Author Topic: பட்டிணிச்சாவு...!  (Read 714 times)

Offline Yousuf

பட்டிணிச்சாவு...!
« on: September 05, 2011, 04:54:52 PM »
அந்தோ பரிதாபம்
மனிதம் ஒன்றின் மரணமிது
கொடுமையிலும் கொடுமையிது
பட்டிணியால் மரணமிது

எண்சாண் வைற்றுக்கு
எள்ளளவேனும் உணவிருந்தால்
இச்சாவு இருந்திருக்குமா?
ஏன் உலகம் தூங்குகிறது

செல்வந்தனின் கஞ்சத்தனம்
ஊதாரியின் வீண்விரயம்
பெருமையாளனின் கொடை
அத்தனையும் உயிர்குடித்திருக்கிறது

உணவுக்காக கொள்ளை
உணவுக்காக கடத்தல்
உணவுக்காக கொலை
அத்தனை கொடுமைகளும் உணவுக்காக

அளவோடு சமைத்து உண்டு
உணர்வோடு பகிர்ந்து
மாற்றானின் பசி தீர்த்திடு மனிதா
உன்னாலும் ஓர் உயிர் வாழும்...