் இதய கூண்டில் வாழும் காதல் கிளி நான்...
காதல் கிளி
-
காதல் கிளிகளாக
காதல் வானில் சிறகடித்து பறந்தோம்
சிறகை ஒடித்து
சிறைகுள் வைத்தான்
அவளது அப்பா
காதல்கிளி இப்போது
கூண்டுக்கிளி
கூண்டுக்கிளி
-
எவளவு காலம்
நீ கூண்டுக் கிளியாக இருப்பாய் ..
உன்னை சுற்றி நீயே வைத்துக்கொண்ட
சிறையை உடைத்துவிடு
உன்னை தந்துவிடு ...
சிறை
-
அன்பு என்னும் சிறையில்
என்னை அடைத்தாய்
பெண்ணே உன் வலியை
மட்டும் தர மறுக்கிறாய்...
வலி
-
எந்த வலிகளையும்
தாங்கும் சக்தி உனக்கிருக்கிறதா
நீ காதலி
காதலி
-
உன் காதலியாகும்
வரம் தந்துவிடு
வாழ் நாலெல்லாம்
உன்னை பூஜித்தே வாழ்ந்திடுவேன்
பூஜை
-
பூஜை செய்ய நான்
கடவுள் இல்லை
உன் பக்த்தன்
புன்னகை செய் நான்
புனிதம் அடைவேன்
புனிதம்
-
புன்னகைத்தால் புனிதம் என்கிறாய்
அனால் என்னை புண்படுத்துவதில்
புதிரனவனாக இருப்பதேன்
புதிரானவன்
-
புதிரானவன் நான்
உன் மனதில்
புதிது புதிதாக உணர்வுகளை
தோற்றுவிப்பதால் என்னை
புதிரானவன் என்கிறாயோ
புதிது புதிதாக
-
புதிது புதிதாக மாற்றம் கண்டேன்
உன்னால் என்று நான் அறிந்தேன்
என் நிலை நீ அறிவாயோ...
மாற்றம்
-
புதிது புதிதாக உன்
எண்ணங்கள் தோன்றினாலும்
உன் மீது கொண்ட
காதல் வண்ணங்கள் மட்டும்
என்றும் இனிதாகவே இருக்கும்
காதல் வண்ணம் ..
-
நிறங்களின் வர்ணம்
வானவில்லில் கண்டேன்
காதல் வண்ணம்
உன் கண்களில் கண்டேன்
வானவில்
-
உன் காதல் எனக்கு
வந்து போகும் மேகமாக அல்ல
வானவில்லாக இருக்கிறது
அப்போ அப்போ வர்ண ஜாலத்துடன்
வந்து போகிறாய் ....
வந்து போகும் மேகம்
-
வந்து போன மேகம்
உன் கண்ணீரை
மழையாக சிந்திவிட்டுப் போனது
கண்ணீர்
-
சிதறிய என் கண்ணீர் துளிகளை
நீ என்ன செய்தாய் ...
முத்தென சேமித்தாயோ ..
முகம் சுளித்து
அப்பால் சென்றாயோ ...
முகம்சுளித்து
-
நான் வந்து போகும் போது
முகம் சுளித்தாய்...
என்னை தேட ஆரம்பித்தாய்
நான் மறையும் வேளையில்...
தேடினேன்
-
தேடினேன் தேடினேன்
கடல் கடந்தும் தேடினேன்
வந்தது பணம்
கடல் கடந்து போனதென்
நிம்மதி
கடல் கடந்து
-
கடல் கடந்து வரும்
காற்று கூட
உன் பெயர் கேட்டது..
இங்கு இருக்கும் நான் கேட்டால்
மட்டும் பறந்தோடுவது ஏன்?...
பெயர்
-
எனக்கு வந்த
காய்ச்சலுக்கு
எப்படி தெரிந்தது
உன் பெயர்தான் என் மருந்தென்று
சட்டென மாறி விட்டதே
மருந்து
-
மருந்து என்றால் நினைவுக்கு
வருவது உன் பெயர் தான்
என் பெயரோடு சேர்ந்திருக்கையில்
தலை வலி கூட நெருங்குவதில்லை...
நெருக்கம்
-
தினமும் உன்னுடன் நெருக்கமாக ...
கனவில் ......................
கனவில்
-
கனவு இல்லையடி
நீ இல்லாமல்
கவிதை இல்லையடி
நீ தீண்டாமல்...
தீண்டாமல்
-
நீ தீண்டாமல்
என் இதழ்கள்
தினமும் முணுமுணுக்கின்றன ..
கண்ணா மிஸ் யு டா...
மிஸ் யு
-
கிஸ் யூ பண்ண
உன்னை விரட்டித் திரிந்தேன்
நீயோ எனக்கு
டிமிக்கி விட்டு விட்டு பறந்தவள்
மிஸ் யூ என
எஸ் எம் எஸ் அனுப்பி இருக்கிறாய்
கிஸ் யூ
-
ஒருவனை கெடுப்பது
அவன் முன்னேற்றத்தை தடுப்பது...
முன்னேற்றம்
-
ஒவொரு தடவையும்
நீ புன்னகைக்கும் போதும்
உன்னை முத்தமிட
என் இதழ்கள் துடிக்கும்
இனியும் எனக்கு பொறுமையில்லை
ஜ வில் கிஸ் யு
இதழ்கள்
-
இதழில் பூத்த மலர்கள்
உன் குரல் கேட்டு
மயங்குதடி... கண்கள் கலங்குதடி
நீராவியாய் வந்து என் இதழில்
அமர்ந்தாயடி...
நீராவி
-
சூரியனை கண்டு
பனித்துளி ஆவியவதை போல
உன்னை கண்டு
என் சோகம் காணாமல் போகுதே ..
காணாமல்
-
வெயிலை கண்டு காணமல் போகும்
மழை நீரை போல,
உன்னை கண்ட உடன்
காணமல் போனது
என் இதயமடி...
கண்டஉடன்
-
கண்ட உடன் காதல்
இதில் இல்லை உடன்பாடு
எனக்கு
கண்கள் பேசி கருத்தொருமித்து
இதயங்கள் சங்கமமாகும்
காதலே காதல்
கருத்தொருமித்து
-
கருத்தொருமித்த காதல் என்று
மதார்த்தம் கொண்டேன் ...
அதனால் தானோ
பிரிவெனும் துயரில்
துவள்கிறேன்
துவள்கிறேன்
-
துவள்கிறேன் நான்
உன் பாராமுகம் கண்டு
துவள்கிறேன் நான்
உன் சுடுசொற்கள் கேட்டு
துவளும் எனக்கு
கொழுகொம்பாக நீ வருவாயா
கொழுகொம்பு
-
கொழுகொம்பாக நான் வருவேன்
நீ துயருறும் வேளைகளில் ...
பரிசாக எனக்கு நீ
உன்னை தருவாயானால் ..
உன்னை தா
-
உன்னை தா
என்னைத் தருவேன்
உன் அன்பைத் தா
என் இதயத்தை தருவேன்
உன் இதயத்தை தா
என் உயிரையும் தருவேன்
இதயம்
-
என் இதயம்
லப் டப் என துடிக்கவில்லை
டக் டக் என துடிக்கிறது
உள்ளே ஒளிந்திருந்து
நீ தட்டி விளையாடுவதால் ..
விளையாட்டு
-
உன் கண்களின் விளையாட்டால்
முள்ளாய் கீறி
காயப்பட்டது என் உள்ளம்
மீண்டும் ஒரு முறை
உன் பார்வையை என் மேல் வீசி விடு
முள்ளாய் முள்ளால் தான் எடுக்க முடியும்
பிடிக்காதவனாய் இரு
-
பிடிக்காதவனாய் இருந்தேன்
நான் உன்னை காணும் வரையில்
இன்று பிடித்துக் கொண்டேன்
உன் அன்பின் வரம்...
அன்பின் வரம்
-
உன் அன்பின் வரம்
கிடைக்க பெறாதா ..
ஏங்கும் பக்தையாக நான்
பக்தையாக
-
இறுதி வரை எனக்கு பூஜை செயும்
பக்தையாக நீ....
உனக்காக அருள் புரியும்
கணவனாக நான்......
ஏந்த ஜென்மமும் தொடர வேண்டும்
இந்த பந்தம்....
பந்தம்
-
சொந்த பந்தம்
சொத்து சுகம் எதும் வேண்டாம்
நீ மட்டும் போதும்
எனக்கு
நீ கிடைத்தால் இவை எல்லாம்
தானே கிடைக்கும்
சொத்து சுகம்
-
உன் இதயம் தான்
என் சொத்து சுகம்
இதை உணராதவரை
நீ என்றும் ஏழையாகவே
உணர்வாய்
ஏழை
-
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காணலாமாம்
ஏழை எப்போது சிரிப்பது
நான் இறைவனை எப்போது காண்பது
சிரிப்பில்
-
ஒவொரு தடவையும்
என்னை நான் மறக்கிறேன்
உன் சிரிப்பில் ...
மறக்கிறேன்
-
உன்னை நினைத்து
எழுதும் போதும் எல்லாம்
வரிகளை மறக்கிறேன்
எதனை கொண்டு என் காதலை
உனக்கு விளக்க ?? ;) ;)
சோம்பேறி ::)
-
சோகத்தில் இருந்தாலும்
சோபேறியாய் இருந்தால்
துன்பம் கூட தீண்டாது...
தீண்டாமை
-
கீழ்ஜாதி என்றும்
தீண்டாமை என்றும்
வரியவரை வெறுப்போரே
நீங்கள் உண்ணும் உணவு
உடுத்தும் உடை
இருக்கும் வீடு இவை அனைத்துமே
அவர்கள் தீண்டி உருவாகினவை
என்பதை நீர் அறிவீரோ
கீழ்ஜாதி
-
நட்புக்கு இல்லை
கீழ்ஜாதி மேல்ஜாதி...
நாம் தரும் மதிப்பில் உண்டு
நட்பின் இலக்கணம்...
இலக்கணம்[/color]
-
விட்டு கொடுத்து போவதுதான்
நட்பின் இலக்கணம்
உன்னை விட்டு இலககணம்
படிக்க விரும்பவில்லை
என் நட்பே என்றும்
என்னுடன் நட்பாய் இரு
நட்பே
-
நட்பே காதலாக மாறலாம்
காதலர்கள் நட்புடன் காதலிக்கலாம்
இரண்டுக்கும் அன்பே காரணம்
இரண்டு
-
நீயும் நானும் இரண்டு
இதயங்கள் இணையும் முன்பு
இணைந்த பின்பு
ஒன்று ...
ஒன்று
-
காதலில் தோற்றவர்
கண்ணீர்தான் கடலோ !!
காதலில் வென்றவர்
தொட்டதுதான் வானமோ !!
தூரத்தில் ஒன்று
துக்கத்தில் ஒன்று
தோல்வியும் வெற்றியும்
தொடருது இன்னும் !!
தோல்வி
-
தோல்வியை கண்டேன் உன்னால்
நீ தந்த காயங்களில் அல்ல
நீ தர போகும் மாயத்தில்
உனது கல்யாணத்தில்...
கல்யாணம்
-
கல்யாண விருந்து தான்...
ஆனாலும் கை நனைக்க முடியவில்லை,
கண்கள் நனைந்தன...
காதலியின் திருமணத்தைக் கண்டு!
நனைந்தன
-
நம் கண்கள் நனைந்தன
ஒருவர் மீது ஒருவர்
நாம் கொண்ட காதலால்...
காதல்
-
காதல் இந்த வார்த்தையே
கவிதை தானே
இதற்கு நான் என்ன கவிதை சொல்ல
காதலித்து பார் கவிதை தானாய்
பிறக்கும்...
வார்த்தை
-
உன் கண்கள் பேசும் போது
வார்த்தைகள் ஊமையாகி
விடுகின்றன
ஊமை
-
ஊமை மொழிகள் கூட அழகே
உன் வார்த்தைகள் எனக்கு
அறியாத நேரத்தில்...
நேரம்
-
நேரம் நமக்காக நிற்பதில்லை
காலம் நமக்காக காத்திருப்பதில்லை
அவற்றுக்கேற்றாப்போல
நாம் நம்மை மாற்றிக் கொள்வோம்
காத்திருப்பதில்லை
-
காத்திருக்கிறேன் உன் வருகைக்காக...
காலமெல்லாம் உன்னுடன் வாழ,
காத்திருப்பதில்லை என் ஆயுள்
உன் வார்த்தைக்காக
காரணம் மரண படுக்கையில் நான்...
காலமெல்லாம்
-
என் காதலை பார்த்து
எல்லாமே கனிந்தது
உன் இதயத்தை தவிர ...
கனிந்து
-
ஏஞ்சல்
உங்க கவிதை தப்பு. தலைப்புக்கேத்த கவிதை நீங்க தரல.
அதால நாட்டாமை கவிதையை மாத்து
-
ilapa muthal kainthu enru erunthathu thalaippu :(
காலமெல்லாம்
காதலிப்பேன்
நீ கல்லாய் இருந்தாலும்
காற்றாய் உன்னை சுற்றி
கன்னி நான் உலவிடுவேன்
கல்லாய்
-
கல்லாய் மாற முயற்சித்தேன்
உன் காலால் எனை உதைப்பாய் என...
முயற்சித்தேன்...
-
ஒவொரு கணமும்
முயற்சிக்கிறேன்
உன் இதயத்தின் ஓரத்தில்
ஒரு இடமாவது பிடிக்க
இடம்
-
உனக்கு இடம் தந்தேன்
என் இதயத்தில்..
என் இடத்தை நான் அறிய
மறந்தேன் உன் முக மலரால்...
மலர்
-
என் இதய தோட்டத்தில்
மலர்ந்த முதல் பூ நீ ..
பூ
-
பூ பூவாய்
பூத்திருந்தேன்
நீ வந்தாய் அரும்பானேன்...
அரும்பு
-
அரும்பாக பிறந்த
என் காதல்
பூவாகி காயாகி கனியாகுமுன்
கருகி போகுமா ...?
கருகி போகுமா ..?
-
என் உடல் கருகி போகுமா
உனை காணாமல்...
எனை காண வருவாயோ
என் ஆத்மார்த்தமான
காதலுக்காக...
காதலுக்காக
-
என்றுமே காத்திருப்பேன்
உன் காதலுக்காக அல்ல
என் காதலுக்காக ..
என் காதல்
-
கண்ணுக்கு தெரிவதில்லை
காற்று...
அது போல தான் என் காதல்
கண்ணால் உணராதே
உள்ளதால் உணர்ந்துக்கொள்
காற்று..
-
விதி வசத்தால்
இருந்த என்னை
காற்றாக வந்து
உன் வசம் ஆக்கினாய்...
உன் வசம்
-
நானில்லை என் வசம்
என் உடல் பொருள் ஆவி
அனைத்தும் உன்வசம்
ஆவி
-
உனை பார்க்க
நான் ஓடி வந்தேன்
என் ஆவி போக..
நீ சொல்லி சென்றாய்
ஒரு பாவி என...
பாவி
-
என்னில் உன்னை காண்கிறேன்
உன்னில் என்னை காண முடியாத
பாவியாக நான் ....
உன்னை
-
உன்னை காணாமல்
நான் இருந்ததில்லை
உன் பார்வை இல்லையென்றாலும்
என் பார்வையை உனதாக்குவேன்...
பார்வை
-
ஒரு பார்வை பார்த்துவிடு
உனக்காகவே வாழ்ந்துவிடுகிறேன்
வாழ்வு
-
வாழ்வும் சாவும்
உன்னோடு தான்
என்
உடலும் உயிரும்
உனக்காகத் தான்
உனக்காகத் தான்
-
உனக்காகத்தான் என் இதயம்
உருக வைப்பதும்
உறைய வைப்பதும்
உன் உபயம்
உபயம்
-
என் உபயம் உன்னை
உறைய வைப்பதல்ல
உயிருள்ள இதயததை
உருக வைத்தால்
அதில் இருக்கும் நானும்
உருகி விடுவேனே
உருகி
-
உன்னை உருகி உருகி நேசித்தேன்...
என் இதயம் மலர ஆரம்பித்தது
என் கண்களில் ஈரமாய் படர்ந்தது...
கண்களில்
-
என் கண்களில்
என்றும் உன் உருவம்தான்
கனவிலும் உன் உளறல்தான் ..
உளறல்
-
உன் உளறல் கேட்டு
நான் கண் விழித்தேன்...
உன் முணுகல் கேட்டு
நான் மெய்மறந்தேன்...
முணுகல்
-
உன் முனகலில்
முழுதாய்
என் இளமை விளித்தது ..
இளமை
-
திரைகடல் ஓடி
திரவியம் தேடினேன்
என் இளமை பருவத்து
காகித கப்பலை
யாராவது தருவார்களா?
காகித கப்பல்
-
என் காதல் என்ன காகித கப்பலா
கற்று அடித்தல் பறந்து போக
அது காட்டாறு போல
உன் மேல் கொண்ட காதல்
கரை புரண்டு ஓடிகொண்டே இருக்கும்
காட்டாறு
-
காற்றாற்று வெள்ளமென
கரை புரண்டோடும்
நம் காதல்
ஒரு கரையாக நானிருக்கிறேன்
மறுகரையாக நீ
வருவாயா
மறுகரை
-
மறுகரையாக நான் வந்தால்
மறுக்காமல் எனை
தழுவிக் கொள்வாயா ?
தழுவி
-
தழுவ மாட்டேன்
நீ மலர்
தாங்க மாட்டாய்
கசங்கி விடுவாய்
கசங்கி
-
உன் கை பட்டு
கசங்குவதே
இந்த பூவுக்கு மோட்சம் ...
மோட்சம்
-
இறந்தபின் மோட்சம் செல்வேன்
அன்பே!இறப்பது
உன் மடியாக இருந்தால்
இறந்தபின்
-
இறந்த பின்னும்
என் இதயம் துடிக்கும்
உன் நினைவுகளை சுமந்தபடி
நினைவுகள்
-
நிழலாய் உன் நினைவுகள்
என்னை தொடர
நிழலின் துணையோடு
நிஜத்தில் வலம்
வருகிறேன் நினைவாய்
இல்லாமல் நிஜமாய்
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்
நிஜமாய்
-
நீ சிரித்தாய்
எனை பார்த்து
நிஜமாய் இன்று தான்
மனிதப்பிறவி எடுத்தேன்.
மனிதப்பிறவி
-
ஒவொரு கணமும் துடிக்கிறேன்
மனித பிறவி எடுத்ததர்க்காய்
ஒரு பறவையாய் பிறந்திருந்தால்
இந்நேரம் உன்னை
காணும் பாக்கியமாவது கிடைத்திருக்கும்
பாக்கியம்
-
நீ என்னை காதலித்தது
என் பாக்கியம்
நீ என் மனைவியானது
என் துர்பாக்கியம்
துர்பாக்கியம்
-
உன்னை இதுவரை
சந்திக்க முடியாதது
என் துர்ப்பாக்கியம்
சந்திப்பு
-
சந்திப்பு உடல்களுக்குத்தான்
மனங்கள்
ஏழு கடல் தாண்டியும் இணையும்
ஏழு கடல்
-
என் நினைவுகள்
எழு கடல் தாண்டியும்
உன்னை தீண்டும் ..
தீண்டல்
-
உன் தீண்டல்
என்னை கொல்லுதடி
என் தேடல்
உனை மிஞ்சுதடி...
மிஞ்சும்
-
மிஞ்சும் உன் சில்மிஷம் கண்டு
விஞ்சும் என் விபரீத உணர்வுகள் ..
விளையாட நேரமில்லை
விடைகொடு விளிக்கும் முன்
விரையவேண்டும் ..
விபரீதம்
-
விபரீதத்தை கண்டு
அஞ்சவில்லை நான்
உன் விருந்தோம்பலை
மிஞ்சுவேன் நான்..
விருந்தோம்பல்
-
உன் விருந்தோம்பலில்
அந்த விண்ணையும்
தாண்டவேண்டும் நான்
விரைந்து வா..
சுவை விருந்து படைத்திடலாம்
விண்ணையும்
-
என் காதலை
நீ ஏற்பாயானால்
நான் வருவேன்
விண்ணையும் தாண்டி...
கொடி
-
நான் கொடி
படரும் கொழுகொம்பு
நீயானால் -...
கொழுகொம்பு
-
கொழுகொம்பு ????
இதுக்கு என்ன அர்த்தம்...யாராவது இதுக்கு கவிதை போடுவீங்கன்னு பார்த்தேன்...யாருமே தொடரலையா .....அர்த்தம் சொல்லுங்க நான் தொடருகிறேன்
-
கொளுகொம்புன்னா பற்றுதல் அதாவது கொடி படருவதற்கு ஒரு மரம் ஒரு தடி வேலி இப்டி எதாவது தேவை இலின அந்த கொடியில வளர்ச்சி கம்மிய இருக்கும் .... அழகா இருக்காது .. கொடி படரனுமா ஒரு கொழுகொம்பு அவசியம் சுறு .... எங்க போனே நீ ...
-
கொளுகொம்புன்னா பற்றுதல் அதாவது கொடி படருவதற்கு ஒரு மரம் ஒரு தடி வேலி இப்டி எதாவது தேவை இலின அந்த கொடியில வளர்ச்சி கம்மிய இருக்கும் .... அழகா இருக்காது .. கொடி படரனுமா ஒரு கொழுகொம்பு அவசியம் சுறு .... எங்க போனே நீ ...
அப்டியா ???
அடியே இதுக்கு என்ன கவிதை எழுத.... :'(
நீயே எழுது இதுக்கு மட்டும்
எங்கும் போகல ...அது தான் வந்துட்டேன் தானே Rose ;) ;) ;)
-
கொழு கொம்பாய் நீ
உன்னில் படர்ந்து
விருட்சமாய் போனது
என் காதல்...
பயம்
-
என் தாயின் கருவரைலேயே
பயத்தை வென்றேன்...
ஆனால்
குழந்தையாய் இருந்த போது
அந்த இருள் என்னை வென்று
பயம் காட்டியது...
-
enaathula start panna ::) ::) ::)
குழந்தையாய் உணர்கின்றேன்
உன் ஒவொரு ஸ்பரிசத்திலும்
தாயே நான் தலை நரைத்து போனாலும்
உன் தழுவலில் நன் குழந்தைதான்
தழுவல்
-
உன்னை தழுவினேன்
நான் அடைக்கலமானேன்
என்னை பற்றிக் கொண்ட
நெருப்பு நீயடி...
நெருப்பு
-
நெருப்பாய் உன் பார்வை
சுட்டுவிட
இதயம் பற்றி எரிகிறது
உன்னை நினைத்து
உன் பார்வை
-
உன் பார்வை இல்லாத
இடமும் கூட பாலைவனமே
பாலைவனம்
-
சொல்ல்வார்கள்
பாலைவனத்தில் நீர் கிடைகதேன்று
அவர்களுக்கு
தெரியாது போல காதலில் தோற்றவன் கண்ணீர் அங்கு
உலர்ந்து போய் இருக்கும்யென்று
உலர்ந்து
-
உலர்ந்து போன
என் உதடுகளுக்கு
உன் உதடுகளால்
உயிர் கொடுத்துவிடு
உதடு
-
இதழை விட்டு
இதழ் பிரிந்தாலும்
வாடாத பூவின்
செவ்விதழாக
"அவள் உதடு".....
செவ்விதழ்
-
உன் செவ்விதழ்கள்
என் கண்களை பார்த்து
பேசும் போது
தூள் தூளாய் உடைகிறேனே...
தூரல்
-
மேகத்தில் சிறு ஊடல்
வெள்ளி ரேகை பதிய
கார் இருள் சூழ
சிறு தூரல்..
பேரிடியாய் சத்தம்...
வான் மகளுக்கு
மேக காதலின் முத்தமோ????
வான் மகள்
-
வான் மகளே
உன் வாழ்வில் நான் இருக்க
எங்கு செல்கிறாய் எனை மீறி
உன் வருகையை
எதிர் கொள்கிறேன்
மாறி மாறி...
வருகை
-
அவள் வருகையை
சொல்லிச் சென்றது
காற்றோடு கலந்து வந்த
அவள் காதில் தொங்கும்
ஜிமிக்கியின் ஓசை
ஜிமிக்கி
-
என் வருகையை
உனக்கு சொல்லத்தான்
வடிவளகாய் என் காதுகளில்
ஜிமிக்கி ...
என் வளை கரம் பிடித்து
என் வடிவழகை
ஸ்பரிசித்திட வா
கரம் பிடித்து
-
உன் கரம் பிடித்தேன்
நீண்ட நாள் வாழ
என் மதி இழந்தேன்
உன் அன்பினாலே பெண்ணே...
மதி
-
என் மதி கெட்டு போகிறது
என் மடிதனில் நீ தலை சாயும் போது
தலை சாய்ந்து
-
எனக்கு ஒரு வேதனை
உன் மடிமேல் தலை
சாய்கிறேன் தாயே!!
வேதனை
-
வேதனைப் படுகிறேன்
மனிதனாய் பிறந்ததற்கு
நாயாக பிறந்திருந்தால்
நன்றியாவது மிஞ்சியிருக்கும்
நாய்
-
நன்றி என்ற வார்த்தைக்கு
அர்த்தம் இல்லாதவன் நான்
ஏனெனில் உன் அகராதியில்
''முன்னாள்'' என்ற இடம்
பிடித்திருக்கிறேன்
அகராதி
-
எனகென்று அகராதி இல்லை
என் நினைவுகளுக்கு
நீயே அகராதி ...
நினைவுகள்
-
நினைவுகள் எனக்கென இல்லை
உனக்கென என் உயிர் உள்ளதே..
உயிர்
-
தென்றலாக வீசிக்கொண்டு இருந்த
என்னுள் புயலாய் வந்தவனே...
மின்னலாய் மறைந்து போய் விடாதே....
உன்னை பிரிந்தால்
உயிர் வாழ இயலாது என்னால்
தென்றல்
-
ஒவொரு கணமும்
தென்றலாய் வீசி
என் மனதை
புயல் சூழ்ந்த
பூமியாக்குகின்றாய்
பூமி
-
பூமியின் மடியில்
நான் விழுந்து கிடந்தேன்
பிள்ளையாக உன்
நினைவுகளோடு...
நினைவுகள்
-
உன் நினைவுகளை சுமப்பதால்தான்
என் இருதயம் இன்னும்
உசிரோடு வாழ்கிறது
சுமை
-
திரவியம் தேடி...
உடல் மட்டும்
திரைகடல் தாண்டி
உயிரை மட்டும்
உன்னிடத்தில் விட்டு
ஆண்டுகள் இரண்டு கழிய
ஆயுள்கால வேதனை.
பாலையில் நான் இருந்தும்...
வெம்மை என்னை சுடுவதில்லை.
தனிமையில் நான் இருப்பதினால்....
உன் நினைவுகள் என்னை சுடுகிறது.
பிரிவின் சுமையோ
இரண்டு ஆண்டுகள் தான்...
நினைவின் சுமையோ
நிமிடங்கள் தோறும்...
பிரிவு
-
பிரிவுதான் உணர்த்துகின்றது
வாழ்கையின் வளர்ச்சியை ...
வாழ்க்கை
-
வாழ்க்கை புயல் போல
வாழலாம் அதன் மேலே...
புயல்
-
புயலாய் புழுதிகிளப்பிப்
போனது ஓர் ரதம்...
அதன் சில்லுகளிடைச் சிக்கி
நசிந்த பூக்களின் கண்ணீர்,
புழுதியை அடக்க முயன்று
தோற்றன...
பூக்களின் சிதைவுகளில்
புயல் சிரிக்கின்றது...
பூக்களின் சிதைவு
-
காதலில் தோற்றவன் மனது
சிதைந்து போன பூக்கள்
போலதான்....
ஆனால் சிதைந்த அந்த இடத்தில
திரும்ப ஒரு பூ பூக்கும்...
அதே போல தான் மனதும்
ஒரு நாள் நம்மை புரிந்த ஒரு பூ
நம் மனதில் நிற்கும்....
அதனால் என்றும் தளராமல் வாழ
வேண்டுமென என் நண்பருக்கு சொல்கிறேன்...
தளராமல் வாழ
-
தன்னம்பிக்கை கொள்
தளராமால் வாழலாம் ..
தன்னம்பிக்கை
-
கடவுள் நமது கோரிக்கைகளை
உடனே நிறைவேற்றினால் அவர் மீது
பக்தி (நம்பிக்கை) அதிகமாகிறது !
சற்று தாமதமானால் நமக்கு
நமது `தன்னம்பிக்கையை' அதிகமாக்கிறார்
என்று அர்த்தம் !
முயற்சி
-
முயற்சி திருவினையக்குமாம்
ஆனால்
முயன்று முயன்றது தோற்கிறேன்
அவளை
புரிந்துகொள்ள
தோல்வி
-
ஒருவர் தோல்வியில்
அவரின் வெற்றி அமையும்
பிறரின் வேதனையில்
வெற்றி காண்பது
மிருக தனத்தை விட
கொடியது...
மிருக தனம்
-
ஒவோருத்தர் மனதுள்ளும்
உறங்கி கிடக்கிறது
மிருகத்தனம்
அது உறங்குவதும்
எழுவதும் அடுத்தவர் கையிலுள்ளது
உறக்கம்
-
உறங்கும் மனிதன்
விழித்தால்...
சாது மிரண்டால்
காடு கொள்ளாது
போல் ஆகும்...
காடு
-
காடுபோல் கறுத்து
அடர்ந்த உன் கரும்
கூந்தலில் கவிழ்ந்து கிடக்கிறது
என் காதல் மனது
காதல் மனது
-
கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினானாம் இலங்கை வேந்தன்!!
அதுபோல்
கலங்கி கிடக்கிறது
என் காதல் மனம்,
நீ என் அன்பின்
ஆழத்தை அறிந்தும்
அறியாததுபோல
என் காதலை புரிந்தும்
புரியாதது போல
என்னை விரும்பினாலும்
வெறுப்பதாக நீ நடிக்கும் போதும்
அடுத்த தலைப்பு : அன்பு
-
அன்புக்கும் உண்டோ
அடைக்கும் தாழ் ....?
இருக்கிறதே ...
இல்லையென்றால்
நான் ஏன் இப்படி ...?
அடைக்கும் தாழ்
-
அன்றோ
அடைத்திருந்த தாழை உடைத்து
காதலை கொட்டினேன்
இன்றோ
கொட்டும் வெறுப்பை
அடைக்க தாழ் தேடுகிறேன்
அடுத்த தலைப்பு : வெறுப்பு
-
மனிதர்களை வெருப்பவனை
இறைவன் நேசிக்க மாட்டான்....!!!
நேசம்
-
பகைவனை நேசித்த
மனிதர்கள் இருந்த
இவ்வுலகில்
நட்பை நேசிக்க
தயங்குவதேனோ
அடுத்த தலைப்பு : நட்பு
-
வளர்வது தெரியாது
வளர்ந்தது தெரியாது
நகம் போன்றது
நட்பு...!
வளர்ச்சி
-
உன்னிடம் நான் கொண்ட
காதலுக்கு மட்டும்
வளர்ச்சி வானளாவ உள்ளதே
விண்ணை தாண்டியும்
விம்மும் என் காதல் ...
விம்மும்
-
விம்மிய குழந்தை சிரித்தது
தனக்கு குழந்தையான
பொம்மையை கொஞ்சியபோது
அடுத்த தலைப்பு : சிரிப்பு
-
ஒவொரு கணமும்
சிலிர்த்து சிவக்கின்றேன்
உன் சிரிப்பினில்
சிவக்கின்றேன்
-
சிவப்பு!!
பாரியை பற்றி படித்த பொது
கொடையின் நிறமென்று உணர்தேன்..
நேற்று பிறந்த பிஞ்சின் கால்களை கண்டபோது
அழகின் நிறமென்று புரிந்தேன்..
சிவப்பு கம்பளத்தை பார்த்த போது
விருந்தோம்பலின் நிறமென்று அறிந்தேன்..
என்னவளின் வெட்கத்தை ரசித்தபோது
வெட்கத்தின் நிறமென்று ரசித்தேன்..
எம்மக்கள் மாண்டதை தடுக்காமல்
கண்டுகொண்டிருந்த கயவர்களை
நினைக்கும் போது சிவக்கிறேன்
கோபத்தின் நிறமென்று உணர்ந்தும்... :(
அடுத்த தலைப்பு :வெட்கம்
-
உன்னை பார்த்தவுடன் படரும் வெட்க்கம்
நீ போன பின்பும் தொடர்கிறதே
இதுதான் காதலா ?
தொடர்கிறதே
-
பெரியார் தொடங்கிய போராட்டம்
சாதியை ஒழித்து சமுதாயத்தை முன்னேற்ற
இன்றும் போராட்டம் தொடர்கிறது
சாதியை வைத்து
சமுதாயத்தை முனேற்ற அல்ல
தன் சுற்றத்தை முனேற்ற
அடுத்த தலைப்பு : சாதி
-
சாதிகள் இல்லையடி பாப்பா
காதலிக்கும்போது ...
சாதிகள் தொல்லையடி பாப்பா
கல்யாணத்தின் போது
கல்யாணம்
-
சுதந்திர வீரர்களுக்கு
மாட்டப்படும் கால் விலங்கு
கல்யாணம்
ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு
போடப்படும் மூக்கணாங்கயிறு
கல்யாணம்
மூக்கணாங்கயிறு
-
ஒரு மூக்கணாங்கயிற்றால்
முழுவதும் உனதானேன்
முழுவதும்
-
என் இதயம் முழுவதும்
ஏன்
இந்த உலகம் முழுவதும்
நீயே இருக்கிறாய்
பார்க்கும் இடமெல்லாம்
பார்க்கும் பொருள் எல்லாம்
நீயே இருக்கிறாய்
உலகம்
-
நீதான் என் உலகம்
உருளுமா உடையுமா ..?
நீதான்
-
காதலே கூடாதென்று இருந்த
என் இதயத்தில்
காதலை பூக்க வைத்தவள் நீ தான்
இன்று அந்த
பூவை
கசக்கி எறிவதின் காரணம் என்னவோ
அடுத்த தலைப்பு : பூ
-
என்னை பூவாய் மதித்துத்தானே
முகர்ந்து வீசி விட்டாய்
புழுதியில் விழுந்தாலும்
உன் பூஜைக்கு வந்த சந்தோசம்
இந்த பூவைக்கு போதும் ,,
பூவை (பெண் )
-
பூத்த பூக்கள் எல்லாம்
பூஜைக்கு செல்வதில்லை
அதுபோல தான்
இந்த பூவையும்
உன்னை சேர முடியாமல்
வாடி போகிறேன்
சுயநலம்
-
நான் மற்றவர்களுக்கு தொண்டு செய்வது
சேவைக்காக அல்ல
அவர்களின் வாழ்த்துகாக
ரத்த தானம் செய்வதும்
மூத்தோருக்கு உதவுவதும்
அநாதை இலத்திற்கு கொடை செய்வதும்
பொதுநலத்துக்கு தான்
என்று நினைத்தால்
அது
உங்கள் தவறு
அல்லலுற்ற தோழனுக்கு
துணை இருப்பது
நட்பால் அல்ல
அவர்கள் அதை திருப்பி செய்வார்கள் என்ற
எதிர்பார்ப்பில்
வெறும் புகழ்ச்சிக்கும்,
பலன் எதிர் நோக்கியும்
நான் செய்வதை கண்டு
நான் நல்லவன் என எண்ணும்
மூடர்களே
இது வெறும் சுயநலம் தான்
இனி ஏமாறாதீர்
அடுத்த தலைப்பு : அநாதை
-
என்னை சுற்றி 1000 நபர்
இருந்தாலும்
அனாதை ஆகிறேன் உன்
பார்வை படாத போது..
பார்வை
-
உன் பார்வையில்
என் பனி துளி சுடுகிறதே ..
பனித்துளி
-
வெண்மை நிற பனித்துளி
என் மேல் விழுகையில்
நீல நிறமாகிறது
காரணம் உன்னைப் பற்றிய
நினைவுகள் விஷம் போல
என்னில் பரவி இருப்பதினால்...
விஷம்
-
புகைக்காதீர்
உங்கள் சிற்றின்பதிற்காக
என் சுவாசத்தில் விஷம் கலக்காதீர்
அடுத்த தலைப்பு : இன்பம்
-
கடலும் நீயும் ஒன்று , அலையும் நானும் ஒன்று ,
கடல் எத்தனை முறை தான் அடித்து அடித்து கரையில் கொண்டு வந்து விட்டாலும்
அலை, கடலையே தேடி செல்லவது போல ,
எத்துனை முறை தான் என்னை அலட்சியம் செய்து அலைகழித்தாலும் அணு அணு வாய் உன் நினைவிலேயே
நீங்காதிருப்பதால் ,கடலும் நீயும் ஒன்று , அலையும் நானும் ஒன்று.
அடுத்து தலைப்பு = காத்திருப்பு
-
ajith adutha thalaipu sollama poiteenga ??
-
அஜித் நான் கொடுத்த தலைப்பு இன்பம் ஆனா நீங்க அதற்கு கவிதை எழுதவில்லையே??
-
]தலைப்பை காண்பதில் சிறிய தவறு நேர்ந்ததால் தலைப்பு தவறிவிட்டது
கிடைசி பக்கத்தின் கடைசி கவிதையை காண்பதற்கு பதிலாக முதல் பக்கத்தின்
கடைசி கவிதையை கண்ட குழப்பத்தில் தான் தலைப்பு தவரிவிட்டது.
-
its ok ajith...yepothum last page click seithu parunga...
Remo neenga sonna inbam thalaipuku nan poduren poem
-
கோபத்தில் புரிதல் இல்லாமல்
தொலைந்து போனது
எனது இன்பம்..
பெயரில் மட்டுமே
இன்பத்தை கொண்டேன்
நிஜத்தில் தேடி தவிக்கிறேன்
எங்கே இன்பம் என்று
தவிக்கிறேன்
-
உன்னை காணும் வரை தவிக்கிறேன் உன் நினைவால்
உன்னை கண்டபின்பும் தவிக்கிறேன் உனக்காய் ..
உனக்காய்
-
இந்த அரட்டை அறைக்கு நான் வந்திட வரம் தந்தவள்
என் முரட்டு குரலையும் மென்மை ஆகிட சுரம் தந்தவள்
அழகு தமிழை மிக அழகாய் பேசிட ஆக்கம் தந்தவள்
உன் (ள்) நினைவை ,கற்பனையை கவிதையாக்கிட ஊக்கம் தந்தவள்
உறக்கம் இல்லா இரவுகளை நீக்கிட இனிய கனவுடன் தூக்கம் தந்தவள்
அழகையே ரசித்திடும் ஆர்வம் இல்லாதவன் அழுக்கையும் ரசித்திடும் ஆக்கம் தந்தவள்
ஆக்கம், ஊக்கம் ,தூக்கம்,தாக்கம் என அனைத்தையும் தேக்கம் இன்றி முழுதாய் தந்தவள்
இந்த ஆசை என் ஆசையை நீக்கம் செய்திட கூறி ஏக்கம் தந்தது ஏனோ ?
நிழலை கூடவா நேசிக்க மறுப்பு ? விருப்பத்தோடு காத்திருக்கிறேன் உனக்காய் !
அடுத்த தலைப்பு - வாழ்த்து
-
wowwwwwwwww superb ajith....amazing...
முதல் முதலாய் அழகு தமிழை
அனாயசமாக அடுக்கி
அழகிய கவிதை தந்து
ஒரு கணம் அண்ணாந்து பார்க்க வாய்த்த
உனக்கு என்னுடைய வாழ்த்து...
வியப்பு
-
எளிய நடை தான் என் அடையாளம்
இலக்கியம் எனக்கு இயலாது
பாமரனும் படிக்கணும்
என கூறியவள்
இன்று
தமிழ் தாயின்
அழகில் மயங்கி வியந்ததன்
மாயம் என்னவோ
அடுத்த தலைப்பு : மாயம்
-
haha remo :D ithu enaku than nee solranu puriuthu thanks..neeium nalla munerita :D
என்ன மாயம் செய்தாய்
உன்னை காணமல் செல்ல
மனம் சொல்ல
கண்கள் ஏனோ
உன்னைவிட்டு விலக
மறந்து உன்னில்
நிலைக்கொண்டு தவிக்க விடுகிறதே
பேசும் விழிகள்
-
காதலுக்கு கண்கள் மட்டுமல்ல
நா கூட தேவையில்லை
பேசும் உன் விழிகள்
இருக்கும் போது
அடுத்த தலைப்பு : காதல்
-
சுவாசம் இல்லாமல் வாழ்வா
காதல் இல்லாமல் வாழ்க்கையா
நீ இல்லாமல் நானா
வாழ்க்கை
-
உன் வருகைக்கு முன்பு வரை வெறும் வெறுமையாய் ,வரட்சியாய்
வேளிரி, வறண்டு போயிருந்த விலை நிலம் போல ,
வெண்மையை விடுத்து வெறும் கருப்பை வாங்கிக்கொண்ட
வானத்து வெண் மேகங்களை போல
வறுமையின் விளிம்பில் உழலும் விவசாயி விரக்தியாய் விடியும் வருட வருமானம் போல
என் வாழ்கையும் விடியாமல் தான் இருந்தது.
அடுத்த தலைப்பு - கைம்பெண்
-
கணவனை இழந்தவள் மட்டுமல்ல
காதலை இழந்தவழும் கைம்பெண்தான்
கணவன்
-
காதலனாய் பாசத்தை காட்டி
கணவனாய் காதலை தந்து
காதலாய் வாழ
என் காதலனே
கணவனாய் வந்துவிடு
என் காதலனே
-
உன்னை என் காதல் என்று சொல்ல
எனக்கு தகுதி இல்லை
என் காதலனே ....
காரணம்
நான் உந்தன் காதலி அல்ல
காரணம்
-
காரணம் சொல்லிவிடு
உன்னையே சுற்றிவரும்
என் இதயத்திற்கு
உன்னை நினைக்காமல் இருக்க
காரணம் சொல்லிவிடு
சொல்லிவிடு
-
சொல்லி விடு
உனக்கும் எனக்கும்
இடையில் நடக்கும்
பனிப்போர்
இன்றாவது முடிவுக்கு வரட்டும்
பனிப்போர்
-
மனதுக்குள் பனிப்போர்
மறந்து விடவா
மறக்க முடியுமா
மரணம் வரை
மறக்காது உன் நினைவுகள்
மரித்தபின்
மறந்துவிடுகிறேன் உன்னை
மறக்க நினைத்ததை
மறக்க நினைத்ததை
-
மறக்க நினைத்ததை மறக்க முடியவில்லை..
ஏன் இந்த கலக்கம் எனக்குள்,
நான் இறந்தும் கூட உன்னை மறக்க
முடியாமல் தவிக்கிறேன்...
கள்ளரயில் நீ என்னை பார்க்கும்போது கூட
என் கண்ணில் நீதான் இருகிறாய்...
ஈன்றும் தொடரும் என் காதல் எந்த மண்ணுலகம்
உள்ள வரை...
முடியாமல் தவிக்கிறேன்
-
உன்னோடு இருக்கும்
தருணத்தில்
என்னை மறந்து
உன்னை பார்க்க
முடியாமல் தவிக்கின்ற
கண்கள் மீண்டும் மீண்டும்
உன்னையே பார்க்க துடிக்க
பார்த்தும் பாராமல்
இருக்க முடியாமல் தவிக்கிறேன்
பார்த்தும் பாராமல்
-
உனக்காக நன்
பார்த்தும் பாராமல் நீ
பரி தவிப்பில் நான்
உனக்காக
-
நான் எழுதும்
ஒவொரு வரிகளும்
உனக்காக தவிக்கிறது ..
வரிகள்
-
ஓரிரு வரிகளிலே கவி சொல்லும் திரு நிலவே !
வரிகளின் வறுமையில் உயிர்வலிதான் தரு நிலவே !
மறு முறையேனும் வரி கூடும் என காத்திருப்பேன் ,
மறுபடியும் மறுபடியும் , ஓரிரு வரிகளே வரக்கண்டு வலி கூடும்,
இருந்தும் காத்திருப்பேன் .
புத்தியில், இவன் பித்தனோ என்று கூட எண்ணம் தோன்றலாம் ?
புத்தனும் என்னோடு பொறுமையில் போட்டி இட்டால் தோற்று போகலாம் ?
உன் வரவு இல்லாவிட்டால் வாடிபோவது நான் மட்டும் தான் என்றிருந்தேன் ,
சொன்னால் நம்பமாட்டாய் கவிதை தொகுப்பிலே வறட்சி...
யோசிச்சு பாத்ததும் தான் புரிஞ்சது அது உன் தனி புரட்சி ..
அடுத்த தலைப்பு - புரிதல்
-
என் ஓரிரு வரிகளில்
புரிதல் இல்லையா ..
புரிதல் வரிகளின் தொகையில் இல்லை
உணர்தலின் வகையில் தானே உண்டு ...
உணர்வு
-
கவிதையின் உணர்வு
வரிகளில்
உன் வரிகளின் உணர்வு
இதயத்தில்
புரிந்தும் புரியாமல் நான்
இதயத்தில்
-
இதயத்தில் உன்னை வைத்தேன்
இறந்தாலும் உன் நினைவுகளை சுமந்து
இறுதி இரண்டு நிமிடங்கள் துடிக்க ..
இறந்தாலும்
-
இறந்தாலும்
இறக்காமல் இருக்கும்
என் சாம்பலிலும்
ரணங்கள்
ரணம்
-
உன்னால் ஏற்ப்பட்ட
ரணங்கள் ஆறுமுன்
அதிலே வாளை பாய்ச்ச
உன்னால்தான் முடியும்
முடியும்
-
பூக்கள் பூக்கும் வரை பொறுமையாய்
வண்டு காத்திருப்பதும்
ரீங்காரதொடு காலையும் மாலையும்
சோலையில் தேனீக்கள் காத்திருப்பதும்
புல்லின் மீது படர்ந்து இருக்கும் பனி துளிக்காக
சூரியன் காத்திருப்பதும்
குளிர் நிலவின் வருகைக்காக
கவிஞ்சர்களும் , காதலர்களும் காத்திருப்பதும்
தயக்கமின்றி மனதில் தோன்றுவதை (கவிதை ) தொகுப்பிலே
தெரிவித்து நான் காத்திருப்பதும்
தத்தம் தேடல்கல் இனிதாய் முடியும் என்ற நம்பிக்கையில் தான் ..
அடுத்த தலைப்பு - நம்பிக்கை
-
நம்பிக்கை மலர்க்கொண்டு
நட்பை நாடி நான் வர
கவிதையாய்
உன் மனம் இருக்க
மனதை படிக்க மறந்து
கவிதையை படித்து விட்டு
பக்கத்தை விட்டுச்செல்லாமல்
வியப்பில் என் மனம்
அலை மோத
கவிதை படைக்கும் உன் கரங்களுக்கு
மலர்கொத்து தந்து வாழ்த்தி
செல்கிறேன்.... :) :)
உன் கரங்களுக்கு
-
எனக்கு நீ
எழுதிய கடிதத்தில்
அன்பே ...என்று
ஆரம்பித்து எழுதிய
உன் கரங்களுக்கு
என் முதல் முத்தம்
முதல் முத்தம்
-
என்னை அறியாது
புதைந்து போனது
என் வெட்க்கம்
உன் முதல் முத்தத்தில் ....
வெட்க்கம்
-
உன்னை கண்டாலே
என் வெட்கத்திற்கும்
வெட்கம் வந்துவிடுகிறதே ...
உன்னை
-
தணலாய் இருக்கும்
இதயம் கூட
உன்னை பார்த்த நொடியில்
பனிக்கட்டியாய் உறைந்து
போக உன் கண்களால்
என்னை கட்டிபோட்டு
கவர்ந்து சொல்லும் மாயம்
உன்னால் மட்டுமே முடியும்
உன்னால் மட்டுமே
-
உன்னால் மட்டுமே முடியும்
ஒரு வார்த்தையால்
கட்டி போடவும்
கடித்து துப்பவும்
கட்டி போட
-
என்னை கட்டி போட
என்ன தேடுகிறாய் ...?
உன் முத்தம் ஒன்று போதும்
முழுவதாய் நான்
கட்டுண்டு போவேன் ..
முழுவதாய் நான்
-
முழுவதாய் நான்
புதைந்து போகின்றேன் ..
உன் நினைவுகளுக்குள்
உன் நினைவுகளுக்குள்
-
ஏழாம் அறிவின் விளம்பரத்திற்கும்,
மேடை பல கண்டு சாதனை மேல் சாதனை காணும் லட்சுமனின் வளர்ச்சிக்கும் ,
தமிழ் ஹிந்தி தெலுகு,மலையாளம் என மொழி எதுவானாலும் இசைக்கப்படும் இசைக்கும்
,இசை ஞானியின் எழில் கொஞ்சும் ஆர்மோனியத்தில் இருந்து வெளிப்படும் ஓசைக்கும்,
பெருமதிப்பு மிக்க பெரும் குடி மக்களின் முத்திரை பாசை(ஷை)க்கும் ,
இந்த கவிதை தளத்தில் பதிவாகும் ஒவ்வோர் கவிதைக்கும் , அதை படிக்க வருவோரின் ஆசைக்கும் ,
மட்டுமல்ல
வேறொரு தளத்திலிருந்து இந்த (FTC ) தளத்திற்கு தளம்மாரி தடம்மாறி வந்து, உன் குரல் கேட்டு தடுமாறி ,உன் தமிழ்,கவிதை,பாராட்டு,பரிசு போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு உன் நினைவுகளுக்குள் நீங்காமல் நிலைத்து நிற்க ஆசைபடும் , பேராசைப்படும் ஆசை(அஜீத்) க்கும் நீ அத்தியாவசியம் ...
அடுத்த தலைப்பு - ஆசை
-
ஆசைகள் அதிகமானால்
நம் ஆயுளே குறைந்து விடும் ..
நாம் ஆசைபடுவதெல்லாம் நடந்து விட்டால்
வாழ்கையில் ஆர்வமே குறைந்துவிடும்
அளவோடு ஆசைபட்டு
மன அழகோடு வாழ கற்றுக் கொள்வோமே ..
மன அழகு
-
மன அழுக்கு நிறைந்திர்க்கும் மானுடர்கள் மத்தியில்
மன அழகை தேடுவது ,மலைபோல குவிந்திருக்கும்
மணல் குவியலில் ஒரு சிட்டிகை சர்க்கரையை
கலந்து தேடுவதை போல கடினம் , இருந்தும்
மனதை பெறாமலே ,பார்க்காமலே சில மனதின் அழகை
அறிவது சாத்தியமே என புரிந்தது இங்கு...
அடுத்த தலைப்பு - சாத்தியம்
-
வாழ்வில் அன்பை செலுத்துவது சாத்தியம் ..
அன்பை பெறுவது அசாத்தியம் ..
இருந்து அசாத்தியமானதை
அடைவதில்தான் பேரின்பம்
பேரின்பம்
-
எங்கோ ஒரு மூலையில்
எங்கையோ ஒரு உள்ளம்
எதையோ நினைத்து கவிபாட
தேடி பிடித்து படிக்கையில்
உள்ளம் சிரித்து மகிழ்ந்து
பேரின்பமாகி
வார்த்தை வர மறுக்க
சூட்சம கவிதைக்கு
பதில் தர முடியாமல்
மௌனத்தை எனதாக்கி
மீண்டும் மீண்டும் படிக்கையில்
ஒவ்வொரு முறையும்
புதிதாகவே தோன்றுகிறாய்...
முடிக்க மனம் இல்லாமல்
படித்து தொடருகிறேன்....
தொடருவாய கவிதையை???
அடுத்த தலைப்பு
தொடருகிறேன்
-
தொடருகிறேன்
முடிவேதும் தெரியாமல்
முடிவேதும் தெரியாமல்
-
முடிவேதும் தெரியாமல் என்னோடு வந்த உன்னை ..
ஏன் மூசிக்கற்று முடியும் வரை பாதுகாப்பேன் ..
என் இதையத்தில் ..
என் இதையத்தில்
-
என் இதயத்தில் உன்னை சுமப்பதனால்தான்
என் கருவிழிகள் ஈரமாகின்றதோ ...?
கருவிழிகள்
-
கருவிழிகள் உன்னைக்கான
தவம் கொண்டு காத்துகிடக்க
எங்கே சென்றாய் நீ?
மின்னலாய் வந்து நீ செல்ல
வந்த தடம் தெரியாமல்
நொடியில் நீ மறைய
உன்னை தேடி என் நெஞ்சம்
இங்கே தனித்திருக்க
வந்து விடு
தேடல் பிடிக்கா உள்ளமது
தேடி கொண்டிருக்க
தவிக்க வைத்து விடாதே ;) ;) ;) ;)
அடுத்த தலைப்பு
மின்னலாய்
-
கண் முன்னே கன நேரம்
மின்னலாய் தோன்றிய தேவதை உன்னை
களவாட காத்திருக்கிறது என் மனது
அடுத்த தலைப்பு :
தேவதை
-
பொதுவாய் தேவதையை தேடித்தான் தவம் இருப்பார்கள் ,
தேவதையின் தரிசனமோ, குரல் வரமோ பெறுவதற்கு ,
மாறுதலாய், என் மனதுக்கு ஆறுதலாய்
ஒரு தேவதை என்னை தேடியதை கேள்வி பட்டதும்
கேட்கும் கானம் எல்லாம் தேவகானமாய் ,
பருகும் பானம் எல்லாம் தேவபானமாய் ,
வசிக்கும் லோகம் கூட தேவலோகமாய் தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை,
என் மனதை ஆளும் ஆளுமையே ,
என் தேவதையே !
அடுத்த தலைப்பு - ஆளுமை
-
உன் ஆளுமையே என்னை அவலத்தில் ஆழ்த்துகிறது ..
வளர் பிறையாய் இருந்த என்னை தேய் பிறையாய் மாற்றுகிறது ..
தேய் பிறை
-
தேய்பிறையாய் இருக்கும்
என் மனம் உன்னை கண்டதும்
முழு நிலவாய் மாறி
குளுமையில் நிறைய
சிறு கோபத்தை வெளிக்காட்டி
வெக்கத்தை மறைக்க முயல
என் முயற்சிக்கள் அனைத்தும்
தோல்வியில் முடிய
மௌனமாய் கடந்து போகிறேன்
மௌனமாய்
-
உன் மௌனத்தை கலைக்க
வழி தெரியாத போது..
வலியோடு
மௌனமாய் நானும் ...
வழி
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1110.photobucket.com%2Falbums%2Fh457%2Fspince1%2F91095.gif&hash=7ac750f243f2e83f54bd4fe47abe4b2156cd4c79)
நீ வரும் வழிஎல்லாம் பூக்களை தூவும் சாலையோர மரங்களுக்கு
என்ன தெரியும்...
நீ பூக்களை விட மென்மையானவள் என்று ..
உன் காலில் மிதி படும் பூக்களுக்கு மட்டுமே அது தெரியும்
தன்னால் தினமும் என்னவளின் பாதம் காயம் கொள்கிறது என்று...
காயம்
-
உடல் பட்ட காயம் ஆற
மருந்துண்டு இவ்வுலகில்
ஆனால்
உன்னால் காயம் பட்ட இதயத்திற்கு
மருந்துண்டோ ??
அடுத்த தலைப்பு:
மருந்து
-
விஞ்ஞானம் வளர்ந்து விட்டது அது எப்படி..!?
உன்னால் என் இதையத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து உண்டா..
தினமும் எனக்குள்ளே எரிகிறேன் நான் ஊமை குலைந்தையாய் ..
குழந்தை
-
தாயாகி பல ஆண்டுகள்
ஆனாலும்
என்றும் குழந்தை தான் நீ
எனக்கு
அடுத்த தலைப்பு:
தாய்
-
ஒவொரு துளி இரத்தத்தையும்
பாலாக ஊட்டியவள் .
துளி
-
அன்பிற்காக ஏங்கி இருந்த என் பாலைவன நெஞ்சில்
ஒரு துளி அன்பை விதைத்து பூஞ்சோலை ஆக்கியவள் நீ
என் பூஞ்சோலை மனதில் பூக்கும் அணைத்து பூக்களும் உனக்கே சமர்ப்பணம்
நீர் இன்றி அமையாது உலகு, நீ இன்றி முடியாது என் வாழ்வு
வாழ்வு
-
வாழ்வு வசப்படவில்லை
நீ இல்லாத பொழுதுகளில் ..
பொழுது
-
கனவுகள் பிறக்கும் இரவு
ஈசலை விட ஆயுள் குறைந்த
கனவைக் கொல்லும்
இனிய காலைப்பொழுது
மயங்கும் மாலைப்பொழுது
என முப்பொழுதும்
என் மூச்சுக்காற்றை
நீ
அடுத்த தலைப்பு:
கனவு
-
என் கனவுகளில் நீ வருவாய்
கண்ணே என்பாய்
ஆனால் நான்
கண்ணா சொல்வதற்குள்
காணாமல் போய்விடுகின்றாய்
கனவில் கூட அவசரம் உனக்கு ...
காணமல்
-
கவிதாயினி கவி தாயி நீ
என் தமிழார்வ சுடர் தூண்டும்
விந்தை கவிதை நீ
என் சித்தம் குளிரசெய்திடும்
சிந்தை சித்தம் நீ
மடி இருந்து இறங்கிவந்த
மொந்தை பால் சுத்தம் நீ
மடிநிரம்பா மங்கையின் மடியில் அழுதிடும்
குழந்தை சத்தம் நீ
இத்துனை கவிதை உனக்காக சொன்னபோதும்
இன்று வரை இந்த குருடன் காணாமல் தவம் இருக்கும் கனவு நீ ...
அடுத்த தலைப்பு - குருடன்
-
வெறும் கனவுகள் அல்ல வாழ்க்கை
இலட்சிய கனவுகள்தாம் வாழ்க்கை ..
என் இலட்சியம் கூட
கனவிலும் உன்னை காண்பதுதான்
ஆனால் கனவிலும் உன்னை
தேடுகின்றேன் ....
இன்றுவரை குருடாக ..
இப்பொது புரிகிறதா என் வாழ்க்கை ...?...?
வாழ்க்கை
-
வாழ்க்கை என்கிறாய் லட்சிய வாழ்க்கை என்கிறாய்
இந்த ஆசை குருடனின் ஆசையை தான் மறந்துவிட்டாய் ,மறைந்துவிட்டாய் என்று நினைத்தேன் ,நீயோ குருடனையே மறந்துவிட்டாய் , மறந்துவிட்டாயா? மறுத்து விட்டாயா?
அடுத்த தலைப்பு - குருடன்
-
உனதருகே ஒளி இருக்க
கண்ணை மூடி இருட்டுக்குள்
பயணித்து
குருடன் என சொல்வது முறையோ
கண் திருந்து பார்
உனக்கான வெளிச்சம்
உன் முன்னே
உனதருகே
-
ஒவொரு கணமும்
நெஞ்சம் ஏங்குது.
உனதருகே வாழந்து மடிய ..
வாழ்ந்து மடிய
-
வாழ்வதை பற்றி நான் வாழும் வரை பேசு ,
ஆசை தீர ஆசையோடு கேட்கின்றேன்
மடிவதைபற்றி முடிந்தவரை என் கதை முடிந்த பிறகு
நான் மடிந்த பிறகு பேசு
எனதருகில் நீயா? பஞ்சு மெத்தைக்கு பக்கத்தில் தீயா?
அப்படி ஒரு நிகழ்வு நொடி பொழுதேனும் நிகழ்ந்தால்
மறு கணமே மரணத்தை மண்டிபோட்டு ஏற்றுகொள்வேன்
எமனை வண்டி கட்டி வர சொல்வேன்
உன்னோடு வாழ்ந்துமடிந்த நொடி கணம் ஜென்ம சாபல்யம் என்றே !
அடுத்த தலைப்பு - ஜென்ம சாபல்யம்
-
ஒரு முறையாவது
உன் வாயால்
என்னை விரும்புவதாய் சொல்லிவிடு
அந்த கணமே என் ஜென்ம சாபல்யம்
ஒரு முறை
-
சொல்லவா ஒரு முறை
சொன்னால் போதுமா?
சொல்லில் அடங்கா
சொல்லை
சொல்ல நீ வினவ
சொல்லுக்குள் சொல் வைத்து
சொல்லாமல் மறைத்து
சொல்வது எல்லாம்
சொல்லாக மட்டுமே மாற
சொல்லவந்ததை
சொல்லாமல் செல்கிறேன் :D ;) :P ;) :P :D
சொல்லாமல்
-
உன்மேல் கொண்ட கோபமும்
உன்மேல் கொண்ட காதல் போல்
சொல்லாமல் கொள்ளாமல்
மௌனமாய் இருந்துவிடுகின்றது
கோபம்
-
சின்ன சின்ன
சில்மிஷங்கள்
செய்ய வரும்போது
செல்ல கோபம்
காட்ட வேண்டுமா
கனவில் கூட
அடுத்த தலைப்பு:
சில்மிஷம்
-
சில்மிஷம் ,கல்மிஷம் செய்ய சிறிதளவும் எண்ணம் இல்லை
சிந்தனை சிறையில் சிறைபிடித்து - என்னை
நிந்தனை செய்யும் என்ன்னம் கொண்டு
கல்விஷம் நிறைத்து கிண்ணத்தில் கொடுத்தாலும்
மறுநிமிஷமே பருகிடுவேன் என் கன்னத்தில் காதல் சின்னத்தை பதிப்பாயானால் ...
அடுத்த தலைப்பு - கன்னம்
-
பஞ்சு மெத்தையாய்
மழலையின் கன்னமிருக்க
கொஞ்ச மறந்து
கிள்ளிவிட
சிவந்த ரோஜா மலராய்
சிவக்க
அழுகை கூட அழகு தான்
மீண்டும் மழலை வரம் கேட்கும்
மனது
அடுத்த தலைப்பு
மீண்டும்
-
என் காதலை போன்று
நறுமணம் வீசி
படர்ந்து வளர்ந்து கொண்டு இருந்தது
என் வீட்டு மல்லிகை கோடி..
இன்று நீ தொட்டு பரிக்காததல்
வாடித்தான் போஹின்றது
என் இதயத்தை போன்று!!
எத்தனை குடம் தண்ணீர் ஊற்றி என்ன செய்ய…
நீ வந்து காதல் ஊற்றினால் மட்டுமே மீண்டும் மலரும்.!!
மலரும்
-
ஒவொரு தடவையும்
மலரும் என்று எதிர் பார்கின்றேன் ..
மொட்டகவே கருகிவுடுகிறது ...
என் காதலை போலவே ....
கருகிவிடுகின்றது
-
உருகி உருகி வரி சமைத்து ,
பெருகி வரும் கவி ரசிகர்கள் ருசிக்கவேண்டி
ஆசையாய், சற்றே பேராசையாய் சில வரி வரைந்ததாலோ
மனம் இறுகி,சில வரிகளில் என் மனம் திருகி ,வலி பெருகி
வலி அதிகமான இடத்திலே மீண்டும் " கிறுக்கல்கள் ' என் குத்தீட்டி சொருகி
லேசாய் கலங்கியும் இருக்கும் அருவியே ! தமிழ் குருவியே !
வருந்தாதே தனியாய் கருகும் உன் காதலை
தனியாய் விடாமல் துணை ஆக என் மனதும் கருகிவிடுகின்றது..
அடுத்த தலைப்பு - குருவியே
-
மனம் எனும் கூண்டில்
அடைபட்ட குருவியே ..
இன்னும் எத்தனை நாள்
உனக்கு சிறைவாசம் வாசம் ...
சுதந்திர காற்றை சுவாசிக்க ஆசையில்லையா
இல்லை மடிந்தாலும்
அவன் மனம் நாடி தேடி
மடிவேன் என்ற பிடிவாதமா ...
எதுவாய் இருந்தாலும்
இழப்பு உனக்கு மட்டும் தான் ...
இழப்பு
-
என் சிறைவாசம் அமைந்திருக்கும் சிறைகூடு
சுவாசிக்கும் சுவாசகூடல்லவா
சுதந்திரம் என்பது மனதை சார்ந்தது
மனதில் சுதந்திரம் நிறைந்திருக்கும்போது
தனியே சுதந்திரம் வெளியே தேடுவதில் உடன்பாடில்லை ,
ஆசை இல்லையா? ஆசைக்கே ஆசை இல்லையா ?
யார் சொன்னது ? ஆசையின் ஆசையை பட்டியல் இட்டால்
பல விடியல் கழிந்துவிடும் பட்டியல் படித்தும் முடியாமலே ..
அழைப்பு இல்லாதது பற்றி அலுத்துகொண்டிருக்கின்றேன்
இழப்பு அதைவிட வேறென்ன இருக்கபோகிறது ?
அடுத்த தலைப்பு - ஆசை
-
ஆசை அதிகமானால்
அவதிப்பட வேண்டுமாம்
அவதியின் வடிவில்
இன்று என் நண்பனை பார்க்கிறேன் ..
ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதீர்
அவலங்களே மிஞ்சும் வலைத்தளங்களில் .
வலைத்தளம்
-
வலைத்தளம் நவீன மாயஜால உலகம் ..!!
விரும்பியதை கண்முன்னே நிறுத்தும் இரண்டாம் கடவுள்
நம் அறிவை வளர்க்கும் நவீன சரஸ்வதி
நண்பணே உஷார் நீ எதை விரும்புகிரையோ அதை கொடுக்கும் பிரம்மன் இவன்
நல்ல வரத்தை மட்டும் கேல் நன்மையிலே முடியும்
மனிதன் படைத்த இந்த கடவுளை வைத்து அறிவை மட்டும் வளர்த்துகொள் அநாகரீகத்தை அல்ல
அநாகரீகம்
-
நாகரீகம் என்ற பெயரில்
கட்டவிக்கபட்ட அநாகரீகம் .
சமுதாய சீர்கேடாகி
சந்ததியை சீர் அளிக்க முன்னர்
சாட்டை அடி கொடுத்து
அதை சவக்குழியில் தள்ளுவோம் வாரீர்
சாட்டை
-
ஒவொரு வார்த்தைகளும்
சாட்டைகளானாலும்..
தானாக சிந்திக்கும் பக்குவம் இல்லையென்றால்
சமுதாயம் திருந்தாது ..
வார்த்தைகள்
-
உன் வரத்தை சிறையில்
என் இருதயம்
சிக்கி தவிக்கும் போது
எங்கிருந்து
வார்த்தைகள் பிரசவிக்கும் ...
பிரசவிக்கும்
-
என்னவென்றே தெரியவில்லை
எண்ணம் என்னவென்றும் புரியவில்லை
வழக்கமாய் வாசம் வீசும் வாச மலர்மொட்டு
ஏனோ வசை (திட்டு) வீசுது எனக்கு மட்டும் ?
என் வரிகளில் நேசம்தான் நிறைய நிறைத்து வைத்தேன் ,
பாசபூக்களை பறிச்சு வைத்தேன் ,
தூசு அளவும் வேசம் வெதைக்கலையே
இருந்தும் ஏனோ ஏசு ஏசு என ஏசுகிறது வாசமலர்? .
ஆசை ,ஆசை ஆசையாய் தானே ஆசைகளை சொன்னான்
ஓசை படாமல் ஆயிரம் ஆசைகள் தளம் முழுதும் தடம் பதிக்கும்பொழுது
அந்தோ பரிதாபம் ஆசையின் ஆசைக்கு மட்டும்
ஏன் விசேச பூசைகளோடு தடைபோடுவதாய் அடம்பிடிக்குது வாசமலர் .
ஒரு வேலை ரோசாவில் முள் இருப்பது இயற்கைதான் என்பதாலோ ?
உண்மையாய் தன் தன்மைக்கும் மாறாக மென்மையாய்
தன்மையாய் காயம்செய்தால் ரசிக்க மனம் இல்லாவிட்டாலும்
கள்ளி செடியின் முள்ளினையே அனுசரித்து தாங்குபவன் நான் .
அல்லி மல்லி முல்லை என மெல்லிய பூக்களுக்கெல்லாம்
தலைமை ஏற்கும் தகுதி கொண்ட பூவடி நீ ,
ஆசை ஆசையாய் ரோசாவை ரசிக்கும்பொழுது
முள்ளின் சிராய்ப்புகளையும் பொருட்படுத்தாது
வரிகள் பிரசவிக்கும் கவிதை காதலன் நான் .
அடுத்த தலைப்பு - கவிதை காதலன்
-
சேற்றில் இருந்தாலும்
செந்தாமரை அழகுதான்
முற்களுக்கு நடுவே இருப்பதால்
ரோஜாவின் குணம் முள்ளோ என
கருதி வெறுக்கலாமா??
கவிதைக்கு காதலனோ
கவிதையின் காதலனோ
கவிதையை நேசித்து
கவிபடைப்பதில்
வல்லவனோ
கவிதை படைத்திடு தினமும்
உன் கவிதைக்காக
பல விழிகள் காத்துகிடகின்றது
இங்கே ;) ;) ;)
-
சேற்றில் இருந்தாலும்
செந்தாமரை அழகுதான்..
தலை சாயாமல் இருக்கும் வரை
முற்களுக்கு நடுவே இருப்பதால்
ரோஜாவின் குணம் முள்ளோ என
கருதி நான் வெறுக்கவில்லை..
காற்று பலமாக வீசி உன்னுடைய
முற்களே உனக்கு பாதகமாக அமையுமோ என்று
பயம்கொல்கிறேன்..
கவிதைக்கு காதலியே ..!
கவிதையின் காதலியே ..!
நான் கவிபடைத்த கவிதையை
ரசிக்க வந்த அழகியே ..
என் கவிதைக்காக தினமும் பல
விழிகள் காத்துக்கிடந்தாலும் ..
உன் ஒரு விழி என் கவிதையை ரசித்தால்
என் கவிதை முழுமை பெரும் அல்லவே..
உனக்கேன் புரியவில்லை என் கவிதையை
ரசிக்கும் நீயே ஒரு கவிதை தான் என்று...!!
(இப்படிக்கு கவிதை) ;) :)
குறிப்பு: கவிதையை கவிதையாய் மட்டும் பாருங்கள்
வீறு எந்த உள்நோக்கமும் இல்லை.ஸ்ருதி தலைப்பை விட்டு
செல்லாததால் பதில் கவிதை கொடுக்க வீண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன்.
அடுத்த தலைப்பு கவிதை
-
கவிதை நான் எழுதியது இல்லை
என்னுள் காதல் தோன்றும்வரை
கவிதை தவிர வேறேதும் தோன்றவில்லை
கன்னி இவள் உண்மைக் கதை .
கதை
-
என் அம்மாவின் கதையால் நான் கற்றது பாசம்
என் தந்தையின் கதையால் நான் கற்றது விவேகம்
என் தாத்தாவின் கதையால் நான் கற்றது வீரம்..
இவை மூன்றும் செயலற்று போனது உன் முன்னே
மீண்டும் குழந்தையாகவே மாறி நின்றேன்
அனைத்தையும் மறந்து ..
என்னோடு காலம் முழுதும் வருவாயா..!
என் வாழ்கை துணையாக அல்ல என் வாழ்வின் அர்த்தமாக...
அர்த்தம்
-
எப்போது வருவாய்
எப்போது உணர்வாய்
என்றுதான் தருவாய்
உன்னை உன் இதயத்தை
அன்றுதான் என் வாழ்வும்
அர்த்தமாகும் ...
என்று தருவாய்
-
என்று தருவாய்
என் இதயத்தை ...
வேண்டாம் என்று மறுத்த பின்பும்
வீணாக ஏன் என் இதயம் உன்னிடம்
வீசிவிடு வெளியே ..
இதயம்
-
துடிக்கிறது என் இதயம்
உன்னால் துண்டாக்க பட்டும்
என் இறுதி முடிவை நீ
பார்க்க வருவாய் என்ற எதிர் பார்ப்புடன் ..
துடிக்கிறது
-
துண்டாக்கப்பட்டு ரெண்டாக்கப்பட்ட உன் இதையத்தை
ஒன்றோடு ஒன்றாக ஒன்றாக்கி - உள்
உண்டாக்கப்பட்ட வலியை மட்டும் ரெண்டாக்கி - மலர்
செண்டான உன் மனதின் வலி குறைக்க .
ரெண்டான வலியின் இரு பகுதியில்
ஒன்றான பெரும்பகுதியை தான் கொண்டு -உன்னை
கொண்டாடவைக்க துடிக்கிறது ஓர் வண்டு ..எனினும்
செண்டான உன்னிடம் இருந்து திட்டு வாங்கவேண்டிருக்குமோ என
திண்டாட்டமும் வண்டிற்கு நிறைய உண்டு.
அடுத்த தலைப்பு - வண்டு
-
வண்டாக நீ என்னை
முகர்ந்து போன பின்னும்
உன்னை கொண்டாடி மகிழ்றது
இந்த ரோஜா ...
ரோஜாக்கு தெரியாது ..
நீ வரமாட்டாய் என்று ..
அடுத்த மலர் ஒன்று
உனக்காய் தேன்சுமந்தபடி
காத்திருக்கும் ....
தேன்சுமந்து
-
நான் முகர்ந்து போனதாய்
பொய் குற்றம்சாட்டும் ரோசாவே
வான்சுமந்த வெண்ணிலவை
மேகம் விட்டுப்போனதாய்
குற்றச்சாட்டு ஏதும் கேள்விப்பட்டதுண்டா ?
தேன்சுமந்த மலர் காத்திருக்கலாம் ,இருந்தும்
தேன்சுமந்த பூக்களோடு ஒப்பிடப்படும் பூவா நீ
அல்லி மல்லி முல்லை என மெல்லிய பூக்களுக்கெல்லாம்
தலைமை ஏற்கும் தகுதி கொண்ட பூவடி நீ ,
தேன் திருடவந்த வண்டெனவா என்னை எண்ணிவிடாய் ?
உன் வலிதிருடி ,மனம் வருடி ,கொண்டாடவைக்க
திண்டாடி நிற்கும் வண்டடி நான் வாசமலரே !
சொல்லடி,கிண்டலடி,கேலியடி , மட்டும் இல்லை
குண்டடியே பட்டாலும் உன்வரவை வரவேற்கும் வண்டடி நான் ஆசைமலரே !
அடுத்த தலைப்பு - ஆசைமலர்
-
இசையை தேடி அலைந்த
"ஆசை"நெஞ்சம்
வண்டாக உருமாறி
மலர் தேடி அலைவதன் மர்மமென்ன??
இசைக்கு அர்பணித்த பாடல்கள்
இனி மலருக்கு ரீங்காரமாகுமோ??
ஏன் இந்த மாற்றம்??
இசை மௌனமானதாலா ??
இல்லை
மயக்கிய மலரின் மணமா?
இல்லை பூவின் மனமா??
அழகில் மயங்கி ரோஜா மலரை
ஆசைமலர் ஆக்க ஆசை கொண்டதோ ??
அடுத்த தலைப்பு :
மௌனம்
-
கலைகண்ணோடு பார்க்கவேண்டிய வரிகளை
கொலை கண்களோடு பார்த்துவிட்டு
தலை கால் புரியாமல் தலையில் செருப்பையும்
காலில் பூவையும் சுற்றிக்கொண்டு
தானும் குழம்பி மற்றவரையும் குழப்ப
முயற்சிக்கும் குழப்பத்தின் தலை பிறப்பே!
எதையும் தெளிவாய் புரிந்துகொள்ளாமல்
தலையாரிதனம் தேவையா தனவானே !
மௌனமாய் இருப்பதால் நிலவை வெறுத்ததாய்
வரலாறை கண்டதுண்டா ? இல்லை எப்படியும் வாடி
சருகாகி மருகததான் போகிறதென தெரிந்து ரோசாவை
ரசிக்காமல் போனதாய் ரகசியம் தான் உண்டா?
காணும் கண்ணோட்டத்தில் உண்டு கவிதையின் அழகும்
கவிதை படைக்கும் கவிஞனின் மனதும் !
அடுத்த தலைப்பு - கவிஞனின் மனம்
-
இரு கவிகளின் சர்ச்சையில்
கருகி போனது ரோஜாவின் கெளரவம்...
சொல்லாமல் சொல்லி விட்டார்கள் ..
கருகி போய்விடும் என்று ...
கவிஞனின் மனம்...
அதில் ரோஜாவுக்கு கருகும் அந்தஸ்த்தை கொடுத்த
ஆண்டவன் குற்றவாளியே ...
குற்றவாளியே
-
ஏதும் அறியாமல்
எண்ணுவதை புரியாமல்
ஏதேதோ பேசி
எல்லோரும் குழம்பி
ஏன் இந்த சர்ச்சை??
ஒரு நாளில் பூத்து கருகும்
பூவாக இருப்பினும்
சூடாத பூவையர் உண்டோ??
முற்களை கீரிடமாக கொண்டவள் நீ
உனக்கு ஏன் கௌரவ பிரச்சனை
கருகி போகும் மலர் எல்லாம்
துவண்டு போனால்
மலரை கொடுத்து மயக்கும்
மன்னவர்களின் நிலை அந்தோ பரிதாபம்
சூடாத பூவை
-
பூவை சூடாத பூவையரும் உண்டே
பிறந்தது தொட்டு
பூவை சூடிய பெண்ணும்
புகுந்தகம் போய்
கணவனை இழந்து
கைம் பெண் ஆனால்
பூவை சூடாத பூவை தானே .
பெண்
-
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே
என்று சொல்லிய கவிங்கனை பற்றி கேள்விபட்டுளேன்
ஆனால் இன்றுதான் ஒரு ரோஜா சொல்லி பார்கிறேன்..!!
அன்று கவிகன் சொன்னதில் தவறேதும் இல்லை
இன்று இந்த ரோஜா சொல்வதில் தவறென்ன என்பதை யாமறியேன்..
வால் சண்டை,குத்து சண்டை,சொல் சண்டை என கண்டு இருக்கிறேன் நான்..
இருபாலர் ஒருபாவயர்க்காக கவிதை சண்டை போடுவதை கண்டு வியக்கிறேன்..!
காரணம் ஏதும் தெரியாமல்..
முள்ளின் மேல் சேலை விழுந்தாலும் சேலையின் மேல் முள் விழுந்தாலும்
கிழிவது என்னமோ சேலை தான் ..
இது சேலைக்கு மட்டும் அல்ல ரோஜாவிற்கும் பொருந்தும் கவிஞரே..
செடியில் இருந்து பறிக்கும் ரோஜா கருகும்
தோட்டங்கள் சேர்ந்து செடியோடு அளிக்கும் ரோஜா கருகுமோ.. !
சிரிக்கும் ரோஜாவை பறிக்க நினைக்கும் அனைவரும் குற்றவாளியே
நினைக்கும்
-
அந்தோ புது கவியே
ரோஜாக்கு சண்டை இல்லை
கற்பனையில்தான் சண்டை
எல்லாம் நாம் நினைக்கும் நினைவுகள்தான்
நிங்கள் வேறு அல்லவா ...?
கவிங்கர்களுக்கு அழகே
கவிச்சமர்தானே ..
கவிச்சமர்
-
ரோஜாவே புது கவிகன் என்பதால் தான் புரியாமல் நின்றேன்
இருந்தும் புது கவிஞனின் கவித்துவம் எப்படி ..?
தங்களின் கவி சமர்தியர்திற்கு என்னுடைய கவியும்
கவிச்சமர் செய்கின்றதா..!
புதுகவிங்கன் நான் தவறேதும் இருந்தால் மன்னியும்..
புதுகவிங்கன்
-
புதுமைகள் படைப்பதுதான்
கவிங்கனுக்கு அழகு
புதிதாக இணைந்திருக்கும்
உங்கள் கவிதைகளின்
படைப்பும் புதுமையானவையே ...
என் கவிதைக்கு உன் கவி ஒன்றும்
சளைத்ததில்லை புதுக் கவிஞ்சனே ...
சளைத்ததில்லை
-
வரிவரியாய் உனக்கு வரிசமைத்து பதிவு செய்தேன்,
இருந்தும் ஒரு முறையும் சரிவர என் வரிகளை
சரியாக புரிந்துகொள்ளாமலே விரிவாக
அதுவும் விரைவாக பதில் வரையும் பனிமலரே
காஷ்மீரின் தனிமலரே !
" எப்படியும் வாடி
சருகாகி மருகததான் போகிறதென தெரிந்து ரோசாவை
ரசிக்காமல் போனதாய் ரகசியம் தான் உண்டா"
வரிகள் புரியாமல்தான் பதில்களை வாரி சொறிகிறாயா ?
இல்லை புரிந்தும் புரியமாலே எரிகிறாயா?
இருக்கட்டும் இப்போது சங்கதிக்கு வருவோம்,
தனவான் ரெமோ அக்கறையோடு சக்கரையாய்
இனிக்க இனிக்க ஒரு விமரிசனம் வினவினாரே
அதை வழிமொழிய விழைந்தாயா?
அல்லது பிழைதிருத்த விழைந்தாயா?
கவி வரைவதில் கவிஞ்சனாக நான்
சளைத்தேனா சளைத்ததில்லையோ தெரியவில்லை
ஆனால் அறிந்தவரை தெரிந்தவரை
குணத்தில் நான் சளைத்ததில்லை !
அடுத்த தலைப்பு - குணம்
-
மனம் கொண்ட மல்லிகை ஒரு நாள் வாழ்ந்து
பிறருக்கு மானும் தரும் பொழுது ..
மனிதனாய் குணம் கொண்டு நூறு வருடம்
வாழ பிறந்த நாம் ..
ஏன் பிறருக்கு மனிதத்தை தர மறுக்கிறோம்..!
மனிதம்
-
மனிதன் வாழ்கின்றான்
மனிதம்தான் எங்கே வாழ்கிறது தெரியவில்லை ...
வாழ்கிறது
-
நயம்பட உரைக்கும் ஒவ்வொரு கருத்துகளும்
நியாயமே இல்லாமல் கவனிக்கபடாத பொழுதும் ,
நம்பிக்கையின் நரம்பு நாளங்கள்,
பதில்பெற மறுக்கப்பட்டு நறுக்கப்பட்ட பொழுதும்
மனமும் எண்ணமும் வாடினாலும்
,நம்பிக்கை இன்னும்
உயிர்வாழ்கிறது
அடுத்த தலைப்பு - நம்பிக்கை
-
நம்பிக்கை மேல்
நம்பிக்கை வைக்க துணிவில்லை
நம்பியவர்கள்
நம்பிக்கை துரோகம் செய்து
நம்பிக்கை குறைய வைக்க
நம்பிக்கை கை நழுவி போக
நம்பிக்கையை இன்று கரம் பிடிக்க
நம்பிக்கையில்லை
கரம் பிடிக்க
-
கரம் பிடிக்க
மெது நடை பயின்று
மெதுவாக ஓடி
பட்டென்று விழுந்தேன் ...
மழலை பருவம்
மழலை பருவம்
-
மீண்டும் இன்னொரு ஜென்மம் வேண்டும்
நான் பேசும் மழலை கவியை ரசிக்கும்
என் தாயை நான் ரசிக்க..
ரசிக்க
-
என்னால் மட்டுமே முடிகிறது
எந்த மன கஷ்டத்திலும்
உன்னை ரசிக்க ..
என்னால்
-
முன்னால் , நீ இருந்ததும் இல்லை ,இருக்கவேண்டும் என எதிர்பார்த்ததும் இல்லை - இருந்தும்
உன்னால், எனக்கும் தமிழ் தடை இன்றி வரும், கற்பனை சிறகுகள் விரியும் என்று நினைத்ததில்லை
தன்னால் தடை இன்றி தமிழ் தவழ்கின்றது ,கவிதை மனம் கமழ்கின்றது
உன்னால் மட்டும் எப்படி சிந்தாமல் சிதறாமல் என் மனதை உதற முடிந்தது ?
என்னால் இதயத்தில் உதிரம் சிதறும் பொழுதும் கதற கூட முடியவில்லையே !
அடுத்த தலைப்பு - உதிரம்
-
உதிரம் சிந்தியும்
கதற முடியவில்லைஎன்றால்
காதலா....???
காதலில்தான் கீறாமல்
கிழிக்காமல் உதிரம் கொட்டும்
உணர்வும் மழுங்கும்
வாய் விட்டு அளவும் முடியாது
வரி கொண்டு வார்தையாடவும் முடியாது ,,
உணர்வும்
-
உணர்வுக்கு பெயர் தேடி பழகியதில்லை -என்
உணர்வும் பெயர் வேண்டி கோரிக்கை சம்ர்பித்ததில்லை
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைத்தே பழகியதால்
உள்ளதை சில சமயம் இழந்ததுண்டு ,நல்லதை இழந்ததில்லை
கனவுக்குள் நான் தரிசிக்கும் கவிதைக்கு மொழிசமைத்து கவியமைப்பேன்
என் கவிதைக்கு உயிர் தரும் உயிர்கவிதையை உயிராக உயர்வாக
நினைவுக்குள் நீங்காமல் நிலைத்து வைத்தேன். ஏனோ ?
என்னை தனிமை படுத்த நினைவு கொண்டாள்,
இனி தனித்து பேச முடியாதென்று முடிவு கொண்டாள்
இனிமையாக தான் பேசினேன் தெரிந்தவரை -என்னுள் ஏதும்
கடுமை கண்டீர்களா என்னை அறிந்தவரே !
அடுத்த தலைப்பு - அறிந்தவரே !
-
எல்லாம் அறிந்தவரே
அறிந்திருந்தும்
அறியாமையில்தான் பிதற்றுகின்றேரோ ...
அறியாமை
-
உன் நேசம் கண்டு
பாசம் வைத்து
பாசம் வைத்து
பிரிந்து புரிந்தேன்
அறியாமையால் உன் நட்பை
இழந்தேன்..
தோழியே வந்துவிடு
உன் நட்பை தந்து விடு
தந்து விடு
-
புரியாத பிரியம் பிரியும் பொழுது தான் புரியும் ..
இன்று புரிந்த பிரியத்தின் பரிவினை பெறுவாய் வருந்தாதே !
புரிதலின் பின் பிரிதலும், பிரிதலின் பின் பெரும் வலியையும்
புரிந்தவன், அறிந்தவன் கேட்கின்றேன்
வந்துவிடு வேண்டுவதை தந்துவிடு..
அடுத்த தலைப்பு - கேட்கின்றேன்
-
கேட்பதெல்லாம் கிடைக்கும் என்றால் ...
நானும் கேட்கின்றேன்
அடுத்த உலக அழகியாக
நான் வர வேண்டும் ..
உலக அழகி
-
உலகிலேயே அழகி நீமட்டும் தான் என்று
நினைத்த என்னை..
தன் மழைதுலியால் நினைவூட்டியது
மழை மேகம்..
மேல் நிமிர்ந்து பார் இங்கும் அவளின் ராஜ்யமே
இந்த உலக அழகியை காண இரவில் நச்சத்திரங்களும்
பகலில் சூரியனும் என்னை விரட்டி அடிக்கின்றன அவளின் அழகை காண..
என்றது மழை ...!
மழை
-
இதயத்தில் வலி
கண்களில் மழை
கண்களில்
-
இதயத்தின் வலிகளை
இழக்க ...
கண்களில் கண்ணீர் ..
வலி நிவாரினியோ...??
வலி நிவாரினி
-
மனம் துக்க படும் போதெலாம்
உன்னை பார்த்து செல்கிறேன்
மனதின் வலியை
நீக்கும் வலிநீவாரிணி நீ
மனதோடு வலியை
மறக்க வை
மறக்க வை
-
மறக்க வை
உன் மீது நான் கொண்ட பாசம்
உன் மீது நான் கொண்ட நேசம்
உன் மீது நான் கொண்ட மோகம் ...
இல்லையேல் என்னை மரிக்க வை ...
மரிக்க வை
-
தேறா காரணத்தை கூறி
என்னை பாராமுகமாய் தவிக்கவிட்டு
ஓராயிரம் முறை உன்னை நினைக்கசெய்து
ஆறா ரணத்தை பரிசாய் அளித்து
உன் நினைவில் என் மனதை
துகள் துகளாய் தெரிக்கவைத்தவளே !
இருந்தும் உன்ஆசை தீரவில்லை என்றால்
நேராக வந்து என் உயிரை மரிக்க வை
அடுத்த தலைப்பு - உயிரே
-
உயிரே
உருகுவது என் இதயம் மட்டுமல்ல
உன் நினைவுக் கத்தியினால்
சல்லடை ஆக்கபட்ட
இதயத்தை தாங்கும்
என் உயிரும்தான் ...
உருகுவேன்
-
இரும்பாய் உன் இருதயம் இருக்க
கரும்பாய் இனித்திடும் வார்த்தைகள்
நீ உதிர்க்க
குறும்பாய் நீ பார்த்திடும் பார்வையில்
உருகுவேன் நான் ;) ;) ;) ;)
-
தலைப்பை விட்டுசெல்ல
மறந்த தலைப்பூவே (தலைசிறந்தபூவே) !
ஒரு நாளேனும் உன்
தலைபூவாய் இருந்திட
அருந்தவம் புரியும்
உலகபூவெல்லாம்
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிகாமணியை
விஞ்சிடும் வகையில் ஆயிரம் இதயம் குளிர
தளத்தில் ஆயிரம் கவிதைகளை கடந்து
தடம் பதித்த சுடர்மணியே !
உன் தலை பூவை தருவாயோ இல்லையோ
இதோ ,உனக்காக தலைப்பை நான் தருகிறேன்
அடுத்த தலைப்பு - தலை பூ
-
என் வாழ்க்கை உன் கையில்
என் கல்லறை வாசம் உன் சொல்லில்
பூவா தலையா போட்டு முடிவு பண்ணாதே ..
பூ எடுத்து பூவைக்கு தா
அதுதான் எனக்கு தலை பூ
பூவா தலையா
-
பூவா தலையா போட்டு
காதலை தேர்ந்தெடுத்து
காதலை உனக்கு சொல்ல
விளையாட்டு பொருளாய் போனதோ
என் காதல்
பூவாய் நீ வந்துவிடு
தலையில் சூடிக் கொள்வேன்
காதலை நீ தந்துவிடு
காலமெல்லாம் காத்திருப்பேன் ;) ;) ;) ;)
காலமெல்லாம்
-
எனக்காக நீ
என்பதை சொல்லிவிடு
காத்திருப்பேன் காலம் எல்லாம்
உனக்காக ...
சொல்லிவிடு
-
ஒவ்வொரு நொடியும்
உன்னுள் மாற்றம்
புரியாமல் நான்
சொல்லிவிடு
புரியாமல் தவிக்கும்
என் மனதிற்கு
சொல்லிவிடு
உன்னை மறப்பது
எப்படி என்று
சொல்லிவிடு
சொல்லிவிடு
-
கவிதையிலே கனல் மூட்டி போறவளே !
மௌனத்திலே அதை அணைக்க சொன்னவளே
பெண்ணே, என் சொல்லெல்லாம் முள் ஆனதே
ஐயோ , என் சுவாசமும் சூடானதே
என் இதயமே இடம் மாறி துடிக்காதே
என் விழியே கண்ணீரை வடிக்காதே
என் இதயமே இடம் மாறி துடிக்காதே
என் விழியே கண்ணீரை வடிக்காதே
பெண்ணே பொய் என்பது மெய் ஆகினால் ,ஐயோ
மெய் என்பது என்னாகுமோ ?
பொய் புரிதல் நிலையாகுமோ ? சொல்லி விடு
அடுத்த தலைப்பு - புரிதல்
-
புரிதலில் தவறென்று
புறம் சொன்னவர் தாம்
இன்றும் புலம்புகின்றார்
இதன் பெயர் என்னவோ
புலம்பல்
-
வளமை நிறைந்த தமிழ் பற்று கொண்ட
ஒருவனின் புலமையை புலம்பல் என
பிழையாக புரிந்துகொண்டு புலம்பும் ஏந்திழையே !
ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் "புன்னகையில் தீமூட்டி "
பாடலின் வரிமாற்றம் தான் நான் பதிவு செய்த அந்த
கவிஏற்றம் .
உன்னை குறைகூறுவதாய் என்ன வேண்டாம் தையலே !
குருட்டு குற்றச்சாட்டு புரியும் திருட்டு புரட்டர்களின்
புரட்டு பேச்சுக்கள் பொருட்டு நீ கொண்ட மையலே (மயக்கம்)
உன்னை இப்படி என்னை எண்ண தோன்றியதோ ?
அடுத்ததலைப்பு - ஏந்திழையே !
-
என்று வருவாய்
எண்ணங்களில் சிறகடிப்பவனே..
ஏந்திழையே என்றழைத்து
எண்ணற்ற முத்தங்கள் பகிர
முத்தங்கள்
-
எப்போதாவது
நீ தருகின்ற முத்தங்கள்
ஒவ்வொன்றும்
தித்திக்க
நித்தம் பெற வேண்டி
காத்திருக்கிறேன்
முற்றுபெறா ஏக்கத்தை
தீர்க்க என்னவனே
வந்துவிடு
உன் முத்தமொழிகள்
தேடி என் உதடுகள்
உலர்ந்து போய்
காத்திருகின்றது :P ;) :P
முற்றுபெறா
-
வயது முற்றி
வாழ்க்கை முற்றுப்பெற்றாலும்
முற்றுப்பெறாமல் வாழட்டும்
நம் காதல்
அடுத்த தலைப்பு : வயது
-
வயது கடந்தாலும்
வாழ்வு பிறந்தாலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
முதுமையிலும் நரைகளாய்...காதல் .
முதுமை
-
காமம் கலவா காதல்
கிடைக்கும் முதுமையும்
வரம் தான்.
அடுத்த தலைப்பு: காமம்
-
ஓசையில்லா இசை
ஆசையில்லா மனம்
குளிரில்லா நிலவு
நிலவில்லா வானம்
அலையில்லா கடல்
அசைவில்லா ஆடல்
சுரமில்லா பாடல்
வரம்பில்லா ஊடல்
காதலில்லா கூடல்
காமம் இல்லா காதல்
அனைத்துமே குறைபாடு நிறைந்த முரண்பாடுகள் !
அடுத்த தலைப்பு - முரண்பாடு
-
உன்னை நான் புரிதலில் இல்லாதது
என்னை நீ புரிதலில் தெரிகிறது
முரண்பாடு ....
புரிதல்
-
புரிதலில் புரியா முரண்பாடு
தெரிவதாய் கூறும் குயில்பேடு
புரிவதாய் கூறிய முரண்பாடு
சிறியதா பெரியதா பதில் போடு
மனிதனே முரண்பாட்டின் மூட்டைதான் ,
உன் கூற்றில் உண்மை உண்டானால்
கவனிக்க நான் விட்ட கோட்டைதான் .
அடுத்த தலைப்பு - கவனம்
-
என் கவனம் எல்லாம்
என் காதலில்
அதனால்தான் உன்னை
நான் கோட்டை விட்டுவிட்டேன் ...
இன்று நீ இன்னொருத்தியின்
இதய ராஜன் ...
கோட்டை
-
அடகடவுளே !
வழக்கமாய் திரைப்பாடலை வரிமாற்றம் புரிந்து
பதிவேற்றம் புரியும் நான்
இன்று ஒருநாள் முதன்முறையாய்
ஒரு திரைப்பாடலை அப்படியே அடிகோடிடுகிறேன்
" ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ "
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
கல்லுக்குள் ஈரமில்லை நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை அனுபவிக்க யோகமில்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை "
ஒட்டடை கூட அடிக்கத ஓட்டை ஓட்டு வீட்டில்
இருக்கின்றேன் காதல் கோட்டை க்கு ராசா என்கிறாயே ரோசா "
அடுத்த தலைப்பு - மீண்டும் முரண்பாடு
-
என்னை நேசிக்கின்றாயா..
ஆம் ....
காதலை சொல்
சொல்கின்றேன் இன்றல்ல
மீண்டும் முரண்பாடு
முழுதாய் என்னை ஊமையாக்குகின்றது
ஊமை
-
ஓய்வில்லாமல் உழைக்கும்
என் நா கூட
உன்னை பார்த்ததும்
ஓய்வெடுத்து ஊமையாவதேன் ??
அடுத்த தலைப்பு : ஓய்வு
-
என் இதயம்
ஓய்வு பெற துடிக்குது
நீ இல்லாத பொழுதுகளில்
துடிக்குது
-
" கவிதை மழை பொழிகிறது
ஒவ்வொரு வரியிலும் உன் எழில் மிளிர்கிறது
கவிதை மழை பொழிகிறது
ஒவ்வொரு வரியிலும் உன் எழில் மிளிர்கிறது
மிட்டாய் நாட்டினது சுந்தரியே
FTC சாட்டுக்கு (முதல்) மந்திரியே
"ராஜ பார்வை "திரைபடத்தின் அந்தி மழை பொழிகிறது
திரைபாடலின் வரிமாற்றமே இந்த பதிவேற்றம்
இந்த பாடல் ஒரு தனிப்பட்ட நபரை கருத்தில் நிறுத்தி
திட்டமிட்டு தெரிவிக்கும் வரிகளே என்பதை
திட்டவட்டாமாய் தெரிவிக்கின்றேன்
அடிப்படையில் முழுதாய் வரிமாற்றம் புரியத்தான்
விரும்பினேன் , விரும்புகிறேன் ,மனமும் துடிக்குது - இருந்தும்
வெட்டி வழக்கறிஞர் பலர் வழக்குதொடுத்து
வழ வழவென கொழ கொழ வென வழக்காட வருவாறேவென
வரையறை இட்டுக்கொள் என எதுவோ தடுக்குது .
அடுத்த தலைப்பு - தடுக்குது
-
என்ன தடுகிறது
உனக்கு என் மேலான
அன்பினை சொல்ல
பெண் மனம் மட்டுமல்ல
நான் கண்ட உன் மனமும்
ஆழம் தான் ...
ஆழம்
-
என் மனம் ஆழமா ?
என் மனதை நீ கண்டாயா?
கண்டிருக்கமாட்டாய் , கண்டிருந்தால்
ஆழம் என்று சொல்லிருக்கமாடாய்
ஆழம் அளந்த தாழம்பூவே !
நீ கண்ட ஆழத்தின் அளவென்ன
கூறமுடியுமா?
ஐந்து அகவை குழந்தை கூட
அழகாய் தடம் பதித்து , இடம் பிடித்து
இடம் பிடித்துக்கொள்ள பிரியப்படும்
அத்தகும், அகல்விளக்கின் ஆழம் கூட
இல்லாத என் மனதை ஆழம்
என கூறும் ஆழ்மனதின் ஆளுமையே !
அடுத்த தலைப்பு - ஆளுமையே
-
நான் வினா தொடுத்தது
என் மனம் கவர் நாயகனிடமே அன்றி
தங்கள் மனதினை அறியவல்ல ....!!
என் மொத்த ஆளுமையின்
முடி சூடா மன்னவன் அவன்
அவன் ஆளுமை
சொல்லவே வார்த்தையில்லை ..
முடிசூடா
-
முடிசூடா மன்னவன் உன்னவன்
என்று , கன்னமும், வண்ணமும் இன்னமும்
சிவந்திருக்க சொல்லும் தேன் கிண்ணமே !
முன்னமே சொல்லிருக்கேன் ,
என் வரிகளை வெறும்
வரிகளாய் பார் என அன்னமே !
நான் அறிவேன்
நீ கடல் கடந்து மின்னும் காவிய சின்னமே !
முடவன் நான் , வீணாக
கொம்புதேனுக்கு ஆசைபடமாட்டேன்
வருத்தமில்லை , திருத்திகொள் உன் எண்ணமே !
அடுத்த தலைப்பு - முடவன்
-
முடவனின் காதல்
முற்றுப் பெறா
முழுமை அடையா
முதிர்ச்சி அடையா
காதலோ...
காதல் மலர் தொடுத்து
கைகளில் ஏந்தி
கன்னி அவள் காத்திருப்பதை
அறிந்தும் அறியாத மூடனோ..
பிழை செய்த காதல்
பிழைக்காமல் போக
பிழைதிருத்தம் கொள்ள
காதல் பாடம்
கைகூடவில்லையோ...
கைகூடவில்லை ;) ;) ;) ;)
-
கை நழுவி போனபின்
கை கூடுமோ கூடாதோ
ஆராய்ச்சி செய்வதில் அர்த்தமில்லை
அமைதியை காப்பதில் தப்பும் இல்லை
கை நழுவி போனபின்
கை கூடவில்லை என்பதில்
கண்களில் நீர்தொல்லை ..
தொல்லை
-
ஐயகோ !
இது என்ன கொடுமை ?
கைகூடியதா?
கைகூடவில்லையா ?
கை நழுவிப்போனதா?
நான் இந்த தீர்மானத்தையே கொண்டுவரவில்லையே ?
அதற்குள் தீர்மானமே செய்துவிட்டாயா தூவானமே !
கட்டம் கட்டி , வட்டம் இட்டிட திட்டம் தீட்டியதில்லை
இருந்தும் இட்டுக்கட்டி,வெட்டி வெட்டி
கண்களில் எதற்கு நீர்தொல்லை ?
ஒன்றுமே புரியவில்லை !
அடுத்த தலைப்பு - புரியவில்லை
-
புரிதல் என்பது முழுமையானால்
தோல்விக்கே இடமில்லை
உன்னை எனக்கு புரியவில்லை
இருந்தும் என் அன்புக்கு
தோல்வியில்லை ...
தோல்வியில்லை
-
வெற்றி, தோல்வி பெற்றிட அன்பு ஒன்றும்
போட்டியோ தேர்வோ இல்லை
அது ஒரு அற்புதமான உணர்வு
உணர்வின் வெளிப்பாடு
அன்புக்கு தோல்வி இல்லை என்கிறாய்
தோல்வி மட்டுமில்லை தோழியே !
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்லை
அடுத்த தலைப்பு - அன்பு
-
அன்புக்கு அடைக்கும் தாள் இல்லைதான்
இருந்திருந்தால்
இத்துணை வலியும் இருந்திருக்காதே ..
வலி
-
வலி
எனக்கு வலியின் மீது உடன்பாடில்லை
சில காலம் முன்புவரை
"வாழ்கை வலி நிறைந்தது "
வாழ்க்கைபயணத்தில் திக்கற்றவர் திக்குமுக்காடி
தன் அனுபவத்தை திணிக்க முனைந்து
புனைந்த தத்துவம் இது .
என்னை கேட்டால் " வாழ்கை வழி நிறைந்தது "
வாழ்கை பயணம்" நம்பிக்கை "எனும் சீரான சரியான
பாதையில் இருக்கும்வரை
திக்கும் உண்டு திசையும் உண்டு .
அடுத்த தலைப்பு - நம்பிக்கை
-
வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்
ஒரு நாள் ....
இல்லை ஒரு நிமிடமாவது
உன் சுவாசத்தை சுவாசிப்பேன்
என்ற நம்பிக்கையில்
சுவாசம்
-
சுவாசம் தனிப்பட்ட ஒன்று என்றாலும்
சுவாசிக்கபடும் காற்றோ பொதுவான ஒன்று
ஒருவர் சுவாசத்தை மற்றவர் சுவாசிப்பது
சாத்தியமே ஆகையால் , நானும்
வாழ்கின்றேன் ஒரு நாள் இல்லை
ஒரு நிமிடமாவது உன் இதயத்தில்
வசிப்பேன் என்ற நம்பிக்கையில் .
அடுத்த தலைப்பு - வசம்
-
உன்னிடம் என் இதயம்
என் வசம் நீ..
நான் நானாக வேண்டும்
என்னை வந்து நீ காணும் நாள்
எப்போது??
உன் வசம் நான் ஆவது எப்போது
எப்போது
-
இனியவளே !
உனக்கு வரன் ஆகும் வாய்ப்பு
கிட்டாவிட்டாலும் உன் இதயத்திற்கு
அரண் ஆகும் பாக்கியம் போதும் .
