என்னாங்கடா போதிக்கிறீங்க?
எங்களைத்தான் இம்சிக்கிறீங்க
சின்னஞ் சிறுசு கூட
சிலம்பாட்டம் போடுது
அண்ணன் தம்பிக்குள்ளே
அடிதடிகள் ஆடுது!
"வாழ்க்கை என்னும் கட்டம்
இங்கே இருக்குமிடம்
வழக்காடும் சட்டம்",
என்ற வட்டத்துக்குள்ளே
புகுந்து கொண்டு
பொல்லா ஆட்டம் போடுது
பொழுது பூராம் வேகுது!
நிம்மதியில்லா புழுக்கத்துக்கு விசிறி எங்கே
இருக்கு ? நீ, நீதி கேட்டுப்
போனாலும் தர்மம் எங்கே இருக்கு ?
இந்த லட்சணத்தில் (என்னாங்கடா)
கல்விக் கடவுள் லெட்சுமியாச்சு
காசு இருப்பவன் சாராயம்
விற்றாலும் கல்வி வள்ளல் ஆச்சு
பொய் சொல்லிகள் புறம்போக்குத் தம்பிகள்
பாராளுமன்றத்திலும் மந்திரிகள்
முகமூடியில் நாடாள வந்தாச்சு
போலீஸ்காரர் வேடத்திலே
பத்து கேசு உள்ளவன்
பலமில்லாதவனைப் பிடிச்சுக்
கொண்டு போறான்
அதை தடுக்க வரும் மனிதனைத்தான்
கொன்று போட்டு தாதாவாக வாறான்
அரசாங்கமே பொய் சொல்லுது
அணைக் கட்டு விசயத்திலே
அப்புறம் இராவணன் சீதையைத்
தூக்கிப் போறதா குற்றம் ?
இந்த இலட்சணத்திலே (என்னாங்கடா)
கட்டுரையை கவிதை என்று
சொல்லுற புலவர்களை
மிதிக்காம விட்டு
அவர் சொன்ன கட்டுரைக்கு
இலக்கணக் குறிப்பு எழுதுறான்
இங்கே சில பேர் மானங் கெட்டு
மொத்த சமூகமும் போச்சு
புத்தி கெட்டு
இதிலே நாங்க மட்டும்
கேட்கணுமா புத்திமதி எட்டு ( என்னாங்கடா )