Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 10/04/2014 (April 10th)  (Read 781 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
மேஷம் :

காலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 
ரிஷபம் :

வெகுநாட்களாக மனதளவில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளை களின் உடல்நிலை சீராக இருக்கும். வாகனச்செலவு நீங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோபம் குறையும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 
மிதுனம் :

இன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 
கடகம் :

மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 
சிம்மம் :

குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானித்து செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 
கன்னி :

ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. மறைமுகப் போட்டி களுக்கு பதிலடி தருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதயம் உண்டு. விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு. பிரபங்களின் உதவி கிடைக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை நீங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 
துலாம் :

சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண் களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 
விருச்சிகம் :

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
 
தனுசு :

மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
 
மகரம் :

கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புது நட்பு மலரும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
 
கும்பம் :

மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
 
மீனம் :

சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு