Author Topic: கொள்ளையடிக்கும் மருத்துவ ஸ்தாபனங்கள்  (Read 1135 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கொள்ளையடிக்கும் மருத்துவ ஸ்தாபனங்கள்


தேசப் பிதா என்றழைக்கப்படுகின்ற மகாத்மா காந்தியை நாம் மறக்கவே கூடாதுதான், ஆனால் இன்றைய உலகில் கடவுளையே கேலிசித்திரம் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், பிள்ளைகள் தங்களைப் பெற்ற பிதாக்களை மறந்துவிடுவது சகஜமாகிப் போய் பணம் பணம் என்றே மனம் இரவும் பகலும் ஓய்வு ஒழிச்சலின்றி அலைந்துக் கொண்டிருக்கின்ற கால கட்டத்தில் தேசப்பிதாவை எங்கே நினைவு வைத்துக் கொள்ள இயலும் என்பதை முன் கூட்டியே யோசித்த நமது முன்னோர்கள் பணப்பையை நெஞ்சில் சுமக்க முடிவு செய்து இதயமே இல்லாமல் போனாலும் சட்டைப்பை இல்லாமல் மனிதர்கள் வாழப்போவதில்லை என்பதை அறிந்து, அதனுள் வைத்து பாதுகாக்கும் பணத்திலாவது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் உருவத்தை அச்சடித்து வைத்தனர் போலும்.

ரூபாய் நோட்டுக்களிலும் நாணயங்களிலும் நாணயமே இல்லாதவர்களையும் நாகரீகத்தில் திணறிக்கொண்டிருப்பவர்களின் சட்டைபைகளின் உள்ளேயும் எப்போதும் காந்தி சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் நாம் உயிர் மூச்சைப் போல மதிக்கின்ற பணத்தின் மூலம் அவர் நம்மை பார்த்து கேலியாக சிரிப்பதை போலத்தான் நினைக்கத் தோன்றுகிறது. இடம்விட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கும் பணம், இரும்புப் பெட்டியினுள் கட்டுக்கட்டாய் 'வெள்ளை', 'கரு'ப்பில் அடைத்து வைக்கபட்டிருக்கும் ரூபாய் நோட்டுக்களிலும் அமெரிக்க டாலர்களில் காணும் பல முகங்கள், இவ்வாறு பணத்தின் மீது அச்சடிக்கபட்டிருக்கும் இவர்களைப் பற்றி யாரேனும் ஒரு சிலநிமிடமோ நொடியோ நினைப்பதுண்டா, கிடையவே கிடையாது. கையில் கிடைக்கும் பணம் யார் யாரிடம் எதற்காக கைமாருகிறதோ அதனுடன் சேர்ந்து அந்த அச்சடிக்கப்பட்ட படங்களும் கைமாருகிறதே,

பாவம் அவர் புகழ் இப்படியும் கேவலப்படுத்தபடுகிறதே, மேன்மைபடுத்துவதற்காகவே ரூபாய்களில் பெரியோரின் படம் அச்சடிக்கும் வழக்கம் ஏற்படுத்தபட்டிருக்கவேண்டும் ஆனால் அவற்றை உபயோகிப்பவர்களின் கைகளில் சிக்கி பலவித நாசமோசங்களுக்காவும் மோசக்காரர்களின் கைகளுக்கு இவர் படம் பணத்தின் உருவில் தரம் தாழ்ந்த செயல்களுக்கும் தரக்குறைவான காரியங்களுக்கும்உபயோகிக்கப்படுகிறதே, இதனால் இவர்கள் ஆன்மாக்கள் நிச்சயம் பெருமை படவாய்ப்பே இல்லை. மருத்துவர்களை தெய்வமாக எண்ணிய காலம் மாறி மருத்துவ ஸ்தாபனங்களில் பகல் கொள்ளை நடக்கிறதே, யாராவது ஏமாந்தால்போதும் என்று உடல்நலம் காண செல்பவரை பலியாடுகளாக்கும் மருத்துவக் கொள்ளைகள் நாடெங்கிலும் நடந்து வருகிறதே, வருமானவரி செலுத்தாத திருட்டுப்பணம் மருத்துவ உலகில் பலரின் உயிர் கொல்லியாக இருந்து வருகிறதே, அதில் உள்ள காந்தியின் புகைப்படம் எப்படி மேன்மையடைந்ததாக கருத முடியும்
                    

Offline RemO


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்