அன்பு சரித்திரம் படைக்க வந்த அனோத்
எங்கள் ராஜ்யத்தின் எஜமான் இவன்
உடன் பிறவா உயிரானவன்
அன்பு செலுத்தும் அன்னையாய்
அரவணைக்கும் தந்தையாய்
வழிநடத்தும் அண்ணனாய்
விளையாட என் தம்பியாய்...
நாம் இன்றுவரை கை கோர்த்ததுமில்லை
கால் கடுக்க நடந்ததுமில்லை..
அக்காவாய் உன்னை ஒருபோதும் அணைக்கவில்லை
நேரில் உன் முகம் கண்டதில்லை
ஆயிரம் சொந்தம் இருந்தாலும் விவரம் தெரிந்த நாள் முதல்
விலையில்லா சொந்தமாம்
தம்பி எனும் உறவுமுறை
இல்லையே என்று என் விழிகள் வியர்க்காத நாளில்லை
என் எண்ணம் ஈடேற
ஏக்கம் நிறைவேற
இறைவன் கொடுத்த வரமாய்
குறுகிய காலத்தில் குடியேறினாய்
என் குட்டி இதயத்தில்
சேட்டைகளை பல செய்யும் அரசனாய்..
என் மனக்கவலைகளை மறைய வைக்கும் மந்திரவாதியாய்..
மனதை கொள்ளை கொள்ளும் கொள்ளையனாய்..
தம்பியாய் அண்ணனாய் மட்டுமின்றி
நண்பனாகவும் கிடைத்தாய்...
பொக்கிஷமாய் வந்த உன்னை
பொத்தி வைப்பேன் என் பாசத்தால்
நேரில் காணும் நாளுக்காய்
காத்திருக்கிறேன் கனவுகள் பல சுமந்து
கலையாத கல்வியும்
கபடற்ற நட்பும்
குன்றாத இளமையும்
குறையாத வயதும்
சலியாத மனதும்
நோயற்ற உடலும்
துளியும் குறையாத சிரிப்பும்
துன்பமில்லா வாழ்வும் வாழ
மனமுகந்து வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல தம்பி....