FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: vedhalam on August 22, 2011, 02:10:45 PM
-
தொலைபேசி முடித்தபின் "வைக்கவா?" என்ற கேள்விக்கு "அவ்ளோதானா?" எனும் உன் பதிலில் உயிர்த்தெழுகிறது நம் காதல்.
2 போட்டி தோற்றால் வீரர்கள் வீட்டில் கல் எறிபவன், 2 லட்சம் கோடி ஊழலுக்கு கூட மூடி கொண்டுதான் இருக்கிறான். # நாட்டுப்பற்றாம்!
கல்யாணம் நிச்சயம் ஆகி பெண்ணுடன் தொலைபேச ஆரம்பித்த உடனேயே மாப்பிள்ளை வாங்கும் முதல்சத்தியம்-"எங்கம்மா கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிபோகணும்,சரியா?"
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறந்த பாடகரை தேர்வு செய்கிறார்களா? இல்லை சிறந்த நடிகரை தேர்வு செய்கிறார்களா? # சீரியஸ் டவுட்
டிவிகளில் நடத்தப்படும் நடன நிகழ்சிகளில் நடனம் ஆடுகிறார்களா? இல்லை "நாடகம்" ஆடுகிறார்களா # சீரியஸ் டவுட்
தமிழ்ப் பேய்களுக்கு இன்னமும் பழிவாங்கவும், கொலை செய்யவும் மட்டும்தான் தெரிகிறது...
கார்னர் சீட்ல எல்லாம் லவ்வர்ஸா உக்காந்திருக்காங்க....இங்க மட்டும்தான் ரைடு வராம இருகாங்க வர வச்சுருவாங்க போல...
முன்னோக்கி ஓடும் கனவைக்கொண்டிருந்தது பால்ய காலம். கடந்து சென்ற காலங்களை கனவில் தேடிக்கொண்டிருக்கிறது நிகழ்காலம்.
சுடுகாட்டில் ஏன் டாஸ்மாக் கடை வைக்க வில்லை? # உயிர் போகாமல் சாகடிப்பது ஒரு கலை. உயிர் போனால் அது கொலை.
40 வயதில் நாய்குணம் வருமாம்....நடிகைகள் 40 + வயதுக்காரர்களையே அதிகம் திருமணம் செய்கின்றனர்...
காதல் கோட்டை மாதிரி ஒரு சில படங்கள் திரும்ப பார்க்கும்போது முதல் தடவை பார்ப்பது போன்று திரைக்கதையின் விறுவிறுப்பை உணரவைக்கிறது.
வினையாற்றாமலேயே அவப்பெயரை சுமக்கிறது கயிறு . # தூக்கு கயிறு.
கருணை என்பது இனம்,மொழி இதெல்லாம் பார்த்து வருமாயின் அதன் பெயர் "பாரபட்சம்"
மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒருவர் அதற்கு பின்னான நாள்களில் மரணத்தையும் வாழ்வையும் ஒரே புள்ளியில் உணர்கிறார்.
அதிகாரமற்ற மக்களிடம்தான் அதிகாரத்தை மாற்றும் சக்தியும் இருக்கிறது.
ஏதாவது கைத்தவறி கீழே விழும்முன்னே தட்டுத் தடுமாறி சில பல போராட்டங்களுக்குப் பிறகு கீழே விழாமல் தடுக்கும்போது என்னா ஒரு திருப்தி...
ஒரு பாவமும் செய்யாதவர்கள் மட்டும் இந்த விபச்சாரிமீது கல்லெறியுங்கள், இயேசு சொன்னார் ! யாருமே கல்லெறியவில்லை இயேசு உட்பட
எல்லை மீறுவது தீவிரவாதம் என்றால், நானும் தீவிரவாதியே, நீ என்னருகில் இருக்கையில்.
கல்யாணத்த விடவும் பூப்பு Function ல நிறைய ஃபிகருங்க இருக்கும்.. ஆனா பசங்கள உள்ள விட மாட்டாங்களே... #அனுபவம்
நம் காதலை தினமும் Refresh செய்தேன்,ஆனால் நீயோ வேறு எவனுடனோ உன் காதலை ReStart செய்துவிட்டாய். நான் இப்போது Shut-down ஆகி கிடக்கிறேன் # கவித
சில நினைவுகள் சோடா பாட்டிலில் விழுந்த குண்டு போல நம்மை உருட்டுகிறது. இப்போது நினைவுகள் நீங்கி, பாட்டிலும் குண்டுமே நினைவாக நீள்கிறது!
