Author Topic: மீன்கள் இல்லாத கடல்........  (Read 3583 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 502
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மீன்கள் இல்லாத கடல்........
« on: December 09, 2011, 03:57:27 AM »
மீன்கள் இல்லாத கடல்........


கடல் அல்லது சமுத்திரம் என்ற ஒன்றை பார்க்கும் போது பிரமிப்பு ஏற்ப்படுவது இயற்க்கை தானே? இந்த மாதம் எட்டாம் தேதி கடல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதை அனுசரிக்கும் விதமாக மக்களுக்கு சமுத்திரத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை எழுப்புவதற்காக அதிகமாக கடலில் மீன் பிடிதலினால் கடலில் வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுவதைப் பற்றிய ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படிப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் அழிவினால் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல் உயிரினங்கள் அற்ற மீன்களற்ற நிலைமை ஏற்ப்பட போவதாக கண்டுபிடிக்கப்பட்டு சினிமாவின் மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

சுமார் ஐம்பத்து மில்லியன் சதுர கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பசிபிக் மகாசமுத்திரத்தில் உள்ள பதினேழு தீவுகளுக்கு bluefin டியுனா என்கிற ஒருவகை கடல்வாழ் மீன் வகையை அழிவிலிருந்து மீட்ப்பதற்காக, மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மீனற்ற சமுத்திரம் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, சமுத்திரம் என்பது மனிதர்களின் வாழ்வில் எத்தகைய முக்கிய இடம் பெறுகிறது என்பதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில் " ஒரே சமுத்திரம், ஒரே சீதோஷ்ணநிலை, ஒரே எதிர்காலம் " என்ற நோக்கம் கொண்டதாக இந்த வருடத்திய சமுத்திர நாள் துவக்கப்பட்டது.

The End of the line என்ற ஆங்கிலப் படம் ஒன்றும் வெளியிடப்பட்டது இதில் சமுத்திரம் என்பது மனிதனுக்கு உணவு தயாரிக்கும் ஒரு தொழிற்ச்சாலை கிடையாது, சமுத்திரமும் அதன் ஆதாரங்களும், கணக்கிலடங்காத அதன் சுற்றுப்புற சூழ்நிலையும் மனிதனுக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பதை இந்த சினிமாவை தயாரிக்க உதவிய புத்தக எழுத்தாளர் சார்லஸ் க்ளவோர் என்பவரின் சிந்தனைகளும் படமாக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடகாலமாக உலகின் பல இடங்களில் உள்ள சமுத்திரங்களிலும் பரம்பரை மீனவர்களிடமும் பல கடல் மற்றும் மீன், கடல் வாழ் உயிரினங்களை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளையும், சமுத்திர ஆராய்ச்சியாளர்களையும் அவர்களது நீண்ட ஆராய்ச்சிகளின் தொகுப்புகளையும் உள்ளடக்கிய ஒரு <!--[if !vml]--><!--[endif]-->திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டு முதன் முதலில் சமுத்திரத்தில் உள்ள மீன்கள் அதிக அளவில் உணவுக்காக <!--[if !vml]--><!--[endif]-->பிடிக்கப்பட்டு மீன் இனமே அழிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 75% வகையான மீன்கள் அழிந்துவிட்டதாக கூறும் சார்லஸ் இதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் வரும் தலை முறையினர் மீன்கள் என்ற உயிரினத்தை கண்களால் பார்க்க கூட முடியாத நிலை ஏற்ப்படும் அபாயம் இருப்பதாக சார்லஸ் க்ளோவர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார் இதை கொண்டு தான் the End of the line என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தின்று தீர்த்து விட்டோம் சமுத்திர உயிரினங்களை..........