Author Topic: குழப்பமும் களைப்பும்.  (Read 3346 times)

Offline Anu

ஒர் இளவரன் முன் தேவதை தோன்றி, "விரும்பியதை கேள் தருகிறேன்..!" என்றது.

"கலைகள் யாவிலும் நான் சிறந்து விளங்க வேண்டும்..!" என்றான். தேவதை அப்படியே அருளி மறைந்தது. அழகு, செல்வம், அன்பான துணை என எல்லாம் இளவரசனுக்கு வாய்த்தன. ஒவியம், சிற்பம், இசை என எல்லாக் கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

ஒருநாள், அவனது அரண்மனைக்கு வந்திருந்த துறவியின் முன் அவன் மண்டியிட்டான். "இத்தனை இருந்தும் எனக்கு மனநிறைவு இல்லையே.., ஏன்..?" என்று கேட்டான்.

துறவி சொன்னார்.., "உன் இலக்கை நோக்கி, உனக்கான பாதையை நீ தேர்ந்தெடுத்து நடந்தால் போதும்.. பார்க்கும் அத்தனை பாதைகளிலும் நடக்க முயன்றால்.., குழப்பமும் களைப்பும்தான் மிஞ்சும்..!"