ஒருவேளை சென்சார் போர்டு இல்லாமல் இருந்திருந்தால், தமிழிலும் நிறைய உலகப்படங்கள் வந்திருக்கும்...
தலைமைசெயலகம் மருத்துவமனையாவதை எதிர்க்கவில்லை - முக #எதிர்த்தா அந்த ஆஸ்பத்திரில மொத அட்மிஷன் நமக்குத்தான்...
கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்படும்போதே, மனம் அதிகம் ஆர்வம காட்டுகிறது மீறினால் என்ன ஆகும் என்பதை அறிவதில்!!
பெண்களுக்கு பொறுக்கி பசங்களை பிடிக்காத மாதிரியே, ரொம்ப ரொம்ப நல்ல பசங்களையும் பிடிக்கறதில்லை. #அவதானிப்பு
சவப்பெட்டி என்பது அது செய்யப்பட்ட மரத்திற்கும் சேர்த்து சேர்த்து என கொள்க!
என்னதான் முயன்றாலும் கனவுகளில் நல்லவனாக இருக்க முடிவதில்லை.
ஆரம்பப் பள்ளி நாட்களில் அதிகம் திட்டு வாங்கியவர்களில் முக்கியமானவர் ”திருவள்ளுவர்”
”நல்லா பாடுற பொண்ணா இருக்கனும்” என கேட்பவர் கல்யாணம் பண்ண போறாரா கச்சேரி நடத்த போறாரா..!
கொஞ்சம் சத்தமாக பாட்டு கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு பாடும்போது தான் பிரச்சனை துவங்கும்...
உருவாகும் வாய்ப்பை விட உருவாக்கப்படுவதற்க்கு வலிமை அதிகம்.
மனைவி பாராட்டுவதும் கிண்டல் செய்வதும் உங்கள் செயலைப்பொறுத்து அல்ல. அவளின் மூடை பொறுத்து.
வீடு வாங்குவதற்குதான் வங்கி கடன் கொடுக்கிறது. சொந்த வீடு என்று புரிந்துகொள்கிறவன் முட்டாள்.
ஓர் இரவு , ஒரு இளம் பெண்ணுடன் ,இரவு முழுதும் ஒரே அறையில் தனியாக ,.தொட முயற்ச்சிக்ககூட இல்லை.# பகலில் ?
என்னை தனியே விடாமல் எப்பொழுதும் உடனிருக்கிறது என் தனிமை...
ரகசியம் என்பது மனதிலிருந்து நாவுக்கு பயணித்தவுடன் பெயர் மாற்றம் பெருகிறது # அம்பலம்
இப்போ என் முன்னாடி இருக்கற மிகப்பெரும் பிரச்சனை இட்லிக்கு தொட்டுக்க சட்னியா? இட்லிப்பொடியாங்கறதுதான்
கோபத்தின் போதே மிக நிதானமான வார்த்தைகளின் தேவை அதிகரிக்கிறது
'அறிவு'ரைக்கும் அதிலிருக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இருப்பதில்லை!
அது என்னவோ 'உதவி தேவை' என்றால் பலருக்கு 'உபதேசம் தேவை' என்று காதில் விழும் போல.
வாழ்வில் பல முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டு காரணங்களுக்காகக் காத்திருக்கின்றன.
எண்ணற்றோர் ஏமாந்தபின்னும் காதல் காதலிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது
இந்தியாவில் எழுதப்படாத விதிகளில் ஒன்று, பெண்கள் சத்தமாக அழலாம், சத்தமாக சிரிக்கத்தான் கூடாது.!!!
நிர்வாண துறவிகளாய் குதித்தோடும் குழந்தைகள்; மழலைகள் வாழும் வீட்டில் நித்தமும் கும்பமேளாதான்.!!!
தாயை இழந்த பிஞ்சுக் குழந்தையின் பிறந்த நேரம்தான் அதற்கு காரணம்னு சொல்லி வளரும்போதே அந்த மனதை கருக்கிடாம இருக்கணும்
இத்தனை வருடம் காத்திருந்து பெற்ற குழந்தையை அள்ளிக் கொஞ்ச முடியாமல் மரணித்த அந்த தாயின் வலியை நினைத்தால்...
கல்யாணத்தைப் பற்றி கவலைப்படாமல் அரங்கேறுகின்றன இன்றைய காதல்கள்!
நாம் தவறே புரியவில்லை என நினைக்கிறோம்..... உண்மையில் செய்தது 'தவறு' என்பதுதான் புரிவதில்லை பல நேரங்களில்!
ஆணின் புன்னகையை விட பெண்ணின் புன்னகை மிக அழகு, ஆனால் பெண்ணின் அழுகையை விட ஆணின் ஒரு துளி கண்ணீர் வலி நிறைந்தது...
எந்த வயதிலும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று புதிதாய் இருந்து கொண்டுதானிருக்கிறது...
நான் துயில தாலாட்டும், என் துயில் கலைக்கும் அலாரமும் உன் அ(கு)றுஞ்செய்திதான்!
வருங்காலத்துல என் குழந்தை சொல்லும், "அப்பா கைப்பக்குவமே தனி.. சாம்பார் செம்ம டேஸ்ட்"!
"இஞ்சினியரிங் படி தம்பி, உனக்கு பிரைட் ஃபியூச்சர் இருக்கு"ன்னு சொன்னவன் மட்டும் என் கைல கிடச்சான்.... # நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்?
உனக்கான சமையலின் போது தேவையான பொருட்களின் வரிசையில் முதலாவதாக நான் உபயோகிப்பது அன்பு!
சட்டி சுட்டதடா.. கை விட்டதடா... # குக்கர் சுட்டுடுச்சு...
அடுத்த மாதம் திருமணம் செய்யப்போகும் அறைத்தோழன், தினமும் இரவு ஒரு மணி வரை "கண்விழித்து" டி.வி பார்க்கிறான் # கடுப்பு
பால்யத்தை பலி கொள்ளும் இளமை..சரணடைகிறது முதுமையின் பாதங்களில் # காலம்
கடற்கரை எங்கும் காதல் கறை!