28
« Last post by Madhurangi on January 21, 2026, 11:58:40 PM »
இசைத்தென்றல் நிகழ்ச்சியை இவ்வளவு வெற்றிகரமாக கொண்டு செல்லும் RJs மற்றும் DJ அவர்களுக்கு வாழ்த்துகள்! நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்:
படம்: ரௌத்திரம்
பாடல்: அடியே உன் கண்கள் ரெண்டும் Made in Cuba-வா?
குரல்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் Prakash Nikki பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தமிழ் சினிமாவில் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ஒரு திறமையான இசையமைப்பாளர்
பொதுவாக ரௌத்திரம் திரைப்படம் என்றாலே 'மாலை மங்கும் நேரம்' தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இந்த 'அடியே உன் கண்கள் ரெண்டும்' ஒரு மிகச்சிறந்த Under-rated மெலடி. சாதனா சர்கத்தின் உருகவைக்கும் குரலும், உதித் நாராயணனின் அந்தத் துள்ளலான உச்சரிப்பும், ஜீவா - ஸ்ரேயா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பாடலுக்கு ஒரு தனி போதையைக் கொடுக்கும். பல வருஷமா என் playlist ல top ல இருக்குற இந்த பாட்டுல எனக்குப் பிடிச்ச வரிகள்:
"விலகாமல் உன்னோடு சேர
இமைக்காமல் உன் தோற்றம் காண
உயிர் கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத் தாங்க"