Author Topic: பெண்கள் இல்லை என்றால் அகிலத்தில் ஜனனம் பொய்த்திருக்கும்...  (Read 74 times)

Offline MysteRy



எல்லா உயிரிக்கும் முதல் ஸ்பரிசம் பாசம். உறவும் பெண்ணே ஆகும்.

பெண்ணின் அன்பு கருவோடு முளைத்த சுயம்புவாகும்...

ஐந்தறிவு ஜீவன்களும் பெண்மைக்கே  முதலிடம் தரும்...!!!

அறிவியல் தொழில்நுட்பம் ஆணைப் பெண்ணாக்கலாம்...

கருவுறச் செய்யலாம்... மகப்பேறில் வெற்றியும் காணலாம்...

ஆணில் பெண்மை உள்ளம் காணச் செய்வது கடினம்...

அது ஒரு வேலையாகவும் கடமையாகவுமே நிகழும்...!!!

தாய்மையில் ஆணின் பங்களிப்பு
தீபமேற்ற உதவும் சிறு தீக்குச்சியைப் போன்றதுதான்...

தீக்குச்சி தீபம் இரண்டிலும் வருவது தீதான்...

இயல்பிலே வேறுபடுவது தவிர்க்க முடியாததுதான்...!!!

வத்திக்குச்சி மின்னலென‌ எரிந்து சாம்பலாகும்...

தீபம் நின்று நிதானமாக ஒளி கொடுக்கும்...!!!

அங்கொன்றும் இங்கொன்றும் விதிவிளக்குகள் இருக்கலாம்...

இருந்தாலும் பெண்ணுக்கு நிகர் வேறொன்றும் இல்லை எனலாம் ...!!!

பெண்மையை போற்றுங்கள்
சிரம் தாழ்த்தி வணங்குங்கள்....

குதுகலமூட்டி  மகிழ்த்துங்கள்.
பெண்மையை அன்பெனும் அரியனையில் ஏற்றுங்கள்...!!!