Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 029  (Read 2751 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிழல் படம் எண் : 029



இந்த களத்தின்

இந்த  நிழல் படம் THANAஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

« Last Edit: October 11, 2018, 07:27:26 PM by MysteRy »
                    

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
வசதி படைத்தவர்கள்கு
வீதியில் எல்லாம் வீடு..
ஏழ்மை பட்டவர்கள்கு
வீதியே வீடு..!

மண்ணுக்குள்
புதையும் முன்னே
அங்காடி பொருள்
வித்து பிழைதேனடி !

காலை விடிந்தும் என்
வாழ்வில் விடியலை காணேனடி
குடிசை வீடே
என் மாளிகை ஆனதடி !

சுற்றுசூழல்
விழிப்புணர்வு பரவ
அழுக்கு தண்ணிரே
 என் குடிநீர் ஆனதடி !

தையல் போட்ட பழைய துணி
தீபாவளி புத்தாடை ஆனதடி
எல்லோர் வீட்டிலும் தீபம் ஏற்ற
என் தீபம் இங்கு அணைகிறதடி !

பட்டாசு வெடித்த
வீட்டின் வாசல்
குப்பை ஆனதடி
என் வீடோ வெறுமையாய் போனதடி !

வெறுமையாய் போன
என் வீட்டுவாசலில்
வறுமை தெரிந்ததடி
ஒரு பானை சோறு பொங்க
ஒரு நாள் ஆனதடி !

ஒரு வேலை உணவால்
என் வயறு சுருங்கியதடி
என் பிள்ளையின் படிப்பு
கனவாய் போனதடி !

புத்தகம் சுமக்க பெற்றுஎடுத்து
ஒருவேளை சாப்பாடிற்க 
கையில் வியாபார பொருட்களை
சுமக்கும் படி போனதடி !

மக்கள் பணத்தில்
ஆணவத்தால்
ஆட்டமிடும் அரசுக்கு
அண்டைநாடு உதவியடி !

விடியாத வாழ்க்கை
முடியாத மரணங்கள்
சொந்த மண்ணிலோ
அகதிகளாய் போனதடி !

நடவடிக்கை
எடுக்கப்படும் என்ற
நம்பிக்கைகூட
ஊசலாடுகிறது !

எங்களின் உயிர்போல
ஆறில் கட்டப்பட்ட
இன்றோ நாளையோ என்று
ஏங்கும் ஓலை குடிசைவீடுகலடி !

சொந்த நாட்றினால்
ஒடுக்கப்பட்ட எங்கள்  வாழ்வில்
ஒளிவீச காத்திருகிரேன்னடி
கடவுளும் மனம் வைப்பர் என்ற நம்பிகையில் !
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 111
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
ஆர்பரிக்கும் அலைகடல்
இன்று ஆள் இல்லா
அமைதியில்
 
தேடி பார்த்தும்
ஓர் உருவமும்
காணாது தவித்து
படகை செலுத்தி
கொண்டு வந்த பொருட்கள்
விற்காது போகுமோ
கவலை மனதுள்....
எங்காவது ஒரு குரல் கேட்காதோ
தேடியே கண்கள் தவிக்க

படகு விட்டு படகு தாவும்
மழலை கூட்டம் எங்கே?
பேரம் பேசி வம்பிழுக்கும்
பெண்டீர்  கூட்டம் எங்கே?
வம்பு பேசி வித்தை  காட்டும்
வாலிப கூட்டம் எங்கே?
அழ்ந்த சிந்தனையினோடே
வந்த வழி நோக்கி பயணம்...


அமைதியாய்  இருந்த நீ
ஆர்பரித்து
ஆழிபேரலையாய்
ஆணவமாய் சிரித்து
அடித்து சுழற்றி சென்றுவிட்டாயே
அன்பான உறவுகளை..

ஆளில்லா ஊரில்
ஆண்டு பல ஆகுமோ
ஆரவாரம் மீண்டும் பிறக்க

ஒதுங்கி கொள்ள
ஓலை குடிசைகளிருந்தும்
ஓசையின்றி மயானமாய்
மாறியதே ....
சொந்தம் ஒன்று கூடாதோ
எங்கள் வாழ்வு மீண்டும் மலராதோ..
ஏக்கத்தோடு
நம்பிக்கை மட்டும்
கையில் கொண்டு
வறுமையை கொல்ல
துணிவோடு என் பயணம்...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Dong லீ

என்ன கொடுமை ஆண்டவா இது என்று
எங்கள் நிலையை கண்டு
உங்கள் மூளை குரல்
முனுமுனுக்கிறது போலும்

நீர்  அலைகளோடு
படகில் பொருளோடு
நிமிர்ந்த தோளோடு
தொழிலுக்கு செல்லும் நாங்கள்
யாரோ எவரோ

