Author Topic: ~ 30 வகை கரகர மொறுமொறு ரெசிப்பி! ~  (Read 1882 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218490
  • Total likes: 23136
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ஃப்ரை



தேவையானவை:
உருளைக்கிழங்கு  கால் கிலோ, மிளகுத்தூள்  ஒரு டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது), உப்பு  தேவைக்கேற்ப, எண்ணெய்  பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:
உருளைக்கிழங்கை விரல் வடிவ கனத்துக்கு நறுக்கி, உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேகவிடவும். தண்ணீரை வடித்து, உலரவிட்டு, பிறகு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எண்ணெயை வடியவிட்டு, சூட்டுடனே மிளகுப்பொடி சேர்த்து, நன்றாகக் கலந்துவிடவும்.