எப்போது என் அன்பின் ,
ஆசையின் அரவணைப்பு போதாது
என் தோன்றுதோ அன்றே சொல்
உன் இதயத்தை உன்னிடமே
ஒப்படைத்து உயிர் பிரிந்து செல்கிறேன்
உன் இதயம் பிரியும் துயர் தாளாது !
அடுத்த தலைப்பு - துயர்
-
துயரில் நெஞ்சம்
கண்ணீரில் நனைய
வலியோடு
விடை பெறும்நாள்
விரைவில்
விரைவில்
-
விரைவில் எனை
விரல் மீட்டிவிடு
இலையேல் ..
விரகத்தில் நான்
வித்தாகி போய்விடுவேன் ...
விரகம்
-
என் கவித்திறனால் நான் ஈட்டிய பெரும் சொத்தே !
நீ வித்தாவதில் எனக்கு உடன்பாடுதான் முத்தே !
இருந்தும், விரகம் ஒரு வகை நரகம் ஆயிற்றே
கவலைகொள்ளதே ! இதோ உனை மீட்டி
விரக நரகத்தில் இருந்து மீட்டிடதான்
வீற்றிருக்கிறேன் வீணையே !
அடுத்த் தலைப்பு - வீணையே
-
என்றும் என் இனியவனே
என்றும் உனக்காக
நான் ....
இசை பாடும் வீணையே
இசைபாடும்
-
ஆசையின் ஆசையை , பசுவின் அசை போல
ஆசையே, லேசாய் பேச ,அதே ஆசையை
ஆசை ஆசையாய் நல் ஓசையோடே
கவி இசைபாடும் கவி குயில் பேடே
" இசைபாடும் " இத்தலைப்பை கண்ட மறுகணமே
பதில் போட தயாரானது என் சிறு கவி மனமே
இருந்தும் வேண்டுமென்றே தான் தாமதித்தேன்
காரணம் தேடி குழம்ப வேண்டாம் தேன் குழம்பே !
"இசை" பாடும் என்று என்னிடம் இருந்து பதிவுவந்தால்
ஐயகோ !
ஆசைக்கும், இசைக்கும் ஏதோ விசை உண்டென்று
திக்கு திசை தெரியாமல் பசை போட்டு ஒட்டி
வசைபாடும் உயர் கயவர் கூட்டம் ஒன்று உண்டு
வெறும் வாயையே மெல்லும் வரம் வாங்கி வந்த தவில் வாயற்கு
அசைபோட தேன் அவிலை தருவானேன் ?
அடுத்த தலைப்பு - தருவானேன்
-
உன்னை நினைக்கும்
உள்ளமதில்
உன் நினைவுகள் மட்டும்
வேதனைகளை தருவானேன் ...
நினைவுகள்
-
உன்னை அறியாமல்
எனக்கு நீ
விட்டு சென்றது
உன் நினைவுகள் தான்
முள்ளாய் குத்தும்
நினைவுகள் கூட
உன் முகம் பார்த்தபின்
பூவாய் மாறுவது ஏனோ
மாறுவது ஏனோ
-
அமைதியாய்
அலுங்காமல்
ஒரே வேகத்தில் துடிக்கும் என் இதயம்
உன்னை கண்டதும்
ஓராயிரம் முறை துடிக்க தவிக்குறதே ..
இப்படி மாறுவது ஏனோ
இதுதான் காதலா ....?
இதுதான் காதலா
-
நினைவுகள் பெருவாரியான பொழுதுகளில்
நிஜத்தை விஞ்சிவிடுகின்றது ,
தரும் இனிமைதனின் அளவினில்.
நிஜம் தரும் இனிமையோ சில நொடிகளில்
நினைவுகள் தரும் இனிமையோ
நாம் நாடும் போதெல்லாம்
இனிமை சுகம் தேடும்போதெல்லாம்
( உன் )நினைவுகளை நீக்கி பார்த்தால்(என்) கவிதை கடல்
கடலில் இருந்து மருவி
சிறு ஓடையாய் தான் வீற்றிருக்கும்.
இது தான் காதலோ?
-
தினம் உன்னை தேடி
திக்குகள் எல்லாம்
என் நினைவு குதிரைகளை
முடக்கி விடுகின்றேன் ...
திசைஎட்டும் தேடியும்
உன்னை காணாத சலிப்பிலும்
கண் அயர மறுக்கின்றன ..
இதுதான் காதலா ...?
நினைவு குதிரைகளை
-
வழிபார்த்து ,விழிபூத்து,
எதிர்பார்த்து ,மனம்வேர்த்து காத்திருந்தேன்
நினைவு குதிரை மீதேறி, என் கனவுராணி
உன் கவிதை ஊர்வலம் காண்பதற்கே.
தளம் எங்கும் இடம்பிடித்த
உன் தடம் கண்டுணர்ந்தேன்
இரு நாளும் உன் வரவு தவறவில்லை ,
வந்தும், கிறுக்கன் இவன் கிறுக்கல்களுக்கு
பதில் ஏனோ தரவில்லை ?
உன் நினைவு குதிரைகளின் தடம் காணாமல்
என் கற்பனைகுதிரைகள் முடம் ஆனதரிவாயோ?
அடுத்த தலைப்பு - கற்பனைகுதிரைகள்
-
என் கற்பனை குதிரைகள்
தடம் பதிக்க
தாங்கள் கற்பனை வித்தாம்
தலைப்பை தரவில்லையே ....
இருநாட்கள் நானும் வலம்வந்து
இறுதியில் ஒன்றை
இயல்பாய் களம் பதித்தேன்
களம் பதித்தேன்
-
வரி திரித்தும் ,மெய் வழிமறித்தும்
என் குணம் கரித்தும், பொய் குழி பறித்தும்
என் மனம் எரிதிட்டனர் சில கருங்காலிகள்
அக்கருங்காலிகளின் கடும் சொற்களால்
ரணம் ஆன என் மனம் தன்னை
குணம் ஆக்கிட அனுதினமும்
கவி இறகினால் மனம் வருடும்
வரிகள்பதித்து மனம் திருடும்
மன திருடியே ! என் அருந்தோழியே !
உன் மனம் திருடி ,தினம் வருடிட
தரமிருந்தும் திறம் இல்லாததால்
உன் வரி வருடி தளம் தனில்
களம் பதிதேன், கவிகுலமே !
குளிர் கவி குளமே!
அடுத்த தலைப்பு - கவிகுலமே
-
கவி குலமே என்று விளித்து
கவிபாடும் உங்கள் அளவு திறமை
எனக்கில்லை தோழரே ...
இருந்தும் உங்கள்
கவிமழையின் முன்
நான் ஒரு சாரல்
சாரல்
-
கவிமழை நான் என்றும்
வெறும் சாரல் நீ என்றும்
உளறும் உளறலை
ஊக்குவிக்கபோவதில்லை நான் .
உன் உளறல்படி நான் கவிமழை என்றால்
மழையின் அழகும் ஆளுமையும் குறிபிட்ட காலமே
என்பதை ஒப்புகொள்வாயா சாரலே?
சாரலின் அழகை நான் சொல்லவேண்டியில்லை
சாரலின் ஆளுமை நான் அறிந்தவரை சொல்கிறேன்
இனிமையும் ,குளிர்மையும் , அழகையும்
அள்ளி தருவதே சாரல் .,உதாரணம் வேண்டுமா ?
கவி சாரல்.தேன் சாரல் .மழை சாரல்.
இன்பச்சாரல் ,முத்துசாரல் ,மழலை வாய் வடியும் உமிழ் சாரல்
இப்படி சாரலின் ஆளுமையை எண்ணிலடக்க முடியுமா?
அடுத்த தலைப்பு - முடியுமா?
-
முடியவில்லை
சாரலின் புகழ் கேட்டு
சத்தமாகவே சிரித்து விட்டேன்
உங்களுடன் போட்டியா...?
கவி காளமேகம் நீங்கள்
முடியுமா என்னால்
முன்னால் நிற்க ...?
போட்டியா
-
போட்டியா ?
பூவோடு, நார் (நான்) போட்டியா?
தேனோடு கஷாயம் போட்டியா ?
கடலோடு குட்டை போட்டியா?
பட்டுபுடவையோடு கிழிந்த சட்டை போட்டியா?
காளமேகம் நான் என்றாய் , நீல மேகம் நீ .
ஒன்றில் மட்டும் உன் கருத்தில் உடன்படுகின்றேன்
முடியுமா என்னால்
முன்னால் நிற்க ...?
முடியவே முடியாது ,
கண்ணாடி முன்னாடி நீ நின்றால்
உள்ளிருக்கும் பாதரசமே
தயாராய் இறக்கும்
உன் பாதம் தொட
முன்னிருந்து நகரவேண்டாம் என்று !
அடுத்த தலைப்பு - நகரவேண்டாம்
-
அயஹோ நகர வேண்டாம்
நான் ஒன்று சொல்லவேண்டும்
நான் ஒன்றும் அழகியல்ல
பாதரசமும் பாதம் பணிய
சாதரணமான ரோஜா
அன்று பூத்து
அடுத்த நாளே வாடும்
அன்றலர்ந்த பூதான்.
அன்றலர்ந்த
-
அன்றலர்ந்த பூவா ?
நன்று மலர்ந்த பூ நீ !
அழகை முகத்தில் , தேகத்தில் பாராமல்
அகத்தில் பார்ப்பவன் நான்
ஆகையால் தான் என்னவோ இப்படி
என்னை பொறுத்தவரை அழகு
காணும் கண்ணோட்டத்தில் உள்ளது .
" காக்கைக்கும் தன் குஞ்சு ,பொன் குஞ்சு "
அடுத்த தலைப்பு - கண்ணோட்டம்
-
ஒவ்வொரு தடவையும்
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நீ எனக்கு புதிராகவே உள்ளாய் ...
காரணம் ஏனோ ..?
உன் மேல் தப்பா
இல்லை என் கண்ணோட்டத்தில் தவறா ...?
தவறு
-
உண்மைக்கும் ,தன்மைக்கும் ,இனிமைக்கும்
எதிராக நான் இல்லையே ?
வெறும் புதிராகத்தானே உள்ளேன்?
உன் கண்ணோட்டத்திலும்
என்னை பற்றின எண்ண ஓட்டத்திலும்
தவறிருக்கலாம் ,தவறி செய்வது தானே தவறு
என் மீது தப்பிருக்க சத்தியமாய் சாத்தியம் குறைவு
தெரிந்து நான் எந்த தவறும் செய்ததில்லை
செய்வதுமில்லை !
அடுத்த தலைப்பு - செய்ததில்லை
-
உன்னை கண்ட பின்
இன்றுவரை செய்ததில்லை
இன்னுமொருமுறை தவறை ...
காதல் எனும் தவறை ...
இன்றுவரை
-
உன் காதலை தவமின்றி கிடைத்த
வரமாக நான் கருதி சிலாகிக்கிறேன்
வரமின்றி தவறென்றே தவறாமல் தவறாக
தவறான கருத்தையே நீ சிநேகிக்கிறாய் .
அடுத்த தலைப்பு - சிநேகிக்கின்றாய்
-
உன் கவிதையின்
ஒவ்வொரு வரிகளையும்
சிநேகமாய் சிநேகிக்கின்றேன்
உன்னுள் ஒரு கவிஞன்
உன்னை ஆளுவது கண்டு வியக்கின்றேன் ...
உன்னுள்
-
உன்னுள் இருக்கும் இனிமை முழுதும்
என்னுள் இருக்கும் கவித்திறனை
வெளிக்கொணரும் திறன் இருக்கு
அத்திறன் தான் கவிதையை
வெளிவரவைக்குது
அடுத்து தலைப்பு - திறன்
-
ஒவ்வொரு வரியிலும்
இனிமை சொட்டும்
இயல்பான கவி
உவமான உவமேயங்கள்
படிக்கும் போதே
பரவசம் கொளிக்றேன் நண்பனே ...
உன் கவித்திறன் கண்டு
சிறிது பொறாமையும் கொள்கிறேன் ...
பொறாமை
-
கருமை கொண்ட கண்மை
பெறாமையால் தானோ ?
வீணாக பொறாமை கொள்கிறாய் ?
கடல் நீரின் நீலம் முழுதையும்
கருமையாய் மாற்றி
தருகிறேன், பெருவாயா ?
கண்களுக்கு மையிட்டுகொள்ள .
அடுத்த தலைப்பு - மையிட்டுகொள்ள
-
மையிட்டு கொள்ள
மனதோடு சிறு ஏக்கம்
என்னவன் அருகில் இருந்தால்
மைவிழி மாயக்கிடாதோ
மாயம் தான் நிகழ்ந்திடாதோ ...
மனதோடு ஏக்கம்
மைவிளிகளில் அதன் தாக்கம்
மைவிழி மயக்கம்
-
புத்தாண்டு தினம் இன்று
வேண்டும் வரம் கேள் என்று
வாய்ப்பு தந்தான் இறைவன், நன்று
அதை வேண்டு ,இதை வேண்டு என்று
ஆசையின் சுனாமி அலை எழுந்ததுமுண்டு
அவற்றுள் நாட்டுக்கே மன்னவன் ஆகிடு
என்ற எண்ணமும் முதன்மையான ஒன்று
வேல்விழி ,வாள்விழி ,தேள்விழி என்று
மனம் கிழித்து ,தூக்கம் அழிக்கும் விழிதனை கண்டு
வலித்ததும் , சலித்ததும் போதும் என்று
மைவிழி மயக்கும் மலரே (ரோசா)
உன் விழி காணும் வரம் பெறுவோமே என்று
மன்னவனாய் ஆகும் வ்ரமேதும் வேண்டாமென்றும்
உன்னவனாய் ஆகும் வரம்தந்தால் போதுமென்றேன் .
புத்தாண்டின் சிறப்பு பரிசாய் !
அடுத்த தலைப்பு - சிறப்பு பரிசு
-
புத்தாண்டு பரிசாக
புதுமையாக ஏதும் வேண்டாம்
உன் அன்புகலந்த
முத்தங்களுடன்
பரிசாக தந்துவிடு
உன் இதயத்தை
அன்பு
-
நண்பன் எனும் போர்வையில்
கொம்பு சீவும் குண நலனுடன்
பலரும் உள்ளதனால் தானோ ?
அன்பு, அன்பு, அன்பு, என்ற
ஒன்றை தவிர வேறு ஒன்றும்
தெரியாத, புரியாத ஜீவனிடம்
இதயம் அதை பரிசாய் கேட்கிறாய் ?
மணக்கும் மனம் ,மயக்கும் குணமுடன்
பனியாய், கனியாய் ,மணியாய்
மிளிரும் கனிவான உன் இதயம்
தனியாய் தவிப்பதை தவிர்க்கவே
துணையாய் அதற்கு இணையாய்
அதையும்,இதையும் ,எதையும்
தர தயாராய் இருப்பவன்
இதயத்தையா தரமறுப்பேன் ?
ஒன்றில் மட்டும் உடன்பாடில்லை
அந்த முத்தம் என்பதில் தான்
எனக்கும் உடன்பாட்டிற்கும் முரண்பாடு
சத்தம் கேட்குமே என்பதால் இல்லை
உன் சுத்தம் என் மனதில் உச்சம்
சரி, அதில் என்ன அச்சம் ?
அதில் ஏன் பட வேண்டும் என் எச்சம்
என் எண்ணத்தின் மிச்சம்
சொச்சமின்றி புரிந்திருக்கும்
என எதிர்பார்கின்றேன் !
அடுத்த தலைப்பு - எதிர்பார்கின்றேன்
-
என் காதலனிடம்
காதல் பரிசாக
முத்தம் கேட்பதில்
தவறென்ன உண்டு நண்பனே..
காதலுக்கு வரையறை இல்லை
என் காதலனிடம்
என் எதிர்பார்ப்புக்கும்
வரையறை இல்லை ....
எதிர்பார்க்கின்றேன்
என்னவனின் அன்பு முத்தங்களை...
காதல்
-
நான் தவறொன்று உண்டென்று
எங்கு எப்போது அடிகோடிட்டேன் கன்றே !
அன்பைப்பற்றி அறிவேனே ஒழிய
காதல் பற்றி அறிந்தவனும் இல்லை
இதுவரை புரிந்தவனும் இல்லை .
அரைகுறை புரிதலோடு அழகாய்
குறை இன்றி நிறையாக
அன்பு என்ற அந்த தலைப்பிற்கு
அடியேன் அடிகோடிட்டது அனைத்தும்
என்கருத்துகளையே
அதிர்ச்சி அடைய வேண்டாம்
அன்பின் ஆத்திச்சூடி அறிந்தவன்
அவ்வளவு எளிதில் அநாகரிகம் எனும்
அரிதாரம் அப்பிக்கொள்ள ஆசையில்லை
அவசியமுமில்லை !
அடுத்த தலைப்பு -ஆசையில்லை
-
நான் நானாக இல்லை
நீயாகும் ஆசையுமில்லை
உன்னை கடந்து போகவும் ஆசை இல்லை
என்றும் காதலுடன்
உன் காலடியில் பூக்கவே
ஆசைபடும் ரோஜா இவள் .
ரோஜா
-
ரோஜாவில் முள்ளிருப்பது நியாயம்
இயல்பும்,இயற்கையும் கூட
இனியவளே !
உன்னிடம் எப்படி முள் ?
இனிமையால், இனிமை நினைவினால்
என் இதயத்தை இம்மியளவும்
இரக்கம் இன்றி ,இடைவெளி இன்றி
இடைவிடாது இலகுவாய் தைப்பதற்கு !
அடுத்த தலைப்பு - இனியவளே
-
என்று அழைப்பாய்
இனியவளே என்று
அன்று நான் அடைவேன்
பிறவிப்பயனை
நான் அடைவேன்
-
இனியவளே !
பூக்களின் பெருந்தலைவியே !
புலமையில் தேர்ந்தவளே !
பூக்களின், கூட்டத்தை சேர்ந்தவளே !
( சிலநாட்களாய் )
என் மகிழ்ச்சியை சார்ந்தவளே !
குறையேதும் இல்லாத
நிறையான (பௌர்ணமி) பிறை போல
முழுதாக புரிதல் வேண்டும்
அது கொண்டால் போதும்
முழு மனதிருப்தி
நான் அடைவேன்
அடுத்த தலைப்பு - மனதிருப்தி
-
என்று தொலைகின்றேனோ
உண்னுள் முழுதாய் தொலைகின்றேனோ
அன்று நான் அடைவேன்
மனதிருப்தி
முழுதாய்
-
வீண் பொழுதாய் கழிந்து வந்த என் பொழுதுகள்
இன்று தேன் பொழுதாய் கழிவதன் காரணம்,
உன் நினைவு, விழுதாய்
மனம் முழுதாய் பரந்ததனால்
பிறந்திடும் கவிதைகளே !
அடுத்த தலைப்பு - கவிதைகளே
-
என் கவிதைகளே
உன்னை கணப்பொழுதும்
தரிக்க ஆசைபடும் போது
என் கண்கள் மட்டும் என்ன துறவியா
அதற்கும் தரிசனம் தந்துவிடேன்
தரிசனம்
-
சரித்திரம் போற்றும் உயிர் சித்திரம் ஒன்று
உருகியே மருகுது தரிசனம் வேண்டும் என்று
அடடா இதனை அதிசயம் என்பதா ?
விழிகளை விரிவடைய செய்யும் விசித்திரம் என்பதா ?
உன் தரிசனம் பெரும் கரிசனத்திற்கு
ஊருசனம் ,சாதிசனம் இதோ இந்த பாவிமனம்
பெரும் வரிசையில் கால்கடுக்க காத்திருக்கு !
அடுத்த தலைப்பு - பாவிமனம்
-
ஏன் இந்த ஒதுக்கம்
என்னை புரியவில்லையா
இந்த பாவி மனம்தான் தெரியவில்லையா ?
ஒதுக்கம்
-
அழகே !
உனை போல் உள்ளத்தின் உட்புறத்தில்
உள்ளதை எல்லாம், பதுக்கம் செய்திடும்
பழக்கம் இல்லாததால் , வழக்கம் போல்
ஒதுங்கியே இருக்கவே இந்த ஒதுக்கம்
என்ன செய்வது , இனிமையால் மனதை
சிதைக்கும் உன்னை வதைக்க மனமில்லை
கண்ணே, மணியே என கதைக்க வழியில்லை
கென்னெடி சதுக்கம் , அண்ணா சதுக்கம் போல்
ஆசை சதுக்கம் அமையும், அப்போதாவது
ஆசையை ஆசையாய் வந்துபார் !
அடுத்த தலைப்பு - வந்துபார்
-
கண்ணுக்குள் கருவிழியாய்
இதயத்தின் துடிப்பாய்
என் உயிரின் சுவாசகாற்றாய்
வந்து பார்
என் நேசம் என்றால் என்னவென்று
உனக்கு உணர்த்தி சொல்லும்
சுவாசகாற்றாய்
-
உன் வரிகளை வாசிக்க வழி இல்லாது
விழியிருந்தும் குருடாய் வாழ்ந்துவந்த கவித்தளம்
இரக்கம் நிறைந்த ஒருசில இதயங்களால்
இதுவரை இரவல் காற்றினில் இருந்துவந்தது
இனி சுதந்திரகாற்றை ஆசுவாசமாய்
சந்தோசமாய் சுவாசித்து ஜீவிக்க
சுத்தமான சுவாசகாற்றாய் உன்
சுக வரிகள் நித்தம் நித்தம் பதிவாகவேண்டும் !
அடுத்த தலைப்பு - பதிவாகவேண்டும்
-
எண்ணத்திலும்
நினைவுகளின்
கடைசி பதிவாய்
உன்னில் நான்
பதிவாக வேண்டும்...
நேசமே நேசத்தை
சுவாசித்த என் இதயம்
இன்று சுவாசிக்க
முடியாமல் சிறு தடை...
சிறு தடை
-
இடைவிடாது பொழியும்அடைமழைக்கு
தடையிடலாம், தவறில்லை
அடைமழையின் கொடையினால் படைகொண்டு
பாயும் காற்றாற்று வெள்ளத்திற்கு
மடையிட்டு தடையிடலாம், தவறில்லை
நடைபோடும் பூங்காற்று நீ .
உனக்கு சிறு தடையா ?
தடையிட்ட மடையன் யாரவன் ?
குடைச்சல் கொடுக்கும் அலுவலக மேலாளனோ ?
அடுத்த தலைப்பு - நடைபோடும் பூங்காற்று
-
மெல்ல தவழ்ந்து
மெதுவாக என்னை தீண்டி
மெல்ல நடை போடும் பூங்காற்றாய்
உன் நினைவுகள் ...
நினைவுகள்
-
நித்தம் நித்தம் உன் நினைவுகள்,
மறக்க வேண்டுமென
மறக்காமல் நினைக்கிறது
மரித்தாலும் மறக்கமுடியாது
என்பதை அறியாத மனது
அடுத்த தலைப்பு:
மரித்தாலும்
-
மரித்தாலும்
மறக்க முடியாத
உன் நினைவுகளுடன்
மரணத்தின் வாயிலிலும்
மனதோடு போராடுவேன் ...
மரணத்தின் வாயில்
-
மரணத்தின் வாயலில்
இருக்கும் நிலையிலும்
மரிக்காத நினைவை
உன் நினைவோடு
மரிக்கும் வரத்தை
வேண்டும் என் மனது
துயில்
-
துயில் மீள வழி வகை பல உண்டு
இளங்காலை வெயில் பட ஒரு வகை
தன்டாவள ரயில் ஓட ஒலி கேட்டு மறுவகை
கூவும் குயில் பாட பாடும்மொலி கேட்டு ஒரு வகை
எனக்கோ ,குயில் பாட .ரயிலோட ,வெயில் பட வேண்டியதில்லை
எழில் பொங்கும் வரி வரையும் கனிமொழியாள்
உன் மீது நான் கொண்ட மையல் போதும்
துயிலாத துயில் மீள்வதற்கு !
அடுத்த தலைப்பு - கனிமொழியாள்
-
கனி மொழியாள் நான் உனக்கு
தேன் மொழியாள் யார் உனக்கு ....
இன்னும் கார் குழலால்
மெல்லியலாள் .....
நீளும் உன் பட்டியலில்
நித்தம் ஒரு பெண்டிரடா ...
நிந்தனை செய்தாலும் என்
நினைவுகளில் என்றும் நீதானடா ...
நிந்தனை
-
என் கவிக்கு, கனி மொழியின் துணை கொண்டு
பதில் கவி புனைவதால் நீ கனிமொழியாள் .
உன் குரல் கேட்டு ,முகம் பார்க்கும் வரம் பெற்றால்
தேன்மொழியாள் ,கார்குழலாள்,மெல்லிடையாள்
இன்னும் பல பட்டம் தரத்தயார்
சிந்தனையில் சிறகடிக்கும் சிட்டுனக்கு
வர்ணனையை வாரி வழங்குவதில் ஏன் நிந்தனை ?
அடுத்த தலைப்பு - சிறகடிக்கும் சிட்டு
-
என் மனக்கதவுகள்
எப்பொழுதெல்லாம் திறக்கின்றதோ
அப்பொழுதெல்லாம்
என் நினைவுகளில்
சிறகடிக்கும் சிட்டு நீ
பட்டென்று பொய் விடுவாய் என
நான் பக்கென்று மூடிகொள்கிறேன்
என் மன கதவுகளை ..
மன கதவு
-
மனதிற்கு கதவு போடும் மதிகெட்ட வேலைக்கு
மணிக்கணக்காய் மணியை செலவிடும் மணிமதியே !
உன் மனக்கதவிர்க்கு எதனால் கதவிட்டிருக்கின்றாய் ?
மரத்தில் தானா ? இல்லை இரும்பிலா ?
சரி, ஒரு சிறு கோரிக்கை உன்னிடம்
உன்கூற்றின்படி மனதிற்கு கதவு உள்ளதென்றாகட்டும்
இனியும் அதனை மனக்கதவு என்றழைக்கவேண்டாம்
இனி "சொர்கவாசல்" என்று சொல் !
அடுத்த தலைப்பு - சொர்கவாசல்
-
என் விழிஎன்னும்
சொர்க்கவாசல் கதவு
உனக்காக மூடாமல்
காத்திருக்க
நினைவை மட்டும் தந்துவிட்டு
என்னுள் வராமல் நீ செய்யும்
மாயம் ஏனோ
மாயம் ஏனோ
-
என்னுள் நீ
அறிந்தும் நீ
அறியாததுபோல்
மாயம் ஏனோ ...?
நீ
-
என் கண்களுக்கு எட்டாத குருடன் கண்ட கனவு நீ
என் செவிகள் கேட்டிராத செந்தமிழ் தமிழ் தேசிய கீதம் நீ
என் நாசி நுகராத நறுமணம் கமழும் வாசனைதிரவியம் நீ
என் தமிழை வரிகளால் அன்றி வார்த்தை ஓசையால்கேட்காத வானவில் நீ
என் கைகள் தீண்டா தீம் ஸ்பரிசம் நீ
என் கால்கள் உனக்காய் கடுக்க காத்துருக்க கனிவு காத்த கன்னித்தீவு நீ
இருந்தும் - என் கவிதைக்கு மட்டும் கிட்டிய கவின் கவிதை காதலி நீ
அடுத்த தலைப்பு - கவிதைக்காதலி
-
உன்னை நேசித்ததில் இருந்து
நானும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்
கண்ணனின் காதலியாக மட்டும் இன்றி
கவிதையின் காதலியாகவும் இன்று நான்
கவிதைகள்
-
உலக மொழிகளின் ஒட்டுமொத்த கவிதைகள்
ஒன்றுகூடியது ஒரு கலந்தாய்விற்காக
ஒப்பறியா உயிர் கவிதை உன் பெருமை போற்றி
உன்னை பெருமை படுத்தும் என் தமிழை போற்றி
ஒற்றுமையுடன் பாராட்டு விழா தொடுப்பதாய்
தீர்மானம் தீர்வானது
அடுத்த தலைப்பு - பாராட்டு விழா
-
போதி தர்மர்
பூக்கள் எல்லாம் கூடி
பாராட்டு விழா வைத்தது
உன் புன்னகைக்கு
இதுவரை உன்னை போல்
எந்த பூவும் புன்னகை சிந்தவில்லயாம்
புன்னகை
-
ஆயிரம் உறவுகள் என்னை சூழ்ந்திருந்த போதும்.,
உன் புன்னகைக்காக ஏங்கும் என் இதயத்தை பார்த்து.,
ஏளனமாகவாவது சிரித்து விட்டு போ.
உறவுகள்
-
ஆர்பரிக்கும் அலுவலக அலுவல்கள்
அவசரபடுத்தும் மேலாளர் ஆலோசனைகள்
ஒத்துழைப்பில்லா ஒன்றில் மட்டும்
ஒத்துபோகும் சக ஊழியர்கள்
எண்ணில்லா இன்னல்கள் மத்தியில்
இதயம் இளைப்பாற இடம் தேடியது
வலம் இடம் ,என்று இடம் தேடி தேடியே
கவி கடந்து சென்ற தடம் கண்டுபிடித்தேன்
தடம் ,F.T.C யின் கவிதை தளம் வரை தொடர்ந்திட
ஒரு சிலர், கவிதை நீர்வீழ்ச்சியில் கால்நனைதேன்
தளத்தில்,வரி படித்தும் பதித்தும் பெற்றேன் புதிய உறவு
புதிய உறவுகள் உன்னதம் என்று உணர்த்திட
கவிதை மழையாய் கார்த்திகாவின் வரவு
வா வா ! உன் வரவு இந்த கவிதை சோலைக்கு வசந்தம் !
வரவின் வேகத்தில் (கவிதை) உறவும் கிடைத்துவிட்டால்
இரவோடு இரவே தூக்கிட்டுகொள்ளும் துறவு
அடுத்த தலைப்பு - துறவு
-
உன்னை கண்டதும்
என் ஆசைகள் துறவு கொள்கிறது
உன்னிடம் பகிர்ந்து கொள்ளமுடியாமல்
பகிர்ந்து
-
பகிர்ந்து கொள்ள முடியாமல் போனதால்
முதிர்ந்து ,உலர்ந்து ,உதிர்ந்து துறவு பூண்ட
உன் ஆசையில்லா ஆசையை எண்ணி
அனாவசியசமாய் அவஸ்தை படும் ரோசாவே !
ஆசையோடு "ஆசை" நான் சில
ஆசையை தருகிறேன் ,ஆசை ஆசையாய்
ஓசை இன்றி, என் ஆசை தரவை
துறவு கொண்ட உன் ஆசைக்கு மாற்றாய்
பூசையோடு வரவு வை த்துகொள் ஆசைரோசாவே !
அடுத்த தலைப்பு - ஆசைரோசா
-
எனக்கும் ஆசைதான்
என்னவனுடன் என்றும்
காதல் உறவாட
என் செய்ய ..
கண்டதும் காததூரம்
கடுகதியில் பயணிக்கும் என்
நாணங்களை ..? இதனால்
ஆசை ரோசா
பல சமயம் அவஸ்த்தை ரோஜவாக
நாணம்
-
பருவம் அடையா பெண்ணே
நாணம் அது வேணும் வேணும் என்று
அந்த வானமே நாணும் அளவிற்கு பேணுகையில்
மானும் ,மீனும் ,தேனும் மட்டும் அல்லாது
உன் முகம் காணும் மானுடர் எல்லோரையும்
நாணம் கொள்ள செய்யும் பூவனமே
நீ ஏன் இப்படி நாணம் தூரம் செல்வதை எண்ணி வருந்துகிறாய் ?
அடுத்த தலைப்பு - பூவனமே
-
பூவனமே
இன்று புயல் கடந்த
வனமாகியது ஏன் ?
புயல்
-
பூவனமே
இன்று புயல் கடந்த
வனமானதன்
காரணம் மனமே !
அடுத்த தலைப்பு - மனமே
-
மரணிந்த்து போன¨
என் மன உணர்வுகளுக்கு
என் மனமே மறு ஜீவன் கொடுக்கிறது
என் மனமே எனக்கு எதிரி
மன உணர்வு
-
மன உணர்வுகளுக்கு சரணம் போட்டு பூஜிகின்றனர் சிலர்
மன உணர்வுகளுக்கு கரணம் போட்டு காப்பாற்றுவர் சிலர்
மன உணர்வுகளுக்கு மரணம் நேரும் அளவிற்கு
கவன குறைவாய் இருந்துவிட்டு
உன் மனம் மன உணர்விற்கு மறு ஜீவன் தந்தால்
மனதிற்கு மலர் மாலை உதிர்திடாமல்
எதிரி என இட்டுகட்டி பட்டமிட்டால்
முறையா? மூன்றாம் பிறையே !
அடுத்த தலைப்பு - மூன்றாம் பிறையே
-
நிலவாக இருந்த எனை
நாள்தோறும்
உன் நினைவால் தேயவிட்டு
இன்று பிறை ஆகி போனதும்
மூன்றாம் பிறை என்று
மாதத்தில் ஓர் நாள் காண
மனம் இணங்கி விட்டதோ ..
வேண்டாம்....
இதற்க்கு நான் அமாவாசயாகவே
இருந்துவிட்டு போகிறேன்
அமாவசை
-
மாதம் ஓர் நாள் காண
மனம் இணங்கிவிட்டதா?
அந்தோ !
போதும், போதும் அபாண்ட குற்றச்சாட்டு
அப்பொழுதும்,இப்பொழுதும்,எப்பொழுதும் என
முப்பொழுதும் உன் கற்பனையில் கிடந்த
இனிமை மட்டும் இனி போதாது
உன் பாதம் பட்ட தடமே ,இடமே போதும் என
பகல் இரவு பேதம் இன்றி ,வேதம் ஓதும்
வானவர்களின் தவம் ,அதை விஞ்சும் வீதம்
உனக்காய் தவம் இருப்பவன் நான் வானமாய் .
வளர்பிறை,தேய்பிறை ,மூன்றாம்பிறை , முழுபிறை
மட்டும் அல்ல அமாவசை ஆனாலும்
உன் இருளையும் ரசிக்க இன்பமாய் இருப்பேன்
பௌர்னமியே!
-
வார்த்தைகளை கோர்த்து
வள வளவென்று
வசனம் அமைத்து
பூ வனம் நிறைத்த கவியே ..
போகும் பொழுது
இந்த பூவைக்கு
தலைப்பை விட்டு செல்ல
மறந்ததேனோ ...
மறதி
-
என்னுள் உன் நினைவுகள் ஆக்கிரமிப்பு ,விளைவு
மறதி
அடுத்த தலைப்பு - ஆக்கிரமிப்பு
-
சிறுக சிறுக என்னை
நினைவுகளால்
ஆக்கிரமித்து அடிமையாக்கியவனே
என் நினைவுகள் உன்னை ஆட்கொள்ளவில்லையா
அனுதினம் போராடுகின்றேன்
உன்னுள் என் நினைவலைகளை தேடி ..
நினைவலைகள்
-
வங்ககடல் வெளிப்படும் பெரும் அலைகளை
அனாயாசமாய் நீந்தி கடந்தவன்
உன் நினைவலைகளுக்குள் மூழ்கி திளைக்கின்றேன்
அடுத்த தலைப்பு - திளைக்கின்றேன்
-
பிரிவு எனக்கு உணர்த்தியது
நான் உன் மீது கொண்ட காதலின் ஆழத்தை
உன்னை வெருப்பதட்க்கு பதில்
உன் நினைவுகளில்
நீந்தி திளைக்கின்றேன்
நினைவுகள்
-
உன் நினைவுகள்
கடும் தவமிருந்து
நான் பெற்ற சாகாவரம்.
அடுத்த தலைப்பு - சாகாவரம்
-
இதயம் துடித்து
இறந்து போய்விடினும்
உன் நினைவுகள்
மரிக்காத
சாக வரத்தை
தந்துவிடு
மரித்தும் மரிக்கமலும்
இரு(ற) ந்துவிடுகிறேன்
குழப்பம்
-
என் எண்ண திவலைகளில்
எதிர் பார்ப்பை விட
குழப்பங்களே
கூடி வந்து
சிதறி சிதைகின்றது
இருந்தும்
விடை தேடி
விண்ணை தாண்டி
என் எண்ண அலைகளின் பயணம்
விண்ணை தாண்டி
-
என்னோடு நீ துணையாக
வருவதாய்
என் சிந்தனை சிறகு
விண்ணை தாண்டி பறக்க
சட்டென தூக்கம் கலைந்து
விழித்துக் கொள்ள
ஐயோ எல்லாம் கனவாய்
போனதே....
முடியாத கனவாய்
தொடர நீ வருவாயா
--தூக்கம்--
-
தூக்கம் என்னோடு
துணை வந்து வெகு நாட்களானது
என் கனவுகள் தூக்கத்தின் தேடலில்
தொலைவினில் வாசம் செய்கின்றது
தூக்கத்திற்கும் பிடிக்கவில்லை போலும்
அதுவும் தொலைவினிலே
உன்னை போல்
தொலைவினிலே
-
அடியே !
ஒரு சில தருணங்களில்
நீ தொடுவானமாய் ,
சிறு பிள்ளை போல
தொட ஓடிவருவேன்
தொலைவினிலே சென்ற்விடுவாய்
அடிவானமாய் .
அடிவானமாய்
-
அடிவானமாய் தொடும் தூரத்தில் நீ
அப்படிதான் எண்ணி இருந்தேன்
உன்னை நெருங்கமுடியாமல்
திரைவிளும்போதுதான்
தெரிகிறது
நீ நெடும் தூரம் என்பது
நெருக்கம்
-
எப்படியும் நெருக்கம் ஆகிவிட வேண்டியே
சுருக்கமாய் சொல்வதை பெருக்கி
விரிவாக சொல்வதை சுருக்கிசொல்கிறேன் ,
நெருக்கம் காட்டவேண்டியவள்
இரக்கமே இன்றி இறுக்கம் காட்டுகிறாய் !
உருக்கமாய் சொல்கிறேன்
நெஞ்சு பொருக்கவில்லையடி !
இறுக்கம்
-
எதிர்பார்ப்பின்
ஏமாற்றங்கள் ஒன்று சேர்ந்து
இறுக்கம் கொள்கிறது
என் இதயம்
இதயம்
-
எதையும் தாங்கும் இதயம் பெற
எதிர்பார்ப்பு என்னும் விதை
விதைப்பதை தவிர்
என்னை போல் !
எதிர்பார்ப்பு
-
எதிர்பார்ப்பை கடந்து
எத்தனையோ நாளாச்சு
வினையை யார் விதைப்பார்
அறுவடை செய்ய..?
வினை
-
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
உன்னை நினைப்பவன்
உனை விரும்புவான்
அறுப்பவனை விடுத்து நினைப்பவனை நினை !
நினைப்பவன்
-
உன்னையே
உன்னை மட்டுமே
நினைப்பவன் இருந்தும்
உன்னை நினையா
நெஞ்சில் இடம் தேடி
அலைவதேனோ ???
அடுத்த தலைப்பு:
இடம் தேடி
-
மனங்கள் இப்படிதான்
நினைகாததற்காய் ஏங்குவதும்
கிடைப்பதை நிராகரிப்பதும்
புதுமையன்று வழமைதான்
இருந்தும் நினைவுகள் இளக்காதவரை
நினைப்பதும் இழக்காது
மனம்
-
மனம் ஒரு மாய குரங்கு என்றான்
என் முப்பாட்டன் ,நம்பவில்லை
ஒரு வேலை முப்பாட்டன் கதை
உண்மையோ ? நம்பதொன்றுகிறது
உன்னால் !
உன்னால்
-
என் இதயம் துடிப்பதும்
உன்னால்
இன்று துடிக்க முடியாமல்
தவித்திருப்பதும் உன்னால்
சூழ்நிலை
-
ரணமான இதையத்தை குணம் ஆக்கியவள்
குணமான இதயத்தை மீண்டும் ரணமாக்கினாள்
புரிகிறது, புரிகிறது
நீ ஒரு சூழ்நிலை கைதி என்று .
கைதி
-
உன் இதய சிறையின்
கைதியாய் நான்
விடுதலை செய்து விடாதே
உனக்குள் இருந்துவிடுகிறேன்
ஆயுள் கைதியாய்
விடுதலை
-
உன்னிடம் நான் கேட்பது
ஒன்றுதான்
உன் நினைவுகளிடம் இருந்து
எனக்கு விடுதலை
கொடுத்து விடு
உன்னிடம்
-
எனிடம் எனக்கு பிடிகாததெல்லாம்
உன்னிடம் எனக்கு பிடித்தது
உன் அதீதமான பேச்சு
சில்லறை சிதறிய உன் சிரிப்பு
சிறுக சிறுக கொல்லும்
உன் அழகு,..... இன்னும் பல
உன் சிரிப்பு
-
கள்ளம் இல்லாத
உன் சிரிப்பில்
கலங்கி போனது
உள்ளம்.
மழலையாய் மாற
துடிக்கிறேன்
அன்னையாய் வந்து
என்னை அரவணைத்து
பாசத்தை குறைவில்லாமல்
தந்து விடு
குறைவில்லாமல்
-
குறைவில்லாமல் நிறைவாக தரத்தான்
துடிக்கின்றேன் , தவிக்கின்றேன்
இருந்தும் நான் நானாக மட்டும்
இருந்திருந்தால் சரி, ஆணாகிவிட்டேனே!
ஆணாகிவிட்டதனால் வீனாகிவிட்டேன் !
வீனாகிவிட்டேன் !
-
பெண்ணாக பிறந்து வீணாகி விட்டேன்
கல்லாக பிறந்திருந்தாலாவது
கால் படும் வரமாகிலும் கிடைத்திருக்கும்
வரம்
-
காதல் வரம் வேண்டி
உன் இதயக் கோவிலின்
வாசலில் காத்திருந்தும்
கைகூடாமல்
போனது என் காதல்
பெண்மை
-
மென்மையில் மிகமென்மை மயிலிறகு
மயிலிறகைவிட மென்மை -சிட்டுக்குருவியின் சிறகு
சிட்டு குருவியின் சிறகு மென்மை -காற்று
சிட்டுக்குருவியின் சிறகைகாட்டிலும் மென்மை
காற்றை காட்டிலும் மென்மையானது பெண்மை
பெண்மையை வெல்ல உலகில் வேறேதும் மென்மை இல்லை என்பது மறுக்கமுடியாத,
மறைக்கமுடியாத,மறக்க முடியாத உண்மை
(மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா )
உண்மை
-
உன்னை நான் நேசிப்பது உண்மை
உன்னை நன் தூசிப்பதும் உண்மை
இரண்டும் உன்மேல் கொண்ட அன்பினால்
என்பதும் உண்மை
எப்போது புரிந்து கொள்வாய்
என் காதலின் தன்மை
காதல்
-
என்னில் தொடங்கி
உன்னில் முடிவது தான்
காதலோ
காதலோடு காத்திருக்கிறேன்
உன் காதல் என்னை வாழவைக்கும்
என்ற நம்பிக்கையில்
காதலோ
-
சில விஷயங்கள் பரிமாறிக்கொள்ள
ஆசையுடன் காத்திருந்தான் "ஆசை "
தலைப்பு (காதல்) கலக்கம் தந்தது
பிறிதொருவர் பதிக்கட்டுமே என
பொறுத்திருந்தான் பொறுமையாக,
காதலோ (தலைப்பு) தான் விட்டாலும்
தன்னை விட மறுக்கிறது . மீண்டும்
மௌனமாய் பொறுமையுடன் ...
மௌனமாய்
-
மௌனமாய் கரைகிறது
மணித் துளிகளும்
எதிர் பார்ப்புகளும்
எதிர் பார்ப்பு
-
உனக்காக ஒரு சில வரிகள் வரைந்தேன்
வெளிபடுத்தலாம் என முனைதபோது
தலைப்பில் தடை ,தலைப்பே தடை
பொறுத்திருந்தேன் தலைப்பு மாறியது
தவிப்பு நிலைக்கிறது .அனுமதியே
அடுத்த எதிர்பார்ப்பு !
அனுமதி
-
உன்னுடன் வாழத்தான்
அனுமதி இல்லை
உன் நினைவுகளுடன்
வாழவுமா அனுமதி இல்லை
அனுமதி .....
உன் உயிர்வரை
என் நினைவுகள் உலாவருவதை உணர்வாய்
உலாவருவதை
-
நினைவுகளுடன் வாழ அனுமதி இல்லை
அதில்வேண்டுமேன்றால் சில சிக்கல் உண்டு
ஆகவே அனுமதி இல்லாமல் போனதில்
ஏதும் ஆச்சர்யம் இல்லை ,சில
வரிகளை வரையவும் அனுமதி இன்றி
என் கோரிக்கை, ஆத்மா சாந்தியடையாமல்
இதோ இந்த தளத்தில் உலாவருவதை
அறிவாயா?
ஆத்மா சாந்தி
-
காதலை புதைத்து
ஆத்மா சாந்தி அடைவதா
வழி இருந்தால் சொல்லுவிடு
என் ஆத்மா சாந்தி தேடி
உன் வாசலில் அலைவதை
நிறுத்தி விடலாம்
தீண்டல்
-
மலை போன்ற மன கவலைகளை
மறக்கச் செய்து
கண்ணிமைக்கும் கணப்பொழுதில்
இன்பத்தின் சிகரத்தை தொட வைத்தாய்
உன் சிறு தீண்டலில்
அடுத்த தலைப்பு:
கவலை
-
கவலை வேண்டாம்
தயக்கம் எதற்கு
முயற்சி இருந்தால்
விண்ணும் கைக்கருகில் தான்
முயன்று விடு
நிச்சயம் வெற்றி தேவதையின்
அணைப்பு உன்னை தழுவும் ;)
கைக்கருகில்
-
உடன்பிறவா உடன்பிறப்பே(ரெமோ) வருக !வருக !
உடனுக்குடன் இல்லாவிட்டாலும் அவ்வப்போது
இங்கும் வரிகளை தருக !தருக !
கற்றை கற்றையாய் கவி பூக்கள் உதிர்க்க
கவிதை தளத்தில் பெண் பூக்கள் சில
வெகுகாலமாய் ஒற்றையாய் ,ஓட்டையாய்
கவிதை எனும் பெயரில் எதையெதையோ
எப்படியோ(தலைப்பு ) சக்கரத்தை
சுழற்றிவந்தேன், என் கவலையை தீர்க்க வந்த
அரும்மருந்தின் நறும் திவளையே !
கையருகினில் அமிர்தம்,இருந்தும்
பசியாற புசிக்கத்தான் வழி இல்லை !
அமிர்தம்
-
நல்ல கவிகள் நீங்கள்
அமிர்தமாய் கவி இயற்றி
தமிழன்னைக்கு படைக்கும் போது
அமிர்தம் மிஞ்சி நஞ்சு ஆகாமலிருக்கவும்,
அழகாய் இருக்கும் இவ்விடத்தில்
மாற்றான் கண் பட்டு கெடுதல் வரக்கூடாது
என எண்ணியும்
திருஷ்டிக்காக
அவ்வப்போது
என் வரிகள்
அடுத்த தலைப்பு:
நஞ்சு
-
உடன்பிறவா உடன்பிறப்பே(ரெமோ) வருக !வருக !
என வாயாறமட்டுமின்றி, மனதாற உரைத்தபின்னும்
மாற்றான் என அடிகோடிட்டது , என் பிஞ்சு நெஞ்சு
அதில் நஞ்சு ஊற்றவா? அல்லது எதிர்பாரா விதமாய்
வந்த ,தந்த, என் வரியை தூற்றவா?
பிஞ்சுநெஞ்சு
-
உடன் பிறப்பே என
ஆசையாய் ஆசை நீர் அழைத்த பின்பு
மாற்றான் என அழைப்பேனா??
உன் பிஞ்சுநெஞ்சில் நஞ்சு ஊற்றும்
எண்ணம் இல்லை
உந்தன் வரியை தூற்றும் நோக்கமும் இல்லை
நான் அறிந்தே அழைத்தேன்,
இவ்விடம் என நான் உரைத்தது
இப் பொது அரங்கை என்றால்
மாற்றான் யார் ??
அடுத்த தலைப்பு:
மாற்றான்
-
அடேங்கப்பா ! வா வா !
எத்துனை நாட்களுக்குத்தான் நானும்
வாச மலர்களை வசம் வைத்திட
வசியம் வைப்பதாய் வரிகள் சமைப்பது
வேறுத்திடவில்லை,மறுத்திடவில்லை
மாற்றாய் ஒருமுறை மாற்றான் ஒருவனை
தேற்றி,போற்றி ,வர்ணனை தேன் ஊற்றி
வரிசமைப்போமா, என நேற்றில் இருந்து
மாற்றி மாற்றி வரி சமைக்க முயல்கிறேன் !
முயல்கிறேன் !
-
தினம் தினம் முயல்கிறேன்
உடனுக்குடன் வரியமைத்து
கவி வடிவில் பதிலளிக்க..
முயற்சிகள் தொடர்கின்றன
தொடரும் தோல்விகளால்
அடுத்த தலைப்பு:
தோல்வி
-
தோல்விகளை எண்ணி துவளாதே!
தோல்விதான் வற்றிக்கு முதல் படி
என்று வெட்டி வேதம் ஒதமாட்டேன்.
முயற்சி, தொடர்முயற்சி ,விடாமுயற்சியோடு
முயன்றால் உன்னால் முடியும் !
முயன்று பார் !
உன்னால் முடியும்
-
உன்னால் முடியும்
தினமும் கண்ணாடியில்
என் பிம்பத்தை பார்த்து
நானே பேசி கொள்கிறேன்
அவனை மறக்க உன்னால் முடியும் என்று
ஆனால் கண்ணாடியில்
என் பிம்பத்தின் அருகே
உன் பிம்பம் நிழலாய் தோன்றும் வரைதான் ...
கண்ணாடி
-
கண்ணாடியில் பிரதிபலிக்கும்
பிம்பம் போல்
உள் உள்ளதை பிரதிபலித்த பின்பும்
புரிந்துகொள்ள தயங்குவதேனோ
அடுத்த தலைப்பு:
பிம்பம்
-
நிஜம் எது
நிழல் எது
புரியாத பொது
நிழலான விம்பத்தை
எப்படி நம்புவேன் ...
என் பிம்பம் விழுந்து
உடையவில்லை கண்ணாடி ..
உன் விம்பம் விழுந்து
உடைந்தது என் மனக்கண்ணாடி ...
துகள்களாக ....
மனக்கண்ணாடி
-
மனக் கண்ணாடியில்
மட்டுமே
பிரதிபலித்தால் தானோ
மாயமாய் மறைந்து போனாயோ
மாயம்
-
மாயம் ஆகவில்லையடி மானே !
என் நறும் வரிகளுக்கும் வாசகத்திற்கும்
வேறு சாயம் பூசி ,காயம் ஆக்கிட
தாயம் ஆட்டம் ஆடினர் சிலர்
ஆட்டம் , வெறும் ஆட்டம் என்று உணராமல்
ஊட்டம் ஊட்டியே,வாட்டம் (வேதனை)
காட்டினாய் ,போனால் போட்டும் என
ஓட்டம் நிறுத்தியிருந்தேன் தற்காலிகமாய்
பாலைவன சோலையை ,வாழ்த்து எனும்
வசந்தத்தால் பூந்தோட்டம் ஆக்கியதால்
இதோ ,மீண்டும் கவியோட்டம்
கவிதை தளத்தில் கவிக்கூட்டம் !
கவிகூட்டம்
-
கவிகூட்டம் கூடி
கவிகளால் களம் ஆடினாலும்
என் மனது ஏனோ
உன் நினைவுகளால் மட்டுமே
ஆட்டம் கொள்கிறது ..
ஆட்டம் போக்கி
என் வாட்டம் நீக்கி
மனவோட்டம் நிறைவுக்கான
காத்திருக்கிறேன் வா
காத்திருக்கிறேன் வா
-
கற்றை கற்றையாய் பலவகை பூக்கள்
அப்பப்பொழுது வந்து வந்து சென்றாலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கவிசோலையில்
வாச(க)ங்களை வசம் விட்டு சென்றாலும்
ஒற்றை பூவாய் தலைப்(பு)பூ பி(வி)ட்டுசெல்லும் இடத்தே
தனக்கு நிகர் யார் என்று, எனக்கும் சவால் விட்டே
கொஞ்சும் கவிதை தேசம் முழுதும் ஆளுமை செய்யும் மலர்மொட்டே !
நீ ஆளும் தேசத்தில் நானும் ஆளுமை செய்ய நினைத்ததுண்டு
காரணம் ,தமிழ் மீதும் உன்னை போல்
எனக்கும் தொன்று தொட்டு காதல் உண்டு
சில நாட்களாய் ,சில பூக்களின்
திடீர் வரவு தொடர் வரவு
அல்லியோ, முல்லையோ , மல்லியோ ??
இல்லை ரோசாவை விஞ்ச வந்த வில்லியோ ??
சரி, இனி கொஞ்ச(சு)ம் வர்ணனை உனக்காக
கவிச்சோலையின் உயர் ரோசாவே ,
அடியே, உயிர் ரோசாவே
கவிதை ஆட்சியின் கவின்மிகு காட்சி நீ
கவிதாஞ்சலியின் வாழும் உயிர் சாட்சி நீ
பூலோக பூக்களுக்கெல்லாம் ஒட்டுமொத்த பேச்சி நீ
என் தம்பி ரெமோ வுக்கு மச்சி நீ - மச்சினி
எங்கே சென்றுவிட்டாய் சில நாட்களாய் ?
உன் இருப்பு இருக்கும் வரை புதுபூக்கள்
வாசம் வீசாதேன்று எண்ணியோ ?
தளம் விட்டு தொலைவாய் இருந்தாய் ?
காத்திருக்கிறேன் வா என கவிகுழந்தையாய்
நானும் காத்திருக்கிறேன் !
-
உனக்காகவே காத்திருக்கின்றேன்
வர மறுக்கின்றாய்
நீ வரும் போது ஒரு வேளை
நான் உனக்காக
காத்திருக்க முடியாமல் போகலாம்
அன்று எனக்காக
நீ ஒரு நொடியேனும்
காத்திருக்காதே
ஏனெனில் இறந்தவர்கள்
மீண்டும் வருவதில்லை....:
மீண்டும் வருவதில்லை.
-
தனக்கு நிகர் யாரென்று
துளியேனும் எண்ணமில்லாத
தூய உள்ளம் கொண்ட பூவை
பார்ப்பவர் கண்களில்
பல முரணான எண்ணம் தந்தாலும்
பழகியவருக்கு பக்குவமான உள்ளம் தெரியும் ..
எந்த பூவுக்கும் பூக்கள் போட்டியல்ல
எல்லாம் ஓர்வகை அழகுதான்
ரோஜாவில் இல்லாத நறுமணம் மல்லியில்
மல்லியில் இலாத இதழ் அடுக்கு செவந்தியில்
இவற்றை எல்லாம் அளவில் மிஞ்சிய தாமாரை ...
இப்படி தனியே தமக்கென்று தகுதிகொண்டு
தனையை தரணியை அழகூட்டும் மலர்களே ..
மலருக்கு மலர் போட்டியல்ல ...
இம்மலர்கள் எல்லாம்
அதன் மரங்களில் இருந்தால்தான் அழகு
மரம் விட்டு உதிர்ந்தால்
மீண்டும் அதற்க்கு வருவதில்லை
வசந்தமும் வாழ்வும் ..
வசந்தவாழ்வு
-
தேடி பார்த்தேன்
எங்கே என் வசந்தம் என்று
உன்னுள் இருக்க
வசந்தத்தை தேடும்
எண்ணம் இனியில்லை
ஒரு முறை
வந்துவிடு என் வாழ்வை
வசந்தமாக்கி விடு போ...
வசந்தவாழ்வு உன்னோடு தான்
எண்ணம்
-
நினைவுகளை
பார்வைகள் எனும் நெய் ஊற்றி
வளர்த்தவனே ...
என் எண்ணம் எனும்
சிந்தனைக்கு
சிறுக தீனி போட்டு வளர்கின்றாய்
என்று அதை எரிஊட்டுவதாய் இருகின்றாய்
சொல்லிவிடு ....
பார்வைகள்
-
கழுகு பார்வைகளுக்கு
மத்தியில் உன் காந்த பார்வையில்
கவரப்பட்டு
கலவரப்பட்டு கலங்கி இருக்கும்
நெஞ்சம்
கோப பார்வைகள் பார்த்துவிடாதே
துடித்து போவேன்...
பார்த்துவிடாதே
-
பார்த்து விடாதே
உன் பாழாய் போன கெளரவம்
குறைந்து விடும்
பேசி விடாதே
பெருந்தொகையில்
முத்து சிதறி விடும் ..
என்னை காதலிக்காதே
காதல் கூட கண்காணாமல் ஓடிவிடும்
அதிஸ்டம் அவளவு எனக்கு
கெளரவம்
-
சுதர் வாருங்கள் நல வரவு உங்கள் கவிதை நன்று .... ஆனால் கொடுக்கப்பட்ட தலைப்பிற்கு கவிதை கொடுக்க வேண்டும் ... அடுத்து வரும் நண்பர்களுக்கு நீங்கள் ஒரு தலைப்பை கொடுக்க வேண்டும் இதுதான் இந்த கவிதை விளையாட்டு.. இங்கே கொடுக்கபட்ட தலைப்பு கெளரவம்... முயற்சி செய்யுங்கள் நண்பரே ...
-
கெளரவம்
பூவையே !
உன் காந்த பார்வை
என்னை சுட்டி இழுக்கிறது
உன் கருங்கூந்தல்
என்னை கட்டி வைக்கிறது
உன் நிலா முகம்
என்னை பித்தன் ஆக்கியது
உன் தேகம்
என்னை கிறங்க வைத்தது
என்று பலமுறை பொய்யுறைக்கும் பொது இல்லையே
இருவரும் ஒன்றாக கை கோர்த்து
ஊர் சுற்றிய நாளில் இல்லையே
உன்னிடம்
இந்த பாழாய் போன கெளரவம்
இப்பொழுது மட்டும் எங்கிருந்து வந்தது
நீ மேல் சாதிக்காரன் என்ற ஆணவமா....
உனக்கு எவ்வாறு சொல்லி புரிய வைப்பேன்
நான்காம் தலைமுறையில் நாவிதனும் உறவுக்காரன் என்று........?
உங்கள் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு ஆணவம்...
-
நீ கொண்ட ஆணவத்தால்
இழந்தது என் அன்பை மட்டுமல்ல
அகிலத்து நல் உறவுகளையும்தான்
என்னுள் நீ வாழ்ந்தும்
ஏன் என் இனிமை உன்னை சேரவில்லை
என் காதலில் தவறா
இல்லை என் கல்லறையில்தான்
உன் கனிவு வெளிப்படுமா
சொல்லிவிடு
உன் இனிமைக்காக எதையும் செய்வேன் ....
கல்லறை
-
கல்லறை
பெண்ணே
நான் கல்லறை செல்வது
உன் விருப்பம் என்றால்
உனக்காக எத்தனை முறை வேண்டுமானுலும்
செல்ல தயார்.....
நீ
எதையும் செய்வாய்
என்று எனக்கு தெரியும்
எனக்காக என் கல்லறை மீது
உன்கையால் ஒரே ஒரு மலரை
மட்டும் விட்டு செல் .........
உன்னையே இதயத்தில் சுமந்தவன்
உன் கரம் பட்ட சிறுமலரை
சுமக்க மாட்டேனா.....??
உங்கள் -சுதர்சன்சுந்தரம்
தங்கள் தொடர வேண்டிய தலைப்பு சுமை
-
இடம் மாறிய
என் இதயம்
இரும்பு சுமையாக இன்று
உனக்காக நான் எனக்காக நீ
நீ கூறிய இந்த வார்த்தை ஜாலம்
எங்கு போனது ...
என்னைவிட ஒருத்தி
உயர்வாக கிடைததாலா ....
இமைகளின் சுமை
இன்று இதயத்திலும்
இமைகளின் சுமை
-
இமைகளின் சுமை
என்னை கடற்கரை வர சொல்லி
எவ்வளவு நேரம் ஆயிற்று
உன்னை பார்க்கத்தான் கடல் அலை
மேலே எழும்புகிறதோ என்று
சுற்றி சுற்றி பார்கிறேனடி
உன்னை காணாது என்
கண்ணே பூத்துபோயிற்று
ஒவ்வொரு கடல் அலை வரும்போதும்
வந்திடுவாய் என்று பார்த்து பார்த்து
இமைக்க மறந்து இமை வீங்கி
என்விழிக்கு இமையே சுமையாகி
போனது பெண்ணே......!
உங்கள் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு மறதி
-
இமைக்க மறந்து போகிறேன்
எதிரே நீ இருப்பாயானால்
சுவைக்க மறந்து போகிறேன்
என் நினைவே நீ யானால்
தூங்க மறந்து போகிறேன்
என் கனவில் நீ வர மருத்தாயானால்
உன் மறுப்புகள் யாவும்
என் மறதியின் சொந்தகாரர்கள் ....
தூங்க மறந்து போகிறேன்
-
முன்பு ஒரு காலம் இருந்தது
துக்கம் மனதை ஆட்கொள்ளும் போதெல்லாம்
ஊக்கம் கொடுக்கவும் உள்ளத்தில் உள்ளதை
ஆக்கத்துடன் தழைத்து வைத்து உற்சாகபடுத்த
தூக்கம் பக்கபலமாய் துனைகொடுக்கும் ...
அது ஒரு அழகிய நிலா காலம் !
இன்றோ ,
துக்கம் மனதை ஆட்கொள்கிறது
ஆட்கொண்டு அப்படியே ஆளைகொல்கிறது
ஊக்கம் கொடுக்கவும் ,ஆக்கம் கொடுக்கவும்
தூக்கம் கூட துணை இல்லை ,மனம் முழுதும்
உன் நினைவு தேக்கம் !,
நினைவு தேக்கத்தின் நிலையான தாக்கம்.
தாக்கம் தரும் பெரும்ஏக்கத்தால் ,
ஏக்கம் தரும் பெரும்வீக்கத்தால்
இபோதெல்லாம் தூக்கமே மறந்து போகிறேன்!
தூக்கம் பறித்திடும் தூக்கணாங்குருவி நீ ....
அடுத்த தலைப்பு - அழகிய நிலா காலம் !
-
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
ஒன்றா சேர்ந்து
உலா வந்தது ஓர் காலம்
அது ஒரு அழகிய நிலா காலம் ...
நிலா
-
இது அழகிய நிலாகாலதிற்கு எழுதியது நிலாவிற்கும் பொருந்தும் என்பதால் விட்டு செல்கிறேன்.
நிலா
நீள் வானம்
கருநீல கடல்
இரண்டிற்குமிடயே
அழகிய நிலவு
நிலவொளியில்
ஆர்ப்பரிக்கும் கடல்
கடலின் நெடுகே மணல் திற்று
கரையை தீண்டி செல்லும் அலை
மிதமாய் வருடும் தென்றல்
ஒவ்வொரு அலைக்கு பின்னும்
நடக்கும் நண்டுகள்
அதை பிடித்து விட துடிக்கும்
சிப்பி தேடும் சிறுவர்கள்
கரை எங்கும் பாய்மர படகுகள்
திட்டு திட்டாய் மீன்வலைகள்
வலை பின்னும் மீனவர்கள்
பிடித்து வரப்பட்ட விற்பனை மீன்கள்
அனைத்து மீனவ வீட்டு வாசலிலும் உலர்மீன்கள்
இது எல்லாவற்றையும் விட
என் காதலியின் கரம் பற்றி நடப்பது
பெரிதாகி போனது விந்தை
கடல்மணலில் வீடு கட்டி
வீட்டிற்கு முற்றம் வைத்து
முற்றத்தில் காதலியின் தோல் சாய்ந்து
கால் நீட்டி அமர்ந்து கொண்டு
பாதம் தொட்டு செல்லும் அலையை
ரசிப்பது தனி அலாதிதான்
நிலவொளி அழகில் கொட்டி வைத்த
வைரங்களாக மின்னும் நீர் கூட
அவளின் விழிகளுக்கு முன்
சொற்பம்தான்
என் காதலியோடு
அளவளாவி கொண்டிருந்தால்
என்னை தொட்டு செல்லும் காற்று
கூட அற்பம்தான்
என்னவளோடு
கழியும் ஒவ்வொரு தருணமும்
அழகிய நிலாகாலம்தான்........
அன்புடன் - சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு என்னவளின் அழகு
-
நிலா
என் அழகிய
நிலா பெண்ணே
நீ முழுமையாக
ஜனனமேடுக்கும் முன்பே
நீலவான தாய்
குறையாய்
உன்னை ஈன்றேடுததால்
பிறை நிலவாகி போனாயோ....!
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு என்னவளின் அழகு
-
என்னை உன் காதலி என்று
ஏன் நீ சொல்வதில்
என் காதலில் உனக்கு நம்பிக்கை இலையா
இல்லை எனை நீ காதலிக்கவிலையா...
என்று சொல்வாய் என் காதலி நீ என்று
அன்று சொன்னாய்
என்னவளின் அழகு எதற்கும் ஈடு இல்லைஎன்று
இன்று உன்னவளின் அழகு மாடுமல்ல
அழுகை கூட உணர மறுப்பதன் மர்மம் என்ன ..
உன்னவள் அழும்போது அழகு அதிகம் என்று யார் சொன்னது
அழ வைத்து பார்கிறாயே...
அழ வைத்து பார்கிறாயே
-
அழ வைத்து பார்கிறாயே !அய்யகோ !
அபாண்டம் , அக்கரமம் , அநியாயம் .
அரைமனதாய்,அடிமனதில் ஆழ்சோகமாய்
ஆறுதல்தர ஆதரவு அற்றவனாய்
அனுதினமும் அலைந்துதிரிந்தவனுக்கு
ஆறுதலாய் அரும்மருந்துதேறுதலாய்
அழகுகவிதையாய், அணைக்கும் அன்னையாய்
ஆசைகாதலியாய் அன்புகுழந்தையாய்
ஆலயம்சென்றும் தொழாதவனை
உன் அடிபாதம் பட்ட திருவடியையும் தொழைவைத்தவள்
எனக்குள்ளும் ஒரு கவிஞனை எழ வைத்தவள்
அன்பென்னும் நீர்த்துளியை விழவைத்தவள்
மரணத்திற்கும் அழக்கூடாது எனும் கொள்கை கொண்ட
என்னையும் அவ்வப்போது கண்ணீர் வர அழைவைதவள் நீ ..
அழைவைதவள் நீ
-
பாசத்தை பகிராமல்
முழுதாய் தந்து
என்னை அழவைத்தவள் நீ
தாய் மடி தேடி அலைந்த போது
ஆதரவை தந்து
தலை கோதி
தாயின் அரவணைப்பை
உணரவைத்தவள் நீ
தோழியே உன்னை போல
இனி ஒருத்தி
உலகில் இல்லை....
இனி ஒருத்தி
-
இனி ஒருத்தி
வட்ட முகம்
மீன்விழிகள்
சிறியதாய் மூச்சு துவாரம்
முத்துக்களை அள்ளி தெளித்தார்
போல் பல்வரிசை
சிவந்த உதடு
கார் கூந்தல்
அழகான வகிடு
இரு நீளகைகள்
மெல்லிய விரல்
வளைந்து தெளிந்த தேகம்
அன்ன நடை போடும் பாதம்
வெண்ணிற மேனி
நிலவு கூட தோற்று போகுமடி
உன் அழகுக்கு முன்னால்
உன்னையே உற்று நோக்கியதில்
உணர்வுகளை வெளிகாட்டி
உதடுகளால் உச்சரிதாயே
நீ எனக்கு மட்டும்தான் என்று
என்னுள்ளே ஆயிரம் மின்னல்
தோன்றி மறைவதற்குள்
வரும் பௌர்ணமி திங்கள்
திருமணம் என்று
பேரிடியாய் முழங்கி விட்டாயே ?
அதோடு நிறுத்தி இருந்தால்
பசுமை நினைவுகளை சுமந்து
காலம் கடத்தி இருந்திருப்பேன்
திருமணத்திற்கு சொல்லுங்கள் என்றது
என் நெஞ்சில் முல்லாய் தைக்கிறது பெண்ணே
உன்னை மட்டுமே சுமந்த
என் இதயத்தில்
இனி ஒருத்தியை
நினைத்து பார்க்க எப்படி பெண்ணே முடியும் ......?
அன்புடன் - சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு எல்லாம் முடியும் உன்னால்
-
எல்லாம் முடியும் உன்னால்
காயமிலாது
இதயத்தில் கத்தியை சொருக ..
உதிரம் இலக்கமால்
உயிரை உருவி செல்ல
கண்களில் நீர் இலாத போதும்
கொட்டும் அருவியை உருவாக்க
ஒன்று தெரிந்து கொள்
என்னாலும் முடியும்
இருந்தும் அதை உனக்கு பரிசளிக்க
நான் விரும்பவில்லை
ஏனென்றால் உன்னை
உண்மையாக நேசிப்பவள் நான் .
கண்களில் நீர்
-
கண்களில் நீர்
பெண்ணே
என்ன சொல்லிவிட்டேன்
எதற்காக உன் கண்களில் நீர்
இப்பொழுது வேண்டாம்
சிறிது காலம் தாழ்த்தி
மனம் புரிவோம் என்றதற்கா
நாம் ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளதானடி
அந்த காலமும்
மனம் புரிந்து கொண்டால்
நமக்குள் பாசம் இருகாதடி
பெண்ணே
இதற்குள் குடும்ப சுமையை
உனக்குள் ஏற்ற விரும்பாததால்
காலம் கடத்தினேன்
இதற்கே துடித்து போவாய்
என்று தெரிந்திருந்தால்
மறுத்திருக்க மாட்டேனடி
பெண்ணே உன்னாலும் முடியும்
என்ற தருணம் வரும் வரை
காதலர்களாகவே இருப்போம்
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு காதலர்களாகவே இருப்போம்
-
காதலர்களாகவே இருப்போம்
உன்னை நானும்
எண்ணி நீயும்
சரியாக புரிந்து கொள்ளும் வரை ...
புரிந்து கொள்ளு
-
புரிந்து கொள்ளுதல் எனும் சிறந்த பண்பின்றி
இப்பரந்து விரிந்த உலகில் இருந்தால்
பிறந்த ஜீவன் யார்க்கும் உறவு என்பதே சாத்தியமில்லை
அப்படியிருக்க, புரிந்துகொள்ளும்வரை காதலராய்
இருந்துகிடந்திட பரிந்து பேசும் பாமலரே !
தெரிந்து ,அறிந்து,புரிந்து இருப்பதால் தான் இன்றுவரை
சரிந்துவிடாமல் ,எனை வருத்தியும்
உன்னை வருந்தவிடாமல்
கவிப்பூக்கள் சொரிந்துவருகிறேன் ,
நான் இருக்கும்வரை இல்லாவிட்டாலும்,
இறக்கும் முன்பாவது புரிந்து கொள்வாயா ?
வரிந்து கட்டிவந்து
அன்பால் என்னை கொல்வாயா ?
கொல்வாயா?
-
கொல்வாயா
அன்பே காற்றில் உன்
சுவாசம் தேடி அலைகிறேன்
என் சுவாசமாய் மாற்ற
நீ எங்கிருந்தாலும் சுவாசி
உன் சுவாசத்தை நான் இனம்
கண்டு கொள்கிறேன்
உன் சுவாசம் எனகாகதான்
என்ற போதும் நீ
(சு)வாசம் செய்ய மறந்ததேன்
நான் உன்னை நேசித்து
விடுவேன் என்பதாலா
இல்லை சுவாசித்து
விடுவேன் என்பதாலா
இல்லை நீ (சு)வாசம் செய்தும்
உன் நினைவிலே சுழலும் நான்
சுவாசிக்க மறந்தேனா..
என் சுவாசம் அதுதான்
என்று தெரிந்து
இயற்கையே சதி செய்கிறதா...
என்னவளின் சுவாச காற்றை
சுமந்து வரும் தென்றலே
என் சுவாசத்தை எனக்காக
கொணராமல் என்னை கொல்வாயா...?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டியது என் சுவாசம்
-
உன் நினைவுகளால்
ஸ்தம்பிப்பது என் வாழ்க்கை மட்டுமல்ல
சுவாசமும்தான்
ஸ்தம்பிக்கும் என் சுவாசம்
என்னை சுவாசிக்காது போனால்
நன்றி உடையவள் ஆவேன்
என்னை மரணிக்க வைக்கும்
மார்புகூட்டுக்கு ....
என் வாழ்க்கை
-
என் வாழ்கை எனும் வனம் தனில்
வண்ணமாய் , வாசமாய் ,
வசந்தமாய் வந்த வாசமலர் நீ
பலநேரம் பாரிவள்ளலாய் பாசம் ,பரிவு
இன்பம்,இனிமை வாரி வழங்கிய சுவாச மலர் நீ
சிலநேரம் சிறு கருமியை போல்
சீற்றம்,சிறுபிள்ளைத்தனம் ,வலி வேதனையும்
சிறிதாய் எனக்காய் செலவிட்ட சிறு மௌவல் நீ
இப்படியாய் உன் நினைவு ஒவ்வொன்றையும்
ஒப்பீட்டோடு ஒப்பிட்டு ஒப்பிக்க
ஒருவகையில் ஒப்பம் தான் எனக்கு
-இருந்தும்
உலக பூக்களின் ஒட்டுமொத்தமும்
போதாதே உன்னோடு ஒப்பிட ....
என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்
என் ஒப்பில்லா ஓவியமே ! ....
ஒப்பில்லா ஓவியமே !
-
ஒப்பில்லா ஓவியமே......!
பிரம்மன் படைப்பின்
ஒப்பிலா ஓவியமே....!
இயற்க்கையின் கொடைகளே
பறந்து விரிந்த கடல்
பச்சை பசேல் நிலம்
அடர்ந்த வனம்
பாய்ந்து ஓடும் நதி
சளைக்காமல் கொட்டும் அருவி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
வன சோலை
வனத்தில் துள்ளி
திரியும் மிருககூட்டம்
நதிக்கரையில் நாகரிகம்
வளர்க்கும் மனிதகூட்டம்
இவை எல்லாம் உன்
அடக்கம் ஆயிற்றே
அப்படி இருந்தும்
ஏன் ஏற்ற தாழ்வுகள்
ஏழை -பணக்காரன்
சாதி- அந்தஸ்து
மிருக கூட்டத்தில் இல்லையே
நாகரிகம் வளர்த்த
மனிதன் மட்டும் எங்கே கற்றான்
ஏற்ற தாழ்வு பார்க்க
நாபி கமலத்தில் வீற்றிருபவனே
படைப்பையே தொழிலாய் கொண்டவனே
கருணை கடலே
இது உன் பிழையா இல்லை
அனைவரையும் சமமாக படைத்த நீ
அவனை சுயமாக சிந்திக்க வைத்ததால்
வந்த வினையா......?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடரவேண்டிய தலைப்பு ஏற்ற தாழ்வு
-
ஏற்றத்தாழ்வு
சாதிகளுக்கு மட்டுமல்ல
இபொழுது எல்லாம்
காதலிலும் ....
அதனால்தான் பலகாதல்
கண்ணீரில் ....
கண்ணீர்
-
கண்ணீர்
கண்ணீரில் முடிந்த காதல்
எல்லாம் காவியம்
வெற்றியில் முடிந்த காதல்
எல்லாம் காப்பியம்
அப்படி கண்ணீரில் முடிந்த பல
காதல் காவியங்களாய்
அம்பிகாபதி- அமராவதி
ரோமியோ - ஜூலிஎட்
இறுதியாய் டைடானிக்
காதல் உள்பட
நம் காதல் காவியம் ஆனாலும்
காப்பியம் ஆனாலும் சுகமே....
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு சுகம்
-
இபொழுது எல்லாம்
தனிமையை ரசிக்கின்றேன்
அமைதியை ரசிக்கின்றேன்
இரண்டுமே சுகமானது ...
தனிமை
-
இனிமையாய் இருந்த தனிமை கூட
கொடுமை ஆனது உன் பிரிவால்
அடுத்த தலைப்பு:
கொடுமை
-
உன்னால்
சந்திப்பது ஏமாற்றம்
இருந்தும்
நான் உன்மேல் கொண்ட
காதலில் இல்லை தடுமாற்றம்
உன்னோடு வாழ இல்லை கொடுப்பினை
வாழாது போனால் அதுதான் கொடுமை
தடு மாற்றம்
-
தடுமாற்றம்
உன்னோடு இருக்கும் போது
நிம்மதி அடையும் மனம்
உன்னை பிரியும் போது
ஏன் இந்த தடுமாற்றம்
உன்னோடு பழகிய நிகழ்வுகளை
அசை போட்டும்
இதயம் கனமாகி
போனதேன்
என்னுள் ஏன் அச்சம்
பிரிவு நிரந்தரமாகி போகும் என்றா ...?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு அச்சம்
-
என் காதலில்
எனக்கு துளியேனும் அச்சமில்லை
ஆனால் என் காதல்
உன்னிடம் எத் தருணமும்
தோற்று போகலாம்
என்ற அச்சம் எந்நாளும் ...
எந்நாளும்
-
அச்சமில்லை அச்சமில்லை
அடிப்படையில் என் அடிமனதில்
அச்சமென்பதே நிச்சயம் இல்லை
அச்சமென்பதை மிக துச்சமாக
கருதிவந்தேன் குறிப்பிட்ட கட்டம்வரை
உன் விரலின் வழியே வரையப்பட்ட
வரிகள், அது என் விழிகளுக்கு கிட்டும்வரை
அந்நாளில்
கவிதை என்பதே படிக்கத்தான் என
உத்தேசமாய் உத்தேசித்திருந்தேன்
பின்னாளில்
பொன்னாளாய், நன்னாளாய்
மின்னல் உன் வரிகளின் அறிமுகம்
உன் வரிகளின் அறிமுகத்திற்கு பிறகு
இந்நாளோ ,
கவிதை என்பது படைக்கத்தான் என
உணர்ந்து ,உணர்த்தி பதித்து வருகிறேன்
எந்நாளும் ,
என் வாழ்வில் கவிதை நிறைந்திருக்கும்
கவி விதை விதைத்தவள் நீ என்பதால் !
அடுத்த தலைப்பு - கவிதை நிறைந்திருக்கும்
-
கவிதை நிறைந்திருக்கும்
சமுகத்தில் ஒரு மாற்றம் என்னால்
நினைக்கும் போதே
என்னுள் கர்வம்
ஆனால் எனக்கு சமுகம் குடுத்த
பட்டம்
இருமாப்புடையவள்
இரக்கமில்லாதவள்
இதயமில்லாதவள்
இன்னும் பல........
நான் செய்தததில்
பிழை என்ன இருக்கிறது
அனைவர் நினைவிலும்
கவி விதை விதைக்க
பட்ட பாடு
அப்பப்பா.......
எத்தனை இன்னல்கள்
எனக்கு துளியேனும்
வருத்தம் இல்லை
கவிதை நிறைந்திருக்கும்
விருட்சங்களாக
இப்பூவுலகை மாற்ற
எனக்கு கிடைத்த ஒரு
வாய்ப்பாகவே கருதுகிறேன்.
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு வாய்ப்பு
-
வாய்ப்பு ஒன்று தந்துவிடு
உன்னோடு வாழ
இல்லை உன் நினைவுகளோடு வாழ
எந்நாளும்
-
வானத்தை விட்டு நீங்காத
மேகமாய் உன்னுளிருக்க
எங்கும் உள்ளம்
உன்னோடு இருக்கும்
பொழுதுகள் எல்லாம்
எந்நாளும் பொன்நாள்தான்
திரும்பி பார்க்கிறேன்
-
திரும்பி பார்கிறேன்
உன் கனிவு எனக்கு தெரியவில்லை
உன்னால் நான்பட்ட
கடினமான தருணங்கள் தெரிகின்றன ..
தருணங்கள்
-
வெக்கத்தில்
முகத்தை மறைக்க
நிலவு போல மேகத்தில்
ஒளிந்து கொள்ள
உன் மார்பை தேடி
நான் தவித்துபோகிறேன்
நீ முத்தமிடும்
தருணங்களின் போது ;) ;)
நிலவு
-
பனி உருகி ,மனம் உருகும் மார்கழியின்
மேகமூட்டத்தில் மறைந்திருக்கும்
பனி நிலவு வெளிவருவது போல
கனிமொழியாளின் வரி கண்டதும்
மனம் உருகி ,கவிபெருகி தான்
வடிகிறது , இருந்தும்
ஏனோ ஒரு சில வார்த்தைகள் ,
சிறு சில விஷயங்கள்
கவிபெருக்கத்திற்கு சுருக்கமாய்
மடைபோடாமல் தடை போடுகிறது
கவிபெருக்கம்
-
தினமும் புதுப்புது
தலைப்பினை தந்து
தடையில்லாமல்
கவியலை ஓயாமல்
அடித்து கவிபெருக்கம்
கரைபுரண்டு ஓட
ஏனோ சிறு தடை இன்று..
தடைகள் பல கடந்து
இக்"கவி"யலை என்றும்
ஓயாமல் இங்கே
தொடருவேன்
ஆயிரம் தடைகள் ஏற்படினும் ;) ;) ;)
ஓயாமல்
-
ஓயாமல்
ஓயாமல் வரும் அலையே
ஏளனம் ஏன்
ஓய்ந்து விட்ட ஏன் காதலை பார்த்தா..?
நித்தம் வந்து செல்லும்
பெரும் அலையே
இம்முறையாவது எனை
அணைத்திடுவாய் என நினைத்தேன்
எனை அணைக்காது சென்றதேன்
உன் ஆழ் மனதில் மூழ்க
துடித்தும் விலகி செல்வதேன்
இதே கரையில்
என்னவளின் இதயகடலில்
மூழ்கியதை கண்டாயோ....?
அன்புடன் - சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு ஏளனம்
-
இனி பேச மாட்டேன் என்று கூறி
பேசிவருகிறேன்
இனி பார்க்க மாட்டேன் என சொல்லி
பார்த்து வருகிறேன்
பொய்யாய் கோவம் கொண்டு
தள்ளி செல்கிறேன்..
ஒரு நாள் ஏனும்
உன்னுடன் பேசாதிருக்க நினைத்து
தோற்று போகிறேன்...
என்னை அமைதியாய் பார்த்து
ஏளனமாய் நீ சிரிக்கிறாயே
உன்னால் முடியாதடி என்றா??
தென்றல்
-
தென்றல்
எனை முப்பொழுதும் வருடிய தென்றலே
நீ புயலாய் மாறிய காரணம்
இன்று வரை விளங்கவில்லை
நீ தென்றலாக இருந்த பொழுதை
நினைத்து அகமகிழ்கிறேன்
அவ்வளவு மிதமானவள் நீ
என்பது கனவாகி போனதேன்
நீ காட்டியது பொய் கோவம்
என நினைத்தேன்
நாளும் பார்த்து பேசி
சிரித்தது பொய்யா....
என்ன தீங்கிழைத்தேன் நான்
தென்றலாக இருந்த நீ
கற்பனைக்கும் எட்டா புயலாய்....?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு புயல்
-
உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
பெரும் புயல் தான்..
நீ சென்ற பின்
பெரிய சேதாரம்
என் இதயத்திற்கு
நிவாரணம் வேண்டி
காத்திருக்கிறேன்
வந்து விடு ஒரு முறை
தந்து விடு உன்னை ;)
எனக்கே எனக்காக மட்டும்
நிவாரணம்
-
உன்னை போல் எனக்கும்
சிற்சில, சேதாரம் தான் இதயத்தில்
பதறாதே ,பதறாதே,உன் நினைவை
புயலேன்றும்,பூகம்பமென்றும்
பொய் புகார் வாசிக்கமாட்டேன்
உண்மையில் உன் நினைவெனக்கு
சிறு மெல்லிய பூங்காற்று
பூங்காற்றால் சேதாரமா ?
என கேள்வி எழுமே ?
உனக்குள் உத்தேசித்துகொள், என்
இதயத்தின் மே(மெ)ன்மையை
நானும் காத்திருக்கிறேன் உன்னை போல்
நிவாரணம் வேண்டி இல்லை,
நீ வா ரணம் ------ ரணம் = (உன் நினைவு (பூங்காற்று ) மோதி பெரும் ரணம் )
வேண்டும் என வேண்டி ...!
நீ வா
-
காதல் வரம் வேண்டி
தவித்திருந்தேன்
காதலை தந்தாய்
நேசத்தை கூட நெகிழ்வாய்
முற்றிலும் நிறைவாய் தர
உன்னை தவிர யாரால் முடியும்
கனவில் நீ வா
உன்னுடன் கனவிலும்
தொடருவேன்
என் காதலை
தொடருவேன்
-
என் காதலே ..
நீ இல்லை என் அருகில் ...
உன் நேசம் உண்டு என் மனதில் ...
தொடருவேன் இந்த காதலை ..
ஒளிந்திருக்கும் உயிர் மோதலை ..
காலம் பல கடந்தாலும் ..
அழியாத கல்வெட்டாய் ...
மனதில் தொடருவேன் ...
நம் உணர்வை (உறவை )
உயிர்
-
உடலை மட்டும் நேசிக்கும்
உலகில்
உள்ளதை நேசித்த
உறவு நீ
உயிர் உள்ள காலம் வரை
உறவாய் என் உறவை
உறவுக்கொள்ள
உன்னதமான காதலை
உண்மையாய் தந்துவிடு ;) ;)
உறவுக்கொள்ள
-
உறவுகொள்ள உற்றவள்
உணர்வுகளாய் யார் இருப்பினும்
உரிமையான
உறவு .....நீ
உண்மையின் இருப்பிடமே
உறவுகளாய் பலர் இருந்தாலும்
உதட்டளவில்தான்
உடலாலோ உள்ளத்தாலோ
உறவுகொள்ள
உற்றவள் நீ
உள்ளதை
உண்மையாக கூற வேண்டுமானால்
உள்ளத்தால் என் உடல் நீ
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு உள்ளம்
-
உள்ளம் உன்னிடதிலிருக்க
உன்னதமான காதலை நீ தர
உண்மையாய்
உன் நேசத்தில்
உள்ளம் மகிழ
ஊமையாய் என்னுள்ளம்
உன்னை தேட
உணர்சிகளின்
உச்சத்தில் நான்....
தலைப்பு
ஊமை
-
ஸ்ருதி
உங்கள்
உள்ளத்தில் இவ்ளோ
உ ...வா என வாயடைத்து
ஊமையாகி போனேன்
அருமையான வரிகள்
ஸ்ருதி விட்டு சென்ற தலைப்பு(ஊமை)
தலைப்பு இன்னும் முற்று பெறவில்லை
கவிதை எழுத முயற்சிங்க நானும் முயற்சிக்றேன்
-
(ஊமை)யானாய்
உன்னோடு சிறு
ஊடல் ..... அதற்கா
ஊமையானாய் (மௌனமானாய்)
உனதுள்ளம்
ஊமை என்றதும்
ஊசலாய் என் மனம்
ஊசியை காட்டிலும் புத்தி கூர்மைஉடையவளே
உண்மையான நேசம் காட்டிய
உணக்கா மனதில்
ஊனம்
உள்ளம் தளராதே
ஊன்றுகோலாய்....
ஊக்கம் கொடுக்கும்
ஊழியனாய்.... எப்பொழுதும்
உன்னருகில் இருப்பேன் நான் ...
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு ஊக்கம்
-
கணவன் மனைவிக்கு ஊக்கம் கொடுத்து இருந்தால்
இன்று அவள் சமையல் அறையில் புல்லாங்குழல் ஊதமாட்டாள்
-
ஓவியா நல்ல கவிதை
நன்றிகள் ...
அடுத்த தலைப்பை தராமல் சென்றுவிட்டீர்களே
-
மன்னிக்கவும் ஸ்ருதி
அடுத்த தலைப்பு : புல்லாங்குழல்
-
மன்னிப்பெல்லாம் எதுக்கு ஓவி... :( :(
வாங்க நாம தொடரலாம் ;) ;) ;)
இரு கண்கள் மட்டுமே கொண்டேன்
உன்னை கண்டும்
பேச முடியவில்லை
என்னை பார்த்தும்
பாராமல் நீ
காணும் திசை எல்லாம்
உன் இன்முகம் காண
புல்லாங்குழலை போல
அத்தனை கண்கள் வேண்டுகிறேன்
இறைவனிடம்
என் வரம் கிடைக்குமா?
உன்னை பார்த்துக்கொண்டே
என் உள்ளம் கரைய ஆசையோடு
காத்திருக்கிறேன்
என் வரம்
-
என் வரம்
என்னை காண வேண்டி
இறைவனை நாடிய
என்னவளே
உன் உள்ளத்தில் கரைந்து போன
எனை
புல்லாங்குழலை போல்
பல கண் பெற்றாலும்
காண இயலாது
உன் மனக்கண் தவிர....
உன்னையே
என் வரமாய் பெற்றிட
நான் கொண்ட தவத்தின்
பலன் நீ
பிறகெதற்கு
தனி வரம்....?
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு மனக்கண்
-
நண்பனே ....
தோல்வியுற்று... ஆறுதலற்று....
வாழ்கை வெறுத்து இருந்தேன்...
வாழ்வின் அழிவில் நின்றேன் ..
என் மனக்கண் திறந்து ...
அன்பை பொழிந்து ...
வாழ்வில் வசந்தம் வீச செய்தாய் ...
அன்பான ஆறுதல்கள் ..
இயல்பான அறிவுரைகள் ...
உணர்த்தியது ....
"நல்ல நட்பு வாழ்வின் ஆதாரம் "
ஆதாரம்
-
ஆதாரம்
திக்கற்று திரிந்த
உன் மீது கொண்ட
அக்கறையால்
உதவிகள் பல செய்து
நட்பின் ஆதாரமாய் திகழ்ந்த
எனை சேதாரமாக்க்கியவளே
நட்பு எது.....
நேசம் எது..... என ?
உன் மனக்கண் கொண்டு
பகுத்து பார்
அப்பொழுது விளங்கும்
நட்பின் இலக்கணம்.
அன்புடன் -சுதர்சன்சுந்தரம்
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு சேதாரம்
-
உன் அங்கம் முழுதும் தங்கம் தான்
இருந்தும் ,அங்கத்தின் ஒரு அங்கமான,
அது தான், உன் தங்கமான இதயம்
அதை சொந்தமாக நான் வாங்கி
பட்டைதீட்டி , பதம் பார்த்து
பதமாய் , இதமாய் , அழகாய்
அற்புதமாய் ,ஆபரணமாய்
வடித்து வைத்திருக்கின்றேன்
செய் கூலி கூட கேட்கவில்லையே நான் ??
இருந்தும் , எதிர்பாரா சேதாரம் அதன்
பகரமாய் என் உயிரை கோருவது
முறையா ???
முறையா ???
-
உன் இதயச் சிறையில்
அடைத்து விட்டு
உன்னைத் தேடும்
என்னை கண்டும் காணாமல்
தள்ளிச் செல்வது முறையா?? ;) ;)
இளமை......
-
காலம் என்னை பின்னோக்கி ..
அழைத்து சென்றது..
அழகான மழலை காலம் ...
ஒன்றும் அறியாத பருவம் ...
இதமான குழந்தை காலம் ..
நெஞ்சில் நீங்காத பருவம் ..
இனிமையான இளமை காலம் ..
மனதில் என்றும் நிறைந்து ..
நீங்கா அருமை பருவம் ...
கனவு
-
நான் சுவாசிக்கும் உயிர் மூச்சு நீ
எனக்குள் துடிக்கும் இதயம் நீ
பார்க்கும் விழிகள் நீ
பேசும் மொழிகள் நீ
கனமான அன்பு நீ
குணமான பண்பு நீ
மனதில் உலா வரும் நிஜம் நீ
எனை தொடர்ந்து வரும் நிழல் நீ
என் சுவாசமான பாசம் நீ
நான் நேசிக்கும் நேசம் நீ
என் கனவு தோழியே
என்னையும் அறியாமல்
எப்படி வந்தாய் எனக்குள் நீ ........?
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு பாசம்
-
valigal pala thaangi ..
nammai eendral nam thaai..
vilaigal pala koduthaalum..
kedaika arum porul..
anbu porul..thaai pasam..
paasathin thalaimai..
thaai pasam...
thai madi thalaivaithu..
thaalattu pala keytu..
kittum antha urakkam ....
ethinai sugam..
perum sugam..
thaai ootum ...
paal soru..
ethunai suvai..
arum suvai..
intha thaai pasathil thaan..
ethinai ethinai enimai..!!!
keylvi
-
ஆயிரம் கேள்விகள் என் மனதில் இருந்தாலும்
அவரை பார்த்த அந்த சில நொடிகள்
பேசும் திறனை என் மனம் இழந்து விட்டது
காரணம் புரியவில்லை
பயமா ?
பக்தியா ?
தயக்கமா ?
என் உடல் மேல்ல சிலிர்த்தது
மௌனமாக ஒரு பொம்மையா போல
அம்மா சொல்லி கொடுத்தது போல பணிந்தேன்
ஆம் இன்று எனக்கு
முதல் இரவாம்!!!!!!!
-
oviya nalla muyarchi
antha tharunam anaivarukum kelvei kurithan
athu nizhalai manathil thodarnthathu nanavaagum nijam...
ungaluku porumai migavum avasiyam avasaramaga thalaipai thrathu engey sendrirgal, oruvelai bommaiyaagi poneergala...
padaippai pathikum pothu thalaipai vittu sellavum...
endrum ungal paasaamana brother
-
naan bommaiyaaga poii pala kaalam aagui vittadhu sagodararei
marandhu vitten avolotaan..
idho en talaippu :
அம்மா
-
எனக்கு உயிர் கொடுத்த தூரிகையே ..
உன்னுள் என்னை சுமந்தவளே..
கருவறையை அடைக்கலமாய் ..
சில மாதம் அளித்தவளே..-என் அம்மா ..!!!
காற்றின் சப்தத்தை இசையாக்கிய ..
யாழின் பெருமையை பெற்றவளே..
வலிகள் பல பொறுத்து என்னை ஈன்றவளே - என் அம்மா..
இனி ஒரு வாழ்கை உண்டெனில் ..
இனி ஒரு பிறப்பு இருக்குமெனில் ..
உன்னை அம்மா என்று என்றும் அழைக்க ..வேண்டுகிறேன் ...!!
உணர்வு
-
தள்ளி நின்று
வேடிக்கை பார்க்கிறாய்
என் உணர்வு நீதானே
புரிந்தும் புரிய மறுகின்றாயா
இல்லை
மறக்க நினைக்கின்றாயா
நீதானே
-
என்னை படிக்க செய்தது தமிழ் என்றாலும்
வரிகள் பதிக்க செய்தது நீதானே !
என்னை போற்றி பாராட்டுபவர் பலர் என்றாலும்
அப்பாராட்டுக்கு ஏற்றவனாய் மாற்றியது நீதானே !
என்னதான் என்னுடன் பேசவில்லை என்றாலும்
என் பெயரின் பெருமைக்கு முதல்காரணம் நீதானே !
யார் நீ ??
அடுத்த தலைப்பு - யார் நீ ???
-
உன் எழுத்துகளால் ...
என்னை அடிமையாகினாய் ...
நான் அறியாமல் ...
என் மனதை உனதாக்கினாய்..
நீ யார் என்று புரியாமல் ..
என்னை..என் மனதை ..
பைத்தியமாகினாய் ...
யார் நீ ???
அடிமை
-
வெள்ளியானிடம் பெற்றோம்...
விடுதலை!
விடுதலை பறிபோனது...
அரசியல் கோமாளிகளிடம்!
இக்கோமாளிகளிடம் என் மக்கள்...
இன்னும் அடிமையாய்!
அடிமை சாசனம் இன்னும்...
தொடர்கிறது!
அடுத்த தலைப்பு : போராட்டம்
-
தான் பசி இன்றி
பால்லுட்டி சீராட்டி
வளர்ப்பார்கள்
இரவு பகலாக
வியர்வை சிந்தி தான் பிள்ளையை
படிக்க வைப்பார்கள்
கடன உடன வாங்கி
வேதங்கள் முழங்க
உற்றோர் உறவினர் வாழ்த்த
தான் பிள்ளைக்கு
மணம் முடித்து மகிழ்ந்து போவார்கள்
இப்படி
ஆயிரம் போராட்டத்துக்கு பிறகு
அவர்களுக்கு காத்திருப்பது
"முதியோர் இல்லம்"
எனது அடுத்த தலைப்பு :
முதியோர் இல்லம்
-
அன்பு இல்லம்
ஆதரவற்றோரின் ஆனந்த இல்லம்
இயலாதொரின் இனிய இல்லம்
ஈகைஉள்ளவர்களால் நடத்தப்படும் கொடைஇல்லம்
உறவுகளாய் வாழும் உணர்வு இல்லம்
ஊக்குவிக்கும் இல்லம் உள்ளம் தளர்ந்தோருக்கு
எளிய இல்லம்
ஏனையோருக்கும் கருணை இல்லம்
ஐயமில்லா(பயமில்லா) இல்லம்
ஒற்றுமை இல்லம்
அன்பும் ஆதரவும் கருணையும் மிகுந்த இல்லம்
என் முதுமையின் கனவு இல்லம்
அடுத்த தலைப்பு கருணை
-
வருமையும் வரதட்சனையும்
இல்லாமல் இருந்திருந்தால்
இன்று ஆயிரம்
பெண் சிசுவின்
கருணை கொலையை
தவிர்த்து இருக்காலம்
எனது அடுத்த தலைப்பு :
வரதட்சனை
-
உறவை வரவாக்க
உருவாக்கிய தட்சணை
வரனை உறவாக்க
வந்த தட்சணை
பெண்ணை
இன்பமாய்
தங்கமாய்
சொர்க்கமாய் படைத்தும்
இந்த பாழாய் போன வரதட்சணையால்
பல பெண்கள் முதிர்கன்னியாகவே..........
தாங்கள் தொடர வேண்டிய தலைப்பு முதிர்கன்னி
-
முதிர்கன்னி....!
ரோசா...ஒன்று பூத்திருக்குது....!,
எந்த,..ராசவுக்கென்று.....தெரியவில்லை....?,
தினம்,.. தினம்..., செயற்கையாய்....அலங்காரங்கள்,
இயற்கையை......மீறி...?
சன்னலோரம்...காத்திருந்ததில்....,
சன்னல்கூட...,சன்னமாய்......தேய்ந்ததில்......ஆச்சர்யமில்லை...?,
இப்படி....எத்தனைக்காலம்......?
எனக்கு...ஏற்றவனுக்காக......தெரியவில்லை .?
அடுத்த தலைப்பு = இதயம்
-
என் இமயமே
இதயத்துள் நீ
இதயமாய் நான்
இமைக்குள் நீ
இமையாய் நான்
கவிதையாய் நீ
கவியாய் நான்
கதையாய் நீ ஆனால்
தொடர்கதையாக நான்.........
தொடர வேண்டிய தலைப்பு இமை
-
கண்ணின்
இமையாய் இருப்பாய்
என்றிருந்தேன்
கண்ணீராய் இருக்கவே
நீ நினைப்பது ஏனோ
கண்ணிமை
-
கண்ணிமையாய் இருந்தாலும்
கண்ணீராய் இருந்தாலும்
உன் மயில்விழியை காத்திடும்
அடியவன்
உன்னவன்.......
-
கவிதை விதைi விதைக்கும் களைப்பில்
நல்லபடியாய் கவிதை தரவேண்டிய மலைப்பில்
நற் ' க விதை விதைத்துவிட்ட திளைப்பில்
அடுத்த தலைப்பை விட்டுசெல்ல மறந்த தவிப்பே !
விடமறந்த தலைப்பையே '' தலைப்பாய்' ' எடுத்து
கவிதை பதிப்பு பதித்திட ஏதோ என்னாலான சிறு உழைப்பு
அடுத்த தலைப்பு - உழைப்பு
-
uhaippu melonga
yerpatta kalaippin
miguthiyaal vantha urakkam..
kannil kalakkam karanaamaga
thalaipai tharamal sendratharkku
thavipai thalaippai yetra kaviyin
mannipaai vantha thalaipu uhaaippu
thaangal thodara vendiya thalaippu kalaipu
-
நல்ல வார்த்தை சேர்ப்பு
நல்ல முயற்சி
நல்ல முன்னேற்றம்
நிறுத்தல்,சேர்த்தல்,புகுத்தல் நீக்கல்,
நிறுத்தக்குறி இடுதல் ,தொடர்குறி இடுதல்
இதுபோன்ற இடங்களில் களைப்பு பாராமல்
கூடுதல் கவனம் செலுத்தினால்
சுதரின் வரிகளில் சுடரின் ஒளி
படரும் என்பது உறுதி !
அடுத்த தலைப்பு
சுடரின் ஒளி
-
சுதர் (ஜோதி) சன் (சூரியன்)
சூர்ய ஜோதியை பெயராய் பெற்றவன்
ஜோதி மிகுந்தவனல்லன்
இருப்பினும் மேற்கண்ட குறை
களைந்து சுதரின் ஒளி
சுடர் ஒளியாய்
படர முயற்சிப்பவன்...
அடுத்த தலைப்பு சூர்யஜோதி
-
சூரியா ஜோதிகா வின்
இல்லத்தில் ஒரு சூர்யஜோதி
இது போல் அனைவரின் குடும்பதில்
சூர்யஜோதி ஒளிரட்டும்
அடுத்த தலைப்பு:குடும்பம்
-
அடிமை.
அன்புக்கு நான் அடிமை
நல்ல பண்புக்கு நாம் அடிமை...
-
navan nice lines
neengal thodara vendiya thalaipu kudumbam
atahkku muyarchi seiyungal...
-
குடும்பம்
ஒரு பல்கலை கழகம்......கற்று கொள்ள
ஒரு தியானசாலை.....தியானம் செய்திட
ஒரு சோலைவனம்.....உலவி வாழ்ந்திட
ஒரு சொர்கலோகம்.....பரவசம் அடைந்திட
ஒரு அங்காடி.....அனைத்தும் பெற்றிட
ஒரு வாகனம்....என்றும் பயணிக்க
ஒரு தேன்கூடு....கூட்டாய் இனித்திட
ஒரு மைதானம்....விளையாடி மகிழ்ந்திட
ஒரு வானவில்....பல குணங்கள் ஒன்றித்திட
ஒரு கோயில்....தூய்மையாய் இருந்திட
ஒரு வங்கி....சிக்கனமாய் சேமித்திட
அடுத்த தலைப்பு = முகம்
-
Mugam
அலைந்த போது
அறியா உன் முக (ம்)வரி
உன்னை தொலைந்த போது
தெரிந்தேன் உன்னையே
-
வணக்கம் !
வாங்க, வாங்க ! முதல் பதிப்பே முத்தாய் பதித்து இருக்கின்றீர்கள் !
பதிப்பை பதித்த களைப்பிலோ ? தலைப்பை விட்டு விட்டீர் ?
தலைப்பை விட்டு செல்லுங்கள் !
-
அஞ்சு எனும் பெயர் பெற்றதனால் தானோ ?
ஐந்தே வரிகளில் அழகாய் ஒரு பதிப்பை விட்டு சென்றீர் ??
தொடர ஏதும் தலைப்பு இல்லாததால்
தொடரவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்
தலைப்பாய் ஆக்கினேன் உன்னையே !
