ஃப்ளோட்டிங் பொட்டட்டோதேவையான பொருட்கள்:-[/color]உருளைக்கிழங்கு (மீடியம் சைஸ்) - அரை கிலோ.[/color]
பச்சைப் பட்டாணி - 200 கிராம்உப்பு - தேவைக்கேற்பமைதா - 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் - பொரித்து எடுக்க.
கிரேவி செய்ய:-
தக்காளி - அரை கிலோஉப்பு - தேவைக்கேற்ப,காரப்பொடி - 1 டீஸ்பூன்சர்க்கரை - 1 சிட்டிகை.
மசாலா தயாரிக்க:-
வெங்காயம் - 3பச்சைமிளகாய் - 3இஞ்சி - 1 துண்டுகொத்தமல்லி - சிறிது
[/b][/color]
செய்முறை:-
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும், தக்காளிப் பழத்தைச் சூடான நீரில் போட்டு, தோலை உரித்து, மிக்ஸியில் அரைத்து தனியாக வைத்திருக்கவும்.உருளைக்கிழங்கை உப்பு போட்டு, பதமாக உடைந்துவிடாமல் வேகவிடவும், வெந்தவுடன் தோல் நீக்கவும், பட்டாணியை சிறிது உப்புப் போட்டு வேகவைக்கவும்.மைதாவை சிறிது நீர் சேர்த்து, பேஸ்ட்போல் ஆக்கவும். பிறகு உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதன் நடுவே உள்பக்கப் பகுதியை ஒரு ஸ்பூனால் தோண்டி, கிண்ணம் போல செய்துகொள்ளவும்.பின், துளை செய்த இடத்தில் வேகவைத்த பட்டாணியைக் கொஞ்சம் வைத்து அடைக்கவும். இரண்டு பாகங்களையும் கொஞ்சம் மைதா பேஸ்ட்டை எடுத்துத் தடவிப் பொருத்திவிடவும். அதேபோல், எல்லாக் கிழங்குகளையும் அடைத்து எடுத்துக் கொள்ளவும். ஸ்டஃப் செய்த கிழங்குகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.அரைத்து எடுத்த மசாலாவை, மிதமான தீயில் வதக்கவும், இதில் தக்காளி விழுதை சேர்க்கவும். அத்துடன் உப்பு, காரப்பொடி, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.இதில் பொரித்தெடுத்த உருளைக்கிழங்குகளைச் சேர்க்கவும். பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும். இது ஒரு சத்தான சைட் டிஷ். சப்பாத்தி, பூரி, பரோட்டாவுக்கு ஏற்றது.[/b][/color]