Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 20/06/2014 (June 20th)  (Read 901 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


மேஷம் :

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். அவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
 
 

ரிஷபம் :

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
 
 

மிதுனம் :

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
 
 

கடகம் :

இன்றையதினம் குடும்பத்தில் அமைதி நிலவும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 

சிம்மம் :

சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
 
 

கன்னி :

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் ஒத்துழைப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
 
 

துலாம் :

எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
 
 

விருச்சிகம் :

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
 
 

தனுசு :

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
 
 

மகரம் :

 குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
 
 

கும்பம் :

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
 
 

மீனம் :

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்