அடுத்த தலைப்பும் - உன்னையே
-
Anju aval etharkkum
Anjaathaval
Aval aasiriyai endraal ennai
Arinthaval nallathor
Arattai pakkathil
Anbu mazhai pozhinthaval
Aval neethan enil
Annan ivan kavisolai il
Anjaamal varaverkiren unnaye
Adutha thalaipu VARAVERPU
-
வாழ்த்தி வரவேற்று ,
தன்னுள் குடியிருக்க அனுமதித்த
என் இதயத்திற்கு
நன்றியாய்,
ஆறகாயத்தை அழியா கால்தடமாய்
விட்டுச்சென்ற உன்னை
மீண்டும்
வரவேற்க துடிக்கிறது
என் இதயம்
அருமருந்தாய் வருவாய் என்ற
நம்பிக்கையில்
அடுத்த தலைப்பு :
நம்பிக்கை
-
ஆறா காயத்தை அவர் அளித்தது
என்னவோ தேறா காரியமாய் தெரியவில்லை
மாறா காதலின் அடையாளமாய்
ஆறா காயமாய் அழியா கால்தடமாய்
பதித்தும் இருக்கலாம் தானே ??
நம்பிக்கை.யுடன் நீ அவரை வரவேற்பதும் தவறில்லை
அரும்மருந்தாய் என்ன ? ஆழமான
நம்பிக்கை இருந்தால் மருந்தாய்
மட்டுமல்ல ,உன் வாழ்விற்கு
விருந்தாய் வருவாள். வாழ்த்துக்கள் !
அடுத்த தலைப்பு - வாழ்த்துக்கள் !
-
Anju un
Arumpathipirku
Annanum aasaium alitha
Azhagaana varaverpai kandu
Anji ponayo.....?
Anjaathey etharkkum
Arattaiyilirunthu kavisolaikku
Azhagaai thadam pathitha nee
Anna nadai poduvaayena nambikkaiudan kaathirukum
Anbargalin thavipirku
Arumarunthaai aaruthalaai
Aazhamaana karuthil kavi
Amaithida vaazhthukkal
adutha thalaipu KARUTHTHU
-
கருத்து மாறி போனதால்
வழி மாறி போன பறவையே
உன்னை தேடும் என்னை
உணருவாயா...
ஒரே கூட்டு பறவைகள் நாம்
கோவம் தனித்து வரும்
காலம் என்று வருமோ??
காத்திருக்கிறேன் காதலுக்காக அல்ல
நட்புக்காக
நட்புக்காக
-
உன் அருகாமை கிடைக்கும் என்றால்
கருத்து மாறி போனால் என்ன
என் கழுத்தே மாறி போனாலும் கூட
உன்னை உணராமல் இருக்கமுடியாது
ஒரே கூட்டினில் முடியுமோ முடியாதோ
தெரியவில்லை ?
ஆனால் ஒரே சாட் இனில் முடியும் .
நட்புக்காக இல்லாவிட்டாலும் கூட
வெறும் ஒப்புக்காகவாவது
காத்திரு காத்திரு
அடுத்த தலைப்பு - காத்திரு
-
வழி மாறி போகவும் இல்லை
விழி தாண்டி பாயவும் இல்லை
ரணப்பட்ட இதயத்திற்கு
சுகபட்ட செய்தி கிடைக்கும்வரை
காத்திரு என்ற
என் இதய கட்டளைக்கு
அடி பணிந்தே அணங்கு இவளின்
அரங்க மறுப்பு
தாள் திறந்தது .... தாராளமாய்
கவிதையும் பிறந்தது
காத்திரு கவிதைகள் ஆயிரம் படைக்கும்
என் கற்பனைகளும் கரங்களும் ..
தாள் திறந்தது
-
Agilathu thevathai
Aazhamaana karuthil
Arumaiaanathoru kavi tharuvaal
ena kaathiruntha velaiyil
Anbu kattalaikku adipaninthu
Arangai thavirthaval kavi
Arangin thaal thiranthathu kandu
Agamagizhnthu ponen.
Adutha thalaipu MAGIZHCHI
-
மனம் மயங்கும் வேலையில்...
கண் அயரும் நேரத்தில்..
அழகான உன் நினைவுகள்...
பனிதேசமாய்...
மனதிற்குள்ளே ...
ஆயிரம்..
பட்டம்பூசிக்கள்...
ஆழகாய் வட்டமிடுவதுபோல ...
மனம் மகிழ்ச்சியில் திளைகிறதே ... !!!!
மனம் மயக்கும்
-
நீலக் கடலில்
நீந்தும் வெண் சங்கு
மாலைப் பொழுதில்
மயக்கும் வெண் பிறை
மயக்கும் மனதை!!!
அடுத்த தலைப்பு=நீலக் கடல்
-
அன்பெனும்
உன் அமுதகடலில்
அனு தினமும்
மூழ்கிவிட்டால்
நீலகடலும் எனக்கு
நிலக் கடல்தான்
அணு தினமும்
-
என் மனதிற்கு சொல்லிவிட்டேன்
எதிர்பார்பினை விட்டுவிடென
உள்ளம் சரி என்ன நினைத்தாலும்
உன்னை கண்ட அடுத்த நொடி
எல்லாம் மறந்து உன்னை சுற்றியே
மனம் வலம் வர
அனுதினமும் கண்ணீரில் கரைகிறேன்...
எதிர்பார்பினை
-
எதிர்பார்பில்லா மனம் கொண்ட நான்...
முதன் முதலாய் எதிர்பார்த்தது...
ஒரு பெரும் எதிர்பார்ப்பு ....
அப்பெரும் ...
எதிர்பார்ப்பினை..
எதிர்பார்த்ததாலோ...
என்றும் என்
எதிர்பார்ப்பின்
விடை..
ஏமாற்றமே.......
ஏமாற்றம்
-
எதிர் பார்ப்புகளை
தவிர்த்திருந்தால்
மாற்றத்தை தடுத்திருக்கலாம்
அதற்க்கு உன்னை
ஏறெடுத்து பார்க்காது இருந்திருக்க வேண்டும்
என் ஏடே நீயான போது
ஏறெடுத்து பாராமல் ஏது
ஏமாற்றம் இல்லாமல் ஏது ....?
மாற்றத்தை
-
மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது
எனும் தாரக மந்திரத்தை
மாற்றாமல் வைத்திருப்பவளே !
வெறும் மாற்றத்தை ஏமாற்றம் என்று
தடுமாற்றத்தில் ஏதோ மாற்றி உரைப்பவரை
மாற்றம் காண எண்ண ஏற்றம் காண வைப்பது போல்
ஆக்கமாய் ,பெரும் ஊக்கமாய் ஏதும் கோறாமல்
கூடுதல் தடுமாற வழி வகுக்கும்
கூற்றை கூறினால் என்ன செய்வார்
ஏமாற்றத்த்தை ஏமாற்றி
பெரும் மாற்றத்தை நான்
மாற்றி காட்டுவேன் !
இவை அனைத்தும் வெறும் மாற்றமே !
அடுத்த தலைப்பு - ஏற்றம்
-
Paniyil yetram perum velaiyil
yerpatta yemaatrathil
manathil siru thadumaatram
thadaigal pala kadanthaal
maatram varum
nalathoru yetram varum
ena therinthum
yemaatram thantha thadumaatrathil
manam ethilum layikkaamal
kutram izhaithavan pol
kalakathileye naan.
-
ஏற்றத்தினை எதிர்நோக்கிய மாற்றத்தினால்
வந்த ஏமாற்றத்தினால் தந்த தடுமாற்றத்தினால்
தலைப்பை தர மறந்துவிட்டாய் தோழா !
நறும் தலைப்பொன்றை தந்துவிட்டு போடா !
(டூயட் பட கவிதை பாணியில் படிக்கவும் )
-
Kutram enbathai thalaipaai thara ninaithavan
thalaipai tharaamal kutramizhaithavan
kutra unarchiyil ullavanai
mannikavum.
Adutha thalaipu KUTRAM
-
உன்னை எனகென படைத்தது
என்னை உனக்கென்ன படைத்தது
இறைவன் குற்றம் அல்ல ..
உன் இதயத்தில் நான்
இல்லமால் போனதுதான்
பெரும் குற்றம் ...
கடவுளை நோகேன்
கண்டும் காணமல் போகும் உன்னை தவிர ...
பெரும் குற்றம்
-
உன்னுள் நான் இருப்பதாக
நினைத்துகொண்டு
உன்னையே சுற்றி சுற்றி வந்தேன்....
நீயோ என்னை விடுத்து
எதை எதையோ தேட
நொறுங்கி போகிறேன்...
நேசம் இல்லா
உன்னை நேசித்ததும்
பெரும் குற்றம் தான்...
குற்றத்துக்கு தண்டனையாய்
உன் ஒரு பார்வையால்
என்னை கொன்றுவிடு போதும்
-
ஏமாற்றம் இறங்கி மாற்றமாய்
ஆனதை கண்டு உவகை கொண்டேன் .
பின் மாற்றமே குற்றமாய்
ஏற்றமாய் கண்டு பின் குற்றமே
கூடுதல் ஏற்றம் கண்டு
பெரும் குற்றமாய் ஆனதை
எண்ணி வருந்தி கொண்டிருந்தேன் ,
என் வருத்தம் பெரிதாய் ஆவதாய்
மீண்டும் ஒரு குற்றம் ....
தலைப்பை காணவில்லை ....
-
Thalaipai tharamal sendrathu en
thalaipil enna irukirathu enbathaalaa
illai thalaipey naam enbathaala
koorividu alathu pirithoru
thalaipai thanthuvidu
illaienil arangin thalaipu seithiyil vanthuvida pogiraai
thailaipai tharamal sendravalai kaanavillai endru...
-
தலைப்புகள் காணமல்
ஒரு தடுமாற்றம்
எல்லா இடத்திலும்
எல்லாவற்றிலும் ஒரு தேடல்
இங்கோ தலைப்பை தேடலாய்
போனதோ...
இல்லாத தலைப்புக்கு
கவிதை படைப்பதும்
ஒரு திறமைதான்...
திறமை
-
திறமை என்றெல்லாம் எதுவும் இல்லை
அப்படியே இருந்தாலும் ,அதில் என் தனித்திறமை எதுவவும் இல்லை.
உன்(உங்கள்) வரிகளின்,வாழ்த்துக்களின் வனப்பும்
வசீகரமும்,வசீகரிக்கும் குரலும், வெறுமை அடைந்தால்,
ஏன் ,ஒரு துளி வறுமை அடைந்தாலும் கூட
பெருமையாய் பாராட்டப்படும்,சீராட்டப்படும்
என் வரிகள் ஏது ??
அடுத்த தலைப்பு - வசீகரம்
-
வேஷம் கலந்த உலகில் ...
விசேஷமாய் அன்பை தந்தவன் நீ...
நேசம் மறந்த உலகில்...
அன்பால்... நேசத்தால் ....
தெய்வீக காதாலால்...
என் மனதை ...
வசீகரித்து...
ஆட்கொண்டவன் நீ ....
என்னவன்..என் உயிரானவன்...
என் உயிர் காதலன் நீ...!!!!!
வேஷம்
-
தினம் நான் சந்திபதிபவர்கள்
என் மீது அன்பு பாசம் நேசம்
இவை எல்லாம் கொண்டவர்கள்
என்றுதான் எண்ணினேன்
இன்றுதான் கண்டேன்
இவை அனைத்தும் வேஷம் என்று... :)
கண்டேன்
-
உன் சிரிப்பில் முத்துக்கள்
சிதற கண்டேன்!
அதில்...
என் இதய
துடிப்பை கண்டேன்!
இதயம்
-
இதயம் என்று ஒன்று
இல்லாது இருந்திருக்கலாம்
கண்ணீராவது மிச்சமாகி இருக்கும்
மிச்சமாகி
-
பெண்ணே நம் காதலில்
எனக்கு மிச்சமாகி போனது
உன் நினைவுகள் மட்டுமே......
நினைவுகள்
-
நினைவுகள் மட்டும்
இல்லாதிருந்தால்
இன்பத்தை கூட
நினைத்து பார்க்க
இயலாமல் போயிருக்குமோ?
நெஞ்சே நீ நீங்கதே
நினைவே நீ மறையதே...
மறையதே..
-
Ilatha thalaipuku
Ingu kavithAi padaithathu thiramai
Endraal thalaipuku kavi padaikka
Evarenum irukamaattargalaa
Ena puthu thalaipitirukum
Sagothariyin yekkam kalaithida
Siriyathai our pathipu
Nee chee po vaa mm ena Or ehuthil
Nenjai vittu neengaatha
Ninaivil irunthu maraiyaatha
Kavi punaiya unnaal mattumey mudium Penney
Adutha Thalaipu mudium
-
வாழ்த்தை தான் வழங்க வேண்டும் என்றால்
அதை நேராக வழங்கிடலாமே !
குறிக்கோள் உடன் பதிப்புக்களை பதிக்கும் புது "கோ" வே !
உங்கள் குறிக்கோள்களுடன் பின் வரும் குறி (நிறுத்தற்குறி,தொடர்குறி,நீட்டர்க்குறி,கேள்விகுறி ) ,களையும்
கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் பொருத்திக்கொண்டு
பதிப்போ,பதிலோபதித்தல் இன்னும் அழகாக
அர்த்தபூர்வமாக ஆக்கமுடியும் .
அர்த்தபூர்வம்
-
குறையாய் பதிப்பவனே "கோ" எனில்.....
குறைகளை சுட்டும் "கோ"வின் "கோ"வே
குறிகளின்றி
குறையுள்ள கவி பதிப்பது
குறிக்கோள் இல்லை
எக்குறியை எங்கு பயன்படுத்துவதென ?
அறியாததால் வந்த குறைகள்....
எக்குறியை
எங்கிடுவதென
குறிப்பிட்டு
கூறினால்
அர்த்தமுள்ள வார்த்தை கொன்டு இலக்கண நடையோடு
அர்த்தபூர்வமான இலக்கியம் படைத்திடவே
ஆசை..... "ஆசை" முன்.
அடுத்த தலைப்பு அறியாமை
-
அழ வேண்டும் போல் ஆத்திரம் துடிக்கிறது
அழும் போது மனக்குமுறல் ஆற்றாமல் வெடிக்கிறது
ஏன் என்றால் நான் அறியாமை செய்த தவறினால்
என் மனம் படும் வேதனை யார் அறிவரோ !!!
அடுத்த தலைப்பு:ஆத்திரம்
by sana
-
ஆத்திரம் அடைந்து அனாவசிய வேலைகள் புரிந்து
அவஸ்த்தைகளுக்கு உள்ளாவது , உள்ளாக்குவதை விட
அழ வேண்டும் போல் ஆத்திரம் துடிப்பது ஒன்றும்
அவ்வளவாய் பெரிய அனாவசிய வேலை இல்லை !
அப்படியே ஆத்திரம் கொள்வதை ,
அனைத்து சாஸ்திரங்களும் சாடி வந்தாலும்
அன்னமே ! உன் ஆத்திரம் குறித்த குறிப்பதனை
அழகு சூத்திரமாய் ஏற்று கொள்ள ஏற்புடையதே !
சூத்திரம்
-
பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வெற்றியின்
சூத்திரம் பெற
ஆத்திரமின்றி ஒவ்வொரு
மாத்திரமும் சிந்தனையில் மூழ்கி தன்
கைத்திறம் கொன்டு உழைப்பார்களெனில்
வெற்றி நிச்சயம்.!!
அடுத்த தலைப்பு மாத்திரம்
-
என் பதிப்பை பார்த்த மாத்திரம் - பதில்
பதிப்பை பதிக்கும் மதிப்பானவரே
உன் பதிப்பில் ,என் பதிப்பின் சாயல்
லேசாய் இருப்பதை, அறிவாயோ?
அறியவில்லையோ ? தெரியவில்லை .
இருந்தும் உன் பதிப்பின் மதிப்போ ,
இல்லை அப்பதிப்பால் உன் மதிப்போ
நேரடியாய், மறைமுகமாய் பாதிக்குமோ
என்ற அச்சம் எள்ளளவும் இல்லாமல்
பதிப்பை பதிக்கும்
உன் மதிப்பான பதிப்புக்கு -
என் முதல் மதிப்பெண் .
நல் எண்ணத்தில்,
சொன்னாலே கேட்காத
சில தாழ்வுமனபானமையின்
தவ புதல்வர்களுக்கு மத்தியில்.
சொல்லாமலே புகழ் ப(பா )டும்
உன் பதிப்புக்கும்
பதிப்பிடும் பதிப்பாளருக்கும்
என் நன் மதிப்பு !
மதிப்பு
-
வாசம் வீசும் அத்தனை பூவிலும்
சிறந்த பூ.. முல்லை பூ!
அதை காட்டிலும் தனி சிறப்பு
ஆசையின் பதிப்பு.!
அப்பதிப்பில்
இனிப்பு, கசப்பு,
புளிப்பு, கார்ப்பு,
உவர்ப்பு, துவர்ப்பென
அறுசுவையும் கலந்ததாலேயே
அதன் மேல் பெருமதிப்பு!
ஐசக்நியூட்டனின் கண்டுபிடிப்பு புவியீர்ப்பு
அதுபோல் உன் (கவி)மீது தனி ஈர்ப்பு.
அடுத்த தலைப்பு சிறப்பு
-
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
என்றென்றும் வாழ்வதுதான் சிறப்பு
எங்கோ நீயும்
இங்கே நானும்
வாழ்வதில் ஏன் இந்த தவிப்பு
வா வாழ்ந்திட ....
தவிப்பு
-
மனதிற்குள்ளே ஒரு தவிப்பு..
கண்ணாலன் உன்னை காண...
மனம் படும் பெரும் தவிப்பு...
கண்டால் மட்டும் போதுமா??
என் மனம் கேட்கும் கேள்வி....
பதிலும் மனதிடமே.......
அனைத்தும் அறிந்தும்...புரிந்தும்...
ஏற்க மறுக்கிறது..
பிடிவாதமாய்...
என் மனது...
மறுக்கிறது
-
என் மனதும் தான் மறுக்கிறது
மனம் நிறைந்த,
மணம் நிறைந்த
அவளை
ஒரு நாள் வேண்டாம்
ஒரு நிமிடமும் வேண்டாம்
ஒரு நொடியாவது
மறந்து இரு என
மன்றாடியும் .
மன்றாடி
-
என் நினைவில் உள்ளவளே....
என் நினைவாய் உள்ளவளே....
என் நிழலாய் உள்ள உனை நிஜமாக்க
எவ்வளவொ மன்றாடியும்,
என் மீது கருனை வராதது
ஏன் பெண்ணே?
அடுத்த தலைப்பு கருணை
-
கவிதையின் சிகரம் பாரதியார்
கருத்தின் சாரல் கண்ணதாசன்
கர்ம வீரராய் உதித்தவர் காமராஜர்
கருனையாய் மலர்ந்தவர் அன்னை தெரசா !!!
அடுத்த தலைப்பு:சிகரம்
-
உன் துனை இருந்தால்.....
சிகரம் என்ன?
செவ்வாய் கிரகம் என்ன?
எதையும் எட்டுவேன்
எளிதில்.....!
அடுத்த தலைப்பு துனை
-
தனியாக மனம் இருக்க...
மனதிற்கு துணையாக..
நிரந்தரமாய் வேண்டும்...
நீங்காத உன் நினைவுகள்.....
நிரந்தரமாய்
-
துணை
அமையாதவர்க்கு அமையும் வரை
சொர்கத்திற்கும்,போக்கிஷத்திர்க்கும்
இணை
அமைந்ததும் சில காலத்தில்
அமைந்தவர்க்கு அவர் பிணை(அடிமை)
அமைந்தாலும் அமையாவிட்டாலும்
நினைவின் நிஜத்தின் அனைத்தின்
துணையின் நிரந்தரமாய் நீ .....
அடுத்த தலைப்பு
பிணை
-
உனக்கு துணையாக
நான் இருக்கும் போது
பிணையாக ஏன்
இதயத்தை கேட்கின்றாய்
துணையே நான் ஆன போது
பிணை தேவையா என்ன ...?
தேவை
-
என் மனமே...
என் மனதில் நீயே
நிரந்தரமான பிறகு,
நிலையான துணைக்கோலமிட நான் இருக்க
நினைவு கோலமேன்...?
தனிமை கோலமேன்...?
அடுத்த தலைப்பு கோலம்
-
என் மனதில்
பல புள்ளிகள் வைத்தேன்
நீ கோலம் போடா வருவாய் என்று
வந்தாய் ....
கோலம் போடா அல்ல
போட்ட புள்ளிகளை அளிக்க
புள்ளி
-
புள்ளி புள்ளியாய் வைத்து
சொல்லி அடிக்கும் கில்லியை போல
படிப்போர் மனம் துள்ளி துள்ளி
குதித்திடும் வண்ணம் வரிகள் பதித்திடும்
அலியை ,மல்லியை ,முல்லையை புறம்தள்ளிய
உயிர் ரோசாவே ! உயர் ரோசாவே !
அடுத்த தலைப்பு
கோரிக்கை ....
-
ஏன் இந்த சித்து விளையாட்டு
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு
முகமூடி ஏனோ...
எல்லாம் உனக்காக தான்
உனக்கே உனக்காக
எல்லோருக்கும்
இதே வரிகளை கூறி
கட்டுக்குள் வைப்பதாக
தவறான எண்ணம் ஏனோ
புரியவில்லை சிலரை
புரியும் எண்ணமும் இல்லை
ஒரே கோரிக்கை
வேண்டாம் இந்த விபரீத
விளையாட்டு...
விளையாட்டு
-
Vilaiyaaattaai Vilaiyaadum vilaiyaaattu
Pagudhikkey Nerimurai vendumena
Maraimugamaai Neradiyaai KuraiNirai
Koorubhavan Naan
Ekkuraiyai , Perum Kuraiyaaai BaaviThthu
ManakkuraiyaI,Kuraimanadhai
Velipaduththugiradho Isaiyin Parinaamam ???
Theriyavillai, ThelivumIllai
Thelivu veindubavar Ellaam,Thelivaai
Thellathelivaai ThaniThagaval Thanil
keyttu Therindhu, Thelivadaindhu kollalaaam !
Aduththu Thalaippu
ManakkKurai
-
மனதொன்று இருக்குமானால்
குறைகளுக்கும் குறைவில்லை போலும்
எங்கு பார்த்தாலும்
குறைகளை தழுவியே
குயில்களும் இசைக்குதே
இசை
-
குயிலிசையும் கேட்டதுண்டு...
குழலிசையும் கேட்டதுண்டு...
ஸ்வரங்களேழும் உள்ளடங்கிய குழலிசையை விட
ஸ்வரமில்லா குயிலிசை இனிமை!
அடுத்த தலைப்பு இனிமை
-
ISAI vandha Dhisai paarththu
Manam Kulirndhein....
idhu Inimaiyaana Vairamuththuvin Vaira Vari
ISAI thandha Vasai Paarthu
Manam Odindhein....
Idhu Aasaiyin Soga Vari
Aduhtha Thalaippu
OdindheiN
-
உன்னோடு அவளை
உடன் பார்த்தாய்
பலர் சொன்ன போதும்
பக்கென்று சிரித்தவள்
இன்று என் கண் பார்த்தபோது
ஒடிந்தேன் சுக்கலாக ...
உன்னோடு
-
Unnodu irukkum Oru Siru
Kuraiye Idhu Dhaan.
Aaakkapooorva Kannottaththil
Edhaiyum Paarka Pazhagu.
Edhaiyum Kuttram Paarkkin
Suttram Illai
Adhaiye , Innum Thelivaai sariyaai
Uttru Paarkkin Kuttramey Illai.
Aduththa Thalaippu
PAZHAGU
-
சோகத்தில் மூழ்கிய தேகத்திற்கு
மோகண இசையே மருந்து.
இசையோடு சேர்ந்த வசை அருமருந்து.
வசையிசையே அருமருந்தெனில்
இசையின் வசை பெருமருந்து.....
அடுத்த தலைப்பு மருந்து
-
AdappaaVamey !
Ennai Therindhu,Nandraaai Purindha
Jeevanaai Nambi Irundha Isaiyidam Irundhu
VaSaiyaai Vasai Vandhadhaddhai Arindhu
Adhirndhu ,Adhirchchiyil Uraindhu
Manadhaaal Varundhi, KunDhikkondirundhaal
Marundhendrum,ARUMmarundhendrum
Thirindhu kondrukkindraaai.
Oru Vagaiyil Un Variyil Porundhikollgirein.
Aaam MARUNDHU dhaan,ARUmMArundhu dhan
Pini NeeKkum MarunDhalla, Sirugs Siruga
Uyir PoAkkum MARUNDHU... ..
Aduthta ThalAippu
URAINDHU
-
வசைக்கு வருந்தி
இருந்து விடக்கூடாதென
படைத்தேன் விருந்து.....
அறிந்து கொடுத்தேன் மருந்து.
விருந்தே உயிர் கொள்ளும் மருந்தென
தெரிந்ததும் அதிர்ந்த
அதிர்ச்சியில் இருந்து
மீளாமல் உள்ளேன் உறைந்து....?
அடுத்த தலைப்பு விருந்து
-
விருந்தும் மருந்தும்
மூன்று நாள் என்பர்
முன்னூறு நாள் கடந்தும்
உன் புன்னகை விருந்து
இன்றும் தொடர்கிறதே
புன்னகை
-
வசந்தம் வந்து வாழ்த்தும் நேரம்
அன்பு இதயம் பாடும் ராகம்
உங்களை அழைக்கும் பொன்னான நேரம்
FTC புன்னகை யோடு வாருங்கள்
மொக்கயோடு பேசுங்கள் !!!!
அடுத்த தலைப்பு :பாடும்
-
வசந்தத்தோடும்,
வாழ்த்தோடும்...
FTC க்கு அழைக்கும்
உலோக பொன்னே!
பூலோக பெண்ணே!
மௌண ராகம் பாடும் இவனை
இதய ராகம் மீட்டிட
அழைத்தும்
ராகம், தாளம், லயம்,ஸ்வரம்
எதுவும் அறியாததால்
முழித்துக்கொண்டிருக்கிறேன்
விழிக்க வழிவேண்டி.....
அடுத்த தலைப்பு ராகம்
-
அபஸ்வரமாக
என் காதல் ராகங்கள்
பாதியிலேயே கலைந்து போகின்றது
ராகம் தவறிய என் காதல் கீதம்
காதல் கீதம்
-
KAADHAL GEEDHAM
KAADHAL RAAGAM
KAADHAL SWARAMM
KAADHAL ABASSSWARAM
KAADHAL AANANDHA RAAGAM
KAADHAL THAALAATTU
KAADHAL ISAI
KAADHAL SURUDHI
Ivai Anaiththaiyum Oppukolla Marukkiradhu MANAM
Oru Veylai
Ivai anaiththuM Verum Oppuku
Oppidappadum OppeeedO ?????
Piravi sevidargalum Sezhumaiiyaai
Muzhumaiiyaaai ,Kaaadhalikkindranarey ?????
Ennai Keyttaaal Kaaadhal orU DEEPAM enben
Aduththa Thalaippu
KAADHAL DEEPAM
-
காதல் தீபமேற்றி
அக்காதலை ஜோதியாக்க
காதல் கீதம் இயற்றி
நல்ல ராகத்தில்,
நல்ல இசையில்,
ஏழு ஸ்வரங்களை கொன்டு
ச.. ரி.. க.. ம.. ப.. த.. நி..
சச..ரிரி..கக..மம..பப..
தத..நிநி..சச..
காதல் காணம் பாட முயன்றும்
இசை சேராத,
ஸ்ருதி சேராத
தவிப்பிலேயே நான்.
அடுத்த தலைப்பு காணம்
-
ச.. ரி.. க.. ம.. ப.. த.. நி..ஸா
ஸா ..நீ..தா ..ப..ம ..க..ரி..ஸா
தாளத்தில் இசை.ஸ்ருதிசேர்த்து
காதல் காணம் ஜோடிகள்
விழி மூடினால் கனவில் நீ
விழி திறந்தால் உன் நினைவில் நான்!!!
அடுத்த தலைப்பு:ஸ்ருதி
-
பாடல்கள் என்றால் எனக்கு பிரியம்
மேடை பல கடந்த பெரும்
மேடை பாடகன் அல்ல நான் .
குளியல் அறையில் மட்டும் பெரும்பாலும்
பாடும் ஏழை பாடகன் நான்
பாடல்கள் நன்றாகத்தான் பாடி வந்தேன்
சந்தோஷம் நிறைந்த போது
சந்தோஷ பாடல்
உற்சாகம் உறைந்திடும் போது
உற்சாக பாடல்
வர்ணனைகள் ஊற்றெடுக்கும் போது
வர்ணனை பாடல்
மனம் விரும்புபவர் நினைக்கும் போது
மனம் விரும்பும் பாடல்
இப்படி அப்போதைய சூழ்நிலைக்கு பாடலை பாடிவந்தாள்
என் பாடலை குறை கூறி ஒரு குற்றச்சாட்டு
குற்றச்சாட்டை கூறியது யார் ????
பாடலை ரசித்து ருசித்து கேட்டவர் இல்லை
ரசிக்காமல் வெறுமென கேட்டவரும் இல்லை
மேன்மையாய் கருதி, பாடிடும் பாடல்களின், சுருதி !
சுருதியை தவிர்த்து பிறிதொருவர் கருதி இருந்தால்
என் குருதி எரிமலையாய் குமுறி இருக்கும்
என்பது உறுதி
குற்றச்சாட்டிற்கு விளக்கமோ,திரும்ப பெறாமல் வருத்தமோ
தெரிவிக்காவிட்டால் பாடல்கள் பாடப்படுவது இன்றே இறுதி
அடுத்த தலைப்பு
இறுதி
-
இறுதி இறுதி என்று
அறுதி இட்டு கூறுவார்
பின் அணங்கு ஒருத்தி
வருந்தி வா என்றால் வந்து விடுவர்
இறுதியும் அறுதியும் நம் கையில் இல்லை
நாம் சாரும் உறவுகளில் தான் போலும்
வெறும் வாய் வார்த்தையை விடுத்து
வந்து வழக்கம் போல் பதிவு செய் தோழனே ...
உன் கவிதை துளிக்காக
பல கவிகள் காத்திருப்பர்
வாய் வார்த்தை
-
VARI PADHIKKA VENDI
VAAI VAARTHAI KKAAI "PAADALGALAI"
MAIIYAPADUTHTHI ORU VARI VARAINDHAAL
VEENAAGA VAMBUKKU IZHUTHTHU ENAI
VAMBADIGALL SEIDHU VIRATTIDA.
VEYLAI PAARTHTHU ,VEYLAI SEIDHIDA
VAADAA MALARAAI ORU VAADIYA MALAR.
VILAGITHTHAAN VENDUM ENUM NILAI
VANDHHAAL VILANGUM
VAAI VAARTHAIGALEY
VAAKKURUDHIYAAI !
VAAKKURUDHI !
-
எதற்காக இந்த வாக்குறுதி?
வார்த்தைக்காய் சொன்னாள் ஸ்ருதி
அச்சொல்லை பொருட்டாய் கருதி
வந்ததா இந்த இறுதி
உணக்கு வேண்டும் மறதி
இறுதியை தவிர்த்து
அரங்கின் நிலை கருதி
புது கவிதையை
அறுதியிடு.
உறுதியே இறுதியெனில்
என் நிலையும் இறுதிதான்
இதுவும் உறுதி.
அடுத்த தலைப்பு உறுதி
-
EDHUGAI MOANAI YIN
SEER VARISAIKKAAGA
ARUDHI
URUDHI
IRUDHI
KARUDHI
KURUDH
SURUDHI
MARADHI
YENA VARI VARAINDHA
EN MEEDHU
"PAAA" RADHI YIN PAARVAI
( SATHTHIYAMAAI , BHARATHI ILLAI )
PADHINDHU VIDUMO ENA
ENN NALAM KARUDHIYO ? ALLADHU
SUYANALAM KARUDHIYO ? ALLADHU
PODHU NALAM KARUDHIYO?
"PAADALGAL PAADUVADHU "INDREY IRUDHI ENDRADHAI
MARADHIYIL KARUDHIVITTAARO ENNAVO ?
ENBADHAIYUM,
EDHIR KATCHIYAI EDHRIKATCHIYAAAI PAARKKUM
AALUNGATCHIYIN ARAAJAGA POAKKU ENBADHAIYUM
ARUDHIYITTU URUDHI PADAKKOOORUGIREN.....
Aduththa Thalaippu
PODHU NALAN KARUDHI
-
எத்தனையோ வணக்கங்கள்
போட்டாச்சு
என் வாழ்வில்
எத்தனையோ வணக்கங்கள்
பார்த்தாச்சு
என்றாலும் என்னவென்றால்
இன்றைக்கு ஒரு வணக்கம் வினாச்சு
இதை வெளியிடுவோர்
பொது நலன் கருதும் சங்கம்
அடுத்த தலைப்பு:இன்றைக்கு
-
நேற்றைக்கு என்பது முடிந்த கதை
நாளைக்கு என்பது தெரியாத கதை
இன்றைக்கு என்பதே நிகழும் கதை
நிகழ்வில் கவனம் வை
தெரியாத கதைக்கு
முகவுரை எழுதலாம் ...
முகவுரை
-
முடிவுரை எழுதிய கதைக்கு
முகவுரை எழுத துடிக்கும்
விண் முகிலே!
பெண் மயிலே!
முகவரியும், உன் முகவுரையும்
கிடைக்குமெனில்
பேருரை நிகழ்த்திடலாம்
எதிர்காலம் பற்றி.
அடுத்த தலைப்பு பேருரை
-
ETHTHANAI DHAAN NEE
AGAZHVAAGA NIGAZHVIL
GAVANAM VAITHTHU
THERIYAADHA KADHAI KKU MUGAVURAI
VARAIYA MUNAINDHAAALUM .
PORULURAIYIN PAADHIYILO
ILLAI MEEDHIYILO MUDIVADAIYALAAM THERIYAADHU
MUDIVURAI ENBADHU MYDIVAANA
ONDRU ENBADHAAL
PEYRURAI ENBADHU VAAZHMUARI
PORUTHTHADHU.
VAAZHMURAI !
-
வள்ளுவர் வாய்த்தது பொதுமறை!
வள்ளலார் கொடுத்தது திருமறை!!
பொருந்தாத ஒன்றை
பொருத்தி பார்ப்பது வாழ்முறை...
அது நம் தலைமுறையின் வரைமுறை...
சில முறைக்காக
பல முறைகள் கூறியும்
முடிவுரை ஒன்றிலேயே
குறிக்கோலாய் உள்ளது முகவுரை
அடுத்த தலைப்பு தலைமுறை
-
விரும்பித்தான் வந்து சேர்ந்தேன்
ftc மன்றத்திற்கு - பின்
திரும்பி ஏன் போக முனைவேன்
தெரியவில்லை ?
அக்கால ஞானியை போல
எக்காளமாய் பேசுகின்றானே இவன் ?
இடையிடையே சில காலம்
திரும்பாமல் போனது ஏனோ ?எங்கோ?
பல நாட்களாய் பலருக்குள்
இருக்கும் ஒரு கேள்வி இதுவோ ?
விரும்பாத சில நிகழ்வுகள்
விரும்பாத படி நிகழ்ந்ததால்
திரும்பாமல் தான் போயிருந்தேன்
சில நாட்களாய்
விரும்பாத இடைவேளை தான் அது.
தேடாத ஒரு மலரை தேடியதாய்
வாடாத ஒரு மலர் பாடியதால்
நானே நாடாத நிகழ்வு அது
இது நடப்பது இது ஒன்று தலை-முறை அல்ல !
அடுத்த தலைப்பு
இடைவேளை
-
பூ, பூவாக பூத்திருந்தவேளை
பூ, காயாக எதிர் பார்த்திருந்தவேளை
காய், கணியாகுமென காத்திருந்தவேளை
கணிந்த கணியை ருசித்திடும் வேளையிலே
வந்ததோர் இடைவேளை
வந்த இடைவேளைக்காய்
வருந்தியவேளை
பெரிதொரு வேலை வந்ததும்
பிரிய மணமின்றி சென்றது இந்த
சருகோலை.
அடுத்த தலைப்பு சருகோலை
-
காற்றில் பறக்கும்
காய்ந்த சருகோலையாய்
கவலை பற்றிக்கொள்ள
பழையதை மறக்க நினைத்து
பழகி வருகிறேன்..
பசுமையாய் மாறும் என்ற
நம்பிக்கையில் தொடருகிறேன்
-
MARAKKA NINAITHTHU
PAZHAGI VARUVADHUM
MAARUM ENDRA NAMBIKKAIYIL
THODARNDHU VARUVADHUM
THAVARILLAI
NAANUM THODARNDHIDA
VAAIP ALIKKAAMAL ( THALAIPPU INMAI )
KADHAVADAIPPU YEINO ???
Aduththa Thalaippu
KADHAVADAIPPU
-
தினமும்
உன் மனதின் முன்
என் மன்றாட்டம் தொடர்கிறது
இருந்தும் உன் இதயதில்
ஏன் இந்த கதவடைப்பு
மன்றாட்டம்
-
போராட்டம் நிறைந்த உலகில்
களிப்பாட்டமின் களிப்போடும் ,
துடிப்பாட்டமின் துடிபோடும் வாழ
மன்றாட்டம் இல்லை எனில்
வெற்றி என்பது ஏது?
அடுத்த தலைப்பு களிப்பு
-
"போராட்டம் நிறைந்த உலகில்"
களிப்போடு தான் துவங்கினேன் பதிப்பின் படிப்பை
"களிப்பாட்டமின் களிப்போடும் ,
துடிப்பாட்டமின் துடிபோடும் வாழ
மன்றாட்டம் இல்லை எனில்
வெற்றி என்பது ஏது?"
முடிக்கும் போது முன் இருந்த
களிப்பு காணாமல் போனது .
உன் பால் கொண்ட மதிப்பின் காரணத்தால்
சலிப்பு தோன்றாமல் தவிர்க்க முடிந்த
என்னால்
முக சுளிப்பு தோன்றியதை தடுக்க முடியவில்லை ....
அடுத்த தலைப்பு
மதிப்பு
-
பதிப்பின் முடிவில் களிப்பில்லை
என கூறியது
மதிப்பிற்குரிய பதிப்பு
வெற்றி என்பதே
களிப்பாய் இருக்க
சலிப்பும்,
சுளிப்பும் எதற்கு?
அடுத்த தலைப்பு களிப்பு
-
என்
களிப்பும் கணிப்பும்
தவாறாய் போக
தவிக்குது நெஞ்சு
என் தவிப்பினை நீக்கி
களிப்பினை தர வா
தவறாய்
-
தவறாமல் தலைப்பிட வேண்டுமென்பது
தெரிந்ததாலோ..? என்னவோ...?
தவறாய் ஒரு தலைப்பு
தந்த தவறையே தலைப்பிட்டு
தவறு தவறாய்
தவறுகளாய் பதித்தால்
தாய்த்தமிழ் தவழாது....!
தரவல்ல தலைப்பாவது
தவறாய் இல்லாமல்
தரப்படுமானால்
தமிழுக்கு நிகர் ஏது.....!
அடுத்த தலைப்பு நிகர்
-
என்னையும் என் திறமையும்
எனக்கு அடையாளம் காட்டிய (Forum )
தொலைத்து விட்ட என் எழுத்துகளை
கண்டு பிடித்து காட்டிய (Forum )
எனக்கு நிகர் உன்னை தான் சொல்வேன்
பகலிலும் இரவிலும் உலா வரும்
பரவச நிலா நீ தானே !!!
அடுத்த தலைப்பு :தொலைத்து விட்ட
-
தொலைத்துவிட்ட என் மனதை
தொலையாத நினைவுகளில்
தினம் தொலைந்து தேடுகின்றேன் ..
தேடுகின்றேன்
-
ஒரு வார்த்தை சொல்ல பலவருடம்
காத்து இருந்தேன் -காலங்கள் போனது
நான் சொல்ல வந்த வார்த்தையும்
தொலைத்து விட்டேன் வார்த்தையும்
காணமல் பொய் விட்டது
அடுத்த தலைப்பு :பலவருடம்
-
தாஜ்மஹால் உலக அதிசயம்
என்கிறார்கள் -ஆனால்
உனக்காக நான் பலவருடமாக
என் உள்ளத்தில் கட்டி இருக்கும்
மஹால் இந்த தாஜ்மஹால் விட
சிறியது
அடுத்த தலைப்பு: அதிசயம்
-
பேசும் ஓவியம் அதிசயம்
சிரிக்கும் சிலை அதிசயம்
மணக்கும் மலர் அதிசயம்
நடக்கும் வானவில் அதிசயம்
அடுத்த தலைப்பு :சிலை
-
சிலை என்று வர்ணித்தாய்
சிரித்து கொண்டே நின்றேன்
அதனால் தான்
சிலைகேது உணர்வென்று
சென்றுவிட்டாயோ
சென்றுவிட்டாயோ
-
நாம் சேர்ந்து இருந்தால் நல்ல
வாழ்கை கிடைத்து இருக்கும்
நீ என்னை பிரிந்து சென்றுவிட்டாயோ
அதனால் நல்ல கவிதை கிடைத்தது
அடுத்த தலைப்பு: பிரிந்து
-
பிரிவை உணர்த்தி
பிரிந்து சென்றது நீ அல்ல
பிரியா முடியாத என் ஜீவன் தான்
பிரிந்து பிரித்து விட்டாயே
பிரியாத என் ஜீவனை ..
ஜீவன்
-
நான் உன்னை விட்டு என் ஜீவன்
விலகுவது இல்லை
நீ என்னை விட்டு
பிரிவதும் இல்லை
அடுத்த தலைப்பு:விலகுவது
-
உன்னை முதன் முதலா
சந்தித்த போது நான் உன்னை விட்டு
எப்படி விலகுவது என்று
இப்போது யோசிக்கறேன்
எப்படி சேர்வது என்று
அடுத்த தலைப்பு :முதலா
-
முதலா முடிவா தெரியவில்லை
முடிந்து விடுமோ என்ற அச்சம்
முதலிலேயே இருக்க மன்றாடுகிறது ..
அச்சம்
-
Adeingappaaa !
ALUVALAGA ALUVALIL IRUKKUMPODHUM
IDAIYIDAIYE ETTI PAARPPEIN
PUDHIDHAAI THALAIPPU EDHUM
VITTU SELLAPATTIRIKKIRADHAAVENA,
PAARTHU PAARTHTHU KAATHTHU KAATHTHU
KANGAL, POOTHTHU THAAN POGUMe THAVIRA
POOTHIRUKKAADHU PUDHIDHAAI THALAIPPOO
ARIDHAAI POOKKAPPADUM THALIAPPOOOvin
POOPIL SIRIDHAAI ORU MAATRAM
ONDRAN PINN ONDRAAI , UDANUKKUDAN ETHTHANAI THAIPPU KKALL PARIMAATRAM...
SANDHOSHAM DHAAN - AANAALUM
ARAI SANDHOSHAMM
ANAAVASIYA MURANPAADUGALUM,
PORUL VILAKKA THELIVUM THELIVAANAAL
ACHCHAM THAVIRKKA PADUM.
Aduththa Thalaippu -
ARAII SANDHOSHAM
-
அவளுக்கு நிகர் அவளேதானென
அகமகிழ்ந்த வேளையில்
அவளே என்னை தொலைத்துவிட்டதால்
தேடுகின்றேன் பலவருடங்களாக
கற்சிலை ஆகி போனாயோ!
தெரியவில்லை அப்படி நிகழ்ந்திருக்குமாயின் அதிசயம் தான்!
அதிசயமென இருக்கவும் முடியவில்லை
பரிந்து சென்றுவிட்டாயென
ஜீவன் உனை விலகுவதுமில்லை
முதலா முடிவாயென காத்திருந்தவனுக்கு
அச்சம் பெரிதில்லை
உன் நினைவுகளிலேயே சுழல்வதால்
மனதில் அரை சந்தோஷம்தான்
உன்னை அடையும் தருணம் நிலைக்கும்
மீதமுள்ள அரை சந்தோஷமும்,
அறை சந்தோஷமும்.....!
அடுத்த தலைப்பு தருணம்
-
THAGAVAL THANDHA MARU GANAM
THARUM THAGAVALIL PERUM MAATRAM KAATTI
EN KOOTRAI YEITRADHAAI VELIPPADUTHTHUM
YEITRAM KAATTUM UN PADHIPPU
NEYTTRAI VIDA INDRU YEITTRAM,
MUNN YEITRAM !
Aduththa Thalaippu
MUNNYEITTRAM
-
ஏற்றம் காண முயல்பவனுக்கு
முன்னேற்றம் வரும் தருனம்
நல்ல மாற்றம்..!
ஆணால் முன்னேற்றத்திற்கு
காத்திருப்பவனின்
தருனம் வராததால்
சிறு ஏமாற்றம்...?
அடுத்த தலைப்பும் தருனம்
-
இரவெல்லாம் பெய்த மழை பெய்தும்
அத்தருணம் ரசிக்காமல் துங்கியதை
காலையில் கண்ணிருடன் பார்த்தன
என் வீட்டு ஜன்னல் கம்பிகள்
அடுத்த தலைப்பு :ரசிக்காமல்
-
Oru Veylai Un Varigalai RaSikkaamal
irundhadhanaal dhhano
Iththanai Naal Rusikkaaamal
Irundhadhu Paaalum PanaiVellaMum.
Aduththa Thalaippu
PANAI VELLAM
-
இசையாய் மணக்கும் மலரே
முக்கனியாய் இனிக்கும் சுவையே
பனை வெல்லம் போல் திகட்டத தமிழே
தித்திக்கும் தமிழ் உன்னை கொஞ்சிட
நான் ஒரு காப்பிய நாயகி அன்றோ
அடுத்த கவிதை :முக்கனியாய்
-
MUKKKANIYAAI SAKKARAIYAAI INIKKUM
UN NINAIVAI ITHTHANAI NAAL
EPPURATHTHIL BATHTHIRAMAAAI VAITHTHIRUNDHAAAI ??
Aduththa Thalaippu
BADHDHIRAMAAI
-
உன்னிடம் என் இதயம்
உனக்கான நினைவுகளுடன்
விட்டுச் செல்கிறேன்
பந்தாடி விடாதே
பத்திரமாய் பார்த்துக்கொள்
நினைவுகளுடன்
-
UN NINAIVU MATTUM THANIYAAAI IRUNDHIRUNDHAAL ORU VEYLAI
PANDHAADAPPATTIRUKKALAAAM ?
UN NINAIVO THANNODU UN PALA
NINAIVUGALAI UDAN SERTHTHU .
ORU KOOOTTAAAI , NINAIVUGALUDAN
VITTUCHENDRADHHAAL
NILAIYAAI NIRKKINDRADHU
NEDUNGAAALAMAAAI !
Aduththa Thalaippu
NILAIYAAAI
-
என் உறவுகள் பற்றி எனக்கு
கவிதை சொல்ல தெரிய வில்லை
இயற்கை என்றும் நிலையானது
இது போல் FTC உள்ள எனது
உறவுகளை பற்றி ஆயிரம்
கவிதைகள் சொல்ல முடியும்
அடுத்த கவிதை :ஆயிரம்
-
அன்பே ஆயிரம் உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும்
என் மனம் உன்னை தான் தேடுகிறது
அடுத்த கவிதை : உறவுகள்
-
ஈடில்லா உறவே என்
இனை உறவே....
உறவுகளாயிரம் இருந்தாலும்
உன்னதமான உறவு நீ....!
அடுத்த தலைப்பு ஈடில்லா
-
ஈடில்லா உறவு தான்
உன்னதமான உறவு தான்
இன்று வரை ,
முகம் கூட அறிமுகம் ஆகா அவள் எனக்கு ....
இணை ஆக்க நினைத்ததில்லை அவள் உறவை
இருந்தும் பிணை ஆகத்தான் இருக்கின்றேன்
இன்று வரை .
எனினும் ஈஎடில்லா உறவாய் அவள்
வீடில்லா ஏழையாய்
ஏடில்லா எழுத்தாய்
ஈடுபாடில்லா உறவாய் நான் .
அடுத்த தலைப்பு
ஈடுபாடில்லா
-
ஈடில்லா உறவு தான்
உன்னதமான உறவு தான்
இன்று வரை ,
முகம் கூட அறிமுகம் ஆகா அவள் எனக்கு ....
இணை ஆக்க நினைத்ததில்லை அவள் உறவை
இருந்தும் பிணை ஆகத்தான் இருக்கின்றேன்
இன்று வரை .
எனினும் ஈடில்லா உறவாய் அவள்
வீடில்லா ஏழையாய்
ஏடில்லா எழுத்தாய்
ஈடுபாடில்லா உறவாய் நான் .
அடுத்த தலைப்பு
ஈடுபாடில்லா
-
ஈடில்லா தமிழை
அழகாய் நேசித்து
அமுதமாய்
கவிதைகள் படைத்துவந்த
நாட்கள் எல்லாம்
மலரும் நினைவுகளாக
மாறிவிடுமோ என்று
மனம் அச்சத்தில் உறைய
கவிதையில் ஏனோ
ஈடுபாடில்லா நிலை
என்னுள்
அச்சத்தில்
-
கவிதையில் ஈடுபாடு இல்லா நிலைக்கு
நிதர்சன காரணம் நீ ( மனம் )
நீ உள்ள்ளே எதிலோ உடன்பாடு கொண்டு
உடன்பட்டு அதனால் கடன்பட்டு பின்
நிஜத்தில் இன்புற்று இருப்பதனால்
கவிதை வரைதல் மலரும் நினைவாய் மாறிடும் அச்சத்தில்
நன்றி நினை , இன்றும் மலரும் நினைவாய் இருப்பதை எண்ணி
கெட்ட கனவாய் நினைத்து மறக்காது
இருப்பதனால் .
அடுத்த தலைப்பு
நினைவாய்
-
அடுத்த தலைப்பு அஜித் போடவில்லை
அவர் கவிதையில் இருந்து ஒரு தலைப்பு நான் எடுத்து கொண்டேன்
தலைப்பு :நினைவாய்
என்னவனே தண்ட வாளங்கள்
என்றும் இணைவதில்லை
நாம் இணையாவிட்டாலும்
என்றும் உன் நினைவாய்
என் வாழ்கை பயணம் தொடரும்
அடுத்த தலைப்பு : தண்ட வாளங்கள்
-
இனையில்லா நட்பை!
பனைபோல் பண்பு நிறைந்த நட்பை!
இனையத்தின் வாயிலாக
இனைத்திட நினைத்தும்
இனைய உனக்கு
ஈடுபாடில்லாததால்
இன்று வரை
இனையாத் தண்டவாளங்கள் ஆனது நம் நட்பு....
அடுத்த தலைப்பு பண்பு
-
முகம் திருப்பி கொள்ளும்
பகைவரிடம் எனக்காக
வாதாடும் ஒரு முகம்
என்னை அறியாதவர்க்கு
அறிமுகபடுத்தும் முகம்
அன்பு,பண்பு,பாசம் முகம்
என் அன்னையின் முகமே .......
அடுத்த தலைப்பு :வாதாடும்
-
(FTC) மன்றம் வந்த (தமிழ் ) தென்றலுக்கு
கொஞ்சம் (பதில் ) தர நெஞ்சம் இல்லையோ ???
ரெண்டெழுத்து (பெயர் ) கொண்டவளே
(நாங்கள் ) கண்டெடுத்த கற்கண்டோ ???
உயிரெழுத்தை வேண்டாமென மெய்யெழுத்து
வாதாடுமோ சொல்
அடுத்த தலைப்பு
கற்கண்டு
-
கல் மனம்
கொன்டவனையும்
கற்கண்டு போல்
கரையச் செய்த
கைகாரி அவள்...!
அடுத்த தலைப்பு கல்மனம்
-
கற்கண்டு , கல்மனம்
சுவையால் மட்டும் வேறுபட்டபோதும்
திடத்தால் இரண்டும் ஒன்றே அன்றோ ??
கர்க்கண்டாய் ஆக்கியவள்
கொஞ்சம் கூடுதல் கரிசனம் கொண்டு
பால் கொழுக்கட்டை ஆக்கிருக்கலாம் !
குறைந்தபட்சம் !
அடுத்த தலைப்பு
குறைந்தபட்சம் .
-
உன் நிழலை கூட
களவாட எண்ணும் இந்த கள்வனுக்கு
குறைந்தபட்சம்
ஒரு நொடி சிறைவாசமேனும் கொடு
உன் இதயம் எனும் சிறைசாலையில்
அடுத்த தலைப்பு :
சிறை
-
களவானியே ! கிறுக்கு களவானியே !
களவாடுவது என முடிவான பின்
அதுவும் சிறை வாசம் அனுபவிக்கவும் தயாராக துணிந்த பின்
போயும் போயும் நிழலையா கலவாடுவாய் ??
உன் இடத்தில் நான் இருந்திருந்தால்
நிஜத்தில் , அந்த இதையத்தையே களவாடி இருப்பேன் ...
சிரைச்சேதம் செய்யப்படும் துணிந்தவனாக !
அடுத்த தலைப்பு
சிரைச்சேதம்
-
நிழலைக்கூட களவாட நினைத்த
இந்த கள்வனை
நிழல் மட்டும் திருட வந்தவனாய்
நினைத்த உடன்பிறப்பே
இதை என் காதல் தேவதை
கேட்டிருந்தால் சிரட்சேதம் செய்திருப்பாள் உன்னை
அடுத்த தலைப்பு:
காதல் தேவதை
-
என்னை விட அழகானவர்கள்
பலர் இருந்தும்
என்னை விட திறமையானவர்கள்
பலர் இருந்தும்
என்னை ஏன் நீ உன் மனசிறையில்
குடி வைத்தாய் என் காதல் தேவைதையே
அடுத்த தலைப்பு: மனசிறை
-
Unnai
en manasiraiyil siraivaithu
thandanaiyai un aayulaiyum ketapothu
atharku aamothitha nee
intru
sirai kathavudaithu
ennai emartri ponatheno?
Adutha thalaipu:
ematri
-
தாழிடப்பட்ட அறை கதவையே
அறவே வெறுக்கும் சுதந்திர தேவதை அவளை
ஏமாற்றி
மனச்சிறையில் , அதுவும் ஆயுள்
தண்டனை வழங்க துணிந்த
சர்வாதிகாரியாய் உன்னை கருதிவிடுவாள்
கூடுதல் கவனம் கொள்
உடன்பிறவா உடன்பிறப்பே !
அடுத்த தலைப்பு
சர்வாதிகாரி
-
அணுவிலும் உறைந்து
உறவாடி உயிரை வாட்டும்
காதலா .....
நீ ஓர் சர்வதிகாரி .....
காதலா
-
உயிரோடு உறவாடி...
மனதோடு கதை பேசி...
நிழலாக என்னோடு ..
வாழும் ரகசிய காதலா ...
நிழலாக
-
நிழலாக நீ நிலையாய்
நீடித்து இருப்பாய் என்றால்
நிலமாக நான் இருக்க தயார்
நிதான நேரம் ஆனாலும்
நீ என் மீது படர்வாய் .
நிதர்சனமாய், அது போதும் எனக்கு !
அடுத்த தலைப்பு
நிதர்சனம்
-
எனக்கு தனிமை நேரம்
என்று எதுவுமில்லை
நீ என்னுடன் இருக்கும்
நேரங்கள் என் தனிமை நேரம்
உன் உருவத்தை நிதர்சனமாய்
என்னுள் பதித்து தனிமையை
இனிமையாக ரசிக்கறேன்
அடுத்த தலைப்பு :என்னுள்
-
என்னுள் குழப்பம்
இப்படியும் மனிதர்களோ..
பெண்கள் எப்போது
கேலிப் பொருளாய்
போனார்கள்..
ஏன் இந்த கபட நாடகம்..
ஆசை வார்த்தைகள் பேசி
ஆளை ஏமாற்றம்
இனியும் வேண்டாம்.... ;) ;) ;)
ஏமாற்றம்
-
உன் குறுஞ்செய்திக்கு நான்
தாமதித்து பதில் அனுப்புகிறேன்
ஏன் என்றால் என் பதிலுக்கு
காத்திருக்கும் ஒவ்வருநொடியும்
உன் கண்ணில் ஏமாற்றம்
அடுத்த தலைப்பு :தாமதித்து
-
தாமதித்து கிடைத்தாலும் இந்தியாவுக்கு சுதந்திரம்
தரமாக கிடைத்தது நிரந்தரமாக கிடைத்தது
கொஞ்சம் முன்னரே கிடைத்தாலும்
தரமும் இன்றி நிரந்தரமும் இன்றி
நிலையே இல்லாமல் பெண்கள் சுதந்திரம் !
அடுத்த தலைப்பு
சுதந்திரம்
-
சுதந்தரமாய் சிந்தித்து ..
சுதந்தரமாய் செயலாற்ற...
சுதந்தரமான நம் நாட்டில்....
சுடர்களான பெண்ண்களுக்கு...
சுதந்திரம் மறுக்கபடுகிறது...
சிந்தனை
-
உந்தன் மகிழ்ச்சியே
எந்தன் மகிழ்ச்சி
நீ மகிழ்ச்சியாக இருபதற்க்காக
என்னை நான் மிகப்பெரிய
சிந்தனை கவிங்கனாக
காவிய நாயகனாக
நான் துன்புறுத்தவும்
என்னக்கு சம்மதம்
அடுத்த தலைப்பு :சம்மதம்
-
இந்துவோ,
இஸ்லாமோ,
கிறிஸ்துவமோ,
சீக்கியமோ,
புத்தமோ, ஜைனமோ,
உன் மதம்
எம்மதமாயினும்
எனக்கு தேவை
உன் சம்மதம்..!
உனக்கு சம்மதமெனில்,
எம்மதமும்
எனக்கு சம்மதம்...!!
அடுத்த தலைப்பு எம்மதமும்
-
எம்மதம் என்றாலும்...
என் தேவை ...மதம் அல்ல.
.நான் விரும்பும்...என்னை விரும்பும்..
உன் மனம் மட்டுமே...
அன்பும்..நேசமும்...
மதசார்பற்றது ...
தேவை.
-
மிதமான அன்பு தேவை என்றதும்
சம்மதம் சொல்லி
இதமாய்,
சதமாய் நீ இருக்க
மதமென்ன மதம்..?
வேதங்கள் பேசி,
பேதம் பார்ப்பவர்கள் காதலை
வதம் செய்ய நினைத்தாலும்
என் நாதம் நீயென
கீதம் பாட
உன்னயே தொடரும்
உன்னவன் பாதம்...!
அடுத்த தலைப்பு பாதம்
-
சம்மதம்
இதம்
மதம்
வேதம்
பேதம்
வதம்
வாதம்
கீதம்
பாதம் அப்பப்பா
போதும் போதும்
வார்த்தைகளை சீர்படுத்துவது
சரிதான், என்றபோதும்
கருவினை (பொருள்) மறந்திடும்
திருவே ! தனக்கு நிகர் குருவே !
மல்லியையும்(கரு),அல்லியையும் (பொருள்)
வெட்டவெளியில்,ஆடுமேய விட்டுவிட்டு
கள்ளிக்கு முள்ளில் வெளியிடுகிறாயோ?
தோன்றியதை சொல்லி விட்டேன்
ஏற்பதும் ஏற்காததும் உன் விருப்பம் .
அடுத்த தலைப்பு
உன் விருப்பம்
-
வெட்கத்தை விட்டு உன்னிடம் காதலை
சொன்ன போது வெட்கங்கலையே
பதிலாக தருகிறாய் எனக்கு
என் விருப்பத்தை உன்னிடம் சொல்லிவிட்டு
பதிலுகாக காத்திருக்கும் என்னிடம்
உன் விருப்பத்தை தர மறுக்கிறாய்
அடுத்த கவிதை :சொன்ன போது
-
வெட்கங்கள் பதிலாக தரப்பட்டதா???
ஆண்மகனிடம் இருந்தா??
"ஆண்கள் வெட்கப்படும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன் "
என்று நா . முத்துகுமார் சொன்ன போது
நம்ப மறுத்தவன் நான்.
இங்ஙனம் ஒப்புகொள்ள மனம்
ஒப்புக்கொள்கிறது ,சொல்வது
நீ என்பதால் !
அடுத்த தலைப்பு
நீ என்பதால் !
-
ஏற்று கொள்ளாமல் இல்லை
ஏற்று கொள்கிறேன் கூறியது நீ என்பதால்....
உன் விருப்பம் எதுவோ?
என் விருப்பமும், அதுவே.
கருவின்றி பொருள் நீங்கி
கவி பதிக்க விருப்பம் இல்லை
கவி எழுதி அச்சில்
கோர்த்தால் குறை இருக்காது.....
கணினியில் முயன்றாலும் இருக்காது....
கைபேசியில் முயற்சிப்பதால் வரும்
குறைகள்...
அக்குறைகள்.....?
அவசியம் பதிக்க மனம் விரும்புவதும்
வேலை பளுவினால்
வந்த அவசரமும் காரணம் ....
வருகின்ற காலங்களிலாவது
குறைகளின்றி பதித்திட
முடிந்த வரை முயற்சிக்கிறேன்....!
அடுத்த தலைப்பு முயற்சிக்கிறேன்
-
துரு துருத்த என் படைப்புகள்
துக்கமில்லா இரவுகள்
தவி தவிக்கும் என் கற்பனையில்
நான் இங்கே பதிக்க இருக்கும்
கவிதைகள் என்னுள் உறைந்து கிடந்த
கற்பனை கோட்டை தகர்த்தெறிய
முயற்சிக்கறேன்
அடுத்த கவிதை:தவி தவிக்கும்
-
துரு துருத்த படைப்புகள்
துக்கமில்லா இரவுகள்
தவி தவிக்கும் கற்பனையில்
இங்கே பதிக்க இருக்கும்
கவிதைகள் உள் உறைந்து கிடந்த
கற்பனை கோட்டை(கோடு ) தகர்த்தெறிய
கற்பனை கோட்டை (கோட்டையை) தகர்த்தெறிய
முயற்சிக்கறேன்.
இரண்டில் எது என்று அறியாமல்
புரியாமல் தவிதவிக்கும் என்
நிலையை யாரிடம் சொல்ல ...
அடுத்த தலைப்பு
யாரிடம் சொல்ல ?
-
உன் நலனுக்காக கத்திகத்தி
மாண்டவர் பல பேர்
யாரிடம் சொல்வது
நானும் முடியும் வரை கத்திவிட்டு
கல்லறையில் படுத்து விடுவேன்
எப்போதாவது புத்தி வந்தால்
கல்லறைக்கு கடிதம் எழுது
மிண்டும் வந்து பிறப்பேன்
கவிதைகளாக....
அடுத்த கவிதை : புத்தி வந்தால்
-
சித்தனாக இருந்தவன் நான்
புத்தனானேன் உனக்காக.
நீ பிரிந்த பின்னால் முழு
பித்தனாக ஆகிடுவேன். பின்
புத்தி வந்தால் என்ன ,பெரும்
சக்தி வந்தால் தான் என்ன ?
கடிதம் வரைவேன் கண்டிப்பாக
இருக்கும் வரை தான் உன்
கரிசனம் இல்லை ,இறந்த
பின்னாவது கரிசனமோ, கனவில்
தரிசனமோ தரமாட்டாயா ?
அடுத்த தலைப்பு
கரிசனம்
-
என் மீது கரிசனம் கொள்ளும்
இனிய நட்பே....!
இணை நட்புக்கு நிகரான
இணைய நட்பே.....!
ஒரு முறை....
ஒரே ஒருமுறை
தரிசனம் தருவாஎனில்...
சாதிசனமென்ன...?
மீதிசனமென்ன...?
உன் தரிசனத்திற்கு
முன் அத்தனை சனமும்......
சரிசமம்.........!
அடுத்த தலைப்பு சரிசமம்
-
அடடா!
தகவல் தரும் வேகத்தில்
விலாசம் மாற்றி அனுப்ப பட்ட
விஷேஷமான தந்தியோ?
அந்தி நேர தென்றல் ஒன்றிற்கு
முந்தி செல்லவேண்டிய
அவசர தந்தி, சற்றே முந்தி
என்னை வந்து சேர்ந்தது
வெந்த புண்ணில் வேலினை
பாய்த்துவதற்கு சரிசமம்
அடுத்த தலைப்பு
பாய்த்துவதற்கு
-
சரியான விலாசத்தில்
சேர்ந்த தந்திக்கு
தந்தி போல் பாவித்து
பதில் தந்தி வந்ததே
விஷேஷேமான தந்திக்கு சிறப்பு...
தந்தி முந்தி வந்ததும்
முந்திக்கொண்டு வந்ததும்
அந்தி நேர தென்றலக்கு அல்ல..
தென்றலோடு சேர்ந்த தமிழ் தென்றலுக்கு.
விந்தி... விந்தி..
முந்தி வந்த தந்தியை
தவறான தந்தி என கணக்கிட்டதே
வெந்த புண்ணில்
வேல் பாய்த்துவது......
அடுத்த தலைப்பு தவறான
-
தவறான அர்த்தத்தை தவறாய் புரிந்துகொண்டேன்
என்று தவறாமல்,தவறாய் கருதிவிட வேண்டாம் !
தரிசனத்திற்கு , அதுவும் என் தரினத்திற்கு
இத்தனை கரிசனமா ?? ஊருசனம்,சாதிசனம்
அத்தனையையும் சரிசமம் என்று
ஆக்கவேண்டிய அவசியம் என்ன ? என
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான்
என் கருத்தில் பதித்தேன் நன்று
புண்ணில் வேல் பாய்ச்ச அன்று
அடுத்த தலைப்பு
கருத்தில்
-
என் கண் வழி விழுந்து
கருத்தினை கவர்ந்தவனே
கடுகதியில் வந்துவிடு
கணநேர தாமதமும்
காலனுக்கு வசதியாகலாம்
வந்துவிடு
-
கருத்தால் உள்ளம் ...
கவர்ந்த கல்வனே...
உன் தரிசனம் வேண்டி...
காத்திருக்கும் இதயம் தேடி...
வந்துவிடு....
தரிசனம்
-
பார்த்தால் போதை தரும்
மது உன் விழிகள்
சிரித்தால் ஒளி தரும்
பவளம் உன் பற்கள்
உன் தரிசனம் என்
என்றென்றும் என்
இதயத்தில் ......
அடுத்த தலைப்பு :விழிகள்
-
இணையத்தின் வழியே
உன் கெஞ்சல் பேச்சிலும்
கொஞ்சல் பேச்சிலும்
மனம் மயங்கியவன்....
மதி மயக்கும் உன் விழிகளை
காண்பது எப்போது
கனவு தோழியே......?
அடுத்த தலைப்பு மயக்கும்
-
கொஞ்சல் பேச்சிற்கே மருளி
மனம் மயங்கியவன் ,மதி
மயக்கும் உன் விழிகளை
காண வேண்டாம் !
ஓர விழி பார்வையினை
தூர நின்று பார்த்தாலே
பய தேறுவானோ தேற
மாட்டானோ, தெரியவில்லை
ஊரை பார்த்து போயி சேர ட்டும் .
வேற யார்க்கும் ,வாய்ப்பு தரும்
எண்ணம் எதுவும் இருந்தால்
நேர என்ன முகவரிக்கு மின்
அஞ்சல் தர மறந்திடாதே !
அடுத்த தலைப்பு
மறந்திடாதே !
-
என் மரணத்துகாவது வந்து சேர்
மறந்து விடாதே
உன் மலர் விழிகள்தான்
என் மரண ஊர்வலத்தில்
மகத்தான மலர்கள் ...
உன் பார்வைகள் ஒவொன்ரும்தான்
எனக்கு மலர் வளயங்கள்
மகிழ்வுடன் என் ஆத்மா
சாந்தி அடையும்
மகத்தான
-
காதல் எத்தனை மகத்தான
ஒரு கொடை.
அதன் மகத்துவத்தை,மந்த
புத்தி கொண்ட மக்கு வாத்தியான்
எவனோ , மாற்றி மாற்றி
உன் மனதில் ஏற்றி இருக்கிறான் ?
காத்திருப்பு,கண்ணீர்,கல்லறை
சோகம்,துரோகம்,ஏமாற்றம்,
பிளவு,பிரிவு,வருத்தம் ,அவலம்,
ஓலம் , ஒப்பாரி , ஒருமுறையாவது
இவைகளை விடுத்து இனிமையாய்
இன்பமாய்,காதல் பார் ஒய்யாரி !
அடுத்த தலைப்பு
ஒய்யாரி
-
கவிசோலையில் புதுமையான சொல் "ஒய்யாரி"
சொல்லின் பொருள் தேடி
ஒய்யார நடை நடந்தேன்
தமிழ் பக்கங்களையும்,
தமிழ் அறிந்தவர்களையும் தேடி
அங்கோ வார்த்தைகள் கோடி!
கோடி வார்த்தையிலும்
தேடிய வார்த்தைக்கு
பொருள் கிடைக்காமல் வாடி?
சொல்லுக்கு பொருள் வேண்டி
வந்துள்ளேன் உன்னையே நாடி?
அடுத்த தலைப்பு உன்னையே நாடி
-
ஒய்யாரமாய் உடல் வாகினை
ஒய்யாரமாய் நடக்கும் நடையினை
ஒய்யாரமாய் ஒப்பனைகளினை
மெய்யோரமாய் மட்டுமின்றி
மெய்பூராவும் வாய்த்து வைத்திருக்கும்
ஒருவரைத்தான் ஒய்யாரி என்பர்
இதையே ஒரு வடமொழியாள்
வாய்த்து வைத்திருந்தால்
பி(ய்)யாரி !
இதற்க்கு ஏன் வீணாய்
என்னை நாடி
ஓடி, முகம் வாடி ,வேண்டி ?
இது தான் விஷயம் என்றுரைத்திருந்தால்
பதில் வந்திருக்குமே உன்னையே நாடி .
அடுத்த தலைப்பு
வடமொழியாள்
-
சோலையில் ஒய்யாரி மலர்களாய்
பலர் இருந்தும்
"ஒய்யாரி"க்கு கவி எழுதாதது ஏனோ?
ஒருவேளை ஒய்யாரிகளுக்கு
ஒய்யாரியின் பொருள்
விளங்கவில்லையோ? என்னவோ?
நம்மொழி, நம்நடைமொழி,
தம்மொழி, தமிழ்மொழி தெரிந்தவர்களே
தமிழ்மொழியாள் ஒய்யாரிக்கு
வரி படைக்காதவர்கள்
வடமொழியாள் பி(ய்)யாரிக்கு மட்டும்
வரி சேர்த்திடூவார்களா என்ன?
அடுத்த தலைப்பு தம்மொழி
-
தன் தலைவனை இழந்தாலும்
தம் மொழி
தன் மானத்தை
தன் இனத்தை
தன் சுய கௌரவத்தை
இளக்காதவன்
புலம் பெயர் தமிழன்
தமிழன்
-
தன் இனமும் தன் மக்களும்
தாக்கபடுவது ,தகர்க்கப்படுவது
தாங்கிக்கொள்ள முடியாத துயரம் தான்.
தன் நாட்டையே தகுதியும்,தரமும்
துளியும் இல்லாதவரிடம் தாரை வார்த்து
தவித்துகொண்டிருக்கும் தமிழன்,தமிழகம்
துயரத்தின் உயர்ந்த சின்னம் !
அடுத்த தலைப்பு
துயரச்சின்னம்
-
காதல் சின்னமாய்..
இனிமையான நினைவுகளை.. ..
கேட்டேன் ...
நினைவுகளே இன்று ....
துயரசின்னமாக உருமாறி...
மனதை உருக்குகிறதே.. ..
உருக்கமாய் .
-
காதல் சின்னமாய் இனிமையான
நினைவுகளை கேட்டவள்
நினைவுகளை கொஞ்சும் , நெருக்கமாய் ,
சுருக்கமாய் இன்றி பெருக்கமாய்
பொத்தி போற்றி பாதுகாத்துக்கொள்
உருக்கமாய் இன்றி ,இனி
இறுக்கமாய் மனதில்
இனிமையாய் என்றும் நிலையாய்
இருக்கும் !
அடுத்த தலைப்பு
இறுக்கம்
-
உருக்கமான நினைவுகளை ...
நெருக்கமாய்..பெருக்கமாய்..
என்றும் இருக்கமாய்..
இதயகூட்டில் ...
பொருத்தமாய் சேர்த்துவைப்பேன்..
இதயக்கூட்டில்
..
-
கிறுக்கன் இவன் களப்பணியில்
கிறுக்கும் கிறுக்கல்களை கூட
படித்து,படிப்பதே பெரும் கௌரவம்
படித்தும் கிறுக்கன் இவன் பாணியில்
பதிலும் பதிப்பது (ஒளியின் வெளிபாடு )
ஒருவர் மட்டுமே என்றிருந்தேன்
இதோ புதியதாய் ஒருவர் .....
நினைக்கும் போதே இதயக்கூட்டில்
இதமாய் ஒரு இனிமை, இன்பம் !
அடுத்த தலைப்பு
இன்பம்
-
கவிநயம் நிறைந்த ..
வரிகளை காண்பதே இன்பம்..அதிலும்..
தமிழ் மனம் கமிழும் ...
இனிமை தமிழில்...
மனம் மயங்கும் வரிகளை..
ரசித்து ..உணர்ந்து...வாசிப்பதோ ..
இன்பத்திலும் பேரின்பம்..
வாசிப்பது
..
-
என் இதய வீணையை
வாசிப்பது நீயானால்
வாழ் முழுவதும்
நீ மீட்டும்
வீணையாய் இருக்க சம்மதம்
சம்மதம்
-
வீணையாய் மட்டும் அல்ல..
மனதில் நிறைந்தவளாய்..
உன்னை உணர்ந்தவளாய்...
இருக்கவும் சம்மதம் .......
உன் பொன்னான இதயத்தை....
என்னக்கானதாய் தருவாயானால் ...
பொன்னான
-
இருப்பதற்கு இதமான இடம் இன்றி
இடர்பாட்டுடன் இங்குமங்கும்
இங்கு இடுக்காவது இருக்குமா
இருப்பதற்கென, இருக்கும் இதயத்திற்கு
பொன்னான இதயமே இடமாய்
இருக்குமென்றால் மண்ணோடு
மண்ணானாலும் என்ன ?
அடுத்த தலைப்பு
மண்ணோடு
-
மண்ணோடு மண்ணாய் போனாலும்
மாந்தரின் குணம் மாறுவது ...
மாறாது மனமே ...
மண்ணாகி விடு
மானம் கெட்ட வாழ்வு வாழ்வதற்கு
மரணம் மகத்தானது
மகத்தானது
-
மனமே !
மகத்தான மனமே !
மனதுக்குள் தேவதையாய் ஒரு
மகத்தான ஜீவன் இருக்கும் பொழுது
உனக்காக உருக உயர் ஜீவன் இருக்க
மதி கெட்டு மயங்கும்
மந்திகளை பற்றி வருந்திக் கொள்ளாதே !
உண்மை உணர்ந்து திருந்தி வந்தால்
மனம், வருந்தி வந்தால் ,உன் மனம்
கவர கரணம் அடித்தால் ,மனமே
மந்தியானாலும் பொருந்திக்கொள் !
போனால்போகட்டும் !
அடுத்த தலைப்பு
பொருந்திக்கொள்
-
மரம் விட்டு மரம் தாவும்
மந்தி இனமே
எப்படிதான் உன் மனம்
மரத்துக்கு மரம் பொருந்துகின்றதோ... ?
ஏதாவது ஒரு மரத்தில் பொருந்திகொள்
இல்லையேல் மரணத்திலும் மேலான
மானம் உன்னுடன் பொருந்தாது போயிடும்
மானம்
-
மானம் விட்டு..
தன்மானம் கெட்டு ..
ஒரு நிலை வருமாயின்...
உயிர் விட்டு விடுவேனே தவிர..
இவ்வையகத்தில் நிலைகெட்டு ...
வாழா உயர் தமிழன் நான்..
தன்மானம்
-
அடுக்கடுக்காய் பல இடர்கள்
தமிழனுக்கு நம் நாட்டிலும்
அயல் நாட்டிலும்
அத்தனை இடர்களையும் களைய
தன்மாணமுள்ள தமிழர்கள்
அனிஅனியாய் திரளாமல்
அனைவரும் ஓர் அனியாய்
திரண்டால்.... தொடர்ந்து வரும்
இடர்கள் அடர்ந்து வந்தாலும்
முளையிலேயே கிள்ளி எறிந்திடலாம்.!
அடுத்த தலைப்பு இடர்கள்
-
எத்தனை எத்தனை இடர்கள்
தொடராய் தொடர்ந்து
தொடர்ந்தாலும்
ஸ்ரீ தேவியே ,உனை உன்
தமக்கை மூதேவின் முழு
குணமே வந்து படர்ந்தாலும் ..
அன்றும் இன்றும் என்றும்
ஸ்ரீ தேவியின் பெருமை
குணம், புகழ் தீராது, மாறாது
அடுத்த தலைப்பு
புகழ் தீராது
-
கவிபாடும் கம்பன் போல்!,
கவியரசு கன்னதாசன் போல்!,
கவிபேரரசு வைரமுத்து போல்,!
கசப்பில்லா தமிழில்,
கற்கண்டாய் இனிக்கும் தமிழில்
கவிமழை பொழியும்
கவிகளின் புகழ்தீராது!
அடுத்த தலைப்பு கசப்பில்லா
-
கசபில்லா தமிழில் .
கற்கண்டாய் இனிக்கும் தமிழில்
கற்கண்டின் சுவை கொண்ட வார்த்தைகள்
நிறைந்த வரிகள் பதிக்காவிட்டாலும் ,
ஒருபோதும் பாகற்க்காயாய் கசக்கும்
கசப்பு வார்த்தைகளும்,படிப்போர் மனதை
துண்டு துண்டாக்கும் கசாப்பு வார்த்தைகளும்
ஒரு போதும் பதிக்கமாடான் -
இந்த கத்து குட்டி கவிஞன் !
அடுத்த தலைப்பு
கசாப்பு வார்த்தை
-
கசாப்பு வார்த்தைகளால் ....
கசப்பான நினைவுகளால்...
லேசான என் மனதை..
சேதமாக்கிய வலியோடு நான் ..
சேதாரம் ஏதும் இல்லாமல் ..
சுகமாய் நீ..
சேதாரம்
-
அடப்பாவமே !
சேதாராம் ஏதும் இன்றி நானா ?
உன் இனிய ,கனிவு நினைவுகளால்
சிதைந்து சேதாரமான என் மனதை
சோகமாய் கண்டுசென்ற சமூக
ஆர்வலர்கள் அளித்த அறிக்கையை
ஆதாரமாய் சமர்பிக்கின்றேன் !
" சமீபத்திய சீற்றத்தின் பொது
ஜப்பானையும்,இந்தோனேசியாவையும்
சிதைத்தைதை விட பெரும் சேதாரம்
செய்திருக்கிறதே, சிறப்பாய்
"இயற்க்கை " "
அடுத்த தலைப்பு
இயற்க்கை
-
கடல் காற்றை உணரலாம்
மலையின் உயரம் அறியலாம்
இயற்க்கை கண்டு ரசிக்கலாம்
எரிமலையின் வேகத்தை கண்டு பிடிக்கலாம்
பூகம்பம் அளவு அளக்கலாம்
ஒரு பெண்ணின் உள்ளத்தை கண்டுபிடிக்கும்
கருவியை இன்னும் யாரும் கண்டு பிடிக்க வில்லையே
அடுத்த தலைப்பு :எரிமலையின்
-
முன்னோர்கள் விட்டு சென்ற முழு
முட்டாள் தனங்களில் முதல்
பத்தில் இதும் ஒன்று !
எரிமலையின்,பூகமபத்தின்
மலையின் ,காற்றின்
ஆகமொத்தம் உதாரணமாய்
அழிவுகளின் அளவீடுகள்
அதிசயம் என்னவென்றால்
இதை ஆமோதிப்பதே பெண் .
மென்மையான ,மேன்மையான
உண்மையான பெண்ணின்
நல் மனதின் ஆழம் அறிவதும்
அளவினை அறியவதும்
உன்னதமான அந்த மனதின்
மட்டும் அல்ல உள் மனதின்
உள் ஆழமும் , இறைவனால்
முடியுமோ? முடியாதோ ?
பெண் மனதில் இருப்பவன்
ஒருவனால் சத்தியமாய்
சாத்தியமே !
அடுத்த தலைப்பு
சாத்தியமே !
-
பூக்களை பற்றி எழுதினேன்
அது விற்பனைக்கு அல்ல
குளத்தை பற்றி எழுதினேன்
அதில் கல்லை தூக்கி எறிவதற்கு அல்ல
சிகரத்தை பற்றி எழுதினேன்
அதை நோக்கி நடப்பதற்கு அல்ல
மழை பற்றி எழுதினேன்
அதில் நனைவதற்கு அல்ல
பெண்ணின் மனது பற்றி எழுதும்
சாத்தியமே ஒரு கவிங்கனின்
கற்பனையே
அடுத்த கவிதை :விற்பனைக்கு
-
தன் மானத்தையும் மிஞ்சிய
தன் ஆசையால்
தரம் கெட்டு போய்
தழுவல்கள் நீள்வதால்
தாய்க்கும் மேலான
தமிழ் மொழியே
நீ பலர் படைப்பில் விற்ப்பனைக்கு ...
தழுவல்கள்
-
உன் அழகை பார்த்து வியந்து விட்டேன்
நீ நெருப்பு என்று தெரியாமல் உன்
வெளி தோற்ற அழகை கண்டு
உன்னை என் கை கட்டி தழுவல்கள்
செய்த போது தான் தெரிந்து
நீ என்னை சுட்டு விடுவாய் என !!!!
அடுத்த கவிதை :அழகை கண்டு
-
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு "
உண்மை ஈதெனில் ஒப்புக்கொள்ளமாட்டேன்
சிலருக்கு அடிப்படியில் புத்தியோ உச்சம் -இருந்தும்
அளவிட முடியா ஆத்திரமே மிச்சம்
ஆத்திரம் கொண்டால் அவர்க்கு மற்றவை
எல்லாம் மிக மிக துச்சம்
வழி தேடி ,விழி மூடி, மனம் ஆறும் வரை
பழி பாடி முடிக்கும் வரை
அவருக்கு நிகர் அவரே தான் போடி !
இவை அனைத்தும் யாரோ ஒருவரின்
வினோத,விஷேஷ ,வித்தியாச
குனாதிசயத்தின் ஓர தழுவல்கள்
சமயத்தில் என்னை நானே அறியாமல்
நழுவ விட்டுவிடும் நழுவல் தகவல்கள் .
இன்னும் என்னனமோ சொல்லத்தான்
மனதில எண்ணம்
உன் வரிகளின் அழகு கண்டு மேற்கொண்டு
ஏதும் சொல்லாதது திண்ணம் .
அடுத்த தலைப்பு
ஓர தழுவல்கள்
-
அலுவலகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தால்
மனம் எதிலும் ஈடுபடாமல் அது
ஒன்றன் மீதே தழுவி நிற்பதால்
அதை விடுத்து நழுவ நினைத்தாலும்
மனதின் ஓரம் தழுவல்கள்
நீண்டுகொண்டே இருப்பதால்
எதையும் தழுவமுடியாமலும்,
அதை விட்டு நழுவ முடியாமலும்
தவிப்பதால் மன்ற புறக்கணிப்பு...?
அடுத்த தலைப்பு புறகணிப்பு
-
அலுவல் பல இருந்தும்
அவற்றை எல்லாம் புறகணித்து
இரவுபகல் பாராமல்
தூக்கம் மறந்தும்
துக்கம் மறக்க
உன்னுள் மூழ்கி
இன்பத்தில் திளைக்க
தினந்தினம் ஓடோடி வந்த
நானே இன்று உன்னை புறக்கணிக்கிறேன்
கயவன் ஒருவனின் காரணத்தால்
அடுத்த தலைப்பு:
கயவன்
-
என்னவள் என நான் எண்ணியவள்
என்னிடம் மயங்கியதன் மர்மம்
என்னவென கேட்டு
என் காதலால்
என் பாசத்தால்
என் நட்பால்
என் சிரிப்பால்
என் கோபத்தால்
என் கோபத்திலும் தலை தூக்கும் அன்பால் கவர்ந்தேன்
என காரணம் நூறு கூறுவாள்
என்றெண்ணிய இம்மடையனின் மனதிலும்
பதியும் படி கூறிச் சென்றாள்
பொழுது போக்க வேறு வழி இல்லையென
அடுத்த தலைப்பு :
மடையன்
-
மடையனே ! நீ மடையனே !
உன்னவள் அவள் உன்னோடு தன்
பொன்னான பொழுதுகளை
செலவிடுவதை பெரிதாய் எண்ணி
கூறியதை, மடை திறந்த
வெள்ளம் போல் கோவத்தில் கொப்பளித்துவிட்டாயோ ??
அடுத்த தலைப்பு
கொப்பளித்துவிட்டாயோ ?
-
இவன் மூடன்.! மடையன்.!
என கோபத்தில்
கொப்பளித்துவிட்டாயோ.!
நிச்சயமாய் அவன்
மூடனும் அல்ல,
மடையனும் அல்ல...
மங்கை ஒருத்திக்கு ஏங்கிடும்
மாக்காண் இவன்...
எப்படி என்கிறாயா?
அவள் ஒரு பார்வைக்கே
ஓராயிரம் யுகங்கள்
வாழ்ந்திடலாம்,
அவளோடு உரையாடிய,உறவாடிய
நிகழ்வுகளில் ஒன்று போதுமே
காலமெல்லாம் வாழ்ந்திட
அப்படியிருக்க அவள் ஏமாற்றிவிட்டாளென
வீணாய் பிதற்றுபவனை
என்ன சொல்லி அழைப்பது?
அடுத்த தலைப்பு பிதற்றுபவனை
-
அச்சோ! நானே தேவலை
கொஞ்சம் கடு சொல் கூறினாலும்
மனதிற்கு ஆறுதலாவது கிடைத்திருக்கும் .
ஈதென்ன கொடுமை??
பாவம் வேதனையில் பிதற்றுபவனை
மாக்கான் என்பதா??
ஒருவேளை மகான் தான் மருவி
மாக்கான் ஆகிவிட்டதோ ??
அடுத்த தலைப்பு
மகான்
-
மகானா! யார் இவனா ?
மது , மாது , சூது , அனைத்தும்
மயக்கம் தரும் வஸ்த்து என்பதை
மறந்த மதிகெட்டவன்.
மதிகெட்டவன் இனி வரும் காலங்களில்
மகானாகவும் மாறுவான்
ஆச்சர்ய படுவதற்கில்லை.!
மாற்றம் ஒன்றுதானே மாறாதது!!
அடுத்த தலைப்பு மதிகெட்டவன்
யார் மனதையும் புண்படுத்த அல்ல
பண்படுத்த
கவிதை நடைக்காக சேர்ந்த வார்த்தைகள்
அததனையும்....
-
காதல் போர்களத்தில் காயம்
பட்டபிறகும் ஓடாமல்
நிற்கும் உண்மை வீரனா -நீ
மானம் கெட்டவனே
மதி கெட்டவனே -அவர்கள்
உன்னை கல்லால் அடிக்கவில்லை
பரிசோதிக்கிறார்கள்
அடுத்த தலைப்பு :ஓடாமல்
-
உனக்காக காத்திருக்கும் பொழுதுகளில்
ஓடாமல் ,மெல்ல ஆமையாய் நகரும்
காலதேவன் , ஏனோ ?
உன் வருகைக்கு பின் மட்டும்
கால்களில் இறக்கை கட்டி
பறக்கின்றான் ???
ஒருவேளை ,காலதேவனையே
காக்கவைத்து காக்வைத்து
காலாவதி ஆக்கிய
புண்ணியவதி நீயோ ??
அடுத்த தலைப்பு
புண்ணியவதி
-
மூடனாக்கினோம்,
மடையனாக்கினோம்,
எதையும் தெரியாத மாக்கானாக்கினோம்,
மதி மயங்கியவனை மதிகெட்டவனாக்கினோம்,
மனம் மாறி மகானாக
மாறுவானென பார்த்தால்
மானம்கெட்டவனாக்கிவிட்டாளே!
இந்த புண்ணியவதி
இவன் என்ன செய்வான்
இது கொடுமையிலும் கொடுமை.
அடுத்த தலைப்பு கொடுமை
-
சித்தனாய் பிறந்து
விட்டோமென்று பித்தனாய்
திரிந்து அலைய வேண்டாம்
கொடுமைகள் கொக்கரிக்கும் போது
குப்புற படுத்து குமுற வேண்டாம்
அடுத்த தலைப்பு :குமுற வேண்டாம்
-
நண்பா !
ஆக்கினோம் , ஆக்கினோம் ,ஆக்கினோம்
என்கிறாய் எனையும் உனையும் இணைத்து
அடிப்படையில் நான் ஆக்கினேன் ,அவனை
மடையன் ஆக்கினேன் ,அவளின் எண்ணத்தினை
தவறாய் கருதி குமுற வேண்டாம் என கருதி.
தவிர ,விடப்பட்ட தலைப்பும் மடையன் என்பதால்
அதுவும் அவனை ஆதரிததே ஆக்கினேன் .
மற்ற இத்தாதி இத்தாதி எல்லாம் யவர்
அருட்பெரும் கிருபையால் கிட்டிய
அர்ச்சனையோ ??
அடுத்த தலைப்பு
அர்ச்சனையோ ?
-
அர்ச்சனையோ...!
அல்ல கர்ஜனையோ ..!
சத்தியமாய் தெரியவில்லை
சந்தவரிகளில் வந்தது
சுத்தமாய் விளங்கவும் இல்லை
சித்தனாய் பிறக்கவும் இல்லை
பித்தனாய் அலையவும் இல்லை
ஆனால்
கொடுமைக்கு குமுறி
கொண்டிருகிறேன் என்பது மட்டும் உண்மை...
அடுத்த தலைப்பு சந்தவரிகள்
-
சிந்தையில் தோன்றிய
சந்தவரிகளில் தோரணம் கட்டி
தோழன் ஒருவனை
மடையனாக்கி,
மூடனாக்கி,
ஆசை ஆசையாய்
மாக்கான் ஆக்கும் சகோதரா
இவன் மது மாதுவிடம் மயங்கும்
மதிகெட்டவன் அல்ல
காதலில் மயங்கி
மதியை மறந்தவனே
அடுத்த தலைப்பு:
மறதி
-
மறதியின் மூல பிரதியே !
மடையன் என ஆக்கியதாய் நீ
நீட்டிய குற்றச்சாட்டினை, நான்
உண்மையாக என்றாலும் உடன்பிறவா
உடன்பிறப்பு நீ என்பதால் வன்மையாக அன்றி
மிக மென்மையாக கண்டிக்கின்றேன் !
மடையன் என உன்னை நீயே
ஒப்புக்கொண்டு அங்கீகரித்துகொண்ட ஒன்றை
ஒருவர் ஆக்கிதாய் கூறியது
மறதியின் உச்சமோ ??
அடுத்த தலைப்பு
உச்சமோ ??
-
உன்னை துச்சமாக எண்ணி
எதையும் கூறவில்லை..
துச்சமாக நீ ஆகிவிடக்கூடாது
உச்சத்தின் உச்சமான
உச்சாணி கொம்பில்
உன்னை ஏற்றதான் அன்பு சகோதரனே...!
உன்னிடம் ஒரு கேள்வி சகோதரா
எதன் மீதாவது பற்று
வைத்தால் தானே காதல்
அப்படி இருக்க
மது, மாது மீது மயங்காதவன் என்றும்,
காதலில் மயங்கி மதி மறந்தவன் என்றும்
கூறியுள்ளது மதி மறந்ததின் உச்சமோ...!
அடுத்த தலைப்பு மயங்காதவன்
-
நான் கேட்க நினைத்ததில் சில
மிக முக்கிய விஷயங்களை நீ
வருடியிருக்கின்றாய் ,
வருடியதோடு மட்டும் நில்லாமல்
சில சமயம் மனதை திருடி இருக்கின்றாய்
சில சமயம் நெருடியும் இருக்கின்றாய் ..
மது மீதும், மாது மீதும் மயங்காதவன்
என்பது சிறு நெருடல் தான் எனக்கும் .
காதல் மாது வுடன் தொடர்புடையது,
காதல் கசந்தால் மது உடனும்
தொடர்பு கொள்வது என்பது வழக்கு...
அப்படி இருக்க , இவை இரண்டிலும்
தொடர்புடையவரை மதிகெட்டவன் என
சொல்லி கேட்டதில்லையே ??
அடுத்த தலைப்பு
கேட்டதில்லையே ??
-
அன்பாய் ஆதரவாய் பேசி
முப்பொழுதும் தென்றலாய் வருடியவள்,
முழுதாய் இத்திருடனை திருடியவள்
இப்பொழுது.....
இதயதிருடனை
வருடாமல் நெருடி சென்றதேனோ?
இனியவளே இம்மாதிரி
கடுசொல்லும், சுடுசொல்லும்,
உன்னிடம் கேட்டதில்லையே?
அடுத்த தலைப்பு சென்றதேனோ?
-
கிறுக்கன் இவன் வரைந்து வைக்கும்
கிறுக்கல் கவிதை அனைத்திற்கும்
திருத்தம் என்று எதையும் சொல்லாமல்
விருத்தம் போல வரி வரியாய் வரியிட்டு
என் வரிகளை பொன் வரிகளாய் பாவித்து
நறுக்கென விமர்சன பரிசதனை
வாரி வாரி வழங்கிய என் வெளி நாட்டு
வெள்ளிநிலவே !
விமர்சன வள்ளலே !
விட்டு விலகுவாய் என தெரிந்ததுதான்
இருந்து இப்படி சொல்லாமல்
கொள்ளாமல் கொன்று சென்றதேனோ ?
அடுத்த தலைப்பு
கொன்று
-
கொன்று சென்றேனா ??
இல்லை இல்லை....
வென்று சென்றேன்....
இனிமையான இதயத்தை...
அருமையான அன்பை...
நெகிழவைக்கும் நேசத்தை
என்னக்கே என்னக்காய் ...
வென்று தான் சென்றேன்...
வென்று
-
வென்று தான் சென்றாய் ,நன்று
நானும் தோற்று தான் நின்றேன்
நீ வெல்ல வேண்டும் என்று .
ஒன்று மட்டும் சொல்கிறேன்
அன்றல்ல இன்றல்ல என்றென்றும்
நீயே வெல்லவேண்டும் என்று.
வென்றதும் சென்றதும் சரி தான்
எனை , மனம் உருக்கும் உன் நினைவில்
கொன்றது மட்டும் முறையா?
நினைவில் நீங்காமல் நிலைத்து
எனை கொடுமை செய்து கொல்பவளே
என்றேனும் ஒரு நாள் முழுதாய்
கனவில் வந்து, கொன்ற மனதிற்கு
உயிர் தருவாயா ?
அடுத்த தலைப்பு
உயிர் தருவாயா ?
-
உன்னை சந்திக்காத நாட்கள் உண்டு
சிந்திக்காத நாட்கள் இல்லை
உன் மொழி கேட்காத நாட்கள் உண்டு
உன் விழி நினைக்காத நாட்கள் இல்லை
நாம் இணைந்து இருந்தால் கூட
விரைவில் மறந்து இருப்போம் -நாம்
இணையத்தால் சேர்ந்த இந்த நட்புக்கு
உயிர் தருவாயா என் தோழனே !!!
அடுத்த தலைப்பு: இணையத்தால்
-
இணையத்தால் தான் இணைந்தோம்
இதயத்தால் அல்ல
இதயத்தால் அல்ல என்றாலும்
இணை ஈடில்லா நட்பு - நம்
இணைய நட்பு !
அடுத்த தலைப்பு இதயத்தால்
-
நம் நட்பு வென்றிருந்தததால் தான்
நல்ல தோழன் கிடைத்தாய்
FTC க்கு நல்ல கவிகளை
நல்கிய நாயகன் நீயே
இதயத்தால் வேறுபட்டு இருந்தாலும்
நட்பால் ஒன்று பட்டு உயர்த்தியவன் நீயே !!!
அடுத்த கவிதை :நல்கிய
-
நல்லதோர் கவிதையை நல்கிய
நல்லவளே !
தலைப்பை தவிர பிறிதொரு வார்த்தைக்கான பொருள் புரியும்
படி இருந்தால் நன்றாக இருக்கும் .
அடுத்த தலைப்பு
நன்றாக இருக்கும்
-
மன்னவனே....
என் மனதை அறிந்தவனே...
அன்பால் ...நேசத்தால்...
மனம் நிறைந்து இருப்பவனே...
என்றும் நீ என் அருகில் ..
இருக்கும் வரம் கிடைத்தால்...
என்(நம்) வாழ்வு ....
நன்றாக இருக்கும்..
வரம்
-
கேட்கும் வரம்
எல்லோருக்கும் கிடைபதில்லை
கிடைக்கும் வரம்
எல்லோருக்கும் நிலைபதில்லை
நிலைக்கும் வரம் வேண்டுமெனில்
நிஜமான நேசம் கிடைக்கவேண்டும்
நேசத்தை தேடும் பெண்ணே
புரிந்துக்கொள்
பாலும் கள்ளும்
ஒரே நிறம் தான் ;) ;)
நிறம்
-
வெறும் புறக்கண்களால் பார்த்து..
பாலையும் கள்ளையும்....
பேதம் பிரித்து பார்க்காமல்..
போதையில் மாட்டிக்கொள்ள ...
பேதை இல்லை நான்..
மெய் அன்பு..பொய் நேசம் ..பிரித்துஅறியும் மேதையே..
நிறம் பிரித்து பார்க்கவும் தெரியும்..
தரம் பிரித்து பார்க்கவும் தெரியும்..
ஆதலால்...
வீண் வருத்தம் வேண்டாம் தோழியே ...
வீண் வருத்தம்
-
கவிச்சமர் ,கவிச்சமர் என்பார்கள்
கேட்டதுண்டு , கேள்விபட்டதுண்டு
கண்ணால் கண்டதில்லை
சங்க காலத்தில் தான் காண கிடைக்கும் என்றிருந்தேன்
வீண் வருத்தம் வேண்டாம் !
கவிச்சமர் எங்க காலத்திலும்
உண்டென்று உணரவைத்து
கண்ணால் காணவும் வைத்த
கவிதாயினிகளுக்கு நன்றி !
ஒரு குறை , சிறு குறை
ஒரே ஒரு ஆண் கவி உள்ளே ஒப்புக்காவது வந்தால்
சமர் களத்தில் நானும் களம் கண்டிருப்பேன் !
ஒளியின் பிரதிபலிப்பே !
விரைந்து வா உன் சேவை இங்கு இப்போது தேவை !
அடுத்த தலைப்பு
கவிச்சமர்
-
கவி சமர் களத்தில்
கவிதைக்கு கவிதை தானே தவிர
யாரையும் புண்படுத்த அல்ல...
கவிதைக்கு கவிதை படைத்து
கவிதை திறமையை மட்டுமே
வளர்த்துக்கொள்வோம்...
தேவை இல்லாத குறிப்பினை
உட்புகுத்தி கவிதையையும்
தமிழ் திறமைக்கும் இழுக்கு
சேர்க்காமல் இருந்தால் சரி...
திறமை
-
கவிதையை கவிதையாய் மட்டுமே கண்டு
கவிதைக்கு பதில் அதே கவிதையையே கொண்டு
பதில் பதிக்கும் சராசரி திறமை மட்டுமே எனக்கு
கவிதை என்பது காணும் கண்ணோட்டத்தை பொருத்தது
என்பதை கண்மூடித்தனமாய்
நம்புவன் நான் .
தேவைக்கு ஏற்றாற்போல் வரிகளை பொருள் கொள்ளும் தனி திறமை
இன்னும் கர்க்கவில்லையே !
அடுத்த தலைப்பு
தனி திறமை
-
கவி மன்றத்தில்
கவிதைக்கு பதில் கவிதை
பதிப்பது திறமை..!
அதில் உள்ள குறைகளை
தமிழின் நலன் கருதி
வரி பதித்திடும் வறியவர்க்கு
பிற்போக்கு சிந்தனையுடன்
எடுத்துரைப்பது தனி திறமை..!
கருத்துள்ள கவிதையில்
சிறுமையான வரிகள் இருக்குமாயின்
அருமையான கவிதையும்,
பெருமை படாமல் போகுமென
பொறுமை இழந்து கூறினால்
வீண் வருத்தம் ஏன் சகோதரியே?
இப்படிதான் கவி பதிக்க வேண்டுமென
கட்டாயமும் இல்லை,
கட்டளையும் இல்லை.....
ஏற்று கொள்வதும்,
ஏற்று கொள்ளாததும்,
அவரவர் விருப்பம்..
கருத்து பதிவதும், பதிவிடுவதும்
கவி மன்றத்தில் புதிதல்லவே...- இது
என் தாழ்மையான கருத்து.
அடுத்த தலைப்பு தாழ்மையான கருத்து
-
தெள்ளத்தெளிவான கருத்துக்கள் நண்பா !
இருந்தும் ஏன் இத்துனை அமைதி ??
புத்தி சொல்லும் நல்ல கருத்தை
பத்தி பத்தியாய் பத்தியிட்டு
வரிகளுக்கு கொஞ்சம் அழுத்தம் இட்டு
எழுத்துக்களுக்கு கொஞ்சம் அடர்த்தியிட்டு
பதித்து இருக்கலாம் !
இருந்தும் ஏன் இத்துனை அமைதி ??
ஒருவேளை
அது தாழ்மையான கருத்து என்பதாலோ ??
அடுத்த தலைப்பு
அமைதி
-
அமைதியாய் இருக்கும்
சமுத்திரத்தை கூட
ஆர்பரிக்கும் சுனாமியாக்கும்
அழுக்கு பிடித்த அதிர்வே
உன் அடங்காத வெறிக்கு
அப்பாவிகள் பலியாவது ஏன்
உன்னை எவருக்கும் பிடிக்காது
அதனால்தான் எம்மவரை
பலி கொள்கிறயா.....
பலி கேட்கும் உன்னை
பாதாளத்தில் அடைக்கும் சக்தி
பகவானுக்கும் இல்லையோ ..
சுனாமி
-
தெள்ள தெளிவாய்
இருந்த சமுத்திரத்தில்
எங்கிருந்தோ வந்த சுனாமியால்
சில கிருமிகள் கடலில் கலக்க
மாசு படிந்து போனது சமுத்திரம்
மசாகி போன சமுத்திரத்தை
சுத்தம் செய்வது கடினமெனினும்
கிருமிகளை அழிப்பது சுலபமே... ;) ;)
மாசு
-
இதை விட மிக தெள்ள தெளிவாய்
இயற்க்கை சீற்றத்தை கூற முடியாது.
அழுக்கு பிடித்த அதிர்வென்றும்,
அதிர்வின் கோர தாண்டவத்தில்
ஏற்பட்ட சுனாமியால் கிருமிகள் கலந்ததென்றும்,
சமுத்திரம் மாசகிபோனதென்றும்,
கிருமிகளை அழிக்க வேண்டுமென்றும்,
சீற்றத்தை அழகாய்
சீற்றத்துடன் கூறிய
சகோதரிகளுக்கு வாழ்த்துகள்,
அழகு சமுத்திரத்தில்
கிருமியாகவும், மாசகவும்
இருக்க துளியும்
இவனுக்கு விருப்பம் இல்லை.
இனி வரும் காலங்களில்
சமுத்திரம் மாசு படாமல் பார்த்து கொள்ளுங்கள்
நன்றிகளுடன் அன்பு சகோதரன்....
அடுத்த தலைப்பு சீற்றம்
-
இனிய சோதரனே
கொடுக்க பட்ட தலைப்புக்கு
கவிதை புனைந்திருப்பது என் குற்றமோ
கவிதையை கவிதையாக பார்க்க சொல்லிவிட்டு
இப்போது தாங்கள் மாறுபட்டு நிர்ப்பது ஏனோ ...?
