Author Topic: அதிசயம் ஆனால் உண்மை : இணைய இணைப்பில்லாதபோது மாத்திரம் இயங்கும் 'ரஜினி' இணையத்தளம  (Read 544 times)

Offline RemO


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தின் பெயரில் புதிய இணையத்தளமொன்றை உருவாக்கியுள்ளார். இது சாதாரண இணையத்தளம் அல்ல, இணைய இணைப்பு இல்லாதநிலையில் இயங்கும் உலகின் முதலாவது இணையத்தளம் இதுவாகும்.

'ரஜினி சக்தியில்'; இந்த இணையத்தளம் இயங்குகிறது என்கிறார் அதன் வடிவமைப்பாளர்.

allaboutrajni.com
என இந்த இணையத்தளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இணையத்தளப் பக்கத்திற்கு சென்றபின் அதன் உள்ளே செல்வதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. நமது கணினியுடனான இணைய இணைப்பை அகற்றிவிடுவதுதான் அது.

இணைய இணைப்பை நீக்கியபின் வேறெந்த இணையத்தளங்களையும்   நாம் பார்வையிட முடியாது. ஆனால் ரஜினியின் இந்த இணையத்தளத்தை மாத்திரம் பார்வையிடலாம்.

ஆங்கில மொழிமூலமான இந்த இணையத்தளத்தில் ரஜினிகாந்த் குறித்த குறிப்புகள் வேடிக்கை தகவல்கள், (நம்பமுடியாத கற்பனைக் கதைகளும்)   முதலானவை உண்டு. Desimartini.com எனும் இணையத்தளத்தின் ஓர் அங்கமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தில் உலாவிக் கொண்டிருக்கும்போது வேறு தேவைகளுக்காக நாம் இணைய இணைப்பு மீண்டும் ஏற்படுத்தினால் இந்த ரஜினி இணையத்தளம் உடனே இயங்காமல் விட்டுவிடும். 'ஐயோ, இது எதிர்பாராதது. தொடர்ந்தும் உலாவுவதற்கு இணைய இணைப்பை அகற்றவும்' என அறிவுறுத்தல் வருகிறது.

வேறு யாராலும் செய்ய முடியாது சாகசங்களை ரஜினிகாந்த் செய்யக்கூடியவர் என்பதால் அவரின் பெயரில் முற்றிலும் வித்தியாசனமா இணையத்தளமொன்றை வடிவமைக்கத் தீர்மானித்தோம். அதனால் இணைய இணைப்பில்லாமல் இயங்கும் இந்த இணையத்தளத்தை உருவாக்கினோம் என இதனை வடிவமைத்த குர்பாக்ஸ் சிங் கூறியுள்ளார்.

Offline Yousuf

Quote
வேறு யாராலும் செய்ய முடியாது சாகசங்களை ரஜினிகாந்த் செய்யக்கூடியவர் என்பதால் அவரின் பெயரில் முற்றிலும் வித்தியாசனமா இணையத்தளமொன்றை வடிவமைக்கத் தீர்மானித்தோம். அதனால் இணைய இணைப்பில்லாமல் இயங்கும் இந்த இணையத்தளத்தை உருவாக்கினோம் என இதனை வடிவமைத்த குர்பாக்ஸ் சிங் கூறியுள்ளார்.

வேறு யாரும் செய்யாத எந்த சாதனையை இவர் செய்தார் என்று தெரிந்து கொள்ளலாமா ரெமோ?

ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொது குரல் கொடுக்காதவர்.

முல்லை பெரியாறு ஆணை பிரச்சனையில் வாய் மூடி மௌனம் சாதித்தவர்.

காவிரி பிரச்சனையில் வாய் திறக்காதவர்.

இப்படி தமிழர்களுக்கு எதிராக இவர் செய்த இந்த சாதனைகளைத்தான் யாராலும் செய்ய முடியாத சாதனைகள் என்று குறிப்பிடுகிறார்கள் போல!