Author Topic: முள்ளங்கி சப்பாத்தி  (Read 549 times)

Offline kanmani

முள்ளங்கி சப்பாத்தி
« on: March 22, 2013, 09:44:14 AM »


    முள்ளங்கி - ஒன்று
    கோதுமை மாவு - ஒரு கப்
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - சிறிதளவு
    மல்லித்தழை - சிறிது

 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
   

முள்ளங்கியை தோல் சீவி துருவி, அதை அப்படியே ஒரு நிமிடம் வைக்கவும்.
   

பிறகு முள்ளங்கியை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்
   

கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய், முள்ளங்கி சாறு, சிறிது தண்ணீர் கலந்து மாவை பிசையவும்.
   

வாணலியில் எண்ணெய் விட்டு பிழிந்த முள்ளங்கி, கரம் மசாலா, சீரகத் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
   

நன்கு வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.
   

பிசைந்து வைத்துள்ள மாவை சற்று மொத்தமான சப்பாத்தியாக போட்டு, அதனுள் முள்ளங்கி மசாலாவை வைக்கவும்.
   

அதை அப்படியே மூடி உருட்டவும்.
   

உருட்டியதை மீண்டும் சப்பாத்தி போல போட்டுக் கொள்ளவும்.
   

தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அதில் சப்பாத்தியை போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
   

சுவையான முள்ளங்கி சப்பாத்தி தயார். முள்ளங்கி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல கொடுக்கலாம்.

 
முள்ளங்கி சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பசியைத் தூண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும்.