Author Topic: விடுகதைக்கான விளையாட்டு பகுதி  (Read 81012 times)

Offline Yazhini

விடை: பாசி

அடுத்த புதிர்:
சொல்வதை திருப்பி சொல்வான் கிளிப்பிள்ளையும் இல்லை உருவமும் இல்லை. அவன் யார்?

Offline KS Saravanan

Ans - எதிரொலி (Echo)


Next - ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

Offline RajKumar

மூச்சு

அடுத்த விடுகதை
🪷 கல்லும் கரடும்,
        முள்ளும் முரடும்,
        வேரும் விறகும் 🪷
« Last Edit: May 04, 2025, 12:33:49 PM by RajKumar »

Offline Vethanisha

கற்கண்டு
பலாப்பழம்
கரும்பு


Next : விதை இல்லாமல் முளைப்பது
வெட்டினால் உயிர் தந்து உயிர் விடுவது

Offline Asthika

நதி


இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?

Offline Yazhini

விடை: மேகம்

அடுத்த புதிர் :
ஒற்றைக் கால் சுப்பனுக்கு தலைக்கணம் அதிகம். அவன் யார்?🤔

Offline RajKumar

பம்பரம்



அடுத்த விடுகதை
🪷 ஊசியிலைக் காட்டிலே, ஊசலாடுதே உருத்திராட்சம். என்ன இது? 🪷

Offline Lakshya

விடை:- சவுக்கு மரம்

முயல் புகாத காடு எது?

Offline Yazhini


முக்காடு சரியா? தவறா? Sis. Sarina nextu illana restu🤔
« Last Edit: May 10, 2025, 08:11:50 PM by Yazhini »

Offline Lakshya

@Yazhini sis crct dhan முக்காடு dhan ans😂

Offline Yazhini


Apo nextu😁

அடுத்த புதிர்:
ஒன்றும் இரண்டும் கலப்பு.  உள்ளங்கையால் பிடிப்பு. ஆவியிலே நடப்பு. ஆண்டவனுக்குப் படைப்பு. அது என்ன🤔

« Last Edit: May 10, 2025, 11:41:02 PM by Yazhini »

Offline RajKumar

கொழுக்கட்டை



அடுத்த விடுகதை
🪷அப்பா கொடுத்த தட்டிலே தண்ணீர் விட்டேன். நிற்கலே…
அது என்ன? 🪷