வணக்கம் மக்களே..
புதுசா ஒரு song try பண்ணிருக்கேன் கேட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
நன்றி..
பல்லவிவெண்மதி போலொரு பெண்ணொருத்தி
எந்தன் நெஞ்சத் துடிப்பையும் தான் நிறுத்தி
கண்ணு ரெண்டும் அந்த மின்னலை போல்
என சுண்டி இழுக்குற செம்பருத்தி
பெண்ணாக பிறந்த பூ மகளே
பேர சொன்னாலே தித்திக்கும் தேன்குழலே
அத்தி பழம் போல உன் செகப்பே
என்ன சொக்கத்தான் வச்சிடும் பூஞ்சிரிப்பே
கண்ணோடு உன்னத்தான் வச்சிருப்பேன்
நானும் காலம் முழுவதும் காதலிப்பேன்
நெஞ்சோடு என்னத்தான் தச்சவளே
அடியே நிழலாக உனக்கென்ன வச்சவளே
சரணம்பாவி மக நீயும் என பாத்து சிரிச்சிட வானம்
பக்கம் வந்து போக அது கூட பறக்குறேன் நானும்
சாதி சனம் எல்லாம் என சுத்தி இருக்கிற போதும்
உன்னை மட்டும்.தானே என் கண்கள் இரண்டுமே தேடும்
மல்லிகை பூ வாசம் போலத்தான் உன் பேச்சும்
வெக்கத்தில் நீ நின்னா உங்கண்ணு தான் பேசும்...
இந்த பாடலை ஆடியோ கேட்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்