Author Topic: 🌹நேசம் எனும் சுவாசம்🌹  (Read 1310 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 220
  • Total likes: 526
  • Total likes: 526
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
வெறுப்பும், க்ரோதமும் நிறைந்த இவ்வுலகில், அன்புகொண்டு அழைப்பதன் பெயர் நேசம்..

நேரில் கண்டவர் யாரென்று அறியாதிருப்பினும்,
அவர் நலம் நாட நினைப்பது நேசம்.

இழைப்பார இடம் தேடும் நிலையில், நெஞ்சம். நிலைபெற துணை நிற்பது நேசம்.

ஆதாயம் தேடி அலையும் மக்களிடையே,
எதிர்பார்ப்பின்றி துணைநிற்பது
நேசம்.

நேசம் அது நிலைத்துவிட்டால்,  நினைவுகள்
அது நிலைபெற்றுவிடும்.
நினைவுகள் அது நிலைத்துவிட்டால்,
உறவுகள் அது உறுதி பெரும்.

உறவுகளின் உள்ளம்தனை உயிர் உள்ளவரை நேசி, உள்ளதால் இணைந்த உறவுகள் தனை
உயிர் மூச்சென சுவாசி.....

தொலைவில் இருப்பினும், துணையாய் இருப்பவன் நேசகன்... .....

என்றும் என் உறவுகளை நினைக்க மறவா உறவாளன்.
MN- AARONN........... (Im the King of my soul)...