விடை காண விருப்பமோ 

உங்கள் பார்வையில் பதிக்க
எங்கள் வாழ்க்கை புத்தகத்தின்
சில பதிவேற்றப்பட்ட
பக்கங்கள் இங்கே



புத்தகம் முடிந்து விடவில்லை
தற்சமயம் மூடி விடுகிறேன்

நன்றி வணக்கம்
« Last Edit: June 27, 2012, 12:11:56 AM by sri »

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
சொர்க்கம் செய்வோம்

போக்கிடம் வேறின்றி
புழக்கத்தில் வந்தாச்சு!
சாக்கடை இல்லாத
சமுதாயம் எங்குண்டு?
நீக்கிவிடக் கூடுமோ?
நிம்மதி கிட்டிடுமோ?

தூக்கிவைத்துக் கொண்டாடும்
தொழில்களால்
இவைவளரும்!
தாக்கத்தை நினைக்காமல்
தவிர்க்கும்வழி தெரியாமல்
நோக்கமின்றி வளர்கின்றோம்!
நோய்நொடிகள்
வளர்க்கின்றோம்!

மூத்தகுடி என்றுநாம்
முயன்று கண்டவொரு
மாற்றுவழி விவசாயம்
ஏற்றமெனக் அதைக்கண்டோம்!
இயற்கையுடன் வாழ்ந்தோமே!

இருகரங்கள் போதுமென
இயந்திரங்கள் மறுத்தோமே !
உருப்படியாய்க் கைத்தொழில்கள்
ஓங்கிவரக் கண்டோமே!
பெருத்த,கைத் தொழில்களினால்
பெருமையும் உழைப்புக்கே!
பெருத்த ஜனத்தொகையால்
பேரிடரைப் பின்தூக்கி
மறுத்த இயந்திரங்கள்
மலைபோல வந்தனவே!
சுற்றுப் புறத்தைச்
சூழ்நிலையைக் கெடுப்பவராய்ப்
பற்றிவந்த பண்புகளைப்
பறக்கவிட்டோம் காற்றினிலே

பொருளும் பெருகினதால்
இந்தவழி அரசியலில்
இருப்போரைத் தாக்கியது!
சொந்தநாட்டை வெளிநாட்டுச்
சந்தையென ஆக்கியது !
சந்தை வளர்ந்ததுவே!
மந்தையாய் மனிதருமே!

கந்துவட்டி கொடுத்தேனும்
கடனாளி ஆயினரே!
அறிவை வளர்க்காமல்
ஆசையை வளர்த்ததினால்,
அருளை வளர்க்காமல்
பொருளை விரும்பியதால்
சுற்றங்கள் பிரியக்
குற்றங்கள் பெருகக்
கற்றும் வழிதவறிக்
காதம் கடந்துவிட்டோம்!

எழுகின்ற தெல்லாமும்
விழுவதுதான் இயற்கைவிதி!
பெருகினவை எல்லாமும்
பெருக்கத்தால் அழிவுறுமே!
சூழல்கள் கெடுக்கும்
சூழ்ச்சிகளைத் தடுப்போமோ?
வாழ்நிலம் காப்போமோ?
வாழ்க்கைநலம் கொள்வோமோ?

அன்பை வளர்ப்போமோ?
ஆன்மாவை நினைப்போமோ?
இன்பம் எவ்வுயிர்க்கும்
இயற்கையென மதிப்போமோ?
இயற்கையுடன் வாழ்வோமோ?
இவ்வுலகே சொர்க்கமென
எவ்வுயிர்க்கும் செய்வோமோ?

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
 
வாழ்கையின் பாதையை
வரும் பொழுதெல்லாம்
திரும்பி பார் என்றனர்..
கால்தடங்களை மறக்க கூடாதம் ....
இங்கு நீ வந்த பாதையை
எப்படி திரும்பி பார்ப்பாய்
பார்ப்பது சுலபம்தான்,
பாதைகள் ... அதில்
உன் கால்தடங்கள் தெரிவது சாத்தியமா ...?
பழமொழிகளும்
பலமுறை ஸ்தம்பிக்கிறது இப்படிதான் ..


நிலத்தினில் இடமில்லை
நீரினில் தடமில்லை
வாழ்விடம் ஏதுமன்றி
வீழ்விடமே வாழ்விடமனது...
ஆடும் அலைகளிலே
அந்தரத்தில் குச்சி கட்டி
அதில் பந்தல் என ஓலை குடிசை ...
படபடக்கும் காற்றுக்கும்
படகை கவிழ்க்கும் அலைகளுக்கும்
தடதடக்கும் நெஞ்சோடு
தடங்கல் இல்லாத வாழ்க்கை இங்கு


குழாயடி சண்டை இல்லை
உயிர் குடிக்கும் சாதிச் சண்டை இல்லை
ஒட்டு கேட்டு ஓடத்தில் வந்து
தீட்டு பெறவும் யாரும் தயாரில்லை
ஒதுக்கபட்டவர் நாங்கள்
ஒருவருக்கு ஒருவர் என
உயிர் கொடுத்து வாழ்கின்றோம் ...


