Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய மருத்துவ குறிப்பு:-👍👍

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கன்னாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் உங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கெடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?

கண் குறைபாடு -காரணங்கள் :

1. கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன.

2. கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.

3.இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது.

4. கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது.

5. நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான தண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

கண் பார்வை குறைபாடு நீங்க :
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய்  நீங்க :
முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து  பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது. இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.

முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாட்டை வெள்ளெழுத்து என்று அழைக்கின்றனர். இது குணமாக:
முருங்கை விதை – 100 கிராம்
மிளகு – 100 கிராம்
இரண்டையும் நன்றாக கலுவத்திலிட்டு மெழுகு போல் அரைத்து ஒரு வெங்கலத்தாம்பளத்தினுள் தடவி வெய்யிலில் வைத்தால் தாம்பளம்
சூடேறி எண்ணெய்கசியும். அதனை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்த எண்ணெயில் 1 சொட்டு எண்ணெய் கண்ணில் விட வெள்ளெழுத்து பாதிப்பு குணமாகும்.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர். கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது. பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம். முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும். இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
கண் பார்வை குறைபாடு சரி செய்யலாம் ....

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன். நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம். அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும். பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.

1.மனக் கவலை தூள் படும்
2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்
3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்
4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்
5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்
6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்
7.ஒற்றைத்தலைவலி சரியாகும்
எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.
 
92
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on September 30, 2025, 11:28:47 AM »
93
ஆன்மீகம் - Spiritual / Re: THOUGHT for Today ✝️🙏
« Last post by MysteRy on September 30, 2025, 08:51:35 AM »
94
GENERAL / Re: If love can correct, why use anger?
« Last post by MysteRy on September 30, 2025, 08:49:22 AM »
95
GENERAL / Re: If love can correct, why use anger?
« Last post by MysteRy on September 30, 2025, 08:48:46 AM »
96
GENERAL / Re: If love can correct, why use anger?
« Last post by MysteRy on September 30, 2025, 08:48:12 AM »
97
GENERAL / Re: If love can correct, why use anger?
« Last post by MysteRy on September 30, 2025, 08:47:36 AM »
98
GENERAL / Re: If love can correct, why use anger?
« Last post by MysteRy on September 30, 2025, 08:47:01 AM »
99
GENERAL / Re: If love can correct, why use anger?
« Last post by MysteRy on September 30, 2025, 08:46:27 AM »
100
GENERAL / Re: If love can correct, why use anger?
« Last post by MysteRy on September 30, 2025, 08:45:50 AM »
Pages: 1 ... 8 9 [10]