பச்சரிசி & 1 ஆழாக்கு கற்கண்டு & 150 கிராம் நெய் -& 50 கிராம் (சிறிய கிண்ணம் அளவு) கேசரிப்பவுடர் & ஒரு சிட்டிகை ஏலப்பொடி & 1/4 தேக்கரண்டி முந்திரி & 8
அரிசியை நன்றாகக் களைந்து மூன்றாழாக்கு தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து வேக விடவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அரைதம்ளர் தண்ணீர் விட்டு, அதில் கல்கண்டைப் போடவும். கல்கண்டு கரைந்து சற்று கொதித்ததும், குக்கரில் வேக வைத்த சாதத்தை நன்றாக மசித்து அதில் போடவும். கல்கண்டுக் கரைசலும் சாதமும் கலந்து கொதிக்க விடவும். அடுப்பை சிறியதாக்கி வைக்கவும். சாதத்தில் கேசரிப் பவுடர் தூவி நெய்யை விட்டு கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். பிறகு வறுத்த முந்திரி, ஏலப்பொடியைப் போட்டு ஒன்றாகக் கிளறவும்