Author Topic: ~ ஆரோக்கியம் தரும் கம்பு கூழ் ~  (Read 93 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218486
  • Total likes: 23133
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஆரோக்கியம் தரும் கம்பு கூழ்



தேவையான பொருட்கள்:

கம்பு மாவு – 1 கப்
சாதம் ஊற வைத்த தண்ணீர் – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 5
பச்சை மிளகாய் – 1
மோர் – 1 கப்
சாதம் – 1 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் சாதம் ஊற வைத்த நீரில் கம்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கரைத்து, 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்ரை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கம்பு நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
* அப்படி கிளறும் போது கலவையானது களி போன்று வரும் போது, அதனை இறக்கி வேறு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.
* இறுதியில் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மற்றம் சாதம் சேர்த்து நன்கு கரைத்தால், கம்பு கூழ் ரெடி!!!
* இதனை மண் பாத்திரத்தில் கரைத்து குடித்தால், சுவை அருமையாக இருக்கும்.