ஒரு பெண்ணிடம் இன்னொரு பெண் சொல்லுவது ஆண்களுக்கு ரகசியமாகிறது. ஒரு பெண்ணிடம் ஆண் சொல்லுவது ர....கசியம் ஆகிறது.
உன் கோபங்களையும் கூட சேர்த்து வைத்திருக்கிறேன்...நாமிருவரும் குளிர் காய...!!
விஜய், அஜித் இவர்களையெல்லாம் வேற ஊர்க்காரர் கிண்டல் பண்ணும்போது வரும்(வரும்ப்பா) கோபத்திற்குப் பெயர் மாநிலப்/மொழிப் பற்றா?
ரயில்வே சார்ட்ல பேரும் வயசும் போடுறாங்க, அப்படியே போன்நம்பரும் போட்டா வசதியா இருக்கும்...
இலையுதிர் காலத்திற்குப் பின்னும் பருவம் இருக்கிறது.
குற்றவாளிகளைப் போலவே புனிதர்களும் இயல்பிலேயே உருவாவதில்லை.
காந்தி செத்துட்டாரா ரேஞ்சுல கேள்வி எப்போவாவது கேட்கலாம்..எப்போதும் கேட்டா # ஐயோ பாவம்
அளவுக்கதிகமான சந்தோஷத்தை கண்ணீர் விட்டு கரைக்கிறேன். இறைவா, சோகத்தில் புன்னகைக்கும் வலிமையைத்தா.
ஜெயித்தவன் கணவனாகிறான், தோற்றவன் கவிஞனாகிறான்.
செத்துச்செத்து விளையாடும் விளையாட்டே காதல்.
மூன்று வருடங்களைத்தாண்டினால் காதல் ஜெயிக்காது எனும் கூற்று உன்மையா?
இன்னும் சற்று நீளாதா இந்தக்கனவு என்ற நப்பாசையிலேயே சில நிமிடங்கள் தள்ளி வைக்கிறேன் தூக்கத்தை..
நீ அருகிலிருக்கும் போது எதையும் யோசிக்கத் தோணுவதில்லை. நீ இல்லாத நாட்களில் யோசிக்க உன்னைத்தவிர வேறொன்றும் இருப்பதில்லை.
காதலை சோதிப்பதாக பொறுமையை சோதிக்கிறார்கள், பொறுமையை சோதிப்பதாய் காதலை சோதிக்கிறார்கள்.
இவங்களும் பேச மாட்டாங்களாம், வேற பொண்ணுங்ககிட்டயும் நாங்க பேச கூடாதாம் # நாங்க தவிக்கணும்,அவங்க ரசிக்கணும்.
குழந்தைத்தனமான காதலிகள் பொறுப்பானவர்களாகவும் இருக்கின்றனர். #மூணு வர்ஷம்,நீ நல்ல வேலைக்கு போ,நான் காலேஜ் படிக்கிறேன்,அப்புறம் பேசலாம்.
பொண்ணுங்கள காதலிக்க வைப்பது கூட சுலபம். ஆனா அதை அவங்கள சொல்ல வைக்கிறது இருக்கே... #
தலைகீழா நின்னு தண்ணி அடிக்கிறதுக்கு சமம்
காதலை மறைத்து, பசங்கள தவிக்க விட்டு அதை ரசிப்பதில் என்னதான் கிடைக்குமோ இந்த பொண்ணுங்களுக்கு.
-
2 போட்டி தோற்றால் வீரர்கள் வீட்டில் கல் எறிபவன், 2 லட்சம் கோடி ஊழலுக்கு கூட மூடி கொண்டுதான் இருக்கிறான். # நாட்டுப்பற்றாம்!
கருணை என்பது இனம்,மொழி இதெல்லாம் பார்த்து வருமாயின் அதன் பெயர் "பாரபட்சம்"
ஒவ்வெரு வரியும் சிந்திக்க தூண்டும் வரிகள் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் வேதாளம் மச்சி தொடரட்டும் உங்கள் பதிவுகள்...!!!
-
தொலைபேசி முடித்தபின் "வைக்கவா?" என்ற கேள்விக்கு "அவ்ளோதானா?" எனும் உன் பதிலில் உயிர்த்தெழுகிறது நம் காதல்.
தமிழ்ப் பேய்களுக்கு] இன்னமும் பழிவாங்கவும், கொலை செய்யவும் மட்டும்தான் தெரிகிறது...
athuthan micham elam useroda erukuravaga panrangale... ;)