Author Topic: ~ தாவர பொன் ~  (Read 159 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218444
  • Total likes: 23099
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ தாவர பொன் ~
« on: April 03, 2015, 09:08:01 PM »
தாவர பொன்

ஆர்.எஸ்.இராமசுவாமி
தலைமை இயக்குநர், சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சி குழுமம்



எளிதில் கிடைக்கக்கூடிய கீரைகளில் முக்கியமானது ‘பொன்னாங்கண்ணி’.  பொன்+ ஆம்+காண்+நீ மற்றும் பொன்+ஆம்+ கண்+நீ என இரு வகையாகப் பிரித்து, பொன்னிற மேனிக்கும் தெளிவான கண் பார்வைக்கும் உதவக்கூடிய கீரை என்கிறது, சித்த மருத்துவம்.
பொன்னாங்கண்ணிக் கீரையைச் சாறாக எடுத்து, தைலமாகத் தயாரித்து, வாரம் இருமுறை தலையில் தடவி, தலைக்குக் குளித்துவந்தால், தலைமுடி நன்றாக வளரும். கோடையில் இந்தத் தைலம் பயன்படுத்துவதன் மூலம், உடல் குளிர்ச்சி பெறும்.

கீரையைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து, தேநீர் போல அருந்தலாம். இதனால், தோலில் ஏற்படும் அரிப்புகள் நீங்கும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.

கீரையை உப்பு சேர்க்காமல் வேகவைத்து, வெண்ணை சேர்த்து, தொடர்ந்து 40 நாட்களுக்கு உணவில் சிறிதளவு சேர்த்துச் சாப்பிட்டுவர, பார்வைத் தெளிவு அடையும். இரவில் இந்தக் கீரையை, தண்ணீர் சேர்த்து அரைத்து அடையாகத் தட்டி, நீர் நிறைந்த  பானை மேல் அப்பிவைத்துவிடவும். காலையில் அடையை, பருத்தித் துணியில் வைத்து, கண்களை மூடிக் கட்டிக் கொள்ளவும். அரை மணி நேரம் கழித்து, கட்டை அவிழ்த்துவிட, விரைவில்



பொன்னாங்கண்ணிக் கீரையை, தினமும் 75 கிராம் அளவுக்குச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால், வயிற்றில் இருக்கும் புண் விரைவில் ஆறிவிடும். நார்ச்சத்து அதிகம். இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தைக் குறைக்கும். உணவு உண்டபின் அதிகரிக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

மூலநோய் உள்ளவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையுடன் பூண்டு, மிளகு சேர்த்து, சூப் தயாரித்துக் குடிக்கலாம், பொன்னாங்கண்ணி சாறு 25 மி.லியுடன் சம அளவு கேரட் சாறு, சிறிதளவு இந்துப்பு சேர்த்து தினமும் அருந்தலாம்.

பொன்னாங்கண்ணி  சாறு, பொற்றலைகையான் கீரை சாறு, பசு நெய், பசும் பால் - தலா 1.4 லிட்டர்,  எலுமிச்சைப் பழச்சாறு 700 மி.லி, அதிமதுரப் பொடி (பால் சேர்த்துப் பொடித்து) - 68 கிராம்  எல்லாவற்றையும் சேர்த்து, மெழுகுப்பதத்தில் காய்ச்சி, வடிகட்டி, காய்ச்சவும். அதனுடன் ஜாதிக்காய், ஜாதிபத்திரி,  சீனக் கற்கண்டு, கோரோசனை தலா ஐந்து கிராம் சேர்த்துக் கலந்து, தினமும் நான்கு முதல் எட்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால், கை கால்களில் ஏற்படும் எரிச்சல், வாய் துர்நாற்றம், வயிற்று எரிச்சல் குறையும். கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். பசி ஏற்படும்.

நெய்யில் கீரையை வதக்கி, உப்பு, மிளகு சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டுவர, உடல் பொன் நிறமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.