FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Anu on October 28, 2012, 06:45:58 PM

Title: ஆப்பிள் ஐபேட் மினி மற்றும் கேலக்ஸி நோட்-2: ஓர் ஒப்பீட்டு அலசல்
Post by: Anu on October 28, 2012, 06:45:58 PM
தற்சமயம் புதிதாக களமிறக்கப்பட்டிருக்கும் ஆப்பிள் ஐபேட் மினி பற்றி நிறைய தகவல்கள் நமது தமிழ் கிஸ்பாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபேட் மினி மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட்-2 டேப்லட் பற்றிய ஒப்பீட்டினை பார்க்கலாம். இன்னும் சொல்லப்போனால் இந்த ஐபேட் மினி, டேப்லட்
வகையினை சேர்ந்தது. இருப்பினும் ஐபேட் டேப்லட்டின் திரையினை விடவும் சிறியதாக தோற்றத்தினை கொண்டதாக இருக்கும். இந்த 2 எலக்ட்ரானிக் சாதனங்களும் ஃபேப்லட் மற்றும் ஸ்மார்ட்போனாகிய இரண்டையும் ஞயாபகப்படுத்தும் வகையில் ஃபேப்லட்டாக உருவெடுத்துள்ளது.
இதனால் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கையில் ஐபேட் மினி மற்றும் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்கள் வித்தியாசமான தோற்றம் கொடுப்பதால் இந்த 2 எலக்ட்ரானிக் சாதனம் பற்றி ஒப்பீட்டினை பார்க்கலாம்.
ஐபேட் மினி 7.9 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஐபிஎஸ் எல்சிடி தொடுதிரையில் 1024 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இந்த திரை சிறப்பான ரெட்டினா டிஸ்ப்ளே வசதியினையும் வழங்கும். கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் சாதாரண ஸ்மார்ட்போன்களையும் விட சற்று உயர்ந்த வசதிகளை கொண்டதால், இதில் 5.5 இஞ்ச் திரை
வசதியினை பெற முடியும்.
ஐபேட் மினி டேப்லட்டில் ஐஓஎஸ்-6 இயங்குதளம் மற்றும் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்குதளத்தினையும் பெறலாம். இந்த இரண்டு எலக்ட்ரானிக் சாதனத்திலும் 5 மெகா பிக்ஸல் கேமராவினை பெற்று பயனடையலாம். ஆனால் ஆப்பிள் ஐபேட் மினி டேப்லட்டில் கூடுதலாக ஐசைட் தொழில் நுட்பத்தினையும் பெற முடியும். கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும், ஐபேட் மினி 1.3 மெகா பிக்ஸல்
முகப்பு கேமராவினையும் வழங்கும்.
இந்த 2 எலக்ட்ரானிக் சாதனங்களும் 3ஜி, 4ஜி, வைபை ஆகிய வசதிகளை கொண்டதாக இருக்கும். இது போன்ற உயர்ந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்க பேட்டரியின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. ஐபேட் மினி டேப்லட்டில் 16.3 டபிள்யூஎச்ஆர் லித்தியம் அயான் பேட்டரியையும், கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டில் 3,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் சிறப்பாக பயன்படுத்தலாம்.
சாம்சங் கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் ரூ. 39,990 விலையினையும், ஐபேட் மினி டேப்லட்டின் 16 ஜிபி 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி வசதிகள் ரூ. 31,874 விலையினையும், ரூ. 38,819 விலையினையும், ரூ. 45,763
விலையினையும் சுலபமாக பெறலாம். இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.