வெறும் வார்த்தை சரங்களா உங்கள் பதிப்புகள்
ஆழமும் ஆறிவும் சார்ந்ததென்று நினைத்தேன்
அவசரமாக தாங்கள் அவதூறு கூறுவது ஏனோ
சீற்றம் கொள்ளாதுஅமைதியாக சிந்தனை செயுங்கள்
அனைத்தையும் அகத்தினில் போட்டு
அவசரமாய் முடிவு எடுப்பது
அழகல்ல ..
அழகல்ல ..
-
எங்கள் பகுதியில் மிக அழகாய்
மிக,மிக அழகாய்,,ஒரு நதி,சிறு நதி
ஒரு காலத்தில் கண்கொள்ளா காட்சியாய்
கோடையில் கவின்மிகு குளிர்ச்சியாய் அந்நதி
இன்றோ நாற்றம் பிடித்த நச்சுக்கலப்பினில்
உள்ளூர்,வெளியூர் என உரிமத்தில் பேதம் இன்றி
பல பல தொழிற்சாலையின் கழிவுகள்
கலந்து,கழிந்து ,குழைந்து பாவமான கூவம் நதி
ஒருவழியாய் ஆகாய தாமரையை அகற்ற
ஒப்புகொண்டது ஒரு தொண்டு நிறுவனம்
கிருமி அகற்றும் உரிமை மட்டும் இன்னும்
உரிமம் பெறாமல் ஒருமையாய்,வெறுமையாய்
நல்ல நெஞ்சம் கொண்ட பெரும் கிருமிகள்
அகற்றும் பணியை ஏற்கலாமே சேவையாய்!
நாரி கிடக்கும் கூவம் ,
மாறி போகட்டும் பாவம் !
அழகாய் இருக்க வேண்டிய கூவம் நதி
அழுக்காய் இருப்பதும் அழகல்ல !
சமுத்திரக்கிருமியே அழிக்கப்படும் போது
கூவம் நதி எம்மாத்திரம் !
அடுத்த தலைப்பு
எம்மாத்திரம்
-
அழகாய் முளைத்து
அடர்த்தியாய் வளர்ந்து
பசுமையாய் கிளை பரப்பி
பரவலாய் நிழல் தந்து
காய்த்து பூத்து
கல கலத்து
கனிகள் பல ஈன்று
பருவத்துக்கு வந்து போகும்
பறவைக்கும் இரை தந்து
தன் பரிணாமத்தால்
பரந்து படர்ந்த உனக்குள்ளும்
புல்லுருவியாய் சில உயிரிகள்
உன் புனிதத்துக்கு புறம்பாய் சேர்ந்ததே ...
புல்லுருவிகள் அளிக்கப்படும் வரை
உன் புனிதம் காப்பது எம்மாத்திரம் ...?
நிழல்
-
நிழல் , அதன் நிழலையே கண்டு
பயம்கொள்ளும் பயந்தான்கொள்ளிகள்
சிலரை பக்கம் வைத்த்துகொண்டு
பேய்கதை ,பொய்க்கதை கட்டும்
மெய்ப்பாட்டியின் , பொய் கதை கேட்டு
மெய்சிலிர்த்து போக இனியும்
ஆள் உண்டோ ?
மனிதன் தன் புனிதம் காக்க
இனிதான் என்ன பணி புரிவானோ ??
அடுத்த தலைப்பு
மெய்பாட்டி
-
மெய்ப்பாட்டி கதை சொல்லும் போதும்
கதையோடு ஆழமான கருத்தையும் உள்வாங்கி
கடமையை நிறைவேற்றுவாள் ...
பல பொய் பார்ட்டி மெய்யென்று சொல்லி
பல பொய்களை மெய்யை போல் புனைந்து
மாய வலைகட்டி போடுவார் .....
மெய்ப்பாடி சொன்ன கதைகளை
மெருகேறி வளர்ந்தபின்னும் மறப்பதில்லை
பொய் பார்டி பொய்கதைகளை
மெய்யான மனங்களும் மதிப்பதில்லை ..
ஆழமான
-
அடடா !
ஆழமான ஒரு கேலிகதை !
"ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்துவிடாதே"
எனும் பாடல் வரி ஒன்று தான் நினைவுக்கு வருகிறது !
வாழ்க பொய் வளர்ச்சி ! வளர்க பொய் பிரசாரம் !
அடுத்த தலைப்பு
பொய் பிரசாரம்
-
மறதிக்கு மருந்து
மறக்காமல் குடித்துவிடு
இலையேல் அவரவர்
பொய் பிரசாரம் கூட
மெய் பிரசாரமாய்
அவரவர்க்கே தோற்றம் காட்டும்
கொடி பிடித்து
கோசம் போட்டு
கூட்டம் சேர்த்து
கட்சி சேர்த்து
அடுத்தவர் கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு
களம் பதிக்கும் களவாணிதனம்
கடுகளவும் இங்கில்லை ...
தேள் கொட்டி விட்டதோ ...
பரிதாபம்தான் ...
மறதி
-
களவாணித்தனம் இல்லை தான்
ஒப்புகொள்கிறேன் ,ஒப்புக்கொள்கிறேன்
மறதியில் மருளி தவிக்கும்
மந்த புத்தி கொண்டவர்க்கு
சொந்த புத்தியே சொதப்பல் எனும்போது
களவாணித்தனம் புரிவதுகடினம் தான் .
அதனால் தான், கூட்டாய் களவாணித்தனம் புரிய
கூட்டுக்கு கூட்டாளியை பிடிக்க
ஆள் கூட்டல் நடக்குதோ ???
கள்ளம் கபடம் அற்ற உள்ளம் கொண்டவனையே
கள்வனாய் சித்தரிக்கும் திறமை
சுட்டுபோட்டாலும் கல்லுளிமங்கையால்
மட்டுமே முடியும் !
தேள் கொட்டியது போல் இல்லாவிட்டாலும்
கட்டாயம் கொசு முத்தமிட்டது போல் இருக்குமே ???
அடுத்ததலைப்பு
கபடம்
-
தன்னை போல் பிறரையும்
எண்ணிக்கொள்ளும் தரம் கொண்ட
மனிதர் கூட்டத்தில்
சொந்த புத்தி சொதப்பலாய்
தெரிவது ஆச்சரியமில்லையே
மறத்தி வழி வந்த
மானமுள்ள தமிழிச்சி
மறந்தும் கூட்டு கொள்ளாள்
மாற்றானை சாடுவதற்கும்..
எதுவுமே கொட்டவும் இல்லை
முத்தமும் இடவும் இல்லை
தேளுக்கும் தெரியும்
கொசுவுக்கும் தெரியும்
தீயை தீண்டினால் தீர்ந்து போய்விடும் என்று
தெரியாதவர்கள் என்ன பண்ணுவர்கள்...
ஆறறிவு ஜீவிகளாம் பீத்தி கொள்ளகிறார்கள்
கூட்டு
-
கூட்டு சேர்த்து குழி பறிக்கும்
எண்ணம் இல்லை
சிலரின் குட்டு வெளிப்பட்டதால்
தப்பித்த சந்தோசம் எனக்கு...
வஞ்சகம் எண்ணம் துளியும் இல்லை
நம்பும் மாந்தரை ஏய்க்கும்
சிலரின் எண்ணம் விளங்கி
விலகிட்ட திருப்தி என்னுள்...
திருப்தி
-
மறத்தி குறத்தி பருத்தி
புண்ணாக்கு என்றால் ஒருத்தி...
நானும் ஏதோ கடிவாளம் கட்டப்படாமல்
கட்ட்டவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கடங்கா குதிரை
எனக்கருதி ,அதை அடக்குவோமே என்று களம் கண்டேன்
சில பல கவிதையும் பதித்தேன்
காலம கடந்த பிறகுதான்
கொஞ்சம் கொஞ்சமாய் தெரியவந்தது..
இது ஒரு நகைச்சுவை துண்டு
(காமெடி பீஸ் )என்று
அக்கினி அகிலாண்டம் ,தீபொரித்திரு முகம் ,கங்கு கந்தசாமி ,கொள்ளிவாய் கொடுவாயன் போல
கொடுமையானா கூட்டம்தான் போல
எப்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது தான் மிச்சம்
எப்படியோ , ஒரு பெரும் தொல்லை விட்ட திருப்த்தி தான் உச்சம்
Aduththa Thalaippu
SIRIPPU
-
எட்டாத பழம் புளிக்குமாம்
அதுதான் இது போலும்...
தனக்குள் தானே சிரிப்பது இரு வகை
ஒன்று இன்பத்தை நினைத்து சிரிப்பது
பிரிதொன்று இன்பம் துன்பம்
தெரியாமல் சிரிப்பது ....
பாவம் ஏர்வாடிக்கு
அடுத்த வண்டி எப்போப்பா ...?
கடிவாளம் அல்லாத குதிரைதான்
இதற்கு கடிவாளம் அன்புதான்
அன்பென்ற பெயரில்
அணங்குகளை வசபடுத்த
துணியும் ஆசாமிகளுக்கெல்லாம்
அடங்காத குதிரைதான் ...
அடக்க நினைத்தால்
அவளவும் இழப்புத்தான் ...
திரை படபெயர்களும்
திரைப்பட பாடல்களும் இலாது போனால்
தள்ளட்டம்தான் போலும் ...
அந்தோ பரிதாபம் ....
அறுதி வரிகள்
உறுதியாய் அணங்குகள் பொதித்த வரி ..
காசிக்கு போனாலும் சனி விடாதாம்
யாரவது சொல்லுங்களேன்
காசியை விட வேறு உண்டா
கூவம் என்றாலும் குளிக்க தயார்
பாதி நாள் பேசிய பாவத்தை தொலைக்கனும்யா ....
காசி
-
கடவுள் மேல் நம்பிக்கை இல்லை
காசியின் அவசியம் தேவையும் இல்லை..
புனிதமான காசி புனிதம் இழந்து போனது போல
அழகாய் இருந்தா கவிதை களம்
போர்களமாய் மாற
கலங்குது உள்ளம்...
கவிதையை விட்டு கதை வேண்டாம்...
சொந்த கதை, சோக கதை, காதல் கதை
புனைவதாக இருந்தால்
செல்லுங்கள் கதை பிரிவிற்கு....
கவிதை
-
எட்டாத பழமா ??
அழுகி கெட்டு போன வெளிநாட்டு பழமா ????
ஏர்வாடிக்கு வந்து யாரையும் பார்க்க நேரம் இல்லை
ரொம்ப தூரம் வேற ....
வேணும்னா கீழ்பாக்கம் வந்து சேறு ..
பக்கம் தான் பார்த்து போவேன்
படிகாரமும் ,பரிகாரமும் தந்து போவேன்
கல்லாட்டம் ஆடும் களவாணிகள்
கல்லுளி மங்கைகளுக்கு
மத்தியில் தள்ளாட்டம் ஒன்றும்
பெரிதில்லையே ?
ஒசியில் ஏசி பயணம் போக
யோசித்து தான் காசி பயணமோ ???
காசியாம் , கர்மாந்தரமாம் ...
யோசிக்காமல் பேசிக்கொண்டிருக்கும்
மாசுக்களை எல்லாம்
தூசியை விட மிக லேசாய் ஊதி தள்ளிடலாம்
அடேங்கப்பா !
கரை பூசும் விளையாடிற்கு குத்துவிளக்கு ஏற்றிய குலவிளக்கே சோக கவிதை வாசிப்பதை வேதனையின் வெளிப்பாடு என்பதா ???
வேடிக்கையின் வெளிப்பாடு என்பதா ???
எதுவானாலும்
கரை பூசும் எண்ணம் கடுகளவும் எனக்கில்லை என்பதற்கு என் பதிப்புக்களே
பேசும் சாட்சியங்கள்
கவிதை என்று வந்துவிட்டால் .... ஒரு கண்ணாடி முன்னாடி கட்டப்படும் பொருள் தான் பிரதிபலிக்கப்படும் .
அடுத்த தலைப்பு
ஊதிடலாம்
-
நரி கதை நன்றாகத்தான் இருக்கிறது ...
நரி புளிக்கும் என்றது ....
இங்கு வித்தியாசமாய் பழசு எண்ணுது...
நன்றி என் கருத்துக்கு உடன் பட்டதற்கு
அடடா... கீழ்பாக்கம் தான் ஏர்வாடி ஆகி போனதா .....?
அங்கேயே குடி இருக்கும் ஆளை பார்க்க
ஆவல் கொண்டோர் பட்டியலில் என் பெயரில்லை காண்...
அசச்சோஒ ..... பரிகாரம் என்று சொல்லி
பாவிகள் எல்லாம் காலில் விழுந்தால்
காசிக்கு போனாலும் தீராது ....
காசியெனும் புனித இடத்தையே
கருமம் என்று சொல்லும்
கருப்பு ஆடுகள் எல்லாம்
கருத்து சொல்வதுதான் கலிகாலம் என்பதோ ...?
செல்வத்திற்கு பெயர் போன
செழிப்பான நாட்டில் வாழும்
செல்ல மகளுக்கு
ஓசியில் போக அவசியம் ஏதுமில்லை
ஒன்று பண்ணலாம் ...
அந்த ஓசி இடத்தை
பகிர்ந்தளித்து தங்களையும் கூட்டி செல்லலாம் ....
காசியில் நீவீர் கால் வைத்தால்
காசியின் புனிதம் காணமல் போய்விடும்
காலம் முழுவதும் கங்கையில் குளித்தாலும்
அந்த பாவத்தை நான் தொலைக்கேன்
என் காசை செலவு பண்ணி
கறுமத்தை விலைக்கு வாங்க
நானும் என்ன அடி முட்டாளா...
ஆட தெரியாதவன்
அரங்கம் கோணல் என்றானாம் ...
அட மண்டே ...
எற்குதான் யோசிப்பதென்று
விவஸ்தையே கிடையாதா ...
பாம்பை தொரத்த பாட்டா பாடுவார்கள் ...
பதிப்புகள் நன்றுதான் ....
அதன் பதிப்புரையில்
பல புஷ்பங்கள் அர்சிகபடுவதுதான்...
அந்தோ பரிதாபம்
பூனை கண்ணை மூடி பால் குடித்த கதை
பார்த்து சிரிப்பதை தவிர வேறு வழி..?
சப்பை கட்டு கட்டி
சாதரணமாய் ஊதிடலாம் என
மனப்பால் குடிக்கும்
மன்னவர்க்கு .... மீண்டும் சொல்கிறேன்
மறத்தி இனம் இவள் மறந்துவிடாதே
புஷ்பங்கள்
-
பொதுமன்றம் என்பது நண்பர்கள் சண்டையிடுவதற்கான மைதானம் அல்ல. கவிதை களம் கருது மோதல் களமாகி பின்பு ஒருவரை ஒருவர் தூற்றிகொள்ளும் விதத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது . ஒருவர் கிளப்பும் தீப்பொறிக்கு மற்றவர் பதிலுக்கு இன்னொரு தீப்பொறி கிளப்ப இப்படியாக கவிதை களம் மற்றவர் கவிதை விளையாட்டை தொடராது வேடிக்கை பார்க்கும் இடமாக இருக்கிறது.வார்த்தைகளில் மற்றவரை தாக்கும் விதமாய் அமையும் கடுமையான சொற்களை பயன்படுத்தும் அல்லது இகழும் விதமாய் தொடுக்கப்படும் கவிதைகள் முன் அறிவிப்பு இன்றி அகற்றப்படும். இனி கவிதை விளையாட்டை தொடர்பவர்கள் இதை கவனத்தில் கொண்டு தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
-
புஷ்பங்கள் தூசிக்க படுகின்றன
விதி ... குரங்கின் கையில் சிக்கிய
பூமாலைகள் சிதைந்து
சின்னாபின்னமாய் போகுமே தவிர
பூஜைக்கு வராது...
பூஜைக்கு வராது
-
பூக்கும் பூவெல்லாம்
பூஜைக்கு வராது
உனக்காய் பூத்திருந்தும்
பூஜைக்காய் காத்திருந்தும்
வாடி போனபோதும் ...
என்றாவது உன் பூஜைக்கு
வரும் என்ற நம்பிக்கையில்
இந்த பூ ...
உனக்காய்
-
உனக்காய் எழுதும்
கவிதைகள்
உன்னை சேராது போனாலும்
என் நினைவுகளில் இருக்கும்
உனக்கு அற்பனமாகும்
என்ற நம்பிக்கையில்
தொடருவேன்
என் கவிதைகளை
நம்பிக்கை
-
நான் உன்னை சேராது போனாலும்
என் நினைவுகள் உன்னை சேரும்
என்ற நம்பிக்கியில்
என் பயணங்கள் ....
பயணங்கள்
-
இறைநம்பிக்கை என்பதில் நம்பிக்கை குறைவு தான்
இரு பிறை சுமந்த, ஒரு பிறையாம் அவளை
தரை பிறையாய் இறக்கிய அவன் தம்
அருட்கொடையை, உணர்வுபூர்வமாய் உணர்ந்திடும் வரை .
முறை முறையாய் என பல முறை இல்லாவிடினும்
ஒரே ஒருமுறையாவது என் அரவணைப்பில் அவள்
இருக்கும் அரும் வரம் தருவாய் எனும்
நம்பிக்கையின் பால் கொண்ட நம்பிக்கையில் அல்ல
வளர்பிறையாய் வளரும் அவள் குறை (சோகம்) யாவும்
தேய்பிறையாய் தேய்ந்து விடும் எனும் நம்பிக்கையில்
நான் தொடர்ந்திருக்கும் பயணங்களில்
இறைநம்பிக்கை பயணம் முதன்மை ..
அடுத்த தலைப்பு
முதன்மை
-
என்னை சுற்றிலும்
பல நினைவுகள்
இருந்தாலும்
அவற்றுள்ளே முதன்மையாய்
உன் நினைவுகள் மட்டும்
நினைவுகள்
-
முதன்மையான ...
மென்மையான...
உன் நினைவுகள்...
மனதில் நீங்கா ..
பசுமையான..
பொன் நினைவுகள்....
மென்மையான
-
என் மென்மையை
என் பெண்மை
சோதிக்கப் படுகிறது
உன் மௌனங்களால்
பெண்மை
-
பெண்மையின் ...
மேன்மை பொறுமை...
பொறுமையின் அருமை ...
இன்றோ அறியாமையை போன ...
கொடுமை...
பொறுமை
-
வந்து போகும் மேகங்கள் எல்லாம்
மழையை பொழிவதில்லை
வானில் தோன்றும் நிறங்கள் எல்லாம்
வானவில் ஆவதில்லை ...
கார்கால கீற்றாய்
கடந்து போகும் வானவில் உனக்காய்
காலமும் காத்திருக்கும் நான்
பொறுமை சாலி தானே ...
என் பொறுமை நீ அறிவாய் என் அன்பே
அது போதும் எனக்கு ....
வானவில்
-
வானில் தோன்றும்
வானவில் அது
வெகுசிலநாட்களாய்
வெளிப்படுவதில்லையே !
வழக்கம் போல்
விடயம் என்னவென
விவரமாய் அறிந்திட
வானிலை அறிக்கையை
வழங்கிடும்
வானிலை விஞ்ஞானி என
விவரம் அறிந்தவரிடம்
விவரமாய்
விசாரித்ததில் பெரும்
விந்தையான
வேடிக்கையான
விவகாரமான
விடயம் அது
வெளிப்பட்டது , என்னவளின்
வெள்ளிநிரமே தோற்கும்
வெள்ளை நிறம் அதனை
வர்ணம் 7 கொண்ட
வானவில் தன் பால் இல்லையே என
வெட்கி வேதனை கொண்டு
வெளிப்படுவதில்லையாம்
வழக்கம் போல
அடுத்த தலைப்பு
வழக்கம் போல ...
-
மேகத்தையும்
நிலவையும்
தென்றலையும்
வழக்கம் போல
துணைக்கு அழைத்தேன்
உன்னை நினைக்கும் மனதிற்கு
ஆறுதல் தர வேண்டி
என் கவிதையின் வரிகளில்
வந்து விளையாடி
என்னவனுக்கு என் மனதை
கூறி விடு என்று
கூறி விடு
-
தளிர் நிலவே !!!
கொளுத்தும் கோடையில்
கொலை முயற்சி தாக்குதலை
மெதுவாய் ஆனாலும்
முழுதாய் முறியடிக்கும்
குளிர் நிலவே !!!!
இனிமையில் நீ இருக்கும்
பொழுதுகளை வேண்டுமானால்
விடுத்துவிடலாம்
தனிமையில் நீ இருக்கும் பொழுதுகளில்
ஒரு, சிறு நொடியேனும்
நீ என்னை நினைப்பாய் அல்லவா??
நான் இருக்கும் பொழுது அதை
கூறாவிடினும்
இல்லாத பொழுதினில் எனும்
கூறிவிடு !
உண்மையாய் !
அடுத்த தலைப்பு
உண்மையாய்
-
உண்மையாய் நீ உள்ளவரை
என் தன்மைகள் மாறது ..
மென்மையாய் எனை தீண்டும் வரை
என் பெண்மைகள் தூங்காது ..
தன்மை
-
பெண்மையின் தன்மை அது
மென்மை என்றஉண்மை,
அதை உண்மையாய்
உணர்ந்தவன் நான் ,இருந்தும்,
ஏனோ ? வன்மை நிறைந்தவராய்
தொன்மையாய், நம்மை அறிந்தவரே
அடிக்கோடிடும் பொழுது தான்
அடிமனதில் லேசாய் அலைபாயுது
சோக அலை !
அடுத்த தலைப்பு
சோக அலை
-
கடல் அலைகள்
கரையை காதலிதபோதும்
கரையை அலை
நிரந்தரமாய் சேராத போதும்
அதன் அலைகள் தீண்டுவதை போல்
எனக்குள்ளும் சோக அலை அடித்தாலும்
உன் நினைவலைகளில் நீந்துவதை தவிர்க்கிறேன்
நினைவலை
-
கடற்கரை மணலில்
நாம் வரைந்த
காதல் கோலங்களும்
மணல் வீடு கட்டி
குடி புகுந்து
வாழ போகு வாழ்கையின்
திறப்பு விழா என்று கன்னம் கிள்ளி
குறும்பு பார்வை பார்த்து
சிரித்து சிரிக்க வைத்த
நினைவுகள் எல்லாம்
கடல் அலை கரை தொடுவதை போல
உன் நினைவலை
என் நெஞ்சம் வரை தொட்டு செல்ல
கண்ணீர் லேசாய் எட்டி பார்கிறது
தொட்டு செல்
-
தொடுவானமாய் நீ
தொலைவிலே இருந்தாலும்
தொட்டு செல் உன் நினைவுகளால்
உருக வேண்டும் ஒரு நொடியாவது
உருக வேண்டும்
-
என் கனவுகளை
பத்திரப்படுத்திக்கொள்கிறேன்..
என்றாவது ஒரு நாள்
தனிமையின் ஆக்கிரமிப்பு
என்னை சிறைகொள்ளும் போது
உன்னை நினைத்தே உருகவேண்டும் நான்..!
அப்போது கன்னக்குழிகாட்டிச்
சிரிக்கும் உன் நிழற்படம் ஒன்று
கையில் இல்லாமல போய்விடும் எனக்கு!
நிழற்படம்
-
நிஜத்தில் உன் நிழலைக் கூட
நேசித்த எனக்கு ஏனோ
உன் நிழற் படத்தை சேமித்து வைக்க
தோன்ற வில்லை...
நிழற் படத்தை சேமிக்காவிடினும்
உன்னை பார்த்த தருணத்தில் எல்லாம்
என் கண்களினால்
பல ஆயிரம் புகைப்படம் பிடித்து
அழியாமல் இருக்க
என் இதய அறையில்
சேமித்து வைத்துவிட்டேன்
இதய அறை
-
என்றாவது ஒருநாள்
எனை தேடி நீ வருவாய் என்ற நபிக்கையில்
என் இதய அறை எங்கும் பட்டுக் கம்பளம்
விரித்து வைத்துளேன் ...
விருந்தாட வராது போனாலும்
மாருந்தாக அவ்வப்போது
வந்து போய்விடு
பட்டுக் கம்பளம்
-
பட்டுக்கம்பளம் விரித்து...
பூ மாலை ஏந்தி...
மனம் எங்கும்....
மலர் தூவி ...
நித்தமும் காத்திருக்கிறேன்...
உன் அரும் வருகைக்காக......
நித்தமும்..
-
நித்தமும் உன் சிந்தனையில்
சிக்கி தவிக்கும் எனக்கு
ஒரு முறை முகம்
காட்டி சென்றுவிடு..
புத்துணர்வு பெற்று
மீண்டும் ஒரு முறை
காதலிக்க ஆயுத்தமாவேன்
புத்துணர்வு
-
மனம் தனிமை ..
என்னும் தீயால்..
வாடி...வதைக்கப்படும்...
தருணங்களில்...
உன் நினைவு என்னும் வசந்தம்..
பொன் வசந்தமாய்...
என்றும் மனதிற்கு...
புத்துணரவு ....
தருணம்
-
குணமுள்ள இடத்தில்
சிணமுள்ளது இயல்பென்றாலும்
சிணத்தை கட்டுக்குள் வைக்காத
மனத்தை என் சொல்லி நிந்திப்பது?
மனத்தை கட்டி வைக்க
பணத்தை செலவு செய்தும்
கண பொழுதுகூட
மனம் எதிலும் லயிக்காமல்
ரணமானது தான் மிச்சம்
வனவாசம் போனவன் மணம்
திணமும் சோலையிலேயே இருந்தும்
குணம் படைத்த தமிழ் சொந்தங்கள்
வினவிய போதும்
மனமினங்காதவன் இயற்கை தந்த
தருணத்திற்கு மட்டும்
மனமிறங்கியது ஏனோ?
சொல் மனமே.......!
அடுத்த தலைப்பு சொல் மனமே...
-
அண்ணன் என்று அனைவராலும் அன்பாய் ஏற்கப்பட்ட
அன்பான ஒரு அண்ணனால் எப்படித்தான் முடிகிறதோ ??
காணும் அனைவரையும் தங்கையாய் ஏற்றுகொள்ள ??
தங்கமான இதயம் கொண்ட சகோதரனை
நலம் விசாரித்ததாய் சொல் மனமே !
சகோதரா !
-
அன்பாய் அண்ணா என்றாலே
அவள் மேல்
ஆயிரம் கோபமிருந்தாலும்
அத்தனையும் மறந்து
அவள் மீது
அபிப்ராயம் கொள்பவன்,
அனைவரும் சகோதர(ரி)களென்று போதித்த
அன்னை பாரத தாயின்
வம்சாவழி இவன்,
அதுமட்டும் இல்லாமல்
அமெரிக்காவில் உரையாற்றிய
அமரர் விவேகாணந்தரின்
வழி நடப்பவன்
அப்படியிருக்கும் போது
அன்பு தங்கைகளை இந்த
சகோதரன் அப்படி
அழைப்பதில் தவறில்லையே?
அடுத்த தலைப்பு அபிப்ராயம்
-
என் நினைவெல்லாம்
நீயாகி போனபின்னர்
எனகென்று தனியாய்
ஏதுமில்லை அபிபிராயம்
தனியாய்
-
அருமையாய்..பெருமையாய்..
நான் கொண்ட காதலை...
தனிமையில் தவிக்கவிட்டு...
தனிமையால்....
வெறுமையால் ....
மனதை நிரப்பி ..
எங்கு சென்றாய் என் காதலே??
மனதை நிரப்பி
-
கண்களோடு பேசி
கருத்தை கவர்ந்தவனே
இன்று மனதோடு பேச வைத்து
மனதை நிரப்பி
மாயமாய் நீ சென்றதேனோ
மாயமாய்
-
மாயமாய் எங்கும் போகவில்லையடி
என் தாயுமானவளே !
காயம்(உடல்) அதில் ஏதும் காயம் நேர்ந்தால்
உன் நினைவில் நீந்தினால் நொடி கணத்தில்
காயம் அது மாயமாய் போகிடுமே
மனமதில் சில காயம், அதனால் தான்
விலகியிருந்தேன் சில காலம் !
அடுத்த தலைப்பு
காலம்
-
காலங்கள் மாறலாம்
என் கோலமும் மாறலாம்
காணும் காட்சிகளும் மாறலாம்
உன் மீது நான் கொண்ட
காதல் மட்டும் மாறது மன்னவனே ...
கோலம்
-
கனகாலமாய் என்னுள்ளே,
ஓசைபடாமல் லேசாய்,
ஒரு ஆசை, சின்னஞ்சிறு ஆசை .
அதிகாலை வேலை ,அழகுச்சோலை
அச்சோலையை ஒட்டி அழகாய்
சிறிதாய் ஒரு சாலை,
சாலையின் ஓரத்தில் ,
குளிர்நிலவாய்,தளிர்நிலவாய்
சேலையணிந்த உயிர் சோலையாய்
நீ அமர்ந்து கோலம் போடுகையில்
உன்னை நான் சீண்டிட ,சீன்டலின்
சிணுங்களில், சிதைந்த கோலத்தின்
பொடிபடிந்த உன் கைகளால்
என்னை தள்ளிவிட, என் கன்னத்தில்
வண்ணவண்ணமாய் பல வண்ணம் ,
நீ போடும் கோலத்திற்கு கடும் போட்டி
நான் என மனதிற்குள் ஒரு எண்ணம் !
அடுத்த தலைப்பு
வண்ணம்
-
என் கனவுகள் எல்லாம்
வண்ணமின்றி வெளிறியே தெரிகின்றது
வானவில்லாய் நீ வந்து
வண்ணங்களை தந்துவிடு
கனவுகள்
-
வண்ணமாய் மினுமினுக்கும்
கிண்ணமாய் ,மின்னும்
கன்னம் கொண்டவளே !
அக்கன்னத்தில் கரம் வைத்து
எழில்,சின்னமாய் அமர்ந்தவளே ....
காண்போர் யாவரையும் திண்ணமாய் ,
கிறங்கடிக்க எண்ணமோ ?
சின்ன சின்னதாய் ஆனாலும்
வண்ணவண்ணமாய் மின்னும்
கனவுகளுக்கு சொந்தக்காரியே
வண்ணங்கள் எல்லாம் வரிசையில்
கடும், தவம் இருக்கின்றன
உன்னோடு,ஒன்றோடு ஒன்றாய்
அன்றி,ஒன்றி கிடக்க .
வானவில்லாய் கனவில் வந்து
வண்ணம் சேர்க்க ஒப்பம் தான்
ஒரு சிறுகுறை நீங்கலாக .......
வானவில்லாய் நான் வந்துவிட்டால்
வானவில்லின் ஏழு வண்ணம்
மோட்சம் போகும். சரி
பாழாய் போன , மீதி வண்ணங்கள்
மோசம் போகுமே :-\
அடுத்த தலைப்பு
மோட்சம்
-
வானவில்லிற்கு மோட்சம் கொடுத்ததால்.....
வண்ணங்கள் மோசமாய் போகுமே என...
வண்ணங்களின் எண்ணங்களையும்....
மனதில் கொள்ளும்....
மெல்லிய மனனம் படைத்த ...
இதயத்தை சொந்தமாய் கொண்டுள்ளதால்தானோ ???
கனவில் வருவதிலும்.....
சிறு குறை கொள்ளகிறது மனம்....
சொந்தமாய்
-
என்னக்கு சொந்தமாய்
ஆயிரம் சொந்தம் வந்தாலும்
சந்தோசம் தந்தாலும் -அன்பே
உன்னக்கு நிகராகுமா குட்டிமா !
வயது
-
என் கவியால் , என் புவியை சுவீகாரம் செய்திட நான் எண்ணம் கொண்டேன் ...
அதற்கான ஏற்பாடாய் பதிப்பையும் படி படியாய் பாதி முடித்தும் விட்டேன் ....
திடுக்கென்று , திபு திபுவென்று FTC முழுதும் மேவிய ஜீவனொன்று தாவியே குதித்து தலைப்பையும் விட்டு சென்றது பகுதியில் விகுதியாய் ...
சரி , பாதி முடிந்த சோதி பதிப்பினை மீதி முடிக்காமலே சமர்பித்தும் விட்டேன் வயதும் பாலினமும் அறியா தாவி வந்த தலைப்பிற்கே ....
Aduththa Thalaippu
சமர்ப்பணம்
-
இன்று ஒரு பொழுது அல்ல
இனி வரும் எல்லா பொழுதுகளும்
எனக்காக சுவாசிக்கும் உனக்கே
முதல் அர்ப்பணம் அம்மா ..
பொழுது
-
கடல் தாண்டி வாழ்ந்தாலும்...
முப்பொழுதும்....
பல பொழுதும்....
எப்பொழுதும்....
இதயம் துடிப்பது உனக்காகவே...
இதயம் துடிப்பது
-
எப்பொழுதும் இதயம் துடிப்பது
எனக்காகவே....
எனும் இனியவளே
எப்பொழுதும் அலுவல் இருப்பதாலும்
முப்பொழுதும் அதிலேயே
மூழ்கி இருப்பதாலும்
இப்பொழுது ஒரே ஒரு
முழுபொழுதாவது உன்னை
நினைவில் கொள்வேன்....!
அடுத்த தலைப்பு நினைவில் கொள்வேன்.
-
நித்திலமே ! என் ரத்தினமே !
நித்தம் , நித்தம் என்
சித்தம் குளிர்வித்திடும் முத்தினமே !
சத்தியமாய் ஒன்றை சொல்லுகிறேன்
நினைவில் கொள்வேன் உன்னை என்றும் நினைவில் கொள்வேன் என
நெஞ்சுருக நீ சொன்னது , என்னை
உன் நினைவில் கொள்வேன் என்ற பொருள் பட அல்ல
உன் நினைவில் நீங்காமல் நிலைத்து , நிழலாடி
நித்தம் ,நித்தம் ,சத்தம் இன்றி உன்னை கொல்வேன்
எனும் பொருள் பட என்று இப்போதுதான் உணர்ந்தேன் !
Aduththa Thalaippu
NENJURUGA
-
நினைவுகளால் ரணமான மனது ..
உன் தரிசனம் என்னும் ..
மருந்திற்காக நெஞ்சு உருக ....
காத்திருக்கிறது....
ரணம்
-
உன் நினைவுகளால் பல கோடி முறை
ரணம் ஆகியும் ,பழுதாகாமல் இயங்கும் என் இதயத்தினை ..
"கின்ன்ஸ் " உலக அதிசயத்தில் பதிந்திட சொல்லி ,எத்தனையோ அன்பு கோரிக்கைகள்
அத்தனையையும் , அப்படியே நிராகரித்துவிட்டேன்
நினைவுகளில் ரணம் ஆக்கிபோன என் இதயம் அதை
நிஜத்தில் நிறைவாய் குணம் ஆக்கிட நிச்சயம்
நீ வருவாய் என்னும் நம்பிக்கையில்
Aduththa Thalaippu
நம்பிக்கையில்
-
ரணமான மனதினை....
குணமாக்கும் வித்தையை ....
நன்கு கற்று உணர்ந்தவள்....
உன்னவள் அவள் ...
வரவின் மீது கொண்ட ...
நம்பிக்கையை காக்கும் ...
வகையில் ...உன்னை தேடி ...
உன் மனதை தேடி...
வரும் பொன் பொழுதை ...
அனுதினமும் எதிர்பார்த்து...
ஆவலாய் ....
காத்திருக்கிறது அவள் மனது...
வித்தையை
-
பால காலம் முதல்
வாலிப காலம் வரை - எண்ணில்லா
வித்தைகளை கண்டும், கேட்டும்,
கற்றும் கூட வைத்துள்ளேன் என்னில் .
கத்தை கத்தையாய் காசு பணம்
கொட்டிடவேண்டாம் , கட்டிடவும் வேண்டாம் .
காட்டு கத்தல் கத்தி மோடி மசுத்தான்
வித்தையெல்லாம் கூட காட்டிட வேண்டாம்
பஞ்சு பொதி திணிக்கப்பட்ட மெது மெது மெத்தைக்கு பதிலாய்
உன் மடியினில் என்னை ,சில நொடி
இளைப்பாற்று ......
ரணம் வெறும் குணம் ஆகாமல்
பரிபூரணம் குணம் ஆகும்
அடுத்த தலைப்பு
பரிபூரணம்
-
பரிசுத்தமானவனே
என்று என்னை உணர்வாய் நீ
பரி பூரணமாய் ....
பல இரவுகள் விழிதிருகின்றேன்
பவுர்ணமியாய் வந்துவிடு
பவுர்ணமியாய்
-
நிலவே....!
என்மன வாணில்
சிற்சில சமயங்களில்
குறைநிலவாய்,
பிறைநிலவாய்,
அரைநிலவாய்,
காட்சி தருபவளே
பௌர்ணமியாய்,
முழுநிலவாய்,
தரைநிலவாய்
என் வீட்டு
அறைநிலவாவது எப்போது?
அடுத்த தலைப்பு பிறைநிலவாய்
-
சீரும் சிறப்புமாய் பதித்த வார்த்தைகளை
சீர் படுத்துவதில்,
அரை அறையாகவும் ,அறை அரையாகவும்
மாறி போன மாயத்தினால்
தரையிறங்க வெறுத்துவிடாதே பிறைநிலவே !
பிறைநிலவாய் இல்லாவிட்டாலும்
குறைக்கு ஏற்றாற்போல் குறைத்துக்கொண்டு
அரைநிலவாய் ஆவது வந்துவிடு !
அடுத்த தலைப்பு
வந்துவிடு
-
இதயக்கூட்டில் பட்டுக்கம்பளம் விரித்து...
பொன்னவன் அவன் வருகைக்காக...
வழி மீது விழி வைத்து ..
காத்திருக்கும் பொன்மகள் ...
அவளுக்காக வந்துவிடு...
விழி
-
வழி மீது விழி வைத்து
வழி பார்த்து காத்திருக்கும்
என் பொன்மகள் அவள்தன்
விழி மீது விழி வைத்து
காதல் மொழி பேசி,நலம் வினவி
என் இமைஇறகுகள் கொண்டு
அவள் விழி வழிந்திடும் அந்த
ஆனந்த கண்ணீர் துடைக்க
வந்திடுவேன் , வந்து அதுவரை
அவள் காணாத ஆனந்தம்
தந்திடுவேன் .....
அடுத்த தலைப்பு
ஆனந்த கண்ணீர்
-
அன்பை கண்டு வியந்து ..
மனம் அசந்து ....
விழியோரம் சில துளிகள்...
இன்பத்தில் வழிந்த...
ஆனந்த கண்ணீர் துளிகள்...
விழியோரம்
-
விழியோரம் நீர்த்துளி வர
வைப்பதல்ல என் எண்ணம்
இதழோரம் ஒரு சில துளிகள்
நிரந்தரமாய் நிலைத்து இருக்கவும்
பிட்டு வைத்த மொட்டு மலர் போன்ற
பட்டு கன்னம் அது
சிவப்பு வண்ணமதில் விட்டு
நிரந்தரமாய் நனைந்து, மூழ்கி
இருக்கவும் தான்அடிப்படை எண்ணம்
அடுத்த தலைப்பு
அடிப்படை எண்ணம்
-
அன்பும் அறிவும்
அழகான பேச்சும்
பண்பும் எனை கவர
அடிபடையில் ஒரு கரணம்
உன் பால் நான் கொண்ட காதல்தான்
அன்புக்கு உரியவனே
வம்பு பண்ணாது வந்துவிடு
வாழ்கையின் சந்து பொந்துகளை
துளைத்து எறிந்துவிடு
வம்பு
-
வந்துவிடுகிறேன் ஆசை மலரே வந்துவிடுகிறேன்
தடை ஏதுமில்லை உன்னை வந்தடைவதற்க்கு
ஓசை படாது ஆசை போல உனைதேடி
வந்துவிடுகிறேன் !
வந்தடைய தங்குதடை இல்லாத பொழுது
வாழ்கையின் சந்து பொந்துக்களை
வீணாய் தகர்த்து எறிவானேன் ??
வந்துவிடுகிறேன்,வந்துவிடுகிறேன்
உந்தன் நினைவின் நீட்டம் அது நீண்டபொழுதேல்லாம்
எந்தன் சிந்தையது நொந்தும் வெந்தும் சிதைந்து
கந்தை கந்தையான பொழுதுகளில்
மந்தையில் இருந்து பிரிந்த வெள்ளாட்டை போல
சந்துகளிலும் பொந்துகளிலும்தான் உந்தன்
தரிசனம் தேடி திரிந்தேன் ...
அதன் கரிசனம் கருதி வாழ்கையின் சந்து
பொந்துகளை வம்பு செய்யாமல்,
விட்டுவிடுவோமே !
அடுத்த தலைப்பு
விட்டுவிடுவோமே !
-
உன்னை நானும்
என்னை நீயும்
உளமார நேசிக்கும்போது
நமக்குள் ஏன் இந்த ஊடல் அன்பே
விட்டு விடுவோமே
நம் அன்பை எண்ணி
ஊடல்
-
கண்ணே....!
கூடலும், ஊடலும்
காதலர்க்கு புதிதல்லவே
ஊடல் என்பதே
கூடலின் வெளிப்பாடு
கூடல் என்பது
ஊடலின் உச்சம் என்பது
உனக்கு தெரிந்தும்
ஏன் இந்த விண்ணப்பம்?
அடுத்த தலைப்பு கூடல்
-
"உம்" என்று நீ சொன்னால் போதும்
விட்டு விட்டு துடிக்கும் இதயம் அதையே
பொட்டு நொடியும் வீணாக்காமல் அப்பொழுதே
விட்டு விட தயார் நான்
வெறும் ஒப்பிர்க்கும்,மற்றோர் கண்துடைப்பிர்க்கும்
கட்டுக்கோப்பாய்,கட்டுபாடாய் கடைபிடித்த
ஊடலினை விட்டுவிடவா யோசிப்பேன் ??
கூடுதலாய் கருதாவிடில் கூடலையே
கூட விட்டு விடுவேன், உன்னதமான
உண்மையான அன்பின் தேடல் பொருட்டு !
அடுத்த தலைப்பு
தேடல்
-
அன்பின் தேடல் ...
தேடலின் இறுதியில்..
அறுதியாய் .....
அருமை பரிசு...
உன் இதயம்...
அறுதியாய்
-
எனக்கும் தமிழ் தெரியும் எனும்
மனகனத்தை கொடுத்து
தமிழில் சில கிறுக்கல்களையும்
கொடுத்து,ஒரு சில ஓவியங்களுக்கு
உயிர் கொடுத்துவந்ததனால்
எனக்கும் தலைகனம் இருந்தது
யானும் இறைவன் என்று .....
(நான் படைப்பதனால் என் பேர் இறைவன்)
என்ன ஆயிற்று அப்பகுதிக்கு ??
அறிந்தவர்,தெரிந்தவர் யாரும் கூறலாம் ....
அப்பகுதியில் உறுதியாய் என் பதிப்பு
நிலைக்கின்றதோ ? இல்லையோ ? ஆனால்
அறுதியாய் நிலைப்பது என் பதிப்பே !
அடுத்த தலைப்பு
என் பதிப்பு
-
மனம் விரும்பிய விஷயங்களை..
மனம் விரும்பும் தருணத்தில்...
நான் அறிந்த ...
தமிழின் துணையால்..
தெரிந்த வார்த்தைகள் இட்டு...
சில வரிகள் சமைத்து ...
சிறு பதிப்புக்கள் பதித்தேன்..
என் பதிப்பையும் .....
ரசிக்க சில இதயங்கள் ...
மன்றத்தில் இருப்பதை ..
அறிந்தேன் பாராட்டுக்களின் ...
வருகையால்...
மனம் விரும்பிய
-
மனம் விரும்பிய ஒரு விஷயத்தை
காணவில்லையே, எனும் ஏக்கத்தில்
மனம் உருகி ,கேள்வியை கேட்டு விட்டு
பதில் வரும் என காத்திருந்தால்
நன்றி பாராட்டு வருகிறது
பதிலுக்கு பதிலாக .....
அடுத்த தலைப்பு
பதிலுக்கு பதிலாக
-
பதிலுக்கு பதிலாக
பலதடவை பேசினாலும்
பலதடவையில் ஒரு தடவை கூட
உன்னை பற்றி பேசுவதை நிறுத்தவில்லையே
உன்னை
-
பெண்ணே.....!
உன்னை பற்றி பேசுவதை
ஏன் நிறுத்த சொல்கிறாயோ?
உன்னை பற்றி
பேசுவதை நிறுத்திவிட்டால்
உன்மீது கொண்ட அன்பை
மறந்துபோவேனென
அச்சபட்டே பேசிகொண்டிருக்கிறேன்
நீ இருந்தும் இல்லாமலும்
ஒருதடவை என்ன
ஓர்ஆயிரம்தடவை பேசுவேன்
உன்னை பற்றி பேசுவதில்
எத்தனை ஆணந்தம்...!
அடுத்த தலைப்பு ஆணந்தம்
-
பல்சுவைகளை பின்னுக்கு தள்ளிடும்
பால் சுவையினையே ,சற்று தள்ளி
முன் வந்து நிற்கும் பல சுவைகளில்
முதலாமது என கேட்டால்
பல சுவைமிகுந்த சுளைகளை சுவை
சுவையாய் உள்ளடிக்கிய பலாபழ
சுவைதான் ..
அப்பலாவினை காணும் பொழுதுகளில்
முன் வந்து நிற்கும் உன் நினைவின்
ஆனந்தமே !
விளக்கம் வேண்டின் வினவலாம் !
தகும் விளக்கமும் பெறலாம் !
அடுத்த தலைப்பு
வினவலாம் !
-
உன்னை பற்றி
உன்னிடமே வினவலாம் ...
உனக்கு பிடிக்குமா
உள்ளதை சொல்வாயா...
என்ற எதிர்பார்ப்பு நீங்க
உன்னை பற்றி உள்ளதை சொல்லிவிடு
சொல்லிவிடு
-
என்னை பற்றி அறிய
இவ்வளவு ஆவலா பெண்ணே...........!
நீ கேட்டு மறுத்தால்
நான் மடையன் ஆகி போவேன்
என்னை பற்றி உன்னிடம்
உள்ளதை உள்ளபடியே
சொல்லிவிடுகிறேன்
என்னைப்பற்றியும்
எனக்கு பிடித்ததை பற்றியும்
முழு நீள பட்டியல் இட்டுவிடலாம்
எதை முதலில் கூற
என்பதில்தான் மனபோராட்டம்.......
எளியவன் இவனுக்கு வந்த
பணபோராட்டம் கூட தீர்ந்து போகும்
மனபோராட்டம் தீர்ந்தபாடில்லை
எதை தெரிந்து கொள்ளவேண்டும்
உன் எதிர்பார்ப்பு
எதுவென தெளிவுபடுத்து....?
அடுத்த தலைப்பு தெளிவுபடுத்து...
-
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி உரைக்கும்
உன்னத பழக்கம் உள்ளவன் நான்.
தொன்றுதொட்டு என்னை உற்று நோக்குவார்
உணர்ந்திருப்பார், உண்மை ஈதென ,ஒருவேளை
தவறினாலும் ,நிச்சயம் நீ அறிவாய் அவ்வுண்மையை !
ஆகையால் ,சொல்லி தெரியவைக்க ஒன்றுமில்லை
செல்ல கிளியே ! கிள்ளை மொழியே !
முடியுமானால், ஒரேவொரு குழப்பம் தெளிவுபடுத்து. !
இனி உரைக்கும் தகவலை,பொதுப்படையற்று
தனித்துவமாய் தெரிவி ! இல்லையேல்
என் பதிப்புக்கள் எதற்கும் பதில் வேண்டாமென அறிவி !
அடுத்த தலைப்பு
அறிவி !
-
உன்னை தேடி நகரும்
கால்களுக்கு அறிவி
உன் பாதைகள்
எனக்கு சொந்தமில்லை என்று...
அப்பொழுதும் என் கால்கள்
உன் பாதை தேடி பயணமாகிகொண்டே இருக்கும்
சொந்தமில்லை
-
சொந்தமில்லை என்று தெரிந்தும்
உன்னை நேசிக்கிறேன்
சொந்தமாக நீ வராவிடினும்
என் சொந்தமாய்
எனக்கே சொந்தமாய் நீ... :-[ :-[
எனக்கே
-
எனக்கே உரித்தான ...
உன் மனதில் என்றும் ..
உனக்கே உரியதாய் நான்..
நமக்கே நமக்கென
சொந்தமாய் நம் மனம் ...
சொந்தங்களையும் .... பந்தங்களையும் ....
தாண்டிய தெய்வீக பந்தம் ......
தெய்வீக பந்தம்
-
பிரிவின் மீது அவ்வளவாய்
பரிவு இருந்ததில்லை
உன் பிரிவையே அவ்வளவாய்
நான் அறிந்திருந்ததில்லை என்பதாலோ ?
பொதுவாய், பேசுவது என்பது
பொதுவான ஒன்று தான் ,நமக்கோ
பேசுவதென்பது மிக பெரிதான ஒன்று
அறிந்தவரை இரு நாட்களுக்கு மேல்
பேசாது இருந்ததில்லை , இருந்தும்
இரு நாட்களுக்கு மேல் பேசாமல் ஒரு
நொடியும் இருக்கமுடியாதென ,உன்
மனமார நீ சொன்னதும் , உள்ளே
கர்வபடாமல் இருந்திட முடியவில்லை
இது என்ன தெய்வீக பந்தமோ ????.
அடுத்த தலைப்பு
பரிவு இருந்ததில்லை
-
என்னை நோக்கிய
உன் பயணத்தில்
தேவையே இருந்திருகிறது
பரிவு இருந்ததில்லை
ஏன் பாசமும் இருந்ததில்லை
உன் பயணமும் முடியலாம்
ன் தேவைகளும் முடியலாம்
உன் நினைவுகளில்
என் உணர்வுகளின் நகர்வுகள்
பயணித்துக்கொண்டே இருக்கும் ..
நினைவு
-
நேசிக்கும் இதயத்தை
துடிக்க வைத்து
மறக்க நினைத்தாய் ...
நானும் மறக்கக் நினைத்தேன்
இன்னும் முயன்று கொண்டே
என் நாட்கள் நகர
உன்னை பற்றிய என் நினைவின்
நாட்கள் ஒரு பக்கம்
தானாக அதிகமாகி
அளவில்லாமல்
நீண்டு கொண்டே போகிறது
அளவில்லாமல்
-
எத்தனை வேலை இருந்தாலும்
கவலை மறந்திட
இதயங்களை இனைத்திடும்
இனையத்திற்கு ஓடோடி வந்திடுவேன்...!
இனையத்தில் பாசமாக நேசிக்கும்
அன்பு சொந்தங்கள் மீது
அளவில்லாமல் கொண்ட அன்பினால்...
ஆணால் இப்பொழுதோ
பாசமாய் நேசித்த
அன்பு சொந்தங்களே
விலகி நிற்பதை கண்டு
இனையத்திற்கு
வரவே யோசிக்கிறேன்...!
அடுத்த தலைப்பு அன்பினால்
-
அன்பினால் கட்டுண்டால்
அகத்தினில் தெளிவிருக்கும்
அடுத்தவர்கள் பேச்சினில்
இதயம் கலங்காது
இணையத்திற்கு
இடைவிடாது நீங்கள் வரவேண்டும்
இடர் படாது இதயங்களுடன் இணையவேண்டும்
இணையவேண்டும்
-
அன்பினால் கட்டுண்டதால்
இடர்கள் பல வந்தாலும்
அன்பு இதயங்களுடன்
இணையவேண்டும் என்ற காரணத்திற்காக
இடையிடையே வந்திடுவேன்.....!
இடைஇடையே வந்தும்
இடைவிடாது வந்தும்
அன்பு சொந்தத்திடம் இருந்து
வாய் வார்த்தைக்கூட
வரவில்லை என்பதில்தான் வருத்தம் ....?
அடுத்த தலைப்பு வருத்தம்
-
வருத்தம் வேண்டாம்
வருவது வரும்
வாழ்கையின் தத்துவம்
வஞ்சியும் வருவாள்
உங்கள் அன்பினை தேடி
தத்துவம்
-
வஞ்சியிடம் இருந்து வரும்
வார்த்தை அன்பாய் வேண்டாம்
வஞ்சிக்கும் வார்த்தையாய் கூட
வருவது வரட்டும் என
வந்து வந்து போகிறேன்......
வஞ்சி அவள் ஓர பார்வை மட்டும்
வீசிவிட்டு ஒதுங்கி செல்வதால்
வஞ்சிக்கபட்டவன் ஆகிவிட்டேனா என
அஞ்சி ஒடுங்கி போகிறேன்.....!
வஞ்சிக்கபட்டவன் ஆன பிறகு
வஞ்சிக்கபட்டவனுக்கு
வாழ்க்கை தான் ஏது..?
வாழ்கையின் தத்துவம்தான் ஏது..?
அடுத்த தலைப்பு வரவேற்ப்பு
-
காதலெனும் பூந்தோட்டத்தில்
பூந்தோட்டத்தின் பூச்செடியில் பூக்கும் மலராய்
அடுத்த காதலின் ஜனனம் - அதை
நாம் ஆவலுடன் "வரவேற்ப்போம்"
அடுத்த தலைப்பு "ஜனனம்"
-
பாராமல் இருந்து
என்னை மரிக்க செய்துவிடாதே
உன் பார்வையால்
ஒவ்வொரு கணமும்
ஜனனம் தருகிறாய் நீ...
பார்வையின் ஊடலோடு
பாவியின் காதல்
வாழட்டுமே
ஒவ்வொரு கணமும்
-
மரித்த காதலுக்கு ..
ஜனனம் இல்லை....
உன்னதமான...
உயர்வான ...
உண்மையான காதல் ..
மரிப்பது இல்லை..
ஒவ்வொரு கணமும்...
புத்துணர்வுடனும் ...புது உணர்வுடனும்..
முதிர்ந்து... வளமாய் வளரும்...
மரிப்பது இல்லை
-
உன்னதமானவளே !!
உன்னிடம் ஒரு சிறு கோரிக்கை !!!
உதவுவாயா ??? உண்மையில் பூக்களின் தீரா காதலன் நான்
உதகைக்கு ஒருமுறை சென்றால்
உன்னால் முடிந்தவரை அங்கிருக்கும் பூக்களை
உன் கவின் மூக்கினால் முகர்ந்து விடு ....!
உன்னால் முகரபட்ட பூக்கள் ஒரு பொழுதும் மரிப்பதும் இல்லை ... உதிர்வதும் இல்லையாமே ???
அடுத்த தலைப்பு
கவின் மூக்கு
-
என்னை பற்றி நீ கவிபாடுவதுமில்லை
ஏனெனில் நீ கவிஞ்சன் இல்லை
இருந்தாலும் நீ என் கவிதைகளை
உன் கவின் மூக்கின் நுகர் கொண்டு உணர்கிறாய்
காலம் கடந்தாலும் அதன் நுகர்வுகள்
உணர்வுகளாய் உன்னுள் உலாவரும்
உணர்வுகளாய்
-
பெண்ணே !
உன்னை பற்றிய என்
உள்ளத்தின் உண்மையை சொல்ல
உள்ளத்தின் உறுதியை சொல்ல
"உணர்வுகளாய்" இதோ
கொட்டிக்கிடகிறது என்
கவிதைகள் அனைத்தும்!!!
அடுத்த தலைப்பு "உள்ளம்"
-
என் உணர்வாய் இருப்பவன்..
என் உள்ளம் நிறைந்தவன்...
என் உயிரோடு கலந்தவன்...
என் உன்னதமானவன் அவன்
என்றும் எனக்காய் வாழ்பவன்...
என் உணர்வாய் இருந்து
-
உன்னை பற்றியே ஓராயிரம் விடயங்கள்
உணர்வுகளாய் உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்க
என் உணர்வாய் இருந்துவிட உடன்பாடில்லை
இருந்தும் உணர்வை உணர்ந்துவிட முடியுமல்லவா ??
என்னை பற்றி ஏனடி இப்படி ஒரு குற்றப்பதிவு???
இதுவரை நான் பதித்த கவிதைகள் அனைத்திலும்
மிகமிஞ்சிய எழில் நிறைந்த 10 கவிதைகளை
நீ சொல்லும் நடுவர்களை கொண்டே பட்டியலிட்டால்
முதல் 3 இடத்தை பிடிக்கும் சுந்தர கவிதையாய்
உன்னை பற்றி நான் எழுதிய கவிதைகளாய் தான்
இருக்கும் நிச்சயமாய் !
அடுத்த தலைப்பு
சுந்தர கவிதை
-
சுகமான நேரங்களில் கூட
சுமையாக உன் நினைவுகள்
என்னில் கவிதையாக உன் முகம்
எப்பொழுது காண்பேன்
உன் கவிதை முகத்தை !
காத்திருக்கிறேன்
"சுதந்திரக்கவிதையாய்" நான்
சுதந்திரமில்லாத
என் நினைவுகூண்டுக்குள்
உனக்காக !!!
-
மன்னிக்கவும் அடுத்த தலைப்பு "நினைவுக்கூண்டு"
-
உன் இதயகூட்டில்
காதல் கிளியாய்
திரிந்த என்னை
பிரிந்து சென்று
உன் நினைவு கூண்டின்
சிறையில் சிக்கவைத்து
சிரிப்பதன் அர்த்தம் என்னவோ
அர்த்தம்
-
என் மனதின் அர்த்தம் ...
என் சிரிப்பின் அர்த்த்ம்...
என் மௌனத்தின் அர்த்தம் ...
இத்தனை அர்த்த்தங்கள் ...
அறிந்தாய் ...புரிந்தாய் ...
அது அன்பின் வெளிப்பாடு...
மனமே !!! என் சுவாசத்தின் அர்த்தம் கூட ..
மிக துல்லியமாய் உணர்கிறாயே....
அது எப்படி சாத்தியமோ??
எப்படி சாத்தியமோ??
-
பூக்களின் மகரந்தம் தனை முன்னறிவுப்பு
ஏதுமின்றி வண்டு வந்து குடைகிறதே
எறும்பு இனிப்பு இருக்கும் திசை என்னஏது
என்று துப்பு கிடைக்காமலே தப்பாமல் தேடி வருகிறதே
நீள அகலத்தில் எவ்வளவுதான் பரந்து விரிந்து இருந்தாலும்
கடல் அலையின் வாயிலாய் கரைக்கு தூது அனுப்புகிறதே
உலகின் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இதயங்களை
ஒன்றாய் இணையத்தின் வழியே FTC இணைக்கின்றதே
இவை அனைத்தும் எப்படி சாத்தியமோ , அப்படி சாத்தியமோ ???
அடுத்த தலைப்பு
FTC இணைக்கின்றதே ....
-
எங்கோ பிறந்தோம்
எப்படியோ வளர்ந்தோம் ..
வட துருவம் நீ
தென் துருவம் நான்
இணையத முனைகளை
நட்பு என்னும் நூல்கொண்டு
ftc இணைக்கிறதே
துருவம்
-
ஒரே துருவங்கள் எதிர்க்கும்
காந்தசக்தி பார்வை என்பாயே
எங்கே என்னை ஒரு முறை
பார்த்துவிட்டு செல்...
உன் பார்வையின் வலிமையை
ஏற்கும் சக்தி எனக்குள்ளும்
இருக்கா என்று
சோதித்து பார்க்க ஆசை..
காந்தசக்தி
-
வட துருவமில்லை
தென் துருவமில்லை
எந்த துருவத்தில்
நான் இருந்தாலும்
உன் பார்வை எனும்
காந்த சக்தியால்
கவர்ந்துவிடுகின்றாயே ...
கள்வன் நீ
கள்வன்
-
காதல் கள்வன் நீ
களவாடியது நீ
தண்டனை எனக்கு
உன் இதய சிறையில்
அடைத்து வைத்துவிட்டாயே..
விடுதலை வேண்டாம்
ஆயுள் கைதியாய்
இருந்து விடுகிறேன்
கள்வன்
-
வடதுருவ கைலாய பதியாய் நான்
தென்துருவ குமரியாய் நீ
எதிரெதிர் துருவமாய்
இருந்தும் உன் புருவத்தில்
இத்துருவத்தை சிறை வைத்து
சர்வமும் சக்திமயம் என்றாய்...!
இக்கள்வன் உன்னை
இதய சிறையில்
அடைத்து வைத்து
எங்கும் சிவமயம் என்கிறேன்...!
அடுத்த தலைப்பு சர்வமும்
-
சட்டென சலனம்
சகலமுமாய் போன உனிடம்
சர்வமும் அடங்கி
சாய்ந்துகொள்ளும்
அந்த தருணத்தை நோக்கி ...
சலனம் ...
சலனம்
-
சாய்ந்திட தோள்களும்,
ஆசுவாசபடுத்திகொள்ள மடியும் ,
கேசம் கோதிட விரலும்,
கன்னம் நனைத்திட முத்தமும்,
உன் பெயரையே உச்சரிக்கும் உதடும்,
உன் கனவெல்லாம் நனவாக்கிடும்
உன் மன்னவன் வருவான்
மொத்த அன்பையும் முத்தமாய் தருவான்
சஞ்சலம் கொள்ளாதே சலனமின்றி காத்திரு
காதலனுக்காக என்பதை விட உண்மை
காதலுக்காக காத்திருப்பதில் எத்தனை சுகம் ......!
அடுத்த தலைப்பு சஞ்சலம்
-
மெல்லிய ஒரு காலைப்பொழுது
மெல்லிசையாய் உன்குரல்
திக்குத் தெரியாத திகைப்பில்
மனதில் அப்பிக் கொண்டது சஞ்சலம்
மனம்மாறி நீதான் வந்தாயாவென
துள்ளி வந்தேன் இல்லம் கடந்து..
தள்ளிப்போனது நீயல்லவென்று அறிந்து
எள்ளி நகையாடிய மனது
ஏமாந்தவனாய் என்னை நானே
சபித்தேன்
முன்னொரு காலம்
காலைச்சுற்றிவரும் குட்டிப் பூனையாய்
உன்னருகே நானிருப்பேன்
அந்த அருகாமை
வாழ்வின் ஆனந்தமாய்
நானுனர்ந்த நாட்களது.
நீ இல்லாத வாழ்வில்
நானிளைப்பாற நிழல் இல்லை
என்றானேன்
எனக்குள்ளொரு பூவாய் மலர
நீயுமிசைந்தாய்
என்ன தவம் செய்திட்டேனென
எண்ணிக் களித்திட்டேன் நான்
இதயங்கள் முடிச்சிட்டு
புதிய உலகின் உதயமொன்றை
நாமெட்டி நின்றபோது
எட்டவிலகிப் போனாய் நீ..
காதலைத் தொடரத்தான் வேண்டுமாவென
மடலாய் வினாத் தொடுக்கிறாய் நீ..
மனது காயப்பட்ட
மெளனமான நிமிடங்களவை..
என்னிலை நீயறியாய்
தன்னகத்தே வேதனையில்
விம்மியழுதாலும்
உன்னகத்தே அதைச்சொல்லேன்
உன் மனது வேதனைப்பட
சம்மதமில்லையெனக்கு
நலமாய் வளமாய் நீ வாழ
காதல் உறவைத் கத்தரித்துக் கொண்டதாய்
உனைநாடி வந்தது என் பதில்
துடிக்கின்ற இதயத்தின் வேதனையும்
அழுகின்ற விழிகளின் செந்நீரும்
தனிமையில் வாடுமெனக்கு
எந்நாளும் சொந்தமடி
இருண்டுவிட்ட இந்த நெஞ்சில்
இனியொரு விளக்கேற்ற யாரிருப்பர்?
சஞ்சலம் கொண்ட மனதுக்கு
ஆறுதல் யாரளிப்பார்?
அடுத்த தலைப்பு
நாளைய பொழுதின் நம்பிக்கைகள்
-
நெஞ்சில் நாள்தோறும் நீங்காத உன் நினைவுகள்
நினைக்கும் பொழுதுகளில் நிலைக்கும் இனிமைகள்
இனிமைக்கு மேல் இனிமையை தினிக்கும் சிரிப்பு
சிரிப்பின் முதல்,இடை,கடை என எங்கேனும் ஓரிடம்
வெளிப்பட்டே தீரும் சிறுசிறு முக்கல்,முனகல்
முனகலினையே முழுங்கிவிடும் மெல்லிய மூச்சுகாற்று
மூச்சுகாற்றிர்க்கும் அர்த்தம் அறிய செய்யும் ஆத்மார்த்தம்
இப்படி அடுக்கிகொண்டே போகலாம் .
உன்னால் நான் கொண்டிருக்கும் அசைக்கமுடியாத
நாளைய பொழுதின் நம்பிக்கைகள்
அடுத்த தலைப்பு
ஆத்மார்த்தம்
-
உலகம் மறந்து...
மனம் மறந்து...
அனைத்தும் மறந்த...
அந்த சில தருணங்களை கடந்து....
மனம் திரும்பும் பொழுதுகளில் ...
மனதில் வந்த நினைவுகளில்...
முதன்மை நினைவு....
ஆத்மார்த்தமான உன் நேசம் மட்டுமே...
முதன்மை நினைவு
-
முதுமையிலும் ஒரு நினைவு
மனதில் அழுந்தப் பதிந்திருக்கும்
என் முதன்மை நினைவாய்
உன் முகம் பதிந்த இதயம்
அன்றைக்கும் மாறாதிருக்கும்
வெள்ளைக் காகிதமாய்
என் இதயம் காத்தேன்
கொள்ளை அழகில் நீ
எனைத் தொல்லை செய்தாய்
இதயமதில் வந்து
இரண்டறக் கலந்தாய்
முப்பொழுதும் உன் நினைவாய்
மூழ்கிப் போனேன் நான்
அனுதினமும் விடியல்களில்
முதன்மையாய் உன் நினைவு
அழியாத நினைவுகளை
என்னிடமே விட்டு
விலகியே சென்றாய் நீ...
வலிகள் மட்டுமே
என் வாழ்க்கை என்றானதே
துயிலும் இல்லை
ஆனால் கனவில் வருவாய்
ஊணும் இல்லை
ஆனால் பசியுமறியேன்...
விநோதங்கள் எனக்கு மட்டுமே
முதன்மை நினைவுகளாய்
நீவந்தாய்- இனி
முழுமைக்கும் நீயே
நினைவாய் இருப்பாய்
உயிரின் அசைவும்
உடலின் துடிப்பும்
அடங்கும் வரையும்
அழியாத நினைவாய்
மனதில் இருப்பாய்
அடுத்த தலைப்பு
தோற்பதற்கு அல்ல வாழ்க்கை
-
தோல்வியால் பலமுறை
கீழே விழுந்தாலும்
நம்பிக்கையின் கரம் பிடித்து
எழுந்து வருவேன்..
தோற்பதற்கு அல்ல வாழ்க்கை
தோல்விகள் பல கண்ட போதும்
என்றாவது ஒரு நாள்
தோற்று வந்த பாதையை
திரும்பி பார்ப்பேன்
வெற்றி என்ற வாகை சூடி
வாகை சூடி
-
தோல்விகள் நமக்கு
தடைக்கல் இல்லை
வாழ்வில்-புரிந்து கொண்டால்
படிக்கற்கள் அவைதான்
நம் வாழ்வில்
நாளாந்த சூரியோதயம்
நமக்கானது
வெற்றியும் தோல்வியும்
நம் கைகளில் உள்ளது.
நாட்கள் நமக்காக
காத்திருக்கிறது
வாழ்வும் நமக்காக
வாய்த்திருக்கிறது
வாகைசூடத்தான்
வழி நமக்கு
தெரியவில்லை
இலக்குகள் இல்லை
நம்வாழ்வில்
மாற்றங்களை
எதிர்கொள்ளும்
திராணியும் இல்லை
ஏற்றங்களுக்காய்
வெற்றியின் போதை
தோல்வியின் துவளல்
எல்லாமே ஒன்றென்றால்
தன்னாலே வரும்
மனதிலோர் பக்குவம்
தோல்விகளை வெற்றிகளாக
தடைக்கற்களை படிக்கல்லாக
மாற்றிடத் தெரிந்தால்
வெற்றியின் வாகைசூட
வழியே அதுதான்.
அடுத்த தலைப்பு
அதிகாலைப் பொழுது
-
பூக்களின்மீதும் ,செடிகளின்மீதும், பட்டும்
படாமலும் படர்ந்திருக்கும் பனித்துளிகள் .
தூசோ ,மாசோ கலவாத பரிசுத்தமான பசுமை
நிறைந்த அரும் நறும் சில்லெனும் சிறுங்காற்று
விட்டு விட்டு மொட்டு விட்டிருந்த மொட்டு
மலர்கள் வெட்கம் விட்டு மொட்டவிழும் எழில்..
ஆதவன் தன் எழுச்சியினை பறைசாற்றும் பொருட்டு
விரைவாய், இருந்தும் குறைவாய் அனுப்பும் ஒளி கீற்றுகள்
போர்வைக்கு அடியில் கிடக்கும் நம்மை எழுப்பி
விடியலின் மடியினில் இட்டிட முனையும் சேவலின் கூவல்
அழகாய் மிகஅழகாய் அள்ள அள்ள குறையாத அழகின்
அட்சயா பாத்திரமாய் அழகு அதிகாலை பொழுது
அத்தனை அழகையும் அணைத்திருக்கும் அதிகாலைபொழுதை
கூட அலட்சியபடுத்தி, அடுத்துதான் ஆராதிகின்றேன்
ஆதிமுதல் அடிபாதம் வரை அன்றி, ஆழ்மனதில் முழுதாய்
ஆழ்ந்திருக்கும் உன் அழகு, நினைவு கடலில் மூழ்கி ....
அடுத்த தலைப்பு
பின்தொடர்வதாய்
-
அதிகாலை பொழுதில்..
பனி காற்று வீச...
வியர்க்க ஓடிய உடலும் ..
புத்துணர்ச்சியுடன் மனமும் ..
இருக்க...அனிச்சையாய் ...
மனதில் ஒரு உணர்வு ...
நீயும் ...உன் உணர்வும்...
என்னை பின்தொடர்வதாய் ....
பின்தொடர்வதாய்..
-
பின்தொடர்வதாய்
எனக்குள் ஒரு பிரமை
ஆதரவுக்கரம் நீட்டவும்
ஆறுதல் வார்த்தை பேசவும்
யாருமில்லா உலகில்
உன் நினைவுகள் மட்டுமே
என்னைப் பின்தொடர்வதாய்
சேர்ந்திருந்து களித்திருக்க
நான் தேடிவந்த உறவு நீ
பிரிந்திருந்து தவித்திருக்க
விலகிப்போன துரோகியும் நீ
மனது வெறுமையாகி
வாழ்வும் வெறுத்துப் போனது
உன் நினைவுகள் மட்டும்
இன்னும் பின்தொடர்வதால்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்க்கைப் பயணத்திலெனக்கு
வழித்துணை யாருமில்லை
ஆறுதல் தந்து அரவணைத்திட
எந்தத் தோள்களும்
என்னருகே இல்லை
துன்பங்கள் பின்தொடர்ந்தாலும்
உன்நினைவுகள் மட்டும்
மாறாத வடுக்களாய் மனதில்
காலங்கள் தாண்டி
படர்ந்திருந்த என் சிந்தனைகள்
எதிர்காலம் நீயாகவே
என்கற்பனைகள்
எல்லாமே கலைந்துபோன
அதிர்ச்சியில்
இன்றைய பொழுதுகள்
மனம் முழுக்க வேதனைகள்
இருந்தும் பின்தொடரும்
உன்நினைவுகளின் துயரங்கள்
வாழ்வில் நான் நகர்ந்திட
துணையிருக்கும் உந்துதல்கள்
நலமாய் நீவாழும் சேதி
காதில் எட்டும்காலம்வரை
என்வாழ்வு தொடரும்
உன் நினைவுகள் தரும்
துயரங்கள் பின்தொடர
என் வாழ்க்கை கழியும்
அடுத்த தலைப்பு
இணைந்திருந்தால் வாழ்க்கை இனிக்கும்
-
nainthu eerunthal valkai inikum
avalidam serthen pala varudangal piragu.....
aval ponal sila varudangal piragu.....
serthathu nijathil illai indrum en kanavil thaan....
avalodu inainthu irunthal indrum.. nan kanavil moolgi iruka maten... kalarai thookam..!!
-
இணைந்திருந்தால் வாழ்கை இனிக்கும்
இம்மி அளவும் இடைஞ்சல் இல்லா
இனிமை கருத்து தான்.இருந்தும்,
இணையாதிருந்தாலும் எல்லையில்லா
இன்பத்தினை இன்பமாய் சுகித்திட முடியும் .
இருளும்,ஒளியும் இணைந்தே இருந்தால் ??
இமையும் ,இமையும் இணைந்தே இருந்தால் ?
இதழும், இதழும் இணைந்தே இருந்தால் ??
இரு தண்டவாளங்களும் இணைந்தே இருந்தால் ?
இன்பம் ஏது?? இனிமை ஏது ??
அடுத்த தலைப்பு
இன்பம்
-
காலை பொழுதின் வேளையில்..
அந்நாளின் பணிகளை நேர்த்தியாய் ..
திட்டமிடும் சமயம்...
என் இதயம் நிறைந்த ...
குரல் அதை கேட்க மனம் விரும்ப...
அலைபேசியில் நான் அழைக்க ...
என்னவன் தந்த எதிர்பாரா முத்தம்....
இன்பத்திலும் பேரின்பம்...
முத்தம் .
-
oru pattampoochi poovil then edukkum alagu...!!!
ennaval kolanthaiku kodukum muthathin alagu ..!!!
alagu
-
நிலவுக்கு குளிர் அழகு...
சோலைக்கு பூ அழகு...
பூவிற்கு வாசம் அழகு..
கடலுக்கு அலை அழகு...
அலைக்கு நுரைகள் அழகு...
உயிருக்கு சுவாசம் அழகு...
சுவாசத்திற்கு நீ அழகு...
உலகின் அழகான அழகிற்கு எல்லாம்...
அழகான நீ அழகு..
நீ அழகு...
-
கண்கள் காணும் காட்சிஎல்லாம்...
அழகோ அழகு...
கண்களால் நேரடியாய் காணாவிட்டாலும் ..
என் கண்கள் கண்டதிலேயே ....
பேரழகனான நீ அழகு...
பேரழகன் ..
-
இதயக்கூட்டில் வாசம்செய்யும் ...
என் இதயமானவனே....
உன் இனிய குரலும்....
வசீகர சிரிப்பும்..
என்னையும் ..என் மனதையும்..
என்றென்றும் உனக்கு ...
அடிமையாக்கின்றதே .....
அடிமையாக்கின்றதே ....
-
மேடை மேடையாய் பெண்ணியம் பேசுபவரின்
மேடை பேச்சுக்களை எல்லாம் மனம் உருக
கேட்டு லயிப்பவன் நான் , லயிப்பதோடு நில்லாமல்
லயித்ததை நிலைபடுத்திடவும் முனைந்து,நிலை
படுத்தியும் வருபவன் நான்,என அனைத்தும் அறிந்தவள்
என் மனம் அறிந்தே, ஈதென புரிந்தே இப்படி
உன் குளிர் நினைவு என்னை அடிமையாகின்றதே !
இது எப்படி முறையாகும் ??
அடுத்த தலைப்பு
இது எப்படி முறையாகும் ??
-
காதல் தோல்வி ..
காதலிதால்தனே ....
காதலிக்காமலே காதல் தோல்வியாம்
கதை கதையாய் பேசினார்கள்
காதலனிடம் கேட்டேன்
காதல் தொல்வியமே என்று ...
அவன் சொன்னதுதான் இது ..
தோல்வி
-
வெற்றியும் தோல்வியும்
வாழ்வில் சகஜம் என்பதும்
வெற்றிக்கு வித்தே தோல்வி என்பதும்
தெறிந்த ஒன்றுதான் என்பதால்
தோல்வி வரும்போதெல்லாம்
துவண்டு விடாமல் ஒவ்வொரு முறையும் வெற்றிக்காக
முனைப்புடன் எழ முயல்கிறேன்..!
ஆணால் தோல்வி தொடர்ந்து கொன்டே இருப்பதால்
சமயத்தில் சிறிது சிறியதாய் கலக்கம்
எத்தனை இன்னல்கள் வந்தாலும்
வெற்றியை எட்டிவிடுவேன் என்ற நம்பிக்கையில்
கடுகளவும் பிறழாமல் நான்...!
அடுத்த தலைப்பு நம்பிக்கை
-
நம்பிக்கை
இதை ஒன்றை வைத்தே
நாடகமாடும் உள்ளங்கள்
நம்பிக்கை என்ற வார்த்தையே
நம்பிக்கை இல்லமால் போனது ...
உள்ளங்கள்
-
அவளுக்காகவே சிரிக்கின்றேன்...
அவளுக்காகவே ரசிக்கின்றேன் ...
அவளுக்காகவே படிக்கின்றேன் .....
அவளுக்காகவே பதிக்கின்றேன் ....
அவளை உயிராய் மதிக்கின்றேன் ..
ஆனாலும் அவள் ...
இன்னும் என்னை பார்க்கவில்லை ...
உள்ளங்கள் ஒன்றி ஒன்றுபட்ட பிறகு ...
பார்வை பரிமாற்றங்கள் ஒரு பொருட்டா???
அடுத்த தலைப்பு
உயிராய் மதிக்கின்றேன்
-
சிரிப்பதும் ,ரசிப்பதும் ....
பதிப்பை படிப்பதும்....
படிப்பதை பதிப்பதும்....
உயிராய் மதிப்பதும்...
பார்க்காத காரணத்தால்...
மறக்கவில்லை..மறுக்கவில்லை..மறைக்கவுமில்லை...
இருந்தும் நானும் உன்னை...
உயிராய் மதிக்கின்றேன்....
ரசிப்பதும்..
-
உன்னை நினைப்பதும்
உன்னை மறப்பதும்
உன்னை ரசிப்பதும்
உன்னை வெறுப்பதும்
உன்னை நேசிப்பதும்
உன்னை காண துடிப்பதும்
உன்னுள் நான் தொலைவதும்
உன்னை தேடியே வருவதும்
மாற்ற முடியாமல்
மறக்க முடியாமல்
நேசத்தோடு நான்
வாடிய மலர்
-
வாடிய வாசமலராய் நான்
வாடிய பூஞ்சோலையாய் (FTC) கவிச்சோலை
வரட்சியினில் வாடுகின்றோமே
வெறும் வாசத்தினை மட்டுமே
வந்து வந்து தந்து செல்பவளே
வசந்தமாய் வருவதெப்போது ???
அடுத்த தலைப்பு
வசந்தம்
-
உனக்காக கட்டமைத்து ...
மனதோடு பாதுகாத்த ....
காதல் தேசத்தை ..
உன்னோடு சேர்க்கும் காலம் ....
அதுவே புது வசந்த காலம்....
காதல் தேசம்
-
என் காதல் தேசத்தின்
காவலனும் நீதான்
கள்வனும் நீதான்
உனக்கென்ன என் மனதில்
ஓராயிரம் தண்டனைகள்
ஒவோன்றாய் உனக்களிக்க
என் வாசல் பார்த்திருகின்றேன் வா...
தண்டனைகள்
-
பேசாத வார்த்தைக்கும்
செய்யாத செய்யலுக்கும்
சொல்லாத சங்கடங்கள்
தண்டனையாய்
பறிபோனது
என் நட்பு
சங்கடங்கள்
-
என் நினைவுகள் ...
உன் மனதை காயப்படுத்தியத்தின் ..
பக்கவிளைவா இந்த...
ஒரு நாள் பிரிவு ...
மனதை உலுக்கும் தண்டனையாய் .......
பெரும் சங்கடமாய் ...
காயம்
-
கொடும் வன்மம் நிறைந்த கடும் வன்முறையால்
எதிர் எதிர் நின்று மோதிக்கொள்ளும் மோதல்களால்
எதிர்பாராவிதமாய் நிகழ்ந்துவிடும் விபத்துக்களால்
பெரும்பான்மையாய், மேற்க்கூறிய பொழுதுகளில் மட்டும்
காயம் நேர்ந்திடும் என்று எண்ணி இருந்தேன்
கொள்ளை அழகில் கொன்று குவிக்கும் உன்
கொஞ்சும் கண்களை காணாத வரை ...
- கொஞ்சும் கண்களை -
[/quote]
-
கொஞ்சும் கண்களை
தேடும் நெஞ்சினை
நஞ்சும் கலந்திடாமல்
கொல்லும் வார்த்தைகளை
கொட்டி தீர்க்கிறாய்
பேதை இவள்
சொல்ல நினைத்த வார்த்தைகள்
எல்லாம் சொல்லாமல்
கண்ணீரில் கரைய
கண்ணீரை அறியாமல்
கவலை புரியாமல்
உன் பதில் பார்த்து
காத்திருப்பேன் காலம் முழுவதும்
-
ஊருக்கு புத்தி ..
அது உனக்கு வருவது எப்போது
காலம் முழுவதும்
நல்லவர்களாய் நடிக்க
கற்று தந்த ஆசானுக்கு
கர்மம் எல்லாம் நரகம்தான் ...
வாழ்ந்துவிட்டு போங்கள் ..
நரகம்
-
நீ இல்லாத
ஓவொரு மணித்துளியும்
நரகமாய் நகர
நரகத்தை கூட
சொர்க்கமாக்கும்
உன் பார்வையை
என் மேல் வீசி விடு
பார்வையை
-
உன் பார்வையை தழுவியே
என் பதமும் நகர்கின்றது
வாழ்கையின் துயர்களை கடக்க
உன் பார்வை ஒன்றே போதும் என்றேன்
உன் பார்வையே சுமையானது இன்று ..
துயர்
-
சோர்ந்திருக்கும்
நெஞ்சம் தனை
துயர் கொள்ளும் வார்த்தைகளை
வீசி துடி துடிக்க வைத்து விட்டாய்
வரத்தை எனும் வாளால்
கொன்றுவிடாதே
வஞ்சியிவள் வாழ நினைப்பது
உன்னுடன் மட்டுமே
கொன்றுவிடாதே
-
கொன்றுவிடாதே என்று
உன்னை நான் கேட்கமாட்டேன்
ஏற்கனவே நடைபிணமாய் போன எனை
இனொரு முறை கொல்ல
உன் நினைவுகளாலும் முடியாது ...
நடைப்பிணம்
-
நீயே என் இதயதுடிபாய்
நீயே என் சுவாசமாய்
நீயே என் வாழ்வாய்
உன் நினைவு மட்டும்
நிரந்தரமாய் இருந்தபோதும்
உயிர் இருந்தும்
நடை பிணமாய் போனேன் இன்று
நிரந்தரமாய்
-
உனக்கும் எனக்கும்
உறவு நிரந்தரமோ இலையோ
பிரிவு மட்டும்
நிரந்தரமாய் போனது ...
என்றாவது ஒரு நாள்
என்னை நீ நினைப்பாய்
அன்றாவது உன் தவறுகள்
உனக்கு புரியட்டும்
பிரிவு
-
சொல்லாத வார்த்தைக்கும்
இல்லாத கற்பனையை
கற்பிக்கும் உலகில்
நேசத்தை சொல்ல
வார்த்தை இல்லாது
போனதால்
என் பாசத்தை உணராது
நீ பிரிவை வந்து
உறவை கொல்கிறாய்
உறவு
-
உறவுகள் நிரந்தமில்லை
இணையத்தில்
இதயங்கள் இணைவதும்
சாத்தியமில்லை
புரிந்து தவித்தது மனது
மனம் என்று ஒன்று இருக்குமானால்
மனசாட்சியும் இருக்கும்தானே
மறக்க நினைக்குறேன்
உன் துரோகங்களை
துரோகங்களை
-
துரோகங்களை மறக்கும்
மனது இருக்குமாயின்
வேண்டும் எனக்கும் ஒரு மனது
மறந்து வாழும்
மனதாய்..
நினைவை கொல்லும்
மனதாய்
என்னைக் கொன்று
உன்னை வாழ வைக்கும்
மனதாய்
எல்லாம் மறக்கும்
மனம் வேண்டும்...
தவிப்பு
-
என் தவிப்புகள்
ஒவொரு தருணங்களிலும்
தயங்காமல் அதிகரிக்கிறது
அலை கடல் தாண்டி
அக்கரையில் இருப்பவனே
என் தவிப்புகளை
தாரை வார்க்க வா
அக்கரையில்
-
அக்கறையில்லாமல் நீ
அக்கரையில் நீயிருக்க
அனுதினமும் உன்னை
நினைத்து தவிப்பவளாய் நான்
தினமும் ஒருமுறையாவது
என்னை நினைத்துக்கொள்...
நினைப்பை என்ற நம்பிக்கையில்
உன் நினைவுகளை
நேசித்துக்கொள்கிறேன்
ஒருமுறையாவது
-
ஒருமுறையாவது
உன் வியர்வை துளிகளை
நான் ருசிக்கும் தருணம் வேண்டும்
விரகதாபத்தில் நான்
மோகத்தில் நீ
மொத்தத்தில் தீ ..
மோகத்தில்
-
சேர்த்து வைத்த
ஆசையெல்லாம்
ஒரே நாளில் வாழ்ந்திட
சொல்லாத ஆசைகளை
நீ அறிந்து தந்திட
நாணத்தில் தலை குனிந்திட
மோகத்தில் உன் முகம் காணும்
துணிவில்லை என்னிடம்
நாணத்தில்
-
நாணத்தில் அவள் முகம் சிவக்க
நான் அதில் என்னை இழக்க
மீள முடியாமல்
பொழுதுகள் புரள
இனி நான் மீள்வது எப்பொழுது
கண் துயில்வது எப்பொழுது
பொழுதுகள்
-
நீ இருக்கும் தருணங்களை விட
இல்லாத பொழுதுகளில்தான்
என் எண்ண அலைகளில்
உன் நினைவுகள்
இதயம் வரை அடித்து செல்ல
கண்கள் உன்னை தேட
சிரித்து நேர பிரிவு
கூட சுமையாகி போனது
இப்பொழுது
சுமை
-
சுகமாய் இருந்தது
அவள் விழியால் பேசியபோது ..
சுமையாய் மாறிப்போனது
அவள் என்னை நெருங்கி
அண்ணா என்றதும் ..
விழி
-
நிலவின் ஒழி - அவள்
இரு விழி
அவள் விழியின் ஒளி
அது
என் இதயத்தின் வலி ......
வலி
-
அவள் புன்னகையில்
நான் மயங்கி கிடக்க
வலி தெரியாமல்
என் இதயத்தை காயப்படுத்தி
மறைந்தாள்
இதயம்
-
உன்னை இழந்தும்
துடிக்கிறது இதயம்
உன் நினைவுகளை
சுமப்பதினால் ...
நினைவு
-
நினைவில் மட்டுமே அவள்
இருந்ததால்
சுயநினைவை இழந்தவனாய்
இன்று அலைகிறேன் தெருவில்
- காதல் தோல்வியால் பைத்தியம் ஆனவன்
இழப்பு
-
உனக்கு மட்டுமே இழப்பென
உரைப்பவனே உனக்குள் எண்ணி பார்
உண்மையான இழப்பு அவளுக்கும்
உன்னை இழந்துவிட்டதை நினைத்து வருந்தி
உன்னையே நெஞ்சில் சுமந்து வாழ்கிறாளே
உன்னையும் மறக்க முடியாமல்
உற்றவனோடும் வாழ முடியாமல் தவிக்கும்
உன்னவள் படும் பாடு
உனக்கெப்பெடி புரியும்.....!!
நினைப்பு
-
உன் நினைப்பு
உதடுகளில் சிரிப்பு
உள்ளத்தில் சிலிர்ப்பு
உறங்காமல் உணர்வுகள்
தவிக்கும் தவிப்பு ...
உணர்வுகள்
-
உன் நினைவுகள்
ரணமாய் என்னை தீண்டினாலும்
என் கண்கள்
பல நாட்களாய் காத்திருக்கிறது
உன் வருகைக்காக...
-
கொடுத்த தலைப்பு
உணர்வுகளுக்காக கவி சேர்த்திட
புதியதாய் கணக்கை துவங்கி
புதியதாய் வரி சமைத்து
பதிப்பை துவங்கிய
பச்சகிளியின் வருகை நல்வரவாகுக......
முதல் பதிப்பு அருமை என்றாலும்
கவி விளையாட்டில் தலைபிற்கு கவி
படைத்து இறுதியாக புதியதாய்
தலைப்பிடவேண்டும் என்பது விதிமுறை
விதிமுறை படி தலைப்பும் வரவில்லை
தலைப்பும் தரவில்லை
அக்குறை ஒன்றை தவிர
கவியில் குறை இல்லை
வருகின்ற காலங்களில்
அக்குறைகள் தவிர்க்க படும் என்ற
நம்பிக்கையில் தொடர்கின்றேன் ....
அடுத்த தலைப்பு நம்பிக்கை
-
அத்தனையும் நொடி பொழுதில்
மறந்து போனேன்-பாழா
போனவனின் நம்பிக்கை
நாடகம் என்று தெரியாமல்
நொடி
-
மணி துளிகளும்
நொடிகளாகும்
நீ என் அருகிருந்தால்
மரணம் கூட
மாண்டு போகும்
உன் மனம்
எனக்கே எனக்காய் என்றால் ..
மனம்
-
உன்னை மட்டுமே
நினைக்க தெரிந்த மனம்.
உன்னை மட்டுமே காணத் துடிக்க
கண்டும் காணமல் நீ..
மனதின் ரணம்
கண்களில் கண்ணீராய்..
மறக்க நினைத்த
முயற்சி எல்லாம் தோல்வியில்
தோல்வி
-
உன் வாழ்விற்கு ஏணியாய்!
உன் உயர்விற்கு உறுதுணையாய்!
உன் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராய்!
உன் வெற்றிக்கு வழிகாட்டியாய்!
உன் முதல் தோல்வி!!!
அடுத்த தலைப்பு "தன்னம்பிக்கை"
-
என் அன்பே என் ஆருயிரே
வருடங்கள் போனால் என்ன
நாட்கள் போனால் என்ன
என்னக்குள் நீ என்ற
தன்னம்பிக்கை என்
ஆயுள் முடியும் வரை
நாட்கள்
-
என் வாழ்வில் வெறுமையும்,
தனிமையும் வெற்றி கொண்டாட,
என் தவிப்பும்,சோர்வும் கண்ணீரை
வரவேற்க ,உணர்ந்தேன் நான்
நீயில்லாத நாட்களின் கொடுமையை !!!
அடுத்த தலைப்பு கண்ணீர்
-
கண்ணீர் மட்டும்
இல்லையென்றால்
கண்களுக்கும் மதிப்பில்லை
காதலுக்கும் மதிப்பில்லை
இல்லை
-
உனக்காக இல்லை என்றாலும்
உன் காதலுகாக துடிக்கிறது
என் இதயம் -இதயங்களை
இதமாக வருடுகிறது
என் கண்ணீர்...
இதயம்
-
தாயின் கருவறையில் பத்து மாதம்
இருந்தவளை இன்று நான் சுமக்கிறேன்,
என் இதயக்கக்ருவரையில் , அவள்
இதயமற்றவள் என தெரிந்தும் கூட!!!
அடுத்த தலைப்பு "கருவறை"
-
கவிதை தோற்று போனது
உன் காதலின் முன்னால்!!!
உன் இதயக்கருவறையில்
பிறக்கவில்லை என்று!!!
முன்னால்
-
உன்னை பின்னால் பார்த்தே
பறிகொடுத்த என் இதயத்தை,உனக்கு
முன்னால் காணிக்கையாக்குவேன்
கல்லறைக்கு!!!
அடுத்த தலைப்பு "காணிக்கை"
-
உன் இதயத்துடிப்பில் என்
காதல் காணிக்கை செலுத்த
மனதிலும் இதழிலும் இருக்கும் உன்னை
சேரும் நாள் வெகுவிரைவில்
விரைவில்
-
உன் தனிமையின் பரிதவிப்பால்
தவிப்பதைவிட இறப்பதே மேல்
நானும் போகிறேன் ,வெகுவிரைவில்
தனிமையின் விடியலைத்தேடி
நீயில்லா கல்லறைக்கு
அங்கும் தனிமையில்!!! :'( :'( :'(
அடுத்த தலைப்பு "விடியல்"
-
ஆயிரம் வருத்தம் இருந்தாலும்
நமக்குள் இனிமை நிறைந்த
காதலின் விடியல்
கல்லறையின் தனிமை
நம் வாழ்வின் வசந்தம்
வருத்தம்
-
எழில் கொஞ்சும்
இயற்கையை
கண்களால் பருகும்போதெல்லாம்
நீ இல்லாத வருத்தம்
நீண்டுகொண்டுதான் செல்கிறது
தனிமையை போக்க
தளிர் நிலவாய் வந்துவிடேன் ..
தனிமை
-
என் வாழ்நாளில் ஒவ்வொரு
நொடிப்பொழுதையும்
தனிமயுடனே கழிக்கின்றேன்
உன் நினைவு ஒன்றையே
என் தனிமையின் துணையாக எண்ணி !!!
அடுத்த தலைப்பு "துணை"
-
என் காதல் பயணத்தில்
தனிமைகளை தவிர்க்க
உன் நினைவுகளை
துணை கொள்கிறேன் ...
அவை தூக்கத்தை
களவாடி செல்கின்றன ...
இனிய திருடன் நீ
திருடன்
-
நம் காதலின் அடையாளம்
என்று சொல்வதற்கு நினைவு
பொருளாய் நீ தந்த பரிசு
'இனிய திருடன்'
பொருளாய்
-
உன் நினைவுகள்
தோன்றும் போதெல்லாம்
எதிரே காணும் பொருளாய்
நீ உன் விம்பங்கள் ..
விம்பங்கள்
-
உனக்கு என் உருவம் விம்பங்களாய்
தெரிவதால் உன் கண்ணில்(மனதில்)
என் காதல் வலி உன்னால்
உணர முடியவில்லை
முடியவில்லை
-
என்னால் ஏற்க்க முடியவில்லை உன்
பலகோடி வார்த்தைகள் கொண்ட
மௌனம் மொழியை!!!
அடுத்த தலைப்பு "வார்த்தை"
-
ஒரு பொய் வார்த்தை சொல்
என்னை நேசிப்பதாய் -உந்தன்
ஒரு பொய் எந்தன்
எந்தன் ஆயுள் உள்ள வரை
ஆயுள்
-
என்னை நீ பிரிந்தாலும்
என் நினைவுகளை
நீ இழந்தாலும்
உனக்காக
உன் இதழ் ஒற்றுதலுக்காய்
என் இதழோடு மனமும்
ஆயுள் வரை ஏங்கும்
இதழ்
-
உணர்ந்தேன் நான் அமிர்த சுவையின்
சுயரூபத்தை!!!
உன் இதழுடன் என் இதழ்!!! :-* :-* :-*
அடுத்த தலைப்பு "சுயரூபம்"
-
என் சுயமும் , ரூபமும் நீ யான பின், என்னவனே
எங்கே சென்றாய் இத்தனை நாட்களாய் ??
இதோ உன்னவள் சுயரூபம் மட்டுமின்றி
சுயநினைவையும் இழந்தவளாய் இத்தனை நாட்களாய் ....
சுயநினைவு
-
ரூபம் தான் இல்லை என்னிடம், தவிர
சுயம் உண்டடி என் சொக்கத்தங்கமே .
சுயத்தை எதுவோ தொட்டதாய் உணந்தேன்
இருந்துமித்தனை நாள் சுயநினைவோடு தான் இருந்தேன்
சுயம் என்னை சுட்டியது இதோ நான் இங்கே .....
தமிழுக்காக
அடுத்த தலைப்பு
தமிழுக்காக
-
உயிரைக் கொடுக்கவேண்டாம்
தோழனே சுய நினைவோடு
தமிழுக்காக போராடு
நினைவோடு
-
உன் நினைவோடு வாழும்
இனிய சுகம் மட்டும்
இடைவிடாது தொடந்திட வேண்டும்
உன் இதழ் தேடும் இனிய சுகம்
என் இதயம் உணர வேண்டும்
உன்னோடு அல்ல
உன் நினைவோடு வாழும்
உன்னவள் ...
இதயம்
-
உன் நினைவோடு வாழ்ந்து ..
ரணமான இதயம்.... ..
அதை தரிசனம் என்னும் ...
அரும் மருந்திட்டு குணமாக்க ...
என்று வருவாயோ என ...
ஏக்கத்துடன் காத்திருகிறது ...
உன்னவள் மனது..
மருந்திட்டு
-
ரணமான உன் இதயத்தை மருந்திட்டு
குணமாக்க என்று வருவாயோ என
வழிமீது விழிவைத்து காத்திருக்கும்
திரு மயிலே ! வெறும் மருந்திட்டல்ல
மணமணக்கும் மனம் மயக்கும்
விருந்திட்டு குணமாக்குவேன் காத்திரு .....
அடுத்த தலைப்பு
காத்திரு
-
ஆசையே என் இதயம்
குணமாகும் வரை-நான்
காத்திருப்பது உனக்கல்ல
என் இதயத்திற்கு
உனக்கல்ல
-
காயம் பட்டு காதல் கற்று,
கற்ற காதல் ,
கற்றுத் தந்தது நீ கற்றது
காதலல்ல நட்பென்று,
அதனால்...
காயம் உனக்கல்ல
எனக்கென்று கலங்கி நின்றது
நட்பு.....
அடுத்த தலைப்பு "காயம்"
-
உன்னை தொட நினைத்தேன்
என் இதயத்தை கொண்டு....நீ நட்பென்று,
சொல்லி இதயத்தை காயம்
செய்து விட்டு சென்றுவிட்டாய் நீ
சொல்லி
-
சொல்ல சொல்ல கேட்காமல்
சொல்லிக் கொடுத்துவிட்டுச் சென்றாய்
உன் பிரிவின் துயரத்தை!!!
அடுத்த தலைப்பு "துயரம்"
-
நீ இல்லாத தனிமையின் துயரம்
பட்டது போதும் நான்-தனிமையில்
சிக்கி தவிக்கும் உண்மையான நட்பு
உனக்கு புரியவில்லை ஏனோ
சிக்கி தவிக்கும்
-
காத்திருந்தாலும் கிடைக்காததில்லை
ஆசையின் ஆசை இதயம் ,
இருந்தும் ஏனோ,இதயமே உன் இதயத்திற்குள்
இப்படி ஒரு ஆசை உதயம்
ஆசையிருந்தால் அறிவி என் ஆருயிரே
உனக்காக தாங்குவேன் எதையும்
துணைக்கு யாரேனும் இருந்தால் அழைத்துவா
சிக்கித்தவிக்குமிதயமானாலும்..பார்த்துக்கொள்வோம் அதையும்
அடுத்த.தலைப்பு
ஆருயிர்
-
என் ஆருயிர் காதலன்..
அவன் கையோடு கை சேர்த்து...
பௌர்ணமி இரவு அதை ரசித்து..
மெய் மறந்து மனம் இருக்கும் வேலையில் ..
அவன் தந்த திடீர் முத்தம் ..
அது மனம் மறவா ...
தெய்வீக ஸ்பரிசம் ..
தெய்வீக ஸ்பரிசம
-
சந்தோஷத்தில் உன் ஸ்பரிசம்
பிரிவின் உன் ஸ்பரிசம்
ஆறுதலை உன் ஸ்பரிசம்
சில நேர மோகத்தில் உன் ஸ்பரிசம்
எல்லாம் எனக்கு மட்டுமே
தெய்வீக ஸ்பரிசம் பெறவே
காத்துகிடக்கும் என்னை
தேட வைத்து துடிக்க வைக்காதே
மோகத்தில்
-
உன் நினைவாலே நான்
வாடுகின்றேன் -உன் விழியின்
மோகத்தில் தவித்த நான்
அடையாளமில்லாமல்
போனதெங்கே!!!!!
விழியின்
-
மானசீக காதலே ..
உன் காதலை எதிர்கொள்ளும் மனது ...
உன் விழியினை எதிர்கொள்ள ..
அச்சம் கொள்வதேனோ ???
மானசீக காதல்
-
வெறும் விழியின் வழியே வருவதுதான்
காதலெனும்
கட்டுக்கதையை கூட்டாய் இனைந்து பொய்யாக்கினோம்
காதல்கொடி படர்வதற்கு மனம் மட்டும் போதுமென
நம் மானசீககாதலால் இனைந்து
மெய்யாக்கினோம்
அடுத்த தலைப்பு
மெய்யாக்கினோம்
-
விழியன் வீச்சில்
விழுந்த என் இதயம்
எந்திரிக்க முடியாமல்
இன்னும் தவிக்கிறது
இனியவனே
இதழ் கொடேன்
என் இதயம் மிதக்க ..
இதழ்
-
நீ முத்தமிட்ட என்
இதழ் தேனோடு சுவை
போல திகட்டாத தேன்
போல தித்திக்குதே
திகட்டாத
-
என் மனதில்...
உன் நினைவு இனிமை ...
அதன் சுவையோ புதுமை ... ...
இதழ் அதன் இனிமை சுவையைவிட...
உன் நினைவதின் புதுமை சுவை...
என்றும் திகட்டாத .....
அரும் பெரும் சுவை...
சுவை
-
தேன் ,பணங்கற்க்கண்டு ,பாகு ,வெல்லம்
இவைகளின் சுவை அது இனிமை என்பதை
ஊரறியும் உலகறியும் .
உயிர் வாழும் என் தளிர் நிலவே !
கோடைக்கால குளிர் நிலவே !
உன் சுவாசத்தின் சுவை அதனை
நான் அறிவேன் , அதை நீ அறிவாயா ???
அடுத்த தலைப்பு
குளிர் நிலவே
-
குளிர் நிலவே
தளிர் நிலவாய்
நடைபோட்ட காலமெல்லாம்
சுடும் நிலவாய்
தணல் மனதாய்
வெந்து கொண்டு இருக்கிறது
ரணங்களாய்
தணல்
-
கோவமாகவது எதாவது பேசு
நீ பேசாத மௌனம் என்னை
தணல் போல தாக்குறது
என்னை
-
உன் எண்ணம் என்னும் கூட்டுக்குள்
என்னை இழந்து தவிக்கின்றேன்
மண்ணை சேரும் வரையினில்
மனதின் தவிப்புகள் அடங்காதோ ...
தவிப்புகள்
-
உன் நினைவுகள் மட்டுமே ...
என்றும் என் மனதிற்கு சொந்தம்...
என்னும் மறுக்க முடியா உண்மையை ...
நன்கு அறிந்தும் ..புரிந்தும் ..
உணர்ந்து இருந்தும் .....
பல நேரங்களில் ...
நீ அருகில் இல்லை என
மனதினுள் ஆயிரம் தவிப்புக்கள் ....
மறுக்கமுடியா
-
இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரைக்கண்டு ,சிரிக்கமுடியாதென்பது
எப்படி , மறுக்கமுடியாத உண்மையோ
ஆதுபோல் ,உயிரோடு இருக்கும் வரை உன்னை
மறக்கமுடியாதென்பதும்
உன்னை நினையாதிருக்க முடியாதென்பதும்
மறுக்கமுடியா உண்மை
அடுத்த தலைப்பு
உண்மை
-
உனக்குள் நான்
எனக்குள் நீ
பிரிக்க முடியாத இணைப்பிருந்தும்
இனைய முடியாத நிலைமை
உண்மை தெரிந்தும்
உனக்காக எங்கும் உள்ளம்
என்றும் உனது ..
