Author Topic: கும்மியடித்த பெண்கள் இப்போது தண்ணியடிக்கும் கொடூரம்!  (Read 1523 times)

Offline Yousuf

கும்மியடி பெண்ணே கும்மியடி! கொளவை பாட்டுக்கு கும்மியடி!!.. இது அந்தக்காலம்... தண்ணியடி பெண்ணே தண்ணியடி!. டிஸ்கோதே பாட்டுக்கு தண்ணியடி!!..இது இந்தக்காலம். நம் பெண்கள் கும்மியடிகின்றார்களோ இல்லையோ நன்றாக தன்னியடிகின்றார்கள்.! குடித்துவிட்டு தியேட்டரிலும் ரோட்டிலும் பெண்கள் கலாட்டா செய்து வரும் கொடுமை தற்போது அதிகரித்துள்ளது. காரணம் ஃபேஷன். அதுமட்டுமா காரணம்? இல்லை! இல்லவே இல்லை!! பின் என்ன என்று கேட்கின்றீர்களா? வாங்கள் ஆராய்வோம்.



சிங்கம் சிங்கிளாதான் தண்ணியடிக்கும்[/color]


தமிழகத்தில் மென்பொருள் உற்பத்தித்துறை கோலோச்ச ஆரம்பித்தபோதே இந்த தண்ணி கலாச்சாரமும் மிக வேகமாக ஆன் பெண் என்று பாகுபாடின்றி பரவ ஆரம்பித்துவிட்டது. காரணம் இவர்களுக்கு மேலைநாட்டு பழக்க வழக்கங்களின் மேல் உள்ள மோகம். இரவு நேரங்களில் மட்டும் இல்லாமல் இப்போது பகல் நேரத்தில் கூட ஆடம்பர ஹோட்டல்களில் சென்று தண்ணி அடிக்கும் கலாசாரம் பெருகிவருகின்றது. சின்னத்திரை மூலம் சீரியல்கள் நம் வீடுகளை ஆக்கிரமித்துவிட்டது. இதில் வரும் வில்லிகள் சர்வ சாதாரணமாக தண்ணி அடிக்கும், புகை பிடிக்கும் காட்சியை ஒளிபரப்பி வருகின்றார்கள். இதை பார்க்கும் நம் பெண்களும் இந்த பழக்கத்திற்கு ஆட்கொண்டு வருவதுதான் அபாயத்தின் உச்சகட்டம். இவ்வாறு தண்ணி பழக்கத்திற்கு ஆட்கொண்ட பெண்கள் தன் கற்பத்தில் வளரும் குழந்தைக்கும் மறைமுகமாக ஆல்கஹால் எனும் போதையை தன் இரத்தம் மூலம் கொடுக்கின்றாள். இதில் கணவனும் குடிகாரனனாக இருந்தால் பிறக்கும் குழந்தையின் நிலை என்ன வென்று நாம் யூகித்து விடலாம். வீட்டில் பிள்ளைகள் இருக்கும் போது குடி, மது பழக்கத்தை பெற்றோர்கள் செய்வார்களேயானால் பின் குழந்தைக்கு இது தீய பழக்கம் என்றே தெரிய வாய்பில்லை!


பண்ணிகள் தான் கூட்டமா தண்ணியடிக்கும்.

எங்கேயோ நடக்கின்றது நமக்கு என்ன? குறிப்பாக பெண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுவிர்களேயானால் நீங்கள் மறைமுகமாக வழிவிடுகின்றீர்கள். பண்ணி காய்ச்சளைவிட இந்த தண்ணி காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. உஷார்!. நம் பெண்களும் மேல் கல்வி என்று படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் சூழலில் இதுவெல்லாம் மிக சாத்தியம். விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் நாளடைவில் விட முடியாத கெட்ட பழக்கமாக மாறி குடும்ப சூழ்நிலைக்கே ஆப்பு வைக்கும். மது அருந்தும் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட பெண்களுக்கு ஏற்படும் தீமை மிக அதிகம்! அவர்கள் போதையின் உச்சத்தில் இருக்கும் நிலையிலே பெரும்பாலான கற்பழிப்புகள் நடைபெறுகின்றன. போதை தெளிந்தபின் இதற்கு காரணம் யார் என்று கூட தெரிய, சொல்ல கூட முடியாத நிலை..



