ஹாய் ஹாய் மாஸ்டர் ... உங்கள் இசைத் தென்றல் நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது ... திரை படம் பற்றிய தகவல்கள் அதில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் என்று மிகவும் இனிமையான தகவல்களோடு அலங்கரிக்கிறது நண்பர்கள் இணையதள வானொலியை ... தொடர்ந்தும் உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துகள் .
இந்த வாரம் இசையால் வெற்றி பெற்ற படங்கள் வரிசையில் நான் தெரிவு செய்துள்ள படம் கோகுலம் .... இந்த படத்தில் அர்ஜுன் , பானுப்ரிய , ஜெயராம் , சின்னி ஜெயந்த் இப்படி பலர் நடித்திருகின்றார்கள் ... இந்த படத்துக்கு எஸ் .ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார் . மிகவும் இனிமையான பிரபலமான பாடல்கள் இந்த படத்துக்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது ..
அம்மா அம்மா எனென்ன ஆனந்தம்
புது ரோஜா பூத்திருக்கு
அந்த வானம் எந்தன் கையில் சேரும்
நான் மேடை மீது பாடும் தென்றல் காத்து
பொன்மாலையில் ஒரு பூ பூத்தது
இப்படி பல பாடல்கள் இருந்த போதும் குறிப்பாக இரண்டு பாடல்கள் பேசபட்டது ... புல்லாங் குழலோடு போட்டியிட்டு பாடும் ஒரு பாடல் தெற்க்கே அடிக்குது காத்து எனும் பாடல் மிகவும் பிரபலமாய் பேசபட்ட பாடல் ... அதே படத்தில் நான் கேட்க இருக்கும் பாடல் கூட மிகவும் பிரபலமானது ... பி .சுசீலா , உன்னிமேனன் இருவராலும் பாடபட்ட பாடல் ... இன்று கேட்டாலும் தனியானதொரு சுகத்தை தரக்கூடிய பாடல் .. செவந்தி பூ எடுத்தேன் அதில் உன் முகம் பார்த்திருந்தேன் எனும் பாடல் ... இதை இந்தவாரம் இசைத்தென்றல் நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற திரைப்பட பாடல் தெரிவாக தேர்வு செய்துள்ளேன் ... இதை நண்பர்கள் இணையதள வானொலி மூலம் நண்பர்களுடன் இணைந்து கேட்டு ரசிக்க காத்திருகின்றேன் ..
நன்றிகள்