உனக்காக
-
நான் காலமெலாம் காத்து
இருப்பேன் -உனக்காக
காத்திருப்பதில் கூட சுகம்
இருக்கிறது
சுகம்
-
காத்திருப்பதில் சுகம்
உனக்கோ காக்க வைப்பதில் சுகம்
தீ பிடிப்பதில் சுகம்
தீயாய் நீ இருந்தால் வரம்
வரம்
-
நீ என்னை பிரிய மாட்டாய்
என்று நினைத்தேன்... அனால் பிரிந்தாய்
என் அன்பே.. உன்னை
சேரும் வரம் எப்போது
தருவாய்
பிரிந்தாய்
-
பிரிந்தாய்
என் உள்ளத்தை விட்டு
உருகினேன் உனக்காய்
ஓடானேன் உன் நினைவால்
ஏதும் உணரா நடை பிணமானேன் இன்று
நகரும் பொழுதுகள்
கனக்கின்றன ....
நகராத நரகங்களாய்
உருகினேன்
-
என் நாட்கள் எல்லாம்
உனக்காகவே நகர
என் தனிமை தீயை
அணைக்க ஒரு நொடி
வருவாயா,...
வராமல் ஏங்கும்
உன்னை எண்ணியே
உருகினேன் அனுதினமும்
வந்து விடு
ஆசை தீயை
அணைத்து விடு
உன் அணைப்பால்
தீயை
-
மோகத்தீயை
மூட்டி சென்றவனே
முப்பொழுதும்
உன் கற்பனைகள்
முழுவதும் தொலைய
வா வந்துவிடு
மோகத்தீ
-
தேகம் சுருக்கிடும் சூரியனும்
தாக்கம் அதை போக்கும் பொருட்டு
தாகம் தீர்க்க நீரை நீ பருகையில் l
தவறிய துளிகளில் சில உன் செவ்விதழிறங்கி
நெஞ்சக்குழிக்குள்♥ தஞ்சம் புகுந்திட
அதுவரை வெறும் தாகத்தீயில்
தவித்தவன்
மோகத்தீயில் மூழ்கியதை அறிவாயோ ??
அடுத்த தலைப்பு
தாகம்
-
என் மனக்கால்கள் ,
உன் நினைவுகளை
பின்தொடர்ந்தே
நெடுந்தூரம்
பயணிக்கின்றது
நாள் முழுதும் அலுப்பின்றி
உன் நினைவதன்
குளிர்ச்சியிநாளோ
இதுவரை
தாகம் கொண்டு
தவித்ததே இல்லை
பயணம்
-
என்னை விட்டு பயணம் போகும்
இவன் மனதில் செல்ல என்
இதயத்தில் எப்போது நடக்கும்
இவன் காதல்
காதல்
-
காதல் காலடியில் தான் இருக்கிறதோ
கண நேரத்தில் உதறி செல்கின்றார்களே .
கால் செருப்புக்கு கொடுக்கும்
கன அக்கறையை காதலுக்கும் கொடுங்கள்
வாழ்ந்துவிட்டு போகட்டும் காதல்
காலடியில்
-
உன் காலடியில் காலணியாய் இருந்து விட
விரும்பினேன்
உன்னை ஏந்தி கொண்டு
உன் பாதத்தின் வியர்வை முத்தங்களை உண்டு
உன் பாதைகளில்
என் உயிரின் தடம் பதித்து
வாழ்ந்திட
பாதம்
-
உன் பாதம் தேடி
பயணமாகும் என் பருவம்
உன் பார்வை கோட்டுக்குள்
தேங்கும் சுகானுபவம்
சுகிக்கும் நாள் வேண்டும்
பார்வை
-
சூரியன் பார்வைக்கேங்கும் சூரியகாந்திபோல ...
உன் பார்வைபட ஏக்கத்துடன் காத்திரிக்கின்றது ...
என்றும் உன் நினைவால்வாடும்..
உன்னவள் பொன்மனம்...
பொன்மனம்
-
மலர்வாணியே !
மகராணியே !
மலர்மாடம் விட்டு, மெல்ல மெல்ல
மயில்போல நீ இறங்க
மலர் பாதமது நொந்திடுமோ ?
மண்ணில்பட்டு, என துடிதுடித்து
மலரினமே கொத்துகொத்தாய்
மயங்கி, உன் காலடியில் மொத்தமாய் விழ
மலரினத்தின் சேவைகண்டு ,பொன்மனமயங்கி உன்
மலர்பாதங்களால், மலர்களை முத்தமிட
மலர் பாத முத்தமதை, பெற்ற மறுகணமே
மலரினம் அத்தனையும், மோட்சமடைந்ததை அறிவாயோ ??
அடுத்த தலைப்பு
மலர் பாதம்
-
மலர் பாதம் கண்டு
மணி மெட்டி கொண்டு
காமனுக்கு அழைப்புவிடும்
காலம் ஒன்று வாராதோ ..
காலம்
-
காலத்தின் கோலம்
கன்னியவள் வாழ்விழக்க
சுயநல சமுதாயமோ
கைம்பெண் என ஒதுக்கிவைத்து
வாழ்வை பறித்து
இளமை தூக்கிலிட்டு
உயிரோடு புதையும் நிலை
பாவியவள் நிலை அது மாறாதோ
பூவை அவள் வாழ்வது மலராதோ
தூக்கிலிட்டு
-
தூக்கிலிட்டு
தூக்கிட்டு
தொண்டை நெரிந்து
செத்தவனின் பிதுங்கிய கண்களில் இருந்து
வழிகின்றன உண்மைகள்
வெளி தள்ளியிருக்கும்
அவன் நாக்கில் சிவப்பாய் உறைந்திருக்கும்
பல் கடித்த காயங்களில்
காயாமல் இருக்கின்றன கடைசியாய்
அவன் பேச விரும்பிய வார்த்தைகள்/
அவன் பேச நினைத்த உண்மைகள்
பெரும்பாலான தூக்களுக்கு
பின் புலத்தில்
ஒரு பேனாவும்
ஒரு கயிறும் உடனிருந்திருக்கின்றன
வாழ்வின் கடைசி கணத்தில்
தொண்டை நொறுங்கையில்
ஒரு தலையறுந்த சேவலின்
கடைசி கூவலுக்கான வாய்ப்பையும்
வழங்குவதில்லை தூக்கு
சினிமாவின்
தற்கொலை காட்சிகள் போன்றோ
தண்டனை காட்சிகள் போன்றோ
சட்டென முடிந்துவிடுவதில்லை அது
தொங்கவும் முடியாமல்
இறங்கவும் முடியாமல்
அந்த அவஸ்தை
குரூர கணங்களாலானவை
தகர்க்க முடியாத
சுவர்களின் பின்புறத்தில் நிகழும்
தூக்கு கயிற்று மரணங்கள்
மனசிதையுற்ற கடவுளின் கைகளால்
எழுதப்படுபவவை
அடுத்த தலைப்பு
சினிமா
-
நிழல் உலகு
கற்பனையின் சுவர்க்கவாசல்
காலனின் பாசக்கயிறு
மின்மினிகளாய் உதிரும்
கோடி நட்சத்திரங்கள்
குப்பைகள் ஆகின்றன இங்கு
சினிமா ... சீரளியாதேம்மா
சுவர்க்கவாசல்
-
நான் உயிர் துறந்து இம்மண்ணில் மாண்டாலும்
மலர் தூவி உனை வரவேற்க்க திறந்து வைத்துள்ளேன்
சொர்க்கத்தில், சொர்க்க வாசலை என் இதய வாசலாய்!!!
அடுத்த தலைப்பு "இதயவாசல்"
-
இதய வாசல் தனில்
குடி இருக்கும் பக்தை நான்
நீ இரங்காது போனாலும்
என் இதயம் என்றும் உனக்கேதான்
என்றோ ஒருநாள் கதவுகள் திறக்கும்
என் இதயம் தனுக்கு அமைதிகள் பிறகும்
அமைதி
-
உன்னை பற்றியே
வியந்து வியந்து யோசிக்கிறேன்
உன்னை யோசிக்க துவங்கினாலே
வந்து நிரம்பிவிடுகிறது
நிச்சலனம்
உன் சூன்யத்தின் நிலத்தில்
சூன்யமாய் மாறி
தவளையல்ல
பெரும்யானை குதித்தாலும்
சலனிக்காத குளமாய் மாற
மெனக்கெடுகிறேன்
காதலியின் மென்பார்வை போல
விழுந்தது ஒரு இறகு
மிக மகிழும் காதலனுள்ளமாய்
பெருமதிர்வுற்று
அமைதி இழந்தது குளம்
நீ மட்டும் அப்படியே அமைதியாய்
அடுத்த தலைப்பு :
இறகு
-
உதிரும் இறகுகள்
உன் நினைவுகள் கொண்டு
வருடி செல்வதால்தான்
வாழ்கின்றேன் அன்பே
இழப்பு இறகேன்றாலும்
வரவு உன் நினைவு என்பதில் கோடி சுகம்
கோடி சுகம்
-
நித்தமும் தொடரும் நினைவுகள்
எங்கோ ஒரு மூலையில்
பின்னாளின் சந்தோஷத்திற்காக
இந்நாளில் என்னை பிரிந்து
தீராத சோகத்தை பரிசாக தந்து
இளமையை கொன்று பணம் தேடி
காலம் சென்று வாழ்வது வாழ்வோ?
என்னவனே வந்து விடு...
வறுமையை கொன்று
இனிமை காணும் வாழ்வினை
வாழ்ந்து பார்ப்போம்...
கோடி சுகம் காண்போம் இணைந்திருந்து...
கோடியில் சோகம் இல்லை
கூடி வாழலாம் வா...
இளமை
-
என் இளமையின்
கனவுகள் அனைத்தையும்
இரக்கம் இல்லாது ஆள்பவனே
உந்தன் இளமை நான் ஆள்வது எப்போது
இரக்கம்
-
அஞ்சி தவிக்கும் நாய்
சாலை கடக்க
வழிவிட்டு வேகம் குறைக்கும்
வாகனங்களை காண்கையிலெல்லாம்
மனம் நம்புகிறது
இரக்கம் இன்னும் வாழ்கிறதென
அடுத்த தலைப்பு :
சாலை
-
சாலை ஓரத்து
பிச்சை காரர்களை பார்க்கும் போது
மனதும் ஏங்குகின்றது
பிச்சை என்பது என்று மரணத்தை சந்திக்கும் என்று
பிச்சை
-
எந்த கைகளால்
'கை'யிற்கு ஓட்டோமே
அதே கைகளை
இனி நீட்ட தயாராகி கொள்ளுங்கள்
நாளை முதல்
நாம் பிச்சைக்காரர்களாகும்
திட்டாங்கள் பல
பாராளுமன்றம்
ஊரார கேட்க நினைவேற்று
சர்க்கரை கூடி
தலைசுற்றல் வந்தது போய்
சர்க்கரை விலை கூடி
தலைசுற்றும் காலம் வந்துவிட்டது
நானிய அகங்பாவம் கொண்ட
மத்திய அரசு
மானியங்களை
பிச்சையென்று நினைத்துவிட்டது
ஒவ்வொரு சலுகையாய்
இனி கொய்யப்படும்
ஒவ்வொரு சக கட்சிகளாலும்
இனி அறிக்கைகள் பெய்யப்படும்
அண்ணாடங்காசிக்களுக்கெல்லாம்
அண்ணாடங் காட்சிக்கு வரும்
அரசியற் பொய்முகங்கள்
கண்ணேங்க இனி சர்க்கரை
பார்க்க போகும் சகோதரரே
தேநீரில் இனி கசப்பை
பழகி கொள்ளுங்கள்
தேர்தலில் அதே கசப்பை
அவர்களுக்கு பந்தி வைப்போம்
பி.கு : டெல்லியில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரேசன் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்படுகிறது, அதனை கண்டித்து எழுதியது
அடுத்த தலைப்பு :
தேர்தல்
-
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை
நயவஞ்சகங்களின் சீட்டு கட்டு
வென்றவன் வேந்தாகின்றான்
விழுந்தவன் நீயாகின்றாய்
உன்னை களவாட
நீ அளிக்கும் உரிமை சாசனம் -தேர்தல்
உரிமை சாசனம்
-
கன்னியவளின் சுத்தமான இதயமதை
அன்பையும் , காதலையும் பகரமாய் கொண்டு
அடிமை சாசன பத்திரம்எழுதி மிகபத்திரமாய் கொண்டவனே !
ஒரேவொருநாள் ,எனக்கு உரிமைசாசனம் தருவாயா ?
உன் அன்பிற்கும் காதலுக்கும் பகரமாக
என் உதிரம் கொண்டு உனை அபிஷேகிக்க !!!!
வாடாமல்லி ..
-
நீயாக கோர்ததுவோ ?
வேறெவரும் கொண்டு சேர்ததுவோ?
சரியாக தெரியவில்லை
மதுரை மல்லியினை வெளித்தெரிய
தலையினில் சூடியபடி
தலை சாய்ந்தமர்ந்திருக்கும்
வாடாமல்லி நீ ..
சோலை பூவினை சேலையில் பதிக்க
விரும்பாதது தான் காரணமோ ?
வெற்று சேலையினில் வீற்றுக்கின்றாய்
காஞ்சி பட்டு சேலை நீ ....
வேற்றார் எல்லாம் போற்றும்படி
வரிபதிக்கும் திறன் இல்லை எனினும்
தூற்றாரும் தூற்றாதப்படி
வரிபதிக்கும் சிறு திறன் உண்டு எனில்
உள்ளீடாய் பலவரிகள் பதிக்க நினைந்தும்
வெறும் , வெளிக்கோடாய்
சில வரிகள் பதிக்கின்றேன் ....
அடுத்த தலைப்பு :
உனக்கே உனக்காக .....
-
ஒவொரு தடவையும்
உனக்கே உனக்காய்
உக்காந்து எழுதுகின்றேன்
பிக்காலி நீ பீராய்ந்து பார்ப்பதை
எக்காலம் நான் பார்ப்பது
முக்காலம் உணர்ந்த முதல்வனே
முன்னால் வந்து சொல்லு
அவள் முகாந்திரம் வேண்டும் எனக்கு
செத்து மடிந்தாலும் அவள்
செருப்போடாவது வாழ்வு வேண்டும் ...
வாழ்வு வேண்டும்
-
வில்லை விட்டு விரைந்த அம்பை போல,
விரைந்து சென்று விட்டாய் பெண்ணே,
உன்னுடன் வாழ்ந்த சில நாள் வாழ்க்கை,
வண்ணமயமான நாளாக ஜனனனமாகியது,
நீ இல்லாமல் ஒவ்வொரு நாளும் மரண
நொடிகளாக நகர்கிறது,
பெண்ணே!!!
வாழ்வு வேண்டும்!!!
நான் இறந்தாளவதுஅளிப்பாயா உன்னோடு
வாழ்ந்த சில நாள் வாழ்க்கையை!!!
-
நின் நினைவால் , நினைவோடு
நிறைந்த ஒரு வாழ்கையை
வரமாய் வாங்கி வாழத்தான்
தவமாய் தவமிருக்கின்றேன்
வரம் தருவாயா ?
தர வருவாயா ??
நின் நினைவால் ...
-
நின் நினைவால் ......
அழுவதும் கூட ஆண்மைக்கு அழகல்ல
என்பதை ஆணித்தரமாய் ஆதரிப்பவன்
இதுநாள்வரை முகப்பூச்சும் பூசாத கன்னங்களில்
வெட்கத்தை அப்பிக்கொல்கிறேன் ,உன்னதமானவளே !
உள்ளுக்குள் உன்னை நினைக்கும் பொழுதெலாம் !
அதெப்படி?
உனக்கு மட்டும் சாத்தியம் ??
கையெழுத்து, குரல் ,கனவு,நினைவு என
ஒவ்வொன்றும் அச்சுஅசல் உனையே நகல் எடுத்ததுபோல்
அழகாய் , மிக அழகாய் ....
கண்திருஷ்டி மீது கடுகளவும் உடன்படாதவன்
கனகாலமாய், என் கவிதைகளுக்கு கவின்கூட்டிட
உனை பற்றி, எக்கச்சக்கமாய் வரி வரைந்துவிட்டேன்
என் வரிபடிப்போரின் பாராட்டினால், இதோ
இன்று நானும் , என் கரிக்கோலும் கடும் கண்திரிஷ்டியில்
எதற்கும் சுற்றிபோட்டுக்கொள் முன்னெச்சரிக்கையாய்..
மிக அழகாய் ........
-
என் இதழோர புன்னகையும்
விழியோர கண்ணீரையும்
சில நேர நாணத்தையும்
மிக அழகாய் புரிந்தவனே
என் முன் புரியாமல் நடிக்கும்
வித்தையை கற்று தருவாயா
உன்னை போல் நானும் மாற
புரியாமல்
-
துவக்கத்தில் அணுஅணுவாய் என்னுள்
கற்பனையாய் உள்நுழைந்து
கவிதையாய் என் மனம் நிறைந்திருப்பவளும்
இன்று ஒர்.. ( கவிதை ) அணுமின் நிலையத்தையே
என்னுள் நிர்வகிப்பவளே நீயென
புரியாமல் எதேதோ புலம்புகின்றாய்
புரிந்துவிட்டால் உடனடியாய் தடையிடுவாயோ ??
என் கிறுக்கல் கவிதைகளுக்கு ....
அடுத்த தலைப்பு
தடையிடுவாயா ??
-
என்னவன் என் மெய்தீண்டி காதல் மழையில்...
உள்ளுயிரை மறுமுறை நனைக்க நினைக்கையில் ...
நாணமே உன் குடைக்கு தடையிடுவாயா...
காதல் மழையில்
-
நிமிடங்கள் nagarthi vazhvatharkkum
ninaithu ninaithu saavatharkum
kadavualal padaikka patta arputha pokkisham "ninaivu"
-
உயிர்துடிப்பு நின்று..
உதிரம் உறைந்து...
உடலைவிட்டு உயிர் ..
முற்றிலுமாய் பிரியும் ...
அந்த நிமிடம் கூட ..மனம் எதிர்பார்க்கும் ..
நீ வருவாய் என ...
உயிர்த்துடிப்பு
-
என் இதயத்தில் ,
ஓர் இடம்பெயர்ந்தவளாய்(அகதி )
இடம்பிடித்த , இனியவளே !
இனிக்கும் நினைவுகளை நிதம் இறைத்து
இன்று ,உயிர்த்துடிப்பாய் இனம்மாறி
இதயத்தில் குடியுரிமை பெற்று
நிரந்தரமாய் குடியேரிவிட்டாய் .....
இனியவளே !
நீ என்ன , அமெரிக்காவிடம்
பாடம் கற்ற மாணவியோ ??
அடுத்த தலைப்பு
குடியுரிமை
-
ஒளி உடைந்து...
எழு வண்ணங்களாய் ..
உருவெடுக்கும் வானவில் அதில் ...
குடியுரிமை பெற்று குடியேறி ...
வண்ணங்கள் சூழ வண்ணமயமாய் ...
வாழவேண்டும் ...
வானவில்
-
வானவில்லின் வண்ணத்தினில் மனமயங்கி
வானவில்லாய் மாறிட வரம் கோரிடும்
வண்ண நிலவே !
மேகமாய் நானிருக்க , அதில் படர்ந்திருக்கும்
நீலமாய், கருமையாய் நிறம்மாறும்
வரம் கோரினால் , பகலும் , இரவும்
பிரியாமல் இருப்போமே !
அடுத்த தலைப்பு
மேகமாய்
-
வானமாய் நீ இருக்க..
அதில் சூழும் மேகமாய்
உன்னையும் உன் இதயத்தையும் ..
முழுமுழுதாய் சூழ்ந்து ..
ஆட்கொண்டு...
இதயம் ஆளும் மகாராணியாய்..
ஆட்சிசெய்ய வேண்டும் ..
என்றும் என்றென்றும்...
இதயம் ஆளும்
-
" என் உயிருக்கு உயிரானவளே !
உனக்காக உயிரையே உயில் எழுதிவிட்டேன் ..
வெறும் , இதயமாள முனைவதேன் ??
முழுதாய் முழுழுதாய் உயிரையே
உனக்காக அடிமைப்பத்திரமாய் கொடுத்தபிறகும்
யோசனை என்ன ??
ஒரு வேளை , இயற்கையிலே இரக்கமானவள் நீ என்பதாலா ??
அடுத்த தலைப்பு
இரக்கமானவள்
-
இரக்கமானவள்
இதை சொல்லியே
என்னை கிறக்கம் ஆக்கியவன்
இன்று உறக்கம் கொள்வதேனோ
உறைந்திருக்கும் அன்பும்
உதயம் கொள்வதெப்போ
உதயம்
-
அந்த உதயம்
திராவிடத்தோடு துவங்கியது
மண்டியிருக்கும்
மையிருட்டின்
அடர்த்தி குலைத்தொரு
விடியலுக்கு உண்டாக்குமென
நம்பிக்கை இருந்தது
ஹிந்தி எதிர்ப்பை
ஹிருதயம் முழுக்க
குருதியாய் பாயவிட்டு
குடைந்தாழத்தில் விதைத்தது
ஆங்கில ஆலமரத்தை
அழிந்தது ஹிந்தி மட்டுமன்று
தமிழும் தான்
தமிழனும் தான்
அந்த உதயம்
அந்திம சூரியனோடு
உதித்துவிட்டது
அடுத்த தலைப்பு
உண்டியல்
-
உதயத்தைக்காண மேற்கு நோக்கி
மேலே பார்த்தவனாய் அமர்ந்திருக்க
மேலும்கீழும் பார்த்து , "ஐயோ பாவம் " என
நீட்டாத உணடியலில் காட்டாத பரிவினை காணிக்கையாய்
போட்டபடி செல்கின்றார் ,எனை கடப்பவர்கள்
உண்மையறியா பித்தர்களை போல ,பாவம் !!
என் இதயத்தை கொள்ளைகொண்ட ,இச்சைக்குரியவள்
ஆசையின் வாசமலராம் ஆசைக்குரியவள்
மேற்க்கிலே முகாமிட்டிருக்கும் விவரம் அறியாமலே .......
அடுத்த தலைப்பு
வாசமலர் ...
-
கண்ணாடிக்குள் காகித மலராய் தான்
நான் இருந்தேன் காலகாலமாய்
என்னோடு காதலாக நீ வந்து சேர , நான்
வாசமலராக ஆன சேதி அறிவாயா ?
என் சுவாசம் நீ என்பதை அறிவாயா ?
சுவாசம் .
-
உன் வாசம்
என் சுவாசம்
உன் வேஷம்
ஏனிந்த மோசம்
தாசானாய் ஆவதை நீ
சரிதிரம்போல் சொனாலும்
தரித்திரமாய் நம்ப
முட்டாள் அல்ல ...
இன்று இவள் வேறு
சரிதிரம்
-
என்னவனே
சரித்திரம் சொல்லும்
காதலாக மாறாவிடினும்
உணமைகாதல் எனும் முத்திரை
பதிக்க-முடிவில்லா காதலில்
முழுவதுமாய் வாழ
வசந்தமாக வந்துவிடு
முத்திரை
-
நல்லவனென்றும்
கெட்டவனென்றும்
வந்து சேர்கின்ற
முத்திரைகள்
முகத்திரை பல கொண்டே
பழகிவிட்ட வாழ்வில்
எளிதாக அடையாளம்
காணவியலவில்லை
எந்தெந்த முகத்திரைக்கு
எந்தெந்த முத்திரையென
அடுத்த தலைப்பு
கணம்
-
கணம்
அது கனமாக தெரிகிறது
நீ இல்லாத பொழுதுகளில்
மனம்
அது மரணித்தும் துடிக்கிறது
மறக்காத உன் நினைவுகளில்
துடிக்கிறது
-
நீ யற்ற தருணத்திலும்
நீ யுள்ள தருணத்திலும்
ஒரே மாதிரியே
துடிக்கிறது
இதயம்
உன் இன்மையும்
இருத்தலும்
எந்த மாற்றத்தையும்
நிகழ்த்திவிடவில்லை என்னில்
கொஞ்சம் தனிமையை
கூட்டி குறைத்ததை தவிர
அடுத்த தலைப்பு
இன்மை
-
என் இன்மை
உன்னை வருத்தாது போகலாம்
உன் இன்மை
எனை நெகிள்தாது போகலாம்
நம் இன்மைகளின் ஆத்மாவில்
நரம்புகளில் மீட்டப்படும்
தனிமைகளின் ராக வேள்வியில்
விஞ்சி நிற்கும் சோகத்தின் முகாரிகள்
விளம்பி நிற்கும்
இன்மையின் இயலாமைகளை
ஆத்மா
-
நான் வரைந்த
கவிதையின் ஆத்மா
காதலால் வழங்கப்பட்டது
நான் சிரித்த
தருணங்களில் ஆத்மா
உன்னால் அருளப்பட்டது
நான் அழுத
கண்ணீரின் ஆத்மா
உன் பெயரால் எழுதப்பட்டது
அடுத்த தலைப்பு
ரகசிய சூரியன்
-
என் உள்ள இருளில்
உறைந்து போன உணர்வுகளை
ஒவொருகனமும் உருகவைத்த
ரகசிய சூரியன் நீ
உணர்வு
-
புணர்வென்ற ஏற்பாட்டையே எரித்துவிடுமடி
என் ஆசைமலரே , உன் உள்ள உணர்வினை
ஒவ்வொருமுறையும் நீ வெளிபடுத்தும் போதும்
உனக்காக ஓர் ஆட்கொணர்வு மனுவிட்டு
உன்னை கொண்டு வருவேன் ,நாடு கடத்தி ....
அடுத்த தலைப்பு ...
உனக்காக ..
-
உனக்காக் தான் கவிதை எழுதி
கவிதாயினியாய் கற்பனை கொண்டு
வ்வொரு வரியையும் பதிக்கின்றேன் .
நீ என்னடா என்றால் ,கள்ளிசெடிக்கெல்லாம்
கவிவரியினை பதிக்கின்றாய்
தலைப்பு
கவிவரி
-
ஆனானபட்ட ராஜாவுக்கே
அந்தபுரம் நொந்தப்புரமாய் இருந்தால்
அங்கு காதல் புராணமா படிப்பான்
காட்டு செடிக்கும் கவி வரி பதிப்பான்
குறிஞ்சி பூக்கும் ஏங்கி திரிவான் ...
அந்தோ பரிதாபம்
சொந்த பூ நிலை தளர்ந்து
குறுக்கே வந்த பூவை நிந்தை செய்தல்
தகுமோ ...
பறிப்போர் கைக்கெல்லாம் கள்ளி பூ சிக்காது
பக்குவம் தெரிந்தோர் கைக்கே சமர்ப்பணம்
கள்ளிபூவின் மருத்துவ குணம்
நம் மன்றத்தின் மருத்துவ பகுதியில்
மலர் ஒன்று திரியிடுள்ளது ..சிந்தை
தளர்வு கண்டோர்
அங்கு தெரிந்து கொள்ளலாம்
வெறும் கண்ணை கவரும்
காகித மலராய் இருபதற்கு
அழகு மலர்
கள்ளி பூவாய் இருப்பது பெருமையடி
மலர்
-
வேறொரு
நந்தவன மலரை
பறிக்க முயன்றவன் சொன்னான்
"நீ என் காதல் மலரென"
மயங்கிய மலரும்
ஆட்கொள வழிவிட
இதழ் இதழாய் அவன் பீய்த்து
திண்ணும் தருணதில்
புரிப்பட்டது மலருக்கு
அவன் மனப்பிறழ்வு
அடுத்த தலைப்பு
விம்பம்
-
வாய் சொல் என்றும்
ஆள் மனதின் பிம்பங்கள் அல்ல ..
உள் இருப்பதை வெளிக்காட்ட
வெறும் வார்த்தை ஜாலங்களும்
வர்ணனை பேச்சுகளும்
உயரிய அன்பென்றால்
கவிஞ்சர்கள் மட்டும் தான்
காதலுக்கு தகுதியானவர்கள் ..
ஆமாம் வைர முத்துவிற்கு
எதனை காதலிகள் ...?
வார்த்தை ஜாலம்
-
தேமா
புளிமா
கருவிளம்
கூவிளம்
அசை பிரித்து தோற்கிறேன்
வார்ததை ஜாலமிலா
ஒரு வெண்பா எழுத முயன்று
அடுத்த தலைப்பு
கோலம்
-
கண்மலர் பார்த்து
நுண்ணுயிர் சேர்த்து
செய்யத் தான்
செய்தான் இதழ்
கோர்த்து
விடுவென விட்டு
சிடுவென சிட்டாய்
சிறகடிப்பு
பசலை நோய் காண
இக் கோலம்
அடுத்த தலைப்பு
நோய்
-
ஒசைபட்டோ, ஒசைபடாமலோ
லேசாகவோ , விரசாகவோ
யோசித்தோ,யோசிக்காமலோ
எப்படியாகினும் ஏதுவாகினும்
எதை யார் எப்படி உரைத்தாலும்
என் நேசத்தின் பாசத்திலும்
சுவாசத்தின் உயிர்வாசத்திலும்
நிறைந்திருக்கும் நிறைவானவள்
என் ஆசைமலர் , அவளுக்கு
வார்த்தைஜாலங்கள் மட்டுமல்ல
வர்ணஜாலங்கள்,வண்ணக்கோலங்கள். கூட தூசே ??
காரணம்.காதல்நோயோ??
அடுத்த தலைப்பு
நிறைவானவள் ...
-
சீராக சரியாக இல்லாத போதும் ..
ஆசையின் ஆசை மலரவள்..
ஆசையின் ஆசை மனதினில் ..
எப்படி இப்படி இத்தனை நிறைவானவள்..??
ஆச்சரியமானவள்..
-
இயம் மறந்து
இயல் மறந்து
துவம் மாறி
துவர் ஆகி
சவம் போல
தவம் புரிந்தாள்
தடம் கடந்து
புறம் நடந்து
வரம் கொண்டால்
வாழ்கை நரகமென
ஆச்சரியமானவள்
அடுத்த தலைப்பு
முடிந்து போனது
-
கனவு
ஆசை
பிரமிப்பு
ஆச்சர்யம்
வைராக்கியம்
சிலாகிப்பு
அனைத்தும் முடிந்து போனது
இன்று
டிசம்பர் இருபத்தொன்று
அடுத்த தலைப்பு
ஆச்சர்யம்
-
பஞ்சமில்லாமல்
இருக்கின்றன
ஆச்சரியங்கள்
விழிகள் விரிய
கூகையெல்லாம்
குன்று ஏற
சோகை எல்லாம்
சுந்தரமாக
நோவு எல்லாம்
சௌக்கியமென
தலைகீழ் உலகும்
கீழ்தலை உலகும்
ஆச்சரியம்
அடுத்த தலைப்பு
சௌந்தரியம்
-
கவிதை விளையாட்டை தொடரும் நண்பர்களுக்கு பணிவான வேண்டுகோள் ... தயவு செய்து ஒருவர் விட்டு செல்லும் தலைபிற்கு அடுத்தவர் கவிதை படைத்தது விட்டால் அதை எக்காரணம் கொண்டும் அளித்து விடாதீர்கள் ... அதே இடத்தில வைத்து திருத்தங்களை மேற்கொள்ளுங்கள் .. ஏற்கனவே நீங்கள் இட்ட தலைபிற்கு வேறொருவர் கவிதை புனைந்து அதை பதிவிட வரும்பொழுது .. தங்கள் கவிதை கொடுத்த தலைப்பு இலாது இருந்தால் எழுதியவர் ... நேரம் காலம் அவர்களது கற்பனைகள் வார்த்தைகள் எல்லாம் வீணடிக்க பட்டுவிடும் .... அன்றில் சரியாக உங்கள் கவிதையை தயார் செய்த பின் மட்டும் பதிவினை மேற்கொள்ளுங்கள் ...
நன்றி
-
சில சௌந்தர்யதின் காலடியில்
சிக்கி தவிக்கிறது
ஆணமையும் அதன் மேன்மையும்..
மெனமையனவர்களே
அதன் மேன்மையை குலைகலாமோ
மேன்மை
-
சரியான யாவும்
சரியாக நாளும்
சரியாக வந்தால்
நேர்மை
சரியான யாவும்
சரியாக யார்க்கும்
சரியாக போகின்
தூய்மை
சரியான யாவும்
சரியாக எங்கும்
சரியாக சேர்தல்
மேன்மை
சரியான யாவும்
சரியாக தவறி
சரியாக சேர்ந்தால்
மேல்'மை'
அடுத்த தலைப்பு
பலியாடு
-
வல்லரசுகளின் ஆசைக்கு
ஏழ்மை பலியாடு
சில மனித வல்லூறுகளின் ஆசைக்கு
பெண்மை பலியாடு ...
பெண்மை
-
கண் மையென
நினைத் தான்
கரு மை அப்பிய
முகத் தான்
தண் மைதனில்
ஏமாந் தான்
பெண் மையில்
சுட்டெரிந் தான்
அடுத்த தலைப்பு
தண்மை
-
தண்மை உன் மென்மை
தளிர் நிலவனே பெண்மை
தாகம் கொள்ள செய்வதேனடி என்னை
தாகம்
-
கானல்நீர் பறக்கும்
பாலையில் அலைந்துனை
தேடி சேர்ந்தேன்
காணலும் இல்லை
கண்ணலும் இல்லை
முக கோணலில்
என்னை அலட்சியம் செய்தாய்
மனம் மொடிந்து
ஒரு நொண்டி ஒட்டகமென
திரும்புகிறேன்
உறைப்பனி பாலையில்
அடுத்த தலைப்பு
அலட்சியம்
-
பல அலட்சியங்களின் பின்னே
ஒளிந்திகொண்டு
கண்ணாமூச்சி ஆடியது
காதல்
காதல்
-
எந்த தருணத்தில்
எங்கிருந்து
எவ்வாறு விழுந்தது அறிகிலேன்
அது துகளா
துளியா
பொறியா
வெளியா
காற்றா
அறிகிலேன்
அது உருவம்
அருவம் யாதும் அறிகிலேன்
அது ஆத்திகமா
நாத்திகமா தெரியாது
அது நல் நம்பிக்கையா
மூட நம்பிக்கையா தெரியாது
அறிவேன் ஒன்று
அது உன்மீதான் என் தீரா காதல்
அடுத்த தலைப்பு
கால்சுவடு
-
உந்தன்
கால் சுவடுகளை தேடி
பயனமாகிகொண்டு இருக்கிறது
என் நம்பிக்கைகள்
நம்பிக்கை
-
நாளை
அதற்கடுத்தநாள்
அதன் மறுநாள்
என்றே
இன்னும் விடபிடியாய்
இருக்கிறது
வாழ்வின் மீதான்
என் நம்பிக்கை
அடுத்த தலைப்பு
பூமடல்
-
நீ எழுதாத காதலையும் சேர்த்து
எழுதி வந்தது
இந்த பூ மடல்
பூ
-
உதிர்ந்து
கனத்த பதுகை கால்களில்
மிதிப்பட்டு
நசிங்கி
உலர்ந்து சருகாகி
குப்பையாய் எரியும்
இப்பூக்கள்
உருகுவதாய் பிறந்திருக்கலாம்
அடுத்த தலைப்பு
இசை
-
இருதய நரம்புகளில்
இழையோடும் தனிமை முகாரிகளில்
தினம் பிறழ்ந்து கலக்கும் இசையே
நீ இல்லாதிருந்தால் ...
இறந்திருக்கும் இதய துடிப்பும்
இதய துடிப்பு
-
அடிமுதல் முடிவரை
இரத்த பாய
நாளங்களை ஈரப்படுத்தி
நரம்புகள் உறைந்து போகாமல்
உயிர்ப்பாய் இருக்க
நீ இல்லாத தனிமையிலும்
துடித்துக் கொண்டிருக்கும்
நான்
நம் காதலின்
இதய துடிப்பு
அடுத்த தலைப்பு
நெடுஞ்சாலை
-
நெடுஞ்சாலையின்
நெடுந்தூர ஒற்றை புள்ளியாய் நீ
உன்னை நோக்கிய என் பயணம்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
நெடுந் தூரங்களாய்
பயணம்
-
இந்த
நீள் வட்ட
பாதைகளில்
தொடர்கிறது
என் பயணம்
சுற்று சவர்கள்
சூழ்ந்திருக்கும்
இப்பதைகளின்
என் திசைகளையும்
என் அறிதல்களையும்
மறத்தை அழைத்துச் சொல்கின்றன
இருண்மையின் இப்பணம்
எப்பேருண்மையை எனக்கு
அருள போகின்றன என
காத்திருக்கிறேன்
அடுத்து தலைப்பு
திசை
-
பல்லாயிரம்
மயிலுகப்பால் இருக்கும்
உன் இதய அறைகளின்
தன இருப்புகளை அறிய
திசை அறியாத இந்த பறவையின்
சிறகுகள் நீள்கின்றன உயர பறக்க
பறவை
-
ஒவ்வொரு முறையும்
தோல்விகள்
என்னை தொடுகையில்
சிறகொடிந்து போகும்
பறவையாய் துடிக்கும்
மனதை தேற்ற
உன் ஒற்றை பார்வையை வீசிவிடு..
மீண்டும் உயிர்பெற்று
உலா வருவேன் என்னவனே
உன்னை சேரும் நாள் பார்த்து
சேரும் நாள்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%3Cbr+%2F%3E%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%3Cbr+%2F%3E%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%3Cbr+%2F%3E%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D&hash=74a83098672e7603ec154acd3a2724279ed97c90)
போகின்றேன்
-
தன்னோடு வாழ
தகுதியானவன் நீயென
தம் வாழ்வில் வளம் சேர்த்திட
வழமையோடு உலா வந்தவள்
தனி வழி போகின்றேன்
தடுக்காதே என்றதும்
தன்னிலை மறந்து
துயருறுகிறேன்..?
துயர்
-
துயர் சுமந்த விழிகளுக்கு தெரியவில்லை
கண்ணீரின் கனம் ...
நினைவு சுமந்த இதயத்திற்கு தெரியவில்லை
காதலின் ரணம் ...
அதுதான் மீண்டும் மீண்டும்
ஆரம்ம்ப புள்ளியினை வந்தடைகின்றது
ரணம் .
-
மணமாகி மனமொத்து வாழ்வோம் என்றவள்
மணமாகி செல்வதை கண்டு
ரணமான இதயம்
கனமாகி, சினமாகி
குணவதி உன்னை
ரணமாக்குவதர்க்கு பதில் - என்
(ம)ரணம் மேல்...........!
மரணம்
-
மரணம் மேலன்று
பெறும் ரணங்களை விட
ஜனனம் ஈன்ற ரணங்களை எல்லாம்
மரணம் அளித்துவிடுமாயின்
மரணம் மேல்தான் ...
ஜனனம்
-
உன் விழி பார்த்த போது
உணர்வுகள் மரணம்
உன் உதடுஅசைந்த போது
என் உரிமைகள் அர்ப்பணம்
உன் உளம் திறந்த போது
என் உறவுகள் மரணம்
மொத்தத்தில் பல மரணத்தின் விளிம்பில்
எனக்குள் காதல் ஜனனம் ..
இனிமேல் ரணங்களும் .........................
காதல்
-
காதலிக்கும் தருணத்தில்
இந்த ஜனனம் உனக்குதான்
நாம் மரனிக்கும் வரையென
ஒருவருக்கொருவர் ஒப்பந்தமிட்டு
அளவளாவி கொண்டதை மறந்து
அற்ப பணத்திற்காக நமக்குள்
அர்பணமான காதலை
அதளபாதளத்திலிட்ட மனரணத்தால்
அன்று மேற்கொண்ட ஒப்பந்தபடி...
என் மரணம்
உனக்கே உனக்காய்
சமர்ப்பணம்....!!
சமர்ப்பணம்
-
ஒ,,,,,வானமே
ஏன் ?
உனக்கும் காதல் தோல்வியோ?
என்னை போலவே நீயும்
அழுகிறாய்!
மழை............
-
ஹாய் ராஜி .... கொடுக்கபட்ட தலைபிற்கு கவிதை எழுதணும் இங்கே ... சுதர் சமர்ப்பணம் எனும் தலைப்பை விட்டு சென்றிருகின்றார் .. உங்கள் கவிதையில் சமர்ப்பணம் என்னும் சொல்லை காணவில்லை .... நான் இபொழுது சமர்ப்பணம் எனும் தலைபிற்கும் மழை க்கும் சேர்த்து எழுதுகின்றேன் .. இனி தொடரும் கவிதைகளை தலைபிற்கு பொருந்த வழங்கவும் ....
ஓர் மழை நாளில்
உன் மனதை அறிந்தேன்
இனோர் மழை நாளில்
நான் உன்னை அறிந்தேன்
இதோ ஓர் மழை நாளில்
நான் என்னை இழக்கின்றேன்
என் முழுமைகள் சமர்ப்பணம்
முகில் அழும் முழு வேளையில்
முகில்
-
முதல் பார்வையிலேயே,
முகிலாய் வானத்தை மறைத்த
என் காதல் தவத்தை
தவிடுபொடியாக்கினால்,
மேகமாய் நான்!!!
சூரியனாய் அவள்!!!
தவம்
-
வாங்க அழகிய நிலா ..... கவிதை விளையாட்டுக்கு வருகவென வரவேற்கின்றேன் ... கவிதை நன்று cutemoon ... சின்ன வேண்டுகோள் ... உங்களுக்கு முன் கவிதை பதிவிட்டவர் தலைப்பை உள்வாங்கி அந்த வார்த்தை வரும் வகையில் கவிதைகளை எழுத வேண்டும் .. விமல் கொடுத்த தலைப்பு தவம் .. அந்த வார்த்தையை உங்கள் கவிதையில் காணவில்லை எனவே தவம் .. அதோடு நீங்க கொடுத்த தலைப்பு பிரிவுக்கு நான் காவிதை எழுதுகின்றேன் ... தொடர்ந்து தலைப்பை உள்வாங்கி அந்த வார்த்தைகள் வரவேண்டும் என்பதை குறித்து கவிதை பதிவிடுங்கள்
உன்னை பிரியாத வரம் ஒன்றுக்காய்
தவம் இருந்தேன் ...
பிரிவு என்னை
மெல்ல முகர்வதை அறியாமல்
வரம்
-
வரம் இருந்து பெற்ற உன் தொப்புள் கொடியை அறுத்தது நம்
உறவை பிரிக்க அல்ல...
அது நம் பாசத்துக்கு வெட்ட பட்ட ரிப்பன்.
உறவு
-
நினைவுகளில் தோன்றி
நித்தம் தன்னை
நினைவிழக்கச்செய்தவள்
கண்வழி உருண்டு, இதயக்
கருவறையில் காலூன்றி
கருவாய் தோன்றி பிரிக்க முடியா
உயிரின் உறவாய் நின்றாள்,
உதிரம் கொடுத்தவளுக்கு அடுத்த
உறவும் இவளே , என்
உள்ளத்தில் கலந்த உயிரும் இவளே
இவளே என் உறவு!!!
அடுத்த தலைப்பு "நினைவு"
-
நினைவுகளை ஏலமிட கூறினேன்
எவரும் வாங்குவதற்கு முன்வரவில்லை
இனாமென்றும் அறிவித்தேன்
இதுவரை எவரும் வரவில்லை
நினைவுகள் கொடுமையென்று
நினைத்திருப்பார்களோ ..?
வரவில்லை
-
நீ வரவில்லை என்றால்என் உயிரதில்
உன் நினைவுதனை தொடுத்துஉறவு அதை வளர்த்து
கற்பனைகளுக்கு உருவம் கொடுத்துஉறவாடுவேன்
என் உயிருள்ள உறவு நீதான் என்று
என் உயிருள்ளவரை.
என் உயிருள்ளவரை
-
என் உயிருள்ளவரை
உன் நினைவுகளை மறவேன்
உதாசீனங்களை மறக்க
இதுவரை எவரும் கற்று தரவில்லை
இனிமேலும் ....`?
இனிமேலும்
-
இனிமேலும் பொறுமையில்லை
காத்திருக்க
விழிகள் தடம் பார்க்க
இதயம் நிஜம் தேட
உன்னை தேடும் என்னை
மறந்து போவாயோ ..
மறந்து என்னை
மரிக்க செய்வாயோ..
விழிகள்
-
உன் விழிகள் என்ன காதல் விலாசமா
விழிகள் அசைவில் என் இதயம் தெரிகிறதே
உன் விழிகள் என்ன தூண்டிலா
மூடி திறந்தவுடன் என் இதயம் மாட்டிக்கொண்டது
காதல் விலாசமா
-
ஒவோருதடவையும்
உன்னால் அனுப்பப்படும்
காதல் கடிதங்கள்
விலாசம் இடப்படமாலே
என்னை வந்தடைகிறதே
எப்படி சாத்தியம் ..
காதல் விலாசம் அறிந்த விலாசமோ
கண்கள்தான் அதன் வாசலோ ..?
கண்கள்
-
உன் கண்கள் சொல்வதே... நான் எழுதிய கவிதை அல்லவா...
கவிதை
-
உன்னை கவிதை என்றேன்
அதனால்தான்
பல பொய்களுக்கு சொந்தம் ஆனாயோ
பொய்
-
சரியென்று சொல். என் அன்பே... உனக்காக பொய்யை மட்டுமே
வைத்து கவிதை எழுதுகிறேன்.... பகலில் கூட. இராத்திரி செய்கிறேன்.
எழுதுகிறேன்
-
தினம் பல கவிதை எழுதுகிறேன்
தினம் தினம் அதை பிரசுரிக்கிறேன்
என் மனவெளிகளின் மௌன செவிகளில்
வெறும் ஓலங்களை தவிர
ஒன்றுமே உணர முடிவதில்லை
செவி
-
உன்னில் இல்லாத எனக்காக
உன்னில் இல்லாத உண்மைக்காக
எழுதுகிறேன் பல கவிதை
எல்லா கவிதையும்
உன்னில் தொடங்கி உன்னிலே
முடிவதால் என்னில் உன் நினைவு
ஆழமாய் போகிறது ..
செவி கொண்டு கேட்காது போனாலும்
கண் கொண்டு பார்த்துவிட்டு ஒரு முறை
ஆழமாய்
-
அஸ்திவாரம் ஆழமானால் அது உறுதி வீட்டுக்கு..!
அறியும் கல்வி ஆழமானால் அது உறுதி வாழ்க்கைக்கு..!
அளவை பேசி... ஆழமாய் யோசி..
கல்வி
-
கல்வி ஒரு மனிதனை
பூரணமாக்குது....!
காதல் ஒரு மனிதனை
நிர்மூலமாக்குது....!
காதல்
-
ஆழமாய் இருக்கும்
பயன்பாடு அற்றுப்போன
கிணற்று நீரை போல
காதல் கொண்ட
மனதுள் ஓடும்
எண்ண ஓட்டமும்
அழுக்காய் பிரவகிக்கிறது ..
அடர்ந்த அதன் அழுக்கு நீரும்
மனதை போலவே
விம்பங்களை பிரதிபலிக்கிறது ..
அதனை பிரித்தறிய
கல்வி அறிவு போதாது
கண்டறிவுதான் உதவும் ... கண்டறி
அழுக்கு
-
அவள் விம்பம் விழுந்து
நீருமானது அழுக்காய்
சொல்கிறாள்
தன் துணை கடலென
சூதலைவீசும் கடல்
சூதலைவீசும் கடல்
-
மயான குளத்தில்
பெரும் சூதலை என
சுருண்டு மேலெழுந்து
மிகையான அழுத்தங்களுடன்
முட்டி மோதி
ஓய்ந்து உரு மாறிக்கொண்டு
அவள் ....
உரு மாறி
-
உருமாறிகள்
துருமாறிகள்
தி(ரு)ரிமாறிகள்
வெறுமாறிகள்
ஒருமாறிகள்
மாறிகள்
-
இதுவரை
மாறியாய் இருந்த நீ
திடிரென மாறிபோனாய்
இதுவரை
-
இதுவரை
கல்லைக் கூட
கடவுளாக
கண்ட உலகில்
கல்லை கொண்டு
கண்ணாடியை சிதைத்தாலும்
சிதறிய சில்லில் தெரிவதும்
உன் உருவமே...
உருவமே.
-
மாறிகள்
வாழ்க்கை சுட்டிகள்
மாறாத மாறிகள்
மாயையின் குட்டிகள்
மாண்டு போகும்
மனித எண்ண குளத்தில்
மூழ்கி முக்குளிக்கும்
மாறாத மாறிகள்
இதுவரை மாறாத நீ
உன் மனகுளத்தின்
மாறுபட்ட மாறி
உன் உருவமே
மாயை
-
:-\ maayai ... ? varun mayaiku maaththa mudiumaa :-\
-
மாயை
வானவில்லின் மாயை போல
வந்து போனாவனே
நிரந்தரமாய் மனதில் தாங்கியவனே
உன்னை நினைப்பதும் சுகம் எனக்கு
உதிரும்
-
உதிரும் பூக்களும்
பூஜை காணவே ஏங்கும்
உதிராத பூவாய்
மனதில் தாங்கும்
பெண்ணை
உதிர்க்கும் உள்ளம் கொண்டவன்
உருவம் கொண்ட
காலன்
பூஜை
-
பூஜை செய்வது கடவுளுக்கு இருந்தாலும்
நீ நலமாக வழ வாழ்த்தி வரம் கேட்கிறேன்
கடவுளிடம்
வரம் கேட்கிறேன்
-
வாழ்ந்து முடித்த
என் காதல் சாசனத்தில்
ஒரு கையொப்பம் என
முத்தம் ஒன்றை
பரிசாக தந்துவிடு
சாபமாக அல்ல
வரமாக கேட்கிறேன் ..
தந்துவிடு
-
நான்கு நாட்கள் உன்னை நான் காணாவிடில்!
நீரின்றி! வற்றிப்போன காவிரிபோல்!
காய்கிரதடி என் மனது! கனவிலாவது வந்துவிடு!
உன் முக தரிசனம் தந்துவிடு!
தரிசனம்
-
கோடானு கோடி
பக்தர்கள் மத்தியில்
தாசானு தாசனாக
ஓரமாய்
உன் முக தரிசனத்துக்கு
காத்திருப்பதே
வழக்கம் ஆகிகொண்டிருகிறது
தாசனாக
-
நான் உன் அன்பிற்க்கு மட்டும் தாசனல்ல
கோடான கோடி வார்த்தைகளால் வர்ணிக்க
முடியா கட்டழகு மேனிக்கும்தான்!!!
அடுத்த தலைப்பு "கட்டழகு மேனி "
-
உன் கட்டழகு மேனியில் கை வைத்த போது
தான் உன் மேல் காதல் என்பதே எனக்கு
அப்போது தான் தெரிந்தது
எவ்வலவு காதல் மோகம் உன்னிடத்தில்!!!
உன்னிடத்தில்[/b]
-
உன்னை கடக்கின்ற
தென்றலும் சொல்லும்
என்னை இழந்து
உன்னை நினைந்து
உருகும் என் நிலைமை
இழந்து
-
என்னை இழந்துதான் உன்னை சுமந்தேனடி
சுமையாக அல்ல என் இதயத்தில் சுகம்
தரும் நினைவுகளாய்!!!
அடுத்த தலைப்பு " என் இதயம் "
-
உன்னால் பழுதான என் இதயம்
கவிதைகள் பழுதடைந்த என்
இதயத்திற்கு பதில் என்று கூறப்போகிறாய்?
பழுதடைந்த
-
பழுதடைந்த என் இதயத்திற்கு
நீதான் காரணம் என்பதையாவது,
ஒப்புக்கொண்டுவிட்டு எனை நீங்கி செல்லடி என்
என் இதயத்திற்கு
-
அவள் நினைவுகள் என் இதயத்தில் நின்றாடின,
என் கண்ணீரோ பிரிவின் துயரால் நிரந்தரமாய்
நித்திரை கொள்ள மன்றாடின, கல்லறைக்கு
செல்லும் வழியைத்தேடி!!!
அடுத்தத் தலைப்பு "நித்திரை"
-
ஆழந்த நித்திரையில் இருக்கும் தமிழா..
விழித்து எழு !! வீறு கொண்டு எழு !!
விடியல் வரட்டும் எம் தமிழுக்கும், எம் தமிழினத்திற்கும் !!
தமிழா
-
எவ்விடம் போகினும்
தமிழை மறவாதே..
ஆங்கிலத்தில்
தமிழ் வளர்த்தது போதும்
அன்னை தமிழை
அழகாய் பேசி
அளவளாவி மகிழ்வோம்
தமிழ்
-
என் தாய் மொழி தமிழ் கூட
அமிர்த சுவை காணும், நீ
பேசும் வேளைகளில்!!!
அடுத்தத் தலைப்பு "அமிர்த சுவை"
-
அமிர்த சுவை விட உன்னை மறக்கமுடியாத
அந்த சோகம் கண்ணீரும் உவர்ப்பு என்பதை
உன்னை காதலித்த பின்பு தான் தெரிந்து கொண்டேன்
தெரிந்து கொண்டேன்
-
தெரிந்துகொண்டேன் பெண்ணே
அழகு எனும் வார்த்தைக்கு அர்த்தத்தை,
கற்சிலையாய் நான், என் கண்ணின்
கருவிழியில் பிம்பமாய் நீ!!!
அடுத்தத தலைப்பு "பிம்பம்"
-
கண்ணாடியில் உன் பிம்பம்
கண்டு நாளும் மயங்குகிறேன்
உண்மை உருவம் உன்னைக்கண்டு
நாளும் பரிகசிப்பது தெரியாமல்..!!
உன்னைக்கண்டு
-
உனைகண்டுகொண்ட நொடிப்பொழுதிலேயே
நான் என்னை தொலைத்தேன், என்
சந்தோஷம் தொலையப் போவதை அறியாமல்!!!
அடுத்தத் தலைப்பு "நொடிப்பொழுது"
-
அக்னி சாட்சியாய் என் கைப்பிடித்தாய்
நொந்து நொந்து உடல் வேகத்தானா?
நொடிப்பொழுதும் விலகாமல் என்னுள் இருந்தாய்
சாட்சியாய்
-
உண்மை காதலுக்கு சாட்சியாய், என்
இதயக்கருவறையில் ஏற்றப்பட்ட உன்
நினைவுகள் இன்று கண்ணீராய்
காதல் கரையை கடக்கிறது தனியாக!!!
அடுத்தத் தலைப்பு "இதயக்கருவறை"
-
அன்னையின் கருவறை
இருளில் வாசம் செய்த
அனுபவத்தினால் தானோ
இன்று நீ இல்லாத
என் இதயகருவரை இருளும்
பழகி போனது...
என்றாவது ஒளிப்பெறும்
உன் திருமுகம் காணும்
அந்நாளில்
நீ இல்லாத
-
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
நான் என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே
இதயத்திலே
-
என் இதயத்திலே நீ எப்போது வந்தாய்
என்பது என்னை விட உன் இதயத்தை
கேட்பார் துடிகின்றது எனக்காக
எப்போது
-
தினமும் கனவில்
உன் கண்பார்த்து
கவலை மறந்தேன் ..
உன் தோள் சாய்ந்து
துயர் மறந்தேன்
இன்று உன் சொல்லுக்காக
காத்திருக்கிறேன்
எப்போது சொல்வாய்
சொல்லி விடு
சுவாசமின்றி தவிக்கும்
என் இதயத்திற்கு
சுவாசமாய் வந்து விடு..
எப்போது
-
எதை எதையோ நினைவில்
அசைபோடும் மூளைக்கு ,நீ
எப்பொழுது என்னுள் வந்தாய்
என்பது மட்டும் நினைவில்லை,
என் இதயத்தில் காதல் கோட்டை
கட்டி அமர்ந்த பின்பும்!!!
அடுத்தத் தலைப்பு "காதல்கோட்டை"
-
எப்படி சொல்வது
என் இதயத்திற்கு ..
நீ அன்பு கொள்ளவும்
உன்னிடம் அன்பு கொள்ளவும்
இனி யாரும் இல்லை என்பதை
யாரும் இல்லாத
-
நந்தா அவர்களே இது கவிதை விளையாட்டு ஒருவர் கவிதை எழுதிவிட்டு தலைப்பை விட்டுச்செல்வார் அதனை உள்வாங்கி தலைப்பிற்கு பொருந்துமாறு எழுத வேண்டும்.காதல் கோட்டை என்று தலைப்பு உள்ளது உங்கள் கவிதையில் காதல் என்ற வார்த்தையே வரவில்லை.நான் காதல் கோட்டை என்ற தலைப்பிற்கும் நீங்கள் கொடுத்த யாரும் இல்லாத என்ற தலைபிற்கும் சேர்த்தே எழுதுகிறேன்.
யாரும் இல்லாத இடத்தில் உன்
நினைவாக காதல் கோட்டை
கட்ட நினைத்தேன் முடியவில்லை
பெண்ணே, என்னசெய்வேன்
என்னைப்போலவே பலபேர்
என்னைச்சுற்றி கல்லறையில்!!!
அடுத்தத் தலைப்பு "கல்லறை"
-
விமல் அவர்களே
என் இதயத்திற்கு
என்று முந்தைய தலைப்பு கொடுக்க பட்டிருந்தது ..அதை அழித்து விட்டார்கள் போல
-
என் இதயத்திற்கு தெரியவில்லை
உன் கண்கள்தான் அதன் சாவிஎன்று
உன் இதயத்திற்கு தெரியவில்லை
என் அன்புதான் அதன் கதவுகள் என்று
அன்பு
-
அன்பு என்ற மூன்றெழுத்தில்
அடைத்து
நேசம் என்ற மூன்றெழுத்தில்
நட்பை தந்து
காதல் என்ற மூன்றெழுத்தால்
என்னை களவாடி சென்றவனே
காதல் கற்று தந்த நீ
உன்னை மறக்கும் வித்தை
சொல்லி தர மறந்தது ஏனோ?
காதல்
-
புலி மானை பார்ப்பதும்
பாம்பு எலியை பார்ப்பதும்
பூனை மீனை பார்ப்பதும்
ஆண் பெண்ணை பார்ப்பதும்
காதல் தானாம்
தன் இரை மீது கொண்ட காதல்
இரை
-
பெண்ணே உன் பொழுது போக்கிற்கு
நீ என்னை பழுது பார்த்தாய், புதிய
முகமாய் மாறி, காதலில் வெறி
கொண்டு வேங்கையாய் புறப்பட்ட
நான் இரையானேன் உன் காதலுக்கு
காதலனாய் இல்லை பொழுது போக்காய்!!!
அடுத்தத் தலைப்பு "முகம்"
-
முகம் காண நோக்கின்
அகம் கண்டேனோ இல்லை
அகம் காண நோக்கின்
முகம் கண்டேனோ இல்லை
புறம் நோக்கி உளம் கண்டேன்
என் அகம் நோக்கியது எங்கும்
உன் முகம் என
அகம்
-
அகம் புறம் கூசாமல் சொல்கிறாய்
உன் மேல் காதல் இல்லையென்று
உற்று கவனித்து திருத்தி கொள்கிறேன்
உன்'னுள் காதல் உள்ளது என்று
உன் மேல்
-
காலங்களோடு போராடுகிறேன்
போராட்டம் ஓயவில்லை - முடிவு
என்னும் இடத்தில் வாழ்வா சாவா
எந்த முடிவிலும் நான் உன் மேல்
கொண்ட காதல் தொலையாது
போராடுகிறேன்
-
வெறும் வார்த்தைகளால்
வர்ணனைகள் செய்து
போராடுகின்றேன்
வேரோடு பெயர்க்கும்
உன் பிரிவுகளை தவிர்க்க
பிரிவு
-
பிரிவு என்ற சொல்
இல்லாவிடின்
நினைவெனும் சொல்
மரித்தே போயிருக்குமோ..
பிரிவின் வலி நினைவை
உணர்த்த
வலியோடு நினைவை
நேசிக்கிறேன்..
பிரிவை நிரந்தரமாய்
தந்து
நினைவுத் தீயால் இதயத்தை
சுட்டு விடாதே..
எறியும் தீயில்
என்னுளிருக்கும் உன்னை
கருக விடும் மனம் எனக்கில்லை
என்னுளிருக்கும்
-
என்னுள்ளிருக்கும் உன் நினைவு
தினமும் குளிக்க ஆசைப்படுகிறது
போல, விண்ணிலிருந்து வரும்
மழை என் கண்ணிலும்!!!
அடுத்தத் தலைப்பு "ஆசை"
-
கண்களில் உன்னை வைக்க ஆசை
கண்ணீராக வெளி ஏற ஆசை இல்லை...
வைத்திருக்கிறேன் என்னில் பாதியாக...
உன்னை
கண்ணீராக
-
நீ என்னை பிரிந்த பின்பும்
உன்மேல் நான் கொண்ட
காதல் கரைபுரண்டு ஓடியது,
என் கண்ணீராய்!!!
அடுத்தத் தலைப்பு"நான் கொண்ட காதல்"
-
என்னுள் இருக்கும் உன்னை தொலைக்க
ஒவொரு திருவிழாவாய் தேடுகின்றேன்
எந்த திரிவிழாவிலும் - இதுவரை
நீ தொலைவதர்கான சாத்தியகூறே தென்படவில்லை
நான் கொண்ட காதலும்
நீ வைத்த நேசமும்
தொலையாத திருவிழாக்கள் நீளட்டும்
திருவிழாக்கள்
-
நீ இல்லாத விழா எல்லாம்,
எனக்கு மட்டும்
திருவிழாக்கள் போல இல்லாமல்
வெறும் விழாவாய்
இருளில் தள்ள
வெற்றிடமாய் ஒரு இறுக்கம்
என்னுள்...
வெற்றிடமாய்
-
வெற்றிடமாய் இருந்த என் இதயத்தில்
வெற்றிக்கொடி நாட்டினாய், காதல்
என்ற பெயரில், இன்று கூட்டத்தில்
சென்றாலும் நான் மட்டும் செல்வது
போலவே உணர்கிறேன் ,உனை
என் நினைவு பின் தொடர ,நானும்
அதனை தொடர்ந்து!!!
அடுத்தத் தலைப்பு "நான் மட்டும்"
-
நான் மட்டும். உன் கூட பேசாத நாட்களில் பூமியை
விட்டு நான் மட்டும் தனியே விலகி போய்
விண்வெளியில் மிதக்கிறேன் .
பேசாத நாட்களில்
-
என்னுடன் நீ பேசாத
நாட்களில் எல்லாம்
சூனியமாகி
உன் வாய் மொழி பேச்சுக்காக
காத்திருந்த நாட்கள்
எல்லாம் நரகமாய் தெரிய
பேசாத நாட்கள் எல்லாம்
வாழத நாட்களாய்
என் நாட்குறிப்பில்
நாட்குறிப்பில்
-
அலைகளின் அன்றைய நாட்குறிப்பின்
பதிவேட்டில் நம் பாதம் நனைத்து
பாதச்சுவட்டை பதிவு செய்து
அவரவர் வீடு திரும்பும் வேளையில்
கண்கள் பனித்தோம் விதியின் வினையால்
நாம் பிரியப்பெற்றாலும் அலைகளின் பதிவில் நாம்
இணைந்தே இருப்போம்...!!!!!
பாதச்சுவட்டை
-
உன்னோடு கடற்கரை
மணலில் கை கோர்த்து
நடக்கையில்
உனக்குத் தெரியாமல்
பாத சுவட்டின் மீது
நடந்த போதும்
உனக்கு தெரியாமல்
உன் நிழலை படம் பிடித்து
சேமித்த போதும்
உனக்கே தெரியாமல்
நீ எப்போதாவது
உதிர்க்கும் புன்னகையை
களவாய் ரசிக்கும் போதும்
ஏற்படும் இன்பதிருக்கு
ஈடாக எதுவுமே
முழுமையாக தோன்றவில்லை
இதுவரை
முழுமையாக
-
நான் முழுமையாக படித்துணர்ந்த்
புத்தகமாய், முழுமதியாய்
தோன்றுவாய் அம்மாவாசை அன்று
வானில் வட்டமிட!!!
அடுத்தத் தலைப்பு "அம்மாவாசை"
-
நிலவில்லா வானம்
அமாவாசையாம்
நீ இல்லாஎன் வாழ்வு
நிலவில்லா வானமாய்
இருளில்
இருளில்
-
உலக இருளை விரட்டும் இரு சுடர்களுக்கு கவி ஒளி கொடுத்த ...
புனைப்பெயரிலும் என்னின் கவிதைக்கு வரியாய் வானமாய்
புனைப்பெயரிலும்
-
புனை பெயரிலும்
கவிதை வடிக்க தெரிந்தவனே
நீ எழுதும் கவிதைகள் எல்லாம்
என்னை வந்து சேரும் என்று
தொடுருகிறேன் உன்னை...
என்னை சேர்ந்த கவிதைகளுக்கு
நன்றியாய் தென்றலோடு
வருடி மகிழ்கிறேன்
உன்னை மட்டும் கனவில்
தென்றலோடு
-
பூக்களிடாத ஓசையை உன்இமைகளில் கண்டேன் வானவில்
காணாத வண்ணத்தை உந்தன்விழிகளில் கண்டுகொண்டேன் தென்றலோடு ...
உன்இமைகளில்
-
விழியோடு விழிபேசிடும் மான்விழியாளே..
கண்கவரும் உன் காந்த பார்வைக்கு
நுன்னிமைகளி லிட்ட
கருமைதான் காரணமோ...?
கருமை
-
பெண்கள் மட்டுமல்ல
மேகங்களும்
கருமை என்றால்
அழத்தான் செய்கின்றன!
மட்டுமல்ல
-
சத்தியம் நமக்கு இருக்குமானால் சமயத்தில், பல சாத்தியங்களை ...
ஒரு துறையில் மட்டுமல்ல பல துறைகளில் நாம் நமது ஒன்றுமையைக் ...
பல துறைகளில்
-
கடவுள் ஜாதிகளை படைக்கவில்லை,
மனிதர்களாகிய நாம்தாம் ஜாதி என்ற
பெயரில் பிரிவினை உருவாக்கினோம்,
கீழ்ஜாதி என்று ஒதுக்கப்படும் பலபேர்
பல துறைகளில் கால்தடம் பதித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள், இருப்பது
இருசாதி ஆண்ஜாதி பெண்ஜாதி
என்பதை மட்டும் மனதில் கொண்டு
"ஜாதிகள் இல்லையடி பாப்பா"
என்று பாடிய பாரதியை நினைவு
கூர்வோம்!!!
அடுத்தத் தலைப்பு "கால்தடம்"
-
எங்கோ ஒரு மூலையில் நீ
நீ விட்டு சென்ற கால் தடமாய்
இதயமது அழைக்க முடியாமல்
துடிக்கும் உன் நினைவுகள்...
சொந்தம்
-
எங்கிருந்தோ வந்த இவள்
சொந்தம் கொண்டாடுகிறாள்,
சொந்தங்களுக்கெல்லாம்
சொந்தமாய் மாறி,
யாரோ எனை தட்ட நான்
கண்விழித்தேன், கனவில் கூட
எனை விடாமல் துரத்துகிறாள்
என் காதலை உடைத்தெறிந்த
பின்பும்
சொந்தமாய் அல்ல சோகத்தின்
முழ உருவாய்!!!
அடுத்தத் தலைப்பு "கனவில் கூட"
-
கனவில் கூட நினைத்ததில்லை
நண்பனை எதிரியாய்..
நட்போடு பழகும் காலத்தில்
நயமாய் பேசி
நம்பிக்கை அளித்து
பிரிந்த பின் தூற்றும்
நட்பாய் இருபினும்
அமைதியாய் பார்த்துவருகிறேன்
கோழையாய் அல்ல..
முன்நாள் தோழியாய்..
விருட்சம்
-
மாநகராட்சியில் முறையிட
வேண்டும்
அப்பப்பா எத்தனை
ஆக்கிரமிப்புக்கள்...
இத்தனை அட்டூழியங்களையும்
செய்திட எப்படி
மனது வந்ததடி
உனக்கு
விருட்சமாய் வளர்ந்தென்
மனமுழுதும் ஆக்கிரமித்தாய்
கருணைகொண்டு மற்றவர்க்கும்
சிறிது இடம் கொடு
-----------
கருணை
-
இப்போது நீ என்னைவெறுத்தாலும்தேடிவரும் காலம்
வெகு தொலைவிலில்லைஅப்போது
என் மடை தாண்டிய கண்ணீர்தரை சேரும் முன்னே
உன் கைகொண்டு தாங்கிடுவாய் பெண்ணே
காலம் கடந்த கருணை பயனற்றுப் போயிற்று
விதி அரங்கேற்றியதை அறியாமல்
நீ தேடிவந்த காதலைநானின்று தொலைத்து நிற்கிறேன்
நீ தேடிவந்த
-
நீ தேடி வந்த தருணம்
எங்கோ ஒளிந்திருக்கும்
மனக்குரங்குகளின்
சுயரூபங்கள் வெளிப்படும் நேரம்
விட்டுவிலகிட முயன்று
தோற்று என்னுள்ளே ஒளிந்து
ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும்
கொடிய சாத்தானின்
தரிசனம் கிடைத்திடும் நேரம்
கண்டுக்கொண்டாயா என்னை
இரவின் நிசப்தத்தின்
அகண்ட வெளியில் ஆகாச
மார்க்கமாய் செல்லும்
ஓர் ஆவியில்..
---------------------------------
தருணம்
-
பொய்மையும் வெல்லும் தருணம்
தோல்விகள் பல கண்டாலும்
துவண்டே போய்விடினும்
நம்பிக்கை கை உடைந்து
ஊனமாகி வலுவிழந்து போனாலும்
மௌனம் காத்து
பார்த்துவருகிறேன்
கண் முன் நடக்கும் கேலிக் கூத்தை
மௌனம்
-
தேக்கி வைத்த நீர்த்துளிகள்
கரைபுரண்டு காட்டாறு
வெள்ளமாய்
வெறித்தனமாய் மேலிருந்து
கீழாய் வெகுண்டு ஓடும்
ஓவென இரைச்சலோடு
பள்ளத்தாக்கினில் வீழும்
போது உடைபடும்
அந்நேரத்திய மௌனம்
-----------------
வெள்ளம்
-
வெள்ளமாய் கரைபுரண்டு ஓடிய
என் காதலில் முழுவதும் மூழ்கி
விட்டேன் நீச்சல் தெரியாமல்,
திக்கு முக்காடி பின் கரையை
கடந்தேன், இருந்தும் மூழ்கி
விட்டேன் என் கண்ணீர் வெள்ளத்தில்!!!
அடுத்தத் தலைப்பு "திக்குமுக்காடி"
-
திக்குத் தெரியாமல்
நானும்
திக்குமுக்காடித் தான்
போனேன்
சிக்கித் தவித்த
மனதிற்கும் தெரியவில்லை
புத்தி பேதலித்ததாய்
அறிவும் அறியவில்லை
காலமெனும் சுழலில்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
திக்குமுக்காடித் தான்
போனேன்
----------------
ஓட்டம்
-
காலச் சக்கரம் சுழல, ஓட்டத்தில்
சுழன்றோடிக்கொண்டுதான் இருக்கிறேன்
நானும் வாழ்வின் அர்த்தம் புரியாமல்
புரிந்துகொள்ளும் பொருட்டு,
பின்பாவது நிறுத்தலாம் என்று
சுழல்வதை அல்ல என் அறியாமையை !!!
அடுத்தத் தலைப்பு "அறியாமை"
-
அறிந்ததால் எத்தனை எத்தனை
துன்பங்கள்
பழம் கடித்தான் ஆதாம்
அன்றிலிருந்து அறிவும்
விஞ்ஞானமும் வளர வளர
மனிதம் கொண்ட மதங்ளும்
மனம் கொண்ட மதமும்
பல்கிபெருகி ஆறாய்
ஒடுகின்றன...
அறியாமையும் ஒருவித
சுகம்தானோ
-------------------
மனிதம்
-
மனதில் மனிதம் எனும்
மரம் நடுவோம்
இனி வருங்காலதிலாவது
மனிதம் வளரட்டும்
ஆல் போல் தழைத்து
அருகு போல் வேரோடி
பனை போல பயன் தரட்டும்
நடுவோம்
-
தீராத துன்பங்கள் தீர
தீவினை செய்யா திரு ஓம்
வேண்டாத விளையாட்டு
விட்டு விலகிடு ஓம்
பாயாத நீர்தனை நீ
அடர்மழையால் கொணர்ந்திடு ஓம்
செம்மையாய் தமிழகம் வாழ
ஆளுக்கொரு மரம்நடு ஓம்..!! :o :o
-----------------------
விளையாட்டு
-
கவிதை விளையாட்டு
கவிதையோடு விளையாட்டு
கவிதரும் கவிகளுக்கு
கவியின் வாழ்த்து..
எலோருக்கும் வாய்பதில்லை
இவ்விளையாட்டினை ஆட
சொல்லோடு விளையாடுவோம்
தமிழ்ச் சொல்லை அழகாய்
கையாளுவோம்
சொல்லோடு
-
வில்லோடு விளையாடும்
வில்லாளனை போல தமிழ்
சொல்லோடு விளையாடும்
கவிதை விளையாட்டுக்கு
கொடிகாட்டிய கவிக்கு
கவியின் சார்பாக வாழ்த்தாம்!!!
அடுத்தத் தலைப்பு "வில்லாளன்"
-
வில்லோடு ஓர் வில்லாளன்
வருவானென்று ஒவொரு பெண்ணும்
காத்திருந்ததால்
இன்று அசோகவனத்தில்
பல மாதவிகள்
மாதவிகள்
-
வில்லாளன் வருவானென்று
பல அரக்கியர் புடைசூழ
காத்திருந்த மாதவியை,
வந்தும் நொடிப்பொழுதில்
கொன்று விட்டான், தீயில்
விழ பூமாலையாய்
தோன்றினால், வரலாற்றில்
வல்லமை பேசும் அவனும்
இப்படியா!!!
அடுத்தத் தலைப்பு "பூமாலை"
-
நான் தொடுக்கும்
பூமாலைகள் யாவும்
சூடும் வாய்ப்பு
எனகில்லாமல் போனாலும்
என் கவிதை பூச்சரம்
உனக்காக மட்டுமே
தொடுகிறேன்..
உன் விழிகளுக்கு படைக்காமல்
ஒளித்து வருகிறேன்
நீ என்னை சேரும் நாள் வருகையில்
தனிமையில்
கண்பார்த்து படித்து
உன்னை ரசிக்க வைக்க ;)
சிந்தனை
-
சிந்தனைகளை சிதரவிட்டால்
சிதறுவது சில்லு சில்லாய்
இதயம்தான் ..
இழப்புகள் இரும்பைபோல் கனக்கும்
சில்லு சில்லாய்
-
கனக்கும் இதயமதை
சில்லு சில்லாய்
உடைத்தெறிவது
நேசித்த என்னை
நீ ஏற்க மறுப்பது தான்..
ஏக்கம் தோய்ந்த கண்கள்
தேடுவது உன் ஒருவனையே
உடைத்தெறிவது
-
நீ உடைத்தெறிவது என்
காதலை மட்டுமல்ல, நான்
உன்னை குடிவைத்த என்
இதயத்தையும்தான்!!!
அடுத்தத் தலைப்பு "என் இதயம்"
-
துடிக்கும் என் இதயம்
துடிக்க மறந்தாலும்
மரித்தே போகும் நாள்
கண்ணெதிரே காட்சியாய்
நின்றாலும்
அப்போதும்
கடைசி பதிவாய்
என்னுள் நிலைகொண்டிருக்கும்
உருவம் நீ மட்டுமே
உருவம் நீ
-
எத்தனையோ உருவங்களை
நான் காண்கிறேன் தினமும்,
அவையனைத்தும் நிற்ப்பதில்லை
என் மனதில், நின்ற ஒரே உருவம்
நீதான், உருவமாக அல்ல, என்
உயிராக!!!
அடுத்தத் தலைப்பு "என் மனது"
-
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழியாத காதலை
அளவில்லாமல் தந்து
அழிக்க முடியாத உருவமாய்
அழகாய் என் மனதில் பதிந்தவனே
ஆசைகள் பல இருப்பினும்
அர்த்தம் புரியாத கோபங்களும்
அத்தனையும் சொல்லிவிட துடிக்கும்
அபலை இவள் மனதை
அறிந்தும் அறியாமல்
அனுதினமும் கொல்லும் நாடகம் ஏனோ
அனுதினமும்
-
களவும் கற்று மற என்பது பழமொழி
கற்று மறந்தால் பொருந்தும்
நீயோ என்னை களவாடுகிறாய்
அனுதினமும்.
யாரிடம் சொல்வேன்?
களவாடுகிறாய்
-
களவாடுகிறாய் என்று அறிந்தே
பறிகொடுத்தேன் என் மனதை
உன்னிடத்தில் தொலைந்து போவதும்
அழகாய் போகிறது எனக்கு மட்டும்
தொலைந்து
-
என் கவிதையே
நான் தொலைந்து போன நிமிடங்களில்
நீ வந்தாய்...
என் கவிதையை என்னிடமிருந்து
எடுத்துச்சென்றதும் நீ தானே...!
என்னிடமிருந்து
-
என்னை எண்ணிப்பார்க்க
என்னிடமிருந்து என்ன
எடுத்துக் கொள்வது
எண்ணத்தை எண்ண முடிந்தால்
எண்ணாமல் இருப்பதும்
எண்ணிக்கையாகி விடுமோ
எந்தன் எண்ணக் கை :o
எண்ணம்
-
எண்ணிய எண்ணம் ஈடேற
எண்ணினால் மட்டும் போதாது,
முயற்சியை முள்மீது நடந்தாலும்
கைவிடாது, உன்னால் முடிந்த
உழைப்பை எண்ணிய எண்ணத்திற்கு
உறுதுணையாய் கொடு, எதிர்பாரா
எண்ணம் கூட ஈடேறும்!!!
அடுத்தத் தலைப்பு "எதிர்பாரா"
-
எதிர்பார்ப்பு என்று சொல்லும் போதே..ஏமாற்றம் எட்டிப்பார்கிறது.
ஏமாற்றம் மனிதனை முட்டாளுக்கும் கண்கட்டி வித்தை
ஏமாற்றம்
-
விரல் பிடித்து என்னுடன் வருவாய்
என்று தான் நினைத்தேன்……..
நீ இப்படி விலகிச் செல்வாய் என்று
தெரிந்திருந்தால் நான் ஏமாற்றம்
ஆகி இருக்கமாட்டேன்
வருவாய்
-
உள்ளத்தில் பூஞ்சாரல் தூவிட வைப்பது நீயும்....
உன் நினைவுகளும் மட்டும்தான்....
எப்போது வருவாய் காத்திருக்கிறேன் உனக்காக
காத்திருக்கிறேன்
-
காத்திருக்கிறேன்
மாற்றங்கள் பல
ஏமாற்றங்கள் பல
நம்பிக்கை மட்டுமே
துணையாக கொண்டு
தீராத நேசத்துடன்
திகட்டாத காதலை
உனக்காக உனக்காக மட்டுமே
தந்துவிட காத்திருக்கிறேன்
திகட்டாத
-
அன்று திட்டியவை கூட
இன்று திகட்டியதே
தாறுமாறாக ஓடி மோதி
நிற்கும் வண்டி போல
வேகத்தடை உடைத்து
சீறிடும் மனதிற்கு
திகட்டாத இன்பம்
உன்கடுஞ்சொல் அல்ல
மென்சொல்லே..!!
----------
வேகத்தடை
-
என் காதலால் உண்டான
வேகதடையால் உன்னால்
விவேகமாக யோசிக்க
முடியவில்லை
உண்டான
-
நீ என் மனதை திருடிய போது உண்டான மகிழ்ச்சி...
மணி பர்சை திருடிய போது காணமல் போய்விட்டது
திருடிய
-
என் இதயத்தை நீ திருடிய போதே
தொலைந்துவிட்டேன் பெண்ணே
உன்னுள், நினைவறிந்து என்னை
தேடிக்கொண்டிருக்கிறேன் நீ
எனை பிரிந்து சென்ற பின்பும்
உன் தனிமையின் நினைவில்!!!
அடுத்தத் தலைப்பு "தனிமை"
-
விட்டொழிக்கப் பார்க்கிறேன்
காணவியலா காட்சியாய்
என்றும் தொடர்கிறதென்னை
மனதினை கொள்ளும் பயம்
கூக்குரலிடும் அபயம்
சிதறிய எண்ணச் சில்லுகளாய்
தெறித்து ஓடிடாதா
எனை ஏங்கவைத்து விட்டது
இந்தத் தனிமை
-------------------
அபயம்
-
இலையுதிர்கால உக்கிரம் போல்
அபயம் கோரும் உன் துடிப்புகள்
அடைக்கலம் கோரும்போது
எங்கிருந்ததோ கருணையின் மனச்சாட்சி
துடிப்புகள்
-
இதய துடிப்புகள். என் ஓய்வான பொழுதுகளை
ஓசையுள்ளதாக்கி கொண்டிருக்கும்
இதய ஒலிகளின் பிரதிபலிப்புக்கள்.
பிரதிபலிப்புக்கள்.
-
பார்க்கும் இடமெல்லாம்
உன் உருவம்
காணும் நிழலும்
உனது நிழலாய்
கண்ணாடியில் உன் பிரதிபலிப்பு
சிமிட்டும் நேரத்தில் வந்து
மறைந்தாலும்
என்னில் உன் பிரதிபலிப்பு
நீங்காத உருவமாய் நெஞ்சத்தில்
பிறை
-
திரும்பிப்பார்க்க முயல்கிறாள்
திணறிக்கொண்டு இயங்குகிறது என் இதயத்துடிப்பு.
கார்மேகம் ஆட்கொண்ட அக்காரிருள் பொழுதில்
பிறை ஒன்றினைக் கண்டேன்
நிறைவாக பார்த்த அவள் விழிகளில்.
நிறைவாக
-
சந்தோஷம் இருக்கும்
இடத்தில் வாழ நினைப்பதைவிட
நிறைவாக நீ இருக்கும் இடத்தில்
வாழும் வாழ்கையில் நிறைவு இருக்கும்
சந்தோஷம்
-
நட்புக் கவிதைகள். சோகம் தனிமையில் கூட வரும்..
ஆனால் சந்தோஷம் நண்பர்பளுடன் இருக்கும்
போது மட்டுமே வரும்.உன்னை பார்க்கும் ...
தனிமையில்
-
உன்னை கண்ட நாள் முதல்
இழந்தேன் நிம்மதியை
உன்னோடு தனிமையில் பேசி
நாட்களை தொலைத்தேன்
உன்னோடு
-
பன்னூறு ஆண்டு காலம் உன்னோடு நான் வாழ வேண்டும்.
ஆசை உயிர்த்த நேரம் உன்னோடு நான் குலவ வேண்டும்.
அழியாது கொண்ட காமம் உன்னோடு நான் கலவ வேண்டும்.
எதிர் வரும் இரவெல்லாம் உன்னோடு நான் துயில வேண்டும்.
அன்புக்கு குழந்தை பெற்று உன்னோடு நான் சிறக்க வேண்டும்.
பண்புடனே சேய்கள் வளர்த்து உன்னோடு நான் உயர வேண்டும்.
புகழோடு தலைமுறை கண்டு உன்னோடு நான் துளிர வேண்டும்.
வாழ்வோடு நன்னயம் செய்து உன்னோடு நான் மிளிர வேண்டும்.
செழிப்போடு வாழ்க்கை கொண்டு உன்னோடு நான் மகிழ வேண்டும்.
தென்னாடு போற்ற வாழ்ந்து உன்னோடு நான் ... சாக வேண்டும்.
என்றே என் சிந்தைப்படி என்னவளோடு நான் வாழ வேண்டும்.
வேண்டும்
-
என் காதலியே உன்னை மறவா
நினைவு வேண்டும், என் உடல்
தீயில் கருகி கரிக்கட்டை ஆகும்
வரை!!!
அடுத்தத் தலைப்பு "என் காதலி"
-
உன் கவிதைகளில் நிறைந்திருக்கும்
உன் காதலி யாரடா? என்ற
எங்கோ மறைந்திருக்கும்
(என் காதலி)உன் காதலியை
நினைவு படுத்துகிறாய்
நிறைந்திருக்கும்
-
அனைத்திலும் நிறைந்திருக்கிறது எனக்கு மட்டும் கேட்கும்
அதன் உறுமலோசை. மனதை உருக்கும் ஒரு காவியத்தை எழுதத் தூண்டுகிறது ...
அனைத்திலு
-
அனைத்திலும் அன்போடு இரு,
அறிவோடு இரு, ஆதரவாய் இரு
வெற்றியை சுவைக்கப்பார் ,
வேண்டாதவைகளை ஒதுக்கப்பார்,
தானாகவே மாறும் நீ செல்லும்
வழி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாய்!!!
அடுத்த தலைப்பு "வழிகாட்டி"
-
நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
நட்பு மூலமாக
குறும்புகள்
-
என்னிடம் சண்டை போட உன்னை விட யாருக்கு
உரிமை இருக்கு என் மீது கோவ பட
உன்னை விட வேறு யாரையும்
அனுமதிக்காது என் குறும்புகள்.
சண்டை போட
-
சண்டை போடா துடிக்கிறது என்
இதயம் உன் நீங்கா நினைவுகளுடன்
அருகில் நீயில்லா நேரத்தில் !!!
அடுத்தத் தலைப்பு "நீங்கா நினைவு"
-
நீங்கா நினைவு காலம் கடந்து செல்லும்
என் வாழ்கையில் அவள் நினைவு மட்டும் என்னை
விட்டு செல்வது இல்லை காரணம் அவள்
என் உயிர் ஆகிவிட்டால் நான் உடம்பாகிவிட்டேன்
வாழ்கையில்
-
வாழ்க்கையில் முன்னேரிடலாமென
வாழ்வின் இறுதி வரை போராடியும்
வெற்றி பாதை அடைந்து
வாழ்வை தொலைத்தவனுக்கு
வாழ்க்கை ஏது
வெற்றி
-
கோழைகளை வீழ்த்தி
கூவும் வெறியனுக்கு தெரியாது
அவன் கொண்ட வெற்றி
நிரந்தரமில்லைஎன்று ..
கூறு போட ஒருவன் சிக்கினால்
நிலைமை வெற்றிடமாகிவிடும்
நிரந்தரமில்லை
-
பெண்ணே நம் முன்னோர் தேடிய
சுதந்திரத்தை நீ இப்பொழுதும்
தேடிக்கொண்டிருக்கிறாய்
இரவானாலும் பகலானும் வீதியில
சுதந்திரமாய் நடமாட
நிரந்திரமில்லா இவ்வுலகில்!!!
அடுத்தத் தலைப்பு "சுதந்திரம்"
-
சதிக்கு கால் முளைத்து சாதி ஆனதோ
மதத்திற்கு மதம் பிடித்து மரணம் ஆனதோ
இதுவா சுதந்திரம்?
அன்பு ஒன்று தான் நம் பிணைப்பு..
அதுவும் Forum இல் நாம் இணையும் இணைப்பு
சுடுகாடு செல்லும் வரை சுதந்திரமான
நட்பு
அன்பு
-
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
எழுதிப்பார்த்தான் வெறும் தாளில்
சிரித்த முகத்துடன் சிந்தைமுழுதும்
இவன்நினைவாய் முழு உருவாய்
இவன் வரவை எதிர்நோக்கி
காத்திருக்கிறாள் முதியோர் இல்லத்தில்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்
எழுதிப்பார்த்தான் வெற்றுத் தாளில்
-----------
இல்லம்
-
உறவுகள் ஆயிரமிருப்பினும்
என் சோகம், துட்கம்
சந்தோஷம் இவைகளை
தனக்குள் வாங்கி அன்பை
மட்டும் அள்ளி வழங்கும்
அன்பின் இல்லமாக என்னை
கருவில் சுமந்து முழு
உருவாய் வளர்த்த என்
அம்மா மட்டுமே!!!
அடுத்தத் தலைப்பு "துட்கம்"
-
அன்பின் இலக்கணமாய்
அன்னையர் இருக்க
அணங்கு ஒருவளின்
அழகு பேச்சில் மதிமயங்கி
அகிலத்தையே தொலைத்ததாய்
அனுதிணமும் துக்கத்தில் இருக்கும்
அன்பர்களை என்செய்வது...?
அன்பு
-
அன்பு கவிதை மடல் காதலின் வலி பிரிந்திருக்கும் போதுதான் தெரியும்
நீ உன் நண்பர்களுடன் இருபதால் காதல் வலி புரியாமல்
இருக்கலாம் . தனிமயில் இருந்துபார் வலி புரியும்
காதல் வலி
-
எத்தனை முறை கண்ணீர் சிந்திருப்பேன்
ஆனாலும், ஏன் என் கண்கள்
உன்னைக் காணவே காத்திருக்கிறது?
நீ கொடுக்கும் காதல் வலி தான்
பரிசா?
சிந்திருப்பேன்
-
கண்ணீர் சிந்திருப்பேன் ஆனாலும், ஏன் என் கண்கள்
உன்னைக் காணவே காத்திருக்கிறது
எத்தனை முறை காயம் பட்டிருப்பேன் ...
உன்னைக் காணவே
-
கண்ணை திறக்கும் போதுதான்
தெரிந்தது,என் கருவிழியில் காதல்
மயக்கத்தில் திளைத்திருக்கும்
உன்னை காணவே என்பதற்காக!!!
அடுத்தத் தலைப்பு "கருவிழி"
-
கருவிழி. உன் கண் பசிக்கு இரையாகிறேன்
உன் கண்ணை பார்க்கும் உன் கருவிழியில்
என் முகவரியை எப்படி கண்டுபிடிப்பது
முகவரியை
-
உன் கருணை விழிகளில்
என் முகவரியை கண்டேன்
உன் முகவரிகளில்
என் உலகம் காண தொடங்கினேன்
உன் பாசமிகு நெஞ்சில் காதலை உணர்ந்தேன்
காதலை
-
ஆழமான உணர்வுகளையும் உண்மையான அன்பினையும்
வெளிப்படுத்த முடியாது என சொல்லக் கேட்டிருக்கின்றேன்
என் காதலை சொல்ல வார்த்தைகள் அருகிப்போனதற்கு
இதுதான் காரணமோ!
உண்மையான அன்பினையும்
-
ஒவ்வொரு இரவும் நீ வந்து
தாலாட்டினாலும் ஒரு நொடியில்
என் மனதை உடைத்தவன் - நீ
உண்மையான அன்பினையும்
உனக்காக உருகியது என்னிதயம்
காலம் எல்லாம் காத்திருப்பேன்
ஒவ்வொரு
-
ஒவ்வொரு துளி கண்ணீரிலும்
உனக்கான அன்பு ஒளிந்திருக்கும்
ரகசியம் அறியத் தானா
என்னை இன்னும் சித்திரவதை
செய்கிறாய்...??
ஒரு புன்னகைப்பூ தந்துவிடு
விழுந்திடுமே ஆனந்தக்கண்ணீர்..
-------------------------------------
புன்னகைப்பூ.
-
உன் இதழ் விரித்த முள் விரிப்பிலே
அவிழ்ந்த என் இதய முடிப்பு
மூச்சூடும் புன்னகைப்பூ
மொட்டவிழும் வேளையிலே
அறியாமல் எனக்கு முள் சிரிப்பு
வேளையிலே
-
அந்திசாயும் ஒரு மாலையிலே,
நாம் காதல் புரிந்த வேளையிலே,
முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
நினைத்துக்கூட பார்த்ததில்லை,
உன்னை முதலாய்
சந்தித்த வேளையிலே.
நாம் காதல்
-
நான் மூங்கிலாக நீ காற்றாக
நம் காதல் கவிதை
ஸ்வரங்களாக
மறந்தாலும் மறுத்தாலும்
சங்கீதமாகவே நாம்...!காதல்..
மறந்தாலும்
-
விடைதெரியாமல் போன என் வாழ்க்கைக்கு,
காதலை தந்து விடைகொடுத்தாய்..!
கண்ணீரில் கரைந்த என் இரவுகள்
கனவுகளில் நனைகிறது..!
விழியில் நனைந்த என் விடியல்கள்
அழகாகவே விடிகிறது..!
அன்பே.உன்னாலே உன்னாலே..!
வாழ்வின் அர்த்தம் தேடித்தந்தவளே,
உன்னை மறப்பேனோ..
மறந்தாலும் இருப்பேனோ..!
கண்ணீரில்
-
அன்பே உன் நினைவுகள்
என் கண்ணீரில் இன்றும்
படகாய் பயணிக்கிறது
நான் என்ன செய்ய......
இப்படிக்கு........அன்பானவள்
படகாய்
-
கடலாய் உன் ஞாபகம்.. அதில் தத்தளிக்கும்
படகாய் மிதக்கிறேன்
உன்னுள் இன்னும் மூழ்க முடியாமல்.
உன் ஞாபகம்
-
தமிழ் நாட்டிற்க்கு தண்ணீர்
தரமாட்டேன் என்று கேரளா
சிறு பிள்ளையாய் அடம் பிடிக்கிறது,
மறந்து விட்டார்கள் போல,
உன் ஞாபகம் எனை பிடித்த
ஏவலாய் பின் தொடர்ந்து அட்சய
பாத்திரமாய் தமிழ்நாட்டில்
நானிருப்பதை!!!
அடுத்தத் தலைப்பு "ஏவல்"
-
காதல்,ஏவல்,உடல்
பாடல்,ஊடல்,கூடல்
மோதல் எல்லாம் கானல்...
ஆனால்
நட்பு மட்டும்...!!
கானல்
-
பாலைவனப்பயணம் ஒன்று மேற்கொண்டேன்
அங்கு நீ கானல் நீராய் இருப்பது கண்டு ...
பயணத்தின் போது எனக்கு தெரியாது
கானல் நீரும் காணாமல் போகும் என்று ...
காணாமல்
-
கண்களில் ஆரம்பித்த காதல்
காலமெல்லாம் இருந்தது -
கம்ப்யூட்டரில் ஆரம்பித்த பாசம் -
காணாமல் போனது நேசம்
கண்களில்
-
உன் கண்களில் தெரியும் என் பிம்பம் என்னைச்
சந்திக்கும் கண்களில்எல்லாம் தேடுகிறேன்
எனது பிம்பத்தை.
தேடுகிறேன்
-
தேடுகிறேன் நான் உன்னை!
என் பயணம் பகலில் இருந்து இரவுகளுக்குள் நீழுகிறது
யாரும் உனக்கு என்னை ஞாபகப்படுத்த கூடாதென
தினமும் ஞாபகமாய் வேண்டிக்கொள்கிறேன்
தினமும்
-
தினமும் உன் ஞாபகம்
நீ இல்லாமல் வாழ்நாள் முழுக்க என்னால்
ஆந்த வேதனையை அனுபவிக்க முடியாது
நீ இல்லாமல்
-
நீ இல்லாமல்
வாழத்தெரியாத எனக்கு....
நீ இருந்தும் இல்லாமல்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்...
தினமும்
வாழ்ந்து
-
என் காதல் வாழ்ந்து வாழும் உன்னோடு மட்டும்"
என்னவோ தெரியவில்லை இப்பொழுத்தெல்லாம்
நான் சொல்லும் விஷயத்தை கேட்க மறுக்கிறது
என் இதயம் எல்லாம் காதல் செய்த மாயம் !!!
-
விதை விதைத்து நீரூற்றி என்ன
பயன், நிழல் தரும் என்றா,
என்றாவது ஒருநாள் நறுக்கத்தான்
படுகின்றன, விதைப்பதை விட
நடுவோம் மரங்களை அல்ல
நம் மனதில் அன்பு எனும்
மகத்துவத்தை!!!
அடுத்தத் தலைப்பு "அன்பு"
-
தேடுகின்றேன்
எங்கிருக்கிறாய்
எதுவாய் இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய்
எப்பொழுது வருவாய்
என்னவாய் இருகிறாய்
அன்பு எனும் உருவமாய்
அண்டமெல்லாம் இருப்பதை சொல்லாதே
அன்பு என்பதே ஆலகால விஷம்
அழித்துவிடும் அகிலத்தையே
அண்டமெல்லாம்
-
அறுசுவை கூடும் ஆனந்த வாழ்வின்
நந்த வனமாக கிராமங்கள்!
கிணற்றுக்குள் தவளையாக மிதந்த
கதையை மறக்க முடியுமா!
குளத்து மீனின் சுவையைதான்
மீஞ்ச முடியுமா!
கருவேலங்காட்டில் சுள்ளி பொறுக்கிய
நாட்கள்தான் திரும்புமா!
எண்ணிலடங்காதவைகள் இன்னும் பல!
அண்டமெல்லாம் தேடினாலும்
கிடைக்காத இவையனைத்தும் இன்று
மட்டுமல்ல என்றும் இலவசம்தான்
கிராமங்களில்!!!
அடுத்தத் தலைப்பு "இலவசம்"
-
இலவசங்கள் என்பவை நீ ஏமாறுவதற்கும் .மற்றவர்களை ஏமாற்றுவதற்கு என உருவாக்கப்பட்ட மாயை....
அடுத்தத் தலைப்பு : மாயை
-
மாயை போல மறைந்து சென்றாய் பெண்ணே
மறையாத உன் நினைவுகளை எனக்குள் விடுத்து!!!
அடுத்தத் தலைப்பு "உன் நினைவு"
-
உன் நினைவு.காதல் என்ற வார்த்தை என் காதில் விழும்
போது எல்லாம் என் இதயம் என்னையும் அறியாமல்
உன்னை நினைக்கிறது.
அறியாமல்
-
மறையாத நினைவுகளை தந்தவள்
யாரும் அறியாமல் மனதில் வந்தவள்
யாருக்கும் அறிவிக்காமலே
செல்வதுதான் முறைஎன சென்றாலோ..............?
நினைவுகளை
-
உன்னையும் உன் நினைவுகளையும்...
ஒட்டி நின்று உறவாடிய நீ என்னை
விட்டு எட்டி போனது நான் எதிர்பாராததே என்றாலும்.
உறவாடிய
-
உன்னுடன் நான் உறவாடிய
பொழுதுகள், மீண்டும் பொலிவுறும்
பொருட்டு, நீ களவாடிய என்
இதயத்தை காணிக்கையாக்குவேன்
உன் காலடிக்கு காதலனாய் அல்ல
உன் கணவனாய்!!!
அடுத்தத் தலைப்பு "உன் கணவன்"
-
உன் கணவன் நல்ல உள்ளம் படைத்தவன்.
என் கல்லறை தேடி வருகிறால் என் காதலி
அவள் கணவனுடன் என்னைக்கான அவள் என்மேல் ...
உள்ளம்
-
அவள் உள்ளம் கவர்ந்தால்தான்
காதலனாகவும் முடியும்
கணவனாகவும் முடியும்
உள்ளத்தில் மனகோட்டைகட்டி
மனப்பால் குடித்தாலும் முடியாது
அவள் மனமிரங்கும்வரை.....!!
மனப்பால்
-
உழைப்பால் உயர்ந்த உன் மேல் வைத்த
மதிப்பால் என் வாழ்வு உன்னோடுதான் என்று
மனப்பால் குடித்து வந்தேன் தினம் தினம்....
உன்பால் நான் வைத்த காதல்
என் வாழ்வு
-
எனக்கே உரித்தான் என் வாழ்வில்
எல்லையை தாண்டியவள்,
உள்ளம்கவர்ந்த பின்பே காதல்
செய்தேன் என்று உரைத்தாள்,
மனப்பால் குடிக்கவில்லை
நிஜப்பாலைதான் குடித்தேன்,
மானம்கேட்டவள் எத்தனை
உள்ளங்களை கவர்ந்திருப்பாளோ,
மாயை போல மறைந்தால் மீதமுள்ள
உள்ளங்களை கவர!!!
அடுத்தத் தலைப்பு "உள்ளம்கவர்ந்த"
-
என் உள்ளம் கவர்ந்துசென்ற உருவமில்லா ஸ்னேகிதியே!
எங்கே நீ போய்விட்டாய் ஏன் என்னை அழவிட்டாய்உள்ளம் கவர்ந்த கள்ளியை
உள்ளத்தில் வைத்து கண்ணா மூச்சி ஆட்டம் !
கண்ணில் பூத்த காதலை கனவுக்குள் கட்டி போடுவது ஏனோ
கண்ணா மூச்சி
-
உலகை ஆளும் சக்தி எல்லாம்
உனக்கும் எனக்கும் பாதி பாதி.
உள்ளம் கவர்ந்த காதலனாய்...
காலமெல்லாம் நீ வேண்டும்.
பாதி பாதி
-
காதல் வளர கண்களை மூடி உதட்டில் முத்தம் கொடுங்க ...
எந்த ஒரு செயலுமே தொடக்கம் சரியாக இருந்தால்
பாதி வெற்றி பெற்றதற்கு சமம்
வெற்றி
-
உள்ளம் கவர்ந்தது பொய்யா
உண்மையா என்பதை கணிதிராதபடி
உன் கண்ணை மறைத்து காதல்
உண்மை உறவுகளைக்கூட
உதாசீனபடுதும் இந்த உணர்வை ஒழித்து
உன் நினைவிற்கு திரும்பு
வெற்றி நிச்சயம் ......!!
உதாசீன
-
காதல் மென்மையானது உண்மை
எது பொய் எதுவென்று கணிராதபடி
காய்க்கும் கனியது, என் கண்ணை
மறைத்தாலும் எனகென்று ஆண்டவன்
கொடுத்த அன்னையால் படைக்கப்பட்ட
குணாதிசயங்கள் குலம்தழைத்துக்
கொண்டுதான் இருக்கின்றன என்னுள்,
உதசினபடுத்தாதே உதிர்ந்து போவாய்
என்று போதித்திருக்கிறாள், வலியை
அறிந்தவன் நான் பிறரால் உதாசீனம்
படுத்தப்பட்டேனே தவிர என்னால்
யாரும் படமாட்டார்கள் குலம்
தழைக்கும் குணத்தால்!!!
அடுத்தத் தலைப்பு "குலம்"
-
ஆயிரம் ஊசிகள் விழிகளில் வீழ்ந்தாலும்
ஆண்மகன் வீழ்வதில்லை
ஆயர் குலம் பெண்ணொருத்தி கடைக்கண் பட்டால்
ஆண்டவனும் விழுந்திடுவான்
விழுந்திடுவான்
-
தடங்கல்களை கடந்து வந்தால்
மட்டும் போதுமா, வாழ்க்கைத்
தடங்களையும் கடக்க வேண்டும்,
தோல்வியை கண்டு துவளாதே,
எதிர்க்கும் பகைவர்கூட்டம் கண்டு
பயப்படாதே, விடிவெள்ளியாய்
விழித்தெழு விழுந்திடுவான் பகைவன்,
பகலவனாய் ஜொலித்திடு கருமேகம்
போல கலைந்திடுவான், பின்
தோல்வியென்ன வேல்வியிளிட்டாலும்
வெளிப்படுவாய் வெற்றியின்
அடையாளமாய்!!!
அடுத்தத் தலைப்பு "விடிவெள்ளி"
-
நீ பிரிந்த பொழுது வருந்தி அழுதேன்
மறைந்த பொழுது என்னை இழந்தேன்
விடிவெள்ளி நீ வருவாயென
நீ பிரிந்த
-
நீ பிரிந்த நொடிகளில் உணர்ந்தேன்
நினைவுகளின் பிடியில்
நான் ஆயுள் கைதி என்பதை
ஆயுள் கைதி
-
என்னை கண்களால் கைது செய்தவனே
உன்னை என்னிடம் ஆயுள் கைதியாக
மாற்றிவிட்டேன் பார்த்தாயா
கண்களால்
-
கண்களால் பார்வைகளை பரிமாற,
இதயங்ளால் உணர்சிகளை பரிமாறி,
கைகள் நெருடலை பகிர்ந்துக் கொள்ள,
காதல் தனக்குளே பகிர்ந்துக்கொள்ளும்.
