Author Topic: பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி  (Read 264 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

பேரிக்காய் - 1 1/2 கிலோ (தோலுரித்து நறுக்கியது) நாட்டுச்சர்க்கரை - 1 கப் வெள்ளை வினிகர் - 1 கப் பால்சமிக் வினிகர் - 4 டீஸ்பூன் வெங்காயம் - 1 கப் (நறுக்கியது) இஞ்சி - 1 இன்ச் (துருவியது) பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது) உலர் திராட்சை - 1/2 கப் கிராம்பு - 10 பட்டை - 1 இன்ச் (5-6) உப்பு - 2 டீஸ்பூன் தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பெரிய வாணலியில் வெள்ளை வினிகர் மற்றும் நாட்டுச்சர்க்கரையை போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 1 மணிநேரம் நன்கு கலவை கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்.


பின்பு அந்த கலவையை இறக்கி, மத்து கொண்டு மசிக்க வேண்டும்.

பிறகு அதனை ஒரு காற்று புகாத ஜாடியில் போட்டு, காற்றுபுகாதவாறு மூடி வைக்க வேண்டும்.