மாலை நேரம், மறையும் பொழுது,
மங்கள் ஒளி, ஆகாயம் செம்மண்,
கறைபடிந்து, கதிரவனும் கண்கூசி,
ஆடுமேய்க்கும் ஆயர்களும் வீடு
திரும்பும் வேளை,
மஞ்சள் மசித்து மாதவி முகத்தினிட்டு,
பட்டு மேனியை பட்டை தீட்டி,
கைகளுக்கு அழகுக் கவசமிட்டு,
புருவம் தூக்கி கண்களுக்கு அழகுக்கூட்டி,
காதுமடலுக்கு அசைந்தாடும் தேர் பூட்டி,
முகஅழகை முன்வைக்கும் மூக்குத்தி அணிந்து,
கட்டுடளுக்கு கண் கவரும் பட்டிட்டு,
சாயமில்லா சிகப்பிதழ் பிரிய,
முத்துப் பற்க்கள் மூன்று தெரிய,
தங்கத்தாமரையாய் ஜொலி ஜொலிக்க,
மங்கையொருவள் மன மயக்கத்தோடு,
புறம் சென்ற தலைவனை எதிர்நோக்கி,
அகம் குளிர, உடல் சிலிர, அவன்
அரவணைப்பில் திமிர, நிலவொளியில்
நித்திரை கொள்ளா இரவில் தினம்
திளைக்க காத்திருக்கும் குணவதியே,
வேலையிருப்பினும் வருகிறேன்
வெள்ளாமையாய் நானும் திளைக்க!!!