இது தான் காதலா
பார்வைகளை
-
நீ அன்போடு பார்த்த பார்வைகளும்
நீ கோபத்தோடு பார்த்த பார்வைகளும்
ரசிக்கும் ரசிகன் நான்
இன்று நீ இல்லை
ஆனாலும் உன் பார்வைகளை
தேடுகிறேன்
நீ எனக்கு கொடுத்து சென்ற
உன் புகைப்படத்தில்
தேடுகிறேன்
-
தேடுகிறேன் உன்னை நேரிலல்ல
என் நினைவுகளில், நீ வருவாயென
வர முடியா இடத்திலிருந்து
அடுத்தத் தலைப்பு "நீ வருவாயென"
-
பெண்ணே உன்னை கண்டேன் ,
கவிதைகள் பல எழுதினேன் ,
என் மன கதவையும் ஒடைதேன்
நீ வருவாயென
கண்டேன்
-
இமை திறக்க காதல் கண்டேன் உன்
இதழ் திறக்க இனிமை கண்டேன் உன்
மனம் திறக்க என்னைக் கண்டேன் நான்
எனை மறக்க உன்னைக் கண்டேன்.
எனை மறக்க
-
எனை மறக்க முடிந்த உனக்கு
உன் நினைவுகளை மட்டும்
எடுத்துச் செல்ல முடியவில்லையா,
கரை தெரியாமல் பயணிக்கிறது
நான் கல்லறையை கடந்த பின்னும்!!!
அடுத்தத் தலைப்பு "கல்லறை"
-
தினம் ஒரு பூ கொடுத்தேன் என் காதலனுக்காக
அவன் மொத்தமாக திருப்பி கொடுத்தான்
என் கல்லறைக்காக
காதலனுக்காக.
-
வாழ்ந்த நாளெல்லாம்
காதல் காதலுனுக்காக
இனி வாழும் நாளெல்லாம்
காதல் கண்ணீருக்காக
கண்ணீருக்காக
-
பணத்திற்காக பாசம் காட்டும் பெண்களுக்கு மத்தியில்!
பொற்றோரின் கண்ணீருக்காக தனது காதலை...
கண்ணீருக்குள் புதைத்த எனது காதலியே
என்றும் மென்மையானவள்...
மென்மையானவள்
-
துருவம் போல் விலகி
துவள வைக்கும்
துணையே
துவண்டு விடுவேன்
தூது சொல்
நான் மென்மையானவள்
தூது சொல்
-
தூது சொல் நிலவே கொஞ்சம் நில்லு
எங்கிருக்கிறான் அந்த என்னவன்
இருகின்றானா அந்த இம்சைக்காரன்
அல்லது இன்னும் அவனியில்
பிறபெடுக்க வில்லையா
இம்சைக்காரன்
-
பார்த்து பழகவில்லை,
பார்க்காமலேயே தொடர்ந்தது நட்பு,
புரியவில்லை நட்பா காதலா என்று,
மெல்ல புரிய ஆரம்பித்தது,கனவிலும்
நினைவிலும் இம்சைக்காரனாய் எனை
இம்சிக்கும் போதெல்லாம்!!!
அடுத்தத் தலைப்பு "நட்பா காதலா"
-
தினம் ஒரு பெண்ணுடன்
சிரித்து விளையாடும்
கண்ணனுக்கே தெரியவில்லை
நட்பா காதலா ...?
ஒரு வேளை
காமமாய் இருக்கலாமோ ..?
வேளை
-
என் புத்தகத்தின் வெள்ளை பக்கங்கள்
எழுத்துக்களாக மாறுகின்றன !!
உன்னை நினைக்கும் வேளையில் !!!
நினைக்கும்
-
உன்னை நான் மறக்க நினைக்கும்
போது எல்லாம்
என் மரணம் தான் என்
கண் முன் வந்து
செல்கிறது , ஏன்
நீ என் உயிரோ?
மரணம்
-
மனிதன் மறந்தாலும் மரணம் என்றும் மறப்பதில்லை
மனிதன் ஒளிந்தாலும் ... கவிதை. உன்னைப் பார்த்த
நாள்முதல். ஆசைகள் கோடி மனதில் ...
உன்னைப் பார்த்த
-
எந்த ஆடவனை பார்த்தாலும்
காதலிக்கத்தான் ஆசை வருகிறது
ஆனால்
உன்னை பார்தால் மட்டுமே
கவிதை எழுத ஆசை வருகிறது...
பார்த்தாலும்
-
உன்னை எப்பொழுது பார்த்தாலும்
நீ நீயாகவே இருக்கிறாய்
உன்னை எப்பொழுதாவது
பார்த்துவிட்டால் நான்
நானாகவே இருப்பதில்லை...
இருப்பதில்லை.
-
உன்னை காணும் வேளைகளில்
நான் நானாகவே இருப்பதில்லை,
அடக்கடவுளே!!!
கண்ணாடியில் என் முகம் பார்க்கும்
பொழுதுமா!!!
அடுத்தத் தலைப்பு "முகம்"
-
உன் நினைவுகளை
எனக்கு
பரிசளித்து விட்டு போனாய்...
இரவு
உறங்கும் போது உன் முகம் தான்
தெரிந்தது பரிசாய்.....
இரவு
-
அழகிய கனவுகளில் அந்தரங்க
அழகிகள் சூழ ஆனந்தமாய்
கழிந்த இரவு, மறக்க முடியா
நினைவு,
நித்திரை கலைத்து நினைவை
தொலைக்க, என் உடலில்
ஐந்து விரல்பதிய மெல்ல
கண் விழித்தேன்,
அய்யோ பேய் :'(
அட நான்தாங்க உங்க மனைவி!!!
அடுத்தத் தலைப்பு "கண்விழித்தேன்"
-
மயங்கி விழுந்துவிட்டாய் என
முகத்தில் தண்ணீர் தெளித்தேன்...
நின்றது மயக்கம்....
என்னால் உனக்கு......
கண்விழித்து பார்த்ததினால்
வந்தது மயக்கம்...
உன் பார்வையால் எனக்கு.....
உன் பார்வையால்
-
உன் நினைவுகளால் அடிக்கடி மரணம்,
உன் பார்வையால் எப்போது என் கண்களை
பார்க்கிறதோ,அப்போதே உயிர்தெழுவேன்
உன்னுடன் வாழவே,,,
அடிக்கடி மரணம்
-
நீ பேசாமல் இருக்கும் ஒவ்வொரு நொடியும்
எனக்கு அடிக்கடி மரணம் தேடிவரும் ஒரு வழி
என்பதை மறந்து விடாதே
என் அன்பே !
என் அன்பே
-
வருண் நான் சொன்ன தலைப்பு "அடிக்கடி மரணம்"
அது போடாம மரணம் மட்டும் போட்டு இருக்கீங்க
-
என் அன்பே,
என் உயிரிலே கலந்து,
என் உடலிலே பாதியாகி,
என் நினைவிலே நிஜமாகி,
என் கனவிலே நிழல் உருவாகி,
ஏன் என்னை பாடாய் படுத்துகிறாய்,
எடுத்துக்கொள் இப்பொழுதே என்னை,
உயிர் பிரியட்டும், உடல் கருகட்டும்,
உன் நினைவு அழியட்டும், அமைதியான
உறக்கமாவது கிடைக்கும்!!!
அடுத்தத் தலைப்பு "உன் நினைவு"
-
பல நேரங்களில்
எதையெதையோ நினைக்கிறது
மனது..
நினைத்த எல்லாவற்றையும்
சில தருணத்தில்
மறந்தும் விடுகிறது...
மறந்த ஒன்றும் நினைவுகளின்
சாயலில் மண்டியிட்டு அழுகிறது..
அழுகின்ற விஷயங்களை
தவிர்க்க துணிகின்ற நேரத்தில்,
மறந்தும் மறக்காமல்
வந்து விடுகிறது
உன் நினைவு...
எல்லாவற்றையும்
-
மௌனமாய் மனதிற்குள் நடக்கும் போராட்டம்
மக்கள் மன்றத்தில் நித்தம் அரங்கேறுது
ஒரு கூட்டம் எல்லாவற்றையும் நம்புது
ஒரு கூட்டம் எல்லாவற்றையும் மறுக்குது
போராட்டம்
-
என்னை பாராட்டிய உதடுகள்
இன்றோ என்னை துற்று கின்றன
ஏன் என்று விளங்க வில்லை
விளக்கி வைக்க ஆளும் இல்லை
நான் தனிமை போராட்டம் நடத்துகிறேன்
வேதனை நிறைந்த இந்த வாழ்க்கைல்
நான் தனிமை
-
நான் தனிமை
என் நினைவுகள் உறவு
என் இதயம் தனிமை
என் தேடல்கள் உறவு
என் காதல் தனிமை
என் கனவுகள் உறவு
கனவுகள் உறவு
-
மயில் போல வண்ணத்தோகை
விரித்தாடும் வண்ண மயிலே,
வானளவு உயர்ந்து நிற்க்கும்
என் காதலுக்கு கரை தென்பட
நடந்து கொண்டுதான் இருக்கிறேன்,
கரையும் தென்படவில்லை, உன்
காதலும் தென்படவில்லை,
ஆனாலும் தொடர்கிறாய்
கனவுகளில் மட்டும் என் உறவாய்!!!
அடுத்தத் தலைப்பு " வண்ண மயில்"
-
வண்ண மயில் செய்த செயல்
வரைந்து பார்த்த அவள் ஒயில்
நடந்து பார்க்கும் வண்ண மயிலே
நன்றாய் ஏமாறுவாய் அவளுக்கு அன்ன நடை
பார்க்கும்
-
பார்க்கும் இடமெல்லாம்
பாவை முகம், பார்த்தமட்டில்
தொலைந்தது என் முகவரி
அலைந்து கொண்டுதான்
இருக்கிறேன் முகவரியைத்
தேடி, உன் இதயத்தில் வீடு
கட்டி அமர!!!
அடுத்தத் தலைப்பு "இதயம்"
-
கொடுப்பதுவின் பெறுவதுவின்
பொருட்டோடானதாகவே இருக்கிறது
வல்லமை நிறைந்ததாகவும்
வஞ்சகம் நிறைந்ததாகவும்
வலிமை நிறைந்ததாகவும்
வருத்தங்கள் நிறைந்ததாகவும்
வருத்தங்கள் தருவதாகவும்
திருந்ததாத ஒன்றாகவும்
நல்லதையும் நல்லவரையும்
கண்டறிய தெரியாததாகவும்
சுயநலத்துக்காகவும் சுயலாபத்துக்காகவும்
உறவாடும் மனிதர்களை புரிந்து கொள்ளாததாகவும்
வழங்கப்பட்டாதால் வஞ்சிக்கப்பட்டதாகவும்
இணங்கிவிட்டதால் தண்டிக்கப்பட்டதாவும்
பலவீனமானதால் துரோகிக்கப்படுவதாவும்
வக்கிரக்காரர்களின் வலைகளில் வீழ்வதாகவும்
இன்னும் இன்னும் பலவாகவும் இருக்கிறது
உங்களுடையத்தின் என்னுடயதின்
இன்ன பிறருடையதின் இதயம்
அடுத்த தலைப்பு : போலிகள்
-
மெய்தான் என்று நினைத்து
பொய்யாக வாழ்கிறேன்
நட்புடன் நட்பு இல்லாமல்
இந்த போலிகள் வாழ்க்கை
அரியணை ஏறி என்னையே
கொல்லுதே எனக்குள்ளையே ..
நினைத்து
-
நினைத்து பார்க்க மட்டுமே
முடிகிறது, வெறுத்து ஒதுக்க
முடியவில்லை, என்ன
செய்வது நித்திரை கலைத்து
உன்னை நினைத்து, உன்னை
மட்டுமே நினைத்து உலகத்தை
மறந்து செயலிழந்துதான்
கிடக்குறேன், நினைத்து நினைத்து
நிரந்தரமாய் நின்றுவிடும் போல
என் மூச்சு , காற்றோடு கலந்து
விடும் போல என் ஆன்மா!!!
அடுத்தத் தலைப்பு "ஆன்மா"
-
அன்பை இழந்த ஆன்மா
அன்பு மட்டும் அல்ல வாழ்க்கை…
அதன் அடர்த்தி குறைந்து போனால் ….
வேதனை மட்டும் மிஞ்சுமடா !!!
அழிந்து விடும் உன் நம்பிக்கை ,
இழந்தது உன் நம்பிக்கை மட்டுமல்ல ,
நண்பர்களும் கூட…!!!
நட்பை நேசி, சுவாசிக்காதே!!!
பெற்றோரை சுவாசி ,
நேசிப்பதோடு மட்டும்
நிறுத்தி விடாதே !!!
நட்பை நேசி,
-
அன்பான நட்பை நேசி
நேசிக்கும் நட்பை காதலி
நட்பு உன் மீது
காதல் உன் நட்பின் மீது ...
அன்பான
-
உன்னுள் ஏற்படுத்திய
தாக்கம் என்ன என்பதை
நான் எப்படி அறிவேன்
நிச்சயமாக என்னைப்போல்
நீயும் உணர்ந்திருப்பாய் என நினைக்கிறேன்
சிறு விபத்தே ஆனாலும்
இழக்கவும் விரும்பவில்லை
தொலைக்கவும் விரும்பவில்லை
விரும்புவது என்னவோ
உன் அன்பான நட்பை மட்டுமே....
நினைக்கிறேன்
-
துன்பம் வரும்போதெல்லாம்
உன்னையே நினைக்கிறேன்,
முள்ளை முள்ளால் எடுக்கலாம்
என்று!!!
அடுத்தத் தலைப்பு "துன்பன்"
-
துன்பம் வரும்போது எனக்காக வெளிப்படும்
என் கண்ணீராக
இன்பம் வரும்போது உனக்காக வெளிப்படும்
என் கவிதைகளாக......
எனக்காக
-
எனக்காக என்று எதுவும் சேர்க்கவில்லை
உன் நினைவுகளைத் தவிர, நினைவுப்
பெட்டகமும் தீர்ந்து கொண்டே போகிறது
என் கண்ணீராய் உன் நினைவுகளும் ஓட!!!
அடுத்தத் தலைப்பு "நினைவுப் பெட்டகம்"
-
எங்கிருந்தோ வந்தோம்
இங்கு சந்தித்து கொண்டோம்
சாதி மதம் பேதமில்லாமல்
பழகி வந்தோம்
நினைவு பெட்டகம் என்னும்
எத்தனையோ நினைவுகள் .....நம்முள்
சாதி மதம்
-
சாதியாம் மதமாம்
சாதிக்க துணிந்தவனுக்கு
சாதி என்னும் சடுதி எதற்கு
சாதி சாயம் பூசி மதங்கொண்ட
சாத்திரகாரர்களே நீங்கள்
சாத்திய கூறுகளை ஆராயுங்கள்
சாதி மதம் தேவையா இல்லையா என்று..?
சாத்தியம்
-
சாத்தியமாகக் கண்டேன்,மண்ணிலும்
தேவதைகள் வலம் வருமென,
பூக்கள் சிதற, உன் பொற்பாதம் எனை
நோக்கி மண்ணைப் பொன்னாக்க!!!
அடுத்தத் தலைப்பு "மண்"
-
நிமிர்ந்தால் வானம் தூரம்
குனிந்தால் கடல் ஆழம்
நாம்
மண்ணை நேசித்தோம்
உன்னை சுவாசித்தோம்-என் தாய் மண்
வானம்
-
கண்களால் வானம்தான் எல்லை என்று
ரசித்த எனக்கு, காதல் எல்லையை ரசிக்க
முடியவில்லை முடிவுறாமல் முற்று
புள்ளி இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது, என் வாழ்வின் வசந்தத்தில்
புயலாய், வானத்தின் நீளமாய்!!!
அடுத்தத் தலைப்பு "வசந்தம்"
-
வசந்தமானதாகவே இருந்தது அது
இன்பமயமானதாகவே இருந்தது அது
இந்த பிரமஞ்சத்தின் எல்லாம் பூக்களையும்
அவளின் உள்ளத்தில் மலர்த்திக் கொண்டிருந்தது அது
அவள் சிறகு விரித்தே பறந்தாள்
அவள் ஆனந்ததில் நிதமும் மிதந்தாள்
அவளின் சந்தோசம் எல்லையற்றதாக இருந்தது
நாள்தோறும் புதுப்புது உணர்வுகளிலும் உவப்பிலும்
அனுபவத்திலும் திளைத்தாள்
அவன் தன்னை சொர்க்கத்திலேயே வைத்திருப்பான்
என்று நம்பினாள்
அவன் வக்கிரங்களெல்லாம்
தீர்த்துக்கொண்டு
அவளை வஞ்சிப்பதற்கு
முந்தைய தருணம்வரை
அடுத்த தலைப்பு : துரோகம்
-
உலகில் நான் சந்திக்கும்
பொய்கள் எல்லாமே
உன்னைத்தான்
நினைவு படுத்துகின்றன
அப்படியென்றால்
இதற்கு பெயர்தான்
நம்பிக்கை துரோகமா?...
சந்திக்கும்
-
சந்திக்கும் தருணங்களில்
சிந்திக்க மறந்த மனதிற்கு தண்டனைதான்
வேதனை , விரக்தி , ஏமாற்றம் இன்னும் பல
விரக்தி
-
விரக்தி கொண்ட என் காதல்
பாலைவனத்தில்
உன் கோப சொற்களும்
அடைமழையாக தான் உள்ளது..
என் இதயத்தை நனைத்ததால்..
என் இதயத்தை
-
நான் உறங்கப் போகிறேன் என்றேன்,
என் இதயம் நீ உறங்கு நான் பார்த்துக்
கொள்கிறேன் உன்னவளின் வீட்டை
நான் உறங்காமல் இருக்கும் வரை,
இறந்த பின்புமா என்றேன்
என் இதயம் கவலை வேண்டாம்
உன்னவளைவிட உன்மேல் எனக்கு
பிரியம் அதிகம் உனக்கு முன் நான்
இறப்பேன் என்றது!!!
அடுத்தத் தலைப்பு "உனக்குமுன்"
-
இந்த உடல் உனக்குமுன்.
உடன் கட்டை ஏறும் என்று. சொன்னவளும்
நான்தான் . நம்மை பிரிக்க
நேர்ந்தால் இருவரையும் ஒன்றாய் ...
இருவரையும்
-
இழக்கமல் இருப்பது
உன் நினைவும் -என் காதலும்
இருவரையும் - நான்
இழந்து விட்டால்
இறந்தே போவேன்.!
காதலும்
-
மாறாத மறையாத விஷயங்கள்,
சூரியன் உதிப்பதும், மறைவதும்
கடல் அலை அடிப்பதும், ஓய்வதும்
பௌர்ணமி முழு நிலவும்,
அம்மாவாசை கருவானமும்,
அதுமட்டுமல்ல
நீ ஏற்படுத்திய காய வகிடுகள்
என் மனதில் மறையாத போதும்
நான் உன் மீது கொண்ட காதலும் கூட!!!
அடுத்தத் தலைப்பு "காய வகிடுகள்"
-
வாழ்க்கையின் காய வகிடு
பிறப்பிறப் பானது - ஆம்
வரலாற்றின் வகிடோ
திருப்பங்கள் ஏனது?
வாழ்க்கையின்
-
வாழ்க்கையின் பயணத்தில்
பாதி வழியில் உணர்கிறேன்
மனித சாயம் கலைத்தால்
மத சாயம் தெரிகிறது
நிசப்தமாய்
நி சப்தமாய்..
-------------------------------
சாயம்..
-
இன்னும்வெள்ளை காயாத
நிலாச் சாயம்
என்மொட்டை மாடி முழுதும்.
நிலவைத் தின்னும்
வேகத்துடன்,வானில்
வெள்ளை மேகங்கள்
வறண்ட நாக்குகளோடு
அலைகின்றன.
அலைகின்றன
-
கானல்கள் உன் பதில்கள் அறிந்தும்
என்னோடு அலைகின்றன கேள்விகள்
இனி
காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்
என்னோடு
-
இதுவரை என்னுள் கண்டிராத மாற்றம்
இப்படி ஓர் தடுமாற்றம்
கண்டதில்லை நான்
என்னோடு அவள் பேசுகையில்....
என்னுள்
-
என்னோடு தொடரும்
உன் நினைவுகளை கேட்கின்றேன்
ஹிருதயம் உங்களுக்காவது இருக்கிறதா
என்னுள் துடிக்கும்
இருதய ஒலி கேட்கிறதா
இருதய ஒலி
-
இருதயம் இடம் விட்டு இடம் மாறி துடிக்கும் , நிசப்த ...
ஆவான் உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி
உடையும் கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
உன் பிம்பம்
-
காதலுடன் காத்திருந்த
என்னை கடந்து போகும்
போதுகூட உன் முகத்தில்
என்னஒரு கோபம்.
ஆனாலும் என்ன
செல்லமாய்
என் கன்னங்களை
வருடி சென்றதே உன் பிம்பம்...
செல்லமாய்
-
உள்ளமாய் உணர்வாய் உயிராய் உடலில் வந்து
மெல்லமாய் செல்லமாய் கொள்ளும் அழகிய தீயே
உன்னை கல்லமாய் கிள்ளி பாக்கிறேன் கதவுகள் இல்லா
காதல் கோட்டையில் உயிரை ஆளும் ராச்சசியாய்
என் பெயரின் பின்னாள் உலகையே ஆளுகிறாய்
என் உயிர் ஆனவளே ...!
கிள்ளி பாக்கிறேன்
-
கண்ணீர் சிந்தா கண்களில்
எப்போதும் காதல் சிந்த கேட்டேன்
கோபம் வந்து கிள்ளி பாக்கிறேன்என் கை விரல்கள்
எப்போதும் உன் கன்னங்கள் கிள்ள கேட்டேன்
கண்ணீர் சிந்தா
-
இரத்தம் சிந்தா போர் இல்லை
பிறந்து அழாத குழந்தை இல்லை
விரல் சுடாத தீயும் இல்லை
கண்ணீர் சிந்தா இல்லா காதலும் இல்லை
தோல்வி என்பது நிலையும் இல்லை!
தோல்வி என்பது
-
தனிமையிலும்
ஒரு
இனிமை
உன்
நினைவு .
தனிமை
-
தனிமையிலும்
ஒரு
இனிமை
உன்
நினைவு .
தனிமை
-
hello thirudan tholvi enbathu thalaipu la than kavithai podanum neenga enna eppdi etho samathame ellama poturukenga mathipodunga
-
திருடன் உங்களின் தலைப்பையும் வருண் அளித்த தலைப்பையும் இணைத்து பதித்துள்ளேன் மீண்டும் முயற்சிக்கையில் அதை கருத்தில் கொண்டு முயற்சிக்கவும் ...
தனிமையும் இனிமைதான்
உன்னை நினைத்து பூரிக்கையில்
தொலைவிலே எனைகண்டும் காணாமல்
தள்ளி செல்கையில்
தோல்விஎன்பது என் வாழ்வில்
தழுவுமோ என நினைகையில்
தனிமை என்பது
தனல்மேல் உள்ளதை போல் தவிப்பு ...!!
தவிப்பு
-
காதலின் தவிப்பு அவள் வார்த்தைகளால்
வசப்பட்டு காதலுக்கு தூது விட்டேன் ஆனால்
என் காதல் மட்டும் தனியாக திரும்பி வந்தது
அவள் நண்பா என்று சொன்ன ஒரே வார்த்தைக்காக....
என் காதல்
-
நட்பாய் பேசி, பழகி, சிரித்து
நட்பு பாரட்டும்
நட்பிடம் சென்று
என் காதலுக்கு பதில் கூறென்றால்
நட்பின் புனிதம் கெடும் நண்பா...!!
நட்பு
-
உதிரும் மலருக்கு கூட
ஒரு நாள் தான் மரணம்...
ஆனால், நட்பின் பிரிவிற்கு
தினம் தினம் மரணம்...!
மரணம்
-
மரணம் இன்னும் மிக அழகனது தான்..
அதுகும் உன் கைகளால் எனக்கு
கிடைக்கும் என்றால்...!
அழகனது
-
என் கண்ணீரை துடைப்பது
உன் விரல்கள் தான் என்றால்
அழுகை கூட அழகானது தான்...
துடைப்பது
-
ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான்
உண்மயான நட்பு
உண்மயான
-
உன்னால் காயப்பட்ட மனனதை நேசி!
அனால்... உன்னை உண்மையான காதலோடு
நேசிக்கும், என் இதயத்தை கயபடுதாதே .
மனதை
-
அவனாலே தோன்றி
அவனோடு வாழ்ந்து
இதுவரை அவன் மனதை
புரிய முடியவில்லையே!
அவனாலே
-
ஊமையானது என் இதயம்! இமை மூடியும் உறக்கமில்லை!
அவனாலே இதயத்தில் ஏனோ தொல்லை! இதயத்தை
களவாடத் தெரிந்தவனுக்கு ...
உறக்கமில்லை!
-
இரக்கமே... இல்லாத உனக்காக ஏனோ !
இன்றும் துடிக்கும் என் இதயத்தின் வலிகலை...
என் இரு விழிகளும் உணர்வதால் தானோ !
இன்று வரை உறக்கமில்லை என் விழிகளுக்கு.
உணர்வதால்
-
நினைவின் ஊடுருவல் தான் காதல்! அழகை
கண்டவுடன் ஆனந்த படுவதில்லை காதல்
அவளை கண்டவுடன் அன்பை உணர்வது தான் காதல்!
அழகை
-
வஞ்சமில்லா நெஞ்சம்,
வஞ்சிக்க மனம் போகாது,
வசந்தம் மட்டும்தான் வாழ்க்கை,
வராத பருவம் போனால்,
வார்த்தை இல்லை வர்ணிக்க,
வாய் மொழி புரியா
வளையா குழந்தை பருவம்,
என்னென்று சொல்வது அதன் அழகை
அழகே அழகுதான்!!!
அடுத்தத் தலைப்பு "அழகே அழகுதான்"
-
வார்த்தைகள் விலகலாம்
ஆனாலும்,என் காதல்,
மௌனத்திலும் அழகே அழகுதான்
காதல்
-
என் கவிதை வரிகள் எல்லாம் உன்னிடம் சொல்ல நினைத்த
என் மனதின் ஏக்கங்கள் காற்றில் உருவமாய் உயிரின் வடிவமாய்
உன் மௌனத்தின் சப்தமாய் உனக்கு கேட்க்க என் மௌனம் சொல்லும்
காதல் வார்த்தைகள் ...
மௌனம் சொல்லும்
-
சிலநேரம் நீ நடத்தும்
காதல் யுத்தத்தை...
நீ போர் நடத்தும் களமாகிறாய்
நான் மௌனம் சொல்லும்
புண்பட்டு ரணமாகிறேன்
நடத்தும்
-
என் கண்ணைத் திறந்தேன். உன்னை
பார்த்தேன்.என் கண்ணை மூடினேன்
நடத்தும் நாடகத்தில் என்னை மறந்தேன்......!!
கண்ணை மூடினேன்
-
கண்ணை மூடினேன் கனவில்
நீ உன்னைக் கண்டேன் என்
இதயத்தை தொலைத்தேன்
தொலைத்த இதயத்தை ..
கனவில்
-
தினமும் நான் தூங்கிய உடனேயே
என் கனவில் வந்து விடுகிறாய்
நான் எப்போது தூங்குவேன் என்று
எங்கு இருந்து கவனிக்கிறாய்.நீ
கவனிக்கிறாய்
-
எல்லாம் கவனிக்கிறாய் "நான்"
எங்கிருந்து உன்னை கவனிக்கிறேன்???
என்பது தான் உனக்கு இன்னும்
புரியவில்லையா
உன்னை
-
உன்னை கண்ட பின்பு தானே
மனசில் காதல் முளைத்ததடி
காதல் வந்த பின்பு தானே
வார்த்தை கவிதை ஆனதடி
கவிதை
-
இரு இதயங்கள்
எழுதிய ஒரு
அழகிய கவிதை
காதல்....
அழகிய
-
அழகிய தென்றலும் மையல்
கொள்ளும் என்னைப்போலவே,
என்னவளை நான் கடந்து சென்றபோது!!!
அடுத்தத் தலைப்பு "தென்றல்"
-
உதிரும் வேளை..
இதமாய் வருடிச்செல்கின்றது தென்றல்…
பழகியநாட்களின் பரிவு
தென்றலின் குளிர்ச்சியில்
குளிர்ச்சியில்
-
விக்ஸ் வில்லை சாப்பிட்டு
உள் இழுக்கவில்லை காற்றை
அவளை நினைத்தேன்
அப்படி ஒரு குளிர்ச்சியில் அகத்தில்
நினைத்தேன்
-
உலகமே பொய் என்று நினைத்தேன்
உன்னை காணாத வரை
காதல் தான் பெரிது என நினைத்தேன்
உன் இதயத்தை காணாத வரை
பொய்
-
காதல் தான் என்றால் கவிதையை புறக்கணித்துவிட்டுவா !
பொய் சொல்லும் கவிதை வேண்டாம் மெய் உணரும்
காதலே போதும்
காதல்
-
காதல் கவிதை எழுதினேன் நீ படிப்பதற்காக -
அனால் அதை வாங்கி படித்துவிட்டு
எழுத்து பிழை கண்டுபிடித்தாய் என்
உள்ளிருக்கும் காதல் பிழை அற்றது என்று தெரியாமல.......
படிப்பதற்காக
-
வானம் வரைக்கும் வளர்ந்து விட்டேன்
நிலவே ! உன்னைப் பிடிப்பதற்கு!
பூமிக்குள்ளே புகுந்து விட்டேன்
உன் மனதின் இரகசியம படிப்பதற்காக
வானம்
-
வானம் தொட்ட உன்
நினைவுகளால், உன் பாதம்
பட்ட மண்ணை சுவாசிக்கிறேன்
நான் கல்லறையில்!!!
அடுத்தத் தலைப்பு "உன் பாதம்"
-
உன் கைரேகைப்பட்டால் என் ஆயுள்ரேகை கூடும்
உன் பாதம் பட்டால் என் பாவம் தீரும்
உன்னோடு சேர்த்து உன் நிழலையும் சுமக்கிறேன்
சுமையாக இல்லை சுகமாக......
சுமக்கிறேன்
-
நீ எனை வெறுத்த போதும்
உன்னுடன் நான் உறவாட
உன் நினைவுகளையே
சுமக்கிறேன் என் இதயத்தில் !!!
அடுத்தத் தலைப்பு "உன்னுடன் நான்"
-
நீயோ தனிமை தவிப்புகளை இழந்து,
உன்னுடன் நான் எனக்குள் நீயுமாய்,
சேர்ந்து வாழ பச்சை கொடி காட்டினாய்
எனக்குள்
-
என்னை மாற்றி
என்னுள் வசித்த
உன்னை தேடி
என் பயணம் முடிகிறது
பயணம் முடிகிறது
-
இந்த இணையாத வழித்தடம்
இணையும் போது முடிவதல்ல
தொடரும் பயணம் தூரம் முடியாத
நம் வாழ்கை பயணமும்
இந்த தண்டவாளங்களை போல
இணையாமல் ஓடிகொண்டே இருக்கும்
தூரம் அதிகமும் இல்லை
பயணம் முடிகிறது !
நம் வாழ்கை
-
"வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விததைத்தவன் தினை அறுப்பான்"
பொன்மொழிக்கேற்ப, நம் வாழ்க்கையில்
உழைப்பு எனும் சாவியை விதைத்துப்பார்,
வளர்ந்து மரமாகி, கிளையாக
படர்ந்து, விழுந்த இலையானாலும்
மண்ணுக்கு உரமாகுவாய்,
விழாமல் நின்றாலும் நிழலாவாய்.
அடுத்தத் தலைப்பு "நிழல்"
-
அன்று உன் காதலை மிதித்து சென்றேன்...
ஆனால் இன்றோ உன் நிழல் போல
அலைகிறேன் என் காதலை நீ ஏற்பாயா என்று...
அலைகிறேன்
-
அலைகிறேன் நான் இறந்த பின்பும்
தென்றலாய், உன்னை தொட்டுத்த் தழுவ!!!
அடுத்தத் தலைப்பு "தென்றல்"
-
'அலை'க்காத காரணத்தால்
அழைக்காமல் விடுவேன் என்றா
என்னை அழவைத்து சென்றாயோ?
எண்ணமெல்லாம் திண்ணமாய்
நின்னையே நினைந்து
சிந்தையில் செம்மையாய்
விந்தை உலகில் உயிர்த்து
நிற்கின்றேன் அன்பே
உன் அருகாமை எதிர்பார்த்து
வீதியெங்கும் திரிகிறேன்
கடலில் பொங்கும் அலையாய்
அலைகிறேன்....
கரைதனைத் தேடி
வருவாயா...
-----------
வருவாயா....
-
என் இனிய தென்றலே
என்னை தனிமையில் தவிக்கவிடாது
என்னோடு நிதமும் கைகோர்த்து வருவாயா
ஏங்கித் தவிக்கும் என் விழிகளுக்கு பதில் தருவாயா?
தவிக்கவிடாது
-
பசிக்கவிடாது படுத்தும்
இந்தப்பார்வை
நித்தம் தொலைந்து
போனதடி என் நித்திரை
விசித்திரம் தான்
உன்பிம்பம்தனில் கண்டேனே
மோனலிசா சித்திரம்
-----
சித்திரம்
-
சிகப்பு நிறத்தில் சித்திரமாய்
பேசும் நான் வரைந்த
உன் ஓவியம் என் இதயத்தில்.
அடுத்தத் தலைப்பு "ஓவியம்"
-
சித்திரமாய் உன் விம்பம்
பதிந்ததுதான் விசித்திரம்
சத்திரமாய் என் மனதும்
சடுதுதியாய் உன்னை தீட்டி
மனமெங்கும் ஓவியமாய் உன்னை நாட்டி
உன் சயனத்துக்காய் ஏங்குதடா
சத்திரமாய்
-
ஓவியம் வரைய
எத்தனிக்கையில்
எத்தனை எத்தனை
எண்ணங்கள்..
என்ன வரைய
அவளின் அடர்ந்த புருவங்களா
செழிப்பான கன்னங்களா
எள்ளுப்பூ நாசிதனையா
இல்லை கொவ்வைசிரிப்புடன்
அவளின் மோகனப்புன்னகையையா
இறுதிவரையில்
ஓவியம் இருந்தது
வெற்றுத்தாளாய்..
---------
மோகனம்
-
உன்மேல் நான் கொண்ட காதல்
மோகனம் தீரும் வரை வேகாது
என் உடல் பொன்னிற மேனியைக்
போர்வையாக ஏற்றுக்கொண்டாலும்!!!
அடுத்தத் தலைப்பு "பொன்னிற மேனி"
-
களைந்து கிடந்த
ஆடை கிளிசல்களுக்கு மத்தியில்
அவள் பொன் நிற மேனியின் மோகனம்
மரணித்து கிடந்தது
கிளிசல்
-
யாருக்கு வரும் பெருந்தன்மை,
இன்று கிளிசல்கலையே ஆடையாக
உடுத்தும் பெண்களைப் போல!!!
அடுத்தத் தலைப்பு "ஆடை"
-
நிலவின் உடலை மறைக்க
நிலவிற்கு இறைவன் கொடுத்த ஆடை....
வானம்"......
நிலவின்
-
நிலவின் தண்மை
தேங்கி வழிந்தது
அந்த அழகின் முதுமையில்
முதுமையில்
-
முதுமையில் ஓய்வு சுமையானது,
நடையும் ஓட்டமும் சுகமானது,
உடல் நலத்திற்கு சுகமானது.
சுகமானது
-
கரைதட்டா ஆடையிருந்தும் நிலவு
ஆடையணியாமல் இருபதேனோ
இரவில், முகர்ந்திருக்கும் போல
முதுமையில் முகரா மோகத்தினை
சுகமானது என்று!!!
அடுத்தத் தலைப்பு "இரவு"
-
உன் எண்ண அலைகளின்
வண்ண துகள்களின்
சிந்தும் ரசங்கள்
இரவு சுமையானது ... ஹ்ம்ம்ம்ம் சுகமானது .
ஹ்ம்ம்ம்ம்
-
ஹ்ம்ம்ம்ம் அமைதிக்கு அடித்தளம்,
அனைத்தும் அடிக்கி ஆளும்,
அல்லல் போக்கும் அரசி,
இரவே நீ என்றால் உண்மையே!
நீ என்றால்
-
நீ என்றால்
என் நிசப்தங்களும்
சப்தஸ்வரம் கொண்டு
இசை மீட்கும் வெப்பங்கள் ஏனோ
சப்தஸ்வரம்
-
சப்தஸ்வரம் என்பது சந்தோசமான நட்பு
தனிமையை தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து அழைக்கிறது நம் நட்பின்
நினைவுகள்!
நினைவுகள்!
-
நினைவுகள்
நீங்காத பொழுதுகளில் எல்லாம்
தூங்காது வந்து போகிறது
இன்பமான நம் இதய துடிப்புகளை மீறிய
அதன் துயரம் தோய்ந்த கண்ணீர் துளிகள்
கண்ணீர் துளிகள்
-
உண்மையான
அன்பிற்கு மட்டுமே
உன் கண்ணீர் துளிகள் தெரியும்...
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட.......
அழுதாலும்
-
உன் நினைவின் சாரல் நின்றால்,
தனிமையில் அழுதாலும் கண்ணீர்
துளிகளாய் வெளியிட நின்றுவிடும்
உன்னை சூழ்ந்த என் மூச்சும்!!!
அடுத்தத் தலைப்பு "என் மூச்சு"
-
என் மூச்சு காற்றின்
மெல்லிய வெப்பத்திலும்
துல்லியமாய் உன்
நினைவு துகள்களின் பயணம்
நினைவு துகள்களின்
-
உண்மையான காதலை இழந்து அதை மறக்காமல் வாழ்ந்து
கொண்டிருக்கும் காதல் உள்ளங்களும் உயிர் உள்ள
தாஜ் மஹால் தான் நினைவு துகள்களின்
உயிர் உள்ள
-
உயிர் உள்ள
உன் பிம்பங்களின் நகர்வில்
உயிர் சிதைந்து உணர்விழந்து
பயணித்து கொள்கிறது காதல்
உயிர் சிதைந்து
-
உன் உயிர் சிதைந்த போதும்
நினைவுத் துகள்களின் பிம்பமாய்
எனை சுற்றி வருகிறாய், வற்றாத
உன் அன்புடன், ஏற்காத என் கல்
நெஞ்சத்துடன் ...எறும்பு ஊற
கல்லும் கரையும் என்பதாலா !!!
பிம்பம்
-
உன் முன்னே நான் அழவில்லை!!!
அழமுடியவில்லை காரணம்:
உன் பிம்பம் கலங்கும்
என்று !!!!
அழமுடியவில்லை
-
எங்கோ தொலைவில்
எரிகின்ற நெருப்பாய்
உன் பிம்பங்களின்
உருத் தோன்றல்
உயிரோடு எறிவதுபோல்
உளத் தோற்றம்
உணர்வோடு எரிகிறது
உன் என் நினைவுகள் ..
அழ முடியவில்லை
என் அகல் நீரும் வற்றிவிட்டதடா
உளத் தோற்றம்
-
கடல் சார்ந்த பகுதிகளை நெய்தல் என்பர் - நாம்
காதலால் வியர்வை நெய்து மஞ்சமதில்
கண்கள் மூடி கண்டபோது நான் கண்டது உளத் தோற்றம்...
கண்கள்
-
இரு கண்கள்
இரு இதயம் இணைந்து
ஒன்றான காதல்
இன்று ரெண்டாகி போனதின்
காரணம் யாதோ
இதயம் இணைந்து
-
உன் இமைகள் அசையும் இனிய இசைக்குஇதயம் இணைந்து
துடிக்கும் எனது இதயம்… ... உன்னை தவறவிட்ட
என் இதயம். நான்
என் இதயம்
-
வெறுமைகளின் விதை நிலமாய்
வருமைகளின் விளை நிலமாய்
கனவுகளின் புதை களமாய்
என் இதயம்
புதை களமாய்
-
மான் விழி கொண்ட கண்களில் விழுந்தேன்
மாயவளின் முதல் பார்வையில், இன்னும்
எழவில்லை, மயக்கிய மங்கையவள்
மறைந்தால் மாயமாய், மண்ணுக்கு
கடன் தருகிறேன் என் விழி நீரை
புதை காலமாய் மூடிய உன் நினைவுகளுடன்
என் இதய இரத்தம் முரித்து!!!
மான்விழி
-
மான் விழியென மையல் கொண்டாய்
தென் மொழியென பொய்கள் புனைந்தாய்
நான் நீ யென எண்ண விளைந்தாய்
யார் நீயென்ன எட்டி நகர்ந்தேன்
எட்டி நகர்ந்தேன்
-
என்னவள் சிரித்து நகர்ந்தாள் --நெஞ்சில்
ஏக்கம் பிறந்தது!
எட்டி நடந்து மறைந்தாள் -என்முன்
பிரிவு சிரித்தது!
கவிஞன் சிரித்து நின்றான்--உமக்குக்
கவிதை கிடைத்தது!
என்முன்
-
என் முன்
உன் முன்
கேள்வியாய் நின்றது காதல்
இன்று
தோல்வியை கடந்தது காலம்
கடந்தது காலம்
-
கடந்தது காலம்உன் அழகை என்னவென்று வர்னிப்பது?!
எழுத்துக்கள் எல்லாம் நானத்தால் ஒழிந்துக் கொள்கிறது
உன் அழகை வர்னிக்கும் பொழுது மட்டும்!
உன் அழகை
-
உன் அழகை கண்டு மையல் கொண்டு
காதல் பாடம் பயில பச்சைக்கொடி காட்டினாய்,
பகலாய் தோன்றி இரவாய் மறைந்து
நினைவுகளில் இணைந்து, கனவிலே
புனைந்து, கானல் நீராய் களைந்து,
காற்றாய் உரு தெரியாமல் உணர்த்திவிட்டால்,
நடிக்கத்தெரியுமென்று,
பகலாய் தோன்றி
-
உனக்காக நான் எழுதும் கவிதை. ... பழைய நண்பர்களை
பார்க்கும்பொழுது தோன்றும் சந்தோஷம். ...
சூரியன் உதித்தது பகலாய் தோன்றியது
சூரியன்
-
சுட்டெரிக்கும் சூரியன்
விட்டொழித்த வெம்மை எல்லாம்
கட்டவிழ்ந்து கிடக்குதடா
தரிசாய் பயிர் நிலம்
கட்டிழந்து தவிக்குதடா
பாட வேண்டும்
-
பூக்கும் மலர் மிது உறங்க வேண்டும்,,
பார்க்கும் திசையெல்லாம் நீயே வேண்டும்,.
படிக்கும் படிப்பில் என் புகழ் இடம் பெற வேண்டும்,.
திரைக்கும் என் படைப்பு வர வேண்டும்.,
நீ பாட வேண்டும்
நீயே வேண்டும்
-
ஏழு ஜென்மம் கொண்டாலும்
எதுவாக பிறந்தாலும்
காதல் மோகம் கொண்டாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
நீயே வேண்டும்
உன் ஸ்பரிசமே வேண்டும்
ஸ்பரிசமே
-
கண்ணுக்கு எட்டாத தொலைவில்
காதலியின் தேகம்
ஸ்பரிசம் மட்டும் நினைவுகள்
நினைவுகள்
-
மறதி நோய்
என்றுமே எனக்கு இல்லை..
அன்பே...
நினைவுகள் எல்லாம்
நீயாக இருப்பதினால்.....
அன்பே...
-
என் மரணத்தில் புதுப்பிறப்பெடுப்பேன்
உன் நினைவுகளை சுமந்து உனை சேர
என் ஆன்மாவாய் !!!
என் ஆன்மா
-
காலை விடியல் உன்னுடன்
மாலை விளையாட்டும் உன்னுடன்
தென்றாலாக என் பிராணாத்தில் நுலைந்தாய்
என் ஆன்மாவை மகிழ்வித்தாய்
விளையாட்டும்
-
விளையாட்டுத் திடல் எனக்கு
திறந்த வெளி பள்ளிக் கூடம்
காதலில் நீச்சலடிப்போருக்கு
காதலிப்போரின் கட்டழகு மேனி
விளையாட்டுத் திடல்
காதலிப்போரின்
-
காதல் என்றுமே சிறப்பானதுதான்
காதலிப்போரின் காதலை
உண்மையாக காதலிக்கும் வரை
சிறப்பானது
-
என் வாழ்வின் இன்பம்,துன்பம் இரணடிலும் நீ துணையாகவும்
துனைவியாகவும் வர வேண்டும் என் அன்பே,,,!
அதுதான் சிறப்பானது
என் அன்பே
-
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என் அன்பே..
நீதான் என்றும் வேண்டும்
உணர்வுகளை
-
உன்னை ஒரு முறையாவது நேருக்கு நேர் பார்த்து
விட வேண்டும் உன் மடியில் தலை
வைத்து தூங்க வேண்டும் என்று எண்ணினேன் உணர்வுகளை
நேருக்கு நேர்
-
என் புலன் அனைத்தையும்
கட்டி போட்டு அடிக்கும்
கயவனை போலே
எட்டி நின்று அடிக்கும் வஞ்சகங்கள் விடுத்தது
வா ... வில்வாதாம் வேண்டாம்
சொல்வாதம் வைத்து பார்க்கலாம்
நேருக்கு நேர்
சொல்வாதம்
-
உயிரை தருகிறேன் என்கிறேன் நீ ஏனோ உன் உள்ளத்தை
தர மறுக்கிறது.உன் நினைவுகள் இருக்கும் என் உள்ளம்
தானடி எனக்கு சொர்க்கம்.சொல்வாதம்மா
உன் உள்ளத்தை
-
உன் உள்ளத்தை அளித்தாய்,
நானும் குடியேறினேன், அலை
போல இரத்தம் அடித்துச் சென்றது
என் குடிசையை....
என்ன ஆச்சரியம்
கல்லிலுருந்து கூட இரத்தமா!!!
அலைபோல
-
காதல் கடல் அலைபோல வந்து
வந்து போகும் அவரவர் மனதில் கல்யாணம்
என்பது கரை தாண்டி கண்ணில் பட்டத்தை
எல்லாம் தாக்கும் சுனாமி போல....
கல்யாணம்
-
மத்தளம் கொட்ட
வரி சங்கம் நின்றூத
கைத்தலம் பற்றும்
கனவான காலம்
கனியாது போகுமோ
காதல் கல்யாணம்
கனவான காலம்
-
என் கனவிலும் கவிதை மலர்கிறது
கண்மணியே உன் நினைவினில் என் உயிரும் வலிக்குதடி
காதலாகி கடந்திட்ட காலத்தை
நீ கனவாக நினைத்து மறந்திட்டாய்
காதலாடிய அந்த காலம் என்னில் என் கனவான காலம் வாழ்வாகி விட்டதடி
நினைத்து மறந்திட்டாய்
-
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
நீ நினைத்து மறந்திட்டதை,
விலகி விலகி போகிறேன் நான்
என் ஆன்மா விட்டத்தை,
உனக்கு தூது அனுப்பத்தான்!!!
ஆன்மா விட்டம்
-
என் ஆன்மா விட்டம்
எந்த நிமிடத்திலும் சுருங்கலாம்
நீ இல்லாத தனிமையை
ஜீரணிக்க முடியாமல்
ஜீரணிக்க முடியாமல்
-
ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்
உன் தனிமையால், நீ பாவியாய்
இருந்தும் நான் ஆவியாய் சுற்றும்போதும்!!!
உன் தனிமை
-
காதலா உன் தனிமை நீரில் பிம்பமாய்
நிலவில் ஒளியுமாய் கனவில் வருவதால்
கண்களில் வருகிறது தேய்பிறை நிலவில்
தெரிந்த காதலில்
பிம்பமாய்
-
பிம்பமாய் ஒளிர்கிறாய்
பித்துக்குளியாய் பின் பற்றுகிறேன்,
அருகில் வந்தால் ஏனோ கானல்
நீராய் மறைகிறாய், பருக
முடியவில்லை தாகமும் தீரவில்லை,
உன்னிடம் தீராத தாகத்தை தீர்த்துக்
கொண்டிருக்கிறேன் இன்று மதுபானக்கடையில்!!!
கானல்நீர்
-
அழுகின்ற குழந்தையை அரவணைக்கும் அன்னையிட
ம் கேள் அன்பின் வலியை… கானல் நீர் கண்டு
களைப்படைந்த பாகனிடம் கேள்
குழந்தையை
-
வாழ்வே வெறுத்து ,
வலியுடன் வாழ்கிறேன்,
வஞ்சியவள் பிரிவால்
வாடிய மலராய்
வாடுகிறேன், வாய் பேசா
வாலிபனாய் முடியாமல்
வாய் திறக்கிறேன் குழந்தையைப்
போல அழுவதற்கு மட்டும்!!!
வாடிய மலர்
-
நட்பு என்னும் மலரை.கிள்ளி விடாதே!!!
கிள்ளிய மலரை வாட விடாதே!!!
வாடிய மலரை.எறிந்து விடாதே!!!
எறிந்த மலரை.மறந்து விடாதே!!!
நட்பு
-
நட்பு மலரக்கூடியது மட்டுமே,
மடிவதெல்லாம் நட்பாகாது,
மலர்ந்த நினைவுகளை சுமக்கும்
பிரிந்தாலும், பிரியாத உறவாய்
நிலைக்கும், உள்ளத்திலே
ஒட்டி உரசி உறவாடி ஒன்றாக்கிடும்
இரு மனதை...ஒரு உடலாய்!!!
இருமனதை
-
உன்னை மறக்க முடியாமல் இவளை மறுக்க முடியாமல்
இன்று நானே கசிந்து போனேன் . ஒருவனின
உண்மை காதல்இருமனதை தவிப்பாய் முடிந்தது .
மறுக்க முடியாமல்
-
என் காதலை சொன்னேன்
கதை கதையாய் , மறுக்க முடியாமல்
கவிதை வரிகளாய் மீண்டும் ஒரு முறை
உன்னிடத்தில் ..
முடியாமல்
-
என் இனியவனே உன்னை நேசிபதற்கு என்னிடம்
ஆயிரம் காரணங்கள் உள்ளது .
அனால் நாம் பழகிய காலங்களில்
என்னிடம் முடியாமல் நேசிபதற்கு ஒரு காரணம் கூட
கிடைக்கவில்லையா
இனியவனே
-
மல்லிகையும், அல்வாவும் பிடிக்கும்
என்பதால் தினமும் வாங்கிவந்தாய்,
இரவில் சாப்பிட தோன்றவில்லை,
நிலவு மறைந்துவிடுமல்லவா
சாப்பிடும் நேரம் வீண்தானே,
உன் இதழைவிடவா அல்வா சுவையானது,
உணர்ந்துகொள் என்னவனே என்
இனியவனே காலமும் நேரமும்
காத்திராது என்பதை!!!
இதழைவிடவா
-
முடிகோதும் உன் விரல்களை தேடியே
இங்குமங்குமாய் தலைமுடி அலைகிறதே தவிர
இதழைவிடவா கடற்கரை காற்றால் அல்ல!
அலைகிறதே
-
கடற்கரை பக்கம் போகாதே,
என்போல் மையல் கொண்டுவிடப்போகுது
கடல், பின் உன்னை தொட்டுத் தழுவ
கொந்தளித்துவிடும் சுனாமியாய்!!!
கடற்கரை
-
கடற்கரை மண்ணில் காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …அழைத்தது ஒரு குரல் …
நடந்துவிட்டு
-
நீ நடந்துவிட்டுச் சென்ற பாதையில்
நான் நடக்கிறேன், மோட்சம் பெற!!!
மோட்சம்
-
உன்னை காணும் போதெல்லாம் என் கண்களில் தோன்றும் தவிப்பைக்கூட
உணர முடியாத -உன்னிடம் எப்படி சொல்லுவேன்
என் காதலைப்பற்றி !மோட்சம் கிடைக்குமா
காணும் போதெல்லாம்
-
உனை காணும்போதெல்லாம்
கன்றாவிக் காட்சிகள் கூட என்
கவிதையை கவின் கூட்டுகிறது,
மயானமும் சொர்க்கமாய்
மாறுகிறதுது, இன்னும் எத்தனை
எத்தனையோ மாற்றங்கள்
என்னில் உன்னால்!!!
மாற்றங்கள்
-
நான் கொடுத்த பூக்களை
மணப்பது போல் உன் ஓரக்
கண்களால் நீ என்னை பார்க்கும்.
அந்த பார்வை ஓராயிரம் மாற்றங்கள்அர்த்தங்கள்
சொல்கையில் அதை அறியாதவன்
போல் நான் உன்னை பார்க்க
அதை நீயும் மறுப்பதேனடி ........!
உன்னை பார்க்க
-
தூது அனுப்புகிறேன் உன்
பிரிவால், உயிரிருந்தும்
சிந்தனை இழந்து உடல்
தகனம் செய்யும் நேரம்கூட,
உன்னை பார்க்க, உன் போல்
என் உடலைபிரிந்த ஆன்மாவை!!!
தூது
-
தென்றலில்தூது
வரும் மண் வாசம்
நெஞ்சினில்தூது
வரும் காதல் எண்ணம்
சுவாசிக்க சுவாசிக்க சுகமே சுகமே
நேசிக்க நேசிக்க இதமே இதமே
வாசிக்க வாசிக்க காதல் மனமே
பூசிக்க பூசிக்க தெயவாதினமே.....!
சுகமே
-
என் அகம் குளிர
உன் முகம் காணும்போது
சோகம் கூட சுகமே சுகம்தான்!!!
அகம் குளிர
-
நேற்றிலிருந்து வாடிப்போன
நான் உன்னை பார்த்ததும்
அகம் குளிர அனுதினம் ...
உன்னை ரசிக்கிறேன்
வாடிப்போன
-
வாடிப்போன என் முகம்
வாடாத உன் நினைவுகளால்
தொலைந்து போனது,
தேடிக்கொண்டுதான்
இருக்கிறார்கள் என்னை
இன்னும், உன்னுள் இருப்பதை
அறியாமல்!!!
உன்னுள்
-
என்னை உன்னுள் தொலைத்து
தேடுவது கூட ஒரு சுகமாகும்,
உன்னை என்னுள் தேடுவது
எனக்கு ஒரு புதையலாகும்!
தொலைத்து
-
உன்னை கண்டெடுத்த அந்த
சில நிமிடங்களில் தான்
என்னை நான் உனக்குள்
தொலைத்து விட்டேன்...
சில நிமிடங்களில்
-
சில நிமிடங்களில்
உன் நினைவுகள் அல்ல
அந்த நினைவுகளில்
தான் நிமிடங்களே !
நினைவுகளில்
-
உன்னோடு நான் வாழ நினைக்கிறேன்
உன் நிழலாய் அல்ல
உன் நினைவுகளில்
நான் வாழ
-
சுவாசிக்க சுவாசம் இல்லவிட்டாலும்
நேசிக்க உன் நினைவுகள் இருந்தால்
போதும் உயிரே நான் வாழ....!
சுவாசம்
-
உன் சுவாசம் வீசும் தோட்டத்திலே..
கவிதை எழுத தொடங்கிவிட்டால்...
உந்தன் ஞாபகம் வருகிறது..
உந்தன் ஞாபகம் வந்துவிட்டால்..
கவிதைகள் தன்னால் வருகிறது!
உந்தன் ஞாபகம்
-
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
மறந்துபோனதே
-
கரம் பிடித்த கணங்களெல்லாம் மறந்துபோனதே
உனக்கு சுவாசம் தடைப்படுகிறது, காத
லே என்னைக் காப்பாற்று. இருவிழி அருவி இறங்கி
தடைப்படுகிறது
-
வணக்கம் சொல்லி சந்திக்கையிலும்..,
வருகிறேன் என விடைபெறுகையிலும்..,
இயல்பாய் பேசி விலகுகிறாய் நீ..
இயக்கமே தடைப்படுகிறது உன்னால்
விலகுகிறாய்
-
நீ வருவேன் என்றாய் பல நாட்களாய்
நேரம் என்னிடம் சொல்லாமல்
கார்திருந்தேன் பார்த்திருந்தேன் நீ வரவில்லை
நீ என்னை விட்டு விலகுகிறாய் என்று புரிந்தும்
என் மனம் உன்னை விட்டு விலக மறுக்கின்றது
இறுதி மூட்சு உள்ள வரை நேசிக்கிற படியால்..
கார்திருந்தேன்
-
நான் கவிதை எழுதுவதற்குக்
காத்திருந்தேன் இப்போது தான்
புரிகிறது உனக்காகக் காத்திருப்பதே
ஒரு கவிதையென்று.
கவிதை
-
பரிசாக நீ கொடுத்த நினைவுகளையே
உனக்கு பரிசளிக்கிறேன், இதயம் தோன்றி
கைவழி இறங்கும் கவிதையாக!!!
பரிசு
-
உனக்கான என் பிறந்த நாள் பரிசு...
உன்னை பார்த்த முதல் நாள்
பசுமரத்தாணியாக உள்ளது என் மனதில்
என் மனதில்
-
உரிமை காத்திட உயிரை வேண்டுகிறேன்!
உன்னை என் மனதில் சுமப்பதால் சுவாசிக்கிறேன்!
என்னையே உன் மனதில் நீ சுமப்பதால் நீ எனக்கு ...
சுவாசிக்கிறேன்
-
நீ....
வரைந்த
வார்த்தைகளினூடே....உன்னை
நான்....
சுவாசிக்கிறேன்....!
.உன்னை
-
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல்
காதல்
-
இதய அறையில் கண்வரையும் ஓவியம்
காதல்!!!
இதயஅறை
-
பத்து மாதம் கருவறையில் சுமந்தாள்
நான் தரையில் கால் பதித்து நடக்கும் வரை ...
என் இதய அறையில் சுமக்க எண்ணுகிறேன் ...
கருவறையில்
-
மூச்சி முட்ட நடக்கும் போது வலி தெரியாத வரம் நீயே
காத்து கிடக்கிறேன் நீ வரும் நாட்களை எண்ணி
உன் சிரிப்பில் என்ன மாயம் உள்ளதோ ?
எண்ணி எண்ணி பார்க்கிறேன்
என் கருவில் வராத என் கருவறையில் சிறப்பமே
காத்து கிடக்கிறேன்
-
உன் தந்தையின் வருகைக்கு
காத்து கிடக்கிறேன்
நம்
காதலுக்கு சம்மதம் சொல்வார்
என்று
சம்மதம்
-
வண்ணங்கள் தெளித்த வாசல்
கோலத்தில் சிரித்த ரோஜா!
சொல்லாமல் சொன்னது பெண்ணே...
உனக்கு எனை மணக்க சம்மதம் என்று!
ரோஜா
-
நீயிருக்கும்போது என்ன வரம் பெற்று
காதலின் சின்னமானதோ ரோஜா!
ஒருவேளை முட்கள் அதிகம் இருக்கிற சாபத்தாலா?
எல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டும்,
வருவாயா?
என்ன வரம்
-
உண்மை காதலுக்கு உயிர் ஊட்டுவோம் என்ன வரம் வேண்டும்
பிரிந்தாலும் இணைவோம் வாழ்க வாழ்க வாழ்க
காதல் வாழ்க.
காதல் வாழ்க
-
உன்னிடத்தில் என்னைக் கொடுத்த என்னை
மறவாதே என் அன்பே ..
காலமெல்லாம் நம் காதல் வாழ்க என்று
சொல்லாமலே சென்றாயே..
என் அன்பே
-
என் அன்பே! என்னுயிரே! உன்னையே எண்ணுகிறேன்!
உள்ளம் உருகுகிறேன்! உறங்காமல் தவிக்கின்றேன்!
தங்கமாய் நீயிருக்க தரணியிலே மாற்றுமுண்டோ?
உன் மந்திரப்புன்னகையில் மனம் மயங்குகிறேன்!
தவிக்கின்றேன்
-
வானளவில் சுகம் வளர்த்து
பழகிவிட துடிக்கின்றேன்
மொத்தமாக அள்ளி உன்னை
சொந்தமாக்க தவிக்கின்றேன்
காதல் என்னும் புது வேதத்தின் ,
தெய்வமாகி துதிக்கின்றேன்
பழகிவிட
-
வாழ்த்துக்கள். ... எப்படி என்பதுதான்
இன்னும் பழகிவிட முடிவதில்லை..
இப்படித்தான் என்றால்.பிரிநதால் கூட தாங்காத
என் இதயம் இப்பவெல்லாம்
வாழக்கற்றுக் கொள்ள பழகிவிட்டது…
என் இதய
-
என் இதய மேடையில்
நாடகம்
நடத்த வந்தவர்கள்
பலர்
ஆனால் என் இதயம்
உன்னில் தானே
காதல் கொண்டது
நாடகம்
-
கானகம் வாழ்
புள்ளிமான் போல
விழிதனிலே காட்டிடுவாள்
மோகன நாடகம்
நவரசத்திலும் திளைக்கும்
அவளின் கருவிழிகள்
தருதே
காதல் என்னும் கனிரசம்
அள்ளிப்பருகிடவே
நினைவெங்கும் போதைமயம்.. :o :o :o :o
கனிரசம்
-
என்னவன் தான் என்ற அழைப்பில்...
ஒரு வார்த்தை உதிர கனிரசம் வழிய
'காதலிக்கிறேன்' ஒவ்வொரு முறையும்!
அழைப்பில்
-
ஒவ்வொரு முறையும்
சொக்கிப் போகிறேன்
மணவாளா என்ற உந்தன்
அழைப்பில்
-------
மணவாளா
-
மல்லுவேட்டி மணவாளன் மாப்பிள்ளையாக
மல்லிகை பூ பந்தலாக அவளும்
மழை கண்ட மழலை போல
மனம் எங்கும் உற்சாகம்
மங்கள வாத்தியங்கள் சத்தமிட
மஞ்சள் அரிசி முத்தமிட
மங்கையவள் சங்கு கழுத்தினிலே
மணவாளனின் தங்க தாலி....
உற்சாகம்
-
பாளமாய் வெடித்துச் சிதறிய
மண்ணின் மேல் மழைத்துளி
பட்ட உற்சாகமாய்
என்னுள் விளைந்தது
என்மேல் தன்னிச்சையாய் பட்ட
அவளின் பார்வைக்கனைகள்
----------------
கனைகள்
-
என்ன செய்தாலும் உன் பார்வைக்
கனைகள் தலையில் இறங்கும் பாரம்
என்னை தொல்லை செய்கிறது
எங்கு சென்றாலும் நிழல்சுமையாய்
தொல்லை
-
தொல்லை என்று தானடி
இதுவரை நினைத்திருந்தேன்
உன்னை
தொலைத்ததும் தானடி
புரிகிறது உனதன்பின்
அருமை..
------
அருமை
-
சில பொழுதாவது சோகப்படு
அருமை புரியும்.
யாருக்காவது கண்ணீர் விடு.
புன்னகையின் பெருமை புரியும்.
ஆனந்தத்தின்
-
ஆனந்தத்தின் எல்லையையும்
கடந்துவிட்டேன் உன் பொய்யான
வார்த்தைகளை தாரக மந்திரமாய்
எண்ணிய அன்று,எல்லை கடந்தும்
தாராவார்த்த என் இதயம் தனிமையில்
தத்தளித்துக் கொண்டிருக்கிறது இன்று,
ஹ்ம்ம்ம் காதல்ல கரையேற முடியாது போல!!!
தாரகமந்திரம்
-
அம்மாவிற்கு ஏனோ தெரியவில்லை
மனைவியின் சொல்லே
தாரகமந்திரம் என்பதை
அப்பாவும் இதைத் தானே
செய்தார் என்பதை
மறந்தார் ஏனோ?
------------------
மனைவி
-
தாய்மடித் தூக்கமாக
தலைகோதும் காதலியாக
கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக
செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக
இருப்பவளே மனைவி
காதலியாக
-
பூத்துக் குலுங்கும் மலர்களை விட...
என் காதலியாக நான்...
அதிகம் நேசிக்கிறேன்!
மலர்களை
-
சிரித்து மலர்ந்து உதிர்ந்தும் சிரித்து
சிரித்தே வாழும் இறைவனின்
படைப்பு பூ ஒன்றுதான்
பூ போல சிரிப்போம் புன்னகையுடன்
மலர்களை வாழ்வோம்
புன்னகையுடன்
-
எனக்கு தெரிந்தது எல்லாம்
உன் புன்னகையுடன் வேறொன்றும்
இந்த நொடியில் ஜனனமாகவில்லை...
தெரிந்தது
-
ஒரு கவிதை எழுதமுதல்வரி தேடி
உன் பார்வைக்காகக் காத்திருந்தேன்
உன் பார்வை வந்தவுடன்தான் தெரிந்தது
என் கவிதை முழுமையுமே
உன் பார்வை மட்டும்தான் என்று
உன் பார்வை
-
அழகான புன்னகையை சிந்தும்
மலர்களைப்போல நீ இருந்தால்
தேனியாய் நான் இருப்பேன்,
உன்னிடம் தேன் எடுக்கிறேன்
என்று கவலைபடாதே, நீ வதைந்து
வாடினாலும் உன் நினைவாக
தாஜ்மஹால் கட்டத்தான்,
"தேன்கூடு"
நயவஞ்சகியே கட்டியபின் தெரிந்தது
உன்னில் வார்த்தது தேன் அல்ல
நஞ்சு என்று, போலிக்கண்ணீர் வடித்தாய்,
நான் விழுந்த உன் பார்வையிலும்தான் விஷம்...
தாஜ்மஹால்
-
மெய் காதலின்
அர்த்தங்கள் சொல்ல -கம்பீரமாய்
நிற்கிறதே தாஜ்மஹால்
கம்பீரமாய்
-
நிலவை நேசித்தேன்
தொட முடியவில்லை
காதலை நேசித்தேன்
தண்ட முடியவில்லை
காற்றை நேசித்தேன்
பிடிக்க முடியவில்லை
நாம் நட்பை நேசித்தேன்
மறக்க முடியவில்லைகம்பீரமாய்
நேசித்தேன்
-
நான் உன்னை உண்மையாக நேசித்தேன்...
அதில் நீ எனக்கு கற்று தந்த பாடம்...
"நீ யாரையும் உண்மையாக நேசிக்கதே"...
நான் உன்னிடம் கற்றுக்கொண்ட பாடம்..
உன்னிடம்
-
உளவறிய சென்றவிடத்து
உளமறந்த கதையாயிற்று
அவ்விடத்தில் நீ இருந்ததால்
வந்த வேலை விட்டு
நொந்த கதையின்றி
உன்னிடம் சேர்ந்த கதையாயிற்றே
என் பயணம்
--------------
பயணம்
-
காதல் பயணம் உன்னோடு இருந்த
பொழுதுகள் பூக்களாய் மனதில்
பூத்துக்கிடக்கிறது உன்னோடு
என்சுவாசம் மரணத்தை வென்று
பயணிக்கிறது ...
என்சுவாசம்
-
கண்டநாள் முதல் உன்னால்தான்
நான் உயிர் வாழ்கிறேன், என் இதயத்தில்
உனை சுமந்தாலும் என் சுவாசமாய் நீ இருப்பதால்!!!
கண்டநாள்முதல்
-
உன்னை கண்டநாள்முதல்
என்னோடு சேர்த்து எழுதுகையில்
காதலோடு கவியும் அழகாக
நானும் கூட அழகாக தான் தெரிகிறேன்
அழகாக
-
உன்னை நினைத்து காணும்
கனவு கூட அழகாக இருக்கிறது
உன் இதழை போல.........
நினைத்து
-
உன்னை நினைத்து எழுதிய கவிதை
நீ காயிதம் என்பதால் கிழித்து எறிந்தாய்
உன்னை நினைத்து ஏன் இதயத்தில் எழுதிய காதல்
ஏன் உயிர் இருக்கும் வரை அழியாது பெண்ணே
ஏன் இதயத்தில்
-
உன் இதயத்தில் குடியிருப்பது
உனக்கு பிடிக்கவில்லையா
காதல இன்பத்தை விட
துன்பத்தையே காதலிக்கின்றது
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ
அது உன் இதயத்தை பொறுத்தது.!
காதலிக்கின்றது
-
தென்றல் வந்து மோதியதால்
பாலைவனம்.சோலைவனமாய் மாறியது.
உனக்கும்.எனக்கும் இடையில்
எம் சுவாசக்காற்றுகள்...
காதலிக்கின்றது.
இடையில்
-
புரிந்தும் விலக மனம் வரவில்லை;
இடையில் நெருங்கிவந்தாலும் விலகி போகிறாய் நீ ;
என்னை விட்டு .
வரவில்லை
-
நீ.வரவில்லை என்று
நான்.வேதனைப்படவில்லை.....
என்னைப் பார்க்கமுடியாமல்
யார் தந்த இடைமறிப்பால் நீ
அங்கிருந்து தவிக்கிறாயோ
என்றுதான் என் கவலை......!!
தவிக்கிறாயோ
-
என்னையே எண்ணி
நித்தம் தவிக்கிறாயோ
எனக்காக ஒரு உதவி செய்வாயா.
நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே
சொல்லிவிடு. நீ என்னுடன் பழகியது ...
நித்தம்
-
நித்தம் நித்தம் யுத்தம் செய்கிறேன்
உன்னோடு அல்ல உன் நினைவுகளோடு,
முத்தம் முத்தம் கேட்டு கொல்கிறேன்
நினைவுகளை அல்ல உன்னை...!
முத்தம்
-
நீ முத்தம்
கொடுத்து
பிரசவிக்க வைக்கிறாய்....
நான் கவிதை
குழந்தைகள்
பெற்றெடுக்கிறேன்.....
கவிதை
-
தந்தையைக் கேட்டேன்
கவிதை எப்படி எழுதுவதென்று
காதலித்துப் பார்
கவிதை தானாய் வருமென்றார்
இன்னமும்
காதலித்துக் கொண்டிருக்கிறேன்
கவிதை மட்டும்
வந்தபாடில்லை
-----------------------------------
கவிதை
-
நான் கவிதை எழுதத்
துவங்கும் பொதெல்லாம்
என் நினைவு உன்னிடமே செல்கிறது
இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ
எப்படி ரசிப்பாய் என்று........
துவங்கும்
-
நாள் துவங்கும்
அந்த காலைநேர
சூரிய கதிர்கள் பட்டு
உன்முகம் ஜொலித்திடும்
அழகினைக் கண்டு
மலர்களும் வெட்கித்
தலைகுனிகின்றன
என் அழகு தேவதையே..!
---------------------------------
மலர்கள்
-
மலர்கள் சிரித்து மலர்ந்து உதிர்ந்தும் சிரித்து
சிரித்தே வாழும் இறைவனின்
படைப்பு பூ ஒன்றுதான்
பூ போல சிரிப்போம் புன்னகையுடன்
மலர்களை வாழ்வோம்
வாழ்வோம்
-
வெள்ளைப் புறா பறந்தது
மயானமான பூமியின்
அமைதியினூடே
மிச்சமும் ஏதுமில்லை
வாழ்வாதாரத்திற்கும் வழியில்லை
காலம் முன்னே சென்று
நமக்கான சவக்குழி
வெட்டுமுன்னே
மனிதனுள் மனிதம்
வளர்ப்போம்
குலம் செழித்தோங்க
வாழ்வோம்
------------------
சவக்குழி
-
என் வழிகளில் விழுந்து
சவக்குழி விழிகளில் நுழைந்தவனே...
இதமாய் பேசி
என் இதயம் கரைத்தவனே...
கவிதைகள் சொல்லி
என்னில் காதல் விதைத்தவனே...
உண்ண மறந்தேனடா உன்னால்..
கனவுகளும் களவு போனதடா இந்நாள்...
கனவுகளும்
-
ஒளி இல்லா பொழுதுகள்
ஒலி தரும் கனவுகளாய்
வகை வகையாய்
விடியும் வரை விரிகிறது
இந்த கனவுகளும் ...
ஒலி தரும்
-
விழியோரப் பார்வையில்
சொக்கிப் போனவனின்
விழியோர நீரினில்
வழிந்தோடியது
அவனின் ஏக்கங்களும்
தனிமைக் கனவுகளும்
-------
ஏக்கம்
-
என் ஏக்கம் உடலில் உள்ள
செல்லுக்கும் தெரியாது..!
உன் கையில் உள்ள
செல்லுக்கும் தெரியாது..!
இரண்டிலும் நிறைந்திருப்பது,
நீயே தான் என்று…!
நீயே தான்
-
உன் நினைவுகள் தான்.
என் இதயத்துடிப்பில்அதிகமாய் ...
கூட நீயே தான் வாழ்கின்றாய்.
இதயத்துடிப்பில்
-
நான் உன்னை பார்க்காத நாள் உண்டு ...!
நீ என்னை பார்க்காத நாள் உண்டு ...!
விண்ணில் நிலவு இல்லாத நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...!
ஆனால், என்னுள் உன் நினைவு இல்லாத
நொடிகள் இதயத்துடிப்பில் இல்லை...!
இல்லாத நாட்கள்
-
நீ இல்லாத நாட்களில் சொர்க்கத்திலிருந்து
நரகத்திற்கு பேருந்து வசதி எனக்கென!!!
பேருந்து
-
பயணிகள்
நிழற்குடை போல
காத்திருக்கிறன்
எப்போழுது
துவங்கும்
உண்னுடனான
பேருந்து பயணம்
என்று தெரியாமல்...
உண்னுடனான
-
சொர்க்கம் உண்டு என்று
நம்பியதில்லை
உன்னை காணும் வரை....
நரகம் உண்டு என்று
நம்பியதில்லை
உன்னை பிரியும் வரை.....
உண்னுடனான இருக்கவேண்டும்
நம்பியதில்லை
-
ஒருபோதும் நம்பியதில்லை நான்
உனை காணாதவரை, காதலுக்கு
கண் இல்லை என்பதை!!!
காதலுக்கு கண் இல்லை
-
காதலுக்கு கண் இல்லை
என்று சொல்வார்கள்! உண்மை தான் ,
என்காதலனுக்கும் கண் இல்லை!
கண் இருந்தால் கவிதை கண்டு
ரசிக்காமல் போவானா ?
இப்படிக்கு
கண்களால் அவனை காதலித்து என் கண்களை
இழந்த ஒரு கவி குயில்
கவிதை கண்டு
-
நான் அகத்தால் கொண்டவள்
நாணத்தால் தலை கவிழ
அவள் இதழோர புன்னகைக்குள்
ஒளிந்திருந்த வெட்க தேவதை
விழியோரம் தீட்டியிருந்த
கவிதை கண்டு
கவின்வண்ணப் பூக்களும்
காத்திருந்தன
காதலன் வரவுக்காய்
--------------------------------------
இதழோர
-
பால் வழியும் இதழோரம்
ஓர் கவி நான் எழுத வேண்டும்
குழந்தை சிரிப்பில்வெள்ளை நிலா - வீதி
கோடி ஓரத்தில் துளி அருவி
சொட்டாக வழிகிறதே.....
சொர்க்கம்தான் அவன் அழகே
குழந்தை சிரிப்பில்
-
உன் கண்கள் என் வசம்
உன் காதலும் என் வசம்
உன் திருமணமும் என் வசம் என்று தான் நினைத்தேன்,
அண்ணல் உனோட குழந்தை சிரிப்பில் குட வசம் தன என்று கண்டனே
என் வசம்
-
அன்பே
என் வசம் உண்மை பாசமும்
உன்னிடம் சொல்லாத என் காதலும்
தவிர வேற ஒன்றும் இல்லை
ஏற்று கொள்வாயா என்னை
பாசமும்
-
காதல் பாசமும் என்னும் ஆசையில் தன்னைத்தானே
கட்டி கொண்டு கடலின் - மீது
அலையோடு அலையாய் அலைகிறது
மனம் அவிழ்த்து விட ஒரு மனம் போதும்
அதுவும் அவளின் அகம்புறம்
என் காதலுடன் வரவேண்டும்
கடலின் மேன்மையே போல்
என்னுடன் புரிதல் வேண்டும்
காதலுடன்
-
என் தமிழிலே உன்னை வணங்குகிறேன்!
மெய் காதலுடன்
உன்னை கண்டு உன்னை கைப்பற்றும் ஆசையுடன்!
முதல் அடி எடுத்துவைக்கிறேன்...
நடைபழகும் சிறு குழந்தைபோல!
ஆசையுடன்
-
வாழ்க்கை இல்லை என்றுதான்
நினைத்தேன் நீ விட்டுப் போனதும்
ஆனாலும் உன்னை
நினைத்துக்கொண்டே வாழலாம் என்று
ஆசையுடன் வாழ்கிறேன்....!!
விட்டுப் போனதும்
-
பட்டு உடுத்தி நான் நிற்கையிலே
பட்டினப் பெண்ணை நீ பார்க்கிறாயே ...
அவர்கள் உன்னை விட்டு விட்டுப் போகையிலே
உன் நிழலாக நான் உன் பின் நின்றிடுவேனே
உன் நிழலாக
-
விந்தையான உலகிலே
சிந்தையற்று போயிருந்தேன்
என்னையும் உந்தன்
உற்றதோழனாய் காதலனாய்
ஏற்றுக்கொண்டாயடி
இனி
காலமெல்லாம் இணைந்திருப்பேன்
உன் நிழலாக
---------
தோழன்
-
கண்கள் பேசும் காதல்மொழியில்
உறைந்திருப்பவனாய் வேண்டாம் ...
காதுகள் சிவக்க கருத்துபரிமாறி
காலம்முழுவதும் தொடரும் நட்பிற்காக ...
ஒரு தோழன் வேண்டும் !!!
கண்கள் பேசும்
-
கருவில் இருக்கும்போதே தெரியாமல்
காதலித்து, வாழ்க்கை பாடத்தை
வளர்ந்தபின் கற்றுக்கொடுத்து என்
வாழ்வில் விளக்கை ஏற்றுகிறான்
என் தந்தை....உலகில் தோழன்
வரிசையில் கண்டெடுத்த முதல்
தோழன் இவனே... தோழனிவன்
தோள் கொடுக்கையில் வெற்றியை
ரசித்து ருசித்து தோரணையோடு
என் தோள் தூக்கி நடக்கிறேன்
சமுதாயத்தில் இன்று....
என் பொலிவான கண்கள் பேசும்
இவனால் எதிர்காலம் என் கையில் என்று!!!
வாழ்க்கைப்பாடம்
-
வாங்கும் வலிகளையும் அடிகளையும்
வாழ்க்கையின் பாடமாய் ஏற்று
உன்னை நீ மேம்படுத்து
அனைத்தும் உன் நன்மைக்கே
என நினை தோல்விகள் கூட
வெற்றிக்கனியாய் தித்திக்கும்.....
உன்னை
-
உன்னை காணும் வரை நினைத்திருந்தேன்
ஷாஜஹானை மிஞ்சமுடியாது என...
உனை படைத்த பிரம்மனை விடவா!!!
பிரம்மன்
-
ஆயிரம் ! ஆயிரம் அழகு மங்கையர்க்கு !
தனி தனியே படைக்கின்ற தாளாத பேரழகை !
உன் ஒருத்திக்கே படைத்திட்ட !
பிரம்மன் துரோகியடி
ஆயிரம் அழகு
-
ஆயிரம் அழகு நீ என் தாய் மொழி பேசுகையில்,
தமிழ்
தமிழ்
-
கொஞ்சு தமிழ் பேசி
பிஞ்சு நடை நடக்கையில்
உலகம் மறந்து போனது
வலியும் மரத்துப் போனது
என் செல்ல கிளியே!!
-------------------------------
உலகம்
-
அழகாய் செதுக்க நினைத்து
உருண்டையாய் படைத்தான்
உலகை பிரம்மன்,...இன்று
பொறாமை, போட்டி, சாதி
மதம், வண்முறை,.........
என வாழும் மக்களை கண்டு
கண்ணீர் வடிக்கிறான்....
உலகம் எழுபது விழக்காடு நீரால்
சூழ்ந்துள்ளது...அழிவின் பாதையை நோக்கி,
என்னடா உலகம் இது....
அழிவின் பாதை
-
உறவுகளை மறந்தும்
உணர்வுகளை மறந்தும்
உரிமைகளை மறந்தும்
உணவை மறந்தும்
உலகமே மறந்ததும்
உன் காதலால்தான்
உள்ளது ஒன்று என்னிடம்
என் உயிர் மட்டும் -அது
உடன் இருப்பதும் போவதும்
உன் காதலால்தான்
இத்தளம்அழிவின் பாதை காதல் யா ????
உலகமே மறந்ததும்
-
உன்னைப் பார்க்கையில் உறவுகளை
மறைத்து, மென்மையான உணர்வுகள்
என்னுள் பிறந்து...உடல் சிலிர்ந்து
இவ்வுலகமே மறந்ததும்... புதுமலராய்
உன்மேல் காதல் மலர்ந்தது...
எப்பொழுது பெண்ணே தலையில் சூடிக்கொல்வாய்.....
உன்மேல்காதல்
-
உன் அறிமுகம் இல்லாமலே
என்மேல் ஆசை கொண்டவனே
உன்காதலை அறிந்து
நான் விலகி விலகி சென்றாலும்
உன்மேல்காதல் தொடராது
அறிமுகம்
-
அறிமுகம் இல்லாது
அரிதாரம் பூசியதாய்
அலைகழிக்கும்
அலைமகளே..!!!
கலங்கித் தான்
போகிறேன்
ஏனிந்த அவதாரமென்று..
------------------
அரிதாரம்
-
அரிதாரம் பூசி
அவசியமாய் காதலித்து
அவசரமாய் மணமுடித்து
ஓய்ந்து போனபின்
தேடுகிறேன்
அரிதாரங்களுக்குள்
தொலைந்து போன
என் சுயத்தை
சுயமுகத்தை
காதலித்து
-
காதலித்தபிறகே
கலியாணம் என்று
காத்திருந்தேன்
கால்கடுக்க...
மரத்துப் போனது
கால்கள் மட்டுமல்ல
மனமும் தான்
காதலி மட்டும்
கடைசிவரை வரவேயில்லை.
----------------
காதலி
-
அந்த காதல் சின்னத்தை விட
உன் கன்னகுழி அழகாக உள்ளது
உன்னையும் உன் காதலி
ஒரு தாஜ்மஹாலாக
தன செதுக்கி போல்
சின்னத்தை
-
எனை நீ பிரிந்து சென்றாலும்
உன் நினைவுகள ஏந்திய நம்
காதல் சின்னம் பொறித்த கொடி
நம் தேசியக்கொடிபோல பறந்து
கொண்டுதான் இருக்கிறது
என் இதயத்தில்!!!
உன் நினைவு
-
இதயமே துடிக்க மறந்தாலும்
இமைகளை மடிக்க மறந்தாலும்
என் அன்பே உன் நினைவு
நினைக்க எப்படி மறவேன்...
மறந்தாலும்
-
சூரியனை போல பிரகாசமாய்
சந்திரனை போல பேரொளியாய்
மறந்தாலும் மறவா ஞாபகமாய்
துளிர் விடும் உன் ஞாபகம்...
துளிர்விடும்
-
அன்பு என்னும் விதை தூவினேன்
காதல் என்னும் செடி துளிர்விட்டது
இன்று கோபம் என்னும் பாய்மர கப்பலில்
பயணம் செய்கிறோம் நம் பிரிவு
நிரந்தரம்
விதை
-
ஆயிரம் விதைகள்
தூவினாலும்
ஒன்றிரண்டோ
தளிர்த்து துளிர்த்து
விருட்சமாக
ஆயிரம் காதல் கணைகள்
தொடுக்கிறேன்
ஒன்றிரண்டாவது
உன் இதயம் தைக்காதா??
------------
கணைகள்
-
கோபம் ஒன்றும் சாபமில்லை
பொன்மகளே, சாந்தமாய் இரு,
சிந்தித்து முடிவெடு, கோபம்
விடுத்து மோகம் கொள் அவனிடம்,
பின் தூவிய விதை துளிர்விட்டதோடு
தளிர்விட்டு மரமாய் வளர்ந்து
நிழல் தரும் உன் காதலுக்கு,
நிழல்தரும் மரத்தை பாய்மரம்
செய்ய வெட்ட வேண்டிய
அவசியமில்லை, ஆயிரம்
கணைகள் தொடுத்தாலும்,
பின் உன் காதல் கடந்துவிடும்
கணைகளை காவியக்காதலாய்!!!
தளிர்விட்டு...
-
தளிர்விட்டு வளர்ந்தது மரம்
மட்டுமல்ல
என் காதலும் தான்
பட்டுவிட்டது என்றெண்ணி
நீ
வெட்டியது மரத்தை
மட்டுமல்ல
என் மனத்தையும் தான்
----------------------
மரம்
-
காதலர்களின்
உணர்ச்சிவசத்தால்
மரங்கள் புண்ணானது !
அவர்களின்
காதல் சரித்திரங்களை
அவர்களின்
மனதில் எழுதாமல்
மரங்களில் எழுதியதால்
உணர்ச்சிவசத்தால்
-
விஷத்தால் கூட ஏதும்
செய்யமுடியவில்லை
நீ உணர்ச்சிவசத்தால்
சொல்லி சொல்லோ
என்னை கொன்று விட்டதடி
என் உயிர்த் தோழி..!
--------
தோழி
-
தோழி நீ சரிகையில் உனக்கு
படிக்கட்டாய் நானிருப்பேன்,
கவலை வேண்டாம் காதல்
போல பழகி பாழடைந்து பாசி
பிடித்து வழுக்கி விடமாட்டேன்!!!
பாசி
-
ஊசி போல கூரிய சொற்கள்
பாசி படர்ந்த இதயத்தை
கீறி சென்றாலும்
என்றென்றும் மாறாது
மறவாதே
உனக்கான என் காதல்
-----------------------
ஊசி
-
ஊசியாய் குத்தியது உன் வார்த்தைகள்,
இதமான உன் நினைவுகளையும்,
அழகான உன் உருவத்தையும் சுமந்த
இதயத்தை.....
இதயத்தில் ஓட்டை!!!
உன் உருவம்...
-
என் இமைகள் மூடி திறக்கும் அந்த கணம்
உன் உருவம் என்னை விட்டு பிரியுமானால்.
உனக்காக இமை திறந்து தவம் இருப்பேன்.
என் கண்ணீரில் உன் உருவம் கரைந்து போகுமானால்.
என் உயிர் போனாலும் கலங்க மாட்டேன்..
என்னை விட்டு
-
நான் என்றோ
என்னைவிட்டு
பிரிந்தது என்றுகூட
விளிம்ப இயலவில்லை
என்னைவிட்டு
என்பதே
நான் தானோ?
-
அது நான்தானோ?
நம்ப முடியவில்லை உன் கண்ணைப்
பார்க்கும்போது என் அழகை....
என் அழகை
-
என்னழகை
என்னவென்றே
எண்ணுவதென்று
என்னவளின் அழகு
என்னே அழகு
என்னழகே..!!
எண்ணம்
-
உன் வாழ்வில் நான் இல்லையென்றாலும்
நீ இருப்பாய் என் நினைவுகளில்
இந்தஎண்ணம் உடைந்த இதயத்தின் கடைசி துடிப்பு வரை.
.உன்
-
உதயமான எண்ணங்கள்
உன் இதழோர புன்னகையில்
தடம்புரள
காதோர கம்மலின்
ஆட்டத்தில் என்மனம்
தட்டுதடுமாற
என்னை உன்னுடன்
எடுத்துச் சென்றாயே
என்னை இங்கே விட்டுவிட்டு
------------
கம்மல்
-
என் கன்னங்களுக்கு வண்ணம் தீட்ட இந்த உலகில்
ஆயிரம் அழகுசாதனப்பொருட்கள் இருந்தாலும்
ஏனோ, என் கன்னங்கள் உன் ஒரு நொடி பார்வை தரும் கம்மல் செம்மைக்காகதான் ஏங்குகிறது....
உலகில்
-
உலகில்
சிற்பி வடித்த சிற்பம்
பல
இதோ
சிற்பம் கொண்ட சிற்பியாய்
நான்
-----------
சிற்பம்
-
பகல் முழுவது நீ என் அருகாமையில்
இருக்க சிற்ப்பியாய் நான் என் கண் உளி
கொண்டு செதுக்கி கொண்டுதான்
இருக்கிறேன் உன் கட்டழகை,
ஹ்ம்ம்...எப்பொழுதுதான் இரவு வருமோ
கண்ணுளுக்கி உன் கட்டழகை கண் கவர்
விருந்தளிக்க!!!
கட்டழகு
-
வராத காவிரி
வந்த மாதிரி
அதிசயத்தேன்..
உன் வீட்டுக்கு
என்னை கூப்பிட்ட போது
வந்ததும் சொக்கிப்போனேனே
உன் வீட்டுப்படி
கட்டு அழகில்.. 8)
----------
காவிரி
-
கட்டுக்கடங்கா காவிரிதான் நீ,
நீச்சல் தெரிந்து கரை சேர முடியாமல்
உன் காதல் வெள்ளத்தில் தத்தளித்துக்
கொண்டிருப்பவன் நானல்லவா...
காதல் வெள்ளம்....
-
கை கோர்த்து வாழும் நாள் வரை இணைவோம்
உன்னவளாய் உன் மடியில் உயிர் விடுவேன்!!அதுவரை
உனை தொட்ட உள்ளம் எங்கும் காதல் வெள்ளம்!!
உன் விழி பார்த்து என் காலம் ஓடும்!!
கை கோர்த்து
-
அன்றொரு நாள்
இராக்காலத்தில்
கடற்கரை மணலில்
கைகோர்த்து
என்தோள் மீது
தலைசாய்ந்த்து
பௌர்ணமி நிலவை
ரசித்தோமே
வானுக்கும்
ஒரு நாள் அமாவாசை
வரும் என அறியாத
பருவம்..
-------------
பௌர்ணமி
-
அவன் முத்தம் தந்த இரவில்,
நிலவும் இரவும் தூங்கவில்லை,
பௌர்ணமி தான் இன்று
சிவராத்திரி கொண்டாடும்
என் இரவு அவனை வென்று.
நிலவும்
-
பால்வண்ண நிலவொளியில்
வீதியோரம் செல்லாதே
நிலவும் முகிலின்பின்
ஓடிஒளிகிறதே
உன்னழகின்
தான் எம்மாத்திரம் என்று
--------
வீதியோரம்
-
மஞ்சத்தில் சிதறிய மலர்கள்
இரவில் நடக்கும் நிலவின் சுவடு
வீதியோரம் சுருண்டிருக்கும்
எங்களின் கண்களுக்கு
விருந்தளிக்கும் அறுசுவை
மலர்கள்
-
மகரந்தங்கள் தாங்கிய
மலர்களும் உந்தன்
மனோரஞ்சித வாசம்தனை
நுகர்ந்து..
மதி மயங்கி
வெட்கித் தலைகுனிகின்றன
மாலைவேளை..
--------
மாலை
-
நீ சூடும் மலர் மாலைக்காக
மௌனமாய் காத்து நிற்கிறேன்
என் வாழ்வின்
வசந்தத்தை தொடக்கவா?
இல்லை
என் வாழ்வின்
பயணத்தை முடிக்கவா ?
உன் காதல் விடைக்காக
மௌனமாய் காத்து நிற்கிறேன்......
மௌனமாய்
-
வெடித்துச் சிதறும்
எரிமலைக்குள்ளும்
தீக்குழம்புகள்
இன்னும் அமைதியாய்
விட்டகன்று நீ
சென்றபின்னும்
மனத்தினில்
மௌனமாய் சில
கதறல்கள்
--------------------------
கதறல்
-
அன்பே அலைபேசியில் நான் அழைக்கும்
எல்லா நேரங்களிலும் பதில் அளிக்காமல்
ஏன் அலற விடுகிறாய்
உண்மையாய் உன்னை நேசித்த
என் காதல் மனதின் கதறல்
உனக்கு கேட்கவிலையா
அளிக்காமல்
-
பதில் சொல்ல தடுமாறுகிறேன், நன் கேட்கும்
கேள்விக்கு நீ தரும் ஒவ்வொரு விடையிலும்
ஒரு கேள்வி ஒளிந்திருபதினால்.அளிக்காமல்
தடுமாறுகிறேன்
-
தெளியாத சிந்தை கொண்டு
விந்தையான வேடிக்கை மனிதன்
போல் திக்குதிசை தெரியாமல்
தடுமாறுகிறேன்
எட்டுத்திசையிலும் எனக்கான
இடமில்லையோவென
மேல்திசை நோக்கி
தொடர்கிறது என் பயணம்
--------------
விந்தை
-
சொல்லுக்குள் அடங்காத
ஒரு விந்தை வலி காதல்
உனக்குள் தொலைந்த என்னை நீ
தொலைத்து விட்டாலும்
உன் நினைவுகளோடு வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்
வாழ்ந்து
-
வாழ்ந்து கெட்டவன் என
ஊர் சொன்னாலும்
பரவாயில்லை
உன்னோடு வாழாமல்
செத்துப் போவதைவிட
---------
ஊர்
-
காதலின் வலியை நானும் உணர்ந்தேன்
ஊர் அவன் என்னை நினைக்காத போது அல்ல
இன்னொருத்தியை நினைத்த போது..
காதலின்
-
காதலின் தீபமொன்று
ஏற்றுவாளென்று எண்ணி
காத்திருந்தேன்
வந்தவள் தீவட்டி கொண்டு
நெருப்பல்லவா மூட்டிச்
சென்றாள்
பிரிவின் வடு
----------
வடு
-
நீ என்னை மறந்தாலும்
நினைவு உன்னைத் தேடுதே - நீ
வெகுதூரம் பறந்தாலும்
மனம் உன்னை நாடுதே
பிரிவின் வடு கொடுமை
மனம்
-
போன போக்கெல்லாம்
செல்லாதிருந்த என்
மனம்
இன்று பித்தம்பிடித்து
அலைவானேன்
சரவணன் மீனாட்சி
முடிவு தான் என்ன?
----------------------
முடிவு
-
முழுநிலவாய் நீ என் அருகிலிருந்தாலும்
நெருங்க நினைக்கும் போதேல்லாம்
சூரியனாய் சுட்டெரிக்கின்றாய் - ஆனால் முடிவு
நானோ சூரியனையே காதலிக்கும் பினிக்ஸ் பறவை
அருகிலிருந்தாலும்
-
தொலைதூர நட்பெல்லாம்
அன்னியோன்யமாய் தெரிய
அருகிலிருந்தாலும்
நம் உறவு அன்னியமாய்
தெரிகிறதே
இது என்ன ஊடலா??
--------
ஊடல்
-
முட்டாளா நீ மறந்துவிடு மறந்துவிடு
என்கிறாயே ......? உன்னிடம் நான் பேசிய
வார்த்தைகளை கூட மறக்க இயலாது ...
பின்பு எங்கேஉன்னை மறப்பது.. இது தன காதலில்ஊடல்அஹ
முட்டாளா நீ
-
முட்டாளாநீ என்று தலைப்பு
கொடுத்து எழுதச்சொன்னாயே
முட்களின் மீதிருக்கும் ஆளாய்
இத்தனை நாட்களிருந்தேனே
கவனிப்பாரற்று
தலைப்பு தந்தவன்
தலைகாக்க தவறியதேன்..
--------
முள்
-
காதலர்தினம் என்றால் ஞாபகம்
வருவது
எல்லோருக்கும் ரோஜா தான் நானும்
அதை போல்
தனியே தவித்து கொண்டு இருக்கிறேன்
ஒரு ரோஜாவை போல்
வார்த்தை சொல்லும் முன்பே வாடி
காய்ந்து விடுகிறேன்
ரோஜா வின் முள் குத்தும் இடம் என் இதயம்
தனியே
-
கால்கடுக்க வாயிலின்
காத்திருந்தேன் தனியே
நீயோ சென்றுவிட்டாய்
பின்வாசல் வழியே
இனியில்லை என்
வாழ்வில் பிணியே
-------
பிணி
-
அவள் குத்தி விட்டுப்போன
என் கண்களில் இன்னும் கண்ணீர்
வந்து பிணி கொண்டுதான் இருக்கிறது...
அவள் கைகள் புண்பட்டிருக்குமோ?? என்று
காதலித்துப் பார்.. கவிதை வரும் என்று சொன்னவர்களே
கண்ணீரும் வரும் என்று ஏன் சொல்லவில்லை??..
காதலித்து பாருங்கள்... கண்ணீரும் வரும்!!..
கண்ணீரும்
-
குத்திவிட்டுப் போனால், அவள் கைகள்
பிணி கொண்டிருக்கும் கவலை
வேண்டாம் தோழனே...உன் கைகள் எங்கே
போனது, பிணிக்கு மருந்தைத் தேடு...
துடைதுப்பார் உன் கண்ணீரை
மீறி வந்தால் கதை சொல்லட்டும் உன் வெற்றியை....
அவள் கைகள்
-
என்னை சித்திரவதை செய்வதை
விட அவள் கைகளால் கொன்றுவிடு
அந்த தோல்வியை தாங்கி கொள்ளும்
வலிமை என் இதயத்திற்கு இல்லை.
வலிமை
-
காதலின் வலிமை உற்றவர்
இல்லா தனிமைதான்...
நானும் நீயில்லா தனிமையில்
கல்லறையில்...
நீ உணராத போதும் நான் உணர்ந்தேன்
உயிர் பிரிந்து உடல் பிரிந்து ஆன்மாவாய்
சுற்றும்போது....வலிமையை...
கல்லறை
-
காத்திருந்து பாத்திருந்தேன்
பல நிமிடங்கள்!!
காணவில்லை நான்
உன்னை இன்றுவரை என் காதலியே!!
காரணமே இல்லாமல் பிரிந்ததால் -
என்னவளே இன்றும்
என் இதயம் வலிக்குதடி
உன்னை எண்ணியே!!
காத்திருக்கேன் கல்லறைல்
என் இதயம்
-
அவள் பிரிவால் வலியாலும்
வேதனையாலும் தினம் தினம்
அழுது தவித்துக் கொண்டிருக்கிறேன்...
என் இதயம் என்னிடம் சொன்னது...ஏன்
அழுகிறாய்? நான் இருக்கிறேன் என்று...
அறியவில்லை போலும், அடமானம்
வைத்து அழுவதே இதயத்தைதான் என்று....
என் இதயம்
-
உன் கோபம் நம் நினைவுகளைக் கசக்கி எரிகிறது..
உன் முகம் பார்க்காத விழிகளும்
உன் விளையாட்டுப் பொய்களைக் கேட்காத செவிகளும் துடி
என் இதயம்துடிக்கிறது....
உன் கோபம்
-
உன் கோபத்தால்
நான் உனக்கு கொடுக்கும்
காதல் கடிதங்கள் எல்லாம் - நீ
எரிகிறாய் இல்லை எரிக்கிறாய்.
அவற்றின் மிச்சங்களை கூட
பத்திரமாக வைத்துள்ளேன்
உன் விரல்கள் தீண்டியதால்.
உன் விரல்கள்
-
உன்னை எண்ணியே உன் விரல்கள் பிடித்தேன்
காரணமே இல்லாமல் பிரிந்ததால் -
என் இதயம் வலிக்குதடி
காரணத்தை கூறு
நியாயமாக இருந்தால் -நானே
உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்
என்னவளே இன்றும்
என் இதயம் வலிக்குதடி
உன்னை எண்ணியே!!
வலிக்குதடி
-
சித்திரமாய் எந்தன் நெஞ்சினில்
ஒட்டிவைத்தேனே
உந்தன் நினைவுகளை
உன்மேல் கொட்டி
வளர்த்த என் காதல் செடியை
வெட்டிச் சென்றாயடி
உள்ளம் உறைய
வலிக்குதடி
------------
செடி
-
ரோஜா செடி விட அழகு அவள்
நான் அவளுக்கு
பிடிக்கும் என்று எண்ணி
கொடுத்த ரோஜாக்களை
எல்லாம் எரியவில்லை
இன்று கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு
வருகிறாள்
-
வருகிறாள் என்றறிந்து
ஆவலாய் புறப்பட
எத்தனிக்கிறேன்
பின் தான் உறைத்தது
தாமதமாய் அவள்
வருவதறியாமல்
அவசரமாய் நானும்
காதலறையிலிருந்து
கல்லறைக்குள்
சென்றுவிட்டேன் என்பதை
-------------
காதலறை
-
உன் நினைவை சுமந்து இன்னும்
காதலறையில் வழி தேடிக் கொண்டுதான்
இருக்கிறேன்.... அது என் கல்லறை
என அறியாமல்!!!
கல்லறை
-
உன்னுடன் மட்டுமே பேச துடித்து
கொண்டிருந்த பொது பேசாத நீ
துடிப்பு நின்ற உடன் ஏன் பேச
வந்தாய் என் கல்லறைக்கு.
உன்னுடன்
-
பசுமையான புல்வெளி
பால்வண்ண நிலா
இரவுநேர கடலலை
முகத்தை வருடும்
தென்றற்காற்று
இப்படி பார்த்து பார்த்து
இயற்கையை வியந்த
ரசிப்புத்தன்மையை
ஏனடி எடுத்துச்சென்றாய்
உன்னுடன்
உன்னை பார்த்த நொடிமுதல்
எந்தன் ரசனையாவும்
நீயாய் மாறியதேனடி..
---------------------
கடலலை
-
உன் காதல்
கடலலை போல்...
காலையும் வருடுகிறது
சுனாமியாய் இழுக்கிறது...
சுனாமியாய்
-
காதல் கரையோரம்
இளைபாற ஆசைகொண்டே
நின்றிருந்தேன்
உன்னை காணும் வரை
உந்தன் விழிபார்வையில்
கரையோரக் காதலனை
என்னை சுனாமியாய்
தாக்கியது உன் காதல்
இனி எங்ஙனம் மீள்வது?
------
எங்ஙனம் :)
-
எரிய இருக்கும் உடம்பினில்
ஒரு பாகமாய் இதயம் என்ற
உயிர் மூச்சாய் நீ இருக்கையில்
நான்
எங்ஙனம் எரிவேன்....?
பாகமாய்
-
குறித்துக்கொள்ளுங்கள்
நான் மரித்தபின்
என் இதயத்தையாவது
தானமாய் கொடுங்கள்
அவளை என்றும் நினைத்து
அவளே என் பாகமாய்
துடித்த என்னிதயம்
நானின்றி போனாலும்
அவளாய் அவளுக்காய்
துடிக்கட்டும்
------------------
இதயம்
-
காற்றும் இசை ஆகும்
நீ அதை சுவாசித்தால்...
வார்த்தைகளும் கவிதை ஆகும்
நீ அதை வாசித்தால்...
இந்த உலகமே உனதாகும்
உன் இதயத்தை நேசித்தால்...
காற்றும் இசை
-
வலிமிகும் துளைகள்
தாங்கினால்
காற்றும் இசையாம்
மூங்கிலின் புல்லாங்குழலாய்
வழியின்றி தவித்தாலும்
பொறுமை கொண்டால்
வாழ்வினில் சிறப்பே
நல்ல மானுடனாய்..
-----------
மானுடன்
-
அழியாத இந்த மண்ணை
கட்டி ஆளத்துடிக்கும் மானுடன்
ஏனோ நாளை அழியபோகும்
மனிதனை மறந்து போனான்
மண்ணை
-
மதங்களின் பிடியில்
சிக்குண்ட மனிதம்
மறந்து போனது
காலம் போனபின்
காலாகாலத்துக்கும்
மனிதன்
நேசம் கொள்ளப்போவது
மண்ணை
-----
மதம்
-
மதங்கள் சொல்லும் மனிதநேயம்
ஒன்றேன்ற போதும், மனிதன்
மட்டும் மதம் பார்பதேனோ??? ???
முடிவெடு ...மதத்தை பதம் பார்க்க
ஐந்தறிவுள்ள ஜீவனா அல்ல ஆறறிவு
உள்ள மனிதனா?
