Author Topic: ஓமவல்லி பஜ்ஜி  (Read 654 times)

Offline kanmani

ஓமவல்லி பஜ்ஜி
« on: December 28, 2012, 09:51:11 PM »


என்னென்ன தேவை?

பஜ்ஜி மாவுக்கு...
கடலைப் பருப்பு - அரை கிலோ,
உளுந்து - 100 கிராம்,
துவரம் பருப்பு - 100 கிராம்,
பச்சரிசி - கால் கிலோ.
இவை அனைத்தையும் ஒன்றாக மெஷினில் கொடுத்து,
நைசாக அரைத்து,
ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.
பஜ்ஜியோ, போண்டாவோ செய்யும் போது,
இந்த மாவை எடுத்து உடனடியாக உபயோகிக்கலாம்.
பஜ்ஜி மாவு - 100 கிராம்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
ஓமவல்லி இலைகள் - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு.



எப்படிச் செய்வது?

பஜ்ஜி மாவில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, அளவாகத் தண்ணீர் விட்டு, பக்குவமாகக் கரைத்துக் கொள்ளவும். ஓமவல்லி இலையை ஒவ்வொன்றாக அதில் முக்கி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.