Author Topic: நல்லா வருவேப்பா!!!  (Read 768 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 30
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
நல்லா வருவேப்பா!!!
« on: September 21, 2012, 01:29:01 PM »
"சேலம் நகரில் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யவும், போக்குவரத்து விதி களை மீறுபவர்களை அறிவுறுத்தி, எச்சரித்து அனுப்பவும் சேலம் போக்குவரத்துக் காவல் துறை புது யுக்தியைக் கையாள்கிறது.
புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, சாரதா காலேஜ், ஜங்ஷன் உள்ளிட்ட நெரிசல் அதிகம் உள்ள பிரதான சிக்னல்களில் லவுட் ஸ்பீக்கர்களைப் பொருத்தி, போலீஸார் அறிவுரைகள் ப்ளஸ் அர்ச்சனைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்டோம்.

புதிய பேருந்து நிலையம் சிக்னல் காலை 10 மணி

சிக்னலில் நிற்கும் கல்லூரி மாண வன் ஒருவன் பச்சை விளக்கு எரிந்த பின்பும் கவனிக்காமல் பில்லியனில் அமர்ந்து இருக்கும் பெண்ணுடன் கடலை போட்டுக்கொண்டு இருக்கிறான். பின்னால் இருக்கும் வாகனங்கள் எரிச்சலாக ஹாரன் அடித்ததுகூட இருவருக்கும் தெரியவில்லை.

''ஹலோ, யெல்லோ கலர் யமஹா, நீ கான்ஸ்டபிள் ............... பையன்தானே? ஏண்டா! உங்க அப்பா கடன் வாங்கி உனக்கு பைக் வாங்கிக் கொடுத்தா, ஃபிகரைப் பின்னாடி வெச்சிக்கிட்டு ஜொள்ளுவிட்டுட்டு இருக்க. வண்டி வாங்கிக்கொடுத்த உங்க அப்பா, அம்மாவை இப்படி ஒரு நாளாவது வண்டியில உக்காரவெச்சுக் கூட்டிட்டுப் போயிருக்கியா? உங்க அப்பா சாயந்திரம் டூட்டிக்கு வரட்டும் சொல்றேன்'' என மைக்கில் குரல் அலற... அக்கம்பக்கம் பார்த்துப் பதறி, சிதறி வண்டி யைக் கிளப்புகிறான் அந்த சுள்ளான்.

நான்கு ரோடு சிக்னல், காலை 10.30 மணி

சிவப்பு விளக்கைக் கவனிக்காமல் எல்லைக் கோட்டைத் தாண்டி, பாதி தூரம் வந்து திடீர் பிரேக் அடித்து நிற்கிறது ஒரு பைக். ''மிஸ்டர், ஹோண்டா யுனிவர்செல்... பிளாக் டி-ஷர்ட், ஹெட் போனைக் கழட்டிட்டு வண்டியை ஓட்டுங்க. பாட்டு கேட்டுட்டே பரலோகம் போயிடாதீங்க. ஆமா, முன் பக்கம் நம்பர் பிளேட்டையே காணோம். வண்டி வாங்கினதா... ஆட்டையைப் போட்டதா? அடுத்த முறை முன் பக்கம் நம்பர் பிளேட் இல்லாம வண்டியைப் பார்த்தேன்... ஸ்பாட் ஃபைன்தான். சரி... சரி... சிக்னல் போட்டாச்சு கிளம்பு.''


சோனா கல்லூரி எதிரே சென்னை கேக்ஸ் வாசல் மாலை 6 மணி

பைக்கை 'நோ பார்க்கிங்’கில் நிறுத்திவிட்டு, ஹாயாகச் சென்று டீயும் தம்மும் அடிக்கிறான் மீசை முளைக்காத பொடியன் ஒருவன்.
''தம்பி, உன் வண்டியை மொபைல் ரெக்கவரி வேன் தூக்கிட்டுப் போறதுகூடத் தெரியாம இந்த ஊது ஊதுறயே... ரொம்ப நல்லா வருவேப்பா. சரி, மெதுவா டீயும் தம்மும் அடிச்சிட்டு, நேரா சூரமங்கலம் ஸ்டேஷன் வந்துரு. லைசென்ஸ் இருந்தா காட்டிட்டு, 350 ரூபா ஃபைனையும் கட்டிட்டு வண்டியை எடுத்துட்டுப் போ. லைசென்ஸ் இல்லைன்னா உங்க அப்பாவைக் கூட்டிட்டு வா. அப்புறம் உக்காந்து பேசிக்கலாம்.''

திருவள்ளுவர் சிலை சிக்னல் மாலை 7 மணி

சிவப்பு சிக்னலை மதியாமல் டி.வி.எஸ் - 50 ஒன்றில் கணவன்- மனைவி, முன்னால் இரண்டு குழந்தைகள், அப்பா - அம்மாவுக்கு நடுவே ஒன்று, மனைவியின் கையில் ஒரு கைக்குழந்தை என ஒரு பெரிய குடும்பம். திக்கித் திணறி விரைகிறது வண்டி. அதன் சைலன்ஸரில் இருந்து குபுகுபு எனக் கரும்புகை. 'யோவ், ஒண்ணு குடும்பக் கட்டுப்பாடு பண்ணு. இல்ல, வண்டியை மாத்து. நீ பிரசவத்துக்குச் செஞ்ச செலவுல ஒரு காரே வாங்கி இருக்கலாம்’ என்று சொல்ல... தன் தலையில் அடித்துக்கொண்டு, கணவனின் தலையில் 'ணங்’ எனக் கொட்டி, திட்டியபடி செல்கிறார் மனைவி!


நன்றி விகடன்
அன்புடன் ஆதி