மனிதநேயம்
-
ஐயமின்னும் மிச்சமிருக்கிறது
காயங்கள் பல
நேர்ந்தாலும் உலகில்
மனிதநேயம் மரித்திடுமா
ஒரு சதவிகிதம் ஆனாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது
என்கிறது புள்ளிவிவரம்
-----------------
புள்ளிவிவரம்
-
கடவுள் கேட்காமல்
தங்ககோவில் கட்டும்
மனிதா !
அனாதை குழந்தை
அழுதும் உணவுதர
மறுக்கிறது உனது மனம் !
எங்கு செல்கிறது
மனிதநேயம்
கடவுள்
-
கடவுள் படைத்த அதிசயங்களுள்
முதன்மையானது என் இதயமாகத்தான்
இருக்க முடியும்...உன் குடியிருப்பில்!!!
அதிசயம்
-
இந்த உலகம் என்னை போல
உண்மையான காதலர்களை காணும் வரை
என் கல்லறை ( தாஜ்மஹால் ) என்றும்
ஓர் உலக அதிசயமே !
உண்மையான
-
உன்னையும் உலகையும் வசமாக்கும்
உண்மையான அன்பை ஆராய்ந்து
பார்க்காதே அன்பென்றாலே உண்மைதான்...
ஆராய்ந்து பார்த்திருந்தால்... அன்னை தெரேசா
இவ்வுலகிற்கு அன்னையாகி இருக்க மாட்டார்!!!
அன்னை தெரேசா
-
விந்தையாகி போன
வாழ்க்கையில்
அட என்னவொரு
அதிசயம்...
வீட்டுமுற்றத்தில்
ப்றந்து வந்தது
வெள்ளைப்புறா
காதல் தூதுடன்
-------------
புறா
-
தூது விடுகிறேன் உனக்கு
என் உள்ளத்தை எழுதுகோலாக்கி,
என் அன்பை காகிதமாக்கி,
என் அரவணைப்பை மையாக்கி,
என் கண்ணீரை பேரளையாக்கி,
வானமே எல்லையாய்,
என் இதயமே புறாவாய்.....
அரவணைப்பு
-
எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே
அன்பு
-
உலக கவிதைப் போட்டியாம்,
கவிதைகள் பலவிதம் கவிஞர்கள்
எழுதினர்....நூறு வரி, இரநூறு வரி..
ஆயிரம் வரியென... வரியை வரிந்து
கட்டிய கவிதைகள் மத்தியில் ஒரு
வார்த்தை கவிதைகூட இடம் பெற்றது
அன்பு!!!
ஒட்டுமொத்த கவிதைக்கும் ஒரே ஒரு
அர்த்தமாய்.....
போட்டி
-
ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான் அனுப்ப வேண்டும்…
ஓவியப் போட்டி
-
சொர்க்கத்தில் ஓவியப்போட்டியாம்
ஆயிரம் தேவர்கள் கலந்து கொள்ள
இறுதியில் ஜெயித்தவன்
பிரம்மனாம்
அவன் வண்ணத்தூரிகையில்
வரைந்த ஓவியமாய்
நீ
--------------------
தூரிகை
-
ஓவியமாய் நான் உன் கண்ணுக்கு
உன் இமை தூரிகை என்பேன் நான்
"காதல் ஓவியத்தை" மிக அழகாய்
என் உள்ளே வரைந்ததற்கு
உன் கண்ணுக்கு
-
சாலையில் போகும்
கன்னியர் எல்லாம்
காளையன் என
எனைக்கண்டு வியக்க
உன் கண்ணுக்கு
மட்டுமென்ன
நான் தெரியாமலேயே
போனதேன்??
-------
சாலை
-
கண்கள் உன்னைக் காதலிக்கவில்லை
கைகள் உன்னைத் தீண்டவுமில்லை
கால்கள் உன்னை சாலையில் தொடரவுமில்லை
உள்ளத்தால் மட்டும் உன்னோடு இணைந்தேன்
தொடரவுமில்லை
-
காலத்தின் கோலத்தில்
உன்னுடனான காதல்
துவங்கியதுமில்லை
தொடரவுமில்லை
தூரத்திலிருந்து
என்னை நீயும்
உன்னை நானும்
பார்த்திருந்த கணங்கள்
மட்டும் அழியாமல்
நம் நினைவுப்பிம்பங்களில்
---------------
நினைவு
-
உண்மை சொல்!
உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?
உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....
அய்யோ!
உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது
உன் பிரிவால்
-
இருளும் இரவும்
பிரிவோம் எனவுணர்ந்தே
சல்லாபிக்கின்றன
காலையில் கதிரவன்
தன் கணைகளால்
பிரிக்கும்வரை
உன் பிரிவால்
துயரிலாடும் உள்ளமும்
மாலைநேரம் நோக்கி
மலர்கிறது
சேரும் வேளை வராதாஎன்று!!
-----------------
கதிரவன்
-
நான் அவளுக்கு
பிடிக்கும் என்று எண்ணி
கொடுத்த ரோஜாக்களை
எல்லாம் எரியவில்லை
இன்று கொண்டு வருகிறாள்
என் கல்லறைக்கு
இதறுகு சாட்சி கதிரவன் கடுவுள் தன
என் கல்லறைக்கு
-
என் கல்லறைக்கு வழி காட்டினால்
அவள்...புரிந்து கொண்டேன் அவள்
காதலறை போனது என கல்லறையை
தேடித்தான் என்று!!!
எனக்கு நானே குழி பறிச்சிட்டேன் :'(
எனக்கு நானே
-
எனக்கு நானே வாழ்ந்தேன் தனியே ..
என் வாழ்வின் நொடியே....
விழியில் விழியில் விழுந்தேன் ....
தனியே தனியே நின்றேன் ....
ஹேய் நீயாரோ நீயாரோ....
என்னை சுற்றி இருக்கின்றாய் .... .
தனியே ..
-
தனியே தவிக்கிறேன் உன் துணையை
மட்டும் இரவிலும் வெளிச்சம் தரும்
சூரியனாய் எண்ணி!!!
உன் துணை
-
தனிமைகளுக்கே
தனிமையை கொடுத்தது
உன் துணை அற்ற தூக்கமற்ற இரவுகள் .
தூக்கமற்ற இரவுகள்
-
தூக்கமற்ற இரவுகள்
தனியே தனியே நனைந்தேன் ....
மனமே மனமே தனியாய் ஏனோ குதித்தது காய்ச்சல் போல...
உலகம் தவிர்த்தேன் ஏனோ ....மனதில் தீயாய்....
உணர்வுகள் கூட மறந்தேன் உன் சிரிப்புகளால் ..
ஏனோ நீதான் நீதான் என்னை சுற்றி இருக்கின்றாய்
மனதில் தீயாய்
-
காய்ந்த மரம்
தீயால் கருகுவது போல்
உன் சுடுசொல்
என் மனதில் தீயாய்
பற்றி எரிகிறதே
அறிவாயா தோழி..
---------
சொல்
-
பாலைவனம் சோலைவனமாகும்!
காரணம் அந்த ஒரு சொல்!
நீயெனை ஆசையாய்
அழைக்கும் “அந்த பெயர் ”!
சோலை
-
சோலையில் கூவிய
குயிலது பிடித்து
பாலையில் வேகாத
வெயிலில்
கூவுவதென்றால்
தென்றலும் புயலாகுமே
ஆடுமே
ரௌத்திர தாண்டவமாய்
--------------
தாண்டவம்
-
நெஞ்சினில் வீரமும்
பெண்மைக்கு தந்திட்ட
வள்ளல் அவன்!
பாட்டினில் ஆடிய...
ரௌத்திரத் தாண்டவம்
நெஞ்சினில் இன்னும்
பெரு நெருப்பாய்...!
நெஞ்சினில்
-
கள்ளுண்ட வெறிகொண்டு
தள்ளாடுதே மனமின்று
சீறிப்பாய்ந்த சொல்லீட்டிகள்
நெஞ்சினில் குத்திக்கீறுகையில்
வழிந்தது என் உதிரம் மட்டுமல்ல
உனக்கான என் காதலும் தான்
------
உதிரம்
-
உன் நிழல் படும் இடம் நான்
ஓய்வெடுத்தால்..
பனிகூட எனக்கு ஈரத்துணி போல்தான்…
என் உதிரம் துடைக்க நீ உடன் இருந்தால்…!!!
ஓய்வெடுத்தால்
-
கடக்கும் தூரம்
இன்னும் மிச்சமிருக்கிறது
நிறைய
ஓய்வெடுத்தால்
சேருமிடம் சேராமலேயே
சேர்ந்துவிட்டால்
நேரப்போவதேனோ?
மனமாறி விடுவானோ?
-------
தூரம்
-
நம் இருவருக்கும் இடையில்
பல்லாயிரம் மையில்கள் - நமக்குள் ,
பேசாமல் அமைதியாய் கழியும்
கன நொடி நேரம் -
கொடிதினும் கொடிது
கன நொடி
-
கன நொடி கூட உனை
நினைக்காமல் நானில்லை,
அதனால்தான் என்னவோ
உன் கால்தடம் கேட்கிறது என்
இதயத்தில்....லப் டப் லப் டப்...
உயிர் வாழ்வேன் ஓசை இருக்கும்வரை.....
கால்தடம்
-
உன் கால்தடம் பேசியது
என்மேல் கொண்ட
உன் காதலை....
சிலகணம் திகைத்து நின்றேன்
'கால்தடங்களும் பேசுமா?
காதலுக்காக என்று"....
சிலகணம்
-
கனமான மனதும்
சிலகணங்கள்
தவிக்கின்ற பொழுது
காட்டாறு போல
கரைபுரண்டோடும்
விழியோர
கண்ணீரும்
---------------
கரை
-
காதல் கிணற்றுக்குள்
கால் வழுக்கி விழுந்தவன்
அவளுடைய
கண்கள் வீசிய
கயிற்றைப் பிடித்து கொண்டு
கரையேறும் போது-......
கயிற்றைப்
-
மணலாய் மூடப்பட்ட
பாலைவனத்தில்
திக்குதெரியாமல்
விழுந்துவிட்டேன்
கானல்நீராய் தெரிந்த
மணற்கிணற்றில்
தலைமீது மண்சிதற
கயிற்றை இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உயிரோடு
புதையும் வரை
--------
கானல்நீர்
-
நேற்று வாழ்வின் இன்பங்கள்
இன்று வாழ்வின் ஏக்கங்கள்
நாளை வாழ்வின் நோக்கங்கள்
நாளும் தோன்றும் கானல்நீர்
வாழ்வின்
-
வசந்தங்கள் வாழ்வின்
அர்த்தங்கள் தேடி
நிதமும் நின்னை
சிந்திக்கிறேன்
எங்கே இவளென்று
யாசிக்கிறேன்
இத்தனை நாள் என்னை
காக்க வைத்தாலும்
இதுவரை ஊரறியா
பேரறியா உன்னை
என் உளமாற
நேசிக்கிறேன்..
---------------
இவள்
-
இவன் அதிகம் இன்று இவளுக்காக
காத்திருந்த காரணத்தால்
எழுதினான் கவிதை ஓன்று
"அவள் கன்னத்தில் முத்தம்"
காத்திருந்த
-
காத்திருந்த பொழுதுகள் கடந்து
கண்ணியொருவல் காதல் வலையில்
வீழ்ந்தேன்...வீழ்ந்தும் கிடைத்த
பரிசு காத்திருப்பு மட்டுமே, அவள்
என்னிடம் விட்டுச் சென்ற
நினைவுகளுடன்....கன நேரமும்
வந்து செல்கிறாள் இன்று, நிஜமாய்
அல்ல நிழல் உருவாய்...
நிழல் உரு
-
மனதின் பிம்பங்களில்
இன்னும் சற்று
மிச்சமிருக்கிறது
அவளின்
கன்னத்தின் குழியும்
இதழோர புன்னகையும்
மதுவில் மிதக்கும்
திராட்சை போல
மயக்கும்
கண்ணின் கருவிழிகளும்
என்றும் எந்தன் நினைவினில்
நிழல் உருவாய்
------------
திராட்சை
-
கறுப்புத் திராட்சை தோட்டத்தில்
கண்கள் மறைக்கும் பனி மூட்டம்
காதலி சுருண்ட கூந்தலில்
கமகம மணக்க சாம்பிராணிப் புகை
கூந்தலில்
-
மல்லிக்கும் மணமுண்டு
அவள் கூந்தலில்
சூடியபின்னே
ரோஜாவிற்கும் நிறமுண்டு
அவள் கை
வருடியபின்னே
அவள் என் தேவதை
---------
தேவதை
-
எனக்காக ரோஜாக்களை
ஏந்தி வரும் நாளில்
உன் பெயர் தேவதை!
சிரிப்பைக் கேட்டால்
வெட்கப்படுகிறாள்
வெட்கத்தைக் கேட்டால்
முத்தமிடுகிறாள்
வெட்கத்தைக்
-
கண்ணில் உதிர்ந்த கண்ணீர் என்னை கேட்டது,
அவள் செய்த வெட்கத்தைக்
குற்றத்திற்கு என்னை
ஏன் வெளியற்றுகிறாய் என்று.
கண்ணில்
-
மாயங்கள் செய்தனையோ
வேகாத வெயிலிலும்
என் கண்ணில்
காதல் மழை
ஏனோ அறியாமல்
உனக்குப் பிடிக்கிறாய்
குடை..
பிடிக்கிறதா..?
--
குடை
-
உன் பேச்சு மழையல் நினைத்து குடை பிடித்தேன்
உன்னை நினைத்து
மற்றவர்கள் என்னை பற்றி கேட்கும்
கேள்வி கூட புரியவில்லை.
எப்போதும் உன்னை நினைத்து
கொண்டிருபதினால்.
எப்போதும்
-
கற்பனைகள் எப்போதும்
காயம்பட்ட மனதில்
அதிதமாய் நர்த்தனமாடும்
பல நேரம்..
தெளிவானால் சொல்லியனுப்பு
விளையாட வருகிறேன்
அந்நேரம்..
-------------------------------------
தெளிவு
-
முள் குத்தியுடன் உன்னிடம் இருந்து
வெளியேற விருப்பமில்லாமல்
ரத்தம் கூட உறைந்து நின்றது.
தெளிவாக உணர்ந்தேன்
ரத்தம்
-
உன்னை நினைத்து நான் கவிதை
எழுதும்போது என் பேனாகூட
ரத்தம் சிந்துகிறது.....
நான் கவிதை
-
நீ என்னை வெறுத்து திட்டும்
சில வார்த்தைகள் கூட
நான் கவிதை எழுதும்போது
உன் வார்த்தைகளை ரசிக்கிறேன்
வார்த்தைகள்
-
நீ பேசியவார்த்தைகள்
பிரிந்து சென்ற
நொடியில்
கதறி அழுதது
நானல்ல
நான் வாங்கிவந்த
உன் "இதயம்"
கதறி அழுதது
-
என் காதலின் ஆழம் காண நினைத்தால்
என் கண் இமைகளையும்
தலையணையும்
கேட்டு பாரடா
காரணமே இன்றி அழுத இரவுகளும்
கண்ணீரில் நனைந்த தலையணையும்
நீ கேட்ட மறு நொடியே கதறி அழுமடா
என் காதலை நினைத்து
அழுத இரவுகளும்
-
உன் அழுத குரலை நன் கேட்ட இரவுகளும்
ஊர் கூடி கும்மியடிக்க
உன் நினைவில்
நான் துடிக்க
நீ இன்றி
காலங்கள் ஓடுவதில்
என் உறக்கமும்
தொலைந்து போக
வாடுகின்றேன்
உன் வருகைக்காக
தினம் தினம் ஏதோ
சிந்தனை தொடர்வதால்
பாடுகின்றேன்
பைத்தியமாகவே...!!!
உன் வருகைக்காக
-
அரக்கனே !! உன் வருகைக்காக
காத்திருப்பேன் என்ற உன் நினைவை
எப்படி புரியவைப்பேன்
உன் இதயத்திற்கு..
என் இதயம் செத்துவிட்டதென்று ........
உன் நினைவை
-
நீ இல்லை என்னுடன்
குளிர் நிலவில் நடக்கின்றேன்
தேகம் எரிகிறது
பஞ்சணையில் துயில்கின்றேன்
மேனி வலிக்கிறது
இளந் தென்றல் என்னை
இம்சை செய்கிறது
என்னவளே எங்கு சென்றாய்
உன் நினைவை மட்டுமே சுமந்து
போய்கொண்டு இருக்கேன்
இங்கபோறேன் என்று குட தெரியாமல்
எங்கு சென்றாய்
-
ஒவ்வொரு நொடியும் என்னில் நீயே .....
என் நிழல் கூட உன்னை எதிர்பார்கிறதே...
எங்கு சென்றாய் நீ....
உன்னை எதிர் பார்க்கும் உயிர்காக ...
ஒருமுறையாவது என் கனவில் வருவாயா..
நொடியும்
-
உயிரே...
உறவெனே
நீ நினைத்தாய்...
உன்னை என்
உயிரென நினைத்தேன்...
உன்னிடம் கேட்டேன்
காதல் எனும் வரம்...
முடிந்தால்
தரவேண்டும்...
உன் மடியில் ஒருஒரு நொடியும்
உயிர் விடும் சந்தர்ப்பம்...
எதை நீ விரும்பினாலும்
நான் ஏற்று கொள்வேன்...
உன் உச்சரிப்புக்காக
ஒருமுறை நான்.....
ஏற்று கொள்வேன்...
-
ஏற்றுக் கொள்வேன் பெண்ணே,
என் மரணத் தருவாயிலும் கூட,
உன் பலகோடி வார்த்தைகள் கொண்ட
மௌனத்தை...
மௌனம் சம்மதம்!!!
என் மரணத்தறுவாய்
-
நினைத்து கூட பார்க்கமுடியவில்லை .......
உன்னிடம் பேசாமல் இருப்பதற்கு!
மனத்தால் மட்டும் அல்ல,மரணத் தருவாயிலும்
கூட ..பேசும் என் மனம்...
நினைத்து
-
நினைத்து பார்த்து வருந்தாதே
நம் நினைவுகளை என்றாய்!!!
மறக்க முடியாத நினைவுகளை
தந்தவள் நீ என்பதை நினைத்து பார்க்க
ஏன் மறுக்கிறாய்???
நினைவுகள்
-
பாவத்திற்கு கிடைத்த மன்னிப்பை போல
நீ எனக்குக் கிடைத்தாய்
என் நினைவுகள் மறந்து விட்டதாகச்
சொல்கிறாய்! பிறகு ஏன்
உன் கண்ணில் நீர்?
உன் கண்ணில்
-
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்ஞில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவை அன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயமானதடி
கரம் பிடித்தேன்
-
கோடியுகம் ஓடியும் பூமி காதலெனும்
கவின்மிகு அழகியை விடவில்லை,
மயங்காத ஆணுமில்லை பெண்ணுமில்லை,
மயக்கத்தில் நீயும் நானும் திளைத்து
அக்கினியை வலம் வந்து உன் கரம்
பிடித்தேன், உன்னை என் வாழ்வின்
துணையாய் வலம் வரத்தான் பூமியைப் போல!!!
கோடியுகம்
-
மெல்ல முடியா உணர்வுகள் கோடியுகமாய்
சொல்லதெரியா நிமிடங்களாய்
தேடி அலைகிறேன்
சொல்லமுடியா சோகங்கள் கோடியுகமாய்
தள்ளத் தெரியா நிமிடங்கள்
தேடி அலைகிறேன்
அலைகிறேன்
-
விழுதாய் மாறிய விதைகளின்
வேர்வரை சென்று பார்க்கிறேன்
விஷங்களோ விதம்விதமாய்
பதம் பார்த்திருக்க காண்கிறேன்
தேடிய இடமெல்லாம் நீலம்
பாரித்திருக்க நீலகண்டனைத்
தேடி அலைகிறேன்
பூவுலகில் ஆலகால் விஷமுண்டு
அமிர்தம் காண
-------------
விஷம்
-
இவ்உலகில் அனைத்தும் நேர்த்தியாய்
நிகழும்போது, உன் தனித்த
பார்வைமட்டும் ஏன் ? என்னை விஷம்
கொடுத்து ஊமையாக்கப்பார்க்கிறது ...
நேர்த்தியாய்
-
நேர்த்தியாய் என்ற சொல்லே
நேர்கோடாய் இல்லையே
நேர்த்தி என்பது காட்சிப்பிழையால்
நேர்வதே
நேர்த்திக்கடன் மிச்சமுண்டி
நேர்ந்த பிழைதீர்க்க
நேராகுமோ இந்த கேள்விக்குறியும்?
------------
காட்சிப்பிழை
-
நேர்ந்த பிழைதீர்க்க விடை
காண நேரமின்றி கடந்து
போகின்றன சில கேள்விகளும்
வெற்றிடம் நோக்கிய
பயணம் என்றாலும்
மறக்க வைக்கும்...சில பிழைகளை
காட்சிப் பிழையாக நீண்டு போகும்
வாழ்க்கை
வெற்றிடம்
-
ஆடி ஓடி களைத்து
அயராது திட்டமிட்டே
இயன்றன் போய் சேர
வெற்றியிடம்
ஆயின் யார் செய்த
வினையோ
சேர்ந்துவிட்டான்
வெற்றிடம்...
--------
ஓடி
-
ஆடி ஓடி களைத்து
கவிதை படிக்கும் போதே
மனசு கனக்கிறது.... ஓடி உதைத்து
விளையாடுகிறது !-தமிழ் .... மீண்டும் மீண்டும்
படித்து மகிழத்தக்க கவிதை ...என்றும்
தொடரனும்
மனசு கனக்கிறது
-
தேடித் தொலைத்தவன் நானோ
தொலைந்ததைத் தேடி மீண்டும்
வாழ்க்கைப்பயணத்திலே
வெறுமயான பாலைவனப் பரப்பிலே
கூடயாரும் துணையின்றி
கால்கள் தடுமாறி
கண்கள் சொருக கண்டேன்
பாலைவன சோலையை
இளைப்பாற என்றெண்ணி
கண்ணயர்ந்துவிட்டேன்
குளுமையான காற்றின்
அன்பிலும் பாசத்திலும்
விழித்துப்பார்க்கின்றேன்
விழுந்துக்கிடக்கின்றேன் சுடும்
வெண்மணற்பரப்பில்
சோலையெனக் கண்டது
வெறும் கானல்நீரோ யன்றி
சேர்ந்த பழங்கள் பையிலே
இருக்கின்றனவே
மாயமாய் போனதோ
சோலையும் என்னைவிட்டுவிட்டு
மனது கனக்கிறது
மீண்டும் தொடங்குகிறேன்
அகண்ட வெளியிலே எந்தன்
பயணத்தை..
அரிதாய் கிடைத்த பேரிச்சைப் பழங்களுடன்
பேர் இச்சைப் பழங்களை விட்டுவிட்டு..
சமயம் வாய்த்தால் சந்திப்போம். நன்றி!!!
------------
சமயம்
-
அகண்ட வெளியிலே உந்தன்
பயணத்தை தொடர்ந்தாலும்
சமயம் பார்த்து
பேசுவதாக.... எண்ணி
சமயோசிதமாக
கதைப்பதாக.... நினைத்து.....
மாயமாய் போக நினைத்து
வார்த்தைகளை விட்டு...
போகும்..... சிலரில்
நீயும் நானும்.....!!நம்
பாதைகளில்
மாயமாய்
-
முன்னூறு நாள்
சுமந்ததால்
அவள் அன்னை!
அதற்கும் மேலாக
உன்னை சுமக்கிறேன்
என் மனதில் - நான்
யார் உனக்கு?
மாயமாய் பொன்னாலே
யார் உனக்கு
-
யார் உனக்கு
நான் யார் உனக்கு
நல்லது சொல்லும் தோழியா
நாணம் கொள்ளும் சரி பாதியா
பிற ரத்தம் என்றாலும்
பிரியாமல் இருக்கும் சகோதரியா
யார் உனக்கு ?
நான் யார் உனக்கு ?
நாணம்
-
நாணம் உன்னைக் கண்டதாலே
வானம் மெல்ல நகருதே..
எந்தன் பக்கம் வருகுதே..
காய்ந்த பூவும் மணக்குதே..
எல்லா செயலும் பிடிக்குதே..
உன்னை நானேக் கண்டதாலே..!
கண்டதாலே.
-
முன்பு மரணத்தை கண்டு அஞ்சினேன் ...
தற்பொழுது...
உன்னை கண்டதாலே...
அந்நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...
என் மரணம்கூட உன் மடியினில் என்பதால் ..!!
மரணம்...
-
நான் சுவாசிக்கும் மூச்சு காற்று
இந்த நொடியே என்னை விட்டு
சென்றாலும் - என் உயிர் மட்டும்
என்னோடு தான் உள்ளது!
நீ என்னை விட்டு செல்லும்
தூரம் மலர்கள் சூடிய என் மரணம்
பாதையை காட்டுகிறது!
சுவாசிக்கும் மூச்சு
-
நீ சுவாசிக்கும் மூச்சு
உதிர்கின்ற பேச்சு
அனைத்துமே நானாக
அரும்பாகும் ஆசைகள்
கரும்பாகி இனிக்குமா
கருகித்தான் போகுமா
அரும்பாகும்
-
நாம் அருகருகிலில்லை - ஆனால்
உன் நினைவுகள் என்னருகில்..
உன் குரலிங்கு கேட்கவில்லை - ஆனால்
உன் வார்த்தைகளே என்னிதயத்துடிப்புகள்..
உன் முகம்பார்க்கவில்லை - ஆனால்
உன் முகமே பார்க்கும் ஒவ்வொரு முகங்களிலும்..
எப்பொழுதும் உன்னோடு
உன்னருகிலிருந்திடும் ஆசையில்லை..
உன்னோடிருந்த சிலமணித்துளிகள்
என்றும் என்னோடு.. அரும்பாகும்
உன்னோடிருக்கும் சிலமணித்துளிகளுக்கான
ஏக்கங்களோடு காத்துக்கிடக்கும் இந்தயிதயம்..
உன்னோடிருக்கும்
-
உன்னோடு இருக்கும்
ஒரு நிமிடத்துகாய்
பல மணித்துளிகளை
பாழாக்கிய ஒருத்தி
உன்னோடு வாழும்
ஒரு நிமிடத்துக்காய்
ஒரு ஜென்மம் என்ன
பல ஜென்மத்தையும்
பாழாக்க காத்திரிக்கிறாள்
ஒரு ஜென்மம்
-
'ஒரு ஜென்மம் போதாது' என
உன்னிடம் கூறியதில்லை....
அதனை
கூறும் நொடிகளைக் கூட
காதலின் தருணங்களில்
வீணாக்க விரும்பாததால்...
நொடி
-
கடந்த நொடியை விட நாம்
இழந்த செல்வம் வேறில்லை
திரைகடல் ஒடி தேட நாம்
விழைந்த சொர்க்கம்
என் ஐந்து விரலிடையில்
உன் விரல் பூக்கும் நொடியை விட
வேறில்லை .
இல்லை
-
இல்லை என உன் இதழ்கள் கூற
ஆம் என உன் விரல்கள் ஊர
விடையறியாமல் விழி பிதுங்கி
வார்த்தையில்லாமல் மொழி பதுங்கி
வியர்த்து நிற்கிறேன் நான்...
மொழி
-
உன் கண் அசைவின்
மொழிகள் புரிந்த கணங்கள் பல
உன் உதட்டசைவின்
மொழிகள் புரியாத கணங்கள் சில
ஆனால்
உன் மௌன மொழி
புரியாத ரணங்கள் பல ...
ரணங்கள்
-
உந்தன் மெல்லிடை மேனி கண்டு
காம்பிலிருந்து தாவி குதித்து
தற்கொலை செய்யும் மலர்களின்
இறுதி கணங்கள்
ரணங்கள் இல்லா மரணங்கள்
மெல்லிடை
-
மெல்லிடை மேனி தழுவி
கை இடை நாணிக் கோணி
சொல்லது தாளம் போடும்
கள் வலி காதல் கொள்ளும்
அக்கணம் வாராதோ
எக்கணமும் ஏங்குகின்றேன்
ஏங்குகின்றேன்
-
உந்தன் மடி சாய ஏங்குகின்றேன்
உந்தன் விழி மேய ஏங்குகின்றேன்
உனக்காக முள்ளிலே தூங்குகின்றேன்
ஏக்கம் தூக்கம் யாதுமாய் நீயடி
மோகம் தீர்க்கும் மாதுவாய் நீயடி
விழி
-
உன்னை நேசிக்க பலர் இருந்தாலும்
நான் நேசிப்பது உன்னை மட்டுமே
நீ அங்கே உன் உயிர் இங்கே
விழி பார்த்து காத்திருப்பேன் உனக்காக
காத்திருப்பேன்
-
விழியில் விழுந்தாய்
வழியில் நிற்கிறேன்
மொழியில் தவழ்ந்தாய்
வார்த்தையில் வதைகின்றேன்
கருத்தில் நிறைந்தாய்
கவனம் இழக்கிறேன்
இருந்தும்
விழி தேடும் விருந்து நீயாக
காத்திருக்கிறேன்
சீதைக்கு நான் தோற்றவள் அல்லள் ..
தோற்றவள்
-
நீ என் வாழ்வில் தோற்றவள் இருந்தால்
கண்களே இமையை வெறுத்தாலும்
இமைகள் கண்களை மூட மறுப்பதில்லை
அதேபோல் நீ என்னை மறந்தாலும்
என் இதயம் உன்னை மறப்பதில்லை ...
உன்னை மறப்பதில்லை
-
என்னை மறந்த வேளைகளில்
கூட உன்னை மறப்பதில்லை என
ஞாபகப்படுத்தவே, என் சரீரம் இருக்கும்வரை
சலிக்காமல் ஒலிக்கும் பெண்ணே
உனை குடியமர்த்திய என் இதயக் குடிசை!!!
இதயக்குடிசை
-
இதய குடிசையின்
ஒளி கீற்று இடுக்கினுள்
மினு மினுக்கிறது
உன் காதல் மின்மினி
காதல் மின்மினி
-
உரிமையோடு சண்டை போட உறவாய் நீ வேண்டும்.
அன்புடன் ஆறுதல் கூறும் ஆயுதமாய் உன் வார்த்தை வேண்டும்.
தட்டி கொடுத்து தூங்க வைக்கும் தூணாய் உன் தோள்கள் வேண்டும்.
நான் பார்க்கும் முதல் முடிவாய் என்றும் உன் முகம் வேண்டும்.
கடைசி வரை கைவிடாமல் என் பதியாய் நீ வேண்டும்.
காதல் மின்மினி வருவாயா பெண்ணே
துணையாய் என் உயிரின் இறுதிவரை.
கடைசி வரை
-
கடைசிவரை
கடைசியாகவே வந்தாய்
கடுகளவும் இரக்கமின்றி
கரைந்துபோகும்
காத்திருப்பின் பொறுமைகள்
துகில் களையப் படுகின்றது
துகில் களையப் படுகின்றது
-
உன்னிடம் வார்த்தை ஒன்று பேச.
மாதங்கள் பல காத்திருந்தேன்.
உன் நிழலை போல் உன்னை தொடர்வேன்
நீ நின்று பார்க்கும் நேரம்.
நான் எங்கோ பார்த்தபடி என் பயணம்.
அப்போதாவது நீ பேசிவிட மாட்டா.
துகில் களையப் படுகின்றது ஏன் என்னை
தொடர்கிறாய் என்று சொல்ல தெரியாத
என் காதலை...
என் காதலை
-
என் காதல் பயணத்தில்
காதல் எனும் பயண சீட்டை வாங்க
என் காதலையே கொடுக்கிறேன்
பயணத்தில்
-
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது
ஏமாற மட்டுமே தெரியும்.அன்பே என்னால்
உன்னை ஏமாற்ற நினைக்க கூட முடிய வில்லை
இருவரும் மீண்டும் காதல் பயணத்தில் தொடருவோம்
உன்னை ஏமாற்ற
-
உன்னை ஏமாற்ற போதும்
ஒரு அரசியல் மேடை
ஒரு க்ரிகெட் தொடர்
உனக்கு பிடித்த
ஒரு நடிகனின் பரபரப்பு பேட்டி
உனக்கு
முன்னை இட்டெரிந்த பனிக்காடும் தெரியாது
பின்னை இட்டெரிந்த தென்னிலங்கையும் தெரியாது
அன்னை இட்டெரியும் அடிவயிற்றுக்கே அலையவாய்
தமிழா!!!
உன்னை ஏமாற்ற
நீயே போதும்
நீயே போதும்
-
நீ என்னிடம் பேசியதை விட நீயே போதும்
என் இதயத்திடம் பேசியது தான் அதிகம்..
அதனால் தானே என் இதயம்
அதிகமாக துடிக்கிறது உனக்காக!
என் இதயம்
-
என் இதயம்
வந்தவர்க்கு இனிய சிறை
போனவர்க்கு சித்ரவதை கூடம்
இனி வர இருப்போர்க்கு வேடந்தாங்கல்
எனக்கு பாலைவனம்
பாலைவனம்
-
பாலைவனம் தன்னில்
தாகமாய் அலைகிறேன்
ஒட்டகமாய்..
நீர் கண்டு காதல் கொண்டு
அருகில் வந்தபின்னே
அறிந்தேன்
நம் காதல் போல
கானல் நீர் அது என்று..
தாகமாய்
-
தாகம் எடுத்த குயில் ஒன்று
தட்டு தடுமாறி படிக்கிறது
முட்டி அலை மோதும்
மோக கடலினுள்
முக்குளித்த பின்னும்
தாகமாய் தவிக்கிறது
சோகமாய் படிக்கிறது
முக்குளித்த பின்
-
முக்குளித்த பின்
நான் விடும் பெருமூச்சு நீ
மழலையின் சிறுபேச்சு நீ
மூன்றாம் பாற்கடலின்
திசையறியா மோக பறவையின்
கலங்கரை விளக்கம் நீ..
திசையறியா
-
திசையறியா வேண்டாம் இன்னும் ஒரு நாடகம்
என் அர்த்தமற்ற வாழ்க்கை
உன்னால் அர்த்தமாகி போனதாய்
எண்ணினேன் புரிந்து கொண்டேன்
உன்னால் நானே அர்த்தமற்று போனேன் என்று
அர்த்தமாகி போனதாய்
-
அர்த்தமாகி போனதாய்
ஊகித்திருந்த எனது சங்கேதங்கள்
புரிதற்கரிதாகி
மீள என்னிடமே திரும்பி வருகின்றன
கேள்விக்குறிகளாய்!!!!
எக்கேள்வி எச்சங்கேதத்தினுடையதென
தெரியாமல் குழம்பி உன்னை நிமிர்ந்து பார்க்கிறேன்
மிதமான மின்னலை இதழோரம் முறித்து
ஒரு பக்க புருவத்தை மேலே உயர்த்தி
மேலுமொரு சங்கேத கேள்வியை உதிர்க்கிறாய்!!!
அது ஒரு விண்மீனென
என் மனதிற்குள் விழுந்து சிதறி
கிளர்ந்து எரியவிடுகிறது
யுக யுகங்களின் கேள்விகளை
கிளர்ந்து எரியவிடுகிறது
-
மெலிதாக உதிர்க்கும்
உன் புன்னகை துகள்கள்
மயங்கும் மனதுள்
எண்ணற்ற இன்ப நினைவுகளை
கிளர்ந்து எரியவிடுகிறது
துகள்கள்
-
மழையாய் நீ முகிலாய் நான்
மலராய் நீ மனமாய் நான்
அலையாய் நீ கரையாய் நான்
சிலையாய் நீ உளியாய் நான்
பனியாய் நீ புல்வெளியாய் நான்
கனியாய் நீ அணிலாய் நான்
வானவில்லாய் நீ வண்ணதூரிகையாய் நான்
மூங்கில்லாய் நீ நாதமாய் நான்
நிலவாய் நீ இரவாய் நான்
என்றும் துகள்கள் உன்னகென வாழ்வேன்
நீ அணிலாய் நான்
-
வணக்கம் நண்பர்களே, இந்த திரி கவிதையாற்றலை கூர்ப்படுத்திக் கொள்ளும் சாணைக்கல்லே என்றாலும் தலைப்பிற்கு தொடர்ப்புடையதாக கவிதைகளை வரைய முயலலாமே. சிலபல கவிதைகள் தலைப்பொடு பிணக்குற்று எழுத்தப்படுவது நெருடலாக இருக்கிறது. சிறிய கவிதையேனும் தலைப்பிற்கு உகந்த கவிதைகள் எழுத முயற்சிப்பது இந்த களத்திற்கு அர்த்தம் கற்பிப்பதாக அமையும். புரிதலுக்கு நன்றி
-
ஆடும் காற்று திசையில்
அலையும் மோகதிரையில்
நீ அணிலாய் நான் பழமாய் ..
விருந்தும் மருந்துமாய் நாம் ...
விருந்தும் மருந்துமாய்
-
என் கனவுகளும் இனித்தன என் கற்பனைகள் சுவைத்தன
என் நினைவுகள் மலர்ந்தன கவிதைகளும் காட்டாறாய் வந்தன
அத்தனையும் நிகழ்ந்தது விருந்தும் மருந்துமாய் என்னுள் நுழைந்தாய்
என் கனவுகளு
-
என் கனவில் நுழைந்து..
என் தூக்கத்தை பறித்து..
என் வாழ்கையை நிஜமாகினாய்..
இன்று அதை ஏன் அடி .? கனவாக்கினாய்..
அடி என்னவளே.. !!
"அடி என்னவளே.. !!"
-
உனக்காக காத்துக் கொண்டிருக்கும் எனக்காக
அடி என்னவளே நீ வருவது எப்பொழுது!
நான் அழுகிறேன் என்று நீ அழுது விடாதே
அதைவிட மரணவலி வேறெதுவும் எனக்கில்லை
காத்துக் கொண்டிருக்கும்
-
உனக்காக நான் காத்து கொண்டிருக்கவில்லை..
உனக்காக நான் என்னை உன்னில் தொலைக்கவில்லை..
உனக்காக நான் வாழவில்லை..
ஆனால்.,
நீ இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை..
வாழவில்லை ..
-
நீ என்னை புரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்தேன்
அனைத்தையும் பாழாக்கி விட்டு மீண்டும் என்னை
தனிமையில் விட்டு சென்றாய் மனது வலிக்கிறது.ஒவ்வொருநாளும்
உன்னை நினைக்காம ல்வாழவில்லை தொடர்கிறது என் தனிமை.
தனிமையில்
-
தனிமையில் இனிமை காண்கிறேன்..
உன்னை நினைக்கும் தனிமையில் மட்டுமே..!
பூவாய் நான் இருக்க..
இன்னும் உன் கூந்தலை ஏன் தனிமையில் வதைக்கிறாய்..
ம்ம் என்று சொல்..
அடுத்த நொடி நான் உன் கூந்தலை அலங்கரிப்பேன் ..
தனிமையில் இனிமை
-
தேன் கூடுகளில் சுவைகள் மறைந்து
நீர் மட்டும் நிறைந்து கிடக்கின்றன
மனதுகள் தடம் பிரண்டு தவம் கிடக்கின்றன
தனிமையில் இனிமை எல்லாமே ஒரு மாயையாகவே
உணர்வும் வந்து உண்மை சொல்லிப் போகின்றதே
எதிர் பார்த்தேன் என்னவென்று புரியாமலேயே எதிர் பார்க்கின்றேன்..
எதிர் பார்க்கின்றேன்
-
சுழல் போல வந்தாய்..
பூகம்பமாய் தோன்றினாய்..
என்னுள் பல மாற்றங்கள்..
உன் அசைவுகளால்..
பெண்ணே..
உன்னில் இன்னும் எதிர் பார்கிறேன்..
என்னுள் நீ நிகழ்த்த இற்கும் பல மாற்றங்களை..
பெண்ணே..
-
எதிர் பார்த்தேன்...!!!
ஏக்கங்கள் சூழ்ந்த
உலகத்தில்
உண்மைகள்
எப்படி உயிர் பெறும்
ஊமைகளாகி
மந்தைகள் போல்
வாழ்வும் இருள்கின்றதே
தினம் ஒரு பாடத்தை
புகட்டிவிட்டே செல்கின்றதே...!!!
மரத்துப் போய்
மனித அவலங்கள்
புதையல்களாக கொட்டிக்
கிடக்கின்றனவே
சுவை பார்க்கத்தான்
ஏங்கும் உள்ளங்கள்
நிறைந்து துடிக்கின்றனவே...!!!
தேன் கூடுகளில் சுவைகள்
மறைந்து
நீர் மட்டும் நிறைந்து
கிடக்கின்றன
மனதுகள் தடம் பிரண்டு
தவம் கிடக்கின்றன
எல்லாமே ஒரு
மாயையாகவே
உணர்வும் வந்து
உண்மை
சொல்லிப் போகின்றதே
எதிர் பார்த்தேன்
என்னவென்று புரியாமலேயே
எதிர் பார்க்கின்றேன்...!!!
இராஜேந்திர குமார்
மார்ச் 23 2013
-
பெண்ணே என்னை நீ வெறுத்ததை போல் நானும் வெறுக்க வில்லை
உன்னையும் வாசமில்லா மலர்களையும் வசந்தம் உன் வாசலில்
வாழை மரமாய்.உன்னை வாழ்த்த சூறாவளியோ என்னை
சுழலாய் தாக்கியதடி ஒத்தையடி பாதையில் திரும்ப முடியாமல் நான்.....
உன் வாசலில்
-
உன் வாசலில் சிறு செடியாக நான் மாற வேண்டும் ..
அடி என் இதயமே...!
உன் இதயத்தில் நான் என்று செடியாக முலைப்பேனோ...
அது வரை..
உன் வாசலில் தவம் இருக்க வேண்டும் அடி..
சிறு செடியாக..
என் இதயமே...!
-
மறுக்கப்படுவதும் மறக்கப்படுவதும்
தான் உன் காதல் என்றால்.மரணம்வரை
மறந்திருப்பேன் என் காதலை மறந்தும்
என் இதயமே நீ மறக்கமாட்டேன் உன் நினைவுகளை
உன் காதல் என்றால்
-
உன் காதலனாக நான் வர வேண்டாம்..
உன் வழித்துணையாக நான் வர வேண்டாம்..
உன் வாழ்வின் துணையாக விரும்புகிறேன்..
ஏனெனில்..
உன் காதல் என்றால் அது என்றாகிலும் ..
ஒரு நாள் மறந்தும்.. மறைந்தும் போகலாம்..
உன் வாழ்கை துணையாக என்றால்..
உன் வாழ்க்கை என்னோடு தானே கண்மணி..
வாழ்கை துணை
-
உன் மழலையுடன் காணவேண்டும்
புன்னகையை ஏக்கத்துடன் தந்தாய்
நிச்சயம் மீண்டும் சந்திப்போம்.
உன் வாழ்கை துணையாக வாழவேண்டும்
என் இதயத்தில் ஏக்கம் தந்தவளே.
சந்திப்போம்
-
நம் அடுத்த சந்திப்பு எபோதோ..?
உலகம் சிறியது காதலை விட..
மீண்டும் சந்திப்போம் என்றாவது ஒருநாள்..
சந்திப்பில் என்னை கொல்லும் ..
உன் பழைய புன்னகை முகவரியும் வேண்டும்..
அந்த முகவரிகுரியவனாய்..
நான் மாற பாக்கியம் இல்லை..
அந்த முகவரியின் உரியவனாய்..
உன் வாழ்கை துணையுடன் காண வேண்டும்..
அடி என் இனியவளே..!
புன்னகை முகவரி
-
உன் அர்த்தமற்ற கோபத்தினால்
காயப்படுவது என் மனம் மட்டுமல்ல.
என் காதலும் தான் விளக்கம் சொல்லி
விளங்க வைக்க காதலின் வலி எளிதல்ல
ஒன்றும் சொல்லாமல் உணர வேண்டும்
எனக்கும் வலிக்கும் என்று உன் புன்னகை முகவரி
என் மனம் மட்டுமல்ல
-
உன் பிரிவுக்காக துடித்தது..
என் மனம் மட்டும் அல்ல..
உனக்காக துடித்தது..
என் மனம் மட்டும் அல்ல..
நானும் துடித்தேன் அடி..
உன்னுடைய சில நொடி பிரிவில்..
மனம் வலிக்கிறது..
இன்று ஜனிக்கிறது.. மறு முறை..
உன்னுடைய இந்த நொடி அணைப்பில்..
உன் அணைப்பில்.
-
நினைவுகளின் எதிர்பார்ப்பு கண்ணீர் என்று சொல்லாமலே
விலகிச்சென்றாய் கண்ணீரை துடைக்கிறேன் என்று
நீயும் அருகில் வந்தாய் என் இதயத்தில் இருக்கும் வலிகள்
இன்னும் உனக்கு தெரியவில்லை கவலைகள் எனதாகி நாட்களும்
உன் அணைப்பில் கடந்து விட்டன .
நீயும் அருகில் வந்தாய்
-
உன்னை நான் பார்த்ததில்லை..
அனால்..
நீ என் அருகில் நெருங்கி வந்து உன் காதலை சொன்னாய்..
பைத்தியம் என்றேன்..
இன்று ..
உன் காதலை அன்று புரியாமல் விட்டதற்காக..
வருந்துகிறேன்..
வருந்தியும்.. விரும்பியும்.. உனக்காக துடித்தும்..
உன்னை அருகில் அலைகிறேன்..
நீ வரவில்லை..
எப்படி வருவாய்.?
என் பிரிவு தாளாமல் ..
நீதான் உன் கல்லறையில்..
என்னை பார்க்கமாட்டேன் என்று தவம் செய்கிறாயே..!
கல்லறையில்..
-
உன்னோடு வாழ்ந்த
காலங்கள் யாவும்
கனவாய் என்னை மூடுதடி
யாறென்று நீயும்
என்னை பார்க்கும் போது
உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட
ஜன்னல் ஒன்று வைத்து
உந்தன் முகம் பார்ப்பேனடி
போகாதே போகாதே
நீ இருந்தால்
நான் இருப்பேன்
போகாதே போகாதே
நீ பிரிந்தால்
நான் இறப்பேன்
நா.முத்துக்குமார்
அடுத்த தலைப்பு : போகாதே
-
இது ஒரு கவிதை விளையாட்டு..
ஒருவர் ஒரு கவிதை எழுதிவிட்டு
"அடுத்த தலைப்பு" என்று ஒரு தலைப்பை விட்டு செல்ல வேண்டும்...
அடுத்து வருபவர்
அந்த தலைப்புக்கு ஒரு கவிதை எழுத வேண்டும்.. அவர் ஒரு "தலைப்பை" தர
வேண்டும் இல்லை எனில்
உங்கள் கவிதையில் வரும் ஒரு சொல்லையோ... அல்லது வரியையோ தலைப்பாக
கொடுக்கலாம்.......கடைசி வரி தான் போட வேண்டும் என்று இல்லை...
கவிதையில் உள்ள எந்த வரியானாலும்.. கவிதையில் இல்லாத வேற
சொல்..தரலாம்... சொந்தமாக கவிதை எழுத இதை ஒரு வாய்ப்பாக
பயன்படுத்திகொள்வோமே...
முயன்றால் நீங்களும் கவிஞர்/கவிதாயினி தான்.... ;) ;)
இது தான் விளையாட்டு....
இங்கே கவிதை விளையாட்டை தொடரும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ... இந்த கவிதை விளையாட்டு உங்கள் கவிதை திறமையை வளர்ப்பதட்காகதான் உருவாக்கப் பட்டது ... நாம இந்த விளையாட்டை எப்படி வேணும் என்றாலும் எங்கே வேணும் என்றாலும் மற்றயவர்களது கவிதை கற்பனையை திருடி போட்டு விளையாடலாம் என்ற கருத்தை விடுத்து ... முயற்சி செய்து நீங்களே உங்கள் சொந்த கற்பனையில் எழுதுங்கள் .. வேறு இடத்தில இருந்து எடுத்து கவிதைகளை இங்கே தொடர்வதற்கு இந்த கவிதை விளையாடுக்கு அளித்துள்ள முன்னுரை தேவை இல்லை . எனவே தயவு செய்து உங்கள் கவிதை திறமையை வளர்த்து சிறந்த கவிஞராக இந்த திரியை பயன் படுத்துங்கள் .
அடுத்தவர்களது கவிதையை இங்கே பதிவு செய்து இதை தொடர்வது இந்த திரியை அர்த்தமற்றதாக செய்வதுடன் , இங்கே விளையாடும் மற்ற கவிங்கர்களது திறமைகள் குறைத்து வாசகர்களால் மதிப்பிட படுவதற்கும் ஏதுவாக அமைகிறது . எனவே உங்கள் சொந்த கற்பனைகளை மடுமே கவிதையாகி பதிவிடுங்கள் ..
அப்படி அல்லாத கவிதைகள் பரிசீலிக்கப்பட்டு அது அடுத்தவர் கவிதை என எதிர் வரும் காலத்தில் நிரூபிக்கப் பட்டால் இந்த திரியில் இருந்து அந்த கவிதை நீக்கப்படும் என்பதை அறியத் தருகின்றேன் .
புரிதலுக்கு நன்றி .
-
போகதே
எட்டாத உயர் விளிம்பில்
என் இதய உணர்வினை எட்டி வைத்து
தட்டாமல் தட்டி போகாதே
விளிம்பில்
-
உன் இதய விளிம்பில் சிக்கி தவிக்கும்
என் காதலை மறந்துவிடாதே சிக்கி இருப்பது
என் இதயம் மட்டும் அல்ல நானும் தன
சிக்கி தவிக்கும்
-
சிக்கி தவிக்கும் என் இதயம்..
உன்னிடத்தில்..
சிக்கி கொண்ட நீ..
என் அணைப்பில்..
இப்படியே.. இந்த நேரத்தை ..
என் கால அட்டவணையில்..
நிறுத்தி வைப்பேன்,,
காதல் வலியா சுகமா.?
-
காதலில் வலியும் சுகமே இருப்பது தன அதிகம்
உன்னிடம் நான் கொண்டு காதலே சுகமே
உன்னை ஒருநாள் பர்கவிடலும் அதுவே வலி ஆகும்
காதலில் வலி சுகம்
உன்னிடம் நான்
-
எது உண்மை அடி பெண்ணே.. சொல்லு..
உன்னிடம் நான் கண்ட காதலா..?
இல்லை .. உன்னிடம் இப்பொது நான் காணும் பிரிவா.? வெறுப்பா.?
வெறுப்பை விருப்பாகி..
நீ என்னை சேரும் நாள் என்றோ..!
அதுவரை நான் காத்திருப்பேன்..
உன்னிடம் நான் காதல் செய்வேன் என் நினைவில் ..!
நினைவே நீ வா..!
நினைவே நீ வா..!
-
தனிமை கூட ஒருவித சுகம் தான்
உன் நினைவுகள்என் இதயத்தில்
நினைவே நீ வா நான் உயிராக வாழும்போது.
சுகம் தான்
-
காதலில் வலி சுகம் என்று யாரு சொன்னது..
உன்னை பிரிந்த வலியை என்னால் ஏற்க முடியவில்லை அடி..
அனால்.. உன் பிரிவில் ..
உன்னை நினைக்கும் அந்த நொடிகள் ..
சுகம் தான் ..
காதலில்
-
தனிமையில் காத்திருக்கேன் உன் வருகைக்காக
என்கி கொண்டுகிறேன் உன் கை பிடித்து நாடாகும்
பொது காதலில் சுகம் விட அன்பு அதிகம் என்று தெரிந்து கொண்டேன்
என்கி கொண்டுகிறேன்
-
உன்னை அணைக்க ஏங்கி கொண்டிருக்கிறேன் ..
உன் சுவாசத்தை ஸ்பரிசிக்க .. ஏங்கி கொண்டிருக்கிறேன்..
நீ மட்டும் என்னை நினைத்து ..
என் காதலை பெற ஏங்கவில்லையோ..?
சொல் அடி பெண்ணே ..
வார்த்தைகளால் அல்ல.. உன் கண்களால்..
உன் கண்களால்..
-
உனது கண்கள் உதிர்க்கும்
செம்பவளப்பூவை
பொருக்கி வைத்தேன்
எனது உள்ளங்கையில்
அது பனித்துளியென உருகி
நதியென மினுமினுப்பாய் ரேகைகோடுகளில் பாய்ந்து
வழிகிறது
சலனம் நிறைய என் இதயத்தின் கடல்
வேட்கையோடு ஒரு பேரலையென
உனை நோக்கி புரள
உனது கால்சுவட்டின்
கட்டைவிரல் குழியில் அதனை அடைத்து
ஒரு சூரியனை அதில் மிதக்கவிடுகிறாய்
அது பறவையென பரிணமித்து
முக்குளித்து மீன் கவ்வி
ஒரு இறகு சிலிர்ப்பில்
என் மொத்தக்கடலையும் சிதறடித்து
பறக்கிறது தன் திசை நோக்கி
சிதறிய கடல் உன் கால்சுவட்டின்
மற்றப்பள்ளங்களிலும் பரவி
உறைகிறது ஒரு பனிப்பாறையாய்
அடுத்த தலைப்பு : சிப்பி
-
பரவி உரையும் பனிப்பாறை
பாகாய் உருகி உருளும்
ஓர் துளி உடைந்து
உறைந்து
உயிர்கிறது சிப்பியுள் முத்தாய் .
துளி
-
வறண்ட நிலத்தில் மழை துளி இன்பம்..
காய்ந்த புல்லுக்கு .. பனி துளி இன்பம்..
என் வறண்ட மனதுக்கு..
உன் சிரிப்பின் சாரல் துளி இன்பம்..
காய்ந்த என் வாழ்க்கைக்கு ..
பனி போன்ற அழகான உன் காதல் இன்பம்..
அழகான உன் காதல்
-
அழகான உன் காதல் என்னிடம்
தந்தையே நம் காதல்
வாழ்வில் வாசனை பூக்களால்
புதிருக்க எபோதும் இருக்கவேண்டும்
நம் காதல்
-
வார்த்தைகளுக்கு அப்பற்பட்டத காதல்
வர்ணனைகளுக்கு வாக்கபட்டது காதல்
கண்ணீருக்கு கருவானது காதல்
தெரிந்தும் பலியானது நம் காதல்
காதல்
-
காதலில் சுற்றும் பூமி யாரு சொன்னது..
உன் பார்வையின் ஈர்ப்பில் சுற்றுகிறதடி..
காதல் அழகானது.. யார் சொன்னது..
உன் விழி அசைவு அதைவிட அழகென்று..
விழி
-
உன் விழி பார்த்தேன் அதில் எனையே பார்த்தேன்
உன் இதயம் எனிடம் உள்ளது அது வெறும் இதயம் அல்ல
அது என் உயிர்
என் உயிர்
-
அவளை
சிறைபிடிக்க
நினைத்து ....
நான் கைதியானேன்
இப்போது
அவளது இதய சிறையில்
என் உயிர் ....
இதயம் பேசும்
-
என் மூச்சு காற்று ..
உன் காதலை மட்டுமே சுவாசிக்கும்..
என் கரங்கள்..
உன்னை மட்டுமே தாங்கும்..
என் இதயம் உன்னை மட்டுமே நேசிக்கும்..
என் இதயம் உன்னை நினைத்தே பேச துடிக்கும்..
என் கரங்கள்
-
என் கரங்களுக்குள்
நீ இல்லாதபோதுதான் புரிகிறது
உன் இருப்பின் அவசியம்!.. ரகசியம்!
இன்னும் என்னென்னவோ! ....
சொல்லத்தான் நினைக்கிறேன்
உன் கோபம்! வெறுப்பு! அகராதித்தனம்!...
யாரிடம் உரிமை காட்டுவாய் எனையன்றி?!....
"பக்குவப்படுவாய்" என்றுதான்
பலவும் சொல்லித்தீர்த்தேன்
"பழகிப்போச்சு" என்கிறாய்!
"பாடாய்படுத்துகிறாய்" நீ
என்ன செய்வேன்?! நான் இன்னும் பக்குவப்படவில்லை!..
"மறந்து தொலைக்கிறேன்" உன்னோடு
சண்டை போட்டும் சமாதானம் செய்துகொள்ள!......
இப்போதுதான் புரிகிறது நீ இல்லாத போது
நிகழும் நிகழ்வுகளும் அதன் நிறைவுகளும்!!....
நீ இல்லாதபோது!....
-
நீ இல்லாத பொது தன நான் உணர்கிறேன்
இது அன்பு சண்டைய இல்லை காதல்
சண்டைய என்று புரியாமல் தவிக்கிறேன்
.இந்த சண்டைக்கு கரணம் நீயே இல்லை
நானா அனல் ஒன்றும் மட்டும் புரிகிறது
சண்டை போட்டாலும் நம் மனசு எபோதும்
தவிக்கின்றது மிண்டும் இப்பொது சந்திப்போம் என்று
புரியாமல் தவிக்கிறேன்
-
காதலில் புரிதல் இல்லது போயின்
சாதலும் சங்கடமும் மிச்சம் என்று தெரிந்தும்
செல்ல சண்டையிடுகிறேன்...
ஊடல் இல்லாமல் கூடல் இல்லை என்பதற்காக.....
உன்னோடு சண்டையிட்ட பொழுதுகளை
நினைவில் நிறுத்தி மிச்ச
சொச்ச நாட்களையும் கழித்திடுவேன்.......
உன் சமாதான வாசகங்களை
பலமுறை வாசித்தும்- இது
தமிழா என புரியாமல் தவிக்கிறேன் .........!!
சமாதானம்
-
சமாதானமாய்
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்
யோசிக்காமல் பேசியவள்...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து.. தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள்..
நான் சொன்ன ஒரு வார்த்தையால்...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்
'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று.
காதல் தவிர் ....
-
நீ போகும் வழிலம் பூக்களை பூதிர்பேன்
நீ பார்க்கும் இடம் எல்லாம் நானாக இருப்பேன்
நீ பார்த்தல் என் வாழ்வில் கோடானகோடி சந்தோசம் காண்பேன்
எத்தலாம் காதல் தவிர் அஹ
பூக்களை பூதிர்பேன்
-
உன் கண்ணில் காதல் கண்டேன்.
உன் மனதில் என்னை கண்டேன்..
உன் வழியில் என் கனவுகளை கண்டேன்..
உன் வாழ்வில் உன் மரணத்தை கண்டேன்..
உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேன்..
அதனால்.,
உன்னோடு வாழ..
உன் கல்லறையில் பூக்களாய் பூத்திருப்பேன்..
என் அன்பினும் மேலானவளே..!
அன்பினும் மேலானவளே..!
-
என் அன்பானவளே உன் கரம் பிடிக்கும் ஆசையுடன்
உன்னை தேடி வந்தேன் உனையே கண்டதும் எனையே
நான் மறந்தேன் கனவில் ஆயிரம் முறை உன் கை பிடித்து
இருவரும் கடல் கரையோரம் நாடாகும் பொது அந்த சுகமே தனி
தன நீ இபோதும் என்னோட அன்பினும் மேலானவளே. தன
உன் கை பிடித்து
-
உன் கை பிடித்து நடந்த
கனவு நிமிடங்கள்
கரைகின்றது கண்ணீரில்
கரையேற துடுப்பு தேடும்
விழியின் ஈர்ப்பில்
விரிந்து அமிழ்ந்து
உதிர்கிறது ஒரு துளி நீர் உன் இருப்பு தேடி .
இருப்பு
-
உன் இதயம் இருப்பில் துண்டில் சிக்கிகோலும்
மீன் போல என் இதயம் உனிடம்
தன சிக்கிகொண்டுது இது
உன் அன்பின் இருப்ப இல்லை காதலில் இருப்ப
சொல்லடி பெண்ணே
உன் இதயம்
-
நான் உன் இதயம் என்று நினைத்து.
உனக்காக துடித்தேன்..
நீயோ.?
உனக்காக துடிக்கும் என் இதயத்தை ..
பணத்தால் விலை பேசி..
என் இதய துடிப்பை துடிக்கவைத்ததேனோ.?
துடிக்கும் என் இதயத்தை ..
-
துடிக்கும் என் இதயத்தை கையிலெடுத்து
என்னவள் பெயர் தான் உரைகிறதா என
கேட்டு பார்த்தேன்.. அதற்கு கூட
தெரியவில்லை...என்னவள் யார் என்பது.
ஆனா என்னவோ என் கனவில் வரும் அந்த பகல்
நிலா நீதானோ.. என எண்ணி எங்கும் என் மனதிடம்
எப்படித்தான் ஆறுதல் உரைப்பேன்
என்னவள் யார்
-
வில்லாய் வளைந்தேன்
உன்னவன் என்றாய்
காதல் அம்பாய் தொடுத்தேன்
காணாத பொழுதெல்லாம்
தொடுத்தேன்
இலக்கு தவறாமல்
என் இதயத்தை தாக்கியது ..
இலக்கு
-
வானம்அழகுதான் இயற்கை அழகுதான் நிலவு அழகுதான்
பூமியும் அழகுதான் இந்த பூமில் தேவதை போல் வந்தாய் அழகை தொன்றினை
உன் அழகையே கண்டதும் அந்தா இடத்தில் இலக்குக தொலைந்து போனேன்
நிலவு அழகுதான்
-
நிலவு அழகுதான்
நீ அருகே இருக்கும்பொழுது
தனிமை இனிமைதான்
நீ அருகில் இல்லாத பொழுது
என் காதல் கூட அழகுதான்
உன்னை கல்யானம் செய்யாத போதும்
தனிமை
-
தனிமெயில் நான் கத்திற்கும் போது
சில்லு என்று கற்றுவீசும் போது
உன் கூந்தல் வசம் வரும்போது
அறிந்தேன் நீ என்னை தேடி வருகிறாய் என்று
தனிமை குட இனிமைதான்
உன் கூந்தல் வச
-
நான் இது வரை அறிந்திராத பெண்ணின் கூந்தல் வாசம் ..
அறிந்தேன் உன்னால்..
உன் நினைவுகளால்..
உன் ஸ்பரிசத்தை உணர்கிறேன் ..
நீ என் அருகில் இல்லாத போதும்,,
உன் நினைவுகள் உன் உருவத்திற்கு உயிரளிகிறது..
என் இதயத்தை கொல்கிறது..
பெண்ணே .. நீ என் அருகில் வருவது எப்போது..
பெண்ணே
-
பெண்ணே
சாதிகள் வேண்டாம்
சாங்கியம் வேண்டாம்
உன்னை சரி சமமாய் மதிக்காத ஆடவர் வேண்டாம்
ஆளுமை போதும் அகிலத்தை வென்று வா
ஆளுமை
-
என் இதயத்தின் ஆளுமையை எடுத்து கொண்டும்..
என் இந்த மௌனத்தால் கதவை பூட்டிகொண்டாய்.
பலர் என்னை ஆளா நினைத்த போதும் உதறி கொண்டேன்
நீ மட்டும் என் இதயத்தை ஆளா நினைக்கையில்
ஏனோ கொடுத்துவிட்டேன் என் இதய பெட்டகத்தின்
சாவியை. உன் மௌனம் என்னும் சிறை கதவை
உடைத்துவிடு..
சிறை கதவை
-
பெண்ணே..
ஆண்கள் ஆதிக்கம் என்னும் சிறை கதவை உடைத்து..
இப்பொது முன்னேறி கொண்டிருக்கிறாய்..
இன்னும் பல மாற்றங்கள் உன்னுள்..
பாரதி கண்ட புதுமை பெண்ணிலும் நீ புதுமையானவள்..!
ஆண்கள் ஆதிக்கம்
-
அன்று தொட்டு இன்றுவரை
ஆண்கள் ஆதிக்கம்
பெண் சம உரிமை கேட்டால் என்ன
சரி சமமாய் இருந்தால் என்ன
சில காமுகர் கடையர் முன்னே
வெறும் கால் கீழ் நாய்கள்தான்
பெண்
-
பெண்ணே நீயும் பெண் தான் பெண் என்பவள் அழகானவள்
அறிவானவள் அன்பானவள் பிரியமானவள் பசதுகுரியவள்
பெண்கள் நமது கண்கள்
பிரியமானவள்
-
வேறு வேறாய் போனாலும்
பாதை நூறு கண்டாலும்
பழகி பிரிந்தே போனாலும்
பருவம் தவறிப் போனாலும்
இவள் என்றும் உன் பிரியமானவள்
பருவம்
-
உன்னை பார்த்த நாட்கள் எண்ணி எண்ணி பார்த்துக்கொண்டேன்
அது காதல் பருவம் என்று நினைத்தேன் ..உன்னையே நினைத்து
என்கிகொண்டிருந்தேன் அது இதயம் பருவம் என்று நினைத்தேன்
உன்னையே நினைத்து
-
அன்று சிரித்து பேசிய உன் நினைவுகள்
இன்று முள்ளாய் குத்துகிறது என் இதயத்தை. இருந்தும்
என் இதயம் ஏனோ... இன்றும் உன்னையே நினைத்து துடிக்கிறது
ஒவ்வொரு நொடியும் .
இதயத்தை
-
பொன்னும் பொருளும் களவு செய்தவர்கள் குற்றவாளிகள் என்றால்
என் இதயத்தை களவாடிய உன் இதயத்தை
எந்த குற்றத்தில் சேர்ப்பது
உடைந்து போன இதயம்
-
காதலில் வெற்றிகளும் தோல்விகளும் உண்டு
காதலில் வெற்றி கிடையாதல் சந்தோசம்
காதலில் தோல்வி அடைந்தால் சோகம்
என் காதல் என்னமோ உன்னால் தான்
உடைந்து போனது என் இதயம்
அனல் உன் நினைவுகள் மட்டும்
வராமல் இருப்பாது இல்லை
உன் நினைவுகள் மட்டும்
-
உன்னை மட்டும் நினைத்து கொண்டே
இருக்க வேண்டும் என்று தான்
என்னிடம் சண்டை ஈடுகிறாயோ
என்று தோன்றும் சில
அர்த்தமற்ற சண்டைகளால்
அன்று முழுதும் உன் நினைவு மட்டும்.
சண்டை
-
நீ என்னை பார்த்து சிரித்த நாட்களைவிட ..
நான் உன்னை நினைத்து அன்பு சண்டை
காதல் சண்டை செல்லமான சண்டை நாட்கள் ..
தான் அதிகம் .
நாட்களைவிட
-
நான் உன்னை நேசித்த நாட்களை விட வெறுத்த நாட்கள் அதிகம்..
இப்போது வருந்திகிறேன் கண்ணே..
உன்னை இன்று நேசிக்கும் நாட்கள் என் அதிகம் என்று..
நீ என் அருகில் இருக்கும் போது உன்னை புரிந்து கொள்ளாமல் விட்டது தவறு என்று வருந்துகிறேன் கண்ணே..
என் அருகில் நீ வரமாட்டாய் என்று தெரிந்தும்..
நீ வருவாய் என என் இதயம் துடிக்கிறது..
என் வாழ் நாள் முடியும் முன் உன் அழகிய முகத்தின் ..
தரிசனம் வேண்டும் அடி என் கண்ணே..!
என் கண்ணே..!
-
அணைந்து போன தெருவிளக்கு கீழே
கையேந்தும் பிச்சைகாரன் போல் ..
என்னை புரியாத உன் பின்னால்
அலையும் மூடன் நான் ...
கண் கொண்டும் காண வில்லை
காதல் கொண்ட மனமும் தூங்கவில்லை என் கண்ணே..!
காணவில்லை
-
காணமல் போனவை - சில
கிடைப்பதில்லை
தெரிந்தே தொலைத்ததை
தேடவும் விரும்பவில்லை
என் இதயம்
-
உன் எஸ்.ம்.எஸ் டோன் ஒலிக்கும்
போது அது வெறும் சத்தமில்லை
என் இதயம் துடிக்கும் சத்தம் ...!
உன் இன்போக்சை ஓபன் பண்ணிப்பார்
எஸ்.ம்.எஸ் வடிவில் என் இதயம்
அதில் இருக்கும் ...
துடிப்பு
-
உன்னை மறவாது எந்தன் நெஞ்சம்
உன்னை பார்க்காமல் இருக்காது என் கண்கள்
உன்னை நினைக்காமல் இருக்காது என் இதய துடிப்பு
நெஞ்சம்
-
குழந்தை போல அழுகிறது - எந்தன் நெஞ்சம்
உன்னை மறக்கவும் முடியாமல்
உன்னை நினைக்காமல் இருக்கவும் முடியாமல்
தவியாய் தவிக்கிறது
இதற்கு விமோசனம் எப்போது என்று???
விமோசனம்
-
உனக்காக காத்திருப்பதால்
என் வாழ் நாள் அதிகரித்து
அற்பாயுசு என்ற
என் சாபத்திலிருந்து
விமோசனம் பெற்றேன் .....
என் சாபத்திலிருந்து
-
என் சாபம் .....
பத்து பொருத்தம் பார்த்து
படலமாய் பெண் பார்க்க வந்து
ஊரெல்லாம் விசாரித்து
வந்தவர்கள்
உதறிச் சென்றார்கள் என்னை
சொத்து பொருத்தம்
ஒத்து போகலையாம்
மாட்டு சந்தையில் மணப்பெண்
-
மனபென்னாய் மாற
பொருத்தம் பத்தும்
பொருந்தியும் சொத்து பொருத்தம்
பொருந்தவில்லை என
வருந்தும் நங்கையே - நீ
சராசரி மாட்டுசந்தை மனபென்னாய்
அல்லாமல் மனமொத்து வாழ
பொருத்தம் பத்தும் வேண்டாம்
பொருந்தி வாழ சொத்தும் வேண்டாமெனும்
பொருத்தமானவன் வரும்வரை
பொறுமைகொள்.....!
பொறுமைகொள்
-
பொறுமையாய் இருக்கிறேன்
உன்னை காணும் வரை
எத்தனை முறை
துடைத்து துடைத்து வைத்தாலும்
மீண்டும் படியும்
உன் நினைவுகள்
எங்கே போய்விட முடியும் உன்னால்
என் நினைவுகளே நீ ஆனா பிறகு ...
நினைவுகள்
-
என் நினைவுகள் நீயான பிறகு
இதயத்தில் நிரந்தரமாய் குடியேற
விழைந்தும் உன்னிதய அறைகளில்
என்னையும், என்ன அலைகளையும்
துளியுமில்லாது துடைத்து வைத்திருபதால்
நினைவிழந்து என் நிலையிழந்து
கண்முன் நிழலாடுகின்றன கல்லறை ...?
நிழலாடுகின்றன
-
நிழலாடுகின்றன .... உன் பிம்பம்
யார் நீ.......?
என் அனுமதி கேளாமல் எனக்குள் வந்தாய்
என்னை அணு அணுவாய் சாகடிக்கிறாய்
என்ன செய்வதென்றே எனக்குப்புரியவில்லை
ஏன் எந்த மாற்றம் என்றும் எனக்குத்தெரியவில்லை
யார் நீ .....?
உன் பார்வைகள் எனக்குள் பளிச்சிடுகின்றது
உன்னைகாண என் இதயம் ஏங்குகின்றது
உன்னோடு நான் எப்போது கை கோர்ப்பேன் -அன்று
உன்னால் மட்டுமே நான் உயிர் வாழ்வேன்...
உயிர்..
-
kanneer vazhiyae ninaivum kasiya!nadanthathellam nenjil pathiya!uthirntha naatkalai uyirum marakkumo!ulagil ulla unnathamaana uravugal udainthu ponaalum!unmaiyana nam natpu urugumo! Naatkal nammai vittu pirinthu sendraalum..Ninaivugal nammai vittu selvathillai..!!! :) NEXT TOPIC:MAZHAI
-
கருநிற மேகங்களினுள் ஒளிந்து நின்று,மேகத்திற்கு அழகை ஊட்டினாய்...! மென்மையான தூரளிட்டு,,மலர்களை மகிழ செய்தாய்..! உந்தம் வின்பம்படும் நேரத்தில் ,,காற்றின் வெப்பத்தை உருக செய்தாய்...!உன் சேவையை துவங்கும் முன்னே, மண் வாசம் அனுப்பி,,அழகான மனங்களை நெகிழ செய்தாய்..!!!நீதான் மழையோ!!! அடுத்த தலைப்பு: நட்பு
-
மேகத்தின் மழை பொழிவும்,,கண்களின் வேர்வையும்....இரு வகையான தாகங்கள்...அன்பே என் நட்பின் தாகத்தை தீர்க்க வந்தாய் உன் இதயம் கொண்டு!!! அடுத்த தலைப்பு:தனிமை
-
சில நினைவுகள் பல உறவுகளை
தனிமை படுத்தும் ஆனால்
என் உறவுகளே உன் நினைவு மட்டும்
தான் ............
உறவுகளை
-
உறவுகள் ஒரு போதும் இறப்பதில்லை
நீ வாழும் வரை வாழும்
உரிமை கொண்டு நிலைக்கும் இது
வாழ்வு நிலையும் தாழ்வும் !
வாழ்வு
-
வாழ்வு
என்று எதுவுமில்லை என்னிடம்
நீ வந்தாய் .....பிறகு
இனி எது வேண்டும் எனக்கு
எனக்கு
-
எனக்கு
பிரிந்தவுடன் தான்
தெரிகிறது
உன்னுடன்
சேர்ந்திருந்து
சண்டை போடுவதன்
சுகம்....
சுகம்
-
உனக்காக காத்திருப்பதிலும் சுகம்..
என்றேன் அதற்காக வாழ்நாள் முழுவதும்
காத்திருக்க வைத்துவிட்டாயே...
உனக்காக
-
உனக்காக எழுதும்
ஒவ்வொரு வரிகளின் விளிம்பிலும்
கசிந்து வழிகிறது
விரக்தியின் குருதி ..
விரக்தி
-
அவரவர் பிரச்சினை
ஆயிரம் இருக்க
எனக்கு மட்டும்
ஏன்... அவை
கோடிகளாய்....
நிம்மதியாய் இருந்த நாள்
நிச்சயமாய்...
நினைவில் இல்லை!
முதன் முறையாய்
கடவுளை வேண்டி...
மறந்தும்கூட
மனிதனாய் எனக்கு
மறுபிறவி வேண்டாம் என்றேன்!!
உயிர்
-
காரணமே இல்லாமல் பிரிந்ததால் -
என் இதயம் வலிக்குதடி
காரணத்தை கூறு
நியாயமாக இருந்தால் -நானே
உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்
என்னவளே இன்றும்
என் இதயம் வலிக்குதடி
உன்னை எண்ணியே!!
நீ தான் என்னுயிர் என்பதனாலோ!!!
-
சமீரா கொடுக்கப் பட்ட தலைப்பு விரக்தி நீங்கள் அதற்கு கவிதையே கொடுக்கவில்லையே ? அதற்கு கவிதையை கொடுங்கள்
-
காதலில் வலியும் சுகமே இருப்பது தன அதிகம்
உன்னிடம் நான் கொண்டு காதலே சுகமே
உன்னை ஒருநாள் பர்கவிடலும் அதுவே வலி ஆகும்
காதலில் விரக்தியின் குருதி வலி சுகம்
காதலே சுகமே
-
காதலே சுகம் என்று
இருந்துவிட்டேன் ..... இனி
நீ முறைத்தால் என்ன...?
நீ மறுத்தால் என்ன..?
நீ தடுத்தால் என்ன...?
நீ போனால் என்ன...?
நான் காத்திருப்பேன்...
நீ தந்த காயங்களை,
தாங்கிய இதயமுடன்...
ஆனால் ஒன்று மட்டும்
சொல்லஆசைப்படுகிறேன் .....
உண்மையாக நேசித்தவர்கள்
மீண்டும் கிடைபதில்லை ....
உண்மை காதல் எங்கே ?
-
உண்மை காதல் எங்கே என்று காணமல்
மேகத்தோடு சேர்ந்து நானும் தேடுகிறேன்
என் தேவதையே நீ மழையாய் எங்கு மறைந்திருக்கிறாய்.
என் தேவதையே
-
என் தேவதையே என்னை
பிரிந்து போ என்று சொல்லாதே
பிரிவு என்ற சொல்லுக்கு என்னால்
ஈடு கொடுக்க முடியவில்லை ....
உன் நிழல் கூட
உன் உருவத்தில் வாழ்கிறதே ...
ஏன் என் கனவுகள்
உன்னருகில் இருப்பதை மறுக்கிறாய் ??
மறுப்பு
-
மறுப்பு
பெண்ணே !
நீ என்னை காதலிக்க மறுப்பு
சொல்லி இருந்தால் கூட
வாழ்ந்து இருப்பேன் சில நிமிடம்.....
ஆனால்!
என்னை காதலித்து மறுப்பு
சொன்னதால் தான் என் உயிர்
பிரிந்தது அடுத்த நிமிடம் !.....
இயற்கை
-
இயற்க்கை
அனுமதி கேட்கவுமில்லை ....
அனுமதி வழங்கவுமில்லை...
ஆனால்...
வலுகட்டாயமாக
ஒரு முத்தம் ....
மண்ணில் மழைத்துளி
மழைத்துளி
-
சிதறும் ஒவ்வொரு மழை துளியிலும்
சிந்தனையின்றி படரும்
விழிகளின் திரையில்
தெரிவது ஏனோ
உன் முகம் தான் .
திரை
-
கோபம் என்னும் திரையை
மனதில் இருந்து கிழித்து விடு ....
அப்போது தான்
அன்பு என்னும் வார்த்தைள் உன்
மனதில் இருப்பது தெரியும்
உனக்கு தெரிவதில்லை
பிறரை அதிகமாக
நேசிப்பவன் மட்டுமே
அதிகமாக காயபடுகிறான் ...
காயம்...
-
உடம்பில் அடிபடும் காயம் வலி விட
மனதில் ஏறுபாடும் காயம் தன வலி அதிகம்
மனதில்
-
மனதிலும் நிகழ்விலும்
நாட்கள் வேகமாய் நகர்கிறது ....
ஆனால் நான்
அப்படியே தான் நிற்கிறேன் ...
நீ என்னை
விட்டு சென்ற இடத்தில்....
பிரிவு ....
-
நினைவுகளை தந்தாய் இதயம் வலிக்கிறது
கனவுகளை தந்தாய் கண் வலிக்கிறது
பிரிவுகளை தந்தாய் உயிரே வலிக்கிறது
கனவு
-
நீ விலகியதேன் எனைவிட்டுத் துரமடி
உன் நினைவுகள்தான் என்னில் பாரமடி
உன் கனவுகள் எல்லை மீறுதடி
உன் சுவடுகள் மட்டுந்தான் மீதமடி...
நினைவுகள்தான்
-
நீ இல்லாத பொழுதுகளில்
என்னை சுவாசிக்க வைப்பதே
உன் நினைவுகள் தான்
நீ என்னை பிரிந்து சென்ற பின்பும்......
சுவாசிக்க
-
உரிமையோடு சண்டை போட உறவாய் நீ வேண்டும்
தட்டி கொடுத்து தூங்க வைக்கும் தூணாய் உன் தோள்கள் வேண்டும்
நீ சுவாசிக்கும் முச்சு கற்று நானும் சுவாசிக்க வேண்டும்
சண்டை போட
-
என்னுடன் சண்டை போட்டு பிரிந்த பின்
மகிழ்வுடன் இருக்கலாம் நீ ...
ஆனால் என்னை பிரிந்த பின்
வெறும் வார்த்தையில் மட்டும் தான்
சந்தோசம் என்னும் சொல்
என் வாழ்க்கையில் இல்லை...
பிரிவின்துயரம்...
-
உன்னை மறக்க முயற்சிக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
உன் நினைவுகளால்
பிரிவின்துயரம்-என்னை
வருத்துதே
முயற்சிக்கும்
-
அனைவரும் கனவுகளில் கழிக்கும் இரவுகளை
நான் மட்டும் கண்ணீரில் கழிக்கிறேன்
முயற்சிக்கும் உன் நினைவுகளால்..
இரவுகளை
-
விடியலே வேண்டாம்
என்கிறது விழிகள்
கனவுகளாய்- நீ
என் இரவுகளை
அக்கிரமித்துக்
கொள்வதால்
விழிகள்
-
என்னை சுற்றி உறவுகள் பல இருந்தும்
என் உயிரின் உறவாக நினைக்கிறன் உன்னை
உயிர் இருந்தும் உயிர் இல்லா உடலாக நான்
உன்னை எண்ணி நான் வாழும் என் விழிகள்
உயிர் இருந்தும்
-
உயிர் இருந்தும் உயிர் எழுத்தாய்
இருந்த போதும் -நீ
நிழலாய் இருந்த போது-நான்
நிஜமாய் இருந்தேன் உன் அருகில்
நிஜமாய்
-
ஆயிரம் உறவுகள் எனக்கு புரிகிறது
ஆனால் நிஜமாய் புரியவில்லை ..
நான்
எனக்கு
என்ன உறவு ...
உறவு
-
என்னை என் உறவுகள்
தீண்டியபோது கூட நான்....
அழுததில்லை-இன்று....
கண்களில் கண்ணீர்...
ஏன் என்று தெரியாமலேயே
கண்ணீர்
-
உறக்கத்தை தொலைக்க வைக்கும்
உன் நினைவுகளால் நித்தமும்
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறேன்
உறக்கத்தை
-
உன் நினைவுகளுடன் உறக்கத்தையும்
தினந்தோறும் கனவில்-மட்டும் தான்
கனவு முடிந்தும் உன்னோடு வாழ்கிறேன்
வாழ்கிறேன்
-
உன் மீது கொண்டகாதலினால் காதல் என்ற
வார்த்தையை கூட நேசித்தேன் ஆனால் இன்றோ
நீ தந்து சென்ற காதல் வலியால் உன்னை வெறுக்க
தெரியாமல் காதல் என்ற வார்த்தையை
எழுதி எழுதிஅழிக்கிறேன் தினம் தினம் வாழ்கிறேன் ....
தினம் தினம்
-
வலி அதிகம் என்று தெரியவில்லை
காதலிக்கும் போது
நீ பிரிந்து சென்றதும்
தினம் தினம் உணர்கிறேன்
வலி அதிகம்
-
என்றும் வலிஅதிகம் தன
நான் உன்னிடம் உண்மையாய்
இருந்ததால் தான் என்னமோ
உடைபட்டுப் போனது நம் காதல்
உன்னிடம்
-
என் மனம் உன்னைத் தேடி அலைகிறது
நீ என்னிடம் உண்மையா இருந்தது- இல்லை
ஆனால் உன்னிடம் என் மனம் சிக்கிக்
கொண்டது
அலைகிறது
-
கனவிற்க்கும் நிஜத்திற்க்கும் ஒரு வித்யாசம்
கனவில் என் அருகில் நீ நிஜங்களில்
உன் தொலைவில் நான் அலைகிறது
வித்யாசம்
-
துன்பத்திற்கும் இன்பத்திற்கும் வித்தியாசம் ....
துன்பம்
ஆயிரம் தடவை
உன் வாழ்க்கை
உன்னை அழவைத்தால்....
இன்பம்
ஆயிரம் வழிகளில்
நீ சிரிப்பதற்கு
வழி கொடுக்கும் --- நீ தேடினால் ...
தேடல்
-
தேடல் தொடர்கிறதே!
நொடிபொழுதில் ஆரம்பித்து,நிமிடமாய் நீண்டு,
மணிக்கணக்காய் மாறி,வாரங்களில் கழிந்து,
மாதங்களில் மாட்டிக்கொண்டு,வருடக்கணக்காய் வாட்டிகொண்டு ,
இன்னும் சொல்லப் போனால் யுகங்களாய் தொடர்கிறதே......
இந்த தேடல்...................
எதை தேடுகிறோம்,எங்கு தேடுகிறோம்,எப்படி தேடுகிறோம்,
யாரை தேடுகிறோம்,எப்போது தேடுகிறோம்,,,,,,,
ஒன்று கிடைக்கும் வரை அதை தேடுகிறோம்,
அது கிட்டியபின் அடுத்ததை தேடுகிறோம்,
சளைக்காமல் தேடுகிறோம் ,அலுக்காமல் தேடுகிறோம்,
தேடல் மட்டும் தொடர்கிறதே!!!
தொடர்கதை
-
என் வாழ்வில் இந்த தொடர்கதை
ஓவியமானேன் நான் உன் கண்கள் பார்த்ததால்
சிலையானேன் நான் உன் கைகள் என்னை தழுவியதால்
கவிதையானேன் நான் உன் உதடுகள் உச்செரிப்பதால்
கல்லறையானேன் நான் உன் இதயத்தில் என் காதலை
ஏற்க்க மறுத்ததனால்
உச்செரிப்பதால்
-
உன் கைகள் என்னை தழுவியதால்
கவிதையானேன் நான்- உன் உதடுகள்
உச்செரிப்பதால் கல்லறையானேன்
தழுவியதால்
-
சந்தித்த வேளைகளை சிந்தித்து பார்க்கையில்
தித்திப்பாய் தான் இருக்கிறது அவளுடன்
பழகிய நாட்கள் மட்டும் இன்னும் இனிமையாய்
என் நெஞ்சில் தழுவியதால் இன்று வரை
பழகிய நாட்கள்
-
நீ பழகிய நாட்களில் இருந்து
இதோ இவளும் ஓர் ஊமை தான்
உன்னை நினைத்த அத் தருணத்திலிருந்து,..
எத்தனை நாட்கள் தான் என்னை நான்
மூழ்க வைப்பேன் உன் நினைவெனும் ஆழ் கடலில்,..
கண்களின் வலி என்னவென்று அறியாத இவளின்
கண்களில் தினமும் கண்ணீர் மழை...
இவளின் விழிகள் மட்டும் ஏங்கிக் கொண்டே துடிகின்றது
இவள் போகும் பாதையின் திசை அறியாமல்,..
இன்னும் ஏனடா - உன் விளையாட்டில்
எனை பொம்மையாக்குகிறாய் ....
இவளின் கண்ணீர் மழையால்
மழை நீர் கூட உப்பாகும் - போதுமடா,..
இனி ஏதும் இல்லை இவளிடம் உன் நினைவுகளை தவிர
உன்னால் முடிந்தால் நீயே எடுத்து செல்
இப்பெண்ணிடமிருந்து உன் நினைவுகளை மட்டும்...
இனியோடு நிறுத்திக்கொள்,
உன் விழிகள் நடத்தும் நாடகத்தை..
உயிரின் உருவம் அறியாத இவள்
உயிர் உருகுவதை உணர்கிறாள் உன்னால்....
உயிரும் உருகும்..
-
புள்ளியை நோக்கிய
புரியாத பயணத்தில்
சொல்லி வைத்தால் போல்
உயிருகும் உருகும்
வலையில் வீழ்ந்த மீனென
வலையில் வீழ்ந்த மீனென
-
வலையில் வீழ்ந்த மீனென
உன்னோடு பேச முடியாமல்
துடிக்கும் என் இதயம் கண்டு
உன்னால் எப்படி இயல்பாக
இருக்க முடிகிறது ...
என் காதல் வலிமையை சோதிக்க தான்
இதனை நாள் உன்னோடு பேசாமல்
இருந்தேன் என்று என்னோடு பேசி
விட மாட்டயா ! என்று
ஒவொரு நாளும் ஏங்கி காத்து
கொண்டு இருக்கிறேன் நான்...
காத்திருப்பு
-
இருவரும் ஜோடியாய் இணைந்து நடந்த சாலையில்
நான்மட்டும் நடக்கிறேன் தனிமையில் தவிக்கிறேன்
வழிபார்த்து காத்திருந்த கண்கள் இன்று
உன்முகம் பார்க்க காத்துகிடக்க
பறந்துபோன கிளியே உன்
பார்வைக்காக காத்திருக்கிறேன் ...........
தவிக்கிறேன்
-
கனவுக்குள்ளே உந்தன் நினைவாலே
உன்னை மறந்து தவிக்கிறேன்,
நீ என்னை மறந்து சிரிக்கிறாய்..
நினைவாலே
-
இதயங்கள் எரியும்
நெருப்பாய் கண்கள் வடிக்கும்
நீராய் உயிர் வலிக்கும்
உன் நினைவால்
இதயங்கள்
-
இதயங்கள் இணைத்த
முடிவில்லா நம் அன்பின் முடிவு
நிச்சயம் என்னிடம் இல்லை....
என்னால் அமைய போவதும் இல்லை!
ஆனால்...
எல்லா முடிவும் புதிய நட்பின் தொடக்கம் தானே
காத்திருக்கிறேன் புதிய நட்புக்காக .....
நட்பு
-
உனது அன்பு...
என் நெஞ்சினில் புகுந்தது,,,
தனிமை அன்று மறைந்தது,,,
நாமென்று உள்ளம் நெகிழ்ந்தது,,,
இரு உள்ளமும் துள்ளியது,,,
துன்பம் அதனால் உருகியது,,,
இன்பம் என்றும் இறுகியது,,,
உன்னால் நெஞ்சம் மகிழ்ந்தது!!!
இதுவே நட்பின் அழகோ!!!
கண்கள்
-
உன்னருகில் நானிருக்க
என் கண்களோடு
உன் கண்கள் சேரும் போது
ஏழு ஜென்மம்
வாழ்ந்ததுபோல்
நொடியினில்
வாழ்ந்துவிட்டேன் உன்னோடு.
என்னருகில் நீ....
-
உன் அருகில் நான் காணும் நொடி அனைத்தும் அழகோ!
நீ என்னுடன் சேர்ந்திருக்க,,,
நான் உன்னுடன் கை கோர்க்க,,,
நீ என்மேல் தலை சாய்க்க,,,
நான் உன் விழி பார்க்க,,,
அன்பால் இருவரும் இணைந்து,,,
அழகிய நாட்களை இருவரும்,...
ஒன்றாகவே கடப்போம் என் உயிரே!!!
மழை துளி!
-
என்னை விட்டு நீ
பிரிந்ததை வானத்திற்கும்
சொல்லியது யார் ?
என்னை போல் அதுவும்
கண்ணீர் சிந்துகிறதே
மழை துளியாய் ....
கண்ணீர்
-
நெஞ்சினுள் உள்ள துயரங்கள் யாவும்,,,
கண்ணீர் துளியாய் வெளி வர...
கண்ணீரை துடைத்த என்னவனே!!!
நீயோ என்னை பிரிந்து விட்டாய்,,,
அதாலால்,,
மனமது துயர்வுற்று கல்லாய் இருக்கிறது....
கண்ணீராய் வடிகின்றது...
யார் என் கண்ணீரை துடைக்க வருவாரோ!!!
அதை சிறகாய் விரிக்க வருவாரோ!!!
பெண்
-
பெண்ணே !
வெட்டிப்பயன் போல்
ஊரை சுற்றி வந்தேன்
வெட்டும் கத்தி பார்வையை கொண்டு
உன்னை சுற்ற வைத்தாயடி பாவி...
உறவுகள் வேண்டாம் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில்
என் உறவே நீதான் என நினைக்க தோன்றுதடி.........
இதை உன்னிடம் சொல்லிவிடலாம் என்றாலோ
தயக்கம் தடுக்கிறது...
உன்னை நினைத்து ஏங்கும் எனக்கு
எங்கும் எதிலும் நீயே தெரிகிறாய்
என் நினைவெல்லாம்
நீயே வாழ்கிறாய்....
நினைவெல்லாம்
-
நாம் இருவரும் முகம் பார்த்து பழகவில்லை
குரல்களும் பரிட்சயமில்லை
எழுத்துக்களால் ஒன்றானோம்
என்னில் தோன்றும் எண்ணங்கள்
உன்னிலும் வெளிப்பட இருவரும்
தோழமையாய் பயணித்தோம்
தினம் தினம் எழுத்துக்களால் சந்தித்தோம்
எண்ணங்களை பதிவு கொண்டோம்
எளிதில் புரிந்து கொண்டோம்
எங்கள் பயணம் எதுவரை என்றும் தெரியாது
என்று முடியும் என்றும் தெரியாது
எங்களுக்கு பிரிவுகளும் வரக்கூடும்
ஆனால் பிரிந்தாலும் பயணிப்போம்
எங்கள் நினைவெல்லாம் எங்களோடு
என்றென்றும் பயணிக்கும்
இறுதி மூச்சு இருக்கும் வரை
அன்பு பயணம் தொடர்ந்திருக்கும்.............
அன்பு
-
அம்மா
அன்று நம் தொப்புள் கொடியை
அறுத்தது நம் உறவை பிரிக்க
அல்ல ...
அது நம் அன்பின் தொடக்கத்திற்கு
வெட்டப்பட்ட ரிப்பன்
பாசம்...
-
உன்னை விட்டு வெகு தூரம்
செல்கிறேன் என்றதும்
போய் வா என்று சொல்லிவிட்டு
மெளனமாய் நின்றாயே
என்னை பார்த்துக்கொண்டே
உன் கண்களில் நீர் வழிய
அந்த பாசத்திற்கு ஈடு இணை
இந்த உலகில் ஏதடி என் உயிரே...............
உயிர்
-
உயிரே என்னை பிரிந்து சென்றாலும்....
நினைவுகளாய் விழியில் நிற்பதும் ஏன்?
என் ஆருயிர் என்று நினைத்து...
என்னை உன்னிடம் கொடுத்து விட்டேன்!
அதனாலோ என்னவோ!
என் மனம் எனக்கே துரோகம் செய்கிறது...
இருப்பதோ என்னிடம்...
துடிபதோ அவளுக்காக...!!!
நினைவுகள்
-
உயிரை பிரிந்து நடை பிணமாய்
இங்கே உன் வார்த்தைகளை கேட்க
ஏங்குகிறது என் மனது
சரணம் கொண்டு உன் விரல்களால்
மீட்கப்பட்ட இசைக் கோர்வைகள்
ராகங்களக என் மனதில் இசைக்கின்றது
நம் நினைவுகளை
விரல்கள் அள்ள மறுக்கிறது உணவை
இமைகள் மூட மறுக்கிறது உறங்க
அழுகின்ற மனதை ஆறுதல் படுத்த இயலாமல்
மெளனமாய் அழுகின்றேன் உன் நினைவுகளோடு தனிமையில்......................
தனிமை
-
கண்ணீருடன் கரைந்து நிற்கும் என்னை,
புன்னகையால் மலர வைக்க நீ பிறந்தாயோ!
என்னுடன் கலந்தாயோ!
உன் வார்த்தைகள் அனைத்தும் மறுஉருவாய்
என் மனதில் இனிக்கிறது!!!
இன்று நீ விலகி நிற்பதும் ஏனடி?
தெரிந்தால் நீ எனக்கு பதில் புரிவாயடி!
உன் பிரிவின் கணங்கள் என் மனம் ஏற்க மறுக்கிறது!
உன் நினைவுகளால் என் மனம் இன்று துடிக்கிறது!
தனிமையில் வலியுடன் மனம் வாடுகிறது!!!
தென்றல்
-
உன்னோடு பேசிய நேரங்கள்
உள்ளமும் ஆறுதடி
உடல் நோயும் தீருதடி
கல்லாய் இருந்த மனமும் கூட
கண்ணீரால் கரையுமடி
உன்னை எதிர் பார்த்த
நேரங்களில் நீ வாராமல்
போனாலோ
உள்ளமும் கொதிக்குதடி
உயிரும் துடிக்குதடி
வந்தவுடன் உன் குரல் கேட்க
தென்றலாய் கரையுதடி
ஓடி மறையுதடி என் கவலைகள் அனைத்தும்............
உள்ளம்
-
உன் குரல் கேட்டு மட்டும்
உயிர்வாழ்கிறேன்
உன் வார்தைகாய்
தவமிருக்கிறேன்
கதிருக்காக காதிருக்கும்
சூரிய காந்தி போல
உன் வருகைக்காய்
காத்திருக்கிறது
எனது உள்ளமும் உயிரும்.....
உயிர்
-
ஏனென்றும் தெரியவில்லை
என்னவென்றும் புரியவில்லை
என் உள்ளத்தை புரிந்துகொள்ள
எவருமில்லையோ பூவுலகில்
என் உயிரே உனக்கே புரியவில்லை
இனி எவர் புரிந்து என்ன பயன்
பூவுலகே உனை விட்டு போகிறேன்
வானுலகை நோக்கி அங்கேனும்
இருப்பாளோ என் உள்ளம் புரிந்துகொள்ள.............
அன்பே
-
அன்பே என்று சொல்லத்தான்
ஏங்குது மனம்
அருகில் கூட வரும்
உன் அப்பாவை பார்க்கும் போது
வம்பே வேண்டாம் தாங்காது உடல்
என அறிவு தடை போடுகிறதே
வம்பே
-
உன் அன்பென்ற மழையில் நனையலாம்
என்று எண்ணினேன்
எங்கே நனைந்தால் சிறிது நாழிகையில் பிரிந்து விடுவாயோ
என அஞ்சி வம்பே வேண்டாம் என்று
உன் அன்பில் கரைந்தே போனேன் ....
கரையும்
-
பாலைவனமான எந்தன் வாழ்வில்
ஒற்றை மரமாக கிடைத்த உன்
அன்பு இவ்வளவு சீக்கிரம்
பட்டு போகும் என்று கனவிலும்
நினைக்கவில்லையடி
இனி வாழ ஒன்றுமில்லை
என் உயிரும் போனதடி
என் உடலும் வேகுதடி
உள்ளமும் வேகுதடி
உலகை விட்டே போகிறேனடி
சாம்பலாகி கரைந்தும் போகிறேன் காற்றோடு காற்றாக.................
வாழ்க்கை
-
தேவதை பெண்ணே!
என் கனவில் வா , கதை பேச
நினைவில் வா , நெஞ்சில் உறங்க
நேரில் வா , காலம் மறந்து காதலிக்க
வாழ்க்கையெல்லாம்
விழித்திருப்பேன் , காத்திருப்பேன்
உன் வருகையை எதிர்பார்த்து ...
வழி மேல் விழி வைத்து
-
வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்...
என்றும் நீ என்னுடன் நடந்த பாதையில்...
தனியாய் இருக்க..
மனமோ ஏங்குதடா!!
உள்ளமோ நோகுதடா!!!
உன் நினைவில் மனம் இன்று..
என்னையே வெறுக்கிறது..
உன்னை காண முடியவில்லை என்று..
உன் நிழல் கொண்ட பாதை,,
இன்று தனியாய் தவிக்கிறது...
பூக்கள் புட்கள்லாக மாறுகிறது..
என் மனமோ வாடுகிறது...
ஆனால் விழி மட்டும் ஏனோ ஏங்குகிறது,,,
உன்னை காண!!!
வானவில்
-
பல வர்ணங்கள் ஜொலித்திட
மனதை மயக்கி
மறைந்து போகும் வானவில் காதல்.
வானவில் மறைந்தாலும்
அதன் சுவடு இருக்காதது.
மறைந்த பின்னும்
அதன் வடுவையும்
மாறா வலியும் விட்டுச் செல்லும் காதல்
வடு
-
மடைதிறந்த வெள்ளம் போல்
பொங்கி வந்த வார்தைகளை
கண்களில் நீரோடு பேசத் தான்
ஓடி வந்தேன்
அடக்கி வைத்த மனதுக்கு
அளவில்லா ஆனந்தம் என்ன
பேச ஏது பேச என்று அறியும்
முன்னே பேசும் போதே
ஏனோ காணாமல் கடந்துவிட்டாய்
செல்லும் போது ஏனோ
என் இதயத்தில் வெட்டப்பட்ட
வடு............
உன் நினைவுகளோடு நான் மெளனமாய் கண்ணீரோடு ...........
கண்ணீர்
-
நினைவு
எங்கங்கோ உன்னை தேடினேன்
நீ கிடைக்கவில்லை
கல்லறை தேடி உறங்கினேன்
என் இதயம் சொன்னது
நீ என் பக்கத்தில்
நிலா
-
வானில் எங்கோ ஒரு இடத்தில நீ...
பௌர்ணமி நிலவாய்,,,
அமாவாசை இருட்டாய்....
உன்னில் கரை ஏற துடிக்கும் மனிதர்களுக்கு...
நீ குளிர் பிரதேசம் என்று மட்டுமே தெரியும்...
ஆனால்,,
உனக்கே நீ நெருப்பாய் துடிப்பது தெரியும்..
உன் உயிரை காண வருகிறாய்...
அந்தி சாயும் பொழுதில்...
அவளுக்காக உன் வெளிச்சத்தை தோளாய் தர!!!
கல்லூரி
-
உன்னை விட்டு பிரியுமுன்னே
உள்ளம் வலியாய் துடிக்குதடி
உயிரும் பிரிந்து போனதடி
பேசிய வார்த்தைகள் அனைத்தும்
பொய்யாய் இங்கே ஆனதடி
நீ இல்லை என்று சொன்னாலும்
என் நினைவும் உன்னை பின் தொடரும்
நீ பயிலும் கல்லூரிக்குள்ளும்
பறந்து வரும் .........................என் நினைவுகள்
என் அன்பே
-
நீ பூமி
நீ ஆகாயம்
நீ நெருப்பு
நீ காற்று
நீ ஊற்று
என்றெல்லாம்
உன்னை வர்ணித்து
இயற்கையுடன் சேர்க்க விரும்பவில்லை
என்னுடன் சேர்க்க ஆசைபடுகிறேன்
என் உயிரே நீ தானே என் அன்பே....
உயிர் உருகும் ஓசை
-
அவள் கூறிய ஒற்றை வார்த்தையில்
உலமே என் காலடியில்
சந்தோசத்தின் எல்லை வரை
நான் மெய் மறந்து பறக்கின்றேன்
இத்தனையும் ஒரு நொடிப்பொழுதில்
கனவாய் இருக்குமோ என்று எனை
கிள்ளித் தான் பார்கின்றேன்
உண்மை என உணர்ந்த போது
நான் எனை மறந்து கொடுத்த முத்தத்தில்
அவள் வெட்கித் தான் தலைகுனிந்தாள்
அவளை அன்போடு தழுவுகிறேன்
எங்கள் இருவருக்கு மட்டுமே கேட்கிறது
எங்கள் உயிர் உருகும் ஓசை....................
மெளனமாய் இருவருமே மயங்கி தான் போகின்றோம்............
மெளனம்
-
மௌனம் காதலின் மொழி தான்..
அதற்காக என்னை மௌனத்தால் வதைக்காதே..!
உன் காதோரம் சரியும் கூந்தலில் கூட..
சிறு சலனம் இருக்கிறது..
உன் புன்னைகை பூக்கும் இதழ்களில் கூட..
சிறு சலனம் இருக்கிறது..
அனால்.. உன் இதயம் எனக்காக சரிகிறதை ..
நான் உணர்ந்தும் எனக்கு மறைப்பதேன்.?
பெண்ணே..!
ஒரு முறையாயினும் சொல்வாயா.?
உனக்காக என் இதயம் இல்லை என்றாலும்..
உன்னை நினைத்து ஒரு முறை ஒரே முறை துடித்ததேன்று..
சொன்னால் போதும்..
மறுகணம் என் இதயத் துடிப்பை நிறுத்துகிறேன்..
இதயத் துடிப்பை நிறுத்துகிறேன்..
-
பழுதுபட்ட இதயத்தை பலப்படுத்த
ஓடி வந்தேன் அழகான வரவேற்பு
அன்பான உபசரிப்பு
முகமரியா உறவுகளூம்
அற்புதமான கொஞ்சல்கள்
உண்மை என்று நம்பி தான்
உற்சாகமாய் நான் இருந்தேன்
அன்பு என்ற வட்டத்துள்
காரணமின்றி வேறுபாடு
எல்லாம் பொய்மையாக
போனவுடன் பொருமை
இழந்து தவிப்போடு
என் இதய துடிப்பை நிறுத்துகிறேன்...............ஆம் அனைத்தையும் நிறுத்தி கொண்டேன்
பொய்மை
-
பொய்மைக்கு மறு பெயர் தான் அழகோ.??
வாய்மைக்கு மறு பெயர் தான் இறைவனோ.??
