Author Topic: திக்கெட்டும் கொட்டு முரசே..! பெண்கள் பற்றிய ஒரு பார்வை...  (Read 990 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 533
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
திக்கெட்டும் கொட்டு முரசே..! பெண்கள் பற்றிய ஒரு பார்வை...


பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் பார்வை எப்படி இருக்கிறது ? மேலும் நவீன யுகத்தில் பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களின் எல்லா வழிமுறைகளும் சரியானதுதானா? ஊடகங்களில் பெண்களின் நிலை என்ன? கழுகுக்கு தோன்றிய கேள்விகளுக்கு ஒரு பெண் பதிவர் பதிலளித்தால் அல்லது கட்டுரை சமைத்தால் சரியாக இருக்குமே என்று எண்ணிய போது நமது எண்ணத்தில் சட்டென்று வந்தவர் திருமதி. கெளசல்யா.....


கட்டுரை என்றவுடன் அதுவும் விழிப்புனர்வு கட்டுரை என்றவுடன் சளைக்காமல் உடனே எழுதி கொடுத்த தோழி கெளசல்யாவுக்கு நன்றிகளை கூறியபடி கட்டுரைக்குள் போவோமா....



பெண்

இயற்கையில் நாம் பார்க்கும் நல்லவை அனைத்தும் பெண் வடிவிலேயே பார்க்க படுகிறது. எந்த இடத்தில் ஒரு பெண் மதிக்கப்படுகிறாலோ அங்கே அமைதியும், சாந்தமும் தவழுகிறது. பெண் எங்கே வஞ்சிக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறாலோ அங்கே மனிதமே  செத்துவிடுகிறது. உண்மையில் பெண் எப்படி எல்லாம் மாறுகிறாள் அல்லது மற்றவர்களால் எப்படியெல்லாம் மாற்ற படுகிறாள்?




அழகு

காலங்காலமாகவே ஒரு பெண் என்பவள் ஒரு ஆச்சரிய பிம்பமாகவே பார்க்கப்பட்டு வருகிறாள். ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதாகவே எண்ணி பலராலும் அதிகமாக உற்று நோக்கப்படுகிறாள். இது நன்மையை ? தீமையா? என்றால் இன்றைய காலகட்டத்தில்   நன்மையைவிட தீமையே அதிகமாக இருக்கிறது என்பது என் கருத்து.




பெண் என்றாலே அழகு என்ற கண்ணோட்டத்தில் தான் முதலில் எல்லோராலும்  பார்க்கபடுகிறது. அழகை விட அவளிடம் கொட்டிக்கிடக்கும் திறமைகளை யாரும் முதலில் கவனிப்பது இல்லை. அவளது வெளித்தோற்றமே அதிகமாக கவனிக்கபடுகிறது. இந்த கவனிப்பு  மாற்ற படவேண்டும்.

ஆனால் ஆண்களால் மட்டும் தான் இவ்வாறு கவனிக்கபடுகிறது என்பது மிக பெரிய தவறு. ஒரு சில பெண்கள் திறமைகளை விட தங்களது புற அழகிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதை வைத்தே தங்களை முன்னிலைபடுத்துகிறார்கள். தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களே இதற்கு ஒரு உதாரணம்.


விளம்பர உலகம்

ஒரு கார் விளம்பரம் என்று பார்த்தோம் என்றால் எரிபொருள் சிக்கனம், அதிகபடியான மைலேஜ் , இருக்கை வசதி, இயந்திரங்களின் வடிவமைப்பு இவற்றைப்பற்றி சொன்னால் வாங்க நினைப்பவர்கள் கூர்ந்து நோக்குவார்கள். ஆனால் இதைவிடுத்து நான்கைந்து மாடல் அழகிகள் அரைகுறை ஆடையுடன் பல கோணங்களில் காட்சியளிப்பதற்க்கும், காருக்கும் என்ன சம்பந்தம் என்று தான் புரியவில்லை...??!!


இதில் யாரை குறை சொல்வது ??

மக்களின் ரசிப்புத்தன்மை இப்படிப்பட்டதுதான் என்று எண்ணி விளம்பரம் தயாரிப்பவர்களையா  ?? அல்லது அதில் நடிப்பவர்களையா ?? அல்லது அந்த விளம்பரம் வெளியிட்ட தொலைக்காட்சியையா ??ஆண்கள் உபயோகிக்கக்கூடிய பொருட்களுக்கும் கூட பெண் மாடல்கள்தான் தேவைபடுகிறார்கள்.  அவ்வாறு நடிக்கவேண்டிய அவசியம் அந்த பெண்களுக்கு ஏன் ? பணத்திற்காகவும், புகழுக்காகவும் தங்களை கூச்சம் இன்றி வெளிகாட்டுகிறார்கள் அல்லது  அப்படி  காட்ட  வைக்கபடுகிறார்கள் ...?! மீறி கேட்டால் நாகரிக உலகில் இது சகஜம் என்கிறார்கள். அரைகுறை ஆடை அலங்காரம்தான் நாகரீகத்தின் அளவுகோலா...?


