Author Topic: வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்!!!  (Read 457 times)

Offline kanmani

அனைவருக்குமே பெண்களின் சருமம் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் விரைவில் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும் என்பது தெரியும். அதிலும் பெண்கள் 40 வளதை அடைந்தால் போதும், முகத்தில் சுருக்கங்கள் ஆங்காங்கு காணப்படும். அதுமட்டுமின்றி, முகத்தில் ஒருவித பழுப்பு நிறம் போன்று தோன்றும். அதே சமயம் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழந்து, முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி, பின் முகமே அசிங்கமாக இருக்கும். இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் இளமையாக இருக்கும் போது, நன்கு ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சருமத்தை பராமரித்து வருவர். ஆனால் திருமணமாகிவிட்டால், சிறிது நாட்கள் அந்த பராமரிப்பு குறைந்துவிடுவதால், முகத்தில் உள்ள பொலிவானது நீங்கி, பாட்டி போன்ற தோற்றம் வெளிப்படும்.

 இத்தகைய தோற்றம் ஆரம்பித்தப் பின்னரே, பலருக்கு அதனை போக்குவதற்கு அழகு நிலையம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் அவ்வாறு பணம் செலவழித்து அழகு நிலையம் செல்வதற்கு பதிலாக. வீட்டிலேயே ஒரு குட்டி அழகு நிலையத்தை ரெடி செய்து, சருமத்தை பராமரித்தால், சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் நீங்கி, இளமையோடு காணலாம். அதற்கு வேறு எந்த ஒரு விலைமதிப்புள்ள அழகுப் பொருட்களும் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம். இப்போது அந்த பொருட்கள் என்ன, அதனை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

அவகேடோ

அவகேடோவில் எண்ணெய் தன்மை அதிகம் இருக்கும். எனவே இந்த அவகேடோவை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும்.

விளக்கெண்ணெய்

 இது ஒரு பழங்கால முறை. அது விளக்கெண்ணெய் வீட்டில் இருந்தால், அதனை முகத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் நன்கு மென்மையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு ஒரு நேச்சுரல் ப்ளீச். வயதான தோற்றம் வந்தால், சருமத்தில் ஆங்காங்கு பழுப்பு நிறம் காணப்படும். ஆகவே உருளைக்கிழங்கை வைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்து வந்தால், அதனைப் போக்கலாம்.

கரும்பு சாறு

 கரும்பு சாறு சருமத்திற்கு மிகவும் சிறந்தது. எனவே மஞ்சள் தூளை கரும்பு சாறு ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி வர, முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம்.

அன்னாசி

அன்னாசியும் முதுமைத் தோற்றத்தை தடுக்கும் பொருட்களில் ஒன்று. அதற்கு அன்னாசியை முகத்தில் தடவி, சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

திராட்சை

 விதையில்லாத திராட்சையை அரைத்து, அதனை முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். முகத்தை கழுவியதும் முகத்தை துடைக்க வேண்டாம்.

கிளிசரின்

 இரவில் படுக்கும் போது, கிளிசரினை, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, காலையில் எழுந்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் ஒருவித பழுப்பு நிற புள்ளிகள் நீங்கி, சருமமும் மென்மையாக இருக்கும்.

தேன்

தேனைப் பற்றி சொல்லவே வேண்டாம். தேனை தினமும் முகத்தில் தடவி, ஊற வைத்து, கழுவி வந்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். அதிலும் இதனை மறக்காமல், கண்களைச் சுற்றி தடவ வேண்டும். இதனால் கருவளையம் நீங்கிவிடும்

எலுமிச்சை

எலுமிச்சை அனைத்து சருமத்தினருக்கும் மிகவும் சிறந்த ஒரு அழகுப் பொருள். அத்தகைய எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், முதுமைத் தோற்றம் நீங்குவதோடூ, ஆங்காங்கு காணப்படும் புள்ளிகளும் நீங்கும். மேலும் எலுமிச்சையை சருமத்திற்கு பயன்படுத்தியப் பின்னர், மாய்ச்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.