காதலுக்கு மறு பெயர் தான் மௌனமோ..??
நட்புக்கு மறு பெயர் தான் நீயோ.?
என் இனிய தோழியே..!
என் இனிய தோழியே..!
-
என் அருகாமையில் நீ இன்றி...
நினைவுகளால் நீ என்னுள் வாழ்ந்திட..
சில நேரங்களில் கண்ணீர் துளியாய் நின்றிட....
உன் பிரிவு தூரத்தில் மட்டும் இருந்திட...
உன்னை காணவிருக்கும் நொடிகளை எண்ணி பார்க்க...
நட்பின் சுவை அதிகரிக்க...
மனமது உன்னால் நெகிழ்ந்திட...
என்றும் நீ நலம் வாழ...
உன் அன்பு தோழியின் வாழ்த்துக்கள்..
என் இனிய தோழியே!!!
வெண்மேகம்
-
உன் முகம் காண நான்
முயற்சிக்கும் பொதெல்லாம்
ஏனோ நீ மறைந்து கொள்கிறாய்
வெண் மேகங்கள் இடையினிலே
உன் முழு மதியை நான் காண
முப்பொழுதும் முயற்சிக்கிறேன்
வருவாயோ எனைக் காண
வெண் மேகங்களைத் தகர்த்தெரிந்து.............
காத்திருக்கிறேன்
-
உன் பிரிவின் துளிகள் நீல..
கண்ணீர் துளிகள் கசிய..
மனமது என்றும் உனக்காய் இருக்க..
என் முகமது வாடிய மலராய்..
மழை நேரத்தின் இருட்டினில் நான்...!
ஏன் என்னை தனிமையில் வதைக்கிறாய்?
உயிருடன் கொன்று புதைக்கிறாய்..
உன் மௌனம் உனக்கே சுகமாய் இருக்க...
எந்தன் நரகமாய் அமைய...
உன் தோல் சேர்வது நானாய் இருக்க,,
காத்திருக்கிறேன்,,காத்திருப்பேன்,,,
என்றும் உருகி கொண்டே இருப்பேன்...
அந்த நொடிக்காக..!
தனிமையின் வலிகள்!
-
உன் தோல் சேர்வது நானாய் இருக்க,,
காத்திருக்கிறேன்,,காத்திருப்பேன்,,,
என்றும் உருகி கொண்டே இருப்பேன்...
அந்த நொடிக்காக..!
தனிமையின் வலிகள்!
nice line manadhai thotta varigal
-
என் இதயத்தை ஆயிரம் கழுகுகள்
ஒன்றாக குத்திக் கிழிக்குதடி
உன்னை விட்டு பிரிந்த ஒவ்வொரு
நொடிகளும்
நீ விதைத்த விதையினிலே
மலர்ந்து வந்த பூஞ்செடியை
ஒரு நொடியில் பொசுக்கி விட்டாய்
உன் வார்த்தை என்ற சொல்லாலே
நீ கொடுத்த வலிகளிலே
மிக கொடிய வலி இந்த வலி
தனிமையில் ஓலமிடும் என் மரணத்தின் இறுதி வலி.................ஆம் என் தனிமையின் வலி
காவியம்
-
நான் உன்னை விட்டு
பிரிந்து போனாலும்
என் கண்ணீர் தடயங்கள்
காட்டி கொடுக்கும்
நான் சென்ற இடத்தை..
உனக்குள்ளும் காதல் வந்தால்
அதை பின்தொடர்ந்து வா ..!
காத்திருப்பேன் ...
உன்னுடன் சேர்ந்து புதிய காவியம் படைக்க
காத்திருப்பேன்
-
உன் முகம் காண துடிக்கின்றேன்
நீயோ மறைந்து மறைந்து
விளையாடுவதும் ஏனோ
என் மனம் நோக வைப்பதும் ஏனோ
காத்திருப்பேனடி
காலன் வரும் வரை
காற்றாய் வந்து என்
காதோரம் கவி பாடுவாய் என்று........................
மனம்
-
உன் பார்வையில் உருகும் ஒன்று..
உன் தொடுகையில் கரையும் ஒன்று..
உன் விழி அசைவில் வீழும் ஒன்று..
ஆம் ஒன்றே ஒன்று என் மனம் மட்டுமே..!!
என் மனதை முழுவதுமாய் சரித்துவிட்டாயடா..!!
பார்வையில் உருகும்
-
காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை.
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று..
தினம் தினம்
பார்வையில் உருகும்
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்...
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை....
மௌனம் சம்மதம்
-
உன் மந்திர புன்னகையில்
நான் சொக்கிதான் போகிறேனடி
மாய விழிகளை சுழல விட்டு
உன் பின்னே சுற்ற வைக்கிறாயடி
அனைத்தையும் செய்துவிட்டு
நான் கேட்ட ஒற்றை வார்த்தைக்கு
மட்டும் ஏனோ மெளனம் கொள்கிறாயடி
உன் மெளனம் சம்மதம் தானோ
தெரியாமல் தவிக்கிறேனடி
மெளனம் சம்மதமோ...............???????
உன் பார்வை
-
உன்னுடம்
பேசும்போதெல்லாம்
பார்க்கவேண்டும் என்று
தவறாமல் தோன்றும்.
ஆனால்...
உன் பாரவையோ !
என்னை பேச விடுவதில்லை .
பேசாமல்
-
அதி காலை சூரியனைக்
கண்ட பூக்கள் மலர்வதை
போன்று உன் முகம் பார்த்த
என் கண்கள் அழகான
பூக்களாய் மலருதடி
அன்பொழுக பேசும்
உன் பேச்சுக்கும் நான்
தவியாய் தவிக்கிறேனடி
நீ பேசியும் பேசாமல்
போன காரணமும் ஏனடியோ.................
உன் கண்கள்
-
உன்னில் பிடித்தது எதுவென கேட்டால்
உன் கண்கள் என்றே சொல்வேன்...
நீ சொல்லாத வார்த்தைகள் எல்லாமே
உன் கண்கள் எனக்கு சொல்லிவிடுகிறது ...!!
நான் மண்ணோடு போகும் வரை
உன் கண்ணுக்கு கண்ணாக இருப்பேன்...!
தொலைந்து போன என்னை
தேடுவதை மறந்து தொலைவாய் போன
உன்னை தேடுகிறேன்...!
தொலைந்து
போனது உனக்குள் இருப்பதாய்...!
இன்னும் ஒரு ஜென்மம்
எடுத்தாலும்
என் கண்ணில் பட்டு விடாதே
இனியும் எனக்கு
இன்னும் ஒரு ஆயுள் தண்டனை வேண்டாம்!!!
ஆயுள் தண்டனை
-
உள்ளத்தால் இணைந்து
உறவில் கலந்திட்ட
உள்ளங்கள் இரண்டிங்கு
உண்மை உணர்வினை சொல்லிட
உதடுகள் துடிக்குது
உள்ளே ஏதோ தடுக்குது
காதலின் விதியா?
காலத்தின் சதியா?
உணர்ந்திட்ட போதிலும்
உரைக்க மறுக்குது
உள்ளம் உண்மைதனை இங்கு.
நிலையது என்ன
நெஞ்சத்தில் ஏக்கம்
நினைவினில் தாக்கம்
தூக்கமும் போச்சு
வேதனையே வாழ்வின்
அடுத்த நிலையாச்சு
சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
இந்த ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறேன்
இன்று நானிங்கு.
"அவள் புன்னகை"
-
முன்பெல்லாம் சிறம் தாழ்த்தி அளவாய்
மிக அழகாய், அமைதியாய்
முகவாய் மலரும்
அந்த அர்த்தமுள்ள அவளின்
புன்னகையை கண்டு
அகம் மகிழ்ந்தவன்
புருவம் உயர்த்தி
ஏளனமாய் அவள் நகைக்கும்
நகையை கண்டு அஞ்சுகிறேன்.!
அந்த மந்தகாச புன்னகை மறைத்து
பரிகாச புன்னகை ஆணதேனடி...?
ஏளனம்
-
கரை படிந்த அழுக்கு துணிகளுடன் சிலர்!
அழகிய புத்தாடைகளுடன் சிலர்!
எவ்வித வேறுபாடுமின்றி விளையாடினர்!
இருவரும் தோல் சேர்ந்து இருந்தனர்!
பெற்றோரின் வறுமை வேறுபாடால் பிரித்தனர்...!
ஏளன பார்வைகளும் வார்த்தைகளும் எப்பொழுது உடையுமோ!
தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசும்...,
பெரியவர்களே வேறுபாட்டை காட்டினாள்,
செல்ல குழந்தைகள் என்னாகுமோ!
குழந்தைகள்!
-
அந்திப் பொழுதில்
அழகான மேகக் கூட்டங்களுக்கிடையில்
ஒளிந்து விளையாட சென்ற கதிரவனை
பார்த்துக் கொண்டே நம் இருவரும்
கடற்கரையில் அலைகளில் நனைந்துகொண்டே
குழந்தைகளாய் மாறி விளையாடியதை
மறந்துவிட்டாயோ என்னவளே
காலம் ஒரு நாள் நினைவூட்டும்
காத்திருப்பேன் உன் நினைவுகளோடு ...................
அலைகள்
-
அழகிய கரையை தொட துணிந்தவள் நீயோ...
மெல்லிய சாரல் துளிகள் கலப்பதும் உன்னோடு தானோ!
இரவு நேர வெண்ணிலா படுவதும் உன்மீது தானோ!
சிறு குழந்தை போல் அனைவரும்,
உன்மடியில் விளையாடுவதும் ஏனோ!
ஏழுநிறம் கொண்ட வானவிலும்
உன்னோடு கலப்பதும் ஏனோ!
கடல் தாயே நீ இன்றி அனைவரும் வாழ்வதும் எவ்வாறோ!
அக்கடளையே இக்காலத்தினர் மாசுபடுத்துவதும் துன்பமோ!!!
அன்பு
-
நீ எங்கோ பிறந்தாய்
நான் எங்கோ பிறந்தேன்..
ஆனால்,
நம் இருவருக்கும் அன்பு எனும்
காதல் ஒன்றாகப் பிறந்தது...
இருவருக்கும்
-
அன்பே அன்பை அடைகாக்க மறுக்கிறது!
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த
இருவருக்கும் பிறந்த காதல்!
பெற்றெடுத்த இருவருக்கு காதலை
விடுத்து கனலை கொடுத்து!!!
கனல்
-
நெஞ்சுக்குள் நித்தம் கோப கனல் மூட்டும்
உன் காதல் என்னில் எப்போதுமே
எரிந்துகொண்டிருக்கும் தீபம்
உன் காதல்
-
வார்த்தை வரிசை
பேச்சுக்களோ
விழிப்பார்வை நேரெதிர்
வீச்சுக்களோ
வேண்டியதில்லை
வெள்ளி நிலவே !!
நின் கொள்ளை எழில்மனதை
அள்ளி அள்ளி பருகுதற்கு .
நீ மெல்ல மெல்ல
வெளிவிடும்
மெல்லிய சிறுமூச்சே போதும்
நின் எழில் மனதுடன்
முழுமையாய் உன் காதல்
கொண்டவனுக்கு !!
வெள்ளி நிலவே !!
-
அழகாய் வலம்வரும் நிலவே
அமாவாசையிலும் வேண்டும்
விரும்பி அழைக்கிறேன்
உன்னை வெள்ளி நிலவே
வந்துவிடு எனதருகே...
அழைக்கிறேன்
-
அழைத்ததில்லை
கவிதைகளை
இருந்தும்
கொட்டிக்கொண்டுதான்
கிடக்கின்றது
கட்டுகடங்கிடா
கற்பனை குதிரைகளை
பின்தொடர்ந்து ...
அழைத்ததில்லை
எண்ணங்களை
இருந்தும்
நிரப்பிக்கொண்டுதான்
இருக்கின்றது
மனதோடு நாட்களையும்
நீங்கா நின் நினைவுகளை
பின்தொடர்ந்து ...
இப்படி,
அழையாதவையெலாம்
அணியணியாய் அணி சேர்ந்து
செவ்வென பணி செய்திட
அழைக்கிறேன் உனை
இருந்தும்,
தனியேதான் தவிக்கவிட்டு
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்
என் கண்ணா !!
கண்ணாமூச்சி
-
கண்ணாமூச்சி ஆடுவதாய்
காச்சு மூச்சென எனை
கடு காய்ச்சி எடுக்கின்றாய் - என்
காதல் வன வண்ணத்து பூச்சியே!
நின் மிளிர் எழில் வண்ணமதை
முன்வருடி, பின் திருடிடும்
எண்ணமில்லை ...
நீ தேனெடுக்கும் தீம் பொழுதுகளில்
பச்சிலையாய் நான் கிடந்து
நின் இறகுகளின் சிறு படபடப்பினில்
நிரமேற்றிடும் வரம் வேண்டும் .....
தருவாயா ??
தருவாயா ??
-
உனக்காக உயிரையும் தருவேன்.
என் உயிருக்கு விலையாய் தருவாயா..?
உன் உண்மை காதலை...
உயிரையும்
-
என் மனதின் முழுமுதற்
ஆளுமை நீயடி ...
இந்த தேக கப்பலின்
ஒற்றை மாலுமியும் நீயடி ....
இந்த இன்பத்தொடர் பயணம்
இன்பமாய் தொடர்ந்திட
துணை விட்டுசெல்லாது
எங்கு வேண்டிடினும் எனை
இட்டு செல்
உன் அருகாமை நிழலில்லாது போயினும்
நின் நினைவுகளோடு
என் உயிரையும் முழு முழுதாய்
தொட்டு செல் ..
தொட்டு செல் ..
-
சுமார் 92கோடியே சொச்ச மைல்கள்
உச்சத்தில் இருந்தும் கூட
தன் ஒளிக்கீற்றுகளை கொண்டு - சொல்லாமல்
தொட்டு செல்வான் கதிரவன்
எல்லை ஈதென்றே இல்லையென்றான
கொள்ளை குளிர் எழிலுடன்
தன் அலை கைகள் கொண்டு - கரை
தொட்டு செல்வாள் கடல் மகள் ...
இங்ஙனம்,எங்கோ இருந்தும்
தன்மனம் கவர்ந்ததை தொட்டு செல்லும்
வித்தகர்கெல்லாம் வித்தகனே ...
வரிவரியாய் வரி வரைந்து
வரையும் வரிகளால்
என் உயிர் கயிறை தினம் திரிக்கும்
கவிதை காதலனே ...
எழுதுகோல் தாங்கிடும்
நின்எழில் கைகளால் இல்லாதுபோயினும்
நின் சுட்டு விரலின் நுனி கொண்டேனும்
ஒரேமுறை என் உயிர் தொட்டு செல் ....
உயிர் தொட்டு செல் ...
-
முழு இரவினில் முக்கால் பங்கு
உன் இனி நினைவினில்
உன் இனி பெயரையே
உளற வைத்தவளும் நீ ....
ஒருவழியாய் முக்கால் இரவு
கழிந்திட ,மீதம் கால் இரவு
தூங்கிட முனைந்தால்
திடுப்பென்ன அரும் பொழுதினை
புலர வைத்தவளும் நீ ....
நின் நினைவின் மகிழ்வினில்
நான் கிறங்கி கிடக்கையில்
நிலையாய் நின்னை நினைப்பதற்கு
இணை பகரமாய்
நின் குளிர்பார்வையினை
இடம்மாற்றி என்னில் பரிமாற்றி
என் பார்வை பட்டும் கூட
சோலை மலர்களினைமெதுவாய்
மலர வைத்தவளும் நீ ...
இப்படி
பாசத்தின் சுகந்த வாசத்தை
நுகர்ந்திடாமலே
அறியச்செய்தவள் நீ ,
ஒரே முறை நின் சுவாசத்தால்
என் நுரையீரல் தீண்டி
உயிர்தொட்டு செல்வாயா ??
நுகர்ந்திடாமலே
-
தொலைதூரம் தான் எனினும்
கரையின் நிறை மணமதை
கடல் அறிந்துகொள்கிறது
அலையாடி விளையாடிடும்
அலைகளின் துணைகொண்டு .....
தொலைதூரம் தான் எனினும்
மண்ணின் மயக்கும் மணமதை
வானம் அறிந்துக்கொள்கிறது
வந்துவிழும் மழையின் மூதலான
முதல் துளியின் துணைக்கொண்டு .....
எங்கோ
தொலைவினில் தான் எனினும்
பேதையிவள் மனதின் மணமதை
நான் பகர்ந்திடாமலே
நீயும் வந்து நுகர்ந்திடாமலே
அறிந்துணர்ந்து கொ(ல்) ள்கிறாய் ....
மாயன் நீ
கொண்டிருக்கும்
மாயம் தான் என்ன???
அடுத்த தலைப்பு - தொலைவினில்
-
தொலைவினில் வானம்
தொடுவானமாய்..
தொட்டுத் தழுவிடும் பூமி..
திசைதவறி..
அலைகளோடு போராடி ...
கரையினைத் தேடும் கப்பலாய்..
சுழன்றடித்த துயர சூறாவளியில்
சுக்குநூறாகிப்போனது மனது..
வசந்தங்களே மலர்ந்திருந்த
வாழ்வில்..
துயரங்கள் மட்டுமே
இன்று துணை எனக்கு...
வசந்த நினைவுகள்...
ஞாபகங்களில் மட்டும்
தாலாட்டும்..
உருண்டோடும் உலகில்
எல்லாமே மாறும்..
புதுவசந்தம் கண்டு
எந்தன் வாழ்வு
மீண்டும் மலரும் ஒருநாள்
அடுத்த தலைப்பு- மீண்டும் மலரும்
-
என் அன்னையின் கருவில் நான் வளரும் போது சிந்திக்கவும் இல்லை
தெரியவும் இல்லை இன்னும் சில மாதங்களில் ஒரு அழகான
இயற்கைகள் நிறைந்த பூமியில் வந்து விழ போகிறேன் என்று
-
சோதனைக்கூடத்து சிறுமுயலாய்
சிக்குண்டு சிறைபட்டிருக்கும்
இக்கவிதை பகுதி சிறப்புற்று
அகமும்புறமும் நீ வாய்மலர
மீண்டும் மலரும்
அடுத்த தலைப்பு - சிறைபட்டிருக்கும்
-
உன்நினைவு அதில் கலந்த நம்காதல்...
மனதில் சிறைபட்டிருக்கும் ஆசைகள்...
உருபெற்றன அதிகாலை அற்புதகனவாய்...
உருபெற்றன
-
நின் நினைவினில் ஓயாதுள்ளோடும்
நினைவலைகளை
மனம்விட்டு வெளியே பாயாதிருந்திட
நிலையாய் நிலைத்திடும் பொருட்டு
கவியாய்வடித்திட
முனைகையில் கருவாய் உருப்பெற்றன
இதோ இத்திருவரிகள் !!
அடுத்த தலைப்பு - இத்திருவரிகள்
-
இதோ இத்திருவரிகள்
புத்தம்புது பெருவொளிபெற்று
புதுவரி சமைத்திடல் வேண்டி
என் சிறு மனம் நாடியவை ....
மன்னவனான என்னவன் தன்
குளிர் நினைவுகளின் நீரோடையில்
உள்ளிறங்கி நான் காதல் நீராடிட
புதுப்பொலிவினில் பனிப்பொழிவாய்
அவன்தம் நினைவுகள்
செயற்கைக்கோள்களும் அறிந்திடாத
என் மன ஆசைகளை பாசையில்லாதும்
ஓசையின்றி சுவாசத்தால வாசித்தவனவன்
வள்ளியிவள் உள்மனதில் பள்ளிகொண்ட
சிறு ஆசையினை சொல்லுவேன் கேள்
சொல்லில் நற்கவிகளாய் சொல்லிச்சொல்லி
துள்ளிஎழுந்திடும் கவிக்கொலுசிட்டவன்
அல்லியென் பூம்பாதங்களை மடியேந்தி
வெள்ளிக்கொலுசிட ஏந்தியவளாய்
துள்ளிக்குதித்தோடிடுவேன் புள்ளிமானாக ....
வெள்ளிக்கொலுசு
-
பட்டப்பகல் வெட்டவெளியினை
கட்டங்கட்டமாய் சட்டமிட்டு
கொட்டகையாய் விட்டம் மறைத்த
உள்ளரங்க நீச்சல் குளத்தினில்
நீந்திப்பழகிக் கொண்டிருக்கையில்
நன்றாய் நனைந்து நெளிந்தபடி
நீரில் நமக்கிட்டமான வட்டநிலா
பிம்பம் கலைக்க முயலுமுன்
வெள்ளிக்கொலுசு
துளியும் நனைந்திடாமல்
என் நினைவினில் நீ ....
நீச்சல் குளம்
-
வரம்
அன்னை தந்தை கலவி கொடுத்த வரம் "நான் "!
கல்வி தந்த வரம் "அறிவு"!
அறிவு கொடுத்த வரம் "ஆற்றல் "
ஆற்றல் அளித்த வரம் "தன்னம்பிக்கை "
தன்னம்பிக்கை தந்திட்ட வரம் "இந்த உலகை ஆளும் திறன் "
இத்தனை வரம் உனக்கிருந்தும் நண்பா !
ஏன் வாழ்வை சாபமாய் நினைக்கிறாய்!
வாழ்க்கை ஒரு வரம்!
வாழ்ந்து காட்டுவதே திறம் !
என்றும் அன்புடன்
உங்கள் குயில் ......
-
இறந்துபோன பிணங்களின் மீது
இன்னும் ஒட்டி நிற்கும் பாசம் ..
கண்ணீர் வற்றிய இமை ஓரத்திலே
இன்னும் தேடும் அந்த உறவு ..
நினைவு ....
இவன் ..
இரா.ஜெகதீஷ்
பிணம் ...
-
உயிர் இருந்தும் பிணமாக
வாழ்கிறேன் .....இயந்திரமாக
இயங்கும் இவ்வுலகினிலே !!!!
உறவுகள் சூழ்திருந்தும்
அனாதையாக வாழ்கின்றேன் ......
வஞ்சமும் நஞ்சமும்
நிறைந்த மனிதரின்
மனதிற்கிடையினிலே ....!!!!!
~ அனாதை ~
-
வாடையில் வாடிய வனத்தினுள்
வசந்தமாய் உள்நுழைந்து
வாசமாய் கடந்து போவது போல்
காதல் அனாதையாய்
கிடந்துவந்தவன்
இவன்தம் வாழ்வினில்
குளிரோடையாய்
நீ .......
$ குளிரோடை $
-
எப்போதும் உன் நினைவாள் வாடும்..
உன் சிநேகிதி..
எங்கே போனாய் என்னை விட்டு..
சொன்னால் நானும் வருவேனடி..
வெகுதூரம் போனாயோ ..
திரும்பி வர முடியாத இடத்துக்கு..
கண்ணீர் சிந்துகிறது என் இதயம் ..
அடுத்த ஜென்மத்திலாவது சொல்லி விட்டு போ ..
நானும் வருவேனடி..
ஜென்மம்
-
ஏக்கங்கள் ஏனடி ...
உன் பிரிவினிலே
ஜென்மங்கள் கண்டந்தேனடி ...
உன் காதலின் பரிசாக
என் கண்களில் கண்ணீர் மட்டும்
நீரோடையாக தந்தாய் ஏனடி....
கண்ணீர்
-
ஏன் கண்ணே உன் கண்ணில் கண்ணீர் ...
யார் அடித்தார் என் செல்ல தங்கையை....
அழாதே என் செல்லமே...
எப்போதும் உன் விழியில் கண்ணீர்
வர விட மாட்டேன் ..
தயங்காதே எப்போதும் நான் இருப்பேன் உன் வாழ்வில்..
என் அன்புத் தங்கையே ..
தயங்காதே
-
தொட்டிடும் தூரம்தான் வானம் ....
தயக்கங்கள் ஏனோ ....
முயற்ச்சித்து முன்னேறிடலாம் ....
தடைகளைத் உடைத்து எறிந்திடலாம் ...
மனதினில் நம்பிக்கை கொண்டிடலாம் ....
மனம்
-
மனதில் உறுதிகொள் ..
முன்னேறிடு ...
நம்பிக்கை கை கொடுக்கும்..
துணிந்து செல்..
தடைகளை தகர் தெடு..
வாழ்வில் வெற்றி நிச்சயம்..
துணிந்து
-
வாழ்வை வெல்ல துணிந்து நில்
நட்பெனும் உலகுள் துணிந்து வா
துணிவே உன் உடைவாள்
துணிவே உன் கேடையம்
துணிவற்று போனால் துணியும் எஞ்சிடா
கொடிய உலகிது
துணிந்து நில் உரிமையை வென்றெடு!
உரிமை
-
பொக்கிசமாய் கருதி போற்றப்படும்
பொன்னும், பொருளும்
ஏன் பொற்குவியல்களும்
பெறாத அரும் பெரும் பேறு (பாக்கியம் )
உன்னால் பயன்படுத்தப்படும்
எல்லா பொருளுக்கும்
பூவினமே நாணும் பூவான
உன் தீண்டலின் உரிமை பெறுவதால் ...
பொக்கிசம்
-
பொக்கிசம்
அன்பே உன் உள்ளத்தால்
எனை எண்ணி நீ வரைந்த
கவியனைத்தும் என்னுள்ளத்தில்
பொக்கிசமாய் கொலுவீற்றிருக்க
எனை பிரிந்து போனாயே அமுதே
அன்பே ஆருயிரே கொடுத்த முத்தம்
அத்தனையும் இதயமதில் தேக்கி - காத்தேன்
அன்பே அன்பே அன்பே உன் அன்பே
என் இதயத்தின் பொக்கிசம்
-
இதயம் வலிக்கும் போது
கண்கள் கலங்கினால் அது
காதல்
கண்கள் கலங்கி இதயம்
வலித்தால் அது
நட்பு
-
அலைகள் அழிக்கும் கரையில் பதித்த
காலடிகள் போலன்றி
கல்வெட்டுக்களில் பொறித்த
வரலாறாய் நிலைப்பதே நட்பு
நல் நட்பு உயிரும்தரும்
உன்னத உணர்வின் உறவு
கல்வெட்டு
-
நீயின்றி நான் இல்லை
உணர்த்தியது தாய் சேய் உறவு
உன் எதிர்கால வாழ்க்கையே
என் நிகழ்காலம்
உணர்த்தியது அப்பா மகன் உறவு
இருளுக்கும் நிழல் உண்டு
உணர்த்தியது அண்ணன் தங்கை உறவு
இருப்பதை பங்கிட்டு கொள்ள
உணர்த்தியது நண்பர்களின் உறவு
இவ்வுறவுகள் எல்லாம் கிடைத்தால்
உன் வாழ்க்கை
ஒரு வரம்..
-
நள்ளிரவு ...
பௌர்ணமி வெளிச்சம் ...
சூழ்ந்த நட்சத்திரங்கள் மினுமினுக்க ...
மெல்லிய ஒலியில்
சல சலத்திடும் ஆற்று நீரின் ஓசை ....
ஆற்றின் நடுவே படகு ...
படகில் நான் ...இயற்கை
அதை பிரமித்தேன் ....
இமைகளை இமைக்க மறந்தேன் ....
இறைவனாவான் படைத்தது
இயற்கையா ..? வரமா..?
இயற்கை
-
பூமித்தாயவள் இயற்கையெனும்
புனைபெயரில் எழுதி வைத்த
பசுமையெல்லாம் பஸ்பமாக்கும்
அக்கினியே உந்தன் கோபம்
தான் ஏனோ பகை தான்
யார் மீதோ? சேய்களின்
பாவங்களுக்காய் தாயினை
எரிக்காதே
கனவு
-
கனவு
உண்மை சிலதும்
பொய்கள் சிலதும்
கலந்துவரும் கனவிலும்
கனவெல்லாம் நினைப்பதனால்
மட்டும் வருவதில்லை
நினைவுகளில் இல்லாதவையும்
கனவுகளில் வரும்
கடவுள் கூட பயன்படுத்தும்
உபாயம் சொப்பனம்
நிதர்சன வாழ்வின் தேவைகளுக்காய்
ஏங்கி காத்து கிடக்கையில் எல்லாமே
கனவுகளாய் கலைவது சோகம்
சோகம்
-
சோகமும் சுகமே
கடைசிவரை நீ
விரல் கோர்த்து
உடன் வருவையானால் ..
பேனா
-
பேனா
நீ என் துணை
நீ என் ஆறுதல்
நீ என் புகழ்ச்சி
நீ என் உயர்ச்சி
நீ என் மகிழ்ச்சி
நீ என் வருவாய்
நீ என் ஆதாரம்
நீ என் போர்வாள்
நீ என் விடுதலை
நீ என் சுதந்திரம்
நீ என் பகை விரட்டி
நீ என் கவலை போக்கி
நீ என் மொழிச்சுரப்பி
நீயே என்னுயிர் தோழன் பேனா
வருவாய்
-
மீண்டும் உயிர்பெற்று
எழுந்து வருவாய்
முண்டாசு கவியே
நீ விட்டு சென்ற
புரட்சியை தொடர்ந்திட !
முண்டாசு கவி
-
தத்தளிக்கும் தமிழ் தாயை
கரை சேர்க்க நாதி இல்லை
கண்ணீர் விட்டு கதறும்
தாயின் குரல் கேட்க
இயலாமல் முண்டாசு கவி
மூடிக்கொண்டார் காதுகளையே
கொடை
-
கொடை
ஆசிரியர்களும் கொடை
தாய் தந்தையர் கொடை
உறவுகள் எல்லாம் கொடை
நண்பர்கள் எல்லாம் கொடை
தம்பியும் தங்கையும் கொடை
அண்ணனும் அக்காவும் கொடை
நல்ல கல்வியும் கொடை
தகுந்த தொழிலும் கொடை
பசிக்கு உணவும் கொடை
திகிலில்லா உறக்கமும் கொடை
பகையில்லா வாழ்வும் கொடை
நோயில்லா மெய்யும் கொடை
குறைவில்லா செல்வமும் கொடை
இவை அனைத்தும் அருள வல்ல
இறைவன் பேற்றி
உறக்கம்
-
விழி மூடி உறங்க நினைத்த
என்னை ஆட்கொண்டது
நித்திரா தேவியல்ல
என் நினைவின் தேவி
நீயடி கண்ணே
மௌனம்
-
மௌனம்
எதிர்பார்த்து ஏங்கி கிடக்கும்
உறவுக்கு எதிரான மௌனம்
கொலை
பொய்யரை புறக்கணிக்கும்
மௌனம் கோவம்
உண்மை இதயத்தின்முன்
பேசும் பொய்களிலும்
மேன்மை மௌனம்
மனிதர்கள் நடுவே
உலகிலுள்ள மிகக்கொடிய
தண்டனைகளில் ஒன்று
மௌனம்
பொய்
-
ஓர் உண்மையை மறைக்க
ஆயிரம் பொய்கள் கூறப்பட வேண்டும் ..
கூறப்பட்ட பொய்களை நிலைநாட்டிட
ஓர் உறவை இழந்திட வேண்டும்..
பொய்யால் உறவை இழப்பதைவிட
மெய்யால் காயப்படுத்துவதே மேல் :)
மயில்
-
தலைவியின் வாடிய
வதனமதை கண்டு துயர்
கொண்ட தலைவனோ
விரித்தான் வண்ண
தோகையை மயிலாக மாறி
தலைவி கண்டு மகிழவே
மொழி
-
மொழி
மொழியின் அடையாளமே இனம்
இனத்துக்கு ஆதாரமாய் இருக்கும்
மொழியை அறியாதவர் பாவியர்
ஒருவர் கிறுக்குவதை
ஒருவர் ஒலிப்பதும்
ஒருவர் ஒலிப்பதை
மற்றொருவர் கிறுக்குவதும்
இதனை புரிந்து உணர்ந்து
செயலாற்ற உதவுவது
மொழியின் சிறப்பாகும்
சிறப்பு
-
சிறப்புக்கள் ஆயிரமாய்
நீ சூடிக் கொண்டாலும்
தலைக்கணமாம் அது
தலை வைத்தால்
தாழ்ந்திடுமே உன்
தலை கூட தரை நோக்கியே
காலம்
-
காலம் செல்லும் பாதையில்
கால்கள் செல்ல ...
எந்தன் மனம் மட்டுமெனோ
உந்தன் காலடி தேடிச்செல்கிறது ...!!!
தேடி ..
-
தேடிச் சுழழும் உந்தன்
விழியின் அழகை
ஒட்டியிருந்து ஓரமாய்
ரசிப்பது கூட சுகமடி
காதலியே!
நினைவு
-
விடியாத இரவில்
முடியாத கண்ணீரோடு
துணை நின்றது
உன் நினைவு..
இரவு
-
இரவு
இரவுகள் உண்மை சொல்லும் உத்தமர்கள்
செய்த நன்மையை நினைவுறுத்தி மகிழ்விக்கும்
செய்த தீமையை நினைவுறுத்தி இகழும்
இரவுகள் ஆசான்
இரவுகள் நீதிபதி
இரவுகள் உண்மையின் ஒரேபதம்
இரவுகள் மனசாட்ச்சியின் விம்பம்
இரவுகள் போல் துணிச்சல் கொண்டு
நெஞ்சுக்கு நீதியென உரியவரிடம்
உண்மைபேசும் உத்தம குணம் எவருக்கும் இல்லை
இரவுகள் முகத்துதி பாடாது
உயர்வை வாழ்த்தும்
இழிவை இகழும்
செவி மடுத்தால் நிம்மதி நிலைக்கும்
செவி மறுத்தால் நிம்மதி குலைக்கும்
நிம்மதி இல்லா வாழ்வும் மரணமும் ஒன்றுதான்
இரவுகள் சொல் கேட்டல் நிம்மதிக்கு மூலதனம்
நிம்மதி
-
பிறருக்காக வாழ்ந்து
நிம்மதியை இழப்பதை விட
நிம்மதியாய் வாழ்ந்திட
தடையாய் இருக்கும் சிலரை
இழந்து விடுவது மேல் ..
இழப்பு
-
இழப்பு
காதலிக்கையில்
காதலுக்காய்
தூது போக நட்பின்
துணைவேண்டும்
திருமணமானால் துணையென
நின்ற தோழர்களை இழக்கவேண்டும்
காதலிக்கையில்
காதலுக்காய்
அன்னை தந்தையை
இழக்க காதலர் ஆயத்தம்
பெத்தவர்களையும்
தோழர்களையுமே
இழக்கும் மனம் கொண்ட
மனித வாழ்வில் இழப்புக்கள்
இயல்பே
இழப்புக்களை
கடந்து போவது வாழ்க்கையின் நியதி
நியதி
-
இங்கே நிறைய முண்டாசுகளுண்டு
கவிகளும் உண்டு ..
மற்றொரு முண்டாசு கவிதான் இல்லை
-
வாழ்க்கையின் நியதி
பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிந்து விடும்
ஆனால் காதல் நியதிகளோ
காதலர்களுட்கு சோகத்தை தந்து
பின்பு சந்தோஷத்தை ஊட்ட வல்லது .
நியதிகள் மனிதருக்கு மட்டும் அல்ல
இறைவனும் அதர்க்கு கட்டுப்பட்டவனே
>காதல்
-
சிதறும் சிந்தனையில்
சிதறாமல் உந்தன்
முகம் மட்டும்
என்றும் நிலைத்திருக்கும் ...
அலைபாயும் இதயம் தன்னில்
அலையாய் மோதிச்செல்லும்
உந்தன் நினைவுகள் என்றும்
நெஞ்சில் படர்ந்திருக்கும் ...
காதல் கொண்ட நெஞ்சம்
உனக்கென ஏங்கி நிற்கும் ...
உன்னை சேர்ந்திடும் நாளை
எண்ணி காத்துக்கிடக்கும் ...
> சிந்தனை
-
என்னை நானே மறந்து
சிறகடிக்குது என் சிந்தனை
காதல் வந்த நேரம்
என் மனமோ விண்ணில்
வாழ்க்கை தந்தவள்
வாழ சொல்ல தரவில்லை
மரணம் வந்தாலும் உன் மடி சாய்வேன் சகியே....
>விண்ணில்
-
விண்ணில் பறந்தாலும்
மண்ணுக்கே வர வேண்டும்
மண்ணில் உருவானது மண்ணுக்கே சொந்தம்
இது இயற்கை நியதி
இதை மாற்ற
இறைவனாலும் முடியாது
சொந்தம்
-
என்றோ ஒருநாள்
மண்ணுக்கு சொந்தமாகும்
உடலும் ...
இந்த உடல் தாங்கிநிற்கும்
உயிரும் ...
நிரந்தரமில்லையென
இருக்கையில் ...
நீ மட்டும் நிரந்தரமென்று
எந்தன் இதயம் துடித்தது
மடமையோ ...!!!?
நிரந்தரம்
-
உயிர் [highlight-text]நிரதரமல்ல[/highlight-text]
அதை நீ திருடிவிட்டாய் என்பதற்காக
அது துடிக்காமல் இருப்பதும் இல்லை
பிறப்பு அது இறப்பை தேடி செல்லும் வழி.
>உயிர்[/size][/color]
-
உயிர் கொல்லும் காதல்
உயிர் காக்கும் நட்பு
தன்னுயிரை தானே மாய்த்திட தூண்டும் காதல்
தன்னுயிரை இன்னோரு உயிருக்காக
தரை வார்த்திடும் நட்பு
வார்ப்பு
-
உயிர் கொல்லும் காதல்
உயிர் காக்கும் நட்பு
தன்னுயிரை தானே மாய்த்திட தூண்டும் காதல்
தன்னுயிரை இன்னோரு உயிருக்காக
தரை வார்த்திடும் நட்பு
வார்ப்பு
-
என் மறதி,
அவளை மட்டும்
மறக்க மறந்துவிட்டது
ஏன் என்று நினைவிடம் கேட்டேன்
உன் உயிரே பிரிந்தாலும்
என்னவளின் நினைவு அலைகள் ஓயாது என்றது !
-
அவனுடனான ஒரு நீண்ட பயணம் ...
ஆள் அரவமற்ற சாலையில் ...
சாலையை கடைக்கையில் என் கரம்
கோர்த்து கொள்வான் ...
விரல்களின் ஸ்பரிசத்தில்
உணர்த்துவான் அவன் காதலை ...
அசசாலை எனது நினைவு நிறைத்த பொக்கிஷம் ....
தலைப்பு :
பொக்கிஷம்
-
பூமிக்கு வான் நீர் பொக்கிஷம் !
இயற்கைக்கு பசுமை பொக்கிஷம் !
மனித உறவுக்கு அன்பு பொக்கிஷம் !
காதலுக்கு உண்மை பொக்கிஷம் !
உயரிய வாழ்க்கைக்கு நல்ல குணங்கள் பொக்கிஷம்
$ குணம் $
-
நினைவுகள் நெஞ்சில் இருக்கும் வரை
நிரந்தர பிரிவு என்றும் இல்லை.
தலைப்பு : பாசம்
-
நரைத்த பின்னும் மிரட்டும் அப்பாவின் கண்டிப்பு .
அறுபது ஆனாலும் அதிகார அடுப்பங்கரை அரசி
தாயின் வலிக்காத கோபம்..
கோபம்
-
மன்னிக்க முடியாத தவறுகளுக்கு
மனதோடு கோபம்
நம்பிக்கை துரோகங்களை
பார்த்தால் மாபெரும் கோபம்
ஏதோ சில தருணங்களில்
என்னை அறியாமல் என்மீது கோபம்
இந்த கவிதை படிக்காதே
ஏனென்றால் இப்போது உன் மீதும் கோபம்
காரணங்கள் இல்லாமல்
வருகின்ற கோபம்
கோபங்கள் மனதோடு
வந்ததாலும் தவறாகும்
போனாலும் பிழையாகும்
அளவோடு இருகின்ற கோபம்
அன்பு ..அனைத்திலும் சிறந்தது
அடுத்த தலைப்பு..
தமிழ்
-
நினைவுகள் நெஞ்சில் இருக்கும் வரை நிரந்தர
பிரிவு என்றும் இல்லை.
உரிமை
-
நின் மீது இந்த நிலத்துக்கு உரிமை
நிஜம் மீது அந்த பொய்க்கும் உரிமை
மண்மீது தானே மனிதனின் உரிமை
கண் மீது வந்த காதலின் உரிமை
பெண் மீது என்றும் கணவனுக்கு உரிமை
உன் மீதும் என் மீதும்
அந்த கடவுளுக்கு உரிமை
ஏழ்மை
-
பிரியமென்று எதையும்
ஏந்தி நிற்காதவரிடத்து
வேறென்ன பெரிய
ஏழ்மை
இருந்துவிடக் கூடும்?
அடுத்த தலைப்பு - விண்மீன்
-
:p
-
விளக்கின் சிறுநுனியில்
ஒளிரும் சுடரினில்
விண்மீனாய் மிளிர்கிறது
அவளது கனவு !
அடுத்த தலைப்பு : கனவு
-
ஞாபகங்களை நினைவுகளை
இரவுகளில் பார்க்கிறேன்
உறங்கும் மனதில் உலகம் பிறக்கும்
அது உயிரை தழுவும் கனவின் பிம்பம்
அடுத்த தலைப்பு : பிம்பம்
-
அடிக்கடி வந்துபோகும் அவன் பிம்பம்
பம்பரமாய் சுழலும் என் இதயம்
விளம்பரம் தேவையில்லை
விவரமான காதல் நோய்க்கு.
அடுத்த தலைப்பு ..... விளம்பரம்
-
விளம்பர இடைவேளைகள்
போல வந்து செல்கிறது ஊடல்கள்
எப்பொழுது முடியும்
எப்பொழுது முடியும்
என காத்திருக்க வைத்து
இம்சிக்கிறது
அடுத்த தலைப்பு : ஊடல்
-
முகிலற்ற வளியும்
மணமற்ற மலரும்
ஊடலை நீங்கிய காதலும்
உன்னைநீங்கிய என் வாழ்வும்
என்றும் அர்த்தமற்றவை !
அடுத்த தலைப்பு : மலர்
-
நேசங்களால்
சுவாசம் கொள்கிறாள்
இந்த மலர்
சுவாசம்
-
சுவாசிக்க மறக்கிறேன்
உன் இமை மூடும் நேரத்தில்...
நேசிக்க துடிக்கிறேன்
என் ஆயுள் நீடிக்கும் வரையில்...
[highlight-text]நேசம் [/highlight-text]
-
நேசம்
வாழ்வின் பொருள்
விளங்க நொடிகளை..
உன் ஓர் நேச பார்வையில்
விளங்க வைத்தவனே..
காலம் கடக்காது
நான் உனை சேரும்
நாளும் எந்நாளோ ...
தலைப்பு : நினைவுகள்
-
[highlight-text][highlight-text]நினைவுகள்[/highlight-text][/highlight-text]
இருண்ட உலகில் எதையோ தேடுகிறேன்
காதல் மாய வலையிலே !
உன் நினைவுகள் என்னை அழைக்க
வேறொரு உலகத்தில் வாழ்கிறேன்
என்பதை உணர்கிறேன் !
[highlight-text] தலைப்பு : காதல்[/highlight-text] [/size]
-
காதல் ஒரு ஆறு போல
கரைகளுக்குள் அடங்கி போகும் மட்டும்
அழகாக அமைதியாக இருக்கும்
கரைதாண்டினால் அது காட்றாரு
எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போகும்
காதலும் கரை தாண்டுமட்டும் அழகாகத் தான் இருக்கும்
கரைகள்
-
கரை இல்லா நீரின் நிலை...
நீ இல்லா நான்...
நீ இல்லையேல்
நான் அருவம் ஆவேன்..
தலைப்பு: நான்
-
வழியில்
தென்படும்
எல்லா பெண்களையும்
பார்த்து கொண்டு
தானிருகிறேன்
ஏன்
அவர்கள் எல்லாம்
உன்னை போல
அழகில்லை என்று
யோசித்து கொண்டு
நான் :D:D
-
பெண்களை பார்ப்பதில்
தலைப்பை விட்டு செல்ல மறந்து விட்டர்கள்
ஜோக்கர்
தலைப்பை மட்டும் இல்லை
மனதையுமா
தலைப்பு
-
நான் நேசிக்கும்
அழகிய மலரே...
முட்கள் நிறைந்த
மலரே...
என் கண்கள் ஏனோ
உன்னை மட்டும்
ரசிக்க துடிக்கிறது...
என் கைகள் ஏனோ
உன்னை மட்டும்
தொட நினைக்கிறது...
என் இதயம் ஏனோ
உன்னை மட்டும்
தினமும்
என் தலையில்
ஏந்திச் செல்ல
ஏங்குகிறது...
எனக்கு பிடித்தமான
என் ஆசை
ரோஜா மலரே...
எனக்காகவே
பூத்துக் குலுங்கும்
சிவப்பு நிற அழகியே...
காதலர் தினம்
வந்தாலே...
எல்லோருக்கும்
கொண்டாட்டமே
உலகமே
உன்னை தேடி
அலைகிறது...
காதலன்
காதலிக்கும்,
காதலி
காதலனுக்கும்,
மாறி...மாறி...
உன்னை பரிமாறி...
கட்டியனைத்துக்
கொள்கிறார்கள்
உன் அழகை...
ஒரு நாளில்
மட்டுமே
ரசித்து...
உன்னை
தூக்கி வீசி
செல்லும் மத்தியில்...
உந்தன் அழகிய
தோற்றத்தை
தொடர்கதையாக...
விடாமல்
தொடர்ந்து ரசிக்கும்
உன்னைக் காதலிக்கிறேன்
எனக்காக...
எப்போதுமே
வாடாமல்
இருப்பாயா...?
என்னைக் காதல்
செய்ய வைத்த
காதல் ரோஜாவே ...
J❤️S❤️B
-
நான்
பார்த்து...பார்த்து...
வடித்தக் கவிதைக்கு
ஏனோ
இன்னும்
தலைப்பு
கொடுக்க
தோனவில்லை
என் எண்ண ஏட்டில்
இன்னும்
சிந்தித்துக்
கொண்டிருக்கிறேன்
உன் பெயரையே
தலைப்பாக
போடலாம் என்று
சம்மதம்
தருவாயா
தமிழனே...
சம்மதம்
-
மதம் பார்க்கவில்லை
நிறம் பார்க்கவில்லை
வயதும் பார்க்கவிலை
பெயரும் தெரியவில்லை
இருந்தும் கை நீட்டி
அழைக்கையில்
ஓடோடி வருகிறது
சிரித்துக்கொண்டே
நான் தூக்க
சம்மதம் தெரிவித்து
[highlight-text]குழந்தை [/highlight-text][/size][/color]
-
உன் குழந்தை
குணத்தை
மறைந்து நின்று
ரசிக்க வைத்த
ஜோக்கர் மன்னனுக்கு
ஜே❤️ஸ் ❤️பி ....யின்
தீபாவளி பரிசு
காத்துக் கொண்டிருக்கிறது
பெற்றுக் கொள்ள
வருவாயா?
பரிசு
-
சிரித்துப் பேசிய
நொடிகளும்..
நடந்து களைத்தப்
பாதைகளும்..
உன் சுவாசம் தீண்டிய
பொழுதுகளும்..
இனிய நினைவுகளாக
இருந்தாலும்..
நீ தந்த வலியேனும்
காதல் பரிசு மட்டும்
என் விழி நீருக்கு
முற்றின்றி
தொடர்கதையாகியது..
[highlight-text]நீர்[/highlight-text][/color][/i]
-
நீரின்றி அமையாது உலகு
நீர்-இன்றி அமையாது
கவிதை அழகு
வண்ணமயமாக உந்தன் கவிதை
உந்தன் கவிதைக்கு நானும் ஒரு அடிமை
வில்லேந்தும் விழிகளால்
வாலிபர்களுடன் விற்போர் தொடுப்பவளே
வா நாம் இங்கே
செற்ப்போர் தொடுக்கலாம்
வண்ணமயம்
-
வர்ணங்களை
கொண்ட
வண்ணத்துப் பூச்சியின்
வண்ணங்களை
போல...
நம் வாழ்க்கையும்
வண்ணமயமாகட்டும்
அழகுக்கு அழகூட்டிச்
செல்லும்
அழகிய இயற்கையே...
காலமெல்லாம்
உன் அழகை ரசிப்பதே
என் பொழுது போக்காக
மாறிவிட்டது
காலமெல்லாம்
-
காலமெல்லாம்
என்னுடன் அதிகம் பேசிய
நாட்களை விட
பேசாமல் போன நிமிஷம்
என்னை அணு அணுவாக
சித்திரைவாதை செய்கிறது
புழுவாய் துடி துடித்து
போறேன்
இதயத்தின் வலியை
மறைத்து
என் இதயத்திற்கு
உன்னிடம்
பொய்யாய் பேசி
நடிக்க தெரியவில்லை
வலி கொடுக்க நினைக்கிறாயோ
நான் போகும் வழி
எது கூட தெரியாமல் போகிறேன்
கண்களில் கண்ணீர்
நிரம்பி வழிகிறது
அதை நீ பருகி பார்
உன் தாகத்தை கூட
போக்கி புத்துணர்ச்சியை
கொடுக்கும்
அதன் ருசியை
சுவைத்துப் பார்
மாராவின் தண்ணீரைப் போல்
மதுரமாய் இருக்கும்
உன் மீது வைத்த
அளவில்லா அன்பை
அலட்சிய படுத்தியது ஏனோ
உன்னுடைய சின்ன மாறுதல்
கூட எனக்கு வலியை கூடிக்
கொடுக்கிறது
நான் விடும் முச்சிக் காற்றை
கேட்ட கூட அது உன்னுடைய
பெயரை சொல்லும்
இப்படிக்கு ,
உன் நினைவில்
வாடி தவிக்கும் நான்
தவிக்கும்
-
என்னுயிர்க் காதலனே...
உன்னிடம் பேசாமல்
இருப்பதால்...
உன்னை மறந்து
விட்டேன் என்று
மட்டும் நினைத்து
விடாதே...
உன்னிடம் பேசாமல்
தவிக்கும்
ஒவ்வொருநொடியும்...
உன்னை நினைத்து
கவிதையாய்...
செதுக்குகிறேன்
என் இதயத்தில்
உள்ளதை
புரிந்துக் கொள்வாய்யென...
கவிதையாய்
-
கவிதையாய்
வார்த்தைகளைக்
கோர்க்கிறேன்..
உன் அன்பில்
வார்த்தைகள்
திணற
தோற்க்கிறேன்..
நீ விழி இமைக்கும்
நொடியில் என்
உலகம்
மறக்கிறேன்..
உன் சுவாசம்
எனை தீண்ட
ஆகாயத்தில்
பறக்கிறேன்...
உன் காதலில்
நான் முழ்க
காண்கிறேன்..
முழ்கிடும் முன்னே
கட்டி அணைத்திட
வருவாயா...
தலைப்பு : உலகம்
-
இல்லாத காதலியை
நினைத்து உருகி உருகி
கவிதை எழுதும்
கவி போல
உழுது
பயிரிட்டு
பொய்த்துப்போன
மழையை
எதிர்பார்த்து
காத்திருக்கும்
விவசாயியை
கொண்ட
விசித்திரமான
உலகம்
[highlight-text]#விவசாயி [/highlight-text]
-
கைப்பிடி சோற்றை
அள்ளி என்
வயிற்றை
நிரப்புகையில்
சிந்திக்கிறேன்..
விதை
விதைத்தவர்
சேற்றில் கால்
புதைத்து நிற்கிறார்..
வேர்வை சிந்தி
களைக்கிறார்..
அன்னமின்றி
உழைக்கிறார்..
தகுந்த ஊதியமின்றி
தவிக்கிறார்...
விவசாயம்
காக்கும்
விவசாயி அவர்..
பசியில் வாடி
நம் பசியைப்
போக்கும்
அன்னபூரணி அவர்..
ஒரு கணம்
என் பசியைப்
பொறுத்துக் கேட்கத்
துடிக்கிறது நா..
உணவு உண்டிறா
உழவரே!!?
தலைப்பு : பசி
-
பத்து மாதம்
என்னை கருவில்
சுமந்த தாயே...
உன் கண்
என் கருவை கண்ட
நாள் முதல்
பிறந்த நாள்
வரை
உன் அன்பின் பாசக்கயிற்றில்
என்னை சுற்றி அனைத்தவள்
நீயே...
என் முகம் பார்த்து
பசி அறிந்தவளும்
நீயே...
எனக்காக
உன் வயற்று பசியை
மறந்து...
கடினமாக உழைப்பதை
உன் வேர்வை துளி
காட்டிக் கொடுக்கிறது
என் அன்புத் தாயே...
நான் அதிகம்
நேசிக்கும் பெண்
நீயே...
பிறப்பாயா
மீண்டும்
நீயே
என் குழந்தையாக...
தாயே..
-
கல்லிலும் மண்ணிலும்
செதுக்கிய உருவங்களை
விட
என்னைக் கருவில்
பார்த்துப் பார்த்து
சுமந்த
என் தாயே
சிறந்தவள்
என்றும் அன்புடன்
உன் உருவத்தை
என் இதயத்தில்
சுமந்து செல்லும்
உன் அன்பு மகன்
சாலொமோன்
உருவத்தை
-
கண்கொண்டு
பார்க்கவில்லை
நேசித்தாள்
கவலையின்றி
வாழ
சுவாசித்தாள்
வார்த்தைகள்
ஏதுமில்லாமல்
அன்பை
கடத்தினாள்
விரல் பிடித்து
நடக்காமல்
பாதை காட்டினாள்
கருவாக உருவான -என்
உருவத்தை காண
விஞ்ஞானம்
துணையின்றி
வலியினூடே
என்னை பிரசவித்தாள்
[highlight-text]விஞ்ஞானம் [/highlight-text]
[/color]
-
விஞ்ஞானம் விண்ணை
நோக்கி பிளந்தாலும்
உன் மீது
கொண்ட காதல்
மட்டும்
இறுதி வரை
உன்னையே
பற்றியிருக்கும்
காதல்
J❤️S❤️B
-
விழியோடு விழி பேசி
என் உள்ளத்தை
கொள்ளை கொண்ட
கனவு காதலியே
மீண்டும் மீண்டும்
உன்னையே
காதல்
செய்கிறேன்
கனவு
-
கனவு உலகத்தின்
கனவு காதலனே...
காதல் பேசும்
ஆசை நாயகனே...
உனக்காகவே
ஏங்கிக் காத்துக்
கொண்டிருக்கும்
உன் காதலியை...
கனவில் கூட
ஏமாற்ற
நினைத்து விடாதே...
நான்
துடித்துப் போய்விடுவேன்...
பேசும்
-
பேசும்...
இறைவா
பேசும்...
மௌனம் களைத்து
என்னோடு பேசும்...
நீர் பேசாதிருந்தால்
நான் மடிவேனே...
என்னுயிர் காக்க
மானிடனாய்...
மண்ணுக்கு
வந்தாய்...
என் பாவ சேற்றினை
நீர் சுமந்து
தீர்த்தாய்...
அன்பாக பேசும்
தாய் உள்ளமே...
ஆயிரம் நாவுகள்
போதாதையா...
உம்மை
வாழ்த்திப் பாடையிலே...
நாவுகள்
-
தகப்பனே...
கண்ணீரின் பாதைகளில்
நடந்த நாட்களில்
என்னை தேடி வந்து
என் சூழ்நிலையை மாற்றிய
உங்களுக்கு
நன்றி சொல்ல
ஆயிரம்
நாவுகள் போதாது
நான்
நினைச்சதை காட்டிலும்
அதிகமா செஞ்சீங்க
ஐ லவ் யூ டாடி
சூழ்நிலையை
JSB ❤️ ஜெருஷா
-
நீ பிரிந்த போன பின்
சூழ்நிலைகளை
புரிந்து நடப்பது
இயலாது போகிறது
உன்னையே
புரிந்து கொள்ள
முடியா நான்
எப்படி
புரிந்து கொள்வேன்
சூழ்நிலை மாற்றம் பற்றி
-
என்னவளே! என் உயிரே!
இதயத்தின் தேவைதையே !
வண்ணம் காட்டும் காரிகையே '!வசலில் வந்து நின்று
என் வரவை தேடும் காதலியே !
மல்லிகையில் ஒளிந்திருக்கும்
மனம்கவர்ந்த வாசனை போல்
என் உள்ளத்தில் நிறைந்திருந்து
ஏதோதோ பண்ணுகிறாய்.
உன் நெற்றித் திலகமதைக்
காணும்போதெல்லாம்
உன் இதழ் இட்ட முதல் முத்தம்
கொல்லுதடி என் மனதை
பட்டு சேலைக்கட்டி நீ
பள பளன்னு நிற்கையிலே
அத்தான் என் மனசு
சிட்டாக பறக்குதடி
உன் காதலால் கரைய வைத்தாய்
என் சிந்தையில் நுழைந்துவிட்டாய்
உன் வார்த்தையில் வசமிழந்தேன்
என்னையே நான் மறந்தேன்
உன் எதிர்காலம் நானாகினே
என் உயிரே
-
என் உயிரே
என் தமக்கையே
என் அண்ணனே
என் அக்காவே
என் தம்பியே
என விளித்து
பரஸ்பரம்
பெயரை கூட பகிர்ந்துகொள்ள
திராணியின்றி
ஊசலாடும் சில உறவுகள்
விசித்திரம்
[highlight-text]கருவி[/highlight-text]
[/color]
-
என் இதயத்தை
கொள்ளைக் கொண்ட
காதலனே...
என் காதல்
போகும்
திசையைக் காட்டும்
கருவி
எது வென்று
உன்
இதயத்தை
கேட்டுப் பார்
என்னவனே...
அது
நான் அதிகம்
நேசிக்கும்
உன்
இதயமென்று
சொல்லும்
காதலனே
-
காதலனே
என்ன தவம்
செய்தேனோ
உன்னையே நினைத்து
காதலித்து
வந்ததால்
"காதலி" என்று
பெயர் பெற்றேன்
என்ன காரணமோ
நீ விட்டு போன பின்னும்
உன்னையே சுற்றிக்கொண்டிருக்கும்
என் நினைவுகள் நீ திரும்பி
வருவாய் என
அதற்கும்
ஓரார் எனக்கு
ஓர் பெயர் வைத்தனர்
"முதிர்கன்னி "
[highlight-text]பட்டம் [/highlight-text]
[/color]
-
பெண்ணே
எந்த பெண்ணும்
படித்து பெறாத
பட்டம்
தாய்மையே...
உன்
தாய்மைக்கு
என்றுமே
தலைவணங்குகிறேன்...
என்னையும்
பத்து மாதம்
உன்
கருவறையில்
சுமந்தாயே...
என் அன்பு
தாயே...
அன்பு
-
செல்லமே
என் மீது
அன்பு வைப்பதற்கு
உன்னை மிஞ்ச
யாரும் இல்லை
இந்த உலகத்தில்
அதனால் தான்
என்னவோ
என் இதயம்
உன்னை
நேசிக்கிறது
நீ மட்டுமே
வேண்டும் என்று
ஏங்கி தவிக்கிறது
உலகத்தில்
-
நான்
வாழும்
உலகத்தில்...
நீ
எனக்கு
மனைவியாகவும்...
நான்
உனக்கு கணவனாகவும்...
வாழ்ந்திட்டால்
என் வாழ்க்கை
சொர்கமே ....
வாழ்க்கை
-
உன்னோடு பகிர்ந்துகொள்ள
சில கதைகளும்
உன்னோடு செல்ல சண்டையிட
சில காரணங்களும்
உன்னோடு பயணம் செய்ய்ய
சில ஸ்தலங்களும்
மிச்சம் இருக்கையில்
நம்மை பிரித்து வைத்து
வேடிக்கை காண்பிக்கிறது
வாழ்க்கை
[highlight-text]
வேடிக்கை[/highlight-text]
[/color]
-
உன்னை இன்பப்படுத்த
என்னிடமிருக்கும் ஒரே
சொத்து உன்னை
நினைத்து பின்னும்
என் கவிதையே
அதை படித்துப் பார்
என் வாழ்க்கையே
ஒரு வேடிக்கை
விளையாட்டாய் மாறி
போய் விட்டது
என்பதை அறிவாய்
விளையாட்டாய்
-
விளையாட்டாய் உன்னை
காதலித்தேன்
அது தான் நான் செய்த வினை
வினை விதைத்தவன் வினையை தானே
அறுவடை செய்வான்
இன்று அறுவடை செய்த நிலம் போலே
தரிசாய் நிற்கிறேன் நான்
விதைத்தவன்
-
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
உலவு இல்லாமல் இந்த உலகம் இல்லை
விதைகள்
-
வீழ்வது வெட்கமில்லை
வீழ்ந்து கிடப்பது தான் வெட்கம்
மண்ணில் விழுந்த விதைகள் தான் மரமாகிறது
எழுந்து நின்று
எம்பிக் குதிப்பவனால் தான்
விழ முடியும்
காலம் பூராவும்
காலை நீட்டி
படுத்துக் கிடப்பவன்
வீழ்வதில்லை
வீழ்வதில்லை
-
பயப்படாதே!
உன் கரத்தின் வலிமையில் உயர்வு வரும்...
உன் கால்களும் இடறி வீழ்வதில்லை...
தோள்களும் சுமையால் சாய்வதில்லை...
என் ஆற்றலும் வலிமையும் நீயாக...என்பதை
விளக்கப்படுத்தி செல்கிறேன்
நீ புரிந்துக் கொள்வாய்யென...
சுமையால்...
-
சுமைகள் யாவுமே பாரமல்ல
வயிற்று சுமையால் ஆனந்தப்படுபவள்
தாய்
அறிவு சுமையால் உலகை நல்வழிப்படுத்தியவர்கள்
மேதைகள்
அன்புச் சுமையால் நம்மை அரவணைப்பது
நண்பர்கள்
அரவணைப்பது
-
என் உயிரே...
நீ பேசும் ஒரு ஆறுதலான
வார்த்தை போதும்...எனக்கு
ஒவ்வொரு நிமிடமும்
உன்னோடே பேசின
அந்த நினைவுகள் போதும்...எனக்கு
என்றும் அன்பாய்
உன் அரவணைப்பு
ஒன்றே போதும்...எனக்கு
உனக்காகவே வாழும்
ஆசையில் காத்துக் கொண்டிருக்கும்
உன் காதல் ரோஜா ஜெருஷா JSB
ரோஜா
-
என் இதயத்தில் உன்னை
ரோஜாவாக வைத்தேன்
ரோஜாமலரை போல்
மென்மையாக வருடினேன் காதலை
ராஜாவின் ரோஜாவாகிட
காத்துக்கிடக்கிறாய் தற்போது
உள்ளுக்குள் ரணமாய் நித்தமும்
முள்ளாய் குத்திய
உன் வார்த்தைகள்
ரோஜாமலரின் மென்மை
அதன் செடிக்கு இல்லை என்பதை
உணர்ந்தபின் முட் செடியில்
சிக்கிக்கொள்ள விரும்பவில்லை காதலியே...?
ஏமாற்றம்
-
இவ்வுலகத்தில்
எதிர்பார்ப்பே இல்லாத வாழ்கை
ஒவ்வொருவருக்கும் ஏமாற்றம் இல்லாமல் கிடைக்குமா?
எல்லோரும் இதை தான் எதிர் பார்த்து எதிர் பார்த்து
ஏமாந்துப் போய் கொண்டிருக்கிறோம்
காலம் போட்ட கோலத்தில்
அனைவரது வாழ்கை கேள்விக்குறியே....
காலம்
-
காலம்
அனைவருக்கும் பொதுவா நீ ?
உன்னை இயக்கும் ஆற்றல் வேண்டும் என்று நினைப்பவர் பலர் இருக்க, நட்பு பாராட்டி விண்ணப்பிக்கும் என்னை ஒதுக்கிவிடுவாயோ!
நீ இல்லாத இடம் உண்டோ.. பூமியை விட்டு வெளியில் சென்றால் நீ சாது என்றான் ஒருவன்.. ஆனால் நான் சுவாசிக்க ?
சாதுவாக இருந்தாலும், இல்லாமல் அல்லவே.. நீ இல்லாத இடமும் உன்டோ..
எங்கும் இருக்கிறாய்.. உடுத்திரளை விட்டுச்சென்றாலும், கருந்துளைக்குள் புகுந்து சென்றாலும் அங்கும் இருப்பாய் போலும்..
உன்னைக்கண்டு ஏன் அனைவரும் அச்சப்பட வேண்டும்.. இறப்பையும் முதுமையையும் தருகிறாய் என்றா ?
அனுபவத்தை தருவதும் நீதானே.. நீ எப்போது பிறந்தாய் ? உனக்கும் அந்தம் உண்டா ?
அடுத்த தலைப்பு :: விழிகள்
-
நான் திறந்து இருக்கும் பொழுது... மறைந்து இருக்கிறாய்
நான் மூடி இருக்கும் பொழுதோ.. என்னை வருடுகிறாய்
உன் பிம்பம் காணும் கண்ணாடியாய்
நான் இருக்க ஏங்குகின்றேன்
என்னை காக்கும் இமையாய்
என்றும் நீ வேண்டும்
இப்படிக்கு
உன்னவளின் விழிகள்
அடுத்த தலைப்பு :: நகைச்சுவை
-
நகைச்சுவை என்கிறேன் நான்..
கோமாளி என்கிறாய் நீ..
பொன்னகை அணியா பெண்ணே உன் புன்னகை காண ...
ஆயிரம் முறை ஜனிப்பேன் கோமாளியாய்..
காதலில் வைதலும் கொஞ்சல் தானே..
அடுத்த தலைப்பு: கோமாளி
-
கோமாளி
ஏமாளியாய் இருப்பதை விட
கோமாளியாய் இருப்பது மேல்..
அடுத்தவர் சிரிப்பிலாவது
அகத்தின் வலியை மறக்கலாம்..
அடுத்த தலைப்பு : முகவரி
-
முகவரி ......
முகவரிகளை இழப்பதால் தொலைந்து போய் விடுவேன் எனில்...
தொலைந்துதான் போய் விட்டேன் உன்னை இழந்ததால் நான்..
என் வாழ்வின் முகவரியே நீதானே..
அடுத்த தலைப்பு: இழப்பு
-
இழப்பு....
இவனால் மனம் உடைந்தவர் பலர்.. ஞானம் அடைந்தவர் பலர்..
இவன் இல்லையெனில், பற்பல விஷயங்களின், மனிதர்களின், மதிப்பு சில சமயங்களில் தெரியாமலேயே போய்விடுமோ..
இவன் வந்ததும் துவண்டு விழுந்தோமெனில், காலத்தை இழப்போர் ஆவோம்.. ஆனாலும், மிக இருக்கமான இதயத்தையும், ஒரு கை பார்க்காமல் இருக்கமாட்டேன் என்கிறான்..
புதியதை தந்தமைக்கு இவனுக்கு நன்றி சொல்வதா!
எனக்கு நெருக்கமான பொருட்களையும், அன்பான மனிதர்களையும் பறித்தமைக்கு, இவனை வஞ்சிப்பதா..
அடுத்த தலைப்பு :: உணர்தல்
-
உணர்தல்..
மேடிட்ட வயிறு ..
உறக்கமற்ற இரவுகள்..
மசக்கை தந்த மயக்கம் ..
கருவறையில் குழந்தையின் உதை..
பெண்மையின் வரமான தாய்மையை உணர்தலின் போதை மிக பெரிதுதான்...
ஒன்பது திங்கள் உன்னை சுமக்க முடியாத துரதிஷ்டத்தை உணர்தலும் மிக கொடிதுதான்..
உன் வாழ்வின் இறுதி நொடி வரை உன்னை கருவறையில் சுமந்த நான் ..
என் வாழ்வின் இறுதி நொடி வரை உன்னை மனதில் சுமப்பேன்..
இப்படிக்கு ...
குறை மாத தேவதையின் தாய்..
அடுத்த தலைப்பு: போதை
-
போதை
உலகமே போதை...
கலைஞனுக்கு படைப்பு போதை
கயவனுக்கோ கொள்ளை போதை...
குழந்தைக்கு அழுகை போதை
அதன் மழலையோ மற்றவரின் போதை
படிப்பும் போதை
பட்டமும் போதை
பதக்கமும் போதை
சில பழக்க வழக்கங்களும் போதை
மதுவின் போதையில் தன்னை அழிப்பான்
மாதுவின் போதையில் அவளை அழிப்பான்
உலகமே ஒரு மாயை
அதில் உலாவும் இந்த போதை....
அடுத்த தலைப்பு: பார்வை
-
பார்வை..
பாவைகளை காணவே பார்வை பெற்றேன் என்றிருந்தேன்..
அவள் என்னை பார்த்த நொடியே உணர்ந்தேன், பாவைகளைக் காண அல்ல..
இப்பாவையின் பார்வையை நான் கண்டு,
அதனால் வரும் போதையை சுகிக்க மட்டுமே என்று..
அவளை விழிகளால் பார்த்தால் மட்டும் அல்ல,
அவளை சிந்தித்தலே போதை தான்,,
அதுதான் மனப்பார்வையா....
அடுத்த தலைப்பு :: போர்வை
-
போர்வை..
மதம் எனும் போர்வை அணிவித்து ஒருவனே தேவன் என்றனர்..
இனம் எனும் போர்வை அணிவித்து ஒன்றே சிறந்த குலம் என்றனர் ..
கட்சி எனும் போர்வை அணிவித்து ஒருவனே தலைவன் என்றனர்..
சாதி எனும் போர்வை அணிவித்து நமது கூட்டமே சிறந்தது என்றனர்..
அப்பப்பா....
மனிதம் எனும் போர்வை அணிந்து எப்போது மனிதன் ஆவோம் ???
அடுத்த தலைப்பு: மனிதம்
-
தலைப்பு: மனிதம்
அன்பு எனும் விதை விதைத்து
கருணை எனும் தண்ணீர் ஊற்றி
இரக்கம் எனும் உரம் போட்டு
நம்பிக்கை எனும் செடிக்காக காத்துக்கொண்டு இருக்கையில்..
பொய் எனும் கம்பளிப்பூச்சி ஜனித்து..
வஞ்சம் எனும் புழு மொய்த்து..
லஞ்சம் எனும் களை சூழ்ந்து
தீமை எனும் மரம் முளைக்கிறதே..
இதைத்தான்டி
மனிதம் எனும் கனி கிடைக்கையில் அது கடவுளே
அடுத்த தலைப்பு: அன்பே சிவம்
-
அன்பே சிவம்..
சிவமே துணை ..
துணையே காதல்..
காதலே நம்பிக்கை..
நம்பிக்கையே வாழ்க்கை..
வாழ்க்கையே போராட்டம்..
போராட்டமே பாடம்..
பாடமே அனுபவம்..
அனுபவமே தாய்மை..
தாய்மையே அன்பு..
அன்பே சிவம்..
அடுத்த தலைப்பு : ராணுவம்
-
தலைப்பு : ராணுவம்
சக்கரகட்டியே உன்னை எறும்புகள் ராணுவம்
கொண்டு கரைத்திடவா
பூவே உன்னை தேனீக்கள் ராணுவம்
கொண்டு குடித்திடவா
சீதையை உன்னை இராவணன் ராணுவம்
கொண்டு சிறைபிடித்திடவா
நெருப்பே உன்னை தண்ணீர் ராணுவம்
கொண்டு அணைத்திடவா
கரையே உன்னை அலைகள் ராணுவம்
கொண்டு தழுவிடவா
பூமியே உன்னை மழைகள் ராணுவம்
கொண்டு நனைத்திடவா
வானமே உன்னை மேகங்கள் ராணுவம்
கொண்டு மூடிவிடவா
கடலே உன்னை மீன்கள் ராணுவம்
கொண்டு நீந்திடவா
இயற்கையே உன்னை காற்றின் ராணுவம்
கொண்டு தழுவிடவா
என்னவளே உன்னை எந்தன் காதல் ராணுவம்
கொண்டு பாதுகாத்திடவா.....?
காலம் முழுதும் ...
அடுத்த தலைப்பு : அடிமை
-
அடிமை..
அடிமைதான் ஆகிறேன்...
கண் பார்த்து பேசும் உன் நேர்கொண்ட பார்வையில்..
விரல் கூட ஸ்பரிசிக்காத நீண்ட தூர நடைகளில்..
அசட்டுத்தனம் சிறிதுமல்லாத உன் ஆண்மையான சிரிப்பினால் ..
அதிகாரம் தொனிக்காத உன் கம்பீரமான குரலினில்..
நான் இருக்கிறேன் எனும் உன் ஒற்றை வாக்குறுதியில்..
உன் அன்பெனும் சிறையில் மாட்டிக்கொள்ள தெரிந்தே
அடிமை சாசனம் எழுதி தருகிறேன் எனையே நான்...
அடுத்த தலைப்பு - கம்பீரம்
-
கம்பீரம்..
பொருளீட்ட வெளிநாடு சென்ற தலைவன்,
அங்கே ஒரு பெண்ணின் காதல் வலையில்,
தன்னை மறந்து களியாட்டத்தில் இருக்கிறான்
என்ற செய்தி கேட்ட தலைவிச் சொன்னாள்..
இது உண்மையானால், அவனுடன் உறவாடிய இவ்வுடலை
தீக்கிரையாக்கி, இம்மனதை ஈரேழு ஜென்மத்திற்கும்
காதல் வயப்படாமல் சபிப்பேன் என்று...
போரில் புறமுதுகிட்டு ஓடுகையில், பின்வந்து தாக்கிய
அம்பினால் உன் மகன் மாய்ந்தான் என்ற செய்தி கேட்ட தாய் கூறியது..
ஒருபோதும் நான் இதை நம்ப மாட்டேன், ஒருவேளை இது உண்மையானால், அவனிற்கு பால் வார்த்த இந்த மார்பகங்களை அறுத்தெறிவேன் என்றாள்...
அந்தத் தலைவி தன் காதலின் மேல் வைத்த நம்பிக்கையும், இத்தாய்
தன் மகனின் வீரத்தின்பால் வைத்த நம்பிக்கையும் கம்பீரமே..
ஒவ்வொரு தோல்வியின் பொழுதும், நம்பிக்கையின்மையால்
நிலைகுலைந்து போகாமல்.. அடுத்த அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு
மனிதரும் வெளிக்காட்டுவது.. கம்பீரம்..
அடுத்த தலைப்பு ::: பாவம்(sin)
-
பாவம்
மழலையில் வறுமை பாவம்
விடலையில் தனிமை பாவம்...
பிறருக்கு துன்பம் தருவதும் பாவம்
அவர் துன்பம் கண்டு மகிழ்வதும் பாவம்
உன்னால் ஒருவன் அழுவதும் பாவம்
அழும் மனதை அலட்சியம் செய்வதும் பாவம்
ஆபத்தில் உதவாமல் போவதும் பாவம்
உதவிய உயிரை மறப்பதும் பாவம்
அடுத்தவரை ஏமாற்றுதலும் பாவம்
ஏமாளியாய் நீ இருப்பதும் பாவம்
எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய்
பாவத்தை விதைத்து புண்ணியம் தேடாதே
புண்ணியம் செய்து பாவத்தை போக்கு....
அடுத்த தலைப்பு: வெளிச்சம்
-
தலைப்பு: வெளிச்சம்
பயமாய் தான் உள்ளது ..
என்ன செய்வனோ?
எப்படி வாழ்வனோ ?
இந்த பத்து மாதங்கள்
அவளின் கருவறையின்
இருட்டிற்குள் மூழ்கி
கிடந்தேன்..
அவளின் கண்ணீர் கண்டேன்
அவளின் கவலையும் கண்டேன்
அவளின் துயரமும் கண்டேன்
அவள் துவண்டு விழுவதையும்
கண்டேன்...
ஏதும் செய்ய இயலாமல்
கைகால்களை முடக்கி
குறுகி கிடந்தேன் அவளுள் ..
நானே அவளின் விடியல்
என்று கருதிக் கொண்டிருக்கிறாள்
நானே அவளின் வெளிச்சம்
எனவும் காத்துக் கொண்டிருக்கிறாள்..
இதோ நானும் தயாராகிவிட்டேன்...
இதோ வெளிவரத் துவங்கிவிட்டேன்.
இதோ சன்னமாய் பரவத்துவங்குகிறது...
நான் வரும் பாதையிலும்,
என்னுள்ளும்..
வெளிச்சம்...
அடுத்த தலைப்பு : "அவள் "
-
அவள்..!
ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து
பெற்றெடுத்தவள் அம்மா..!
அம்மாவிற்கு நிகராக எனை
பாதுகாத்து அரவணைத்தவள் அக்கா..!
பாசம் என்பதை உணரவைத்து
அதை புரியவைத்தவள் தங்கை..!
தோய்ந்து நின்றபோதெல்லாம் என்னை
தோள்கொடுத்து சுமந்தவள் தோழி..!
என்னுள் பாதியாக எனக்காக
என்வாழ்வில் தேவதையாக என்னவள்..!
என்றும் புதியவள்
என் வாழ்வின் இனியவள்
மகிழ்ச்சியின் எல்லையவள்
தந்தை எனும் கம்பீரத்தை கொடுத்தவள்
அவள் மகள்..!
அடுத்த தலைப்பு - தோழன் / தோழி
-
மனம் என்ற கதவை
திறந்து காட்ட
கிடைத்த அற்புதமான துணை
தோழமை
ஆணுக்கு தோழியும்
பெண்ணுக்கு தோழனும்
வாழ்வின் வரம்
குருடருக்கு கண்ணாக
ஊமைக்கு மொழியாக மட்டுமல்ல
வீழும் இடத்திலெல்லாம்
பிடித்து எழ கயிராகவும்
ஏரிச்செல்ல ஏணியாகவும்
என்றும் இருப்பது தோழமையே
தோழியுடைய ஆணும்
தோழனுடைய பெண்ணும்
ஏறாத மலையுமில்லை
எட்டாத சிகரமுமில்லை...
அடுத்த தலைப்பு: கடல்
-
கடல்...
கடலாக நன் இருந்தால் அலையாக நீ வருவாய் பிரிவென்பதே நமக்கேதடா?
பூவாக நான் இருந்தால் மணமாக நீ உதிப்பாய் அழிவு கூட ஒன்றாகவேயாடா?
கண நேர பிரிவு கூட யுகமென்பாய் நம் அன்புக்கு அழிவேதடா ?
நான் சிரிக்க நீ சொல்லும் பொய்கள் தரும் இன்பங்களுக்கு எல்லையேதடா?
கன்னம் சுருங்கும் வயதிலும் காதலுடன் கரம் பிடிக்கும் உன் அருகாமைக்கு ஈடேதடா?
உடலென்பது அழியுமென்றால் ,
நம் தீரா காதலின் நினைவுகளுக்கு முடிவேதடா ?
பிரிவென்ற சொல்லை அகராதியில் நீக்க முறையிடுவோம் ஒன்றாகவேடா..
அடுத்த தலைப்பு - அகராதி
-
உலகத்தில் உள்ள
ஆயிரம் அகராதிகளில்
ஒரே அர்த்தம் கொண்ட ஒரு சொல்லுக்கு
ஒரு அகராதி எழுதும் அளவிற்க்கு
ஆயிரம் அர்த்தங்களை கொடுக்க
காதலால் மட்டுமே முடியும் ❤️❤️
அடுத்த தலைப்பு : நம்பிக்கை
-
என் காதல் என்னும் அகராதியில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
நான் வைத்த அளவுகடந்த நம்பிக்கை எங்கே...?என்று.
முடிவில்லா அகராதியினிலே முடிந்தவரை முயற்சிக்கிறேன்.
கண்டறிவேன் என்கிற நம்பிக்கையில்
முடிவில்லா தேடலுடன்....!!
அடுத்த தலைப்பு (தேடல்)...
-
தவிப்புகளின் கூடாரத்தில்
சிக்கித் திணறும் ஏக்கங்களின்
வலி மிகுந்த கண்ணீர் துளிகள்
உணர்த்தி செல்கின்றன
வாழ்வின் தேடல்களை ..
அடுத்த தலைப்பு: கண்ணீர் துளிகள்
-
கண்ணீர் துளிகள்
கண்ணீர் துளிகளில் கஷ்டங்கள் கரைக்கும்
மனித மீன்கள் நாங்கள்...
எண்ண துளிகளின் நினைவுசிறைகளில்
கடந்தகாலங்களை மீண்டும் வாழ்ந்து
பார்க்கும் நாங்கள்...
நீர் துளிகளின் நிலையாமையை ஒத்த
மனதை கொண்ட நாங்கள்...
மனிதமெனும் போர்வை அணிந்த
மிருகஜாதிதான் நாங்கள்...
அடுத்த தலைப்பு - நிலையாமை
-
நிலையாமை ஒன்றே நிலையானது
நிலையான அனைத்துமே நிலையற்றது
நிலையாமை அனைத்தும் நிலையென்று
நினைக்கும் இந்த கண்கெட்ட மனிதர்க்கு
நிலையாமையே உண்மையின்
நிதர்சனனம் எனப் புரிவது எப்போது ?
அடுத்த தலைப்பு : நிதர்சனம்
-
நீ இல்லை எனும் நிதர்சனத்தை..
உன் நினைவுகள் தரும் வெற்றிடத்தை..
உன் பேச்சுக்கள் இல்லாத மௌன இடைவெளிகளை..
உன் அருகாமை இல்லாத மொட்டை மாடி பௌர்ணமிகளை..
கை இடுக்கின் சிகரெட்டுகளுடனும்..
கண்ணோரத்தின் கண்ணீர் கசிவுகளுடனும்.
கடந்து போய்க்கொண்டு தான் இருக்கிறேன்..
என்ன செய்ய..
வாழ்வின் இறுதி வரை வாழ வேண்டுமே..
அடுத்த தலைப்பு : வாழ்வு
-
தனியே ஒரு தீவில் , நமது வீட்டில்,, நாம்...
நமது காதலை இடையூறு செய்யாத இரண்டு செல்லப்பிராணிகள்.
ஊடல் சிறிது காதல் பெரிது ஓயாமல் செய்து களைத்த நம்மை இளைப்பாற்ற,
நம் வீட்டுத் தோட்டத்தில் உன் கன்னங்களைப் போன்ற ஆரஞ்சுப் பழங்கள்..
உன் முத்தங்கள் போன்ற தித்திப்பான இளநீர் தரும் மரங்கள்..
மாலை நேரங்களில் உன் மேனி போன்ற மேகக்கூட்டங்களையும்,
இரவில் உன் கண்கள் போல் மின்னும் நட்சத்திரங்களையும்,
நாம் சேர்ந்து ரசிக்க,
மரங்களின் இடையே தூரிகள்..
அனைத்தயும் சொல்ல இடம் போதாதே...
சரி,
இப்படி வேண்டும் வாழ்வு!
இடையே வரும் வாழ்வின் போராட்டங்களை கொண்டாடுவோம்,
துன்பங்களை கடந்து நகர்வோம்..
காதல் செய்வோம், மெய்சிலிர்ப்போம்!
அடுத்த தலைப்பு ::: மணித்தியாலம்
-
குழந்தை மனம் குரங்கு குணம் கொண்ட என் நட்புக்காக..
மணித்தியாலங்களும் மாயமாய் மறையும் நல்ல நண்பனின் அருகாமையில்..
மரண காயங்களும் விரைவில் தழும்புகளாகும் அவன்தன் பேச்சினில்..
துறுதுறு பேச்சில் துயரங்கள் மறக்க செய்வான்..
வார்த்தை விளையாட்டுகளில் வாடிய மனம் பூக்க செய்வான்..
தொலைபேசி பட்டேரிகளும் சார்ஜ் இழக்கும் நம் மணித்தியால கணக்கிலான உரையாடல்களில்..
செல்லப்பிராணிகளில் தொடங்கி செவ்வாய் கிரகம் வரையும் எதையும் விட்டு வைத்ததில்லை நம் பேச்சுக்களில்..
வைரமுத்து முத்துமாரின் பாடல் வரிகளின் பொருள் விளங்க செய்வான்..
பாடியே இடைவிடாது சிரிக்கவும் செய்வான்..
இப்படிக்கு
என்றும் உன் நட்பை மாத்திரமே எதிர் பார்க்கும் ஒரு உள்ளம்.
அடுத்த தலைப்பு : உள்ளம்
-
என் உள்ளம் உன்னிடத்தில் அல்லவா இருக்கிறது
திருப்பி கொடு என்று நானும் கேட்டதில்லை
உனக்கும் அதில் இஷ்டமில்லை என்பது
நீ என்னோடு போடும் சண்டைகளால் புரிவேன்
என் காதல் திருடா!!
கவிதை தலைப்பு : திருப்பிக்கொடு
-
இறைவா
திருப்பிக்கொடு
கள்ளமில்லா மழலை பருவத்தை
கவலையற்ற குழந்தை பருவத்தை
சிரிப்பொலி நிரம்பிய சிறுவயது பருவத்தை
சீருடை விரும்பிய பள்ளிப்பருவத்தை
கனவுகள் நிரம்பிய கல்லூரிப்பருவத்தை
காலன் பின்நோக்கி நகர்ந்தால்
இந்தப்பருவங்கள் போதுமே
இனிமையாய் கழித்து கண் மூட....
அடுத்த தலைப்பு : பருவம்
-
பார்வைகள் அற்ற நிலையில் கூட
அனைத்து பருவங்களும் அழகாகவே தெரிகின்றன
என் அருகில் பார்வையாய் நீ இருப்பதால்..
அடுத்த தலைப்பு : நினைவுகள்
-
சில நேரம் அழகாகவும்
சில நேரம் அழுகையாகவும்
வருகிறது உன் நினைவுகள்...
உன்னை நினைப்பதா.
இல்லை மறப்பதா
என்று குழம்புகிறேன்...
உன்னை நினைத்து பொய்களில் வாழ்வைதைவிட...
உன்னை நினைக்காமலே வாழ்கிறேன்...
ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம் என்றாலும்
வாழ்க்கை போக்கில் போகிறேன்..
நான் வேண்டிய வாழ்க்கையை
ஒரு நாள் அடைவேன் என்ற நம்பிக்கையில்...
அடுத்த தலைப்பு: நம்பிக்கை
-
நம்பிக்கை
திரும்ப திரும்ப
தலைப்புகளில் வருவது
மனிதன்
திரும்ப திரும்ப
தொலைத்து தேடுவதால் தானோ?
நம்பிக்கை
என்பது
அழிவைத் தடுக்கும்
ஆயுதம்,
நம்
எதிரிகளால்
அழிக்க முடியாத
உள் கோட்டை
****JOKER***
யார்
-
என்றோ ஒரு நாள் நிஜங்களாக.. இன்று நினைவுகளாக மட்டும் உன் மேல் நான் கொண்ட அதீத பேராசை..
ஆசை
-
ஆசை
ஆயிரம் ஆசைகள் மனதில்,
உடுத்திரளில் நட்சத்திர கூட்டங்களைப்போல்..
அத்துனை ஆசைகளையும் ஒன்றாக்கி காதல் செய்வேன்..
என் உள் இருப்பவளே.. உன் ஆசையும் அதுதானே!
அடுத்த தலைப்பு : உடுத்திரள்
-
உடுத்திரள்
உருவத்திற்கான உடையும்
பருவத்திற்கான பாசிமணிகளும்
பொலிவான பொன்னகையும்
வசதிக்கான வைரங்களும்
எதுவும் கொடுத்திராத அழகை
அள்ளி கொடுத்ததென்னவோ
அவள் உடுத்திய கள்ளங்கபடமற்ற புன்னகை மட்டுமே.....
அடுத்த தலைப்பு : வடு
-
ஓராயிரம் முறை நீ கொஞ்சிய போதும்..
நான் பல முறை உன்னை மிஞ்சிய போதும்..
உன் கண்களுக்கு பட்டது கெஞ்சியதே...
ஒரு முறையேனும்
நினைவு கூர்ந்தாயா என் உள்ள வடு என்னை எவ்வளவு வாட்டியிருக்கும் என்று...
வடுவை குடுத்த உன்னில் வாழ்வையும் காண்பதால் மட்டுமே...
வலி நிறைந்த வடுவிற்கும் நான் வழி விட்டு நகர்கிறேன் ..
அடுத்த தலைப்பு : புரிதல்
-
காதலிக்கவும்
கல்யாணம் செய்து கொள்ளவும்
ஒருவர் கிடைப்பதென்பது
பெரிய விஷயமல்ல
ஆனால்
அரிது
நம்மை புரிந்துகொள்ளவும்
நம் எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்பவராகவும்
ஒருவர் கிடைப்பது என்பது
****
அழகு
-
வானுக்கு நிலவும்
கடலுக்கு அலையும்
பூவிற்கு நிறமும்
அவனுக்கு அவளும்
அவளுக்கு அவனும்
அவர்களுக்கு காதலும்
அழகாய் போனது..
அனைத்து அழகும் தோற்றதென்னவோ
ஆடையும் அணிகலனும் இன்றி
ஒப்பனைகள் ஏதுமற்ற
கள்ளங்கபடமற்ற சிரிப்பால்
அழகின் அட்சயபாத்திரமான மழலையிடம்.....👶😘❤️
அடுத்த தலைப்பு : பிரியாவிடை
-
இரு உள்ளங்களை இணைக்கும் பாச பிணைப்பு
மனிதர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் கொடுக்கும் கருணை
குழ்ந்தையிடம் தாய் காட்டும். அரவணைப்பு
அண்ணன் தம்பி இடையில் உள்ள பிணைப்பு
காதலன் காதலி உரையாடல்
அக்கா தங்கை சண்டையின் முடிவு
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல்
மனிதனக்கு இறைவன் கொடுத்த மிக பெரிய வரம் அன்பு
அடுத்த தலைப்பு அன்பு ❤️❤️🥰🥰😘😘
-
எத்தனை முறை என்னை காயப்படுத்தினாலும்
உன்னை என்னால் வெறுக்கவே முடியவில்லை..
நீயே என்னை வெறுத்த போதும் நான் உன்னை மட்டுமே நேசிக்க காரணம்
உன் மீதான என் அன்பு ஒருபோதும் பொய்யாக இருந்ததில்லை..
காத்திருப்பேன் எப்போதும் உன் புரிதல் நிறைந்த அன்பிற்காக...
அடுத்த தலைப்பு : வகுப்பறை
-
அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல்...
அனைத்தையும் கற்றுத்தந்தவர்கள் காதலை மட்டும் ஏன் விட்டுவைத்தார்கள்..
ஈர்ப்பு விசை ஆப்பிளாலா வந்தது.. நான் உன்னை கண்டல்லவா அறிந்தேன்!
காதலையும் பாடமாக்க விண்ணப்பிக்கும்
- வகுப்பறையில் ஒரு காதல் மாணவன்..
அடுத்த தலைப்பு : உடுத்திரள்
-
அகன்ற உடுத்திறல் கொண்ட ஈர்ப்பு விசை போல..
எனையே உனை நோக்கி கவர்ந்திழுக்கும் விழி ஈர்ப்பு நீ..
பழகவும் துணிவில்லை..
விலகவும் மனமில்லை..
அகன்ற உடுத்திரளின் சூரிய தொகுதியின் நடுநாயகம் சூரியன் போல்..
என் கனவுகளின் நடுநாயகம் நீ..
என் கவிதைகளின் உற்பத்திபுள்ளி நீ..
என் துன்பங்கள் மாயமாய் தொலையும் கருந்துளை நீ..
பிரபஞ்சத்திலேயே தோன்றி அங்கேயே அழியும் விண்கற்கள் போல..
என்னுள்ளேய தோன்றி.. என்னுள்ளே அழியும் உன் நினைவுகளை எங்கனம் கையாள்வேன்..
அடுத்த தலைப்பு - நடுநாயகம்
-
உன்னை நினைத்தே கண்விழிக்கின்றேன்.
உனக்காகவே நாள்முழுதும் உழைக்கின்றேன்.
உன்னை தீண்டும் வேளையிலே மகிழ்கின்றேன்
உன்னுடன் கழிக்கும் நிமிடங்களில் திளைக்கின்றேன்.
உன்னாலே நானும் உயிர் வாழ்கின்றேன்.
உனக்காக நான் மட்டும் ஏங்கவில்லை..
உயிரனைத்தும் காத்துக்கிடப்பதேன்?
உயிர்களைத்தூக்கும் பாகுபாடின்றி சக்திக்கு அளிக்கும்
உணவே நடுநாயகம்... பசிக்கும் உயிர்களுக்கு..
அடுத்த தலைப்பு - பசி
-
பசி என்று வந்தவர்க்கு
புசிக்க கொடுப்பவன் நீ
நடுநிசி யில் பயம்தீர்க்க
ஒளிமயமானவன் நீ
நோய்க்கு மருந்தானவன் நீ
நீண்ட பயணத்தில் துணையானவனும் நீ
எங்கும் நிறைந்தவனே ! பரம்பொருளே!
உனைத் துதிக்கும் வரம் போதும்!!
அடுத்த தலைப்பு ...பரம்பொருள்
-
ஆதி நீ
அந்தம் நீ
முதலும் நீ
முடிவும் நீ
தொடக்கமும் நீ
முடிவும் நீ
யாவிலும் நீ
எதிலும் நீ
எம் பரம்பொருளே
அடுத்த தலைப்பு - நகைப்பு
-
கம்பன் வீட்டு கட்டுத்தறியில்
ஏற்றிடாத கவிதைகளை
விழி மூடி நித்திய நிலையில் நீந்தி,
வானவில் வார்த்தைககளை கொண்டு
எட்டி பிடித்தேன் சில கவிதை வரிகளை...!
அதை படித்தவர்களில்...
சிலர், (https://i.postimg.cc/hj3W3v6F/aiyo-vadivelu.gif)
சிலர், (https://i.postimg.cc/QdB2HjFS/vadivel-manadhai-thirudivittai.gif)
இன்னும் சிலரோ, (https://i.postimg.cc/vTVqPQCX/892d25c098ef224ab86a7d624ca64881.gif)
எனக்கோ ஒரே நகைப்பு..!
அடுத்த தலைப்பு மனிதம்..!
-
மனிதம் இல்லா கவிதையில்
மனிதம் எப்படி தலைப்பாகும்
நகைப்பு இங்கே தலைப்பாகிறது
சந்தோசம் மிகுந்தால் வருவது நகைப்பு
துக்கம் மிகுந்தால் வருவது வெறுப்பு
அன்பு மிகுதியில் வருவது விருப்பு
அடுத்த தலைப்பு: சந்தோசம்
-
தினம் வரும் விருந்தாளி
வந்தா போக வேணாம் என்று நினைக்கும் நெஞ்சம்.
போனால் எப்போ வரும் என்று ஏங்கும் மனம் .
அடுத்த தலைப்பு: சோகம்
-
இவனோ அழையா விருந்தாளி..
வந்ததும் அட்டை போல் ஒட்டி கொள்ளும் கொலையாளி ..
என் கண்ணீரை ருசி பார்க்கும் பகையாளி ..
இருந்தும் பல உண்மைகளை உணர வைக்கும் உளவாளி ..
அடுத்து : உண்மை
-
நீங்கள் மற்றவர்களை சில
மணிநேரம் முட்டாளாக்கலாம்..
ஆனால் அவர்களை எல்லா
நேரத்திலும் முட்டாளாக்க
முடியாது.
உங்கள் கண்கள்
காணாதவற்றிற்காக உங்கள்
காதுகளை நம்ப வேண்டாம்.
அடுத்தது : திமிர்
-
பொதுவில் கருத்து தெரிவித்தேன்
படித்த திமிர் என்றர்
தேவையை தானே பூர்த்தி செய்தேன்
சம்பாதிக்கும் திமிர் என்றர்
எதிர்த்து கேள்வி கேட்டேன்
கேட்க ஆள் இல்லா திமிர் என்றர்
என் சாதனையும் தன்னம்பிக்கையும்
திமிர் என்றால்
ஆம்
என்றும் நான் அதிக திமிர் பிடித்தவள் தான் 😎
அடுத்தது : சுயநலம்
-
பொது சிந்தையை அறவே அறுத்து மற்றவர் துயர் மற்றும் அவர்தம் ஷேம லாபங்களில் கூட பங்கு கொள்ள விரும்பா தன்னலம் மட்டுமே பெரிது என்று மனம் கொண்டுள்ள ஓர் சிந்தயே சுயநலம்....
தான், வாழும் காலங்களில் ஓர் சுவடின்றி துடைக்க செய்யும் சாதனமே சுயநலம்....!
இவ்வுலகை, விட்டு பிரியும் காலங்களின் கடைசி நிமிடங்களில் நம்மை சுற்றி நான்கு வஸ்துக்கள் கூட இருக்க விடா செய்யும் எண்ணமே சுயநலம்...!
நலமின்றி தான் இயன்று பெற்ற சுயத்தை வெறும் நிலையில்லா பொருட்களுக்காக விற்றுக்கொடுக்கும் அபத்தமே சுயத்தை இழந்து பெறுகின்ற நலம் ஆகும்....!
அடுத்த, வாக்கிய தொடர் : நிதானம்
-
எங்கும் வியாபித்திருக்கும்
காற்று தான்
நிதானமாய்
நம் நாசிக்குள் நுழைந்து
உயிரை தக்க வைக்கிறது
அதே காற்று தான்
நிதானத்தை இழந்து
சூறாவளியாய்
பல உயிர்களை
தாக்குகிறது
நிதானமாய் இருக்க
கற்றுக்கொள்ளுங்கள்
அது உங்களை நம்பி இருக்கும்
பல உயிர்களை
காக்கும்
அடுத்த தலைப்பு :
ஒவ்வொரு முறையும் நான்
எழுதி முடித்த பின்
எனக்குள் தோன்றும்
கவிதையா இது ?
அடுத்த தலைப்பு :! கவிதையா இது ?!?!?!
-
கவிதையா இது ???
இல்லை.. உன் கருவிழி கண்டு..
நீங்கா மையல் கொண்டு..
கவியறியா பித்தன் எழுதிய உளறல்..
கணநேர பார்வை வீசி ..
என் கர்வமதை அழிக்கிறாய்..
ரெண்டு முழ மல்லிகை வாசம்..
நாசி ஏற்றி வதைக்கிறாய் ..
உன் சிணுங்கல் சிரிப்பில் அழகினிலே
மீளமுடியா போதை கொள்கிறேன் ..
உன் கரம்பிடிக்கும் நாள்
எண்ணி ராத்தூக்கம் கொல்கிறேன்..
அடுத்த வார்த்தை : பித்தன்
-
நிஜங்கள் தரும் சந்தோஷத்தை
விட நினைவுகள் தரும்
சந்தோஷம் அதிகம்..
அதனால் தான் நிஜங்கள்
நிலைப்பதில்லை நினைவுகள்
என்றும் அழிவதில்லை/color]
நிஜம்
-
மிக அழகான நாட்கள் என்று
தனியாக ஏதுமில்லை
நாம் வாழும் ஒவ்வொரு நொடியும்
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு
கெடுதல் நேராமல்
முடிந்தால்
சிறு புன்னகையை
கொடுக்க முடிந்தால்
வாழும் நாள் எல்லாம்
அழகாகும் என்பது
நிஜம்
கனவில்
அவளுடன் வாழ்கிறேன்
நிஜத்தில்
அதை கவிதை என
கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்
பொய்
சொல்ல தெரியாத எனக்கு
கவிதை வராதென்பது
நிஜம் :) :D :D
குழந்தை
-
நினைவு - நிகழ்காலத்தின் குழந்தை
நினைவே! இரக்கமற்ற தேவதையே!
உயிர்ப்பித்து கொண்டே மரணம் தரும்
இனிய அரக்கனே!
நிகழ்காலத்தின் குழந்தையே!
மகிழ்வை அள்ளிஅள்ளி தருபவனே!
காயம் ஏற்படுத்திய வலியை
பல்லாயிரம் மடங்காய் அளிப்பவனே!
சிந்தையை அழிப்பவனே!
கொடிய நண்பனே! இனிய எதிரியே!
வாழ்விற்கு உந்துசக்தியே!
பின்நோக்கி இழுக்கும் விசையே!
என் அமுதவிஷமே!
நித்திரைக் கொள்ளவிடாமல் உன்னுள்
எனை அழ்த்தும் கொடிய கலாபக்காதலனே!
எனது நிறைவே! வாழ்வின் எச்சமே!
நீயின்றி நானில்லை
நினைவின்றி வேறில்லை...
தொடர் தலைப்பு: அம்மா
-
எழுதி எழுதி
களைப்படையா
கவிதை
அவள்
எந்த பாற்கடலை
கடைந்தாலும்
கிடைக்காத
அமுதம்
அவள்
ஓயாத
கடல் அலை போல
அவள் பணி
இருந்தும்
திகட்டாத
தேன் இன்பம் போல
அவள் அன்பு
இவளுக்கு நிகர்
இவ்வுலகில் இல்லை
அவள் தான்
அம்மா
அடுத்த தலைப்பு - உறவுகள்
-
சிலருக்கு
இது வரம்
சிலருக்கோ
வரமாய் அமைந்த சாபம்
நாளை
எனக்காகக் கண்ணீர் சிந்த
இன்று
நான் சேர்த்து வைக்கும் பந்தம்
அடுத்து : மயில்
-
எத்தனை எத்தனை வண்ணங்கள் உன்னிடம் ..?
மொத்த அழகும் சேர்த்து வைத்த முழுமையான அழகு நீ ..
உன்னை கண்டு வியக்காதோர் எவரேனும் இருக்கமுடியுமா என்ன ..?
மயிலினமே ..
நான் தினம் வணங்கும் என் கந்தனின் கையில் உன்னை பார்க்கையில் எனக்கும் ஆசையாக உள்ளது அடுத்த ஜென்மத்தில் நான் நீயாக பிறக்க வேண்டும் என்று..
அகில உலகத்தை தாங்கும் என் அப்பனை உன்னை போல் நான் தாங்கி கொண்டு அவனின் திருவடியில் இருந்து.. இறந்து விட ஆசை...
வேல் உண்டு வினை இல்லை
மயில் உண்டு பயம் இல்லை
அடுத்து : நிலா
-
நிலா ....
நெருக்கம் இல்லாத நேசமாய்,
நிழலாய் நம்மை அணைப்பாய்,
நட்சத்திரங்கள் கூட பொறாமைப்பட,
நீயே எனக்கு துணையாய்..
தூரத்தில் இருந்தும் தளராதாய்,
துயரங்களில் துணையாக…
தீய நினைவுகள் நீக்கிவிட்டு,
தீண்டுகிறாய் ஒளியினால்…
பொன் நிறத்தில் புன்னகைத்து,
பூமிக்கு நீ தரும் பிரியா காதல்,
பழைய காதலர்கள் சொல்லும் கதைகள்,
பளபளப்பாய் நிற்கும் உன் தேடலில்…
நிலா, நம் கனவின் தோழி,
நினைவுகளை நீக்கும் ஒரு மாயம்,
நீலாக்கடலில் படிந்திருக்க,
நீ என்னுள் நிழலாகும் வரை…
— ✨ நிலா தோழி ✨
அடுத்து...மழை
-
மேகம் கறுக்கிறது
மின்னல் அடிக்கிறது
இடியும் இடிக்கிறது
மழை நான் போகும்
தருணம் இதோ
மரம் செடி கொடிகள்
என்னை வரவேற்க
ஆறு நதி கடல் என்னை
வா வென்றழைக்க
மும்மாரி பொழிவேனோ
இல்லை துளி துளியாய்
வீழ்வேனோ
அடுத்த சொல் மும்மாரி
-
மரம் வளர்போம்
மண் வளம்தனைக் காப்போம்
சுற்றுசூழல் காத்து
பொது நலன் பேணுவோம்
இயற்கை அன்னை
சீற்றமும் குறைந்து
அருள்வாளே மீண்டும்
மாதந்தோறும் மும்மாரி
அடுத்து : புகைப்படம்