பண்ணை வீட்டில் நள்ளிரவில் நடனத்துடன் நடந்த மது விருந்தில் பங்கு கொண்ட பெண்கள் உள்பட பல பேர் கைது என்ற செய்தியை நீங்கள் நாளிதழிலும், தொலைகாட்சியிலும் கண்டு இருப்பீர்கள். இளைய தலைமுறைக்கு மது, புகை ஒரு தவறு என்றே தோன்றவில்லை. வெளிநாட்டில் தானே நடக்கின்றது என்று அமைதி காத்தோம். இன்று மெல்ல வடநாட்டின் பக்கம் நுழைந்து கடைகோடி கிராமம் வரை சென்று 50, 100 என்று பொருளீட்டும் கிராம பெண்கள் கூட இன்று தாகத்திற்கு குடிநீர் குடிப்பது போல் இன்று ரோட்டோரம் மது அருந்தும் நிலைக்கு வந்தாகிவிட்டது. உபயம்: அரசியல் கட்சிகளின் மாநாடு, கூட்டம் போன்றவற்றிக்கு அழைத்து செல்லப் படுபவர்களுக்கு இதை இலவசமாக வழங்கி அவர்களை அடிமைப்படுதியக் கொடுமை!


இப்போது தமிழகத்தில் டீக்கடையை விட டாஸ்மார்க் கடைகள் தான் அதிகம். இந்த சுதந்திர தினத்தன்று திருவாளர் திருக்குவளை கருணாநிதி பூரண மதுவிலக்கு அறிவிப்பார் என்று அணைத்து பத்திரிக்கைகள், அரசியல் வாதிகள் ஆருடம் கூறினார்கள். அவரும் கேள்வி பதில் பாணியில் இதை சூசகமாக தெரிவித்திருந்தார். தேர்தல் நெருங்கி வருகின்ற காரணத்தினால் இந்த அறிவிப்பு வரும் என கணித்தார்கள். ஆனால் திருக்குவளை தீயசக்தி பூரண மதுவிலகிற்கு பதில் டாஸ்மார்க் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியும் ஊக்கத்தொகையை கூட்டியும் அறிவிப்பு செய்து என்னை அன்னாவினாலே எம்.ஜி.ஆராலே திருத்த முடியவில்லை!. பின் தன்னால் நாணே எப்படி திருந்துவேன் என்று நிருபித்துள்ளார்.

குடி குடியை கெடுக்கும்! குடிப்பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும். இதை நான் சொல்லவில்லை. ஊத்திக்கொடுக்கும் அரசாங்கம் தான்!! அடி செருப்பாலே ங்கொய்யாலே!!
இன்று வட்டி எப்படி சமூகத்தில் இரண்டற கலந்துவிட்டதோ அதைப்போல இந்த குடியையும் நியாயப்படுத்துவதற்கு முன் ஒரு புரட்சி ஏற்படுவது காலத்தின் கட்டாயம்!


நம்பிக்கை கொண்டோரே! மதுமானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் அடங்கும். எனவே நீங்கள் இவற்றை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி அடைவீர்கள். (திருக்குரான்: 5:90)

அறியாமை வெளிபடுவதும், கல்வி குறைந்து போவதும், விபசாரம் வெளிபடையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும் ஐம்பது பெண்களுக்கு ஒரே ஓர் ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவிற்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) ஹதீஸ் என் 5577 புஹாரி)
« Last Edit: August 01, 2011, 02:12:58 PM by Yousuf »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 507
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
kannu vaikathingapa... thani thaagama erukumkudikurangapola... vidunga... ;)