திரை படங்களில் ஆபாசம்

திரைப்படங்களில் முன்பெல்லாம் கதாநாயகியை தவிர கூட நடனம் ஆடும் பெண்கள் தான் குறைவாகவும் கவர்ச்சியாகவும் உடை அணிந்து வருவார்கள். தவிரவும் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு என்று ஒரு பெண் இருப்பார். ஒரு பாடலுக்கு அந்த பெண் வருவதுடன் அந்த கவர்ச்சியும் முடிந்து விடும். ஆனால் இப்போது தலை கீழ் மாற்றம் எல்லா வேலைகளையும் எந்த குறையும் இன்றி நாயகியே செய்து விடுவார் கவர்ச்சிக்கு ஒரு நடனம் என்று இல்லை, வரும் அத்தனை பாடல்களுமே கவர்ச்சியாகத்தான் இருக்கும். பாடல்களில் தான் அரைகுறை உடை என்று இல்லை, அந்த நாயகி வீட்டில், காலேஜில் எங்கேயும் அதே உடையில் தான் வலம் வருவார்.


பனி பிரதேசத்தில் காட்சிகள் இருந்தாலும், அங்கேயும் நாயகன் கோட் அதுக்கு மேல ஸ்வெட்டர், எல்லாம் போட்டு ஜம்முனு இருப்பார்....!! நாயகி அந்த குளிரிலும் அதே அரைகுறை உடையில் தான் இருப்பார்.....!!?


சென்சாரின் அலட்சியம் !?

பெண்ணை இப்படி உரித்து தான் நடமாட விடணுமா ?? ஒரு ஆபாச சுவரொட்டி ஒரு இடத்தில் ஒட்டி இருந்தால் உடனே ஒரு கூட்டம் போய் போராடி கிழித்து போட்டு விடுகிறது, நல்லா விஷயம் தான். ஆனால் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் இப்படி ஒரு உடை அநாகரீகம் இருப்பதற்கு எதிராக ஏன் யாரும் கொடிபிடிப்பதில்லை. சென்சாரின் கண்களுக்கு இந்த அரைகுறைகள் ஆபாசமாக தெரியாதா ?? அவர்கள் படத்திற்கு சர்டிஃபிகேட் கொடுப்பதின் மூலம் இந்த கவர்ச்சியான உடையை சரி என்று முத்திரை குத்தி சொல்கிறார்கள். ஆபாசத்தை அங்கீகரிக்க ஒரு குழு...!!? இதில் பெண்கள் வேறு இடம் பெற்று இருப்பார்களாம்...கேவலம். வசனம் ஆபாசமாக இருந்தால் அதை கட் செய்ய தெரிந்தவர்களுக்கு அதைவிட கண்கள் பார்க்கும் ஒரு காட்சி மனதில் எளிதில் பதிந்துவிடும் என்பது ஏன் புரியவில்லை...??


நம் வீட்டு வரவேற்பறையில் ??!

இப்போது வரும் எந்த படங்களையாவது குழந்தைகளுடன் சென்று பார்க்க முடியுமா??


தியேட்டர் சென்று பார்க்க வேண்டாம், சரி விடுங்கள். வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சியை என்ன செய்வது...? இங்கே தொகுப்பாளர்கள் எந்த நிலையில் வருகிறார்கள் ?!  பாடலை நமக்கு வழங்குபவர்கள்  போட்டு வரும் உடை பார்க்க சகிக்காது. வீட்டினுள் காலை பரபரப்பில் பலர் வீட்டிலும் பாடல் காட்சிகள் தான் ஓடி கொண்டிருக்கும். இறுக்கமான உடையுடன் அவர்கள் பேசும் விதம் மிக மோசமாக இருக்கும். நடு வீட்டில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆபாசத்தை என்ன செய்ய போகிறோம்?


இப்படி திரைப்படம் , தொலைக்காட்சி, விளம்பர உலகம் எங்கும் உடை அநாகரீகம் சீரழிந்து போய் கொண்டிருக்கிறது.


* இவர்களுக்கு என்று உடை வரைமுறை, அளவு, குறியீடு   ஏதும் கிடையாதா?? 
*   மக்களின் ரசனை இதுதானா ? இதைதான் விரும்புகிறார்களா ??
*  இது போன்ற உடைகளை  நம் வீட்டு பெண்களும் அணிவதையும் நாம் ரசிக்கத்தான் போகிறோமா??


கேள்விகள் மட்டுமே கேட்க முடிகிறது பதில்கள் யாரிடம் .....??!!