கடல் தாய்க்கும் எங்கள் மேல்
அவ்வப்போது காதல் வரும்
எங்கயோ அதிர்வதற்கு
எம்மை முளுக்காட்டிடுவாள்
எழுந்து நாம் வருவதற்குள்
எல்லாமே போய்விடுமே
அன்னை மடியும் நீதான்
அழிவின் அடியும் நீதான் ..


இருந்தும் ..
மாட மாளிகை கட்டி
மனமயக்கும் மகரந்தங்கள் தெளித்து
பளபளக்கும் ஜிகினாவும்
பட்டாடை வஸ்திரமும்
இன்டர்நெட் வசதியுடன்
கணனியும் கை தொலை பேசியும் விற்க
கனவுகள் கோடிதான்...
கனவுகள் மட்டுமே நமக்கு சொந்தம்
கலங்கிடும் நினைவுகள் மட்டுமே நமக்கு பந்தம்
அலையோடு அலையாக
அலை பாயும் மனதோடு
அடுக்கடுக்காய் பொருளோடு
அங்கும் இங்கும்
அந்தரத்தில் தொங்கும்
அக் குடிலுக்கெல்லாம்
அனுதினமும் வருகின்றேன்
நடமாடும் விற்பனை கடை ..
இல்லை இல்லை அலையாடும்
விற்பனை படகு ...


தூரத்தில் தெரியும் வானமும் எட்டிவிடலாம்
ஆனால் துயரம் தோய்ந்த நம் வாழ்வில்
விடிவை என்றுதான் எட்டுவோம் ..


சாலை மறியல் இல்லை
சாக்கடையும் இங்கு இல்லை
மாலை மரியதைக்கென
அடித்து கொள்ளும் கூட்டமும் இல்லை
ஊழல் இல்லை உப்பில் கூட
கலப்படம் இல்லை
வித்தம் விதமாய் உணவு இல்லை
வியக்க வைக்கும் பொழுதுபோக்கும் இல்லை
இருந்தும் அமைதியான இந்த வாழ்வு
அணுவும் கலைந்திடாத
அனுக்கிரகம் வேணுமென
அனுதினமும் வேண்டுகின்றேன்
அலைமாதா உன்னிடமே ..
                    

Offline thamilan

வானத்தைப் படைத்த இறைவன்
பூமியையும் படைத்தான்
மனிதன் வாழ்வதற்காக‌
ஆனால் இன்றோ....

பாதியை பணக்காரன்
பட்டா போட்டு விட்டான்
மீதியை அரசியல்வா(வியா)தி
சுரண்டி விட்டான்

ஏழைகள் நாங்கள்
எங்கு போவது?
நதியை நம்பி வாழ்கிறோம்.

அதையும் விட்டார்களா
இந்த அரசியல் தலைவர்கள்
அதையும் கூறு போட்டு
சொந்தம் கொண்டாடுகிறார்கள்

படகே எங்கள் வாழ்க்கையானது
படகே எங்கள் வணிகம் ஆனது
ஒரு ஆறுதல்
யாருக்கும் நாங்கள்
வரி செலுத்த வேண்டியதில்லை
மின்சாரக் கட்டணம்
கட்டத் தேவையில்லை
பெற்றோல் விலை உயர்வை நினைத்து
கவலைப்பட தேவையில்லை

போக்குவ‌ர‌த்து நெரிச‌லும் இல்லை
பொலிஸ்கார‌னுக்கு ல‌ஞ்ச‌ம் கொடுக்க‌வும்
தேவையில்லை
சாலைவிதிக‌ளும் எம‌க்கில்லை
சாகும் விப‌த்துக்க‌ளும்
அதிக‌ம் இல்லை

ப‌ண‌க்கார‌ர்க‌ள் த‌ண்ணீரில் மித‌ப்பார்க‌ள்
நாங்க‌ளும் த‌ண்ணீரில் மித‌க்கிறோம்
குடிபோதையில் அவ‌ர்க‌ள்
த‌ள்ளாடுவார்க‌ள்
எங்க‌ள் ப‌ட‌கு தான் ஆடும்
நாங்க‌ள் ஆடுவ‌து இல்லை

இறைவ‌ன்
ஒரு க‌த‌வை மூடினால்
இன்னொரு ஜ‌ன்ன‌லைத் திற‌ப்பான்
இது உண்மை தான்
த‌ரை எங்க‌ளை ஏற்றுக்கொள்ளா விட்ட்டாலும்
ந‌தி எங்க‌ளை அணைத்துக் கொண்ட‌து